ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 ayyasamy ram

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எபோலா - செய்தித் தொகுப்புகள்

View previous topic View next topic Go down

எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Thu Aug 28, 2014 4:11 am

சியரா லியோனில் எபோலா நோய்க்கு 3-வது டாக்டர் பலி

லைபீரியா, நைஜீரியா, கினியா குடியரசு, சியரா லியோன் உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ‘எபோலா’ என்னும் கொடிய நோய் வேகமாக பரவி வருகிறது. இதன் கோரப்பிடியில் சிக்கி 1,400–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

சுகாதார ஊழியர்களும் இந்த நோய்க்கு தப்பவில்லை. இதுவரை 120-க்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் எபோலாவின் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் சியரா லியோனில் இந்த நோய்க்கு 3-வது டாக்டர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அதிபரின் மூத்த ஆலோசகர் தெரிவித்துள்ளார். கெனிமா நகரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றியபோது எபோலா நோயால் பாதிக்கப்பட்ட டாக்டர் சாகர் ரோஜர்ஸ், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக அவர் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Thu Aug 28, 2014 4:11 am

லைபீரியாவில் எபோலா நெருக்கடி: பணிக்குத் திரும்பாத அமைச்சர்கள் பதவி நீக்கம்

கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தென்படத் துவங்கிய எபோலா விஷத் தொற்றுநோய் அண்டைநாடுகளான லைபீரியா, சியரா லியோனை மிகவும் பாதித்துள்ளது. 2600 பேருக்குமேல் பாதிக்கப்பட்டுள்ள இந்தக் காய்ச்சலினால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1427 என்று உலக சுகாதாரக் கழகத்தின் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து கடந்த 6ஆம் தேதியன்று அவசரநிலையைப் பிரகடனம் செய்த லைபீரிய நாட்டின் அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப், வெளிநாடுகளில் இருக்கும் அமைச்சர்களை ஒரு வாரத்திற்குள் நாடு திரும்பும்படி உத்தரவிட்டிருந்தார். தங்கள் நாட்டின் நிலைப்பாட்டிற்கு அசாதாரண நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அவர் குறிப்பிட்டவண்ணம் பணிக்குத் திரும்பாத அமைச்சர் மட்டப் பதவிகளில் இருப்பவர்கள் அல்லது அதற்கு இணையான சீனியர் மற்றும் ஜூனியர் நிர்வாக இயக்குனர்கள், துணை/உதவி இயக்குனர்கள், அதற்கு சமமான பதவிகளில் இருப்பவர்கள், கமிஷனர்கள் போன்றோர் இன்று அவர்களின் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எத்தனை அமைச்சர்கள் இவ்வாறு நீக்கப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், துணை அமைச்சர்கள், சீனியர் அதிகாரிகள் போன்றோரே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், கேபினெட் அமைச்சர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்றும் அரசாங்க உள்மட்டப் பணியில் இருக்கும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதனிடையில் எபோலா நோயினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மூன்று நாடுகளுடன் அண்டை நாடான ஐவரி கோஸ்டிலும் மொத்த பொருளாதார உற்பத்தி 1 முதல் 1.5 சதவிகிதம் வரை குறையக்கூடும் என்று ஆப்பிரிக்க அபிவிருத்தி வங்கி நேற்று எச்சரித்துள்ளது. விவசாயத்தைப்பற்றி மக்கள் கவலைப்படத் தொடங்கவில்லை என்றால் உணவு நெருக்கடி தோன்றக்கூடும். இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளின் மீதான முதல் நேரடித் தாக்கம் இதுவாக இருக்கும் என்று வங்கியின் தலைவர் டொனால்ட் கபேருகா தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Tue Sep 02, 2014 1:04 am

சுகாதார அதிகாரிகளுக்கும் எபோலா பாதிப்பு: 240 மருத்துவர்களுக்கு வைரஸ் தாக்கு

நைஜீரியாவில் எபோலா நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதுவரை இந்நோயால் 120 சுகாதார அதிகாரிகள் பலியான நிலையில், மேலும் 240 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் தென்படத்துவங்கிய எபோலா விஷத் தொற்று நோய் அதன் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வரிசையாக பரவியது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, ஆகஸ்ட் 26- ஆம் தேதி வரை இந்நோய்க்கு 1,552 பேர் பலியாகி உள்ளனர். 3,062 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் சுகாதார அதிகாரிகளும் நோயால் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. நைஜீரியாவில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு எபோலா தாக்கம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது போல, இதுவரையிலும் 120 சுகாதார அதிகாரிகள் எபோலாவால் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 240 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

இதனிடையே எபோலா வைரஸ் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில், மிக வேகமாகப் பரவி வருகிறது என்றும், அதை கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் எல்லாமே மிக மெதுவாகவே நடக்கின்றன என்றும், உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இந்நோய் தொற்று, கடந்த 40 ஆண்டுகளில், இல்லாத அளவுக்கு, உலகில் மிகப்பெரிய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உருவாகி உள்ளது என்றும், இது நீடிக்குமானால், மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்றும், அந்த அமைப்பு தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Tue Sep 02, 2014 1:16 am


எபோலா நோய் மருந்துவ சிகிச்சையில் குரங்கு பிழைத்தது

கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரஸ் கொல்லி மருந்தை கண்டுபிடித்து, அதனை குரங்குகளுக்கு கொடுத்து பரிசோதனை செய்து வெற்றி கண்டுள்ளனர்.

தற்போது உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் ஒரு வார்த்தை என்றால் அது கண்டிப்பாக எபோலா வைரஸ் என்றால் அது மிகையாகாது.

முதலில் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் இந்நோயால் பலர் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தனர். பின் இந்நோய் படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவியது.

இதனால் விமான நிலையங்களில் மருத்துவர் குழுவை நியமித்து பரிசோதனை செய்த பிறகே வெளிநாட்டு பயணிகளை அவரவர் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில் கனடா நாட்டின் ஆய்வு கூடம் ஒன்றில் எபோலா பாதிப்படைந்த 18 குரங்குகளுக்கு நோய் குணப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இக்காரணத்தால் மனிதர்களுக்கும் இம்மருந்து பயணடைந்து உயிரை காப்பாற்றும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Sat Sep 06, 2014 12:28 am


எபோலா பலி எண்ணிக்கை 1900 ஆக அதிகரிப்பு

மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜீரியா, கினியா போன்ற நாடுகளில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது, இதுவரை சுமார் 1900 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்நோயை முற்றிலும் ஒழிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

உலக சுகாதார நிறுவன தலைவர் மார்க்ரெட் ஷான் கூறியது,

எபோலா நோய்க்கு இதுவரை 1900 பேர் பலியாகி உள்ளனர். சியாரா லியோன், லைபீரியா பகுதிகளில் இந்நோயின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது.

இந்நோயை கட்டுப்படுத்த விரைவில் ஆலோசனை கூட்டம் ஜெனீவாவில் நோய் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நோய் கட்டுப்பாட்டு நிபுணர்களை கொண்ட ஆலோசனை கூட்டம் விரைவில் ஜெனீவாவில் நடக்கவிள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by டார்வின் on Sat Sep 06, 2014 3:27 pm

நான் நைஜீரியாவில்தான் இருக்கிறேன் ....இங்கு இந்நோய் தொற்று குறைவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.....
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Sat Sep 13, 2014 5:36 am

எபோலோ வைரஸ் நோய் தாக்குதல் பலியானவர்கள் எண்ணிக்கை 2400-ஆக உயர்வு

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலோ வைரஸ் நோய் தாக்குதலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,400 ஆக உயர்ந்து உள்ளது. சுமார் 4784 பேர் இந்த நோய் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் எதிர்பாத்ததற்கும் அதிகமாக இந்த நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு இயக்குனர் மார்கெரட் ஷான் தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர் கூறும் போது இந்த வைரஸ் நோயால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வருகிறது. தேசிய சுகாதார பணியாளர்களை அனுப்பி வைக்கும்படி சர்வதேச உதவியை நாடி உள்ளோம்.இந்த நோய் பாதித்துள்ள குனியா,சீரா,லியோன்,லிபிரியா ஆகிய நாடுகளுக்கு மருத்துவ பொருடகள் மற்றும் உதவிகள் அனுப்பிவைக்கும் படி கேட்டு கொண்டு உள்ளோம். என்று கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Sat Sep 13, 2014 5:38 am

@டார்வின் wrote:நான் நைஜீரியாவில்தான் இருக்கிறேன் ....இங்கு இந்நோய் தொற்று குறைவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.....

மகிழ்ச்சியான தகவல் டார்வின்! எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்! உங்கள் நைஜீரிய காதலிகளை இப்பொழுது சந்திக்க வேண்டம்! அய்யோ, நான் இல்லை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by டார்வின் on Mon Sep 15, 2014 6:22 pm

@சிவா wrote:
@டார்வின் wrote:நான் நைஜீரியாவில்தான் இருக்கிறேன் ....இங்கு இந்நோய் தொற்று குறைவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.....

மகிழ்ச்சியான தகவல் டார்வின்! எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்! உங்கள் நைஜீரிய காதலிகளை இப்பொழுது சந்திக்க வேண்டம்! அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1087075 அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Mon Sep 15, 2014 10:22 pm


எபோலோ வைரஸ் நோய்க்கு பயந்து ஓட்டம்; 8 மந்திரிகள் உள்பட 10 அதிகாரிகள் நீக்கம் லிபிரிய அதிபர் உத்தரவு

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலோ வைஅர்ஸ் நோய்க்கு 2,400க்கும் மேற்ட்டவர்கள் பலியாகி உள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர்.மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபிரியாவில் இந்த நோயால் இதுவரை 1100 பேர் பலியாகி உள்ளனர். அதிகமான பேர் பாதிகபட்ட்டு உள்ளனர். இதனால் பயந்து போன லிபிரிய நாட்டை சேந்ர்தவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர் இதில் அந்நாட்டு மந்திரிகளும் அரசு உயர் அதிகாரிகளும் அடங்குவர்.

இதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் லிபிரிய அதிபர் எல்லின் ஜான்சன் வெளிநாட்டிற்கு சென்று உள்ள அமைச்சர்கள் அதிகாரிகள் நாடு திரும்பி எபோலோ வைரஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தில் உதவுமாறு கேட்டு கொண்டார்.ஆனால் யாரும் திரும்பவில்லை.

இந்த நிலையில் அதிபர் எல்லின் ஜான்சன் வெளிநாடுகளில் உள்ள 6 உதவி மந்திரிகள் 2 துணை மந்திரிகள், 2 கமிஷனர்களை உடனடியான வேலை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Thu Sep 18, 2014 1:26 am

எபோலோ நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 2,461 ஆக உயர்ந்தது: உலக சுகாதார நிறுவனம் தகவல்

எபோலா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5,000 ஆயிரத்தை நெருங்கிவிட்டது என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில், இந்த ஆண்டு தொடக்கத்தில், ‘எபோலோ’ வைரஸ் கிருமி தாக்குதல் காரணமாக ‘எபோலோ’ தொற்றுநோய் தாக்கியது. அப்போதிருந்து அண்டை நாடுகளிலும் பரவியது. இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் லைபீரியா அரசு அவசர பிரகடனம் அறிவித்துள்ளது. மேலும் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பும் அறிவித்துள்ளது. எபோலா நோய், மேற்கு ஆப்பிரிக்காவை தாண்டி பரவுவது தவிர்க்க முடியாதது என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ.நா. அமைப்பான உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை கமிட்டி கூட்டம், ஜெனீவாவில் 2 நாட்களாக நடைபெற்றது. அதன் முடிவில், எபோலா நோயை கட்டுப்படுத்த, உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் அவையின் சுகாதார அமைப்பான உலக சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,எபோலோ தொற்று நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,461 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. அதேபோல் இந்நோய் பாதிப்புக்கு 4,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வாரங்களில் கினியா, லினியா, சீயரோ லியான் உள்ளிட்ட நாடுகளில் மேற்கண்டா பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கையில் பாதியை தாண்டி உள்ளது என்று உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Tue Oct 07, 2014 10:42 pm


பிரான்ஸ், இங்கிலாந்து 24ஆம் தேதிக்குள் எபோலா தாக்கத்தால் பாதிக்கப்படலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை

தற்போதுள்ள நிலவரப்படி எபோலா கிருமித் தாக்கம் அக்டோபர் 24-ஆம் தேதிக்குள் பிரான்ஸ் நாட்டை எட்டிவிடும் என்றும், இதற்கு 75 விழுக்காடு வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதே தேதியில் இங்கிலாந்தை இந்த கிருமித் தொற்று எட்டிப்பிடிக்க 50 விழுக்காடு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அண்மைக்கால விமானப் போக்குவரத்து தகவல்களை அடிப்படையாக வைத்து இந்தக் கணிப்புகளை நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஒருவேளை எபோலா பாதிப்புள்ள பகுதிகளுக்கான விமானப் போக்குவரத்து 80 விழுக்காடு குறைந்தாலும் கூட பிரான்ஸை எபோலா கிருமி சென்றடைய 25 விழுக்காடு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. பிரிட்டனுக்கு 15 விழுக்காடு வாய்ப்புள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய எபோலா பாதிப்பானது இதுவரை உலகம் முழுவதும் 3400 பேரை பலி கொண்டுள்ளது. மேலும் 7200 பேருக்கு தற்போது எபோலா பாதிப்பு உள்ளது.

நைஜீரியா, செனகல், அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு விமானங்களில் வந்திறங்கியவர்களில் பலரும் தங்களுக்கு எபோலா பாதிப்பு இருப்பதையே அறிந்திருக்கவில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை லைபீரியாவில் இருந்து அமெரிக்கா வந்திறங்கியவருக்கு எபோலா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் வழி அமெரிக்காவிலும் எபோலா கால் பதித்துள்ளது.

எபோலா பாதிப்புள்ள கினியா, சியரா லியோன், லைபீரியா ஆகியவை பிரெஞ்சு மொழி ஆதிக்கமுள்ள பகுதிகளாகும். இந்நாடுகளுக்கும் பிரான்சுக்கும் இடையே ஏராளமான விமானச் சேவைகள் உள்ளன. இதன் காரணமாக அடுத்து பிரான்ஸ்தான் எபோலாவால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பாவின் மிக முக்கியமான விமானப் போக்குவரத்து மையமாக விளங்குவதால் இங்கிலாந்தையும் இந்த ஆபத்து நெருங்கி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

“எபோலா பாதித்த தங்கள் நாட்டவர்களில் தலா ஒருவரை அழைத்து வந்து உரிய சிகிச்சை அளித்து இவ்விரு நாடுகளும் குணப்படுத்தி உள்ளன. இந்நிலையில் எந்த நேரத்திலும் இவ்விரு நாடுகளிலும் எபோலா கிருமி நுழையக்கூடும்,” என்கிறார் இங்கிலாந்தின் லான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் கிருமித் தொற்று பிரிவு நிபுணரான டெரக் கேத்ரெரர்.

இதேபோல் எபோலா பாதிப்பு ஏற்பட பெல்ஜியத்திற்கு 40, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்துக்கு 14 விழுக்காடு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

எபோலா பாதித்த பகுதிகளுக்கான விமானப் போக்குவரத்துக்கு உலக சுகாதார நிறுவனம் எத்தகைய கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்றாலும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனங்கள் சில விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Tue Oct 14, 2014 11:12 pm

எபோலா மிகவும் மோசமான நோய்: உலக சுகாதார நிறுவனம் கவலை.

மணிலா, அக் 15 - நவீன கால மருத்துவத்துறையில் மிகவும் மோசமான, மிகவும் தீவிரமான நோயாக எபோலா உருவெடுத்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் மார்கிரெட் சான் கூறும்போது, "எபோலா நோய்த் தொற்றைத் தடுக்க மக்கள் தங்களின் அறியா மையால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே பொருளாதார சமநிலை குலைவதற்கு 90 சதவீத காரணமாக உள்ளது" என்றார்.

மேலும், மக்களிடையே முறையான விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இப்போதைக்குச் சிறந்த நோய்த் தடுப்பு திட்டமாக இருக்கும் என்று அவர் கூறி யுள்ளார். இதற்கிடையே, அமெரிக் காவில் மருத்துவப் பணியாளர் ஒருவருக்கு எபோலா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் புதன்கிழமை டெக்சாஸ் மருத்துவமனையில் எபோலா நோய் தாக்கி இறந்து போன தாமஸ் எரிக் டன்கன் என்பவருக்கு பணிவிடை செய்யும் குழுவில் இவர் இருந்தார்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by டார்வின் on Tue Oct 21, 2014 4:06 pm

இபோலா இல்லாத நாடாக நைஜீரியா ,,,,,,,,,,
உலக சுகாதார நிறுவனத்தால், நைஜீரியா இபோலா இல்லாத நாடாக பிரகடனப்படுத்தப்படுகிறது.
கடந்த 6 வாரங்களாக அங்கு இபோலா நோயாளிகள் எவரும் புதிதாக பதிவு செய்யப்படவில்லை.
இன்னுமொரு மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலுக்கு கடந்த வெள்ளிக்கிழமையே அந்த நிலை வழங்கப்பட்டு விட்டது.
அதேவேளை, மேற்கு ஆப்பிரிக்காவுக்கு வெளியே இபோலா தொற்றிய முதலாவது நோயாளியான ஸ்பெயின் நாட்டு தாதிக்கு தற்போது நடத்தப்பட்ட பரிசோதனைகள் அவருக்கு இப்போது அந்தநோய் தொற்று இல்லை என்று காண்பித்துள்ளன.
இனியும் அவரிடம் அந்த வைரஸ் இல்லை என்பதை உறுதி செய்ய அவருக்கு இன்னும் ஒரு சோதனை செய்தாக வேண்டும்.
ஆனால், சியராலியோன், லைபீரியா மற்றும் கினி ஆகிய நாடுகளில் இபோலா நெருக்கடி தொடருகின்றது.
BBC
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Mon Nov 03, 2014 5:27 pm

ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து கனடாவிலும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு விசா தடை!

எபோலா நோய் தொற்று தீவிரமாக உள்ள கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு கனடா அரசு விசா தடை விதித்துள்ளது.

எபோலா நோயால் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர். குறிப்பாக மேற்கூறிய 3 நாடுகளில் இதுவரை 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நாடுகளில் இருந்து அமெரிக்கா, ஸ்பெயின், மாலி, நைஜீரியா, செனகல் ஆகிய நாடுகளுக்கு பயணிகள் செல்வதால், அங்கும் எபோலா நோய் தீவிரமாகப் பரவி வருகின்றது.

இதன் காரணமாக இந்நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடை விதித்து இருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து கனடாவும் தற்போது அவர்களுக்கு விசா தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இந்த சட்டம் அங்கு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

எபோலா நோய் பாதித்த நாடுகளை சேர்ந்த நோயாளிகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மேற்சிகிச்சை பெற விரும்புகின்றனர். எனவே அவர்களைத் தடுக்க வேண்டாம் என ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிற்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Sun Jan 18, 2015 11:55 pm

எபோலாவின் தீவிரம் குறைந்து வருகின்றது – உலக சுகாதார மையம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா உயிர்க் கொல்லி நோயின் தீவிரம் குறைந்து வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் எபோலா நோய் தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் 20,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7,905 பேர் இறந்துள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் 90 சதவீதம் பேர் உயிரிழப்பது உறுதியான நிலையில், அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் எபோலாவிற்கு தடுப்பு மருந்தினை கண்டறிய முயன்று வருகின்றன.

இந்நிலையில், எபோலாவின் தாக்கம் குறைந்து வருவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிகையில்,

“மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான சியாரா, லியோன், கினியா, லைபீரியா போன்றவற்றில் எபோலா பாதிப்பின் தீவிரம் மெதுவாக குறைந்து வருகின்றது”.

“இதன் காரணமாக மற்ற உலக நாடுகளுக்கு, இந்நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. எனினும், எபோலாவிற்கு எதிரான போராட்டம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை” என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by பாலாஜி on Mon Jan 19, 2015 6:30 pm

எபோலாவின் தீவிரம் குறைந்து வருகின்றது – உலக சுகாதார மையம்! wrote:

மகிழ்ச்சி மகிழ்ச்சி

உலகை அச்சுறுத்தி வரும் எபோலா நோய் தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் 20,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7,905 பேர் இறந்துள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. wrote:

அழுகை அழுகை அழுகைhttp://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Sun Mar 22, 2015 2:36 am

காட்டுத்தீயாய் பரவும் எபோலா: 3 நாட்கள் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க சியாரா லியோன் அதிபர் உத்தரவு

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியாரா லியோனுக்கு அனைத்து நாடுகளும் பெரு முயற்சி செய்து மருந்துகளையும் மருத்துவக் குழுக்களையும் அனுப்பி வைத்த பிறகும்கூட, கொடிய எபோலா வைரஸை ஒழிக்க முடியவில்லை. காட்டுத்தீ போல் பரவி வரும் எபோலாவை கட்டுப்படுத்தும் வகையில், சியாரா லியோன் அதிபர் எர்னெஸ்ட் கொரோமா 3 நாட்களுக்கு நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தங்களின் வீடுகளில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

வருகிற 27-ம் தேதி காலை 6 மணி முதல் 29-ம் தேதி மாலை 6 மணி வரை இந்த தேசிய அளவிலான முடக்கம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களும் வர்த்தகம், வழிபாடு என்று எந்த அன்றாட நிகழ்வும் நடைபெறாது.

பலரது உயிரைக் காவு வாங்கிய எபோலாவால் நாட்டின் பொருளதார வளர்ச்சியும் மக்களின் வாழ்க்கையும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாகவும், இதனால் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகியிருப்பதாகவும் அதிபர் கொரோமா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by ayyasamy ram on Sun Mar 22, 2015 5:31 am

சோகம் சோகம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35081
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Sun May 10, 2015 3:07 am

எபோலா நோய் லைபீரியாவில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவில் இருந்து எபோலா நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று உலக சுதாதார மையம் அறிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா போன்ற நாடுகளில் எபோலா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் நோய் வேகமாக பரவியது. தொற்று நோயான இந்த எபோலாவால் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஐ.நா. சார்பில் சென்ற டாக்டர் மற்றும் உதவியாளர்களையும் இந்த நோய் விட்டு வைக்கவில்லை. இதனால் இந்த நோய் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருந்தது.

இந்நிலையில் 14 மாதங்களாக கடும் இக்காட்டான நிலைக்கு தள்ளப்பட்ட லைபீரியாவில் இருந்து எபோலா முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. சிறப்பு தூதர் டாக்டர் டேவிட் நபர்ரோ கூறும்போது ‘‘லைபீரியாவில் இருந்து எபோலாவை விரட்ட நீண்ட காலம் ஆகிவிட்டது. கடந்த இரண்டு மாதங்களாக இங்கு எபோலா அறிகுறி ஏதும் இல்லை’’ என்றார்.

இந்த கொடூர வைரஸ் நோய்க்கு 4700 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Sat Sep 05, 2015 12:25 am

மீண்டும் எபோலா: சியாரா லியோனில் ஒரு பெண் பலி - தனிமைப் படுத்தப்பட்ட கிராமம்

எபோலா உயிர்கொல்லி நோயிலிருந்து சியாரா லியோன் முற்றாக விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட இருந்த நிலையில் பெண் ஒருவர் அந்த வைரசுக்கு பலியாகியுள்ளார்

சியாரா லியோனில் எபோலா வைரஸ் தொற்றியிருப்பதாக உறுதிசெய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அங்கு கிட்டத்தட்ட 1000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் மூன்று வாரங்களுக்கு இந்த தனிமைப்படுத்தல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின்படி, ஊரில் உள்ள மக்கள் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு போக முடியாத வகையில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சியாரா லியோனில், கினியா மற்றும் லைபீரியா ஆகிய ஆப்ரிக்க நாடுகளில் எபோலா நோய்த் தொற்றுக்கு இதுவரை சுமார் 11 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எபோலா - செய்தித் தொகுப்புகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum