ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 T.N.Balasubramanian

லூயி பாஸ்டர்
 ayyasamy ram

மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
 ayyasamy ram

பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தபெ போறாராம்...!!
 ayyasamy ram

புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
 ayyasamy ram

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
 ayyasamy ram

ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
 ayyasamy ram

நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
 ayyasamy ram

arimugam
 T.N.Balasubramanian

சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்
 T.N.Balasubramanian

ஹைக்கூ கவிதைகள்
 M.Jagadeesan

விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
 ayyasamy ram

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
 ayyasamy ram

துன்ப காலங்களில் கடவுள்
 T.N.Balasubramanian

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
 ayyasamy ram

ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
 ayyasamy ram

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 இ.பு.ஞானப்பிரகாசன்

பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
 ayyasamy ram

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
 anuradhamv

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
 T.N.Balasubramanian

அறமற்ற அறிவியல்
 sugumaran

வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட
 velang

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 T.N.Balasubramanian

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !
 T.N.Balasubramanian

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!!
 T.N.Balasubramanian

ஏன் பிறந்தநாள் ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாட வேண்டும்?
 T.N.Balasubramanian

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."
 T.N.Balasubramanian

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
 SARATHI NEGAMAM

நாடி அடிப்படையில் திருமண காலங்கள்
 SARATHI NEGAMAM

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன
 soplangi

தமிழ்நேசன் அவர்களுக்கு
 Thamaraimanalan

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Thamaraimanalan

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
 T.N.Balasubramanian

உலக யோகா தினம்
 சரவணன்

வேலன்:- வால்பேப்பர் கேலரி.
 velang

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
 ayyasamy ram

தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
 ayyasamy ram

உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
 ayyasamy ram

நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
 ayyasamy ram

இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
 ayyasamy ram

எதை விட்டுக் கொடுப்பது? - தென்கச்சி கோ. சுவாமிநாதன்
 ayyasamy ram

மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன்
 T.N.Balasubramanian

இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்
 T.N.Balasubramanian

துணிவே துணையாகும்!
 T.N.Balasubramanian

இனிய தந்தையர் தினம் 
 ராஜா

நீண்ட ஆயுள் வேண்டுமா?
 M.Jagadeesan

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (4 )
 T.N.Balasubramanian

ஓங்கி அடிச்சா...!
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!
 ayyasamy ram

தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி
 ayyasamy ram

கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் 23–ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
 ayyasamy ram

பசங்களுக்குத்தான் பெரிய மனசு
 T.N.Balasubramanian

சர்க்கரையை வெல்லலாம்
 T.N.Balasubramanian

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும்.
 T.N.Balasubramanian

சொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு!
 மூர்த்தி

முனைவர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.
 ராஜா

பேலியோ டயட்
 ராஜா

ஆளை விட்றா சாமி...!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

2014 காமன்வெல்த் போட்டிகள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Sat Jul 12, 2014 1:55 am

First topic message reminder :

2014 காமன்வெல்த் போட்டிக்கு 224 விளையாட்டு வீரர்களை களமிறக்குகிறது இந்தியா


2014 காமன்வெல்த் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 3 வரை கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது.


இந்த போட்டிக்கு 14 வெவ்வேறு விளையாட்டுக்களில் இருந்து 224 இந்திய விளையாட்டு வீரர்களை அரசின் சொந்த செலவில் அனுப்ப விளையாட்டு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 17 விளையாட்டுகள் அடங்கிய 261 பதக்கங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவிலிருந்து நெட்பால், ரக்பி செவன்ஸ் மற்றும் ட்ரையத்லான் விளையாட்டுகளுக்கு மட்டும் வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

இந்திய வீரர்களுக்கு பிரபல பால் உற்பத்தி நிறுவனமான 'அமுல்' ரூ.1 கோடி ஸ்பான்சர் செய்துள்ளது. சென்ற 2010 காமன்வெல்த் போட்டியில், இந்தியா 38 தங்கப் பதக்கம், 27 வெள்ளி பதக்கம், 36 வெண்கல பதக்கம் என மொத்தம் 101 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.


Last edited by சிவா on Tue Jul 22, 2014 2:42 am; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Sat Jul 26, 2014 10:25 pm

கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டிகளில் இன்று இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன. துப்பாக்கி சுடுதலில் மட்டும் இன்று இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியில், இந்திய அணிக்கு பதக்க வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இரண்டாவதுநாள் முடிவில் இந்திய அணி 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 10 பதக்கங்கள் பெற்று 5வது இடத்தில் இருந்தது.

மூன்றாம் நாளான இன்று இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி என மேலும் 3 பதக்கங்கள் கிடைத்தது. ஆண்கள் பிரிவு 10 மீட்டர் ஏர் ரைபிள்பிரிவில் பிரகாஷ் நஞ்சப்பா,198.2 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் டேனியல் ரெபாசோலி தங்கப்பதக்கம் வென்றார். இங்கிலாந்தின் மைக்கேல் கால்ட் வெள்ளிப்பதக்கம் வென்றார்

பெண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் பிரிவு துப்பாக்கி சுடுதலில், இந்தியாவின் அபுர்வி சண்டேலா மற்றும் அயோனிகா பால் ஆகியோர் பங்கேற்றனர். இதில், சண்டேலா,206.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். அயோனிகா பால் 204.9 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

சண்டேலா தங்கப்பதக்கம் வென்றதன் மூலம், துப்பாக்கிசுடுதலில் இந்தியாவுக்கு 2வது தங்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் தனி நபர் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Sat Jul 26, 2014 10:29 pm
சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Sat Jul 26, 2014 10:30 pm
சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Sat Jul 26, 2014 11:10 pm

ஹாக்கியில் இந்தியா அபார வெற்றி

கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டிகளில் ஹாக்கியில் இந்திய அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 6 - 2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Sat Jul 26, 2014 11:17 pm

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 5வது தங்கம்

கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டியில், மகளிர் பிரிவு துப்பாக்கி சுடுதலில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. ராகி சொர்னாபாட், 8 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். அனிசா சயத், 2 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Mon Jul 28, 2014 3:17 am

முஹம்மது ஆசாத் வெண்கல பதக்கம் வென்றார்

2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான டபுள் டிராப் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாஷி சிங் 92 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

இதையடுத்து, கிளாஸ்கோவில் உள்ள பேரி பட்டன் மையத்தில் நடந்த ஆண்களுக்கான டபுள் டிராப் சூட்டிங் பிரிவில் இந்திய வீரர் முஹமது ஆசாப் மற்றும் அன்கூர் மிட்டல் அரையிறுதில் போட்டியிட்டனர்.

இதையடுத்து நடந்த இறுதிப்போட்டியில் முஹமது ஆசாப் மால்டாவின் நாதன் சூரப்பை எதிர்த்து போட்டியிட்டார் அதில் ஆசாப் அதிக புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கத்தை தட்டிச்சென்றார். இதன்மூலம் இந்தியாவின் பதக்கங்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. தொடர்ந்து துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Mon Jul 28, 2014 3:18 am

10 மீ. ஏர் ரைபிள்: இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி என இரு பதக்கங்கள் கிடைத்தன.

இந்தியாவின் அபூர்வி சான்டிலா தங்கப் பதக்கமும், அயோனிகா பால் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். அபூர்வி சான்டிலா 206.7 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றதோடு மட்டுமல்லாமல், புதிய காமன்வெல்த் சாதனையையும் படைத்துள்ளார். அயோனிகா பால் 204.9 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தார்.

தகுதிச்சுற்றில் 415.6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்த சான்டிலா, இறுதிச்சுற்றில் ஒவ்வொரு ரவுண்டி லும் சராசரியாக 10.2 புள்ளிகள் முதல் 10.7 புள்ளிகள் வரை பெற்றார். அயோனிகா முதல் 10 ரவுண்டுகள் வரை பதக்கம் வெல்வதற்கான போட்டியிலேயே இல்லை. ஆனால் அடுத்த 10 ரவுண்டுகளில் அபாரமாக செயல்பட்ட அயோனிகா, வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதே பிரிவில் மலேசியாவின் முகமது தைபி 184.4 புள்ளிகளுடன் வெண் கலப் பதக்கம் வென்றார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Mon Jul 28, 2014 3:19 am

காமன்வெல்த் போட்டி: 5 தங்கம் வென்ற கனடா வீராங்கனை

காமன்வெல்த் போட்டியின் ஜிம்னாஸ்டிக் ரித்மிக் பிரிவில் கனடா வீராங்கனை பேட்ரிசியா பெஸாவ்பெங்கோ 5 தங்கப் பதக்கங்களைக் குவித்துள்ளார்.

ஜிம்னாஸ்டிக் அணி பிரிவில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற பேட்ரிசியா, கிளப் பிரிவு, பால் மற்றும் ஹூப் தனிநபர் பிரிவுகளில் 3 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார். இதுதவிர ரிப்பன் பிரிவு ஜிம்னாஸ்டிக்கில் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

ஒருவேளை ரிப்பன் பிரிவில் பேட்ரிசியா தங்கப் பதக்கம் வென்றிருந்தால், காமன் வெல்த் போட்டியில் அதிக தங்கப் பதக்கம் (6 பதக்கம்) வென்றவரான சகநாட்டு ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஆர்லேன்டோ வின் சாதனையை சமன் செய்திருப்பார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Mon Jul 28, 2014 3:21 am

பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி வாழ்த்து

கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வரும் நிலையில் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த வாழ்த்துச் செய்தியில், காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ராகி செர்னாபாட், அனிஷா செய்யது, அபூர்வி சந்தெலா, அயோனிகா பால், ராஜ்வீந்தர் கவுர், பிரகாஷ் நஞ்சப்பா, ஓம்கார் ஒட்டாரி ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! இது ஒரு மிகச்சிறந்த சாதனை. உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியா 5 தங்கப்பதக்கங்கள், 8 வெள்ளி, 6 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Mon Jul 28, 2014 3:49 am

இந்தியாவுக்கு 6வது தங்கம் - சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்

20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 77 கிலோ ஆண்கள் பிரிவிற்கான பளு தூக்கும் போட்டியில் இந்திய வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதே போட்டியில் இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீரரான ரவி கட்டுலு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் பளு தூக்கும் போட்டியில் மட்டும் இந்திய அணி ஒன்பதாவது பதக்கத்தை வென்றுள்ளது.

இந்திய அணி இதுவரை 6 தங்கப் பதக்கங்களையும், 9 வெள்ளிப் பதக்கங்களையும், 7 வெண்கலப் பதக்கங்களையும் வென்று மொத்தம் 20 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by பாலாஜி on Mon Jul 28, 2014 12:28 pm

வாழ்த்துகள் சதீஷ் சிவலிங்கம்  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19746
மதிப்பீடுகள் : 3917

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by Dr.S.Soundarapandian on Mon Jul 28, 2014 1:14 pm

சூப்பருங்க மீண்டும் சந்திப்போம் 
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3329
மதிப்பீடுகள் : 1694

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by ஈகரையன் on Mon Jul 28, 2014 1:35 pm

சபாஷ் சதீஷ்
avatar
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 127

View user profile

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by ஈகரையன் on Mon Jul 28, 2014 5:28 pm

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 50 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் ஜித்து ராய் தங்க பதக்கத்தை வென்றார். இதே பிரிவில் குர்பால்சிங் வௌ்ளி பதக்கம் பெற்றார். இந்தியாவிற்கு இது 7வது தங்க பதக்கமாகும்.
avatar
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 127

View user profile

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by ayyasamy ram on Mon Jul 28, 2014 7:26 pm

ஐந்தாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்திற்கு
இந்தியா முன்னேறியுள்ளது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29825
மதிப்பீடுகள் : 8392

View user profile

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Mon Aug 04, 2014 1:32 am

இந்திய வீரர் காஷ்யப் தங்கம் வென்று சாதனைகாமன்வெல்த் பாட்மிண்டன் ஆட்டவர் ஒற்றைய போட்டியில் இந்திய வீரர் காஷ்யப் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டனில், 32 ஆண்டு கால காமன்வெல்த் வரலாற்றில், தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார் காஷ்யப்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில், சிங்கப்பூரின் டெரீக் வாங்கை சந்தித்தார்.

இந்த ஆட்டத்தில், காஷ்யப் 21-14, 11-21, 21-19 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, இந்தியாவுக்குத் தங்கப் பதக்கத்தை வென்று தந்தார். இது, காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வென்ற 15-வது தங்கப்பதக்கம் ஆகும்.

இதனிடையே, மற்றொரு இந்திய வீரரான குருசாய்தத் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

அதேவேளையில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, மகளிர் ஒற்றையர் பாட்மிண்டனில் வெண்கலப் பதக்கத்தை வசமாக்கினார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Mon Aug 04, 2014 1:34 am

வரலாறு படைத்த தமிழக ஜோடிக்கு தலா ரூ.50 லட்சம்

காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்த தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா - ஜோஷ்னா ஜோடிக்கு தலா ரூ.50 லட்சம் ஊக்கப் பரிசை, முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட வாழ்த்துக் கடிதத்தில், "ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2014 காமன்வெல்த் விளையாட்டில், மகளிர் இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

காமன்வெல்த் விளையாட்டின் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பதை அறிந்தேன். தீபிகா பல்லிக்கல் - ஜோஷ்னா சின்னப்பா இருவரும் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள். இந்த மகத்தான சாதனைக்காக, தமிழக மக்கள் சார்பில் என் உளமாற வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்கள், வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி 2011-ம் ஆண்டில் நான் அறிவித்ததை நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில் உங்கள் இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் ஊக்கப்பரிசு வழங்கப்படும்.

உங்களுக்கும் உங்கள் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கும் பாராட்டு தெரிவிப்பதுடன், வரும் காலத்தில் தமிழகத்துக்காகவும், இந்தியாவுக்காகவும் நீங்கள் மேலும் பல பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

வரலாறு படைத்தது தமிழக ஜோடி

முன்னதாக, காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் - ஜோஷ்னா சின்னப்பா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.

இதன்மூலம் காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்து புதிய வரலாறு படைத்துள்ளது தீபிகா - ஜோஷ்னா ஜோடி.

தீபிகா - ஜோஷ்னா இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் இறுதிச்சுற்றில் தீபிகா - ஜோஷ்னா ஜோடி 11-6, 11-8 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் ஜென்னி டங்காப் - லாரா மஸாரோ ஜோடியைத் தோற்கடித்தது.

கடந்த 1998-ல் காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டு சேர்க்கப்பட்ட பிறகு, அதில் இந்தியா ஒரு பதக்கம்கூட வெல்லவில்லை என்ற குறை நீண்ட நாட்களாக இருந்தது. இப்போது அந்தக் குறையை தீபிகா - ஜோஷ்னா ஜோடி தீர்த்துள்ளது.

பிரிட்டிஷ் ஸ்குவாஷ் சாம்பியன் ஷிப்பில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரியவரான ஜோஷ்னா, இப்போது தீபிகாவுடன் இணைந்து காமன்வெல்த்திலும் சாதித்திருக்கிறார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Mon Aug 04, 2014 1:35 am

கிளாஸ்கோவில் இந்திய மல்யுத்த நடுவர் கைது

காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வரும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில், வலுவான பாலியல் புகார் ஒன்றில், இந்திய மல்யுத்த போட்டி நடுவர் விரேந்தர் மாலிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டிய புகாரில், இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலர் ராஜீவ் மேத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விரு கைது நடவடிக்கைகள் குறித்தும் காமன்வெல்த் போட்டி அமைப்பு அதிகாரிகள் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டதாக, ஸ்காட்லாந்த் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

45 மற்றும் 49 வயது ஆன இரண்டு ஆண் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஸ்காட்லாந்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட இந்திய அதிகாரிகள் இருவரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.

காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் தங்கியுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் உள்ளூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Mon Aug 04, 2014 1:40 am

ஹாக்கியில் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம்

காமன்வெல்த் ஹாக்கி இறுதிச் சுற்றில், ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்ற இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

கிளாஸ்கோவில் இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி 0-4 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.

ஆடவர் ஹாக்கி போட்டியில் இரண்டாம் இடம் வகித்ததால், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிட்டியது.

முன்னதாக, 2010-ல் நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் இந்தியாவை ஆஸ்திரேலிய ஹாக்கி அணி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில், தனக்கு கிடைத்த மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் கச்சிதமாக பயன்படுத்தி வெற்றி பெற்று தங்கத்தைத் தனதாக்கியது ஆஸ்திரேலிய அணி. இந்திய அணி வீரர்களின் முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல் போனது.

முன்னதாக, சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு இந்தியா முன்னேறியது. இதன்மூலம் ஹாக்கியில் வெள்ளிப் பதக்கம் உறுதியானது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Mon Aug 04, 2014 1:41 am

குத்துச்சண்டை போட்டியில் தேவேந்திரோ, சரிதாவுக்கு வெள்ளி

காமன்வெல்த் போட்டியின் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் தேவேந்திரோ சிங், சரிதா தேவி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் லைட் ஃபிளை (49 கிலோ எடைப் பிரிவு) குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் வடக்கு அயர்லாந்தின் பேடி பர்ன்ஸ் 3-0 என்ற கணக்கில் இந்தியாவின் தேவேந்திரோ சிங்கை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். இதனால் தேவேந்திரோவுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.

மகளிர் லைட் வெயிட் (57-60 கிலோ எடைப் பிரிவு) குத்துச்சண்டை போட்டியின் இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஷெல்லி வாட்ஸ் 3-1 என்ற கணக்கில் இந்தியாவின் சரிதா தேவியைத் தோற்கடித்தார். இதனால் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் சரிதா.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Mon Aug 04, 2014 1:42 am

டேபிள் டென்னிஸ்: ஷரத் கமல் ஜோடிக்கு வெள்ளி

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஜந்தா ஷரத் கமல்-அந்தோணி அமல்ராஜ் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றில் ஷரத் கமல்-அமல்ராஜ் ஜோடி 11-8, 7-11, 9-11, 5-11 என்ற நேர் செட்களில் சிங்கப்பூரின் நிங் காவ்-ஹூ லீ ஜோடியிடம் தோல்வி கண்டது. இதனால் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய ஜோடிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Mon Aug 04, 2014 1:43 am

மகளிர் வட்டு எறிதல்: சீமாவுக்கு வெள்ளி

காமன்வெல்த் மகளிர் வட்டு எறிதலில் இந்தியாவின் சீமா அந்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேநேரத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கிருஷ்ணா பூனியா 5-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் சீமா, தனது 4-வது முயற்சியில் 61.61 மீ. தூரம் வட்டு எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 2006 காமன்வெல்த்தில் வெள்ளி வென்ற சீமா, 2010-ல் வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், இப்போது 3-வது காமன்வெல்த் பதக்கத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் கிருஷ்ணா பூனியா கடுமையாகப் போராடியபோதும் அவரால் 57.84 மீ. தூரத்துக்கு மேல் வட்டு எறிய முடியவில்லை. முன்னாள் உலக சாம்பியனான டேனி சாமுவேல்ஸ் (64.88 மீ. தூரம்) தங்கப் பதக்கமும், இங்கிலாந்தின் ஜேட் லாலி (60.48 மீ. தூரம்) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

சஹானா ஏமாற்றம்

மகளிர் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சஹானா குமாரி 1.86 மீ. தூரம் தாண்டியபோதும் அவரால் 8-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இதனால் அவர் பதக்கமின்றி வெறுங்கையோடு திரும்பினார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா on Mon Aug 04, 2014 2:14 am

காமன்வெல்த் போட்டிகள் நிறைவு: 15 தங்க பதக்கத்துடன் ஐந்தாவது இடத்தை பிடித்தது இந்தியாஇந்த ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்று வந்தது. அங்குள்ள க்ளாஸ்கோ நகரில் கடந்த 23ந் தேதி துவக்க விழா நிகழ்ச்சிகளுடன் துவங்கிய போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது.

இதில் இந்தியா 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் ஆகிய பதக்கங்களுடன் மொத்தமாக 64 பதக்கங்கள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்தது.

இங்கிலாந்து அணி 58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலப்பதக்கங்களையும் வென்று முதலிடத்தை பிடித்தது. அதே போல் 49 தங்கம், 42 வெள்ளி மற்றும் 46 வெண்கலத்துடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும், 32 தங்கம், 16 வெள்ளி, 34 வெண்கலத்துடன் கனடா மூன்றாவது இடத்தையும், 19 தங்கம், 15 வெள்ளி, 19 வெண்கலம் ஆகிய பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து நான்காவது இடத்தையும் பிடித்தன.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum