ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 krishnanramadurai

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 ayyasamy ram

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 ayyasamy ram

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கடமையைச் செய்யுங்கள் - பிரதமர் உரை

View previous topic View next topic Go down

கடமையைச் செய்யுங்கள் - பிரதமர் உரை

Post by சிவா on Sat Aug 16, 2014 4:21 am

புதுடில்லி: ''இந்திய சுதந்திர தின நாளன்று, என் அன்புடைய தேசமக்களுக்கு, பாரதத்தின் இந்த பிரதான சேவகனின் வாழ்த்துக்கள். நான் உங்கள் மத்தியில் பிரதம மந்திரியாக இல்லை; பிரதான சேவகனாக வந்துள்ளேன்,'' என, உருக்கமாக துவங்கிய பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை; வழக்கமான சலுகை திட்ட அறிவிப்புகள், அரசின் சாதனை விளக்கங்கள், அரசியல் முழக்கங்கள் இல்லாத, பாரத மக்களை நாட்டின், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காக தனிப்பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் படி ஊக்குவிக்கும் உரையாக அமைந்தது.

பாரத குடிமக்களின் தனிநபர் கடமைகள் மற்றும் பொறுப்புகளை பற்றி அவர் உரையாற்றிய தாவது:இந்த நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகான்கள், இந்த நாட்டை பற்றி கண்ட கனவுகளை நனவாக்க நமக்கு பொறுப்பு இல்லையா? நம் சமூகத்திற்கு என ஒரு பண்பு வேண்டாமா? இதை பற்றி தீவிரமாக யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நமக்கு நாமே...: சகோதர - சகோதரி களே, 'நாம் நாள் முழுவதும் என்ன செய்கிறோமோ, அது ஏழைகளில், ஏழைக்கு பயன் அளித்ததா இல்லையா, நாட்டின் நலன் பேணியதா இல்லையா, என் நாட்டின் முன்னேற்றத்துக்கு பயனுள்ளதாக இருந்ததா இல்லையா என்று, மாலையில் நமக்கு நாமே கேள்வி எழுப்பிக்கொள்ள வேண்டும்' என, யாரோ என்னிடம் சொன்னார். நாம் வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், நாட்டின் நலனுக்காக இருக்க வேண்டும் என்பது, 125 கோடி பாரத மக்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டாமா?ஆனால், துர்பாக்கியத்தை பாருங்கள். எப்படிப்பட்ட சமூக போக்கு ஏற்பட்டு உள்ளது என, பாருங்கள். யாரிடமாவது ஒரு வேலையை எடுத்துச்சென்றால், 'இதில் எனக்கென்ன கிடைக்கும்' என்றே கேட்கின்றனர். 'இதில் எனக்கென்ன கிடைக்கும்' என்பதில் இருந்து தான் துவங்குகிறது. அதில் அவருக்கு ஒன்றும் கிடைக்காது என்று தெரிந்துவிட்டால், 'அப்போது எனக்கென்ன வந்தது' என, உடனே சொல்லி விடுகின்றனர். 'இதில் எனக்கென்ன கிடைக்கும்' மற்றும் 'அப்போது எனக்கென்ன வந்தது' என்ற சுயநலத்தில் இருந்து நாம் வெளியே வரவேண்டும்.அனைத்து விஷயங்களும் சுயநலத்திற்காக அல்ல, சில விஷயங்களை தேச நலனுக்காகவும் செய்ய வேண்டும். இதற்காக நமது சமூக பண்பை செம்மைப்படுத்த வேண்டும். சுயநலத்தை தாண்டிச் சென்று, 'தேச நலனுக்காக நான் வந்து உள்ளேன், அதற்காக முன்னிலையில் பாடுபட்டுக்கொண்டு இருக்கிறேன்' என்ற பண்பை உயிர்ப்பிக்க வேண்டும்.குடிமக்கள் அனைவரும் நாட்டின் முன்னேற்றத்துக்காக முயற்சி எடுக்க வேண்டாமா? நீங்கள் யோசித்து பாருங்கள், 125 கோடி பாரத மக்கள், ஒரு அடி முன்னேறினால், நாடு 125 கோடி அடி முன்னேறி விடாதா; அரசை தேர்வு செய்வதோடு, ஜனநாயக கடமை முடிந்துவிடுவது இல்லை. 125 கோடி பாரத மக்களும், அரசும், தோளோடு தோளாக, நாட்டின் ஆசைகளையும், ஏக்கங்களையும் பூர்த்தி செய்ய, வேலை செய்ய வேண்டும் என்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படை தத்துவம்.இவ்வாறு, தன் உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

'பெற்றோருக்கு பொறுப்பு': பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பற்றிய செய்திகள் தன்னை தலைகுனிய செய்வதாகவும்; இத்தகைய சம்பவங்களை கட்டுப்படுத்துவதில், சட்டத்தை விட, பெற்றோருக்கே அதிக பொறுப்பு உள்ளது என, பிரதமர் மோடி தெரிவித்தார். இது குறித்து, அவரது உரையில் குறிப்பிட்டதாவது:நான் ஒவ்வொரு தாய் - தந்தையிடமும் கேட்க விரும்புகிறேன். உங்கள் வீட்டில் 10 - 12 வயதில் பெண் குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு எத்தனை கெடுபிடிகள் விதிக்கிறீர்கள். 'எங்கே போகிறாய், எப்போது வருவாய், சென்றவுடன் போன் பண்ணவும்' என, எல்லா விஷயங்களையும் கேட்கிறீர்கள். பெண் குழந்தைகளிடம் நுாற்றுக்கணக்கான கேள்விகளை கேட்கும் பெற்றோருக்கு, தங்கள் ஆண் பிள்ளைகளிடம், 'எங்கே போகிறாய், ஏன் போகிறாய், யார் உன் நண்பர்கள்?' என, கேட்க தைரியம் இருக்கிறதா. கற்பழிப்பவர்களும், யாருடையோ பிள்ளைகள் தானே. அவர்களுக்கும் பெற்றோர் இருக்கின்றனர் அல்லவா. அவர்கள், அந்த பிள்ளைகளை கேள்வி கேட்டார்களா? பெண் பிள்ளைகள் மீது விதிக்கும் கட்டுப்பாட்டை, ஆண் பிள்ளைகள் மீதும் விதிக்க வேண்டும் என, ஒவ்வொரு பெற்றோரும் முடிவெடுக்க வேண்டும். விதித்துப் பாருங்கள், கேள்வி கேட்டுப் பாருங்கள். பாலியல் வன்கொடுமை விஷயங்களில்,சட்டம், தன் கடமையை கடுமையாக செய்யும். ஆனால், சமூகத்தின் உறுப்பினர்களாக, பெற்றோரும் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல், அறிவியல் முன்னேறிக் கொண்டு இருக்கும் இந்த காலத்தில், நவநாகரிக சிந்தனைகள் வந்து கொண்டு இருக்கின்றன.

சுயலாபத்திற்காக...: ஆனால், நாம் என்ன செய்கிறோம், நம் நாட்டின் ஆண் - பெண் விகிதாச்சாரத்தை பற்றி எப்போதாவது யோசித்து உள்ளீர்களா? 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 940 பெண் குழந்தைகள் தான் பிறக்கின்றன. இது ஈஸ்வரனின் செயல் அல்ல. சுய லாபத்திற்காக, பெண் கருக்களை கலைக்கும் டாக்டர்களை கேட்டுக்கொள்கிறேன். பணத்தாசைக்காக, பெண் குழந்தைகளை கொல்லாதீர்கள். நான் தாய்மார்களிடமும், சகோதரிகளிடமும் கேட்டுக் கொள்கிறேன், ஆண் குழந்தை ஆசையில், பெண் குழந்தைகளை கொல்லாதீர்கள். வயதான காலத்தில், ஆண் குழந்தை இருந்தால், பயனுள்ளதாக இருக்கும் என, பெற்றோர் நினைக்கின்றனர். நான் பொது வாழ்வில் நெடுங்காலமாக ஈடுபட்டு உள்ளேன். ஐந்து பிள்ளைகள், காரும், பங்களாவுமாக இருந்தும், முதியோர் இல்லத்தில் வாழும் பெற்றோரை பார்த்திருக்கிறேன். ஆண் குழந்தைகள் இல்லாத குடும்பத்தில், பெண் பிள்ளை மட்டுமே தன் கனவுகளை தியாகம் செய்து, திருமணம் செய்து கொள்ளாமல் பெற்றோரை பார்த்துக் கொள்வதையும் பார்த்துஇருக்கிறேன்.இந்த 21ம் நுாற்றாண்டிலும், இத்தகைய ஆண் - பெண் விகிதாச்சாரம் இருப்பது மனிதர்களின் மனதில் உள்ள அழுக்கையும், குரூரத்தையும் வெளிப்படுத்துகிறது. இதில் இருந்து நாம் முக்தி பெற வேண்டும் என்பதே, சுதந்திர தின செய்தி.

பாரதத்தின் வெற்றிகளிலும், சிறப்புகளிலும் நம் பெண் குழந்தைகளுக்கு பங்கு உண்டு. இதை வரவேற்று, பெண்களையும் தோளோடு தோள் சேர்த்துக்கொண்டால் தான் நம் சமூகத்தில் உருவாகி உள்ள தீமைகளில் இருந்து முக்தி பெற முடியும்.துப்பாக்கி எடுத்து அப்பாவிகளை கொல்லும் தீவிரவாதிகளும், மாவோவாதிகளும் யாருடையோ பிள்ளைகள் தானே. நான் இந்த பிள்ளைகளின் பெற்றோரிடம் கேட்க விரும்புகிறேன், அவர்களிடம் இது பற்றி நீங்கள் கேள்வி கேட்டதுண்டா, தவறான பாதையில் சென்று, அப்பாவிகளை கொல்பவர்களின் பெற்றோர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

'தொழில் செய்யுங்கள்': சமூக பண்பை வளர்க்க ஒவ்வொருவரும் எப்படி பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என, குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இளைஞர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என, சூளுரைத்தார். இது குறித்து,அவர் உரையில் குறிப்பிடப் பட்டதாவது:நான் எப்படி 'கம், மேக் இன் இந்தியா' (வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்) என, கூறுகிறேனோ, அதே போல், நம் நாட்டு இளைஞர்களிடம் 'மேட் இன் இந்தியா' (இந்தியாவில் தயாரிக்கப்பட்டது) என்பது உலகின் அனைத்து மூலைகளையும் சென்றுஅடைய வேண்டும். இது நம் கனவாக இருக்க வேண்டும். நாட்டிற்கு சேவை புரிவது என்றால், பகத் சிங்கை போல் துாக்கில் தொங்குவது மட்டும் தான் சேவையா.நீங்கள் இருக்கையில் சின்னச் சின்ன பொருட்களை கூட எதற்கு இறக்குமதி செய்ய வேண்டும். இந்தியாவில் என்னவெல்லாம் இறக்குமதியாகிறது என்று ஆய்வு செய்யுங்கள், அவற்றை தயாரிக்க நீங்களாக சின்ன தொழிற்சாலைகளை ஏன் அமைக்க முடியாது. 'என் நாட்டில் இறக்குமதி ஆகும் ஏதாவது ஒரு பொருளை நான் தயாரிப்பேன். அதன் மூலம் அதன் இறக்குமதி நின்றுவிட வேண்டும். மாறாக அதை ஏற்றுமதி செய்யும் நிலை ஏற்பட வேண்டும்' என, முடிவெடுங்கள்.

பாரத நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்கள் இப்படி முடிவெடுத்து, ஒவ்வொரு தொழிலில் உட்கார்ந்து விட்டால், நம் நாடு, உலகிற்கே ஏற்றுமதி செய்யும் நாடாக மாறும். இதனால், நான் இளைஞர்களுக்கும், சிறு தொழில் முனைவோருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். 'ஜீரோ டிபெக்ட் மற்றும் ஜீரோ எபெக்ட்' ஆகியவற்றை தாரக மந்திரமாக கொள்ளுங்கள். பிழையில்லாத பொருட்களை (ஜீரோ டிபெக்ட்) தயார் செய்வதன் மூலம், ஒருபோதும் சர்வதேச சந்தையில் இந்திய பொருட்கள் திரும்ப அனுப்பப்படக் கூடாது. நம்முடைய உற்பத்தியால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது (ஜீரோ எபெக்ட்). இந்த மந்திரத்தோடு, உற்பத்தி துறையை முன்னேற்றினால், நம் இலக்கை நாம் அடைவோம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, பிரதமர் மோடி உரையாற்றினார்.

தினமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடமையைச் செய்யுங்கள் - பிரதமர் உரை

Post by சிவா on Sat Aug 16, 2014 4:24 am

டில்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் புதுமை: சாதாரண மக்களுக்கு முக்கியத்துவம்

புதுடில்லி:தலைநகர் டில்லியில், நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், இதுவரை இல்லாத வகையில், வி.ஐ.பி.,க்களுக்கு இணையாக, சாதாரண மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால், ஏராளமான மக்கள், விழாவில் பெரும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

டில்லியில், நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, பல புதுமைகள் அரங்கேறின. வழக்கமாக, சுதந்திர தின விழா நடக்கும்போது, பார்வையாளர் வரிசையில் வி.ஐ.பி.,க்களுக்கு தான், முக்கியத்துவம் அளிக்கப்படும்.வி.ஐ.பி.,க்களுக்கு ஒதுக்கியது போக, மீதமுள்ள இருக்கைகள் மட்டுமே சாதாரண மக்களுக்கு ஒதுக்கப்படும். இந்த நடைமுறை, நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் தகர்க்கப்பட்டது.சுதந்திர தின விழா ஏற்பாடுகள் துவங்கியதுமே, 'பார்வையாளர் வரிசையில், பொதுமக்களுக்கென, 10 ஆயிரம் இருக்கைகள் ஒதுக்க வேண்டும்' என, பிரதமர் மோடி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்படி, பொதுமக்களுக்கென, 10 ஆயிரம் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இந்த தகவல், ஏற்கனவே மீடியாக்களில் வெளியானதால், நேற்று அதிகாலையில் இருந்தே, டில்லியில் இருந்து மட்டுமல்லாமல், அதன் புறநகர் பகுதி களில் இருந்தும் ஏராளமான மக்கள், செங்கோட்டையில் குவியத் துவங்கினர்.சுதந்திர தின விழாவுக்கு வரும் பொதுமக்களிடம், பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படாததால், கூட்டம் அலை மோதியது. பொதுமக்களுக்கென ஒதுக்கப்பட்ட, 10 ஆயிரம் இருக்கைகளும், காலை, 7:00 மணிக்கே நிரம்பி விட்டன. அதிலும், பள்ளி குழந்தைகள் அதிகமாக அமர்ந்துஇருந்தனர்.இருக்கைகள் நிரம்பி வழிந்ததால், ஏராளமானோர் நின்றபடியே, விழாவை பார்த்து ரசித்தனர். காலை, 7:27க்கு, பிரதமர் மோடி, விழா நடக்கும் இடத்துக்கு வந்தார்.

அப்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்களும், குழந்தைகளும் கைகளைத் தட்டி, அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குழந்தைகள், தாங்கள் அணிந்திருந்த தொப்பியை எடுத்து, கையில் அசைத்து, மோடியை வரவேற்றனர். பின், 7:30க்கு, பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றியபோது கரவொலி, காதை பிளந்தது. மோடியின் ஒவ்வொரு அறிவிப்புக்கும், அங்கு கூடியிருந்தவர்கள் கைகளை தட்டி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குறிப்பாக, ஏழைகளுக்கு வங்கி கணக்கு துவங்குவதாக அவர் அறிவித்தபோது, கைதட்டல் ஓசை அடங்குவதற்கு சில விநாடிகள் பிடித்தது.விழா முடிந்து, பிரதமர் மோடி, காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். அப்போது, அங்கு திரண்டிருந்த பள்ளி குழந்தைகள், அவரை நோக்கி கையை அசைத்தனர். இதையடுத்து, குழந்தைகளை நெருங்கி, கைகளை குலுக்கி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். வழக்கமாக, சுதந்திர தின விழாக்களில் பிரதமர்கள் உரையாற்றும் போது, அவருக்காக, துப்பாக்கி குண்டுகள் துளைக்காத கூண்டு அமைக்கப்படும். அதேபோல், மழை, வெயில் ஆகியவற்றால், பிரதமர் பாதிக்கப்படாமல் இருக்க, பாதுகாவலர்கள் குடைகள் பிடிப்பர்.

ஆனால், நேற்றைய விழாவில், இந்த இரண்டு நடைமுறைகளும் தவிர்க்கப்பட்டன. சுதந்திர தின விழாவில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரை தான், மிக நீண்ட உரையாக இருந்தது. இதற்கு அடுத்த, மிக நீண்ட உரையாக, நேற்றைய மோடியின் உரை அமைந்தது.

யதார்த்த உரை:

*நேற்றைய விழாவில், 45 ஆயிரம் பொதுமக்கள் பங்கேற்றனர்.
*பார்வையாளர் வரிசையில், 26 ஆயிரம் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
*இவற்றில், தலா, 10 ஆயிரம் இருக்கைகள், வி.ஐ.பி.,க்கள், பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்டன.
*மீதமுள்ள, 6,000 இருக்கைகள், பள்ளி குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டன.
*சுதந்திர தின விழாவுக்கு வந்திருந்த மோடி, குஜராத், ராஜஸ்தான் போன்ற வட மாநில மக்கள் அணியும் தலைப்பாகையை அணிந்திருந்தார்.
*விழா நடக்கும் இடத்துக்கு வருவதற்கு முன், டில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று, பிரதமர், அஞ்சலிசெலுத்தினார்.
*பிரதமர் மோடி, தன் சுதந்திர தின உரையை எழுதி வைத்து படிக்கவில்லை. யதார்த்தமாக பேசிய தால், அவரின் உரை, மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது.
*அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல், மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களும், பிரதமரின் உரைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
*முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, காங்., தலைவர் சோனியா உள்ளிட்ட பலர், சுதந்திர தின விழாவில் பங்கேற்றனர்.

பலத்த பாதுகாப்பு:

சுதந்திர தின விழாவையொட்டி, டில்லியில் நேற்று, ஆயிரக்கணக்கான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிலிருந்து, செங்கோட்டை வரை, 500 ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அதேபோல், சுதந்திர தின விழா நடந்த செங்கோட்டையில், 200க்கும் அதிகமான கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. செங்கோட்டை அருகே, இரண்டு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, அதில், அதிநவீன தொழில்நுட்ப வசதியுடைய கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டன. டில்லி மாநில போலீசாருடன், மத்திய துணை ராணுவப் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.விழா நடக்கும் பகுதியில், விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்துமீறி பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்காக, உயரமான இடங்களில் பாதுகாப்பு படையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.டில்லியின் நுழைவாயில்களில், சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சோதனையிடப்பட்டன. அதிவிரைவு படையினர், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுஇருந்தனர். ஹெலிகாப்டர் மூலமாகவும், டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கண்காணிக்கப்பட்டன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடமையைச் செய்யுங்கள் - பிரதமர் உரை

Post by சிவா on Sat Aug 16, 2014 4:26 am

திட்ட கமிஷனுக்கு மூடுவிழா

என் அன்பு நாட்டு மக்களே!இன்று, இந்த நாட்டில் உள்ள இந்தியர்களும், வெளிநாட்டில் உள்ள இந்தியர்களும், சுதந்திர தின திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். இந்த புனிதமான சுதந்திர திருநாளில், இந்தியாவின் முதல் சேவகனான நான், நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சுதந்திர தின திருவிழாவில், நாம் அனைவரும் உறுதி எடுப்போம். 'தாய் நாட்டுக்காக பணியாற்றுவோம்; ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், தலித் இன மக்கள், சுரண்டப்பட்டோர் மற்றும் இந்த நாட்டின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைப்போம்' என உறுதி எடுப்போம்.என் அன்பு நாட்டு மக்களே, தேசிய திருவிழா என்பது, தேசத்தின் நடத்தையை மறுகட்டுமானம் செய்வதாகவும், சுத்திகரிப்பு செய்வதாகவும் இருக்க வேண்டும். இந்த தேசிய திருவிழாவை அதற்காக நாம் பயன்படுத்திக் கொள்வோம். நம் வாழ்க்கையை இன்னும் சுத்திகரிப்பு செய்து கொள்ளவும், நாட்டுக்காக நம்மை அர்ப்பணிக்கவும், நம் ஒவ்வொரு செயலும், நாட்டின் நலனுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என உறுதி எடுப்போம்.என் அருமை மக்களே, இந்த நாடு, அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டதல்ல; ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டதல்ல; அரசுகளால் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக, விவசாயிகளால், நம் தொழிலாளர்களால், நம் தாய்மார்களால், நம் சகோதரிகளால், நம் இளைஞர்களால் உருவாக்கப்பட்டது.இந்த நாடு இப்போது அடைந்திருக்கும் இந்த நிலையை, உருவாக்கியது நாமல்ல. எத்தனையோ முனிவர்கள், எத்தனையோ சாதுக்கள், எத்தனையோ வித்தகர்கள், எத்தனையோ ஆசிரியர்கள், எத்தனையோ விஞ்ஞானிகள், எத்தனையோ சமூக தொண்டர்கள் உருவாக்கியுள்ளனர். இத்தகைய சிறந்த மனிதர்களும், சிறப்பான தலைமுறைகளும், தங்கள் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு, சிரமப்பட்டு இந்த நிலையை நமக்கு தந்துள்ளனர்; அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவோம்.

ஜனநாயகத்தின் சாதனை:

ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஏழை சிறுவன் ஒருவன், இந்த செங்கோட்டையில் பட்டொளி வீசிப் பறக்கும் மூவர்ண கொடிக்கு மரியாதை செய்ய முடிகிறது. இது தான் நம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அழகு; இது தான் அதன் சிறப்புத் தன்மை. இது தான் நம் ஜனநாயகத்தின் பலம். இந்த விலை மதிப்பில்லாத சொத்தை, அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றிய நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்றுள்ளனர். அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றிய அனைவருக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன்.என் அன்பான சகோதர, சகோதரிகளே! சுதந்திரத்திற்கு பிறகு, நாம் இந்த நிலையை அடைய, பல பிரதமர்கள், பல அரசுகள், ஏன், பல மாநிலங்களின் அரசுகள் சிறப்பான பங்காற்றியுள்ளன. எனவே, நம் முந்தைய அரசுகள், நாட்டை இந்த நிலைமைக்கு முன்னேற்றிக் கொண்டு வந்துள்ள முன்னாள் பிரதமர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.இந்த நாடு, பழங்கால கலாசார பெருமையை அடிப்படையாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வேத காலத்து மந்திரம் ஒன்று, அதை இப்போதும் நமக்கு, நம் செயல்பாட்டு கலாசாரத்தை வெளிப்படுத்துகிறது. இந்த மந்திரம் நாம் அறிந்தது தான்; நாம் பல முறை மனனம் செய்தது தான்.''சங்கச்ஹத்வம் சம்வதாத்வம் சம் வோ மனாசி ஜானதாம்'' - என்ற இந்த மந்திரத்தின் பொருள், 'நாம் இணைந்து நடப்போம்; இணைந்து முன்னேறுவோம்; இணைந்து யோசிப்போம்; இணைந்து முடிவெடுப்போம்; இணைந்து இந்த நாட்டை முன்னேற்றுவோம்' என்பது ஆகும்.இந்த மந்திரத்தை மனதில் இருத்தி தான், 125 கோடி மக்களும் இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்கிறோம்.நேற்று தான், இந்த புதிய அரசின், பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடர் எங்களின் எண்ணங்களையும், எங்களின் விருப்பங்களையும் வெளிப்படுத்தியது என்பதை பெருமையாக சொல்லிக் கொள்கிறேன். 'மெஜாரிட்டி'யாக இருக்கிறோம் என்பதன் அடிப்படையில் இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்லவில்லை; ஒருமித்த கருத்து மூலம் இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடமையைச் செய்யுங்கள் - பிரதமர் உரை

Post by சிவா on Sat Aug 16, 2014 4:26 amகாணிக்கை:


இந்த செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்தவாறு, அனைத்து எம்.பி.,க்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், நான், மரியாதை கலந்த வணக்கத்தை காணிக்கையாக்குகிறேன்.சகோதர, சகோதரிகளே, நான் டில்லிக்கு சொந்தக்காரனல்ல; நான் டில்லிக்கு வெளியே இருந்து வந்தவன். எனக்கு டில்லியின் நிர்வாகம், செயல்பாடு பற்றி எதுவும் தெரியாது. இந்த நகரின் உயர்வகுப்பு மக்களில் இருந்து நான் தனிமைப்பட்டுள்ளேன். எனினும், கடந்த இரண்டு மாதங்களாக நான் உள்நோக்கி பார்த்தேன்; பிரமித்துப் போனேன்.நான் கூறும் இதை எவ்வித அரசியல் பார்வையிலும் பார்க்கக் கூடாது. நான் முன்னரே கூறியபடி, இந்த நாட்டை இந்த அளவுக்கு முன்னேற்றியுள்ள முன்னாள் பிரதமர்களை நான் வாழ்த்துகிறேன் என கூறியுள்ளேன். எனவே, எனது உள்நோக்கிய பார்வையை, அரசியல் சார்ந்தோ, நான் சார்ந்த கட்சி சார்ந்தோ பார்க்கக் கூடாது.நான் டில்லிக்கு வந்ததுமே அந்த உள்நோக்கிய பார்வையால் சிலவற்றை அறிந்தேன். பல டஜன் அரசு துறைகள், ஒரு முக்கிய அரசின், அதாவது மத்திய அரசு என்ற அமைப்பின் உள், ஒரே நேரத்தில் செயல்படுகின்றன. இந்த ஒவ்வொரு துறைகளும், தங்களுக்கு என சிறப்பு அதிகாரம் உள்ளதை பெருமையாகக் கருதுகின்றன. எனினும், அந்த அரசு துறைகளுக்குள் ஒற்றுமையின்மையும், அவர்களுக்குள் மோதலும் இருப்பதை நான் கண்டேன்.ஒரே அரசின் பல்வேறு துறைகள், ஒன்றுடன் ஒன்று தங்கள் அதிகார வரம்பு, அதிகாரத்தை பயன்படுத்தி மோதிக் கொண்டதை பார்த்தேன். அந்தந்த துறைகள், அவர்கள் இஷ்டத்திற்கு, சுப்ரீம் கோர்ட்டை அணுகுவதை அறிந்தேன். ஒரே நாடு; ஒரே அரசு; ஆனால், அவர்களுக்குள் இத்தனை குழப்பம்; இத்தனை மோதல்.இப்படி இருந்தால் இவர்களால் நாட்டை எப்படி முன்னெடுத்து செல்ல முடியும்... அதனால் வருத்தம் அடைந்த நான், அரசுகளுக்கு இடையே, துறைகளுக்கு இடையே உள்ள சுவர்களை தகர்த்து எறியும் பணியில் இறங்கினேன். இதன் மூலம் அரசு நிர்வாகத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டேன்; கும்பலை சேர்க்கும் பணிக்கு தடை விதித்தேன்.

பெரிய வலி:

இப்போதெல்லாம் செய்தித் தாள்கள், மோடி பிரதமரான பிறகு, அதிகாரிகள், குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகம் வருகின்றனர்; வந்ததும் வேலை பார்க்கின்றனர் என செய்திகள் வெளியிடுவதைப் பார்க்கிறேன். இத்தகைய செய்திகளைத் தான் தேசிய நாளிதழ்களும், 'டிவி'களும் முக்கியமாக வெளியிடுகின்றன. இதையெல்லாம் பார்த்து, இந்த நாட்டின் தலைமை பொறுப்பில் உள்ள நான், 'ஆகா, நம் ஆட்சியில் அலுவலகங்கள் சரியான நேரத்தில் துவங்குகின்றன; அதிகாரிகள் சரியாக வேலை பார்க்கின்றனர்' என மகிழ்ச்சி அடையவில்லை; மாறாக, அந்த செய்திகள், பெரிய வலியை ஏற்படுத்தியது. அது என்ன என்பதை, இன்று உங்கள் மத்தியில் தெரிவிக்க விரும்புகிறேன். அதிகாரிகள் சரியான நேரத்திற்கு அலுவலகம் வருவது தான் செய்தியா... அது தான் செய்தி என்றால், நாம் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பதை உணர்ந்து வருந்தினேன். இந்த நாட்டின் சகோதர, சகோதரிகள், இந்த நாட்டின் நிர்வாகத்தை, இதற்கு முன் எப்படி நடத்தியுள்ளனர் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன். இப்போதுள்ள உலகளாவிய போட்டி நிலவும் காலகட்டத்தில், இப்படிபட்ட செய்திகள், இது போன்ற செயல்களால் எந்த பயனும் இல்லை. நாம் இன்னும் வேகமாக, முன்னோக்கி செல்ல வேண்டும்; அதற்கான செயல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் பல கோடி இந்திய மக்களின் கனவை நிறைவேற்ற வேண்டும். அவர்களின் கனவை நிறைவேற்ற, அரசு என்ற இயந்திரத்தை இன்னும் வேகமாக செயல்பட வைக்க வேண்டும்; அதன் செயல்திறனை கூட்ட வேண்டும்; அதற்காக இந்த இயந்திரம் தங்கு தடையின்றி இயங்க வேண்டும்.என் நாட்டு மக்களே! நான் டில்லிக்கு வெளியே இருந்து இங்கே இப்போது தான் வந்துள்ள போதிலும், நம் அரசு அலுவலகங்களில், சாதாரண, 'பியூன்' முதல், கேபினட் செயலர் வரை அனைவரும் திறமையானவர்கள் என்பதை அறிந்துள்ளேன். அனைவரும் புத்திசாலிகள்; அனைவரும் அனுபவசாலிகள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர்களுக்குள் முடங்கிக் கிடக்கும் சக்தியை தட்டி எழுப்பி, அதை நாட்டின் முன்னேற்றத்திற்காக, நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என்பது தான் என் குறிக்கோள்; அதை அடைந்தே தீருவேன்.சுதந்திர தின உரையில் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. இதை நான், மே 16க்கு முன் சொல்லியிருக்க முடியாது; ஏனெனில், அப்போது எனக்கு அது பற்றி தெரியாது. இப்போது தெரிந்து விட்டது; எனவே, இந்த மூவர்ண கொடியை சாட்சியாக வைத்து கூறுகிறேன்; இது என்னால் முடியும்; சாதித்து காட்டுவேன்.என் சகோதர, சகோதரிகளே! நமக்கு இந்த சுதந்திரத்தை பெற்றுத் தந்த தலைவர்களின் கனவாக இருந்த இந்தியாவை உருவாக்கும் பணியில், நமக்கு என்ன பங்கு உள்ளது என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடமையைச் செய்யுங்கள் - பிரதமர் உரை

Post by சிவா on Sat Aug 16, 2014 4:26 amசரியான பாதை:


சகோதர, சகோதரிகளே! சமீபத்தில் நான், நேபாளம் சென்றிருந்தேன். உலகின் கவனத்திற்கு, பொதுவான ஒரு தகவலை சொன்னேன். 'மண்ணாசை பிடித்து மாமன்னர் அசோகன் பல போர்களில் ஈடுபட்டார். மகா புத்தரின் போதனையால் அவர், போர்களை துறந்து, அமைதி வழிக்கு திரும்பினார். அது போல, சில ஆண்டுகளுக்கு முன் வன்முறை பாதையை தேர்ந்தெடுத்த நேபாள இளைஞர்கள், இப்போது அமைதி வழிக்கு திரும்பி விட்டனர்; அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றி வருகின்றனர். துப்பாக்கியை துாக்கிய அவர்கள், இப்போது புத்தகத்தை துாக்கியுள்ளனர்' என பேசினேன்.உலகின் பல பாகங்களில் வன்முறைகள் நிகழ்கின்றன. வன்முறை பாதை சரியானதல்ல என்பதை உலக இளைஞர்களுக்கு விளக்கும் முன்னுதாரணமாக, நேபாள இளைஞர்கள் விளங்குகின்றனர்.புத்தரின் புனித பூமியான நேபாளம் உலகுக்கு வழிகாட்டும் போது, இந்தியாவும் அதை ஏன் செய்ய முடியாது... எனவே, வன்முறை பாதையை தேர்ந்தெடுத்தவர்கள், அதை புறக்கணித்து, சகோதரத்துவத்தை வளர்க்க முன்வர வேண்டும்.என் சகோதர, சகோதரிகளே! ஏதாவது ஒரு காரணத்திற்காக, நாட்டில் மத மோதல்கள் நடைபெற்றுள்ளன. அவை, நாட்டில் பிரிவினையை ஏற்படுத்திவிட்டன. சுதந்திரத்திற்கு பிறகும், ஜாதியியம் மற்றும் மதவாத விஷத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இந்த கொடுமைகள் தொடரும்... இதனால் யாருக்கு பயன்... நிறைய சண்டைகளை பார்த்து விட்டோம்; ஏராளமானோர் கொல்லப்பட்டதையும் பார்த்து விட்டோம். பின்னோக்கி பாருங்கள் நண்பர்களே, இதனால் யாருக்கும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை என்பதை அறிவீர்கள். இந்திய அன்னைக்கு நிந்தனையை ஏற்படுத்தியதைத் தவிர வேறு ஒன்றும் ஏற்படவில்லை.எனவே, அனைவரையும் நான் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். ஜாதி, மதம், வட்டாரம் என, எவ்வித பேதமும், வேற்றுமையும் தேவையில்லை. இவை, நம் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளன.எனவே, இப்போதே நாம் உறுதி எடுப்போம்; இன்னும் பத்தாண்டுகளுக்கு எவ்வித மத மோதல்களையும், இன மோதல்களையும் கைவிடுவது என. அதன் பிறகு பாருங்கள், அமைதி, சமாதானம், சகோதரத்துவம் போன்றவற்றால் நாம் எவ்வளவு பெரிய சக்தியை பெற்றுள்ளோம் என்பதை உணர்வீர்கள். அதை ஒரு முறை நாம் உணர்வோம்!

எனதருமை நாட்டு மக்களே! நான் சொல்வதை நம்புங்கள். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இது வரை நடந்ததை எல்லாம் விட்டுத் தள்ளுங்கள். அந்த தவறான பாதையை தவிர்த்து விடுங்கள். நல்லெண்ணம், சகோதரத்துவ பாதையை தேர்ந்தெடுங்கள். அதன் மூலம் நம் நாட்டை முன்னெடுத்துச் செல்ல உறுதி எடுப்போம்; நாம் இதை செய்வோம் என நம்புகிறேன்.விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது குறித்து எனக்கு சொல்லுங்கள். கந்துவட்டிக்காரர்களிடம் இருந்து விவசாயி கடன் பெறுகிறார். அதை திருப்பிச் செலுத்த முடியாமல் போகிறது. அது போல், மகளின் திருமணத்திற்காக கடன் வாங்குகிறார்; அதையும் திருப்பி செலுத்த முடியாமல் தடுமாறுகிறார். தன் வாழ்நாள் முழுவதும் இதனால் அவர் கஷ்டப்படுகிறார். இதனால் அவர் தற்கொலை முடிவை தேர்ந்தெடுக்கிறார். ஏழை விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது நம் கடமையல்லவா?ஆகவே, இந்த சுதந்திர தின திருவிழாவில் நான் புதிய திட்டம் ஒன்றை அறிவிக்கிறேன். இந்த திட்டத்திற்கு, 'பிரதான் மந்திரி ஜன - தான யோஜனா' என பெயர் வைத்துள்ளோம். இந்த திட்டத்தின் மூலம், இந்த நாட்டின் மிக ஏழ்மையான குடிமக்களை வங்கி கணக்குடன் இணைக்க உள்ளோம்.

எல்லாருக்கும் வங்கி கணக்கு:

நம் நாட்டில், லட்சக்கணக்கான மக்களிடம் மொபைல் போன் இருக்கிறது; ஆனால், வங்கிக் கணக்கு இல்லை. இந்நிலையை மாற்ற உள்ளோம். நாட்டின் பொருளாதார வளங்கள், ஏழைகள் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டும். அதை இந்த திட்டம் நிறைவேற்றும்.இந்த திட்டத்தில் சேர்பவர்களுக்கு, பண அட்டை ஒன்று வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒரு லட்சம் ரூபாய்க்கு, காப்பீடு வழங்கப்படும். இதன் மூலம், அந்த குடும்பத்திற்கு ஏதேனும் இடர்பாடு ஏற்படுமானால், காப்பீடு கைகொடுக்கும். என் சகோதர, சகோதரிகளே! நாட்டின் மக்கள்தொகையில், 65 சதவீதம் பேர், 35 வயதுக்கும் குறைவானவர்கள். இதன் மூலம், உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இதிலிருந்து என்ன பலன் பெற முடியும் எனயோசித்திருக்கிறோமா? இப்போது உலகம் முழுவதும் திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இந்தியாவிலும் திறமையான இளைஞர்கள் தேவைப்படுகின்றனர். சில நேரங்களில் நாம் நல்ல டிரைவரை தேடுவோம்; கிடைக்க மாட்டார்; நல்ல, 'பிளம்பர்' ஒருவரை தேடுவோம்; அவரும் கிடைக்க மாட்டார். அது போல, நல்ல சமையல்காரரை தேடுவோம்; அவரும் கிடைக்க மாட்டார்.நாட்டில் ஏராளமான இளைஞர்கள் உள்ளனர்; அவர்களில் பலர் வேலையின்றி இருக்கின்றனர். அவர்களில் திறமையானவர்கள், நமக்கு கிடைக்கவில்லை. நாட்டை முன்னேற்ற வேண்டும் என்றால், நம் இளைஞர்களுக்கு திறன்களை மேம்படுத்த வேண்டும். லட்சக்கணக்கான மக்களுக்கு திறன் பயிற்சி அளிக்க உள்ளோம்; அதன் மூலம் திறமையான இளைஞர்களை உருவாக்க உள்ளோம்; அதற்கான நெட்வொர்க்கை ஏற்படுத்தி, இந்தியாவை வளர்ந்த, நவீன இந்தியாவாக மாற்றுவோம்.இந்திய இளைஞர்கள், உலகின் எந்த மூலைக்கு சென்றாலும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் இரண்டு விதமான வாய்ப்புகளை நாம் ஏற்படுத்த உள்ளோம். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் படைத்த இளைஞர்கள் கொண்ட தொகுப்பு உருவாக்கப்படும். அத்தகைய வாய்ப்பு இல்லாதவர்கள், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முடியாதவர்கள், உலகின் எந்த பாகத்திற்கும் சென்று, தன் திறமையால் தலைநிமிர்ந்து நிற்க வாய்ப்பு ஏற்படுத்தித் தர உள்ளோம்.சகோதர, சகோதரிகளே! உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, இந்தியாவின் எதிர்காலத்தை தனித்து, இந்தியா மட்டுமே முடிவு செய்ய முடியாது. உலக பொருளாதாரம் மாறிக் கொண்டே இருக்கிறது; அதற்கேற்ப நாமும் மாற வேண்டும். இதற்காக அரசும் சமீபத்தில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது; பட்ஜெட்டிலும் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடமையைச் செய்யுங்கள் - பிரதமர் உரை

Post by சிவா on Sat Aug 16, 2014 4:27 am

பாம்பாட்டி நாடா?

சகோதர, சகோதரிகளே! நம் இளைஞர்கள், உலக அளவில் இந்தியா மீதான அபிப்ராயத்தை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளனர். 25 - 30 ஆண்டுகளுக்கு முன், நம் நாட்டினரை, பாம்பாட்டிகள் நாடு என்றும், பில்லி, சூனியம் வைப்பவர்கள் நாடு என்றும் தான் வெளிநாட்டினரில் பலர் கருதி வந்தனர்.அதை மாற்றிக் காட்டினர் நம் இளைஞர்கள், 20, 22, 24 வயது இளைஞர்கள், தங்களின் கம்ப்யூட்டர் அறிவால், இந்தியா மீது உலக நாட்டினர் கொண்டிருந்த தவறான அபிப்ராயத்தை மாற்றிக் காட்டினர். தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்திய இளைஞர்கள், இந்தியாவுக்கு புதிய அடையாளத்தை காண்பித்துள்ளனர்.இந்த திறமையை இந்தியாவிலும் அவர்கள் காண்பிக்க வேண்டும். 'டிஜிட்டல் இந்தியா' எனப்படும், தகவல் தொடர்பில், சிறந்த இந்தியாவை உருவாக்க வேண்டும். எட்டாத கிராமங்களுக்கும், 'பிராட்பேண்ட்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம், தொலைதுார, கம்ப்யூட்டர் கல்வியை அளிக்க வேண்டும்.டாக்டர்கள் பற்றாக்குறையாக இருக்கும் பகுதிகளில், 'டெலி மெடிசின்' எனப்படும், வெளியிடங்களில் இருந்த படி மருத்துவ சிகிச்சை அளிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஏழைகளுக்கும், எட்டாத கிராமங்களில் உள்ளவர்களுக்கும் மருத்துவ வசதி அளிக்க வேண்டும்.நாட்டு மக்கள் அனைவரின் கைகளிலும் மொபைல் போன்கள் உள்ளன. அவர்களிடம், மொபைல் கனெக்ட்டிவிட்டி உள்ளது; அதன் மூலம், மொபைல் கவர்னன்ஸ் மேற்கொள்ளலாம். அத்தியாவசிய அரசு சேவைகளை, மொபைல் போன் மூலம் விண்ணப்பித்து பெற வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வங்கிக் கணக்கை, மொபைல் போன் மூலம் ஆபரேட் செய்ய, வர்த்தக நடவடிக்கைகளை மொபைல் போன் மூலம் மேற்கொள்ள வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். இதன் மூலம், 'டிஜிட்டல் இந்தியா'வை நாம் உருவாக்க முடியும்.

சுத்தத்திற்கு முக்கியத்துவம்

சுதந்திரம் அடைந்து இத்தனை நாட்கள் ஆன பிறகும், இன்னமும், முடை நாற்றத்தில் தான் வசித்துக் கொண்டிருக்கிறோம். நான் பிரதமராக பொறுப்பேற்ற உடன், மத்திய அமைச்சகங்களில் சுத்தத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்தேன். இதெல்லாம் பிரதமர் மேற்கொள்ள வேண்டிய வேலையா என, அப்போது எனக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்தனர். என்னை பொருத்த வரை, அது மிகப்பெரிய வேலை; மிக முக்கியமான வேலை.

வெளியிடங்களில் மல, ஜலம்:

சகோதர, சகோதரிகளே, நாம், 21ம் நுாற்றாண்டில் வாழ்ந்து வருகிறோம். இப்போதும், நம் தாய்மார்களும், சகோதரிகளும், வெளியிடங்களில், மல, ஜலம் கழிக்கும் அவல நிலை காணப்படுகிறது; இது எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. பெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டியது நம் கடமையல்லவா!பெரும்பாலான கிராமங்களில், இரவு எப்போது வரும் என, நம் பெண்கள் காத்திருக்கின்றனர். ராத்திரி ஆனதும், மலம் கழிக்க தெருக் கோடிகளுக்கும், சாலையோரங்களுக்கும் செல்கின்றனர். இயற்கை உபாதையை தணிக்க, அவர் நீண்ட நேரம் காத்திருப்பதால், அவர்கள் அனுபவிக்கும் வேதனைகள் தான் என்னே... அதனால் அவர்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புகள் தான் எத்தனை? சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், கழிப்பறையில் மல, ஜலம் கழிக்க வேண்டும் என்பதை இந்த நாட்டின் பிரதமர், செங்கோட்டை கொத்தளத்திலிருந்து கூற வேண்டிய அவல நிலை காணப்படுவதை எண்ணி நான் வேதனைப்படுகிறேன். பிரதமர் இவ்வாறு பேசலாமா என, மக்கள் அதிர்ச்சி அடையலாம். என் இந்த உரையை மக்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்களோ தெரியவில்லை; என் வேதனையை உங்களிடம் கூறுகிறேன்.நான் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன்; வறுமையின் பாதிப்புகள் பற்றி எனக்கு தெரியும். ஏழைகளுக்கு மரியாதை வேண்டும்; அது, சுத்தத்திலிருந்து கிடைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். எனவே, வரும் அக்டோபர் 2, காந்தியடிகள் பிறந்த நாளில் இருந்து, 'கிளீன் இந்தியா' பிரசாரத்தை துவக்க உள்ளேன். பள்ளிகளில் இருந்து இதை துவக்க உள்ளேன். நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படும். அதில் கட்டாயம், பெண்களுக்கு என தனியாக கழிப்பறை வசதி செய்யப்படும். இதனால், வகுப்பின் நடுவிலேயே பள்ளிச் சிறுமியர், வீட்டுக்கு செல்ல வேண்டிய அவல நிலை தவிர்க்கப்படும்.இந்த ஆண்டில் துவக்கப்படும் இந்த திட்டத்தால், அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் 15க்குள் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறைகள் கட்டாயம் அமைக்கப்பட்டு விடும். இதற்காக, எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி பயன்படுத்தப்படும். எம்.பி.,க்கள் சார்பில், புதிய திட்டம் ஒன்றை அறிவிக்கிறேன். 'சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா' என்ற அந்த திட்டத்தின் படி, ஒவ்வொரு எம்.பி.,யும் தன் தொகுதியில், ஏதாவது ஒரு கிராமத்தை, முழு அளவில் சுகாதாரம் பெற்ற கிராமமாக, முழு கல்வியறிவு, சமூக நல்லுறவு பெற்ற கிராமமாக மாற்றி காட்ட வேண்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடமையைச் செய்யுங்கள் - பிரதமர் உரை

Post by சிவா on Sat Aug 16, 2014 4:27 am

திட்டக்கமிஷன்:

சகோதர, சகோதரிகளே! எங்கள் அரசு பொறுப்பேற்றது முதல், திட்டக்கமிஷன் என்னவாகப் போகிறது என, ஊடகங்கள் பலவாக எழுதியும், பேசியும் வருகின்றன. திட்டக்கமிஷன் தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் அதன் தேவை அதிகமாகத் தான் இருந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்காக, திட்டக்கமிஷன் சிறப்பான பல செயல்பாடுகளை கொண்டிருந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.எனினும், மத்திய அரசு தான் எப்போதும் பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாநில அரசுகளும், வளர்ச்சியின் மையப் புள்ளிகளாக வளர்ந்து வருகின்றன. கூட்டாட்சி தத்துவத்தை காப்பாற்றவும், மாநில அரசுகளின் நலன்களை காக்கவும் முடிவு செய்துள்ள நாங்கள், திட்டக்கமிஷனை மாற்றியமைக்க உள்ளோம்.திட்டக்கமிஷன் பழைய வீடு போல உள்ளது. அதை புதுப்பிக்க அதிக செலவு பிடிக்கும் என கருதுவதால், அந்த வீட்டை இடித்து விட்டு, அதற்குப் பதில் புதிய வீடு கட்டிக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளோம். திட்டக்கமிஷன் இனி இருக்காது. விரைவில் அதற்கு மாற்று அமைப்பு ஏற்பாடு செய்யப்படும்; அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

பகவான் அரவிந்தர்:

பகவான் அரவிந்தரின் பிறந்த நாள் இன்று. தீவிரவாத கொள்கை கொண்டவராக இருந்த அவர் பின் யோகியாக மாறியவர். அவர், 'இறை சக்தியும், ஆன்மிக பாரம்பரியமும், உலக அளவில் இந்தியாவை வளம் கொழிக்கச் செய்யும்' என, தெரிவித்திருந்தார். அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். விவேகானந்தர் வழியில், அவர் அறிவுரைகளின் படி இந்த அரசு செயல்படும்.வெளிநாட்டு சாம்ராஜ்ஜியங்களை விரட்டிய நாம், வறுமையை ஒழிக்காமல் இருந்தால் சரியாக இருக்காது. இதற்காக, 125 கோடி மக்களும் உறுதி எடுக்க வேண்டும். நம் அண்டை நாடுகளும் வறுமைக்கு எதிராக போராடி வருவதால், 'சார்க்' நாடுகள் அமைப்புடன் இணைந்து, வறுமையை ஒழிக்க திட்டமிட்டுள்ளோம். அண்டை நாடுகளுடன் நல்லுறவு இருக்க வேண்டும் என்பதற்காகத் தான், பிரதமராக நான் பதவியேற்ற போது, 'சார்க்' நாடுகளின் தலைவர்களை அழைத்திருந்தோம்.சகோதர, சகோதரிகளே! நம் நாட்டிற்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற உறுதியை இன்று நாம் எடுப்போம். நாட்டின் வளர்ச்சிக்காக, நீங்கள், 12 மணி நேரம் உழைத்தால், நான், 13 மணி நேரம் உழைப்பேன்; நீங்கள், 13 மணி நேரம் உழைத்தால், நான், 14 மணி நேரம் உழைப்பேன். ஏனெனில் நான் பிரதம மந்திரி இல்லை; பிரதம சேவகன்.

ராணுவத்தினர் சேவை:

நாட்டின் பாதுகாப்பிற்காக அல்லும், பகலும் அயராது பாடுபடும் ராணுவத்தினர், துணை ராணுவத்தினருக்கு என் பாராட்டுகள். அன்னை இந்தியாவை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு நாம் அனைவரும் வாழ்த்துகளை தெரிவிப்போம். ராணுவம் எப்போதும் விழிப்புடன் உள்ளது; நாமும் விழிப்புடன் இருந்தால், நாட்டை உச்சாணிக்கு கொண்டு செல்ல முடியும்.என்னுடன் சேர்ந்து உரக்க சொல்லுங்கள். 'பாரத் மாதா கீ ஜே; ஜெய் ஹிந்த்; வந்தேமாதரம்'இவ்வாறு, மோடி பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடமையைச் செய்யுங்கள் - பிரதமர் உரை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum