ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 SK

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

ஆதார் காட்டுங்க....!!
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 Dr.S.Soundarapandian

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 SK

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 Dr.S.Soundarapandian

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 Dr.S.Soundarapandian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

திரைப் பிரபலங்கள்
 heezulia

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 மூர்த்தி

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by soplangi on Thu Jul 17, 2014 11:39 pm

First topic message reminder :

295 பயணிகளுடன் கோலாம்பூர் நோக்கி பயணித்த மலேசிய விமானம், ரஷ்ய எல்லை அருகே விபத்துக்குள்ளானது.நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் உக்ரைன் நிலப்பரப்பில், ரஷ்ய எல்லைக்கு 50 கி.மீ.,க்கு முன்னால் விபத்துக்குள்ளானதாக, இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் உக்ரைன் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, ரஷ்ய எல்லைக்கு முன்னால் திடீரென தாழ்வாக பறந்ததாகவும், பின்னர் விமானத்தில் தீப்பிடித்து விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட்டுவீழ்த்தப்பட்டதா?

உக்ரைனில் ரஷ்ய ஆதரவு படைகளுக்கு எதிராக அந்நாட்டு அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் மலேசிய விமானம் சிக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனினும் இந்த தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை.

-- தினமலர்
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down


Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Mon Jul 21, 2014 6:04 am

பேரதிர்ச்சியில் பயணிகள் உடனடி மரணம் அடைந்திருப்பார்கள் – நிபுணர் கருத்து

ஏவுகணை வந்து தாக்கி எம்எச்17 விமானம் வெடித்த போது, பேரதிர்ச்சியிலும், அதிக அளவிலான அழுத்தத்திலும் பயணிகள் அனைவரும் உடனடியாக இறந்திருக்கலாம் அல்லது சுயநினைவு இன்றி போயிருக்கலாம் என்று விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நியூயார்க் அருகே கடந்த 1996 -ம் ஆண்டு டிடபிள்யூஏ 800 விமானம் வெடித்து சிதறிய சம்பவத்தை ஆராய்ச்சி செய்தவரான ஜேம்ஸ் வோஸ்வின்கெல் என்ற அதிர்ச்சி மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் கூறுகையில், நடுவானில் விமானம் வெடித்து சிதறும் போது பயணிகளுக்கு பேரதிர்ச்சி மூன்று வழிகளில் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒன்று வெடிக்கும் போது ஏற்படும் அதிக அளவிலான விசை, இரண்டு விமானம் மணிக்கு 500 கிலோமீட்டர் வேகத்தில் போகும் போது உடனடியாக அதன் வேகம் குறைதல் மற்றும் விமானம் கீழே விழுவது போன்ற மூன்று காரணங்களால் பயணிகளுக்கு இந்த பேரதிர்ச்சி ஏற்படும் என நியூயார்க்கின் ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தின் தலைமை அதிர்ச்சி மற்றும் அறுவை சிகிச்சை நிபுணரான வோஸ்வின்கெல் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், விமானத்தில் ஏற்படும் அதிக அழுத்தத்தால், 33,000 அடி உயரத்தில் பயணிகளுக்கு நினைவு தப்பி உடனடியாக மரணத்தை அடைவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

“பயணிகளுக்கு அவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது. விமானம் அவ்வளவு உயரத்தில் இருந்து விழுவதும் தெரியாது” என்று வோஸ்வின்கெல் கூறியுள்ளார்.

நியூயார்க் அருகே லாங் தீவில் கடந்த 1996 -ம் ஆண்டு டிடபிள்யூஏ 800 விமானம் வெடித்து சிதறிய போது அதிலிருந்த 230 பயணிகளும் உடனடி மரணத்தைத் தழுவினர்.

“கடலில் விழுந்த பயணிகளின் உடலில் செய்யப்பட்ட பரிசோதனையில், அவர்களது நுரையீரலில் தண்ணீர் போகவில்லை.காரணம் பயணிகள் கடலில் விழும்போது அவர்கள் அனைவரின் மூச்சும் ஏற்கனவே நின்றிருக்க வேண்டும்” என்றும் வோஸ்வின்கெல் மேற்கோள்காட்டியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Mon Jul 21, 2014 6:05 am

இறந்தவர்களை ஹரிராயாவுக்கு முன்னர் கொண்டு வர வேண்டும், நஜிப்

சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 இல் கொல்லப்பட்ட அனைத்து மலேசிய குடிமக்களும் ஹரிராயாவுக்கு முன்னர் நாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் நஜிப் கூறினார்.

“அடையாளம் காணப்பட்டவர்களை மலேசிய அரசாங்கம் நாட்டிற்கு கொண்டு வரும். அவர்கள் மலேசிய மண்ணில் அடக்கம் செய்யப்படுவர்” என்று நஜிப் இன்றிரவு கோலாலம்பூரில் கூறினார்.

எம்எச்17 கிழக்கு உக்ரேனின் இயங்கும் ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணித்த 44 மலேசியர்களின் உடல்கள் அடையாளம் காணப்படுவதில் உதவி அளிப்பதற்காக மலேசியா ஒரு நியுணர் குழுவை அனுப்பியுள்ளது. ஆனால், அக்குழு அந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Mon Jul 21, 2014 6:10 am


மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதில் தமிழர் குடும்பமே பலி!

கோலாலம்பூர்: மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதில் தமிழர் குடும்பமே பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பேர் பலியானதில், ஒரு தமிழர் குடும்பமும் அடங்கும். மலேசியாவில் உள்ள ‘ஷெல்’ நிறுவனத்தில் ஆசிய பசிபிக் பிரிவின் தலைவராகவும், ஐ.டி. பட்டதாரிகளின் ஆலோசகராகவும் பணியாற்றி வந்தவர் பால் ராஜசிங்கம் சிவஞானம். இவர் தனது மனைவி, மகனுடன் நெதர்லாந்து சென்றிருந்தார்.

நெதர்லாந்தில் பயணத்தை முடித்துக்கொண்டு இவர் குடும்பத்துடன் கோலாலம்பூர் வந்தபோதுதான் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதனால் பால் ராஜசிங்கம் சிவஞானம் குடும்பமே இதில் பலியாகி விட்டது.

பால் ராஜசிங்கம் சிவஞானம் பணியாற்றி வந்த அதே ‘ஷெல்’ நிறுவனத்தில் கஜகஸ்தானில் பணியாற்றி வந்தவர் தம்பி ஜீ. இவர் தனது மனைவி அரிஜா காஜலீ, குழந்தைகள் முகமது ஆரிப், முகமது அப்சல், மார்ஷா அஜ்மீனா, முகமது அப்ரஸ் ஆகியோருடன் கோலாலம்பூர் வந்து கொண்டிருந்தார்.

இவர் கஜகஸ்தானில் இருந்து கோலாலம்பூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய பணியிடத்தில் சேருவதற்கு முன் அவர் குடும்பத்துடன் ரம்ஜான் கொண்டாட்டத்துக்காக வந்துகொண்டிருந்தார். அப்படி வரும்போதுதான் அவர் குடும்பத்துடன் பலியாகி விட்டார்.

கஜகஸ்தானில் அரிஜா, பிந்துலா வளர்ச்சிக்குழுமம் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கணவருடன் நாடு திரும்பும் நோக்கத்தில் அவர் வேலையை விட்டு விட்டு கணவருடன் பயணம் செய்தார் என தெரியவந்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Mon Jul 21, 2014 6:10 am

MH17 விவகாரத்தில் நடுநிலையில்லாத செய்தி: ரஷ்ய நிருபர் பதவி விலகல்

மாஸ்கோ, 19 ஜூலை- கடந்த வியாழக்கிழமை உக்ரைன் எல்லையில் சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பாக நடுநிலையான செய்திகள் வெளியிடப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி RT எனப்படும் ரஷ்யன் டுடே ஊடக நிருபர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

சாரா ஃபித் என்ற அந்த நிருபரோடு சேர்த்து, கடந்த மார்ச் மாதம் உக்ரைன் ரஷ்யா அரசியல் நெருக்கடி தொடர்பான செய்தியில் ஏமாற்றமடைந்ததாகக் கூறி பதவி விலகிய மற்றொரு நிருபரும் இதே போல் பதவி விலகினார்.

“நான் இன்று பதவி விலகிறேன். எனது சக பணியாளரை நான் மதிக்கிறேன். ஆனால் உண்மையின் பக்கம் இருக்கிறேன்” என தனது டிவிட்டர் சமூக வலைதளத்தில் சாரா ஃபிர்த் தெரிவித்தார்.

இதனிடையே இது குறித்து ரஷ்யாவைத் தலைமையகமாகக் கொண்ட RT ஊடகம் “சாரா ஃபிர்த் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதுடன், உண்மையின் பக்கம் இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் எங்களுக்கென தனி பாணி உள்ளது” என AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Mon Jul 21, 2014 4:49 pm


ஏர் இந்தியா விமானி எம்எச்17 விமானத்தை தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறார்!

கோலாலம்பூர்,ஜூலை 21- மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச்17 விமானம் ரேடார் தொடர்பில் இருந்து விலகிய சில நிமிடங்களில், அதற்கு 25 கிலோமீட்டர் அருகாமையில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் விமானி, அதை தொடர்பு கொள்ள முயற்சித்ததாக இந்தியாவின் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

உக்ரைன் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த அழைப்பிற்கு எம்எச்17 விமானத்தில் இருந்து எந்த பதிலும் இல்லாததால், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் ஏர் இந்தியா விமானத்தின் விமானியை மாஸ் விமானத்துடன் தொடர்பு கொள்ள முயற்சிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஒரு விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டால் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பிற விமானங்கள் அந்த விமானத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கூறுவது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வழக்கமாகும்.

இந்நிலையில், எம்எச் 17 பேரிடர் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள், மலேசிய விமானத்தை நேரடி பாதையை எடுக்குமாறு கட்டளையிட்டதை தான் கேட்டதாக ஏர் இந்தியா விமானி கூறியுள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் இவ்வறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Mon Jul 21, 2014 4:50 pm


எம்எச்370, எம்எச்17 இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய குடும்பம்!

சிட்னி, ஜூலை 21 – மாஸ் விமானத்தின் இரு விபத்துகளிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அனைவரையும் சோகக் கடலில் ஆழ்த்தி உள்ளது.

உலக அளவில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய மலேசியாவின் மாஸ் விமானம் எம்எச் 370-ன் பேரிடர் ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில், கடந்த வியாழன் அன்று கிழக்கு உக்ரைனில் போராட்டக் குழுக்குகளால் எம்எச் 17 விமானம் வீழ்த்தப்பட்டது, ஒட்டு மொத்த மலேசியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது.

இந்த இரு பேரிடர்களிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டு இருப்பது, உலக அளவில் அந்த குடுபத்தின் மீது கவனத்தையும், அனுதாபத்தயும் ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேரி மற்றும் ஆல்பர்ட் ரிஸ்க் தம்பதிகள் ஐரோப்பாவில் ஒரு மாத விடுமுறையை கழித்து விட்டு மீண்டும் தங்கள் நாட்டிற்கு எம்எச் 17 விமானம் மூலம் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பாரா வண்ணம் விமானம் உக்ரைன் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை கொண்டு தாக்கி வீழ்த்தப்பட்டது. 298 பேரை பலிவாங்கிய இந்த தாக்குதலில், மேரி மற்றும் ஆல்பர்ட் ஆகிய இருவரும் அடங்குவர் என்பது மிகுந்த துயரமான செய்தியாகும்.

கடந்த மார்ச் 8-ம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கி சென்ற போது, மாயமான எம்எச் 370 விமானத்தில், மேரியின் தாயார் வழிச் சொந்தமான ரோட்னி மற்றும் அவரது மனைவி மேரி பர்ரோஸ், ஆகியோர் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

அந்த சோகத்திலிருந்தே மீள்வதற்கு வழி தெரியாமல் தவித்த நிலையில், மேரியின் குடும்பம் தற்போது மேரியையும், அவரது கணவரையும் விபத்தில் இழந்திருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர்கள் உறவினர் கூறுகையில், “மலேசிய ஏர்லைன்ஸ்-ன் இரு விபத்துகளிலும் எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து என்ன கூறுவதென்று எங்களுக்கு தெரியவில்லை. இந்த விபத்துகள் யாரும் எதிர்பாராமல் நடந்தவை. இதில் மாஸ் நிறுவனம் பற்றி குறை கூற ஒன்றும் இல்லை” என்று கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Mon Jul 21, 2014 4:54 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Mon Jul 21, 2014 5:02 pm

ஐநா பாதுகாப்பு மன்றத்தில் உக்ரேன்மீது தீர்மானம்

உக்ரேனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதன் தொடர்பில் இன்று ஐநா பாதுகாப்பு மன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அத்தீர்மானம், விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதைக் கண்டிப்பதுடன் அச்சம்பவத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துப் பொறுப்பாக்க வேண்டும் என்றும் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் கிளர்ச்சிப்படையினர் எவ்வித மாற்றத்தையும் செய்யக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளும்.

அச்சம்பவத்தில் 28-பேரைப் பறிகொடுத்த ஆஸ்திரேலியாவால் வரையப்பட்ட அத்தீர்மானத்தை ரஷ்யா ஆதரிக்குமா என்பது தெரியவில்லை.

ரஷ்யாவைச் சாந்தப்படுத்தும் நோக்கத்தில் “சுட்டு வீழ்த்தப்பட்ட” விமானம் என்பதற்குப் பதிலாக “வீழ்த்தப்பட்ட” விமானம் என்று தீர்மான வாசகத்தில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Tue Jul 22, 2014 3:44 am

எம்.எச்.17: 'எனது மகளை கொலை செய்ததற்கு நன்றி' உயிரிழந்த சிறுமியின் தந்தை புதினுக்கு கடிதம்

எம்.எச்.17 மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் இறந்த சிறுமியின் தந்தை 'எனது மகளை கொலை செய்ததற்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கடந்த 17-ந்தேதி கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கிழக்கு உக்ரைன் பகுதியில் வந்த போது ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், அந்த விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு ரஷியாவும் பின்னணியில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் நெதர்லாந்தை சேர்ந்த 17 வயது மாணவி எல்ஸ்மிய்க் டி போர்ஸ்ட்டும் பலியானார். மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் உலக நாடுகளே அதிர்ச்சியில் உள்ளது. மேலும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாணவியின் தந்தை ஹான்ஸ் டி போர்ஸ்ட், ரஷியா அதிபர் புதினுக்கு வெளிப்படையான ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். இந்த கடிதம் அந்நாட்டு ஆங்கில நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 'எனது மகளை கொலை செய்தவர்களுக்கு நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார். என்னுடைய அன்பு நிறைந்த மற்றும் ஒரே மகளான எல்ஸ்மியக் டி போஸ்ட்டை கொலை செய்த, ரஷியா அதிபர் விளாடிமீர் புதின், கிளர்ச்சி படையினர் மற்றும் உக்ரைன் அரசுக்கு மிகவும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். எதிர்பாராத விதமாக எனது மகள் பயணம் செய்த விமானம் போர் ஏற்பட்டுள்ள நாட்டில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

"எனது மகள் எச்ஸ்மியக் அடுத்த ஆண்டு பள்ளி படிப்பை தனது தோழிகள் ஜூலிலா மற்றும் மாரினெவுடன்(இவர்கள் விமானத்தில் பயணம் செய்யவில்லை) முடிக்கவுள்ளார். அவர் மிகவும் சிறப்பாக தனது பணியினை செய்தார். டெல்ப் பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினியரிங் படிக்க விரும்பினார். அதனை செய்வதில் அவள் மிகவும் உற்சாகமாக காணப்பட்டாள். ஆனால் அவள் தற்போது உயிருடன் இல்லை. அவள் போர் நடந்துவரும் நாட்டில் வானத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார். என்னுடைய மகள் மற்றும் அவரது கனவை சுட்டுத் தள்ளியதில் இதனை செய்த நீங்கள் மிகவும் கர்வமாக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். மீண்டும் நன்றி. வாழ்க்கையே அழிந்து விட்டது. எல்ஸ்மியக் டி போஸ்ட் விடுமுறையை கொண்டாட, தனது தயார், சகோதரன் மற்றும் வளர்ப்பு தந்தையுடன் மலேசியா சென்றுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Tue Jul 22, 2014 3:56 am

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்; உலகநாடுகள் அழுத்தத்தில் ரஷியா

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் ரஷியாவிற்கு உலகநாடுகளின் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்– எம்.எச்.17, உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் கூண்டோடு பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக நம்பகமான, வெளிப்படையான, சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட உலகத்தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதியிலிருந்து எஸ்.ஏ.–11 ஏவுகணைதான் விமானத்தை சுட்டு வீழ்த்தி இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

இதற்கிடையே மலேசிய விசாரணை குழுவினர் உக்ரைன் தலைநகர் கீவ் போய்ச் சேர்ந்தனர். சம்பவ இடம் சிதைக்கப்படாமல், ஆதாரங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என மலேசியா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் சம்பவ இடம் பாதுகாக்கப்படவில்லை என்று மலேசிய போக்குவரத்து மந்திரி லயவ் டயாங் லாய் கூறினார். இதற்கிடையே சம்பவ இடத்தில் ஐரோப்பிய பாதுகாப்பு, ஒத்துழைப்பு அமைப்பின் கண்காணிப்பாளர்களை துப்பாக்கி ஏந்திய ஆசாமிகள் அனுமதிக்காமல் தடுத்து விட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

இவ்விவகாரத்தில் ரஷியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த அமெரிக்கா அதிபர் ஒபாமா உலக நாட்டு தலைவர்களின் ஆதரவை கோரி வருகிறார். ஐரோப்பிய பாதுகாப்பு, ஒத்துழைப்பு அமைப்பின் கண்காணிப்பாளர்களை துப்பாக்கி ஏந்திய ஆசாமிகள் அனுமதிக்காததால் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட தடயங்களை அழிக்க ரஷியா உதவுவதாக உக்ரைன் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது. இதனையடுத்து விசாரணை குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று ரஷியாவிற்கு உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை மந்திரி ஜான் கெர்ரி, ரஷியாவின் வெளியுறவுத் துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ்விடம் பேசியுள்ளார். அப்போது விசாரணை குழுவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் தங்களது கவலையை தெரிவித்துள்ளார். மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட தடயங்களை அழிக்க ரஷியா உதவுகிறது என்ற உக்ரைன் நாட்டின் குற்றச்சாட்டையும் அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த பகுதியில் கிளர்ச்சியாளர் படையே மீட்பு பணியில் ஈடுபட்டனர். சடலங்களை அவர்கள் அழித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏராளமான உடல்கள் ஆங்காங்கே பல பாகங்களாக சிதறி கிடக்கின்றன. விபத்து நடந்து 2 நாட்களுக்கு மேலாகி விட்டதால் அவை அழுகி துர்நாற்றம் வீசுகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Wed Jul 23, 2014 5:03 pm

எம்.எச். வீழ்த்தப்பட்ட இடத்தில் விசாரணைக் குழு ஆய்வு; தவறுதலாக சுடப்பட்டு இருக்கலாம்

கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் விசாரணைக் குழு ஆய்வு செய்துள்ளது. விமானம் தவறுதலாக சுடப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17-ந் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. சர்வதேச சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளாக்கியுள்ள இந்த சம்பவத்தில், விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டி வரும் வேளையில், சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும், இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறும் அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்பாக, முழுமையாக, தடையற்று பிரவேசித்து விசாரணை குழுவினர் விசாரணை நடத்துவதற்கு ஆயுதம் தாங்கிய ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வழிவிட வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இதை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ரஷியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் விமானத்தின் கறுப்பு பெட்டிகள் இரண்டையும் நேற்று டன்ட்ஸ்க் நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மலேசிய அதிகாரிகளிடம் டன்ட்ஸ்க் பிரதமர் என்று தன்னை அறிவித்துக் கொண்டுள்ள அலெக்சாண்டர் போரோடாய் ஒப்படைத்தார். மலேசிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலை சேர்ந்த கர்னல் முகமது சாக்ரி, கறுப்புப் பெட்டிகள் இரண்டும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார். இறந்தவர்கள் உடல்களும் ஒப்படைக்கப்பட்டது.

கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தை அந்நாட்டு விசாரணைக் குழு ஆய்வு செய்தது. விமானம் வீழ்த்தப்பட்ட பின்னர் அங்கு சென்ற சர்வதேச விசாரணைக் குழுவுடன், ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு கூட்டமைப்பு அதிகாரிகளும், விமானம் வீழ்த்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். விமான பாகங்கள் சிதறிக் கிடக்கும் பகுதிகளை புகைப்படம் எடுத்த விசாரணைக் குழுவினர், தடயங்களையும் சேகரித்தனர். இந்த தடயங்களும், புகைப்படங்களும் சர்வதேச வல்லுநர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. விமானம் வீழ்த்தப்பட்ட பகுதியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விமானம் கிளர்ச்சியாளர்களால் தவறுதலாக சுடப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. வானில் பறந்தது சாதாரண பயணிகள் விமானம் என்று உணராமல் தவறுதலாக கிளர்ச்சியாளர்கள் அதனை சுட்டு வீழ்த்திருக்கலாம். என்று அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Wed Jul 23, 2014 5:05 pm

விசாரணைக்கு, இந்தியா முழுமையான ஆதரவு மலேசிய பிரதமருக்கு மோடி கடிதம்

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில், அவர் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியானவர்களுக்கு தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘‘இந்த சம்பவத்தில் உலகமெங்கும் எழுந்துள்ள சீற்றம் நியாயமானது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சரியான சூழ்நிலையை கண்டறிவதற்கு நடத்துகிற விசாரணைக்கு, இந்தியா முழுமையான ஆதரவு தெரிவிக்கிறது’’ என கூறி உள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Wed Jul 23, 2014 5:06 pm

மலேசிய விமான விபத்து:சடலத்தின் கையில் இருந்த மோதிரத்தை திருடும் கிளர்ச்சியாளர்

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17–ந் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தபட்டது . இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இருப்பினும் இந்த விமானம் திட்டமிட்டு சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது வேறு ஒரு விமானத்தை குறிவைத்ததில் தவறுதலாக இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டதா? என்பதில் உறுதியான தகவல்கள் இல்லை.

சம்பவ இடத்தில் உக்ரைன் அரசின் நெருக்கடி கால சேவை பணியாளர்கள் 380 பேர், 34 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவத்தில் 298 பேர் பலியான நிலையில், அவர்கள் 196 உடல்களை கண்டெடுத்துள்ளதாக அறிவித்தனர். பல உடல்களை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடத்துக்கு எடுத்துச்சென்று விட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாயின. மேலும், கிளர்ச்சியாளர்கள் சம்பவ பகுதிக்கு தங்களை அனுமதிக்க மறுக்கின்றன என்று ஓ.எஸ்.சி.இ. என்னும் பாதுகாப்பு, ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய அமைப்பு குற்றம் சாட்டியது. இதனையடுத்து ரஷியா உலக நாடுகளின் நெருக்கடிக்கு உள்ளானது.

தற்போது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியானோர்கள் உடல்களை கிளர்ச்சியாளர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். கிளர்ச்சியாளர்கள் விமானத்தின் கருப்பு பெட்டியையும் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்; விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியில் இருந்து கீவ் நகருக்கு சுமார் 200 சடலங்கள் அனுப்பபட்டது. அவை உக்ரைன் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அங்கியிருந்து சடலங்கள் அடையாளம் காணப்படுவதற்காக நெதர்லாந்து கொண்டு செல்லபட்டது.

கிளர்ச்சியாளர்கள் பிணங்களை அப்புறபடுத்தும் போது விமான பயணிகள் அணிந்து இருந்த மோதிரம் மற்றும் நகைகளை திருடி உள்ளனர். என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த காட்சி வவீடியோவாக் எடுக்கப்பட்டு உள்ளது. ராணுவ சீருடை அணிந்த 3 பேர் சடலங்களை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் அதில் ஒருவர் ஒரு சடலத்தின் கைவிரலில் கிடக்கும் மோதிரத்தை கழட்டுகிறார்.இந்த படங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டு ஏராளமான பேர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.சிலர் ஆதாரம் தேடுவதற்காக கிளர்ச்சியாளர் சடலத்தின் கையை பிடித்து இருக்கலாம் எனவும் பதில் அளித்து உள்ளனர்.இருந்தாலும் இந்த காட்சி குறித்து உத்த்யோக பூர்வமான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Wed Jul 23, 2014 5:28 pm

கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் கறுப்பு பெட்டிகள், மலேசியாவிடம் ஒப்படைப்பு

கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் கறுப்பு பெட்டிகளை மலேசியாவிடம் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நேற்று ஒப்படைத்து விட்டனர்.

உலக நாடுகள் வலியுறுத்தல்

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17-ந் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

சர்வதேச சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளாக்கியுள்ள இந்த சம்பவத்தில், விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டி வரும் வேளையில், சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

ஐ.நா. தீர்மானம்

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும், இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறும் அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும், சம்பவ இடத்தில் பாதுகாப்பாக, முழுமையாக, தடையற்று பிரவேசித்து விசாரணை குழுவினர் விசாரணை நடத்துவதற்கு ஆயுதம் தாங்கிய ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வழிவிட வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இதை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ரஷியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது.

கறுப்பு பெட்டிகள் ஒப்படைப்பு

இந்த நிலையில் விமானத்தின் கறுப்பு பெட்டிகள் இரண்டையும் நேற்று டன்ட்ஸ்க் நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மலேசிய அதிகாரிகளிடம் டன்ட்ஸ்க் பிரதமர் என்று தன்னை அறிவித்துக் கொண்டுள்ள அலெக்சாண்டர் போரோடாய் ஒப்படைத்தார்.

மலேசிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலை சேர்ந்த கர்னல் முகமது சாக்ரி, கறுப்புப் பெட்டிகள் இரண்டும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

உடல்களும் ஒப்படைப்பு

இதற்கிடையே விமானம் வீழ்த்தப்பட்டு, அதில் பலியானவர்களில் சுமார் 200 பேரது உடல்கள் அடங்கிய பைகள், ரெயில் மூலம் டன்ட்ஸ்க் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்து உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கார்கிவ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து நெதர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதற்கு ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உடன்பட்டுள்ளனர். இதை நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தெரிவித்தார்.

கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிற ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று மேற்கத்திய தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதை அடுத்தே சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டிகள் மலேசியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன; பலியானவர்களின் உடல்களை நெதர்லாந்திடம் ஒப்படைக்க கிளர்ச்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்; சம்பவ இடத்தில் விசாரணை குழுவினரை தடைகளின்றி அனுமதிக்க வேண்டும் என்பதை கிளர்ச்சியாளர்கள் ஏற்று, அதில் முன்னேற்றம் காணச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by lakshanika1@gmail.com on Thu Jul 24, 2014 2:37 pm

மனிதாபிமானம் கொள்ள வேண்டிய நிலையிலும்
மனிதாபிமானதடதைகடக் கொலலும் மனிதர்களை என்னவென்று சொல்வது . . .
avatar
lakshanika1@gmail.com
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 116
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum