ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

ஆனந்த விகடன் 24.01.18
 Meeran

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 மூர்த்தி

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

தெரிஞ்சதும் தெரியாததும்
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
மூர்த்தி
 
heezulia
 

Admins Online

வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம்

Post by சிவா on Tue Jul 22, 2014 3:01 amகிடைத்த வேலையைச் செய்யாமல் படித்த வேலைக்காகக் காத்திருந்து வெற்றி காணும் ஒரு இளம் பொறியாளனின் கதைதான் வேலையில்லா பட்டதாரி.

‘என் பெயர் ரகுவரன்’ என்று தனுஷ் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இடத்திலிருந்து படம் தொடங்குகிறது. ரகுவரனை சதா சர்வ காலமும் திட்டித்தீர்க்கும் அப்பாவாக சமுத்திரக்கனி. செல்ல அம்மாவாக சரண்யா பொன்வண்ணன். வழிய வழியக் காதல் செய்யும் ஷாலினியாக அமலா பால். இவர்களைச் சுற்றித்தான் முதல் பாதி நகர்கிறது.

கட்டிடத் துறையில் பொறியியல் படிப்பை முடித்த ரகுவரனின் ஒரே விருப்பம், படித்த அதே துறையில் வேலை பார்க்க வேண்டும் என்பது தான். இதைப் புரிந்துகொள்ளாத சமுத்திரக்கனி பார்க்கும் போதெல் லாம் உதவாக்கரை என்று மகனைத் திட்டுவதைப் பழக்கமாக வைத்திருக் கிறார். இந்தச் சூழலில் ஷாலினி பக்கத்து வீட்டிற்குக் குடி வருகிறாள். ரகுவரனின் வெகுளித்தனத்தை ரசிக்கும் ஷாலினி, ஒரு கட்டத்தில் அவனைக் காதலிக்கத் தொடங்குகிறாள்.

எதிர்பாராத விதமாக வீட்டில் ஒரு அசம்பாவிதம் நடக்க, பழி ரகுவரன் மீது விழுகிறது. அவனும் குற்ற உணர்ச்சியில் குமைகிறான். ஆனால் அதன் பிறகு வரும் திருப்பம் அவனுக்குப் புதிய பாதையைக் காட்ட, தான் விரும்பும் வேலையைப் பெறுகிறான். சிறப்பாகப் பணியாற்றியதால் பெரிய புராஜக்ட் ஒன்றின் பொறுப்பும் கிடைக்கிறது. ஆனால் அதே புராஜக்டை எடுக்க முயன்று தோற்றவர்கள் அதைச் சீர்குலைக்க முயல்கிறார்கள். பணபலமும் அதிகார பலமும் கொண்ட அவர்களது சவாலை ரகுவரன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதே மீதிக் கதை.

படத்தின் முதல் பாதி சுவாரஸ்யமாக நகர்ந்தாலும் தனுஷின் பல படங்களில் பார்த்த காட்சிகள் என்பதால் ஒரு கட்டத்துக்கு மேல் அலுப்பு ஏற்படத்தான் செய்கிறது. படித்த துறையில்தான் வேலைக்குப் போவேன் என்னும் பிடிவாதத்தை இயக்குநர் மேலும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். நாயகனின் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்கே நாயகி குடிவருவதும், அவளைப் பார்ப்பதற்காகப் பந்தை உள்ளே போட்டுவிட்டு எடுக்கப் போவதும் கற்பனை வறட்சியைக் காட்டுகிறது. நாயகிக்கு மெல்ல மெல்லக் காதல் வரும் விதம் இயல்பாக உள்ளது.

இரண்டாம் பாதியில் கதை தடம் மாறுகிறது. சுரேஷ் கிருஷ்ணா, ஷங்கர் போன்ற பெரிய பட்ஜெட் இயக்குநர்கள் கையாள வாய்ப்புள்ள சமூக ஃபேண்டசி வகை திரைக்கதையை தனுஷ் என்ற நடிகனை மட்டும் நம்பி எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் படைத்திருக்கிறார் இயக்குநர் வேல்ராஜ்.

பொறியியல் படித்து வேலையில்லாமல் இருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கேள்விக்குரிய எதிர்காலம், எளிய மனிதர்களின் வீட்டுக் கனவைப் பயன்படுத்தி கார்ப்பரேட்கள் அடிக்கும் கொட்டம் போன்ற சமகால யதார்த்தத்தைச் சுற்றிக் கதை பின்னப்பட்டுள்ளது. படத்தில் பேசப்படும் பிரச்சினைகளும், பின்னணியும் நிஜம். ஆனால் தனுஷ் கண்டுபிடிக்கும் சாகசத் தீர்வுகள் ஃபேண்டசி. சமீபத்தில் சென்னையில் நடந்த கட்டிட விபத்து இந்தப் படத்தைப் பார்க்கும்போது நிச்சயம் ஞாபகத்துக்கு வரும்.

மகனைப் பார்க்கும் போதெல்லாம் திட்டுவதையே வேலையாக வைத்திருக்கும் அப்பாவுக்கு மகன் கொடுக்கும் மரியாதை ரசிக்க வைக்கிறது. குடித்துவிட்டு வரும் மகனை அப்பாவிடம் அடி வாங்காமல் காப்பாற்றி அவர் வெளியே போனதும், ‘என்னடா இது பழக்கம்’ என்று பின்னி எடுக்கும் இடத்தில் ஆகட்டும், முதன்முதலாக வேலைக்கு போய் வாங்கிய சம்பளத்தில் 40 ஆயிரம் ரூபாயை செலவழித்ததற்காக அப்பா திட்டும்போது எதிர்த்துப் பேசும் மகனை அடிக்கும் அம்மாவாக நடித்திருக்கும் இடத்திலும் வாழ்ந்திருக்கிறார் சரண்யா. அமலா பாலுக்கும், தனுஷுக்குமான காதல் காட்சிகளில் குறை சொல்ல ஒன்றுமில்லை.

பாசம், காதல், கோபம், மகிழ்ச்சி, நடனம் என எல்லா இடங்களிலும் தனுஷின் நடிப்பை வஞ்சகம் இல்லாமல் பாராட்டலாம்.

அமலா பால் திருமணத்திற்குப் பிறகு வெளிவந்திருக்கும் முதல் படம் இது. அழகான அடுத்த வீட்டுப் பெண்ணாக கண்ணால் பேசி, சகஜமாக நடிக்கிறார்.

சிறப்புத் தோற்றத்தில் வரும் சுரபி, வில்லன் அமிதேஷ், விவேக் ஆகியோர் படத்துக்கு வண்ணம் சேர்க்கிறார்கள். அனிருத்தின் பின்னணி இசை படத்துக்கு சுருதியைக் கூட்டுகிறது. ‘வாட் எ கருவாடு’, ‘வேலையில்லா பட்டதாரி’ பாடல்கள் இளவட்டங்களை ஆட்டம் போட வைக்கின்றன. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், முதன் முறையாக ஒரு இயக்குநராக நின்று விளையாடியிருக்கிறார். ஒளிப்பதிவு, இயக்கம் இரண்டு வேலைகளின் பொறுப்பும் சேர்ந்ததின் அழுத்தத்தைப் படத்தின் சில காட்சிகள் பிரதிபலிக்கின்றன.

தனுஷின் 25-வது படம் இது. ‘காதல் கொண்டேன்’, ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘3’, ‘புதுப்பேட்டை’ என்று அவர் நடித்த பல படங்களை ‘வேலையில்லா பட்டதாரி’ ஞாபகப்படுத்துகிறது. அது பலமா, பலவீனமா என்பது தெரியவில்லை.

இந்து டாக்கீஸ் குழு
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம்

Post by சிவா on Tue Jul 22, 2014 3:02 am


தினமலர் விமர்சனம்

நம் நாட்டில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் பிரச்னைகளைப் பற்றி அவ்வப்போது படங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. சில படங்கள் மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகவும், சில படங்கள் யதார்த்தமான படங்களாகவும் வந்திருக்கின்றன. படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் பிரச்னைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கையின் முக்கியமான அடுத்த கட்டத்தில் காலடி எடுத்து வைத்து நன்றாக சம்பாதித்து, கல்யாணம், குடும்பம், குழந்தை என அவன் சிறகடிக்க ஆசைப்படும் நேரத்தில் அவன் பறப்பதை தடுக்கவும், அவனின் சிறகுகளை உடைத்தெறியவும் பல பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வேல்ராஜ்.

பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய வேல்ராஜ் முதல் முறையாக இயக்கியிருக்கும் படம். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக வெற்றி பெறும் இயக்குனர்களின் வரிசையில் இவரும் இடம் பிடித்துவிடுவார். தனுஷை ரசிகர்கள் எப்படிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்களோ அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தையும், அவருக்குப் பொருத்தமான கதையையும், காட்சிகளையும் உருவாக்கியிருக்கிறார். அதுவே அவருக்கு பாதி வெற்றியைக் கொடுத்துவிட்டது. ஒரு நடுத்தரக் குடும்பத்து யதார்த்த வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இடைவேளை வரை யதார்த்த சினிமாவாக இருக்கும் படம், அதன் பின் கமர்ஷியல் பாதையை நோக்கி நகர்கிறது. அதிலும் யதார்த்தம் இருந்தாலும், சினிமாத்தனம் கொஞ்சம் அதிகம்தான். அதைக் கொஞ்சம் குறைத்திருந்தால் இரண்டாவது பாதியும் இன்னும் அதிகமாக ஈர்த்திருக்கும்.

ஒரு நடுத்தரக் குடும்பத்து வீட்டின் மூத்த மகன் தனுஷ். சிவில் இஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு நல்ல வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய தம்பி நல்ல வேலையில் இருக்கிறார். வீட்டில் அப்பா சமுத்திரக்கனி எப்போதும் திட்டிக் கொண்டேயிருக்க, எல்லா அம்மா போலவே தனுஷின் அம்மா சரண்யா மகனுக்கு ஆதரவாக இருக்கிறார். பக்கத்து வீட்டிற்கு குடி வரும் அமலாபாலுடன் பழக ஆரம்பித்து போகப் போக அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் தனுஷ். ஒரு சந்தர்ப்பத்தில் சரண்யா திடீரென இறந்துவிட, அதற்கு தனுஷும் ஒரு காரணம் என அப்பாவும், தம்பியும் தனுஷை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். அதன் பின் இறந்து போன சரண்யாவின் நுரையீரல் தானத்தால் புது வாழ்வு பெறும் சுரபியின் அப்பா மூலமாக அவர்களது கான்ட்ராக்ட் கம்பெனியில் தனுஷுக்கு வேலை கிடைக்கிறது. 200 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடம் கட்டும் அரசாங்க திட்டத்திற்கு பொறுப்பேற்கிறார் தனுஷ். ஆனால், போட்டி நிறுவனம் அந்த திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறது. அவற்றை தனுஷ் சமாளிக்கிறாரா, அவரது குடும்பத்தினரின் அன்பை சம்பாதிக்கிறாரா, அமலாவுடனான காதல் நிறைவேறுகிறதா என்பதுதான் படத்தின் மீதி கதை.

“தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், யாரடி நீ மோகினி” பாதைக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் தனுஷ். இம்மாதிரியான படங்களும், கதாபாத்திரங்களையும்தான் அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை இந்தப் படம் தனுஷுக்கு நன்றாகவே உணர்த்தும். இந்த மாதிரி படங்களும், கதாபாத்திரமும் அவருக்கு 'லட்டு' மாதிரி, நடிக்கிறதப் பத்தி கேட்கணுமா. ஆனால், அவ்வப்போது ரஜினிகாந்த் ஏன் எட்டிப் பார்க்கிறார் என்றுதான் தெரியவில்லை. பல காட்சிகளில் ரஜினியின் மேனரிசத்தைப் பார்க்க முடிகிறது. நீங்க நீங்களாவே இருப்பதுதான் நல்லது தனுஷ். பல காட்சிகளில் தனுஷ் பேசும் வசனத்திற்கு தியேட்டரில் கைதட்டல். அவ்வளவு பேர் அவரை மாதிரியே இருப்பாங்க போல. முக்கவால் வாசி காட்சிகளில் புகைப் பிடித்துக் கொண்டிருப்பது ஏனோ. ஒரு காட்சியில் சுரபிக்கு புகைபிடிப்பது பற்றி அட்வைஸ் கொடுத்துவிட்டு, அதன் பின் இவர்தான் அதிகமாக புகைபிடிக்கிறார். வேலையில்லாத பட்டதாரிகளில் புகை பிடிக்காத பல லட்சம் பேர் இருக்கிறார்கள்.

தனுஷ் காதலியாக அமலாபால். பல் டாக்டர் கதாபாத்திரம், எந்த ஊர்ல பல் டாக்டருக்கு மாதம் 2 லட்ச ரூபாய் சம்பளம் தருகிறார்கள்?. சும்மா பெருமைக்காக வைத்த வசனமா, இல்லை சீரியசாகவே இந்த வசனத்தை வைத்தார்களா தெரியவில்லை. தனுஷ் சொல்ற மாதிரி 'சினிமா நடிகை மாதிரி இல்லைன்னாலும், சீரியல் நடிகை மாதிரிதான்' அமலா பால் தெரிகிறார். அடிக்கடி தனுஷுக்கு அட்வைஸ் மழை பொழிந்து அவரை மாற்ற முயற்சிக்கிறார். ஆனால், அமலா பால் முகத்தில் ஒரு சோகம் குடி கொண்டிருக்கிறதே. ஒரு வேளை இந்தப் படத்தில் நடிக்கும் போதுதான் திருமணம் பற்றி முடிவெடுத்திருப்பாரோ? இதற்குப் பிறகு நடிக்க மாட்டோமா என்ற கவலை வந்து விட்டது போல.

அமலா பாலுக்கு அப்படியே கான்டிராஸ்டாக சுரபி. எப்போதும் பளிச்சென இருக்கிறார். அவரைக் காட்டும் போதெல்லாம் ஒளிப்பதிவாளர் ஸ்பெஷல் லென்ஸ் போட்டு எடுத்திருப்பார் போல. சில காட்சிகளில் வந்து போகும் கதாபாத்திரத்திம்தான் என்றாலும் தன் அழகால் கவனத்தை ஈர்க்கிறார் சுரபி. ஆனால், இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தால், அதையே நம் இயக்குனர் வழக்கமாக்கிவிடுவார்கள் என்பதை யாராவது அவருக்குச் சொல்லியாக வேண்டும்.

தனுஷின் அப்பாவாக சமுத்திரக்கனி, நடுத்தரக் குடும்பத்து அப்பாவை கண்முன் நிறுத்துகிறார். ஒரு காலத்துல நாமும் அப்படித்தானே திட்டு வாங்கியிருக்கிறோம், இப்பவும் திட்டு வாங்குகிறோம் என பல இளைஞர்களை யோசிக்க வைக்கும்.

அம்மான்னா சரண்யாதான், சரண்யான்னா அம்மாதான். இப்படிப்பட்ட அம்மாக்களால்தான் பல இளைஞர்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். படத்தில் சரண்யாவின் முடிவு கண்ணீரை வரவழைக்கும் காட்சி. அந்த சோகப் பாடல் வேறு இன்னும் மனதை அழுத்தி விடுகிறது.

தனுஷின் தம்பியாக நடித்திருக்கும் புதுமுகம் அருமையான தேர்வு. வில்லனாக அமித்தேஷ், பணக்காரத் தோரணயை அழகாக காட்டியிருக்கிறார்.

இன்றைய இளைஞர்களின் ரசனைக்கேற்ப பாடல்களைப் போட்டிருக்கிறார் அனிருத். படத்தின் கதையை மீறி கொஞ்சம் மாடர்ன் ஆன இசையாக இருக்கிறது, அம்மா பாடலைத் தவிர.

வேலையில்லா பட்டதாரி - வேலைக்குப் போன பட்டதாரியை விட வேலையில்லாத பட்டதாரிதான் அதிகமா ரசிக்க வைக்கிறார்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம்

Post by சிவா on Tue Jul 22, 2014 3:04 am

மாலைமலர் விமர்சனம்

தனுஷ் இன்ஜினீயரிங் படித்துவிட்டு வேலையில்லாமல் ஊர் சுற்றி வருகிறார். படிப்புக்கேற்ற வேலையில் சேரும் விருப்பத்துடன் இருக்கும் அவர், படிப்புக்கு சம்பந்தம் இல்லாத பல வேலைவாய்ப்புகளை தட்டிக் கழிக்கிறார். தனுஷ் இப்படி பொறுப்பில்லாமல் இருப்பதால் அவரது தந்தை சமுத்திரகனி இவரை அடிக்கடி திட்டித்தீர்க்கிறார். தாய் சரண்யாவோ, தனுஷ் மீது பாசம் காட்டி வருகிறார். தனுஷின் தம்பி அதிக சம்பளத்துக்கு வேலை செய்து வருகிறார். அதையும் காரணம் காட்டி தனுஷை மேலும் திட்டித் தீர்க்கிறார் சமுத்திரகனி.

இந்நிலையில் தனுஷ் குடியிருக்கும் வீட்டிற்கு பக்கத்துக்கு வீட்டில் நாயகி அமலாபால் குடியேறுகிறார். இவர்களின் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்கிறது. பிறகு இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒருநாள் சரண்யாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. சமுத்திரகனியும், தனுஷின் தம்பியும் ஊருக்கு செல்ல நேரிடுகிறது. ஆதலால் அம்மாவை பார்த்துக்கொள்ளும்படி தனுஷிடம் சொல்கிறார் சமுத்திரக்கனி. ஆனால் தனுஷ், அமலாபாலுடன் வெளியில் சென்றுவிடுகிறார். சரண்யாவின் உடல்நிலை மோசமடைந்து இறந்து விடுகிறார்.

இறந்த சரண்யாவின் உடல் தானம் செய்யப்படுகிறது. ஒரு செல்வந்தரின் பெண் சுரபிக்கு சரண்யாவின் உடல் தானம் செய்யப்படுகிறது. இதற்கு நன்றிக்கடன் செலுத்திய அந்த பெண், தனுஷிற்கு இன்ஜினியரிங் வேலை வாங்கி கொடுக்கிறார். முதலில் மறுக்கும் அவர், தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்ததால் ஏற்றுக்கொள்கிறார். சுரபியின் மூலம் தன் அம்மாவை பார்க்கும் தனுஷ், தனக்கு கிடைத்த வேலையையும் மனப்பூர்வமாக செய்ய புறப்படுகிறார். அந்த வேலையில்தான் பிரச்சனையும் ஆரம்பிக்கிறது.

தனுஷ் தனக்கு கொடுத்த அரசு ஒப்பந்தப்பணியை செய்வதற்காக ஒரு பகுதிக்கு செல்லும் போது மற்றொரு ஒப்பந்ததாரரான வில்லன் அமிதேஷ் பிரச்சினை செய்கிறார். இதனால் இருவருக்கும் பகை ஏற்படுகிறது. தனுசை அந்த இடத்தில் வீடு கட்டவிடாமல் தடுக்கிறார் அமிதேஷ்.

இறுதியில் தனுஷ் வில்லனின் எதிர்ப்பை மீறி பில்டிங் கட்டினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

சமீபகாலமாக வெளிவந்த தனுஷின் படங்களில் அதிகமான சீரியஸ் காட்சிகளை பார்த்து வெறுத்து போன ரசிகர்களுக்கு ஜாலியான தனுசை இப்படத்தில் பார்க்க முடிகிறது. வேலை வெட்டி இல்லாத ஜாலியான இளைஞன் கேரக்டரில் நடிக்க தனுஷுக்கு சொல்லித்தர தேவையே இல்லை. மிகவும் இயல்பான நடிப்பு. அசால்ட்டான டயலாக் டெலிவரி, அதிரடி பஞ்ச் வசனம், அப்பா திட்டும்போது காதில் போட்டுக்கொள்ளாமல் இருக்கும் காட்சிகள் என தனுஷ் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். தனுஷ் வரும் காட்சிகள் மாஸாக இருக்கிறது. அதற்கு அனிருத்தின் இசை பக்கபலமாக இருக்கிறது.

கதாநாயகி அமலா பாலுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. பாடல், காதல், என்று வந்து போனாலும் நினைவில் நிற்கிறார். தனுஷ் மீது காதலாக மாறும் உணர்வை முகத்தில் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனுஷை கண்டிக்கும் காட்சிகளிலும், அறிவுரை கூறும் காட்சிகளிலும் தனது அனுபவத்தை கொட்டியுள்ளார். சரண்யா வழக்கம்போல் பாசமிகு அம்மாவாக வந்து, ஒருசில இடங்களில் தனுஷை கண்டிக்கிறார். விவேக் காமெடியில் ரசிகர்களை சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்கிறார்.

அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். குறிப்பாக பின்னணி இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அம்மா பாடல் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்தை இயக்கியிருப்பதால் மிகவும் ரசித்து செய்திருக்கிறார். தனுஷை நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜாலியாக காண்பித்த வேல்ராஜை பாராட்டலாம்.

மொத்தத்தில் ‘வேலையில்லா பட்டதாரி’ ஜாலியான பட்டதாரி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம்

Post by மாணிக்கம் நடேசன் on Tue Jul 22, 2014 10:26 am

நானும் வேலை இல்லாத பட்டை தாரி தான், ஏதாவது வேல இருந்தா பாத்து கொடுங்க.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4226
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம்

Post by அருண் on Tue Jul 22, 2014 2:31 pm

தனுஷ்ன் சமுத்ரகனி சரண்யா ,மூன்று பேரின் நடிப்பும் எக்ஸ்பிரஷன் படத்தின் டாப் ஹை லைட்.
முதல் பகுதி ஜாலியாக செல்கிறது இரண்டாம் பகுதி சற்று தடுமாறுகிறார்கள்.

தனுஷின் தோல்வி படங்களுக்கு பின் இப்படம் வெற்றியை கொடுத்து இருக்கிறது.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம்

Post by M.M.SENTHIL on Tue Jul 22, 2014 3:05 pm

 அண்ணா


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம்

Post by யினியவன் on Tue Jul 22, 2014 3:12 pm

வேலையில் இருந்து (அடி) பட்ட தாரிகள் வேலை இல்லா பட்டதாரிகளை விட மட்டமோ? (நாங்களும் அடிப்படையில் அடி பட்ட தாரிகள் தான்) புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம்

Post by செல்வமூர்த்தி on Tue Jul 22, 2014 5:28 pm

படித்த படிபுக்கே வேலை செய்ய வேண்டுமென்றால் யாவரும் இங்கு வேலை இல்லாமல் தான் இருக்க வேண்டும் ....கிடைக்கும் வாய்ப்பை பயன் படுத்தி கொண்டு படித்த படிப்புக்கு வேலை தேடுவது தான் அறிவாளி தனம்.........சினிமாவுக்கு எதுவும் பொருந்தும் ஆனால் உண்மையோடு ஈடாகாது..... ((((((((((((((சினிமா என்றாலே மெய் பாதி பொய் பாதி தானே..............))))))))))))))))))
avatar
செல்வமூர்த்தி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 126
மதிப்பீடுகள் : 19

View user profile http://smileselvamoothy@gmail.com

Back to top Go down

Re: வேலையில்லா பட்டதாரி: திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum