ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 ayyasamy ram

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விண்வெளி இந்தியன்!

View previous topic View next topic Go down

விண்வெளி இந்தியன்!

Post by சிவா on Fri Aug 08, 2014 1:59 am

'சந்திராயன்’, 'மங்கள்யான்’... வரிசையில் இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் பெயரிடப்படாத, தீவிரமாக வேலைகள் நடந்துகொண்டிருக்கும் அடுத்த திட்டத்தின் பெயர், 'மேன் ஆன் மிஷன்’ (இது தோராயமான பெயர்தான்!). விண்வெளிக்கு ஒரு இந்தியனை அனுப்பி சில நாட்கள் மிதக்கவைத்து, மீண்டும் கீழே இறக்குவதுதான் மேன் ஆன் மிஷன். கிட்டத்தட்ட ஒரு டூர் அடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவது மாதிரி. என்ன... அது விண்வெளி ட்ரிப் என்பதால், எக்கச்சக்க டெக்னாலஜி அக்கப்போர், உலக நாடுகளின் பனிப்போர் எல்லாம் ஈர்த்துக் கவனம் பெறுகிறது; கோடிகளில் செலவு பிடிக்கிறது!

சரி... முதலில், எதற்கு மனிதனை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும்?

நாடு, நாடோடி... என எல்லோருக்கும் இடம் பிடிக்கும் ஆசை என்பது, ஆழ்மனதில் ஊறிய விஷயம். துணையின் மனதில் முதல் இடம் பிடிப்பதில் இருந்து, 'சென்னைக்கு மிக அருகில்’ திண்டிவனம் தாண்டி இடம் பிடிப்பதாகட்டும், அமெரிக்கா போல அடுத்த நாட்டின் அதிகாரத்தை வளைத்துப் பிடிப்பதாகட்டும், உலக வரலாற்றில் இடம் பிடிப்பது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் ஒரு நிகழ்வு.

இருக்கும் உலகத்தைக் குப்பைமேடு ஆக்கிவிட்டோம்; கடலைக் கழிவுநீர்த்தொட்டி ஆக்கிவிட்டோம். எரிபொருள், குடிநீர் இரண்டும் அதிவேகமாகத் தீர்ந்துகொண்டிருக்கின்றன. ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விரிசல் பெரிதாகிக்கொண்டே இருக்கிறது. இன்னும் சில நூறு வருடங்கள் இந்தப் பூமி தாக்குப்பிடிக்கலாம். அதற்குப் பிறகு பூமி பயன்படாமலே போய்விட்டால், மனிதனுக்கு வேறு கிரகங்களில் குடியேற வாய்ப்பு கிடைக்குமா? இப்படி யோசித்த வல்லரசுகள் அண்ணாந்து பார்த்ததில் அம்புட்டதுதான் விண்வெளி.

'செவ்வாயில் ஒருகாலத்தில் நீர் இருந்திருக்கலாம்’ என்ற ஒரு வரி ஆய்வு முடிவுகள் அமெரிக்காவுக்கு ஆசையைத் தூண்டியது. உலக நாடுகளிடையே விண்வெளிப் போட்டியைத் தூண்டியது. சோஜர்னர், கியூரியாசிட்டி விண்கலங்களை அமெரிக்கா அனுப்ப, வேறு சில நாடுகள் செயற்கைக் கோள்களை அனுப்பிவைத்தன. அந்த வரிசையில் இந்தியா அனுப்பிய 'குறைந்த செலவு கர்ச்சீஃப்’தான் மங்கள்யான். இந்த விண்வெளிப் போட்டியின் அடுத்த கட்டத் திட்டமே 'மேன் ஆன் மிஷன்’!

ஒரு செயற்கைக்கோளை ராக்கெட்டில் வைத்து ஏவி புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்துவதுகூட எளிது. ஆனால், அதை மீண்டும் பூமிக்குக் கொண்டுவருவது... ஏவுவதைவிட செலவு எகிறும், ரிஸ்க் நிறைந்த கடினமான சவால். அதனாலேயே விண்வெளியில் செயற்கைக்கோள் பழுதடைந்தால், அதை அப்படியே கைவிட்டுவிடுவார்கள். அதுவாகவே ஒருநாள் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து எரிந்து விழுந்துவிடும். இது அப்படி அல்ல. ஒரு மனிதனை ராக்கெட்டில் அனுப்பி, சில நாட்கள் விண்வெளியில் சுற்றவைத்து, அவரை மீண்டும் பூமிக்குக் கொண்டுவரவேண்டும்.

மனிதனை எப்படி அனுப்புவார்கள்?

செயற்கைக்கோளை அனுப்ப, பி.எஸ்.எல்.வி வகையறா ராக்கெட்கள் போதும். ஆனால், மனிதன் பயணம் செய்யும் கேப்சூலை அனுப்ப ஜி.எஸ்.எல்.வி வகையறா ராக்கெட்கள் வேண்டும். பி.எஸ்.எல்.வி அதிகபட்சமாக இரண்டு டன் எடையைத் தூக்கிக்கொண்டு பறக்கும் என்றால், ஜி.எஸ்.எல்.வி ஆறு டன் வரை தூக்கிக்கொண்டு பறக்கும். மேன் ஆன் மிஷனின் முதல் தேவை... மனிதன் உள்ளே அமரும் அளவுக்கு, மிதந்துகொண்டே தூங்கும் அளவுக்கு ஒரு கேப்சூல் வேண்டும். அதற்குள்ளே ரேடியோ டிரான்ஸ்மீட்டர்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, சிறுநீரைக் குடிநீராக மாற்றும் உபகரணங்கள், (அங்கே அம்மா மினரல் வாட்டர் எல்லாம் கிடைக்காதே..!) வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் கருவிகள், ஆக்சிஜன் அளவைப் பராமரிக்கும் கருவிகள் எல்லாம் வேண்டும். இதையெல்லாம் வைத்து கேப்சூல் செய்தால், அது எக்கச்சக்க எடையுடன் இருக்கும். இவ்வளவு எடை மிகுந்த கேப்சூலைத் தூக்கிக்கொண்டு குறைந்தது 160 கிலோமீட்டர் உயரம் பறக்க மெகா சைஸில் இருக்கும் ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்கள்தான் லாயக்கு. ஆனால், அவ்வளவு எடைகொண்ட ராக்கெட்களை விண்ணில் செலுத்த கிரையோஜெனிக் இன்ஜின்கள் தேவை. அந்த வகை இன்ஜின்கள் தயாரிப்பில், இந்திய விஞ்ஞானிகள் இப்போதுதான் ஆரம்பக் கட்டங்களைத் தாண்டி வருகிறார்கள்.

எப்படித் திரும்பக் கொண்டுவருவார்கள்?

ராக்கெட்டில் இருந்து பிரிந்து செல்லும் கேப்சூலை, விண்வெளியில் சில நாட்கள் மிதக்கவிடுவார்கள். பின்னர் குறிப்பிட்ட நாள் வந்ததும், கேப்சூலில் இருக்கும் எரிபொருள் மூலம் உந்துதல் உண்டாக்கி கேப்சூலை அதிவேகமாக பூமியை நோக்கிச் செலுத்துவார்கள். விநாடிக்கு எட்டு கி.மீ வேகத்தில் கேப்சூல் பூமியை நோக்கிப் பயணித்து, வளிமண்டலத்தில் நுழையும்போது காற்றில் உரசி கேப்சூலின் வெளிப்புறம் முழுவதும் தீப்பிடித்துக்கொள்ளும். இந்தத் தீயும் வெப்பமும் உள்ளே பரவாமல் இருக்க, வெப்பத் தடுப்பு மற்றும் தீ தடுப்பு தகடுகள் பதிக்கப்பட்டிருக்கும்.

தீ அணைந்த பின், ஒரு பாராசூட் விரியும். அப்போது கேப்சூலின் வேகம் விநாடிக்கு 101 மீட்டராகக் குறைந்துவிடும். இன்னும் கொஞ்சம் தூரம் கடந்த பின், இன்னொரு பாராசூட் விரியும். அப்போது கேப்சூலின் வேகம் விநாடிக்கு 47 மீட்டராகச் சரியும். இந்த வேகத்தில் கடலில் விழும் கேப்சூல், அதன் ஆழத்துக்குச் சென்றுவிடும். அதனால், கடலை நெருங்கியதும் கேப்சூலைச் சுற்றி பெரிய பலூன் படாரென விரிந்து, கேப்சூல் கடலில் மூழ்காமல் மிதக்கவைக்கும். கடலில் கேப்சூல் எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க, அதன் உச்சியில் அடர் ஆரஞ்சு நிறத்தில் ஒரு பலூன் முளைக்கும். வெப்பம் தணிந்த பின், கேப்சூலைப் பத்திரமாகக் கரைக்கு இழுத்துவருவார்கள். இதுதான் பொதுவான, அடிப்படையான நடைமுறை.

இந்தத் திட்டத்தின் முதல் கட்ட முயற்சியாக, 2007-ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி சி7 ராக்கெட் மூலமாக 555 கிலோ எடையுள்ள ஒரு கேப்சூலை (ஆள் இல்லாமல்) விண்வெளிக்கு அனுப்பியது இஸ்ரோ. 12 நாட்கள் விண்வெளியில் சுற்றிய பின் மேற்சொன்ன முறைப்படி வங்காளவிரிகுடாவில் அதைக் கீழே விழ வைத்தார்கள். அந்தக் கேப்சூல், இப்போது பெங்களூரில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது அடுத்த கட்டத்தை முயற்சிக்கிறது இஸ்ரோ.

அந்த 'இந்தியன்’ தயாரா?

இந்த முறையும் கேப்சூலில் ஆள் இருக்கப்போவது இல்லை. ஆளுக்குப் பதிலாக தோராயமாக 60 கிலோ எடை கொண்ட பொம்மை ஒன்று இருக்கும். மனிதன் சென்றால் என்னென்ன வசதிகள் செய்யவேண்டி இருக்குமோ, அதெல்லாம் இருக்கும். கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று டன் எடை கொண்ட அந்தக் கேப்சூலைப் பத்திரமாக பூமிக்குத் திரும்பக் கொண்டுவந்துவிட்டால், அது பெரிய வெற்றிதான். இதுவரை விண்வெளிக்குச் சென்ற ஒரே இந்தியர் ராகேஷ் சர்மா. அதுவும் ரஷ்ய விண்வெளி ஓடமான சோயூஸில் பயணித்தவர். அவரையே மீண்டும் விண்வெளிக்கு அனுப்பிவைக்கலாம் என்பது இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலரின் ஐடியா. ஆனால், அவர் விண்வெளிக்குச் சென்று 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. அவருக்கு வயதும் 65 ஆகிவிட்டது. எனவே 'புதிய இளம் இந்தியன்’ ஒருவரைத் தேடிப் பிடித்துப் பயிற்சி கொடுத்து விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் இருக்கிறது இஸ்ரோ.

எப்படிப் பயிற்சி கொடுப்பார்கள்?

மும்பையில் இருக்கும் அமெரிக்க அறிவியல் நிறுவனத்தில் பணிபுரியும் அறிவியல் மென்பொருளாளர் சுதாகர் கஸ்தூரி, விண்வெளி பயிற்சி குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார். ''முன்பு விண்வெளி வீரர்களுக்கு நீலப் பச்சைப் பாசி போன்ற திரவ வகை உணவுகளைப் பதப்படுத்திக் கொடுப்பார்கள். அப்படிப் பதப்படுத்தப்படும் உணவு, விண்வெளி வீரரில் உடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சிவிடாததாக இருக்க வேண்டும். அதனால் இப்போது கார்போஹைட்ரேட், புரதச்சத்து நிறைந்த மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள். 12 நாட்கள் விண்வெளியில் மிதக்க வேண்டும் என்றால் மனோதிடப் பயிற்சி அவசியம். இந்தப் பயணத்துக்குப் பெரும்பாலும் இந்திய விமானப் படையைச் சேர்ந்த வீரரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுக்குத்தான் உயரம், வேகம் குறித்த நடுக்கமோ பயமோ இருக்காது. அதிநவீனக் கருவிகளைக் கையாளவும் தெரியும். விண்வெளியில் சிறிய அறை ஒன்றில், அமைதியாக இருக்க, அதுவும் தனிமையில் அமைதியாக இருக்க பெரும் பயிற்சி தேவைப்படும். அதுதான் பயிற்சியின் மிக முக்கியமான கட்டம். விண்வெளிக்குச் சென்ற பின், நேரம் காலம் தெரியாததால் ஒருவரது உடலில் இருக்கும் உயிர்ச்சூழல் கடிகாரம் பாதிக்கப்படும். இதயத்துடிப்பு குறையும். உப்பு கூடும். அந்தச் சிக்கல்களை எல்லாம் தானாகவே கண்டுபிடித்துச் சரிசெய்ய வேண்டும். இதற்காக பூமியிலேயே விண்வெளி போன்ற ஈர்ப்பு விசையற்ற நிலையை உருவாக்கி, அதில் விண்வெளி வீரரை முதலில் மணிக்கணக்கில் தங்கவைப்பார்கள். பிறகு ஒரு நாள், இரண்டு நாட்கள், நான்கு நாட்கள்... எனப் பயிற்சியை அதிகரிப்பார்கள். சமயங்களில் தனிமையில் கேப்சூலில் ஒரு மாதம் முழுக்கக்கூடத் தங்கவைப்பார்கள். அப்போதுதான் 'சவாலே சமாளி’ மனதிடம் அதிகரித்து, விண்வெளியில் 12 நாட்கள்கூடத் தாக்குப்பிடிப்பார். கொதிக்கும் மதிய வெயிலில் தார் சாலையில் நடக்கச் சொன்னால் யோசிப்பீர்கள்தானே? ஆனால், வெறும் காலோடு தார் பாலைவனத்தில் நடந்து பயிற்சி பெற்ற பின், தார் சாலை நடை என்பது ஜூஜூபிதானே... அதே டெக்னிக்தான் இது!''

இந்த வருடத்துக்குள் 'பொம்மை இந்தியன்’ விண்வெளியில் பறந்து திரும்பி வருவான் என்பது இஸ்ரோவின் நம்பிக்கை. அது சாத்தியமானால், நீல் ஆம்ஸ்ட்ராங்கை நாம் படித்தது போல, நமது குழந்தைகள் படித்துப் படித்து மனப்பாடம் செய்யவிருக்கும் அந்த 'இந்தியன்’ தேடுதல் வேட்டையை ஆரம்பித்துவிடும் இஸ்ரோ!

- ஆனந்த விகடனிலிருந்து...
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum