ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 ayyasamy ram

சொர்க்கத் தீவு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 மூர்த்தி

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

படமும் செய்தியும்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 ayyasamy ram

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இயற்கையின் மொழிகள்!
 மூர்த்தி

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

டாக்டரும் நோயாளியும் :)

View previous topic View next topic Go down

டாக்டரும் நோயாளியும் :)

Post by krishnaamma on Mon Sep 01, 2014 6:14 pm

ஒருவர்: டாக்டர் அ‌ந்த ஆளு ஆபரேஷன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு, நீங்க எ‌ன்னடா‌ன்னா எதுவு‌ம் பேசாமலயே இருக்கீங்களே?

டாக்டர்: ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லியா?


.................................................

டாக்டர்: நீங்க தினமும் எட்டு டம்ளர் தண்ணி குடிக்கனும்.

நோயாளி: டாக்டர்! எங்க வீட்ல நாலு டம்ளர் தான் இருக்கு

...................................................

நோயாளியின் மகன்: டாக்டர், எங்கப்பாவுக்கு இன்னும் பத்து நாள் கழிச்சி ஆபரேஷன் பண்ணுங்க...

டாக்டர்: ஏன்?

நோயாளியின் மகன்: சொத்துக்களை என் பேருக்கு இன்னும் மாத்தி எழுதல...

............................................................

நோயாளி: டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...

டாக்டர்: சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!

நோயாளி: ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?

டாக்டர்: நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...

.........................................................

டாக்டர்: உங்க மாமியாரைக் காப்பாத்துறது கஷ்டம்.

மருமகள்: நீங்க நல்ல டாக்டர்னு எல்லாரும் சொன்னது இப்பத் தான் டாக்டர் புரியுது.

...........................................................

ஒருபெண் : என் வீட்டுக்காரர், பண்ண காரியத்தையே ஞாபகமறதியா ரெண்டாவது தடவை மறுபடியும் பண்றாரு டாக்டர்..

டாக்டர்: இந்த சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் இப்படி வரூத்தப்படறீங்க..?

அந்த பெண் : நீங்க வேற டாக்டர், அவரு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கப் பொண்ணு பார்த்துட்டு இருக்காரு..!

................................................................

டாக்டர்: உங்களுக்கு என்ன பிரச்சனை ....?

நோயாளி: லுங்கியை கழட்டும் போது..பல்லால் கடித்துக்கொண்டு கழட்டும் போது கொட்டாவி வராமல் இருக்க என்ன செய்யவேணும் டாக்டர் ..?

..................................................................

ஒரு ஆபிரேசன் தியேட்டரில்..

டாக்டர்: நோயாளியின் நெஞ்சில் ஒரு வயரை ஒட்டினர்

நோயாளி: நோயாளி கேட்டார் இது எதக்கு டாக்டர்?

டாக்டர்: இதுதான் உங்க இரத்த ஓட்டத்தை கருவி... இன்னும் ஒன்றை ஓட்டினார்..

நோயாளி: இது எதக்கு டாக்டர்?

டாக்டர்: இதுதான் உங்க சுவாச ஓட்டத்தை காட்டும் கருவி.

இப்படி பல அவர் மீது ஒட்டப்பட்டது

நோயாளி: இதல்லாம் இயங்க கரண்ட் தானே வேணும் டாக்டர்?

டாக்டர்: நிச்சயமா அதில் என்ன சந்தேகம்?

நோயாளி: ஆப்பிரேசன் செய்யும் போது கரண்ட் போய்ட்டா ? என்ன செய்வீங்க டாக்டர்?

டாக்டர்: சிரித்தார்..

நர்சு: ஏன்? டாக்டர் சிரிக்கிரீங்க?

டாக்டர்: கரண்ட் போய்ட்டா ? என்ன செய்வீங்கனு கேட்கிறார்...

நர்சு: போங்க டாக்டர் எனக்கு வெக்கமா இருக்கு...

.....................................................

நோயாளி: டாக்டர், நான் அஞ்சு தடவை தற்கொலை முயற்சி செய்திருக்கேன் டாக்டர்.

டாக்டர்: முதல் தடவையே என் கிட்ட வந்திருக்கலாம்ல?

.....................................................

டாக்டர்: இதுதான் எங்க ஆஸ்பிட்டலுக்கு புதுசா வந்திருக்கிற அதி நவீன இம்போர்ட்டர் சி.டி.ஸ்கேன் மிஷின்..

நோயாளி: பழைய மிஷினுக்கும் இந்த நவீன மிஷினுக்கும் என்ன டாக்டர் வித்தியாசம்?

டாக்டர்: பழைய மிஷின்ல ஸ்கேன் எடுத்தா 5000 ரூபாய் வரைதான் பில் போட முடியும் இந்த நவீன மிஷின்ல ஸ்கேன் எடுத்தா 25,000 வரை பில்போட முடியும்..!

......................................................

டாக்டர்: நர்ஸ் அந்த பேஷண்டுக்கு எல்லா செக்-அப்பும் செய்துட்டீங்களா, பீ.பி. சுகர் ஏதாவது இருக்கா?

நர்ஸ்: ஒண்ணும் இல்லை சார்!

டாக்டர்: அட ஆச்சரியமா இருக்கே!

நர்ஸ்: சார்! பேஷண்ட் செத்து அரை மணிநேரமாச்சு!

.......................................................

நோயாளி: டாக்டர், என் பொண்டாட்டி நைட்டு தூங்கவே மாட்டேங்குறா. முழிச்சு முழிச்சு பார்த்துக்கிட்டிருக்கா டாக்டர்

டாக்டர்: எப்போலேந்து இப்படி இருக்கு?

நோயாளி: எங்க வீட்டுக்கு அவ தங்கச்சி வந்ததிலேந்து டாக்டர்.

........................................................

தந்தை: என் பையனுக்கு தேவையான இரத்தம் கிடைச்சுருமா டாக்டர்?

டாக்டர்: பி பாசிட்டிவ் சார். நல்லதே நடக்கும்.

தந்தை: டாக்டர் என் பையன் இரத்தம் B பாஸிடீவ் இல்ல O நெகட்டிவ் சார்.

..........................................................

நோயாளி 1: டானிக் சாப்பிடும் போது ஏன் ரூம் கதவை க்ளோஸ் பண்ணறீங்க ?

நோயாளி 2: டாக்டர் தான் " அரை(றை) மூடி" டானிக் குடிக்க சொன்னார்.

.............................................................

நோயாளி: டாக்டர் என் வலது கை நல்லா வலிக்குது டாக்டர்

டாக்டர்: வயசாச்சில்ல, அதான் வலிக்குது.

நோயாளி: இடது கைக்கும் அதே வயசு தானே ஆகுது. அது மட்டும் ஏன் வலிக்க மாட்டேங்குது?

.............................................................

நோயாளி: டாக்டர், என் பையனை ஓடச்சொன்னீங்களா?

டாக்டர்: ஆமாபா

நோயாளி: காலைல எழும்பி ஓடச்சொன்னீங்களா டாக்டர்?

டாக்டர்: ஆமாபா, ஏன்?

நோயாளி: ஏனா? பக்கத்து வீட்டு பொண்ணை இழுத்துட்டு ஓடிட்டான்யா

...........................................................

டாக்டர்: டாக்டர் கிட்ட எதையும் மறைக்கக்கூடாது. என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க

நோயாளி: நீங்க நர்ஸை மறைக்காதீங்க, கொஞ்சம் தள்ளி உட்காருங்க

.............................................................

நோயாளி: ஏன் டாக்டர், எனக்கு இந்த ஆப்பரேஷனை நாலு பேர் சேர்ந்து பண்றீங்க?

டாக்டர்: நல்லாயிருக்கே நியாயம்? பழி என்மேல மட்டும் விழுறதுக்கா ?

.........................................................

டாக்டர்: என்னங்க…எக்ஸ்ரேயில் உங்க வயிற்றில நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு?

நோயாளி: நீங்க தானே டாக்டர் தினம் ரெண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க

.........................................................

நோயாளி: காதுல ரயில் ஓடற மாதிரி சத்தம் கேட்குது, டாக்டர்!!.

டாக்டர்: (பரிசோதித்துவிட்டு) எனக்கு ஒன்னும் கேட்கலையே?

நோயாளி: அப்போ ஏதாவது சிக்னல்ல நின்னிருக்குமோ!

.........................................................

டாக்டர்: சிஸ்டர், நம்ம ஹாஸ்பிட்டல் விளம்பரத்துக்கு ஒரு நல்ல வாசகம் சொல்லுங்க பார்ப்போம்

நர்ஸ்: கூட்டிட்டு வாங்க! தூக்கிட்டு போங்க!

.................................................................

நோயாளி 1: பைபாஸ் சர்ஜரி பண்ணிக்கூட அந்த பேசண்ட் பிழைக்கலயாம்...

நோயாளி 2: அப்ப "அது பைபெயில் சர்ஜரின்னு " சொல்லுங்க.

.................................................................

நோயாளி: எனக்கு உடம்பு முடியலைன்னதும் முதல்ல மெடிக்கல் ஷாப் தான் போனேன் டாக்டர்...

டாக்டர்: அங்க ஏதாவது லூஸூத்தனமா ஐடியா கொடுத்திருப்பாங்களே...?

நோயாளி: உங்களைப் போய் பார்க்கச் சொன்னாங்க!

.................................................................

நோயாளி 1: என்னங்க.... டப்பியை அரைமணி நேரமா வச்சு தடவிட்டு இருக்கீங்க ?

நோயாளி 2: டாக்டர்தான் இந்த டப்பியை கொடுத்து தலை வலிக்கிறப்போ எல்லாம் தடவுன்னு சொன்னார் ....

.................................................................

நோயாளி: டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?

டாக்டர்: ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!

நோயாளி: ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டுவந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: டாக்டரும் நோயாளியும் :)

Post by krishnaamma on Mon Sep 01, 2014 6:14 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: டாக்டரும் நோயாளியும் :)

Post by krishnaamma on Sat Sep 06, 2014 6:26 pm

நோயாளி 1: அவர் பிரம்மாண்டமான பல் டாக்டர்...

நோயாளி 2: அப்படியா...?

நோயாளி 1: ஆமா... "பல் செட்"டுக்குக்கூட தோட்டாதரணியைக் கூப்பிடுவார்னா பார்த்துக்கோயேன்!
..........................................

நோயாளி: டாக்டர் எதுக்கு இவ்வளவு மாத்திரை எழுதித் தந்திருக்கீங்க..?

டாக்டர்: எல்லாத்தையும் ஒழுங்கா சாப்பிடணும் - ஏதாவது ஒரு மாத்திரையில் உங்க வியாதி குணமாயிடும்

..............................................

டாக்டர்: இந்த மருந்தை தொடர்ச்சியா குடிச்சா தண்ணியடிக்கிற பழக்கமே வராது.

நோயாளி: ஊறுகாயை 'தொட்டுக்கலாமா' டாக்டர்?

...............................................


நோயாளி: டாக்டர்! காது உள்ளே செல்போன் அடிக்கிற மாதிரி கேட்குது டாக்டர்.

டாக்டர்: எனக்கு ஒண்ணும் கேட்கலையே?

நோயாளி: சைலண்ட் மோட்ல இருக்கு டாக்டர்

...................................................

டாக்டர்: நீங்க இவரை 1 மணி நேரம் முன்னாடி கொண்டு வந்திருந்தீங்கன்னா காப்பாத்தியிருக்கலாம்…

நோயாளியின் உறவினர்: அதுக்கென்ன செய்ய? இவங்களுக்கு ஆக்சிடென்ட் நடந்தே கால்மணி நேரந்தானே ஆச்சு?

...................................................

நோயாளி: டாக்டர்... நீங்க சொந்தமா வீடு கட்டிட்டு இருந்தீங்களே.. அந்த வேலை முடிஞ்சுதா?

டாக்டர்: இன்னும் இல்லை. நீங்க ஏன் தினம் அதைக் கேட்கறீங்க?

நோயாளி: என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப் போறீங்கனு தெரிஞ்சுக்கத்தான்.

..................................................

நர்ஸ்: டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.

டாக்டர்: ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.

.................................................

நோயாளி: என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.

டாக்டர்: அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.

...................................................
டாக்டர்: சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை.

நர்ஸ்: டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!

....................................................

நர்ஸ்: ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !

நபர்: ஏன்?

நர்ஸ்: டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

....................................................

டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?

நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?

...................................................

நோயாளி: ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?

டாக்டர்: எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....

..................................................

டாக்டர்: அந்தப் பேசண்டுக்கு என் மேல கோபம் போல தெரியுது.

நர்ஸ்: எப்படிச் சொல்றீங்க ?

டாக்டர்: நாக்கை நீட்டச் சொன்னா, அந்த சாக்குல நாக்கைத் துருத்துறாரே.

..................................................

நோயாளி: என்னது டி.டி.எஸ் ஆபரேஷன் தியேட்டர் திறந்திருக்கீங்களா..,,?

டாக்டர்: ஆமாம், ஆபரேஷன் தியேட்டர்ஸ் டி.டி.எஸ் சவுண்ட் எஃபெக்ட் இருக்கு .. .. .

..................................................


நோயாளி: அதென்ன டாக்டர் சின்ன ஆப்பரேசன்?

டாக்டர்: கத்தி எடுக்காம நகத்தாலேயே கிழிச்சு ஆப்பரேசன் பண்ணுவேன்.

....................................................

நோயாளி: பல்லைப் பிடுங்கின அப்புறம் வலி இருக்குமா டாக்டர் .. .. .. ?

டாக்டர்: பல்லைப் பிடுங்கின அப்புறம், அதுக்கு வலிச்சா உங்களுக்கு என்ன?

.....................................................

நோயாளியின் மனைவி: என் கணவருக்கு டெம்பரேச்சர் பார்க்கறதுக்கு, என்னை எதுக்கு டாக்டர் வெளியே போகச் சொல்றீங்க .. .. ?

டாக்டர்: அப்பத்தானே தர்மாமீட்டர் வைக்கறதுக்கு அவர் வாயைத் திறப்பாரு

......................................................

டாக்டர்: வாயில் என்ன கட்டு ?

நோயாளி: எனக்குக் கொழுப்பு அதிகமாயிடுச்சு வாயைக் கட்டணும்னு நீங்கதானே டாக்டர் சொன்னீங்க ?
.....................................................

டாக்டர்: உன் பிரச்னைக்கு என்ன காரணம்னே தெரியலை. அளவுக்கதிகமா குடிச்சதால இருக்கும்னு நினைக்கிறேன்…

நோயாளி: சரி, அப்ப நீங்க குடிக்காத நேரமா பார்த்து வரேன்…

....................................................

டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?

ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்.

...............................................

டாக்டர்: ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..?

நோயாளி: நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!

...............................................

ஆபரேஷன் முடிஞ்சு தையல் போடுற நேரத்துலதான் அவரு போலி டாக்டர்னு தெரிஞ்சுது…!

எப்படி?

தையலை, சாதாரண நூல்ல போடவா. இல்லை மாஞ்சா நூல்ல போடவான்னு கேட்டாரே..?

..................................................

எட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..!

இருந்தா?

அவங்களையும் ‘அட்மிட்’ பண்ணிடுவோம்…!!

.................................................

கிளினிக்கில் எதுக்கு 12 ராசிகளின் பெயர்களை டாக்டர் எழுதி வெச்சிருக்கிறாரு?

ராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது பாருங்க, அதான்!என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: டாக்டரும் நோயாளியும் :)

Post by krishnaamma on Sat Sep 06, 2014 6:33 pm

நோயாளி: ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.

டாக்டர்: ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?

.................................................

உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!

என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!

................................................

பாபு: டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை ?

டாக்டர்: அப்போ...., ஆபரேஷன் முடிஞ்சதும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க ?

...............................................

டாக்டர்: நாய் கடிச்சா தொப்புளைச் சுத்தி 14 ஊசி போடணும்.

நோயாளி: முடியாது டாக்டர். நாய் ஓடிப் போயிடுச்சு.

...............................................

ஒருவர்: அந்த டாக்டருக்கு சொந்தக்காரங்கன்னு சொல்லிக்க யாருமே கிடையாது

மற்றொருவர்: ஏன் ?

ஒருவர்: எல்லாருக்கும் அவருதான் ஆபரேஷன் பண்ணினாரு.

...............................................

டாக்டர்: உங்க கணவர் உங்ககிட்ட பயங்கரமா நடிப்பார் போலிருக்கே?

அமலா: எப்டி சொல்றீங்க?

டாக்டர்: ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்கன்னு சொன்னாரே!

...............................................

ராமு: "அந்த டாக்டர், அஞ்சல் வழியில் சட்டம் படிக்கிறார்"

சோமு: "எதுக்கு?"

ராமு:ராமு: "ஆபரேசன் பண்ண வர்றவங்களுக்கு அவரே உயில் எழுதப் போறாராம்".

...............................................

ஒரு சர்தார் டாக்டரிடம் சென்றார். அவர் சிறுநீரை பரிசோதித்த டாக்டர், சில மருந்துகளைக் கொடுத்து, இதை சாப்பிட்டு வாங்க. உங்களூக்கு நீரில் கொஞ்சம் சர்க்கரை இருக்கு. எதுக்கும் மூன்று மாதம் கழித்து சிறுநீரை மறுபடியும் கொண்டுவாங்க பரிசோதித்துப் பார்ப்போம் என்றார். மூன்று மாதம் கழித்து மூன்று பெரிய கேணை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு டாக்டர் முன் வைத்தார்.

டாக்டர்: என்ன இவை?

சர்தார்: நீங்கதானே மூன்று மாதம் கழித்து சிறுநீர் கொண்டு வரச்சொன்னீங்க.

.................................................

ஹொட்டல் முதலாளி: ஏன் சார், தினமும் பார்சல் வாங்கறீங்க… ஒருநாளாவது இங்கயே சாப்பிடலாமில்லே..?

சர்தார்ஜி: டாக்டர் என்னை ஹொட்டல்ல சாப்பிடக்கூடாதுனு சொல்லிருக்காரு. அதான்!

..................................................

பல் வலின்னு வரவங்களோட பல்ல டாக்டர் புடுங்கலாம் ஆனா..கண் வலின்னு வரவங்களோட கண்ண டாக்டர் புடுங்கலாமா?

...............................
கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...! ... அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?

.................................

டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது.... காட்டுங்க உங்க பர்ஸை!
..................................

மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க? டாக்டர்தான் தலைவலிச்சா இதை எடுத்து தடவனும்னு சொன்னார்!

....................................

ஒருவர்: டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது

மற்றொருவர்: டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?

....................................

ஒருவர்: நீங்க இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் நான் உங்களைத் தவிர, வேற எந்த டாக்டர்கிட்டேயும் போனதில்லை

மற்றொருவர்: நானும் அப்படித்தான் இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் உங்களைத் தவிர, வேற எந்த பேஷண்ட்டுக்கும் ட்ரீட்மெண்ட் கொடுத்ததில்லை
...................................

ஒருவர்: டாக்டர் எழுதிக் கொடுத்ததுல மேல உள்ள மருந்து மட்டும் இல்ல.

மற்றொருவர்: மேல உள்ளது மருந்து இல்ல என்னோட பேரு.
..................................

டாக்டர்: தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க

மாயான்டி மாமா: அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?
..................................

நண்பர் 1: எதுக்கு எல்லாப் பேஷண்டுகளும் ஜாலியா இருக்காங்க ?

நண்பர் 2: டாக்டர்கள் ஸ்டிரைக் ஆச்சே, அதான்
......................................

நண்பர்: "டாக்டர் வெயிட் தூக்கக் கூடாதுன்னு சொன்னதுக்காக உங்க அம்மா பெரிய வெங்காயம் வாங்காம சின்ன வெங்காயம் வாங்கறதப்பாத்தா எனக்கு எரிச்சலா வருது"

.......................................

வேலு: நீங்கள் எப்பொழுதுமே இப்படித் தான் திக்குவீர்களா?

பாக்கி: எப்பொழுதும் இல்லை. டாக்டர் பே.... பே..சு..ம் பொழுது ம.... மட்..டு...ந்தான்.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: டாக்டரும் நோயாளியும் :)

Post by T.N.Balasubramanian on Sat Sep 06, 2014 9:24 pm

ரமணியன் : இது மாதிரி ஜோக்ஸ் எல்லாம் படித்தா
யாருமே டாக்டர் கிட்டே போகமாட்டாங்க ?
கிருஷ்ணம்மா : ஏன், ரொம்பவே பயப்படுவாளோ?
ரமணியன் : இல்லே இல்லே , சிரிச்சு சிரிச்சு , டாக்டருகிட்டே
போகவேண்டிய அவசியமே இருக்காது

( எந்தன் மறுமொழியை ஜோக் என்று நினைத்திட வேண்டாம் )
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21487
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: டாக்டரும் நோயாளியும் :)

Post by ayyasamy ram on Sat Sep 06, 2014 10:33 pm

நகைச்சுவை தொகுப்பு
=
உலகிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கிறவங்க
இந்தியர்கள்தான்!! - ஆய்வில் தகவல்
--

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35026
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: டாக்டரும் நோயாளியும் :)

Post by jesifer on Mon Sep 08, 2014 12:54 pm

பாவம் இந்த டாக்டருங்க.... இவங்களப் போட்டு என்னா பாடு படுத்துறீங்க...

எதிர்ப்பு
avatar
jesifer
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 466
மதிப்பீடுகள் : 303

View user profile

Back to top Go down

Re: டாக்டரும் நோயாளியும் :)

Post by Ravi on Mon Sep 08, 2014 3:24 pm
Ravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 400
மதிப்பீடுகள் : 23

View user profile http://int.asus@gmail.com

Back to top Go down

Re: டாக்டரும் நோயாளியும் :)

Post by ராஜா on Mon Sep 08, 2014 3:46 pm


நோயாளி: டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?

டாக்டர்: ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!

நோயாளி: ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டுவந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?
உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!

என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டாக்டரும் நோயாளியும் :)

Post by ஜாஹீதாபானு on Mon Sep 08, 2014 5:07 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருதுavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30085
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: டாக்டரும் நோயாளியும் :)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum