ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 SK

2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 ayyasamy ram

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 ayyasamy ram

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 anikuttan

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 anikuttan

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 ayyasamy ram

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 ayyasamy ram

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ayyasamy ram

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 ayyasamy ram

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 ayyasamy ram

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 T.N.Balasubramanian

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 krishnaamma

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 krishnaamma

குருப் 2 தேர்வுக்கு IMPACT IAS ACADAMY 2018(general english & general Tamil)
 thiru907

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 ayyasamy ram

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 ayyasamy ram

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

மதித்திடுவோம் மாதர் தம்மை
 SK

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - அடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா? மோடி மீது சந்திரபாபு புகார்
 M.Jagadeesan

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை!
 T.N.Balasubramanian

மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ., வுக்கு எதிராக 19ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
 M.Jagadeesan

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
 SK

காலம் உருக்குலைத்தாலும் எங்கள் காதல் மாறாது என்கிறதா இந்த மனித எலும்புக் கூடுகள்?
 SK

படமெடுத்த பாம்பை ஆத்திரத்தில் கடித்துத் துப்பிய விவசாயி!
 பழ.முத்துராமலிங்கம்

விமானத்தில் இருந்து மழையாக பொழிந்த தங்கம் - வைர குவியல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான முறையில் சிக்ஸர்... இது நியூசிலாந்தில் நடந்துள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

Video: ரசிகர்களை அதிர வைக்கும் Afridi-யின் Catch!
 SK

வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
 SK

வட தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
 SK

விஜய்யும் ரஜினியும் படைத்த சாதனைகள்; வேறெவரும் இடம்பெறவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் முதன்முறையாக தமிழ்
 பழ.முத்துராமலிங்கம்

தினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அதிமுக தரப்பு மனு
 SK

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்
 ரா.ரமேஷ்குமார்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
 ரா.ரமேஷ்குமார்

அரிசியில இருக்கற கல்லை நல்லா பொறுக்கினா என்ன?
 krishnaamma

ஒரு பக்கக் கதை - தலைவர்
 krishnaamma

நான் மலரோடு தனியாக...
 krishnaamma

தாத்தா கதாபாத்திரத்தில் பேரன்
 krishnaamma

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு
 SK

அமெரிக்காவில் நடைமேடை பாலம் இடிந்து விபத்து: பலர் சிக்கியுள்ளதாக தகவல்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இந்திய-ஜப்பான் ராணுவக் கூட்டுறவு வலுப்படுத்தப்பட உள்ளது

View previous topic View next topic Go down

இந்திய-ஜப்பான் ராணுவக் கூட்டுறவு வலுப்படுத்தப்பட உள்ளது

Post by சிவா on Tue Sep 02, 2014 12:56 am


ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ ஆபேயைச் சந்தித்துப் பேசுகையில் இருநாடுகளும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படுவதற்கான முடிவு எட்டப்பட்டது.

"இருநாட்டு பிரதமர்களும் ராணுவ உறவுகளின் முக்கியத்துவம் குறித்து மீண்டும் பேசி முடிவுக்கு வந்தனர். அதில் இரு நாடுகளுக்குமிடையேயான ராணுவ உறவுகளை வலுப்படுத்தும் முடிவு எட்டப்பட்டது” என்று பேச்சு வார்த்தைகளின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையில் இருநாடுகளும் கூட்டுறவு மற்றும் பரிமாற்றங்களுக்கான தீர்மானத்தில் கையெழுத்திட்டன.

“அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான இருநாடுகளின் நலன் குறித்த அக்கறையைக் கருத்தில் கொண்டு, இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்புக்கு புதிய கோணத்தையும், புதிய உந்துசக்தியையும் வழங்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். ராணுவத் தொழில்நுட்பம், மற்றும் தளவாடம் ஆகிய பிரிவுகளில் கூட்டுறவு வலுப்படுத்தப்படும்.

மேலும் உயர் தொழில்நுட்பம், விஞ்ஞானத் தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் இருநாடுகளிடையே ஒத்துழைப்பை மேலும் விரிவு படுத்த தீர்மானித்துள்ளோம். மேலும் இரு நாட்டு மக்களுக்கிடையேயான உறவுகள், கல்வித்துறை சார்ந்த பரிவர்த்தனைகள் அகியவற்றிலும் கூட்டுறவை வலுப்படுத்த முடிவு எட்டப்பட்டுள்ளது” என்று நரேந்திர மோடி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் இருநாட்டு கப்பற்படை பயிற்சிப் பரிவர்தனைகளையும் வலியுறுத்தினார் நரேந்திர மோடி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்திய-ஜப்பான் ராணுவக் கூட்டுறவு வலுப்படுத்தப்பட உள்ளது

Post by சிவா on Tue Sep 02, 2014 12:57 am

ஆராய்ச்சி, திறன் மேம்பாட்டுத் துறைகளில் ஜப்பான் உதவ வேண்டும்: பிரதமர் மோடி

ஆராய்ச்சி, திறன் மேம்பாட்டுத் துறைகளில் ஜப்பான் அரசின் உதவியை இந்தியா வேண்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

"இந்தியாவில் நிறைய இளைஞர்கள் இருக்கின்றனர். இந்திய இளைஞர்களுக்கு உரிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தால், அவர்கள் உலகில் எங்குவேனாலும் பணியாற்றும் அந்தஸ்தை பெறுவர். எனவே, திறன் மேம்பாட்டுத் துறையில் இந்தியாவுக்கு ஜப்பான் உதவ வேண்டும்" என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான்கு நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி கியோட்டா நகரில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்தார்.

3–ம் நாளான இன்று (திங்கட்கிழமை) டோக்கியோவில், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவை மோடி சந்தித்து பேசுகிறார். இதற்கு முன்னதாக வர்த்தக கூட்டமைப்பினர் மத்தியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசினார்.

அப்போது அவர்: "ஜப்பானிய நிறுவன முதலீடுகளை வரவேற்கிறோம். ஜப்பான் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் முதலீட்டிற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்படும். ஜப்பான் நிறுவனங்களின் முதலீடுகளை கவனிக்க பிரத்யேகமாக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழு, பிரதமர் அலுவலகத்திலேயே செயல்படும். குஜராத் முதல்வராக இருந்தபோதே ஜப்பானுடன் நல்ல இணக்கம் இருந்தது. குஜராத்தில், என்ன மாதிரியான முதலீட்டுச் சூழலை ஜப்பான் எதிர்கொண்டதோ அதே சூழல் இனி இந்தியா முழுவதும் நிலவும்" என்றார்.

சீனாவுக்கு குட்டு?

18-ம் நூற்றாண்டில் நிலவியதுபோல், நாடுகளை ஆக்கரமிக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். கடல் வழியாகவும் ஆக்கிரமிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன என பிரதமர் மோடி.

பிரதமர் மோடி, எந்த ஒரு நாட்டையும் தனது பேச்சில் குறிப்பிடவில்லை என்றாலும். அவர், சீனாவையே மறைமுகமாக சுட்டிக்காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்திய-ஜப்பான் ராணுவக் கூட்டுறவு வலுப்படுத்தப்பட உள்ளது

Post by சிவா on Tue Sep 02, 2014 1:01 am

பழமையான புத்த மத கோயில்களில் மோடி பிரார்த்தனை: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் உடன் சென்றார்

ஜப்பானின் கியோட்டோ நகரில் உள்ள புகழ்பெற்ற தோஜி, கின்காஹுஜி புத்த மத கோயில்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை செய்தார்.

ஐந்து நாள் பயணமாக பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை ஜப்பா னுக்கு சென்றார். முதல்நாளில் அவர் புராதன நகரமான கியோட் டோவில் தங்கினார். அங்கு அந்த நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்துப் பேசினார்.

அப்போது கியோட்டோவை போன்று வாரணாசியையும் கலாச் சார நகரமாக உருவாக்கும் “ஸ்மார்ட் சிட்டி” ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கையெழுத் தானது.

2000 கோயில்கள் நிறைந்த கியோட்டோ

மன்னராட்சி காலத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஜப்பானின் தலைநகராக கியோட்டோ விளங் கியது. அங்கிருந்துதான் டோக்கி யோவுக்கு தலைநகரம் மாற்றப் பட்டது. ஜப்பானிய மக்கள் ஷிண்டோ மதத்தையும் புத்த மதத்தையும் பின்பற்றி வருகின்ற னர். கியோட்டோ நகரில் இரு மதங்களையும் சேர்ந்த சுமார் 2000 கோயில்கள் உள்ளன.

இதில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தோஜி புத்த மத கோயிலை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். அவருடன் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் சென்றார். இரு தலைவர்களும் ஒன்றாக இணைந்து கோயிலில் பிரார்த்தனை நடத்தினர்.

நான் மோடி; நீங்கள் மோரி

கோயிலின் தலைமை புத்த பிட்சு மோரி, இரு பிரதமர்களையும் வரவேற்று கோயில் வளாகத்தை சுற்றிக் காட்டினார். அப்போது தலைமை புத்த பிட்சுவிடம் தன்னை அறிமுகப்படுத்திய இந்தி யப் பிரதமர், “நான் மோடி, நீங்கள் மோரி, நமக்குள் பெயர் பொருத் தம் மிகவும் கச்சிதமாக உள்ளது” என்று குறிப்பிட்டார். மோடியின் நகைச்சுவை உணர்வை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர்.

தோஜி கோயிலின் மூத்த பிட்சு ஹசி நிருபர்களிடம் பேசிய போது, ‘இந்தியப் பிரதமர் மோடி கோயிலுக்கு வந்திருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது’ என்றார்.

கோயிலில் பிரார்த்தனை

இதைத் தொடர்ந்து கியோட்டாவின் கின்காஹுஜி புத்த மத கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றார். 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த கோயிலில் மோடி பிரார்த்தனை செய்தார். கோயிலின் வரலாறு குறித்து புத்த மத பிட்சுகளிடம் ஆர்வமாகக் கேட்டறிந்தார். இரு கோயில்களின் வளாகத்திலும் பெருந்திரளான இந்தியர்கள் கூடி மோடியை வர வேற்றனர். அவர்களுடன் மோடி உரையாடினார். புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

விஞ்ஞானியுடன் சந்திப்பு

சிக்கிள் செல் அம்னீசியா நோய் பாதிப்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் நோபல் பரிசு விஞ்ஞானி யமனாகாவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு உதவ யமனாகா உறுதி அளித்தார்.

டோக்கியாவில் மோடி

ஞாயிற்றுக்கிழமை மாலை பிரதமர் மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்குச் சென்றார். அங்கு பிரதமர் ஷின்சோ அபேவை அவர் திங்கள்கிழமை சந்தித்துப் பேசுகிறார்.

அப்போது பாதுகாப்பு, அணுசக்தி, உள்கட்டமைப்பு, கனிம வளங்கள் ஏற்றுமதி ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்திய-ஜப்பான் ராணுவக் கூட்டுறவு வலுப்படுத்தப்பட உள்ளது

Post by சிவா on Tue Sep 02, 2014 1:01 am

ஜப்பானிய பள்ளியில் புல்லாங்குழல் வாசித்து, கிருஷ்ணர் கதை சொன்ன பிரதமர் மோடி

ஜப்பானிய பள்ளிக்கூடத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்த குழந்தைகளுக்கு புல்லாங்குழல் வாசித்துக் காட்டி கிருஷ்ணர் கதையை சொல்லியுள்ளார்.

4 நாள் அரசு முறைப்பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி, இன்று டோக்கியோ சென்றார். முன்னதாக, காலையில் வர்த்தக கூட்டமைப்பினர் மத்தியில் உரையாற்றினர்.

பின்னர், அந்நாட்டு கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக அங்குள்ள டைமெய் ஆரம்ப பள்ளிக்கூடத்திற்கு அவர் சென்றார்.

பிரதமர் மோடியை அங்கிருந்த குழந்தைகள் பாட்டுப்பாடி வரவேற்றனர். அவருக்காக இசைக்கருவிகள் பலவற்றை வாசித்தனர். அப்போது மோடி, அவர்கள் மத்தியில் நின்று கொண்டார்.

இசைக்குழுவில் இருந்த ஒரு குழந்தை புல்லாங்குழல் வாசிக்க அதனை மோடி மிகவும் ரசித்துக் கேட்டார். பின்னர் அந்த குழந்தைகளிடம், இசையால் விலங்குகளை வசப்படுத்த முடியும் என்றார். அதற்கு குழந்தைகள் எப்படி என கேட்க. கிருஷ்ணர் என்ற கடவுள் உண்டு. அவர், தனது புல்லாங்குழல் இசையால் பசுக்களை வசப்படுத்தி வைத்திருந்தார் என்றார். பின்னர், அவர் புல்லாங்குழலும் வாசித்துக் காட்டினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்திய-ஜப்பான் ராணுவக் கூட்டுறவு வலுப்படுத்தப்பட உள்ளது

Post by Muthumohamed on Tue Sep 02, 2014 11:13 am

வலுப்பட்டால் நல்லது தான்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: இந்திய-ஜப்பான் ராணுவக் கூட்டுறவு வலுப்படுத்தப்பட உள்ளது

Post by M.Saranya on Tue Sep 02, 2014 2:45 pm

நம்முடைய இளைஞர்களின் வளர்ச்சி ஜப்பானியர்களின் கூட்டால் மேலும் அதிகரிக்க வேண்டும்
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: இந்திய-ஜப்பான் ராணுவக் கூட்டுறவு வலுப்படுத்தப்பட உள்ளது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum