ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன்

Post by தமிழ்நேசன்1981 on Tue Aug 26, 2014 8:53 pm

First topic message reminder :

கடன் தீர்க்கும் ஸ்ரீதோரண கணபதி!

கணபதி வழிபாடு கைமேல் பலன்’ என்பது அவ்வையின் வாக்கு. ஆமாம்! ஒரே ஒரு கணம், கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.

நாம் அவரைத் தேடிப் போக வேண்டியது இல்லை. அவரே, நம்மை நாடி வந்து அருளும் பொருட்டு, நாம் இருக்கும்- புழங்கும் இடங்களுக்கு அருகிலேயே... தெருக்கோடியிலும், மரத்தின் அடியிலும், நதிகளின் கரைகளிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.

அவரது அருட்கருணையை விளக்கும் ஞானநூல்கள் சில, 'இன்னின்ன இடங்களில் அருளும் பிள்ளையாரை வழிபட இன்னின்ன பலன்கள் கிடைக்கும்’ என்றும் விவரிக்கின்றன:

அரச மரத்தடி விநாயகரை வணங்கினால், குழந்தைப் பேறு வாய்க்கும். வன்னி மரத்தடியில் அருளும் விநாயகரை வழிபட கிரக தோஷங்கள் நீங்கும். ஆலமரத்தடி விநாயகரைத் தரிசித் தால் தீய சக்திகள் விலகியோடும். வேப்ப மரத்தடி விநாயகரை வழி படுவதால் நாள்பட்ட நோய்கள் அகன்று நிம்மதி கிடைக்கும். ஆலயங்களின் கோஷ்டத்தில் அமர்ந்திருக்கும் விநாயக ரூபத்தை வழிபட்டால், சகல தெய்வங்களின் திருவருளும் ஒருங்கே கிடைக் கும் என்கின்றன புராணங்கள். இந்த வரிசையில், ஸ்ரீதோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், 'ருணம்’ எனும் கடன் தீரும்!

யார் இந்த தோரணர்? இவர் எங்கு அமர்ந்து அருள்பாலிப்பார்?!

சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத் தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப் புறமாக சந்நிதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், ஸ்ரீதோரண கணபதி. ஸ்ரீதோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன.

சக்தி மேகல்வாசம் சகல கல்யாண மூர்த்திம்
அங்குச பாச ஹஸ்தம் கிரீட மகுட தாத்ரீம்
அஷ்ட லக்ஷ்மீ சகிதம் தோரண கோபுர நேத்ரம்
ருணமோசன கணேசம் நௌமி ஸதா ப்ரசன்னம்!

மூல ஆலயத்திலிருந்து பார்க்கும்போது, இவர் அமர்ந்திருக்கும் இடம் பிரம்ம ஸ்தானமாக அமைவதால், கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். தாமரை பீடத்தில் அமர்ந்தவராக, அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமிகடாட்சத்தைக் கொடுக்கிறார்!

தோரண கணபதியை வழிபடும்முறை:

மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி வழிபாடு கை கொடுக்கும்.

செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்... குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அத்துடன் கணபதியின் மேகலை - பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.

ஸ்ரீதோரண கணபதி மந்திரம்:

'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.

மேலும், ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தோரண கணபதி சந்நிதிக்குச் சென்று, அவருடைய சந்நிதிக்குப் பின்புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, ஐவகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களைப் பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும்.

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில் ஸ்ரீசாரதாம்பாள் சந்நிதியில் காப்பு கணபதியாக அருள்கிறார் ஸ்ரீதோரண கணபதி. தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வடதேசத்தில் வாரணாசி ஆகிய தலங்களில் தோரண கணபதி வழிபாடு உண்டு.

சென்னையில் குன்றத்தூர் முருகன் கோயில் (மலைக்கு) அருகில், திருநீர் மலை சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீசக்தி கார்த்தியாயினி ஆலயம். இங்கே கோபுரத்தின் அருகிலுள்ள தோரண வாயிலில் காப்பு தெய்வமாக அருள்கிறார் ஸ்ரீதோரணகணபதி.

இங்கே அம்பிகையைத் தரிசிக்க வரும் பக்தர்கள் ஸ்ரீதோரண கணபதியையும் வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.

இந்தக் கோயிலில் மாதம்தோறும் வளர்பிறை சதுர்த்தியில் மாலை 6 மணிக்கு, கடன் நிவாரண ஹோமம் மற்றும் விசேஷ பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெறுகின்றன. சங்கடஹர சதுர்த்தி திருநாட்களில், அன்று மாலை 6 மணியளவில்...வலம்புரிச் சங்கு மூலம் கணபதி பெருமானுக்கு பாலபிஷேகம் நடக்கும். அத்துடன் விசேஷ மூலமந்திர திரிசதி நாம வழிபாடும் நடைபெறுகிறது. சாதாரண நாட்களிலும் இங்கு வரும் பக்தர்கள் விநாயகர் திருமுன் அமர்ந்து 'பிரசன்ன ஸ்துதி’யை பாராயணம் செய்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
ப்ரசன்ன ஸ்துதி

ஆலயங்களுக்குச் சென்று வழிபட இயலாத நிலையில், வீட்டிலேயே ஸ்ரீதோரண கணபதியை மனதால் தியானித்து, அகஸ்தியர் நாடி நூலில், ப்ரசன்ன காண்டம் பகுதியில் உள்ள 'ஸ்ரீதோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதி’யை தினமும் மூன்றுமுறை படித்துவர, கடன் பிரச்னைகள் யாவும் நீங்கும். வாழ்வில் வறுமைகள் அகன்று வளம் பெருகும்.

சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்
முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்
காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!
தோரண கணபதியே! தோன்றிடுக என் முன்னே (தோரண)

திருமகள் அருளிருந்தும் திரவியங்கள் சேராமல்
திருவிருந்தும் வாழ்வுதனில் ஒளி இன்றி நிற்கின்றோம்
கடன்பட்டுக் கலங்கும் நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே
உடன் வந்தே உபாயங்கள் காட்டிடுவாய் கரிமுகவாய்!

பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்
கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே
கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்
விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக

மாதுளை மாங்கனியும் கொவ்வை என ஐங்கனியும்
காதினிலே சேதி சொல்லி செவ்வாய் மதிசதுர்த்தியிலும்
சேரும் இரவி காலத்திலும் மலர்தூவிப் படைத்திட்டோம்
தோரணணே! செவ்வேளின் மூத்தவனே! செவி சாய்ப்பாய்!

பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவா
தோரண வாயில் அமர்ந்து துவள்வோரைக் காப்பவரே
சக்தியின் மேகலையில் புத்தி தரும் புகழ்மகவே!
எத்திக்கும் கடன்பட்டோர் எதிர்வந்து நிற்கையிலே!

சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல்
இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே!
குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க்
கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்!!
தோரண கணபதியே தோன்றிடுக என்முன்னே!!!நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down


Re: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன்

Post by தமிழ்நேசன்1981 on Thu Aug 28, 2014 7:11 am

நீலகண்ட பிள்ளையார் - பேராவூரணி

பிரணவ வடிவான பிள்ளையாரை வழிபட்டுவிட்டு, எந்தவொரு காரியத்தையும் துவங்க, வெற்றி நிச்சயம் என்பது புராணங்களின் அறிவுரை. தொழில், உத்தியோகம் என்றில்லை... கல்வியிலும் சிறக்க, கணபதியை வழிபட வேண்டுமாம். 'யானையைப் போல் ஞாபக சக்தி மிகுந்த ஜீவன் வேறில்லை. எனவே ஆனைமுகனை வணங்கினால், ஞாபக சக்தி அதிகரிக் கும்; பரீட்சையில் வெற்றி மட்டுமின்றி, அதிக மதிப்பெண்களும் கிடைக்கும்' என்பது பெரியோர்கள் வாக்கு. இதை மெய்ப்பிக்கிறார் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார்.

தஞ்சாவூர் மாவட்டம்- பட்டுக்கோட்டையை அடுத்துள்ள ஊர் பேராவூரணி. இங்கு குடிகொண்டிருக்கும் நீலகண்ட பிள்ளையார், இந்தப் பகுதி மாணவர் களின் கண்கண்ட தெய்வம்! பொதுத் தேர்வு காலத்தில், 'ஹால் டிக்கெட்'டை இவரின் திருவடியில் வைத்து வணங்கி எடுத்துச் செல்வதால், இவரை 'ஹால் டிக்கெட் பிள்ளையார்' என்றும் செல்லமாக அழைக்கின்றனர்.

இவர், துவக்கத்தில் சிறிய கொட்டகையில் குடியிருந்தாராம். துளசேந்திரன் என்ற மன்னனின் அமைச்சர் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி. அவர் ஒருமுறை இந்த வழியே வந்தபோது, நீலகண்ட பிள்ளையாரை வழிபட்டு, விபூதி வாங்கிப் பூசிக்கொள்ள... மறுநாளே நோய் குணமானதாம். இதையறிந்து சிலிர்ப்படைந்த மன்னர், இந்தப் பிள்ளையாருக்கு கோயில் எழுப்பினாராம். 'உருவத்தால் ஸ்ரீவிநாயகர்; நீலகண்டன் எனும் திருநாமத் தால் ஈசன்; சக்திபீடத்தில் அமைந்த தலம் என்பதால் உமையவளின் அம்சம்... ஆகவே, சக்தி வாய்ந்தவர் இவர்' என்கின்றனர் பக்தர்கள்.

இவருக்கு அருகம்புல் சார்த்தி, 'பாலும் தெளிதேனும்' பாடலைப் பாடி, தேர்வு எண் (ஹால் டிக்கெட்), பேனா ஆகியவற்றை திருப்பாதத்தில் வைத்து ஒன்பது முறை வலம் வந்து வழிபட, தேர்வில் வெற்றி உறுதி என்பது நம்பிக்கை!நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன்

Post by தமிழ்நேசன்1981 on Thu Aug 28, 2014 10:39 am

மாமன்னன் ராஜராஜன் கட்டிய விநாயகர் ஆலயம்!
தஞ்சை அருகேயும்... பிள்ளையார்பட்டி!


காரைக்குடி என்றாலே பிள்ளையார்பட்டி நினைவுக்கு வரும்; அங்கே குடிகொண்டிருக்கும் ஸ்ரீகற்பகவிநாயகர் திருக்கோயில் நம் கண்முன்னே வந்து நிற்கும். அதே போல் தஞ்சாவூர் என்றதும் நம் நினைவுக்கு வருவது, பெருவுடையார் கோயில் எனப்படும் பெரியகோயில்தான்! இங்கே, தஞ்சாவூருக்கு அருகில் பிள்ளையார்பட்டி எனும் ஊர் உள்ளது என்பதும், இங்கே ஸ்ரீவிநாயகருக்கு அழகிய ஆலயம் அமைந்துள்ளதும் எத்தனைபேருக்குத் தெரியும்?!

தஞ்சை ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயத்துக்கு இது ஆயிரமாவது வருடம். தமிழக அரசு சார்பில் பிரமாண்ட விழா எடுக்கும் இந்த வேளையில், சுமார் 1,017 வருடங்களுக்கு முன்பு, சோழச் சக்கரவர்த்தி ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பிள்ளையார் கோயிலையும் அறிவோமா?!

தஞ்சை பெரியகோயிலில் இருந்து மருத்துவக்கல்லூரி வழியாக வல்லம் செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பிள்ளையார்பட்டி. இந்த ஊரின் மையத்தில், கோயில்கொண்டிருக்கிறார் விநாயகப் பெருமான். இந்த ஆலயத்தில், பிள்ளையாரின் திருநாமம் - ஸ்ரீஹரித்ரா விநாயகர்.

சுமார் 8 அடி 4 அங்குல உயரமும், 4 அடி 2 அங்குல அகலமும் கொண்டு, கிட்டத்தட்ட மூன்றரை டன் எடையுடன் கொழுகொழுவெனக் காட்சி தருகிறார் ஸ்ரீஹரித்ரா விநாயகர். தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டும் எண்ணத்தில் இருந்த ராஜராஜசோழன், தற்போதைய கர்நாடக மாநிலத்தில் இருந்து இந்த விநாயகரின் கல் விக்கிரகத்தை எடுத்து வந்தாராம். வல்ல தேசத்தை அடுத்து வரும் வழியில், வீரர்கள் சற்றே இளைப்பாறுவதற்காக, பிள்ளையாரைக் கீழே இறக்கி வைத்தனராம். பிறகு, வண்டியில் ஏற்ற முனைந்தபோது, விக்கிரகத்தை அசைக்கக்கூட முடியவில்லையாம்!

இதையறிந்த ராஜராஜசோழன், உடனே அங்கே விரைந்து வந்தார். ''இதுவும் நல்லதுக்குத்தான்! பெரியகோயிலின் கன்னிமூலையில் கணபதிக்கு ஆலயம் அமைத்துவிடுவோம்'' என்று சொல்லி, அதன்படி கோயிலும் கட்டி, அந்த ஊருக்கு பிள்ளையார்பட்டி எனப் பெயரும் சூட்டினாராம் (ராஜராஜ சோழனின் கனவில் விநாயகப் பெருமானே வந்து, இங்கே கோயில் கட்டச் சொன்னதாகத் தெரிவிக்கிறது ஸ்தல வரலாறு).

தந்தைக்குப் பெருவுடையார் கோயில் கட்டிய அதே ராஜராஜசோழன், மகன் விநாயகருக்கும் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்தார். பிறகு, மகனைக் காண ஸ்ரீபிரகதீஸ்வரரே இந்த ஆலயத்துக்கு வந்து சென்றார் என்பது நம்பிக்கை! இதற்காகவே, விநாயகர் சந்நிதிக்கு அருகிலேயே சிவலிங்க மூர்த்தத்துக்கும் சந்நிதி அமைந்துள்ளது.

சங்கடஹர சதுர்த்தி நாளில், மாலை வேளையில் இங்கு வந்து, விநாயகரை வணங்கி, சிதறுகாய் அடித்துப் பிரார்த்தித்தால், மாங்கல்ய வரம் கிடைக்கும்; குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம்!

தஞ்சை- பிள்ளையார்பட்டி விநாயகரை வணங்குங்கள்; வினைகள் அனைத்தையும் தீர்த்தருள்வார், பாருங்கள்!நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன்

Post by தமிழ்நேசன்1981 on Thu Aug 28, 2014 2:19 pm

பீமனுக்கு வாள் தந்த பிள்ளையார்!

கர்நாடக மாநிலம், உடுப்பியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது கும்பாசி கிராமம். வறட்சி மிகுந்த இந்தப் பகுதிக்கு சீடர்களுடன் வந்த அகத்தியர், இங்கே மழை பெய்து, பூமி குளிர வேண்டும் என மிகப் பெரிய யாகத்தில் ஈடுபட்டார்.

கும்பாசுரன் என்பவன் யாகத்தைத் தடுக்க முயற்சித்தான். இதையறிந்த தருமர், தம்பி பீமனை அழைத்து, அசுரனை அழிக்கும்படி ஆணையிட்டார். ஆனால், பீமனால் கும்பாசுரனை வெல்ல முடிய வில்லை. அப்போது... 'கணபதியை வணங்கு; அசுரனை அழிக்கும் பலம் பெறுவாய்!’ என்று அசரீரி கேட்டது. அதன்படி விநாயகரை தியானித்து பீமன் வழிபட, எதிரில் உள்ள குன்றின் மீது யானையின் வடிவாய் காட்சி தந்தார் பிள்ளையார்; பீமனுக்கு வாள் ஒன்றையும் தந்து ஆசீர்வதித்தார்.

அதையடுத்து, அசுரனை அழித்தான் பீமன். அகத்தியரின் யாகமும் தடையின்றி நடைபெற்றது. தேசம் செழித்தது. துவாபர யுகத்தில் 'கும்பாசி’ எனும் பெயருடன் திகழ்ந்த இந்தத் தலம், தற்போது 'ஆனே குட்டே’ எனப்படுகிறது. ஸ்ரீவிநாயகர் யானையாகக் காட்சி தந்த குன்றும், அவரின் கோயிலும் பெரிய வழிபாட்டுத் தலங்களாக திகழ்கின்றன.கர்நாடக மாநிலத்தின் ஏழு முக்தி ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இங்கே திருமணம், குழந்தைக்கு பெயர் சூட்டல் ஆகிய வைபவங்கள் நடந்தால், ஆயுசு முழுவதும் விநாயகர் அவர்களைக் காத்தருள்வார் என்பது ஐதீகம்!

மலையடிவாரத்தில் ஸ்ரீஹாரிலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு, ஸ்ரீபார்வதிதேவியின் மடியில் கிடக்கும் குழந்தை விநாயகர் திருமேனி, அழகு! மலையில் ஸ்ரீஸித்தி விநாயகரின் அற்புதத் தரிசனம். 'என்னைச் சரணடைந்தால், உங்களைக் காத்தருள்வேன்’ என அடியவர்களுக்குச் சொல்லும் பாவனையில், அலங்கார திருக்கோலம் காட்டுகிறார் பிள்ளையார். இந்த ஐந்துகரத்தானை வழிபட... பீமனுக்கு அருள்புரிந்தது போன்று, நற்காரியங்கள் நடந்தேற நமக்கும் துணை நிற்பார்!நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன்

Post by தமிழ்நேசன்1981 on Thu Aug 28, 2014 2:21 pm

ராஜயோகம் கைகூடும்!

ராஜகணபதியை மனதாரப் பிரார்த்தித்தால், கல்யாண மாலை விரைவில் கிடைக்கும்; சீரும் சிறப்புமாக வாழலாம்’ என்பது ஈரோடு மாவட்ட பக்தர்களின் நம்பிக்கை.

ஈரோடு மாவட்டத்தில் உள்ளது பெருந்துறை. இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள ஆசிரியர் குடியிருப்புப் பகுதியில் ராஜபரிபாலனம் செய்தபடி, அனைவருக்கும் அருளும் பொருளும் வழங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீராஜகணபதி.

துவக்கத்தில் சிறியதொரு கொட்டகையில் இருந்து, தரிசனம் தந்து கொண்டிருந்தார் ஸ்ரீராஜ கணபதி. பிறகு, இவரின் பேரருளால் வாழ்வில் சகல ஐஸ்வரியங்களையும் பெற்று, வாழ்வில் உயர்ந்த அன்பர்கள் பலரும் ஒன்றுசேர்ந்து திருப்பணிகள் மேற்கொள்ள... தற்போது அற்புதமாக, அழகுறத் திகழ்கிறது ஆலயம்.

இந்த வழியே செல்லும் பேருந்துகள் அனைத் தும் கோயில் வாசலுக்கு அருகிலேயே நின்று செல்வது வசதியாக உள்ளது என்கின்றனர் பக்தர்கள்.

ஸ்ரீராஜகணபதிக்கு தினமும் பாலபிஷேகம் செய்து பிரார்த்திக்கும் பக்தர்கள் ஏராளம். அமாவாசை மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாட்களில், இவருக்கு விசேஷ அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நாளில், ஸ்ரீராஜகணபதிக்கு நைவேத்தியம் படைத்து வணங்கினால், வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம்; உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படுமாம்.

திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், இங்கு வந்து ஸ்ரீராஜகணபதிக்கு மாலை சார்த்தி மனதாரப் பிரார்த்தித்தால், விரைவில் கல்யாண மாலை தோள் சேரும்; இல்லறம் சிறக் கும் என்பது நம்பிக்கை. இதனால் இவருக்கு கல்யாண கணபதி என்றும் திருநாமம் உண்டாம்!

இந்தக் கோயிலில் ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபால முருகன் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இங்கேயுள்ள ஸ்ரீவிஷ்ணு துர்கைக்கு ராகுகால சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இவளை வணங்கித் தொழுதால், எதிரிகளின் தொல்லை ஒழியும்; வீண் பயத்தில் இருந்து விடுதலை பெறலாம். வியாழக்கிழமை களில் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு விசேஷ வழிபாடு சிறப்புற நடைபெறுகிறது. இவரை வணங்கினால், கல்வி-கேள்வி களில் சிறந்து விளங்கலாம்; ஞாபக சக்தி அதிகரிக்கும்!

ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி திருநாளில், சந்தனக் காப்பு அலங்காரத்தில் ஸ்ரீராஜ கணபதியைக் காணக் கண்கோடி வேண்டும். எண்ணற்ற பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதால், கொழுக்கட்டைகளை நைவேத்தியம் செய்து, ஸ்ரீராஜகணபதியை வணங்கிச் செல்வார்கள். இந்த நாளில் மகா கணபதி ஹோமம், பிரமாண்டமாக நடைபெறும். இந்த யாகத்தில் பங்கேற்று ஸ்ரீராஜகணபதியைத் தரிசித் தால், ராஜயோகம் கூடி வரும்; நல்லன வெல்லாம் நம்மைத் தேடி வரும், என்கின்றனர் பக்தர்கள்!

அதேபோல், தைத் திருநாளுக்கு மறுநாள், ஸ்ரீகணபதிக்கு விசேஷ அலங்காரமும் ஹோமமும் நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் படையலிட்டு வழிபடுவார்கள். அப்போது வைக்கும் கோரிக்கைகள் யாவற்றையும் தட்டாமல் நிறைவேற்றித் தந்தருள்வாராம் ஸ்ரீராஜகணபதி.

நீங்களும் ஸ்ரீராஜகணபதியை தரிசித்து வாருங்கள். உங்கள் வாழ்விலும் ராஜயோகம் கைகூடும்!நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன்

Post by தமிழ்நேசன்1981 on Thu Aug 28, 2014 2:22 pm

அம்மையப்பனுடன் ஆனைமுகன்!


தென்னாடுடைய சிவனார் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார் என்பது தெரியும். அதில், நரியைப் பரியாக்கிய சம்பவமும் ஒன்று என்பதையும் அறிவோம். சிவபெருமான், நரியைப் பரியாக்கிய அந்த வனப்பகுதிதான், மதுரையில் இன்றைக்கு நரிமேடு என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள விநாயகரை, காட்டுப்பிள்ளையார் என அழைக்கின்றனர், பக்தர்கள்.

மதுரை நரிமேடு பகுதியில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில். முன்பொரு காலத்தில் சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியருளினாராம் ஸ்ரீகணபதி. இந்தக் கோயில் கருவறையில், அம்மை ஸ்ரீமீனாட்சியுடனும் அப்பன் ஸ்ரீசுந்தரேஸ்வரருடனும் திருக்காட்சி தருகிறார் ஸ்ரீகாட்டுப்பிள்ளையார்.

பணி நிமித்தம் காரணமாக, பிறந்த ஊரில் பெற்றோரை விட்டுவிட்டு, வெளியூரில் வேலை பார்க்கிற அன்பர்கள் இங்கு வந்து, அம்மையப்பனுடன் தரிசனம் தரும் ஸ்ரீகாட்டுப்பிள்ளையாரை வணங்கி வழிபட்டால், விரைவில் ஒன்றுசேர்ந்து வாழ்வர் என்பது ஐதீகம்!
http://www.vikatan.com/sakthi/2011/09/ywvlnj/images/p78a.ஜபக்

ஸ்ரீகாட்டுப்பிள்ளையாரை சங்கட ஹர சதுர்த்தி நாளில் வந்து வணங்கி, வஸ்திரம் சார்த்தி, அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் தேடிவரும் என்று சொல்லிப் பூரிக்கின்றனர் பக்தர்கள்.

சிவனாருக்கும் அம்பிகைக்கும் நந்தி வாகனங்கள் இருப்பது விசேஷ அமைப்பு! ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீமாரி யம்மன், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீகாலபைரவர் ஆகியோருக் கும் சந்நிதிகள் உள்ளன.

விநாயக சதுர்த்தி நாளில், அம்மையப்பனுடன் வீற்றிருக்கும் ஸ்ரீகாட்டுப்பிள்ளையாரை வணங்கு வோம்; வாழ்வாங்கு வாழ்வோம்!நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன்

Post by தமிழ்நேசன்1981 on Thu Aug 28, 2014 2:23 pm

வாழ்வை உயரச் செய்வார் ஸ்ரீபாதாள விக்னேஸ்வரர்!


சிங்காரச் சென்னையின் பல பகுதிகள், அந்தக் காலத்தில் வயலும் வாழையுமாகப் பச்சைப் பசேலெனக் காட்சி அளித்தது. குளங்களும், ஏரிகளும் நிறைய உண்டு!

ஒருநாள், அன்பர் ஒருவர் குளத்தில் இறங்கிக் குளிக்கும்போது, காலில் ஏதோ இடறியது. அதை எடுக்கலாம் என்றால், நகர்த்தக் கூடமுடியவில்லை! அருகில் இருந்தவர்களின் துணையுடன் அதனை தண்ணீருக் குள்ளிருந்து வெளியே எடுத்துப் பார்க்க... அது, செம்பினால் ஆன விநாயகர் விக்கிரகம்! பக்தியுடன் விநாயகரை எடுத்து வந்து, வயல்வெளியில் பிரதிஷ்டை செய்து, சிறிய கோயிலும் கட்டி வழிபடத் துவங்கினர். இவருக்கு ஸ்ரீபாதாள விக்னேஸ்வரர் என்று திருநாமமும் சூட்டப்பட்டது.

நாளடைவில்... விளைச்சல் பூமி, சிறுசிறு ஊர்களாக மாறிப்போனது. மடிப்பாகம், உள்ளகரம், புழுதிவாக்கம் ஆகிய 3 ஊர்களுக்கும் பொதுவாக இந்த விநாயகர் வீற்றிருப்பதால், இவரை வணங்கிவிட்டே, பொழுதைத் துவக்குகின்றனர், பக்தர்கள்! 1965-ல் கோயில் விரிவு படுத்தப்பட்டது. நடிகர் சிவாஜிகணேசன், இந்த விநாயகர் மீது கொண்ட பக்தியால், 'ஆலய மணி’யை வழங்கி, வழிபட்டுள்ளார். சென்னை நங்கநல்லூருக்கு அருகில் உள்ளது உள்ளகரம் - புழுதிவாக்கம். இங்குதான் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபாதாள விக்னேஸ்வரர். விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள், கும்பாபிஷேகம் செய்த ஆண்டு விழா என்பதால், வருஷாபிஷேகம், அன்னதானம் என ஆலயம் களை கட்டும். விநாயகர் சதுர்த்தியன்று, அலங்கார ஆராதனை களுடன் வழிபாடுகள் அமர்க்களப்படுமாம்!

இங்கே, ஸ்ரீகாமாட்சி அம்மன் மற்றும் நவக்கிரகங்களும் உள்ளனர். ஸ்ரீபாதாள விக்னேஸ்வரருக்கு அருகம்புல் மாலை சார்த்தி, கொழுக்கட்டை அல்லது அவல் பொரி அல்லது சுண்டல் நைவேத்தியம் படைத்து, மனதாரப் பிரார்த்தித்தால், நினைத்த காரியங்கள் யாவும் இனிதே நடந்தேறும்; பள்ளத்தில் இருக்கிற நம்மை உயரத்தில் கொண்டு வந்து, நம் வாழ்க்கையை உயர்த்துவார் என்றுப் போற்றுகின்றனர், பக்தர்கள்!நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன்

Post by தமிழ்நேசன்1981 on Thu Aug 28, 2014 2:24 pm

நவக்கிரக தோஷம் போக்கும் ஸ்ரீநவசித்தி விநாயகர்!

நவசித்தி விநாயகரைத் தரிசித்து வணங்கினால், நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகிவிடும்; இல்லத்தில், நன்மைகள் அனைத்தும் குடியேறும் என்கின்றனர், பக்தர்கள்.

சென்னை- வேலூர் சாலையில் உள்ளது வாலாஜாபேட்டை. இங்கிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்னை கிராமம் (அடிக்கடி பேருந்து வசதி உண்டு). இந்த ஊரில் இருந்து சுமார் 2 கி.மீ. பயணித்தால், ஒட்டனேரியை அடையலாம். தற்போது 'விநாயகபுரம்’ என்று அழைக்கப்படுகிற இந்த ஊரில்தான், அருளையும் பொருளையும் அள்ளித் தரும் ஸ்ரீநவசித்தி விநாயகர் கோயில்கொண்டிருக்கிறார்.

ஆந்திர மாநிலம் சித்தூருக்கு அருகில் உள்ள ஊர் என்பதாலோ என்னவோ, ஆந்திர கோயிலைப் போலவே அமைந்துள்ளது ஸ்ரீநவசித்தி விநாயகர் ஆலயம். உள்ளே, மகா மண்டபத்தில் விநாயகப்பெருமானின் 32 திருவுருவங்களையும் தரிசிக்கலாம். அதையடுத்து, எங்கு திரும்பினாலும் விநாயகரின் அற்புதத் தரிசனம் சிலிர்க்க வைக்கிறது. கருவறையில், ஸ்ரீநவசித்தி விநாயகர்.

இவரை மனதாரப் பிரார்த்தித்தால், மனக் குழப்பங்கள் யாவும் விலகும்; புத்தியில் தெளிவு பிறந்து, உற்சாகத்துடன் செயலாற்றலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கருவறைச் சந்நிதியில், மூலவருடன் சுயம்புவாகத் தோன்றிய இரண்டு விநாயகப் பெருமானையும் தரிசிக்க முடிகிறது. இதில், நடுவில் சிவலிங்க வடிவினராக காட்சி தரும் சுயம்பு மூர்த்தத் தில் ஒரு விசேஷம் உண்டு!

இந்த மூர்த்தத்தின் நடுப்பாகத்தைக் கண்டால் ஸ்ரீவிநாயகரின் திருமுகமும், மேல் பாகத்தைக் கவனித்தால், நாகம் ஒன்று படமெடுத்த நிலையில் இருப்பது போலவும் தோன்றும் என்று பூரிப்புடன் விவரிக்கின்றனர் பக்தர்கள். ஆகவே, இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட ராகு-கேது தோஷங்களும் நிவர்த்தியாகும் எனும் நம்பிக்கையுடன் சுற்று வட்டார மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து வழிபட்டுச் செல் கிறார்கள்.

சங்கடஹர சதுர்த்தி நாளில், ஸ்ரீநவசித்தி விநாயகருக்குச் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறுகின்றன. அந்தத் திருநாளில் இங்கு வந்து ஸ்ரீநவசித்தி விநாயகரை மனதாரப் பிரார்த்தித்தால், தீராத வினைகளும் தீரும்; நினைத்த காரியங்கள் யாவும் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம்.

வருடந்தோறும் விநாயக சதுர்த்தி நன்னாளில், இங்கு சிறப்பு பூஜைகள் அமர்க்களப்படுமாம். அந்த நாளில், வேலூர் மாவட்டம் மற்றும் ஆந்திராவின் சித்தூர் முதலான பல இடங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் திரண்டு வந்து, நைவேத்தியங்கள் படைத்து, ஸ்ரீநவசித்தி விநாயகரை தரிசித்துச் செல்கின்றனர்.நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்-சக்தி விகடன்

Post by krishnaamma on Thu Aug 28, 2014 3:01 pm

நல்லா இருக்கு, பொறுமையாய் தான் படிக்கணும் நேசன், பகிர்வுக்கு நன்றி !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum