ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

நன்றி
 SK

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள் :)

View previous topic View next topic Go down

இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள் :)

Post by krishnaamma on Fri Aug 22, 2014 10:29 pmஅம்மா, இந்த விளம்பரம் எதப் பத்தினது?! அந்த அக்காவுக்கு ஏன் வயிறு வலிக்குது?! இப்படி உங்கள் வீட்டு சின்னப் பெண் கேள்வி கேட்டால் கோபப்படாதீர்கள். அதற்கு பதிலளிப்பதை தவிர்க்காதீர்கள்.

அவளிடம் பேசுங்கள். நிறைய பேசுங்கள். சில விஷயங்களில் தெளிவற்ற அறிவு தவறான புரிதலை ஏற்படுத்திவிடும். அது ஆபத்தானதும்கூட. எனவே தயக்கம் இன்றி பேசுங்கள்.

உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்க வேண்டும் இங்கு நாம் எதைப் பற்றி பேசப்போகிறோம் என்று. பூப்படையும் தருவாயில் இருக்கும் சிறுமிகளிடம் உடலியல் மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகமிக அவசியம்.

எப்படிச் சொல்வது?

கேள்விகளுடன் உங்கள் மகள் அணுகும்போது, நீ கைக்குழந்தையாக இருந்தாய், பின்னர் தவழ்ந்து, நடந்து வளர்ந்தாய். குழந்தை வளர்வது இயற்கை. அந்த இயற்கையின் விளைவே பெண் பிள்ளைகள் பூப்படைவதும் என முதலில் ஆரம்பியுங்கள்.

பின்னர் பூப்படைவதற்கு முன்னர் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் குறித்து சொல்லுங்கள். உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் வளர்ச்சியின் அடையாளங்கள் என்ற அடிப்படை அறிவியலை எடுத்துரையுங்கள். அதனாலேயே நீங்கள் அவள் பெட்டிகோட், ஸ்லிப் அணிய வேண்டும் என வலியுறுத்துவதாகவும் கூறுங்கள்.

மருத்துவர் அட்வைஸ்:

இப்படி அடிப்படை புரிதலை ஏற்படுத்திவிட்டாலும்கூட ரத்தப்போக்கு பற்றி எப்படி அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் சிறு பிள்ளையிடன் எடுத்துரைப்பது என்பது குறித்து குழந்தைகள் நல மருத்துவரும், செஸ் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் பி.மனோரமா சில அறிவுரைகள் கூறுகிறார்.

சிறுமிகளுக்கு இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகமிக அவசியம். இது அவர்களது சுய பாதுகாப்புக்கும் உதவும். பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த இடத்தை பாதுகாக்க வேண்டும் என்ற முதல் பாடத்தை ஒரு குழந்தை உள்ளாடை அணிய வேண்டும் என்று வலியுறுத்தும்போதே பெற்றோராகிய நாம் ஆரம்பித்து விடுகிறோம். எனவே பெண் பிள்ளைக்கு மாதவிடாய் பற்றி எடுத்துரைப்பது இரண்டாவது பாடம்.

பெண் குழந்தையிடம், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் உன் உடலில் இருந்து தேவையற்ற ரத்தம் பிறப்புறுப்பு வழியக வெளியேறும். இது சிறுநீர் போல் அவ்வப்போது வெளியேறாமல் தொடர்ந்து 3 நாட்கள் முதல் 4 நாட்கள் வரை வெளியேறும் என்பதால் பாதுகாப்புக்காக நாம் பயன்படுத்துவதே சானிட்டரி நாப்கின். தொலைக்காட்சிகளில் நீ விளம்பரங்களில் பார்ப்பது இவற்றிற்கானதே. இது உன் சுகாதாரத்தை பேணும். இதை பயன்படுத்தும்போது உன் வழக்கமான மகிழ்ச்சி தடைபடாமல் நீ சவுகரியமாக இருக்கலாம். அந்த மூன்று நாட்களில், உனக்கு வயிற்று வலி ஏற்படலாம். அதற்கேற்ப சத்தான உணவு முறைகளை பழக்கிக் கொள்வது நல்லது, என எளிமையாக எடுத்துக்கூறுங்கள்.

அப்போது அவள் குறுக்கு கேள்விகள் கேட்டால். அதற்கும் பொறுமையாக பதிலளியுங்கள். பள்ளியில் தோழிகளுடன் அவள் இதுபற்றி பேசியிருக்கலாம் ஆனால் சில நேரங்களில் அது அவளுக்கு முழுமையான புரிதலை ஏற்படுத்தியிருக்காது.

நீங்கள் தெளிவாக விளக்கிவிட்டால், உங்கள் செல்ல மகள் முதன்முதலில் ரத்தக்கசிவை எதிர்கொள்ளும்போது அச்சமடையமாட்டாள் என்றார்.

கலாச்சாரத்தை கற்றுக்கொடுங்கள்:

இதற்கு அடுத்த பருவம் வளர் இளம்பருவம். இந்த காலகட்டத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு நம் கலாச்சாரத்தை சொல்லிக் கொடுப்பது மிகமிக அவசியம். ஒரு பெண் பூப்படைந்த பிறகு அவளது உடல் குழந்தையை உருவாக்கவும் தயாராகிவிடுகிறது. ஆனால், குழந்தைப்பேறு என்பது திருமணத்திற்கு பிறகே ஏற்பட வேண்டும். பொருந்தாத வயதில், அங்கீகரிக்கப்படாத முறையில் பிறக்கும் குழந்தைக்கு சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்ற கலாச்சாரத்தை எடுத்துரைப்பதும் பெற்றோரின் கடமையே. இது அவளை சமூகத்தில் அவளே பாதுகாத்துக் கொள்ள. தைரியமாக உலவ வழிவகுக்கும் எனவும் மருத்துவர் மனோரமா கூறுகிறார்.

உணவு, உடை, உறைவிடம், கல்வி, லேட்டஸ்ட் கேட்ஜட்ஸ் என அனைத்திலும் தங்கள் பிள்ளைகளுக்கு தி பெஸ்ட் கொடுக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர்கள் இதுபோன்ற அடிப்படை உடற்கூறியல், அடிப்படை பாலியல் கல்வி ஆகியனவற்றையும் எடுத்துரைப்பது அவசியம்.

பெண் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல அட்வைஸ் ஆண் பிள்ளைகளுக்கும் தேவையானதே. உன் தோழியை கவுரவமாக நடத்து என எப்போதுமே கண்ணியத்தை அவர்களுக்கு சொல்லிக் கொண்டே இருந்தால் வளமான சமுதாயத்தை உருவாக்க முடியும் தானே.

நன்றி : தி ஹிந்து

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள் :)

Post by krishnaamma on Fri Aug 22, 2014 10:38 pm

எனக்கு ஒன்று சொல்ல வேண்டி இருக்கு இங்கு, பெற்றவர்களே , தங்களின் பெண்குழந்தைக்கு மோசமான உடைகளை வந்கித்தருவதை நிறுத்தவேண்டும்.

அவங்க சொல்வார்கள் " அவ குழந்தை தானே" என்று, ஆனால் அவள் மற்றவர்கள் கண்களுக்கு எப்படித் தெரிவாள் என்று உணர்ந்து ,உடைகள் வாங்கணும்.

"என்னிஷ்டம் அப்படித்தான் நான்போடுவேன் " என்று வம்பில் மாட்டக் கூடாது என்று நினைக்கிறேன் நான் புன்னகைஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள் :)

Post by M.M.SENTHIL on Fri Aug 22, 2014 10:42 pm

@krishnaamma wrote:எனக்கு ஒன்று சொல்ல வேண்டி இருக்கு இங்கு, பெற்றவர்களே , தங்களின் பெண்குழந்தைக்கு மோசமான உடைகளை வந்கித்தருவதை நிறுத்தவேண்டும்.

அவங்க சொல்வார்கள் " அவ குழந்தை தானே" என்று, ஆனால் அவள் மற்றவர்கள் கண்களுக்கு எப்படித் தெரிவாள் என்று உணர்ந்து ,உடைகள் வாங்கணும்.

"என்னிஷ்டம் அப்படித்தான் நான்போடுவேன் " என்று வம்பில் மாட்டக் கூடாது என்று நினைக்கிறேன் நான் புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1081521

சத்தியமான வார்த்தைகள் அம்மா இவை.. பெற்றோரும் ஒரு காரணமாகிவிட கூடாது, பிள்ளைகள் கெடுவதற்கு..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள் :)

Post by krishnaamma on Sat Aug 23, 2014 10:51 am

@M.M.SENTHIL wrote:
@krishnaamma wrote:எனக்கு ஒன்று சொல்ல வேண்டி இருக்கு இங்கு, பெற்றவர்களே , தங்களின் பெண்குழந்தைக்கு மோசமான உடைகளை வந்கித்தருவதை நிறுத்தவேண்டும்.

அவங்க சொல்வார்கள் " அவ குழந்தை தானே" என்று, ஆனால் அவள் மற்றவர்கள் கண்களுக்கு எப்படித் தெரிவாள் என்று உணர்ந்து ,உடைகள் வாங்கணும்.

"என்னிஷ்டம் அப்படித்தான் நான்போடுவேன் " என்று வம்பில் மாட்டக் கூடாது என்று நினைக்கிறேன் நான் புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1081521

சத்தியமான வார்த்தைகள் அம்மா இவை.. பெற்றோரும் ஒரு காரணமாகிவிட கூடாது, பிள்ளைகள் கெடுவதற்கு..
மேற்கோள் செய்த பதிவு: 1081525

ஆமாம் செந்தில் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள் :)

Post by விமந்தனி on Sat Aug 23, 2014 11:05 am

மிகவும் நன்றி கிருஷ்ணாம்மா! சமீப காலமாய் என்னை குடைந்து கொண்டிருக்கும் விஷயத்திற்கு உங்களது பதிவு தீர்வாக அமையும் என்று நினைக்கிறேன். எவ்வளவு தான் ஒருவருக்கொருவர் ஓப்பனாக பழகினாலும், இந்த மாதிரியான விஷயங்களில் நம் குழந்தையிடம் பேச கொஞ்சம் தயக்கம் எட்டிப்பார்க்க தான் செய்கிறது. இந்த தயக்கத்திற்கு காரணம் நாம் வளர்ந்தவிதமாக கூட இருக்கலாம். எது எப்படியோ சரியான நேரத்தில் எனக்கு நீங்கள் உதவி இருக்கிறீர்கள். பகிர்வுக்கு மீண்டும் நன்றி!

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள் :)

Post by விமந்தனி on Sat Aug 23, 2014 11:08 am

@krishnaamma wrote:எனக்கு ஒன்று சொல்ல வேண்டி இருக்கு இங்கு, பெற்றவர்களே , தங்களின் பெண்குழந்தைக்கு மோசமான உடைகளை வந்கித்தருவதை நிறுத்தவேண்டும்.

அவங்க சொல்வார்கள் " அவ குழந்தை தானே" என்று, ஆனால் அவள் மற்றவர்கள் கண்களுக்கு எப்படித் தெரிவாள் என்று உணர்ந்து ,உடைகள் வாங்கணும்.

"என்னிஷ்டம் அப்படித்தான் நான்போடுவேன் " என்று வம்பில் மாட்டக் கூடாது என்று நினைக்கிறேன் நான் புன்னகை

நானும் இந்த உடை விஷயத்தில் நீங்கள் சொன்னதை தான் கடை பிடிக்கிறேன் கிருஷ்ணாம்மா.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள் :)

Post by யினியவன் on Sat Aug 23, 2014 11:13 am

கண்ணியம் பற்றி பேசி வளர்த்தால்
பெண்ணியம் பேசும் நிலை வாராதுavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள் :)

Post by krishnaamma on Sat Aug 23, 2014 1:55 pm

@விமந்தனி wrote:மிகவும் நன்றி கிருஷ்ணாம்மா! சமீப காலமாய் என்னை குடைந்து கொண்டிருக்கும் விஷயத்திற்கு உங்களது பதிவு தீர்வாக அமையும் என்று நினைக்கிறேன். எவ்வளவு தான் ஒருவருக்கொருவர் ஓப்பனாக பழகினாலும், இந்த மாதிரியான விஷயங்களில் நம் குழந்தையிடம் பேச கொஞ்சம் தயக்கம் எட்டிப்பார்க்க தான் செய்கிறது. இந்த தயக்கத்திற்கு காரணம் நாம் வளர்ந்தவிதமாக கூட இருக்கலாம். எது எப்படியோ சரியான நேரத்தில் எனக்கு நீங்கள் உதவி இருக்கிறீர்கள். பகிர்வுக்கு மீண்டும் நன்றி!

வேறு வழி இல்லை விமந்தினிபுன்னகை நாம், நம் குழந்தைகளோடு பேசித்தான் ஆகணும். முன்பெல்லாம் கூட்டுக்குடும்பம் இருந்த காலத்தில் வீட்டில் யாராவது ஒருவர் 'தூரமாக' ( வீடு விலக்காக' ) இருப்பார்கள், யாராவது பிள்ளை பெறுவார்கள், வீட்டில் இருக்கும் 'நண்டு சிண்டுகள்' இவற்றை எல்லாம் தங்கள் கோணத்திலிருந்து கவனித்துக்கொண்டே இருக்கும்.

நாம் அவர்களையே சில சமையம் ஏவுவோம்............" ஏய் அத்தைய தொடாமல் இந்த தண்ணிய அவங்க சொம்பிலே விடு" , "பிள்ளை பெற்றவள் சாப்பிடும்போது பார்க்காதே " , " குட்டி பாப்பா பால் குடிக்கும்போது பக்கத்தில் நிற்காதே" " குளிக்கும்போது பாக்காதே" இப்படி பல. அப்படியும் அவர்கள் குழந்தைகளை குளிப்பட்டும்போதே பார்த்து ஆண் பெண் பேதங்களையும் கிரஹித்துக் கொள்வார்கள் ..............நான் சொல்ல வருவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் புன்னகை

ஆனால் இன்று தனிக்குடித்தனம், ஒரே குழந்தை. எனவே, அதுக்கு மற்றவர் எப்படி இருப்பார் என்கிற சஸ்பென்ஸ் எப்பவுமே இருக்கும். தப்பித்தவறி 2 குழந்தைகள் இருந்தாலும், எப்பவும் 'டயபருடனேயே' இருக்கும் so , no chance to get knowledge about the other sex . புரிகிறதா நாம் எங்கே தவறுகிறோம் என்று புன்னகை

மேலும் நம் காலத்தில் 'அரச இலை' என்று ஒரு நகை உண்டு இப்போ அது எவ்வளவு பேருக்கு தெரியும்? ம்ம் ????? காலம் இப்படி இருப்பதால், நாம் தான் நம் பெண் மற்றும் பிள்ளைக்கு எடுத்து சொல்லணும். சில சமையம் மிருகங்களை காட்டி சொல்லி, அது போலத்தான் மனிதனும் அந்தாவது நாமும் என்று புரிய வைக்கணும். வேற வழி இல்லை விமந்தினி புன்னகை

இப்போ இருக்கும் பெற்றோருக்கு பொறுப்பு ரொம்ப அதிகமாகிறது புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள் :)

Post by krishnaamma on Sat Aug 23, 2014 1:56 pm

@விமந்தனி wrote:
@krishnaamma wrote:எனக்கு ஒன்று சொல்ல வேண்டி இருக்கு இங்கு, பெற்றவர்களே , தங்களின் பெண்குழந்தைக்கு மோசமான உடைகளை வந்கித்தருவதை நிறுத்தவேண்டும்.

அவங்க சொல்வார்கள் " அவ குழந்தை தானே" என்று, ஆனால் அவள் மற்றவர்கள் கண்களுக்கு எப்படித்   தெரிவாள் என்று உணர்ந்து ,உடைகள் வாங்கணும்.

"என்னிஷ்டம் அப்படித்தான் நான்போடுவேன் " என்று வம்பில் மாட்டக் கூடாது என்று நினைக்கிறேன் நான் புன்னகை

நானும் இந்த உடை விஷயத்தில் நீங்கள் சொன்னதை தான் கடை பிடிக்கிறேன்  கிருஷ்ணாம்மா.

அது தான் நமக்கும் நம்ப குழந்தைக்கும் நல்லது விமந்தினி புன்னகை சமர்த்து நீங்க புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள் :)

Post by krishnaamma on Sat Aug 23, 2014 2:01 pm

@யினியவன் wrote:கண்ணியம் பற்றி பேசி வளர்த்தால்
பெண்ணியம் பேசும் நிலை வாராது

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள் :)

Post by ராஜா on Sat Aug 23, 2014 2:11 pm

சிறந்த பகிர்வு அக்கா .... புன்னகை

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள் :)

Post by krishnaamma on Sat Aug 23, 2014 2:17 pm

@ராஜா wrote:சிறந்த பகிர்வு அக்கா .... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1081766

ஆமாம் ராஜா, பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு .....நெருப்பை மடி இல் கட்டிக்கொண்டிருக்கேன் என்று அந்த கால தாய்மார்கள் சொல்லவா..............அதேதான் இப்பவும் சொல்ல வேண்டி இருக்கு சோகம் இதுக்கு மட்டும் எப்பவும் "காலம் மாறாது" போல இருக்கு சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள் :)

Post by ஜாஹீதாபானு on Sat Aug 23, 2014 2:45 pm

மிகவும் பயனுள்ள பகிர்வு நன்றிமா....

பெண்பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே உடைப் பழக்கத்தை சரியான முறையில் குடுத்தால் அவர்களும் மோசமான உடை அணிய தயங்குவார்கள் .
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29979
மதிப்பீடுகள் : 6983

View user profile

Back to top Go down

Re: இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள் :)

Post by krishnaamma on Sat Aug 23, 2014 6:15 pm

@ஜாஹீதாபானு wrote:மிகவும் பயனுள்ள பகிர்வு நன்றிமா....

பெண்பிள்ளைகளுக்கு சிறு வயதில்  இருந்தே உடைப் பழக்கத்தை சரியான முறையில் குடுத்தால் அவர்களும் மோசமான உடை அணிய தயங்குவார்கள் .

மேற்கோள் செய்த பதிவு: 1081787

ஆமாம் பானு, ஒரு சொல்வடை இருக்கு உங்களுக்கு தெரிந்திருக்கும், அதாவது " முள்ளில் சேலை விழுந்தாலும் சேலை முள்ளில் சேலை விழுந்தாலும் சேலைக்குத்தான் நஷ்டம்" என்று, இதை நான் சொல்வதால் நான் பழங்காலத்தில் இருக்கவேண்டிய மனுஷி என்று நீங்கள் நினைக்கலாம், ( நிறைய பேர் சொல்லிவிட்டார்கள் நான் 1930 -40 களில் இருக்க வேண்டியவள் என்று புன்னகை ) ஆனால் நான் 'பிராக்டிகலாக' சொல்கிறேன்.

எந்த ஆணாவது இன்று வரை அழுதிருக்கானா எனக்கு 'இப்படி' ஆகிவிட்டது என்று அல்லது ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கானா? சொல்லுங்கோ, அவஸ்த்தைப்படுவது எல்லாம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தானே? அப்போ நாம தானே ஜாக்கிரதையாக இருக்கணும். புன்னகை சரிதானே?

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54429
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள் :)

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum