ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆகஸ்ட் மாத பலன்கள் :)

View previous topic View next topic Go down

ஆகஸ்ட் மாத பலன்கள் :)

Post by krishnaamma on Mon Aug 04, 2014 7:58 pm

மேஷம்

மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக வாழ்பவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியாலும், சாதுர்யமான பேச்சாலும் சாதித்துக் காட்டுவீர்கள். தடைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். எதிர்பார்த்த தொகையும் கைக்கு வரும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளும் எடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்க்க வழி வகை பிறக்கும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். புது வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்டுவதற்கு சி. எம். டி. ஏ அப்ரூவளெல்லாம் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

ராசிக்கு 6-ல் ராகு நிற்பதால் வேற்றுமொழிப் பேசுபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டிலிருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். புகழ் பெற்ற புண்ணிய‌த் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலமாகவும் பணம் வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். 12-வது வீட்டில் கேது நிற்பதால் யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். கோவில் நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்துவீர்கள். 4-ல் குரு தாயாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மோதல்களும் வரும். சிலர் வீடு மாற வேண்டிய சூழ்நிலை வீடு விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய், சனியுடன் சேர்ந்து காணப்படுவதால் தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, அலர்ஜி, இன்பெக்ஷன், தோலில் நமைச்சல் வந்து நீங்கும். கண்டகச் சனி நடைபெறுவதால் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவரின் நட்பை தவிர்ப்பது நல்லது. கன்னிப்பெண்களே! உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.

பெற்றோர் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. தலைமையின் பார்வை உங்கள் மேல் விழும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். என்றாலும் புது வாடிக்கையாளர்களால் லாபம் அதிகரிக்கும். பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றங்களும் வர வாய்ப்பிருக்கிறது. குரு 10-ம் இடத்தை பார்ப்பதால் உயரதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பரிகாரம்: ஸ்ரீகற்பக விநாயகரை சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத பலன்கள் :)

Post by krishnaamma on Mon Aug 04, 2014 7:59 pm

ரிஷபம்


பிறர் நிழலில் வாழ விரும்பாதவர்களே! இந்த மாதம் முழுக்க சூரியன் சாதகமாக இருப்பதால் தைரியம் பிறக்கும். குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். தாயாரின் உடல் நிலை சீராகும்.

சகோதரக்காரகனும், சப்தமாதிபதியுமான செவ்வாய் சனியுடன் சேர்ந்து 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, முதுகு வலி, மூச்சுத் திணறல் வரக்கூடும். மனைவியுடன் வாக்குவாதங்களும், ஈகோப் பிரச்னைகளும் வரும். மனைவிவழி உறவினர்களையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையிலும் அலைச்சல், செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் தாமதமாகி முடியும். உங்களின் ராசிநாதனான சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைகளையும் தாண்டி நீங்கள் முன்னேறுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தைக் கூடி வரும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் பணவரவு உண்டு. கைமாற்றாக வாங்கியிருந்ததையும் தந்து முடிப்பீர்கள்.

பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்கள் அயல்நாடு சென்று உயர்கல்விப் பெற விசா கிடைக்கும். என்றாலும் ராகு 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் டென்ஷன் இருக்கும். தாய்வழி உறவினர்களாலும் அலைச்சல்களும், பயணங்களும் அதிகரிக்கும். குரு 3-ல் மறைந்திருப்பதால் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆனால் புதிய முயற்சிகள் தடைப்பட்டு முடிவடையும். கன்னிப் பெண்களே! உற்சாகமாக காணப்படுவீர்கள். சமயோஜித புத்தியுடன் நடந்துக் கொள்ளுங்கள். பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளே! கட்சி தலைமைக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். உட்கட்சி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். சந்தை நிலவரத்தையும் கண்காணித்து அதற்கேற்ப முதலீடும் செய்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோக ஸ்தானாதிபதி சனி உச்சமாகி வலுவடைந்திருப்பதால் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பழைய சம்பள பாக்கி கைக்கு வரும். பரிகாரம்: ஸ்ரீசக்கரத்தாழ்வாரை புதன் கிழமையில் சென்று வணங்குங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத பலன்கள் :)

Post by krishnaamma on Mon Aug 04, 2014 7:59 pm

மிதுனம்

சமாதானத்தை எப்போதும் விரும்புபவர்களே! உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பணவரவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். அனுபவப் பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தடைப்பட்டிருந்த உயர்கல்வி தொடரும். உங்களுடைய ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் அடிமனதிலிருந்த தாழ்வுமனப்பான்மை விலகும். வீண் விவாதங்களையெல்லாம் தவிர்ப்பீர்கள். குடும்பத்திலே உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். உங்களுடைய ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். மருந்து, மாத்திரை குறையும்.

ஆரோக்யம் கூடும். உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டில் செவ்வாயும், சனியும் நிற்பதால் இனந்தெரியாத மனக்கவலைகள், எதிர்காலம் பற்றிய பயமும் வந்துப் போகும். வழக்கால் நிம்மதியிழப்பீர்கள். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்துக் கொண்டால் நலமாக இருக்குமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். கர்ப்பிணிப் பெண்களும் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். நெடுந்தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கனவுத் தொல்லை வந்து நீங்கும்.

4-ம் இடமான சுகஸ்தானத்தில் ராகு அமர்ந்திருப்பதால் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டேப் போகும். தாய்வழி உறவினர்களாலும் அலைச்சல் இருக்கும். மற்றவர்களுக்காக பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வெளிவட்டாரத்தில் மற்றவர்களை தாக்கிப் பேசாதீர்கள். கன்னிப் பெண்களே! போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். உங்கள் ரசனைக் கேற்ற நல்ல வரன் அமையும்.

அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாதீர்கள். தகுந்த ஆதராமின்றி எதிர்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். பக்குவப்படாத வேலையாட்களை பணியிலிருந்து நீக்குவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். 10-ம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆனால் வேலை அதிகம் செய்ய வேண்டியிருக்கிறது அதற்கான ஊதிய உயர்வோ, சலுகைகளோ கிடைக்கவில்லையென்று ஆதங்கப்படுவீர்கள். பரிகாரம்: ஸ்ரீரடி ஸ்ரீசத்ய சாய்பாபாவை வியாழக் கிழமையில் சென்று வணங்குங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத பலன்கள் :)

Post by krishnaamma on Mon Aug 04, 2014 8:00 pm

கடகம்

மன்னிக்கும் குணம் அதிகமுள்ளவர்களே! உங்களுடைய ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குரு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் உடல் சோர்வு, அசதி வந்து நீங்கும். அடுத்தடுத்த வேலைச்சுமையாலும் ஒருவிதமான அலுப்பு, சலிப்பு ஏற்படும். உங்களுடைய ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் முன்கோபம் அதிகமாகும். கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள்.

உறவினர், நண்பர்களில் ஒருசிலர் உங்களை விட்டு ஒதுங்குவார்கள். பார்த்தும் பார்க்காமல் செல்வார்கள். அதையெல்லாம் பார்த்து படபடப்பாகாதீர்கள். பெரிய நோய்கள் இருப்பது போல் தோன்றும். நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமோ என்ற ஒரு ஆதங்கம் அடிமனதில் இருக்கும். பலர் பயன்படுத்திக் கொண்டு கருவேப்பில்லையாக வீசி விட்டார்கள் என்றெல்லாம் அலுத்துக் கொள்வீர்கள். உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் எல்லாப் பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும். மாற்றுவழி தேடுவீர்கள்.

புதிய பாதை தெரியும். உங்களிடம் உள்ள பலவீனங்களையெல்லாம் பட்டியலிட்டு ஒவ்வொன்றாக அதை சரி செய்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குவீர்கள். கன்னடம், ஹிந்தி பேசுபவர்களால் ஆதாயம் அதிகரிக்கும். ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் வீட்டில் செவ்வாயும், சனியும் சேர்ந்திருப்பதால் வாயுக் கோளாறால் வயிற்று வலி, நெஞ்சு வலி வந்துப் போகும். உடல் உஷ்ணமும் அதிகரிக்கும். வாகனம் அடிக்கடி பழுதாகும். வீட்டிலும் கழிவு நீர் குழாய் அடைப்பு, மின் கசிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கவனமாக இருங்கள். உங்களுடைய ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்ரன் செல்வதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு.

ஆனால் மனைவியுடன் கருத்து மோதல் வரும். ஷேர் மூலமாக பணம் வரும். கேது 9-ம் வீட்டில் நிற்பதால் ஆன்மிக நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கோவில் விழாக்களிலும் முதல் மரியாதைக் கிடைக்கும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் மீது திடீர் அக்கறை காட்டுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். தோலில் நமைச்சல் வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! உங்கள் குடும்ப பிரச்னைகள் வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாத வகையில் அதை தீர்த்துக் கொள்ளப்பாருங்கள். பரிகாரம்: ஸ்ரீமுப்பாத்தம்மனை வெள்ளிக் கிழமையில் சென்று வணங்குங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத பலன்கள் :)

Post by krishnaamma on Mon Aug 04, 2014 8:01 pm

சிம்மம்

முயற்சிகளில் பின் வாங்காதவர்களே! உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டிலேயே சனி அமர்ந்திருப்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தள்ளிப் போன காரியங்களும் நல்ல விதத்தில் முடிவடையும். கோபம் குறையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மனஇறுக்கங்கள் நீங்கும். ஹிந்தி, ஆங்கிலம் தாய்மொழியாகக் கொண்டவர்களால் ஆதாயமடைவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் விலகும். 16-ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் சூரியன் 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் தூக்கம் குறையும். வேலைச்சுமை அதிகமாகும்.

17-ந் தேதி முதல் உங்கள் ராசிக்குள்ளேயே ராசிநாதன் சூரியன் ஆட்சிப் பெற்று அமர்வதால் உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடிவடையும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான குரு 12-ல் மறைந்துக் கிடப்பதால் உங்கள் உள்மனதில் ஒருவிதமான அலட்சியம் வரும். ஜெயிப்போமோ, ஜெயிக்க மாட்டோமோ என்ற சந்தேகமும் அடிக்கடி ஏற்படும். செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். திடீர் பயணங்களும் அதிகமாகும். பிள்ளைகளுடன் மனத்தாங்கல் வரும். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் ராகு நிற்பதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். அவசர முடிவுகளையும் தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். செவ்வாய் 3-ம் வீட்டில் சனியுடன் முடங்கிக் கிடப்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாயார் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையென்று ஆதங்கப்படுவீர்கள்.

சிறுசிறு வாகன விபத்து வந்து நீங்கும். அடிக்கடி வாகனமும் பழுதாகும். ராசிக்கு 8-ல் கேது நிற்பதால் வருங்காலம் பற்றிய பயம் வரும். ஆன்மிகத்தில் சில சூட்சுமங்களை உணருவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகளே! சிலர் உங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். வங்கிக் கடன் உதவியும் கிட்டும். உத்தியோகத்தில் எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். சிலருக்கு புது உத்தியோக வாய்ப்பு வரும். பரிகாரம்: ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள்.


Last edited by krishnaamma on Mon Aug 04, 2014 8:15 pm; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத பலன்கள் :)

Post by krishnaamma on Mon Aug 04, 2014 8:01 pm

கன்னி

மனசாட்சி அதிகமுள்ளவர்களே! உங்களுடைய ராசிக்குள்ளேயே ராகு வந்தமர்ந்திருப்பதால் ஒருவித படபடப்பு உங்களுக்குள் இருக்கும். கடந்த காலத்தைப் போல பிரச்னைகளில் சிக்கிக் கொள்வோமோ என்றெல்லாம் அச்சப்படாதீர்கள். எல்லோரையும் நம்பி ஏமாந்து விட்டோம். அதுப்போல இப்போது இருப்பவர்களையும் நம்பி ஏமாந்துவிடக்கூடாது என்று நினைத்துக் குழம்பிக் கொண்டிருப்பீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகள், பிரச்னைகள், ஏமாற்றங்களெல்லாம் இனி கொஞ்சம் கொஞ்சமாக குறையும். 7-ம் வீட்டில் கேது நிற்பதால் உங்களுடைய உள்மனது உங்களை சரியாக வழி நடத்தும்.

உங்களையும் அறியாமல் உங்களுக்கு சில விஷயங்களெல்லாம் புரிய வரும். சின்ன சின்ன ஞானமும் கிடைக்கும். ராசிக்கு லாப வீட்டில் சூரியனும், குருவும் நிற்பதால் பணவரவு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். உறவினர், நண்பர்களின் பாரா முகம் நீங்கும். சிலர் வலிய வந்து உங்களிடம் பேசுவார்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீடு கட்டுவதற்கு அனுமதிக் கிடைக்கும். சிலருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மூத்த சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.

தொட்ட காரியங்களும் துலங்கும். உங்களுடைய ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தன்னம்பிக்கை துளிர்விடும். மருந்து, மாத்திரை அளவுக் குறையும். அழகு, இளமைக் கூடும். வாடியிருந்த முகம் மலரும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவதற்கான யோகமும் கூடி வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். ஆனால் ஏழரைச் சனி தொடர்ந்துக் கொண்டிருப்பதால் இனந்தெரியாத மனக்கவலைகள் வந்து நீங்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.

மற்றவர்களுக்காக கேரண்டர் கையப்பமிட வேண்டாம். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சிக்காக நீங்கள் செய்யும் தொண்டால் தலைமையின் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் இந்த மாதம் லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். பரிகாரம்: அருகிலுள்ள சித்தர் பீடம் சென்று தியானம் செய்து வணங்குங்கள்.


Last edited by krishnaamma on Mon Aug 04, 2014 8:14 pm; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத பலன்கள் :)

Post by krishnaamma on Mon Aug 04, 2014 8:02 pm

துலாம்

வாதிடும் திறன் அதிகமுள்ளவர்களே! சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் நீண்ட கால எண்ணங்கள் நிறைவேறும். தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். காது, தொண்டை வலி நீங்கும். வீடு கட்டுவதற்கு குறைந்த வட்டியில் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான புதனும் சாதகமாக இருப்பதால் உங்கள் செல்வாக்குக் கூடும். பணவரவும் திருப்திகரமாக இருக்கும். தந்தைவழியில் வர வேண்டிய தொகையும் வரும். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிட்டும். பாகப்பிரிவினையும் நல்ல விதத்தில் முடியும்.

பழைய நண்பர்கள் உதவுவார்கள். சூரியன் இந்த மாதம் முழுக்க வலுவாக இருப்பதால் சிலருக்கு வேலைக் கிடைக்கும். ஆனால் வேலை சம்பந்தமாக உறுதி பத்திரங்கள் எதிலும் கையெழுத்திட வேண்டாம். உங்களுடைய ராசியிலேயே செவ்வாயும், சனியும் அமர்ந்திருப்பதால் முன்கோபம் அதிகமாகும். உங்களை யாரும் சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையென்றும், உங்களுக்கு எதுவும் சரியாக அமையவில்லையென்றும் அவ்வப்போது நினைத்துக் கொள்வீர்கள்.
உங்கள் ஜாதக அமைப்புப் படிதான் உங்களுக்கு எல்லாமே அமையும். அப்படியிருக்கும் போது எதுவும் சரியாக அமையவில்லையென்று ஏன் அலுத்துக் கொள்கிறீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகளை வளர விடாதீர்கள். ஏழரைச் சனி இருப்பதால் உப்புப் பொறாத விஷயத்திற்கெல்லாம் மோதல் வரும். நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

அரசியல்வாதிகளே! தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்பாருங்கள். 6-ம் வீட்டில் கேது நிற்பதால் வியாபாரத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது முதலீடும் செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். பங்குதாரர்கள் உங்களின் புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை கூடிக்கொண்டேப் போகும். அதிகாரிகளால் ஏமாற்றப்படுகிறோமோ என்றெல்லாம் குழம்புவீர்கள். பரிகாரம்: ஸ்ரீராகவேந்திரரை நெய் தீபமேற்றி வணங்குங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத பலன்கள் :)

Post by krishnaamma on Mon Aug 04, 2014 8:03 pm

விருச்சிகம்

யதார்த்தமாக பேசி சாதிப்பவர்களே! உங்களுடைய ராசிக்கு 9-ம் வீட்டில் குரு அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் எதிலும் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். உள்மனதில் ஒருவித தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் உண்டாகும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தந்தைவழி சொத்துக்களைப் பெறுவதில் இருந்த தடைகளும் விலகும். அரசிடமிருந்து பெற வேண்டிய முக்கிய சலுகைகள், அனுமதிகளெல்லாம் இந்த மாதத்தில் பெறுவீர்கள்.

உங்களுக்கு சாதகமாக புதனும், சுக்ரனும் செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். பழுதான டி. வி. , ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினையெல்லாம் மாற்றுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் ராகு நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். வீடு, மனை வாங்கும் அமைப்பு உண்டாகும். அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய், சனியுடன் சேர்ந்து ராசிக்கு 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் வேலைச்சுமை இருக்கும். தூக்கமும் குறையும்.

சகோதரங்களால் அதிருப்தி அடைவீர்கள். திடீர் பயணங்களால் திணறுவீர்கள். தவிர்க்க முடியாத செலவுகளாலும் பணப்பற்றாக்குறை ஏற்படும். அலர்ஜி, இன்பெக்ஷன், கழுத்து, காது வலி வந்து நீங்கும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்.

அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார். சகாக்களைப் பற்றிக் குறைக் கூறாதீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. சந்தை நிலவரங்களை தெரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய பிரச்னைகள் தீரும். பரிகாரம்: வல்லக்கோட்டை ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத பலன்கள் :)

Post by krishnaamma on Mon Aug 04, 2014 8:06 pm

தனுசு

யதார்த்தமாக பேசி சாதிப்பவர்களே! உங்களுடைய ராசிக்கு 9-ம் வீட்டில் குரு அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் எதிலும் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். உள்மனதில் ஒருவித தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் உண்டாகும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தந்தைவழி சொத்துக்களைப் பெறுவதில் இருந்த தடைகளும் விலகும். அரசிடமிருந்து பெற வேண்டிய முக்கிய சலுகைகள், அனுமதிகளெல்லாம் இந்த மாதத்தில் பெறுவீர்கள். உங்களுக்கு சாதகமாக புதனும், சுக்ரனும் செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

பழுதான டி. வி. , ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினையெல்லாம் மாற்றுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் ராகு நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். வீடு, மனை வாங்கும் அமைப்பு உண்டாகும். அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். உங்களுடைய ராசிநாதன் செவ்வாய், சனியுடன் சேர்ந்து ராசிக்கு 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் வேலைச்சுமை இருக்கும். தூக்கமும் குறையும். சகோதரங்களால் அதிருப்தி அடைவீர்கள். திடீர் பயணங்களால் திணறுவீர்கள்.

தவிர்க்க முடியாத செலவுகளாலும் பணப்பற்றாக்குறை ஏற்படும். அலர்ஜி, இன்பெக்ஷன், கழுத்து, காது வலி வந்து நீங்கும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார். சகாக்களைப் பற்றிக் குறைக் கூறாதீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. சந்தை நிலவரங்களை தெரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய பிரச்னைகள் தீரும். அதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பரிகாரம்: ஸ்ரீராமலிங்க சுவாமியை பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.


Last edited by krishnaamma on Mon Aug 04, 2014 8:13 pm; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத பலன்கள் :)

Post by krishnaamma on Mon Aug 04, 2014 8:07 pm

மகரம்

தளராத தன்னம்பிக்கையாளர்களே! உங்களுடைய ராசிக்கு லாப வீட்டிலேயே சனிபகவான் நிற்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டு. பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. பிள்ளைகளின் பொறுப்பற்றப் போக்கு மாறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். நட்பு வட்டம் விரியும். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல் விலகும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். செல்வாக்குக் கூடும். வீடு கட்டுவதற்கு அனுமதிக் கிடைக்கும். உறவினர்கள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். உங்கள் ராசிநாதன் குரு 8-ல் மறைந்திருப்பதால் செலவுகள் அதிகமாகும். ஆனால் குரு உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் செலவுக்கேற்ற வரவும் உண்டு. குருவுடன் சூரியனும் நிற்பதால் அரசியல் பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். நாடாளுபவர்களின் நட்பும் கிடைக்கும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் பூமி, சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். ஆனால் செவ்வாய், சனியுடன் சேர்ந்து நிற்பதால் வீட்டு மனை வாங்கும் போது மூல பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகள் பிடிவாதகமாக இருப்பா£கள். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரியக் கூடிய சூழ்நிலை உருவாகும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பெற்றோருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகளே! அதிகம் உழைக்க வேண்டி வரும். கட்சிக் கூட்டங்களுக்கு தவறாமல் கலந்து கொள்ளப்பாருங்கள். ராசிக்கு சாதகமாக சுக்ரனும், புதனும் இருப்பதால் வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். சந்தையில் உங்கள் புகழ், கௌரவம் கூடும். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமையில் ஸ்ரீதுர்க்கை அம்மனை சென்று வணங்குங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத பலன்கள் :)

Post by krishnaamma on Mon Aug 04, 2014 8:07 pm

கும்பம்

தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவர்களே! உங்களுடைய ராசியை நேருக்கு நேராக குரு பார்த்துக் கொண்டிருப்பதால் செல்வாக்குக் கூடும். வருமானம் உயரும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். கோபம் குறையும். இந்த மாதம் முழுக்க நீங்கள் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். கடந்த மாதத்தில் தடைப்பட்டிருந்த வேலைகளெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். மனைவிவழி உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்கள். ஆனால் 6-ந் தேதி வரை உங்கள் பிரபல யோகாதிபதியான சுக்ரன் 6-ம் வீட்டில் மறைந்துக் கிடப்பதால் அலைச்சல், செலவினங்கள், கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் சின்ன சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும்.

சிறுசிறு அறுவை சகிச்சைகளும் வந்துப் போக வாய்ப்பிருக்கிறது. 7-ந் தேதி முதல் சுக்ரன் சாதகமாவதால் மனைவியின் ஆரோக்யம் சீராகும். வீடு கட்டுவதற்கு அனுமதியும் கிடைக்கும். பழுதான மின்சார சாதனங்கள், செல்போனை மாற்றி புதுசு வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். 23-ந் தேதி முதல் புதன் சாதகமாக அமைவதால் பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வேலைக் கிடைக்கும். கேது 3-ம் வீட்டில் தொடர்வதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிநாடு சென்று வருவீர்கள். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும்.

உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். ராகு 9-ல் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். சுப நிகழ்ச்சிகள், கோவில் விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். ஆனால் தந்தையாருக்கு நெஞ்சு வலி, மூட்டு வலி வந்துப் போகும். அவருடன் மனத்தாங்கலும் வரக்கூடும். உங்கள் ராசிநாதன் சனி வலுவடைந்திருப்பதால் சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சியை பெற்றோர் ஆதரிப்பார்கள். நட்பு வட்டம்ட விரிவடையும். அரசியல்வாதிகளே! தலைமையின் கட்டளையை மீர வேண்டாம். கோஷ்டி பூசலில் சிக்காதீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம், யோகம் உண்டாகும். பரிகாரம்: ஸ்ரீஹயக்ரீவரை புதன் கிழமையில் சென்று வணங்குங்கள்.


Last edited by krishnaamma on Mon Aug 04, 2014 8:12 pm; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத பலன்கள் :)

Post by krishnaamma on Mon Aug 04, 2014 8:07 pm

மீனம்

எந்த வலையிலும் சிக்காதவர்களே! உங்களுடைய ராசிநாதனான குருபகவான் 5-ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தையும் அறிந்துக் கொள்வீர்கள். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். வி. ஐ. பிகளும் அறிமுகமாவார்கள்.

குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். சொந்த ஊரில் செல்வாக்குக் கூடும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு இருந்து வந்த நோய், உடல் உபாதைகளெல்லாம் விலகும். மகளுக்கு அயல் நாட்டு வாய்ப்பு உண்டு. 16-ந் தேதி வரை 5-ம் வீட்டிலேயே சூரியன் நிற்பதால் தூக்கம் குறையும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். உடல் உஷ்ணத்தால் அடிவயிறு வலிக்கும். கண் வலியும் வந்துப் போகும். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். உங்களுடைய பலவீனங்களைப் பயன்படுத்தி சிலர் உங்களை பகடைக் காயாக உருட்டினார்களே! இனி உங்களுடைய பலவீனங்களை நீங்களே சரி செய்துக் கொள்வீர்கள். வாகனம் புதிதாக வாங்குவீர்கள்

. சிலர் வீடு மாறுவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். சமையலறையை நவீனப்படுத்துவீர்கள். கூடுதல் தளம் அமைப்பது குறித்து யோசிப்பீர்கள். உங்களுடைய ராசியிலேயே கேது நிற்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். காரியம் ஆகுவதற்கான மனிதர்கள் எப்படியெல்லாம் நடந்துக் கொள்கிறார்கள், காரியம் ஆனப் பிறகு எப்படியெல்லாம் கழன்று விடுகிறார்கள் என்பதையெல்லாம் யோசித்து வருத்தப்படுவீர்கள். ராசிக்குள் கேது நிற்பதால் அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். 7-ம் வீட்டில் ராகு நிற்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கழுத்து வலி வந்து நீங்கும்.

கன்னிப் பெண்களே! பெற்றோர் சொல்வதை கேட்டு நடங்கள். சில நேரங்களில் அவர்களின் ஆலோசனைகளெல்லாம் ஆத்திரத்தை வர வைப்பதாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்கி உங்களை தயார்ப்படுத்திக் கொள்வது நல்லது. கல்யாண முயற்சிகள் தாமதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆனாலும் கடந்த காலத்தில் ஏற்பட்ட மரியாதைக் குறைவான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது மனம் வெதும்புவீர்கள். பரிகாரம்: மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரரை வணங்குங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத பலன்கள் :)

Post by M.M.SENTHIL on Mon Aug 04, 2014 10:37 pm

அம்மா  புன்னகை 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத பலன்கள் :)

Post by விமந்தனி on Mon Aug 04, 2014 10:53 pm

ரிலாக்ஸ் 


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஆகஸ்ட் மாத பலன்கள் :)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum