புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:23 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_m10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10 
78 Posts - 54%
heezulia
மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_m10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10 
53 Posts - 37%
mohamed nizamudeen
மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_m10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_m10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_m10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_m10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_m10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10 
120 Posts - 57%
heezulia
மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_m10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_m10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_m10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_m10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_m10மன அழுத்தம் எப்படி உண்டாகிறது? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுத்தம் எப்படி உண்டாகிறது?


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 01, 2014 4:07 pm





1936-ல் டாக்டர்.ஹான்ஸ் செல்யி என்பவர் மன அழுத்தத்தால் ஏற்படுகின்ற மாற்றத்தை அறிவியல் பூர்வமாக நிரூபித்தார்.
அவருடைய பரிசோதனைகளின்படி எலிகளை ஆய்வு கூடத்தில் வைத்து பல்வேறு மன அழுத்தங்களை உண்டாக்குகின்ற சூழ்நிலைகளை அவற்றுக்குக் கொடுத்தார். உதாரணத்திற்கு குளிர் மிகுதியான இடத்தில் விடுதல், மோட்டார் ஓடுகின்ற பெட்டிக்குள் வைத்தல், அதைக் கொல்லப் போவதாக மிரட்டுகிற சூழ்நிலைகளைக் காட்டுதல் போன்ற பரிசோதனைகளை நிகழ்த்தி, அதன் முடிவில் அந்த எலிகள் இறந்ததும் அவற்றைப் பிரேத பரிசோதனை செய்தார்.
மன அழுத்தம் கொடுக்கப்பட்ட அனைத்து எலிகளிலும் பிட்யூட்டரி சுரப்பியில் பாதிப்பு, அட்ரீனல் சுரப்பி வீக்கம், வயிற்றுப் புண் போன்ற மாற்றங்களைக் கண்டார்.
அதே மாற்றங்களை பார்மால்டிஹைடு என்ற ரசாயனப் பொருளை உடலில் செலுத்தியதால் இறந்துவிட்ட எலிகளிலும் கண்டார்.
பரிசோதனைகளின் இறுதி முடிவு இதுதான். நமது உடலில் விஷப்பொருளை (பார்மால்டிஹைடு) செலுத்தினால் ஏற்படுகின்ற மாற்றங்களை மன அழுத்தமும் உண்டாக்குகிறது.
ஆகவே, மனஅழுத்தம் என்பது விஷத்தைவிட மோசமான நோய்.

மனச்சுமைகளை வெல்வது எப்படி?

அதை நீக்கும் வழிகளை எளிதில் அறியலாம்.
* நம்பிக்கைக்குப் பாத்திரமான நல்லவர்களிடம் மனம்விட்டு பேசுதல்.
* அடுத்தவர் இதே மனச்சுமையுடன் நம்மிடம் வந்தால் என்ன ஆறுதல் சொல்வோமோ அதையே நமக்கு சொல்லிக் கொள்ளுதல்.
* தாங்கமுடியாத சூழ்நிலை என்றால் அவ்விடத்தை விட்டு அகன்று விடுதல்.
* அமைதியான தூக்கத்திற்குப் பிறகு பிரச்சினைகளை ஆராய்ந்தால் தெளிவு கிடைக்கும்.
* நம்முன் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் வரிசைபடுத்தி எழுதிவிட்டு, அதில் முக்கியமான ஒன்றுக்கு மட்டும் தீர்வுகாணுதல், பிரச்சனைகளைப் பிரித்து கையாளுதல் போன்ற வழிகள் தீர்வுக்கு வழிவகுக்கும்.
* இவ்வுலகத்தில் நாம் மட்டும் இப்படி அவதிப்படவில்லை. பலரும் இப்படி இருக்கிறார்கள்.
* மற்றவர்களுடைய பிரச்சினைகளில் பங்கு கொண்டு தீர்வுக்கு உதவினால், நமது பிரச்சினை சிறியதாகிவிடும்.
* விரக்தியடைவதைவிட பொறுமையுடன் செயல் பட்டால். காலம் எல்லாவற்றையும் நன்றாகக் கையாளும்.
* நமது வலிமையை அறிதல் முக்கியம். நம் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை ஏற்பதே விவேகம்.
* ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒரு தீர்வு கிடைக்கும். கணக்குக்கு விடை கிடைப்பதைப் போல, பூட்டைத் தயாரிக்கும்போதே சாவியை உருவாக்குவது போல.
* சிக்கல்களை துன்பமாக நினைக்காமல் சவால்களாகப் பார்த்தால் வித்தியாசமான உற்சாகமான மனநிலை உருவாகும்.
* வாழ்க்கையே சவால்களின் தொடர்தான். எதிர் கொள்வதில்தான் வெற்றி அமையும்.
*மாற்ற வேண்டியதை மாற்றிக் கொள்ளும் மனநிலை அவசியம்




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 01, 2014 4:07 pm

உடற்பயிற்சி செய்தால் மன உளைச்சல் குறையுமா?
மன உளைச்சலின் போது கார்டிசால் மற்றும் அட்ரீனலின் போன்ற ஹார்மோன்கள் அளவிற் கதிகமாக சுரப்பதால் உடலில் பல்வேறு தீய விளைவுகள் உண்டாகின்றன. உடற்பயிற்சி செய்வதால் இந்த ஹார்மோன்களால் ஏற்படுகின்ற தீய விளைவுகளை உடலின் சக்திகளாக மாற்றிவிட முடியும். அதனால் மன அழுத்தமும் குறையும். உடல் வலிமையும் பெருகும்.
மேலும் உடற்பயிற்சியினால்,
* எண்டார்பின் என்ற ஹார்மோன் அதிகமாக சுரந்து உடலையும் மனதையும் சமநிலைப் படுத்துகிறது.
* உடற்பயிற்சியைத் தொடர்ந்து தசைகள் தளர்வு நிலையை அடைகின்றன. அதனால் மன அழுத்தம் குறையும்.
* அமைதியான தூக்கம் ஏற்படும்.
* உடலும் மனமும் சுறுசுறுப்படையும்.
* நம்பிக்கை வளரும்.
* படிப்பிலும் தொழிலும், மேலும் அதிக கவனம் செலுத்த முடியும்.
* உடல் தோற்றம் பொலிவடையும்.
* சுயமதிப்பு பெருகும்.
* ஜீரணத்தன்மை சீரடையும்.
* முதுமைத் தோற்றம் குறையும்.
* மாரடைப்பைத் தடுக்க முடியும்.
* தசைகளின் வலிகள் நீங்கும்.
* எலும்பின் உறுதி அதிகமாகும்.
* நுரையீரல் சக்தி அதிகமாகும்.
* இரத்த ஓட்டம் சீராகும்.

மன உளைச்சலால் மனதில் குழப்பம் உண்டாகும். குழப்பம் உண்டானால் சிந்தனை தடுமாறும். சிந்தனை தடுமாறும் போது தவறான முடிவுகளே உருவாகும். தவறான முடிவுகளால் தவறாக செயல்பட்டு இறுதியில் அழிவு ஏற்படும்.
- கீதை

மன அழுத்தத்தின் மூன்று கட்ட விளைவுகள்
மன உளைச்சல் அடையும்போது அளவிற்கதிகமான ஹார்மோன்கள் சுரக்கப் பட்டு உடலின் எல்லா இரத்தக் குழாய்களும் சுருக்கமடைகின்றன. அதனால் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகமாகின்றன. மேலும் உடலின் எல்லா தசைகளும் இறுக்கமடைகின்றன.
இரண்டாவது கட்டத்தில் உடலின் மாற்றங்கள் குறைந்து அந்த சூழ்நிலையைத் தாங்குகின்ற ஆற்றல் பிறக்கின்றன.
மூன்றாவது கட்டத்தில் அதாவது நீடித்த மன அழுத்தத்தால் உடலில் நிலயான பாதிப்புகள் உண்டாகின்றன.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 01, 2014 4:08 pm

முதுமையில் மனஅழுத்தம் ஏன்?

உடலிலும் சூழலிலும் மாற்றங்கள் உண்டாகின்றன.
மனதில் நினைவாற்றல் குறையும், குறிப்பாக சமீபகால நிகழ்ச்சிகளை மறந்து விட்டு பழைய நிகழ்ச்சிகளை நன்கு நினைவில் வைத்திருப்பார்கள்.
*தானே சரி என்ற பிடிவாத மனநிலை.
* எளிதில் உணர்ச்சி வசப்படுதல்.
* மனச்சோர்வு.
*உடல் தோற்றம் மற்றும் உடைகளைப் பற்றி பொருட்படுத்தாமை.
* கவர்ச்சி குறைந்துவிட்ட மனஉணர்வு.
* உடல் வலிமை குறைதல்.
* தனிமையுணர்வு
* நோய் பற்றிய பயம்.
* இறப்பு பயம்.
* முக்கியத்துவம் கிடையாதோ என்ற ஏக்கம்.
* இத்துடன் சமூக சூழலிலும் குடும்ப உறவுகளிலும் மாற்றம்.
* நண்பர்கள் குறைதல்.
* வேலையில்லாததால் செயல்படாதிருத்தல்.
* பொருளாதாரக் குறைவு.
* அந்தஸ்து மாற்றம்.
* மற்றவர்களை அதிகமாக பொருட்படுத்தாமை.
போன்றவைகளால் மன அழுத்தம் உண்டாகின்றன.

மன அழுத்தத்தால் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள்

1. அளவிற்கதிகமான அட்ரீனலின் ஹார் மோன்கள் சுரப்பதால் கல்லீரலில் சேமித்து வைக்கப் பட்டுள்ள குளுக்கோஸ் வெளியாகி வீணாகிறது.
2. தோலிலுள்ள இரத்தக் குழாய்களும் சுருங்கி விடுகின்றன. இதனால் தோல் வெளிறி விடுகின்றன.
3. கை, கால்களிலுள்ள தசைகளுக்கு அதிக அளவு இரத்தம் சென்று இறுக்கத்தை உண்டாக்கு கின்றன.
4. இதய ஓட்டமும் இரத்த அழுத்தமும் அதிகமாகின்றன.
5. இரைப்பையில் ஜீரணம் தடைப்படுகிறது.
இவை எல்லா மாற்றங்களும் நம்மை ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும், தப்பித்து ஓடவும் உண்டாகின்றன.
தற்காப்பிற்காக பயன்படும் இம்மாற்றங்கள் மன உளைச்சலின் போதும் ஏற்பட்டு உடலின் ஆற்றல்கள் வீணாகின்றன.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 01, 2014 4:09 pm

நடுவயதில் மன அழுத்தம்

ஒவ்வொருவருக்கும் இளமையில் எண்ணற்ற கற்பனைகள், எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. சுமார் 40 வயதை நெருங்கும் போது இதுவரை எதைச் சாதித்தோம்? என்ற கேள்வி, நாம் எதிர்பார்ப்பதைவிட மாறான செயல்கள், இப்படி நடந்துவிட்டதே என்றஏமாற்றம் பலருக்கு ஏற்படுகின்றன.
இதனால் பலர் தம்முடைய தோல்விகளை மறைக்க வெளியுலகிற்கு வேஷம் போடுகின்றனர். தான் வல்லவன்தான் என்ற போலித்தனமான அந்தஸ்திற்காக பலவற்றைசெய்கிறார்கள்.
இன்னும் சிலர், எதிலும் தலையிடாமல் தம்மையே சுருக்கிக் கொண்டு அடக்கிக் கொள்வர்.
இவ்விரண்டிலுமே மனஉளைச்சல் உண்டாகும்.
இதற்கு தீர்வு தன்னையறிதல் தான்.
பலம், பலவீனம் இரண்டையும் அறிந்து பலத்தை பெருக்கவும் பலவீனத்தை குறைக்கவும் செய்தால் மனம் சமநிலை அடையும்.
பிறர் என்ன நினைப்பார்களோ என்பதற்காக தேவையில்லாததை செய்தால் மேலும் சுமையாகி விடும்.

பெண்களுக்கு மெனோபாஸ் மனஉளைச்சல்

பெண்களுக்கு 40 வயதாகும்போது உடலில் சுரக்கின்ற ஈஸ்ட்ரஜன் ஹார்மோனின் அளவு குறைந்து விடுவதால் உடலிலும், மனதிலும் எண்ணற்ற மாற்றங்கள் உண்டாகின்றன. இதனால்
* மனப்பதட்டம்
* வேலையில் எரிச்சல்
* காரணமில்லாமல் அழுதல்
* ஞாபகமறதி
* சக்தி குறைந்த உணர்வு
* உடல் வெப்பமாகுதல்
* உடல் வியர்த்தல்
* தூக்கமின்மை
போன்ற தொல்லைகள் ஏற்படும். இதை சரியான ஹார்மோன் சிகிச்சையின் மூலம் தவிர்க்கலாம். குணப்படுத்தலாம்

மன உளைச்சல் உண்டாக 25 முக்கிய காரணங்கள்
1. கணவன்/மனைவி இறப்பு
2. விவாகரத்து / திருமணத்தில் பிரிவு
3. சிறைத் தண்டனை
4. குடும்பத்தினரின் இறப்பு
5. திடீர் உடல் நலக்குறைவு, விபத்து
6. திருமணம்
7.வேலையிழப்பு
8. வேலையிலிருந்து ஓய்வு
9. கர்ப்பம்
10. உடலுறவில் சிக்கல்கள்
11. பொருளாதார இழப்பு
12. வேலை மாற்றம்
13. கடன் வாங்குதல்
14. நண்பரின் இறப்பு
15. கணவன் – மனைவி சண்டை
16. பதவி உயர்வு, புதிய பதவி
17. மகன் / மகள் பிரிவு
18. மாமியார் மருமகள் வகை கொடுமைகள்
19. புதிய வீடு கட்டுதல்
20. மேலதிகாரியின் கெடுபிடி
21. வேலை நேரங்களில் பெரிய மாற்றம்
22. பொழுது போக்கு இல்லாமை
23. வீடு இடமாற்றம்
24. தூக்கத்தில் குறைபாடு
25. உணவு பழக்கத்தில் மாற்றம்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 01, 2014 4:10 pm

மன உளைச்சலின் அறிகுறிகள்

மனதில்

* அடிக்கடி கவலை
* கட்டுக்கடங்காத கோபம்
* இனம் புரியாத சோகம்
* எல்லா நேரங்களிலும் பயம்
* எதிலும் கவனம் செலுத்த இயலாமை
* தாழ்வு மனப்பான்மை
* முடிவெடுக்க இயலாமை
* எந்தத் தொழிலையும் தொடர்ந்து செய்ய இயலாமை
* வாழ்க்கையில் திருப்தியின்மை
* காரணமின்றி அழுதல்

உடலில்

* தலைவலி (அ) தலைச் சுற்றல்
* முகம் வியர்த்தல்
* இறுகிய தோற்றம்
* வாய்விட்டு சிரிக்க இயலாமை
* உடற்சோர்வு
* சாப்பிட இயலாமை
* நெஞ்சு படபடப்பு, நெஞ்சு வலி
* வயிறு புரட்டல், வாந்தி உணர்வு
* அடிக்கடி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல்
* மூச்சு வேகமாகுதல்
* கை, கால் நடுக்கம்
* தூக்கமின்மை

மன உளைச்சலால் சக்தி வீணாகாமலிருக்க…

மன உளைச்சலின்போது அதிகபடியான அட்ரீனலின் போன்ற ஹார்மோன்கள் சுரப்பதால் உடலில் தசைகள் இறுக்கமடைகின்றன. அச்சக்தியை வீணாக்காமலிருக்க சில உடற்பயிற்சிகளைச் செய்தால் அச்சக்தியை வலிமையானதாக்கி விட முடியும். மனஉளைச்சலின்போது தனியிடத்திற்குச் சென்று சில பயிற்சிகளைச் செய்யலாம்.

1. நேராக நின்று பிறகு, கீழே உட்காருதல் (இதை 5 முதல் 10 நிமிடங்கள் வரை)
2. மூச்சை நன்கு இழுத்து நேராக நின்று, பிறகு மூச்சை வெளிவிட்டு குனிந்து இரு கைகளாலும் தரையைத் தொடுதல் (சுமார் 5 முதல் 10 நிமிடங்கள்)
இதில் ஏதாவது ஒன்றை சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் செய்தால் மன அழுத்தம் குறைந்து உடல் வலிமை பெருகும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 01, 2014 4:10 pm

மன உளைச்சலில் மனநிலை எப்படி?

* சிடுசிடுவென பழகுதல்
* எதிலும் நம்பிக்கையின்மை
* யாரிடமும் பழக பிடிக்காமல் தனித்திருத்தல்
* அளவிற்கதிகமாக உணர்ச்சி வயப்படுதல் அல்லது எதையும் வெளிக்காட்டாமல் அடக்கிக் கொள்ளுதல்.
* பிறர்மீது அதிகமாக சந்தேகப்படுதல்
* ஏதோ தவறு செய்து விட்டதைப் போன்ற குற்றவுணர்வுகள்.
* அளவிற்கதிகமான கவலைகள்
* செயலில் கவனம் செலுத்த இயலாமை
*எளிதில் சோர்வடைதல்
* சரியாக உணவு உண்ணாமை
* சரியான தூக்கமின்மை
* குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள்
* விரக்தி மனப்பான்மை

மனஉளைச்சல் உண்டாவது எப்படி?

மனதில் பயம், கோபம், ஆவேசம் போன்ற உணர்வுகள் பிறக்கும்போது மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் பரவி, ஹைப்போதலாமஸ் என்ற நடுமூளைப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கிருந்து பிட்யூட்டரி சுரப்பிக்கு உந்துதல் செய்யப்பட்டு அதிக ஹார்மோன்களை சுரக்கச் செய்கின்றன.
அவை உடலின் மற்ற நாளமில்லா சுரப்பிகளை இயக்குகிறது. அதில் குறிப்பாக அட்ரீனல் சுரப்பி அதிகமாக இயக்கப்பட்டு கார்டிசால் மற்றும் அட்ரீனலின் போன்ற ஹார்மோன்கள் அளவிற் கதிகமாக வெளியாகின்றன. இவை இரத்தத்தில் கலந்து உடலின் எல்லா உறுப்புகளுக்கும் சென்று அங்கு பாதிப்பை உண்டாக்குகின்றன.
குறிப்பாக எல்லா உறுப்புகளின் இரத்தக் குழாய்களையும் சுருக்கி விடுகின்றன. அதனால் உறுப்புகள் பழுதடைகின்றன.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 01, 2014 4:11 pm

மனஉளைச்சல் சம்பந்தப்பட்ட நோய்கள்

இரத்த ஓட்ட மண்டலத்தில் – படபடப்பு, மாரடைப்பு, இரத்தக்கொதிப்பு
ஜீரண மண்டலத்தில் – குடல் புண், அடிக்கடி மலம் கழித்தல், வயிற்று வலி, அல்சரேடிவ் கோலைடிஸ்
சுவாச மண்டலத்தில் – ஆஸ்துமா, அடிக்கடி சளித்தொல்லை.
நரம்பு மண்டலத்தில் – ஒற்றைத் தலைவலி, உடற்சோர்வு, தூக்கமின்மை.
நாளமில்லா சுரப்பிகளில் - தைராய்டு பாதிப்பு, ஆண்மையின்மை, சர்க்கரை நோய், மாதவிலக்கில் மாற்றங்கள்.
மேலும் தோலில் ஊறல்நோய், மூட்டுகளில் வலி, இடுப்பு வலி, ரொமட்டாய்டு மூட்டு வலி, உடல் பருமன், மனப்பதட்டம், மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இந்நோய்கள் உண்டாக பல்வேறு காரணங்கள் உள்ளன என்றாலும் மன அழுத்தத்தால் இப்பாதிப்புகள் அதிகமாகின்றன என்பதே முக்கியம்.

மனச்சோர்வை தவிர்க்க

வேலைகளை தொடர்ச்சியாக செய்யாமல் இடையிடையே ஓய்வு எடுத்தல்.
* நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல்.
*ஏதாவது ஒரு குறிக்கோளை அமைத்து செயல்படுதல்.
* மனஉளைச்சலை சரியாகக் கையாளுதல்.
*உற்சாகமாக பழகுபவர்களுடன் தொடர்பு கொள்ளுதல்.
*உற்சாகமாக பழகுபவர்களுடன் தொடர்பு கொள்ளுதல்.
*தினமும் செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலிட்டு முக்கியமானவற்றை முதலில் முடித்துவிடுதல்.
* ஒரு சமயத்தில் ஒரு வேலையை மட்டும் எடுத்துக் கொள்ளுதல்.
*மனதிற்குப் பிடித்தமான பொழுது போக்கை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குச் செய்தல்.

உங்களுக்கு தாங்க முடியாத கோபம் ஏற்பட்டால் வாயால் சொல்லாதீர்கள். அதையெல்லாம் ஒன்றுவிடாமல் எழுதுங்கள். மணல் பரப்பில் எழுதுங்கள். அதுவும் அலைகள் வந்து மோதுகின்ற கடலோர மணல் பரப்பில் எழுதுங்கள்.
-நெப்போலியன் ஹில்

மனதில் அமைதி இருந்தால் அவ்வாழ்க்கையே சொர்க்கம்.
மனதில் அழுத்தம் இருந்தால் அதுவே நரகம்.
- ஷேக்ஸ்பியர்

நன்றி: மரு. கோ. இராமநாதன்




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக