ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ரயில் நிலையங்களில் எல்.இ.டி., விளக்குகள்:தெற்கு ரயில்வே
 ayyasamy ram

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 ayyasamy ram

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 ayyasamy ram

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 ayyasamy ram

முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
 ayyasamy ram

திருச்சி: போக்குவரத்து அதிகாரி வீட்டில் 223 சவரன் நகை பறிமுதல்
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி

View previous topic View next topic Go down

சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி

Post by தமிழ்நேசன்1981 on Tue Sep 02, 2014 4:00 pm

சென்னை: தமிழர்கள் சம்மந்தப்பட்ட பிரச்னையில், சுப்ரமணியன் சுவாமியை பேச வைத்து தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆழம் பார்க்கிறாரா? என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில்," ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு எப்படி நடந்துகொள்ளும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து விளக்கியதும், சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கும், அவர்களின் படகுகளை திருப்பித் தராமல் இலங்கை அரசு பிடித்து வைத்திருப்பதற்கும் தான் கூறிய யோசனைகளே காரணம் என்றும் சுப்ரமணியன் சுவாமி பேசியிருப்பது தமிழர்களிடையே, குறிப்பாக அன்றாடம் பாதிப்பிற்குள்ளாகும் தமிழக மீனவர்களிடையே கடும் கோவத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற நாளில் இருந்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள், ஒரிரு நாளில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்குக் காரணம், தமிழக முதல்வர் பிரதமருக்கு விடுக்கும் உடனடி கோரிக்கையும், அதனை ஏற்று பிரதமர் மோடி கொடுக்கும் அழுத்தமே என்று தமிழக பா.ஜ.க.வினர் தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால், மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனரே தவிர, அவர்களின் படகுகளை இலங்கை அரசு விடுவிக்க மறுத்து வருகிறது. தங்களை மட்டும் விடுவித்துவிட்டு, படகுகளை பிடித்து வைத்திருப்பது தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றது என்று மீனவர்கள் கூறி வருகின்றனர்.

இந்தியாவின் அயலுறவு கொள்கை எப்படியிருக்கும் என்பதையும், மீனவர்களின் படகுகளை திருப்பித் தராதீர்கள் என்று இலங்கை அரசுக்கு யோசனை கூறவும் சுப்ரமணியன் சுவாமி யார்? இந்த நாட்டின் அயலுறவு அமைச்சரோ அல்லது இணை அமைச்சரோ அல்ல. மத்திய அரசில் அவர் எந்த அமைச்சரவை பொறுப்பையும் வைத்திருக்கவில்லை. இன்றைய நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், கட்சியின் அரசியல் தந்திர வகுப்புக் குழுவின் தலைவராகவும் மட்டுமே உள்ளார். இக்குழுவில் இடம்பெற்றுள்ள சேஷாத்திரி சாரி என்பவரும் இதேபோல் பேசிவருகிறார். இவர்கள் எப்படி, இந்தியாவின் அயல் விவகாரம் தொடர்பாக கருத்துக் கூறலாம்?

மீனவர் பிரச்சனை பற்றி அயலுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் குழு சந்தித்துப் பேசியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழக மீனவர்களை சந்தித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார். பிறகு, இந்திய – இலங்கை அரசுகளின் மீன்வளத் துறை செயலர்கள் மட்டத்தில் டெல்லியில் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை பிடித்து வைத்திருக்கவும் யோசனை கூறியதே நான்தான் என்று சுப்ரமணியன் சுவாமி கூறியதன் பொருள் என்ன? இப்படியெல்லாம் பேச இவருக்கு யார் அதிகாரம் தந்தது?

சுப்ரமணியன் சுவாமி பேசுவது அவரது சொந்தக் கருத்து என்று அவ்வப்போது தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகின்றனர். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன், சுப்ரமணியன் சுவாமியின் பேச்சு, மீனவர்கள் பிரச்சனையில் சுமூகத் தீர்வு காண்பதில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று வருத்தப்பட்டுள்ளார். தமிழக தலைவர்கள் மட்டுமே இவருடைய கருத்தை எதிர்த்து பேசுகின்றனர். ஆனால், மத்திய அரசோ அல்லது பா.ஜ.க. தலைமையோ அல்லது பிரதமர் நரேந்திர மோடியோ சுப்ரமணியன் சுவாமியின் பேச்சுகள் பற்றி கருத்தேதும் இதுவரை கூறவில்லை. அப்படியானால், சுப்ரமணியன் சுவாமி, மத்திய அரசின் அறிவிக்கபடாத, இரகசிய தூதராக என்று கேட்கிறோம்.

தமிழர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனையில் இப்படி திமிர் பிடித்து கருத்துக்கூற இவருக்கு மத்திய அரசு அதிகாரமளித்துள்ளதா? ஏன் இதனை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கண்டிக்கவில்லை? சுப்ரமணியன் சுவாமியை பேச வைத்து தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஆழம் பார்க்கிறாரா பிரதமர் நரேந்திர மோடி? அப்படியானால், வெளிப்படையாக சொல்லிவிட்டு செய்வதில் ஏன் தயக்கம்?

தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் என்னதான் தமிழினத்திற்கும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் ஆதரவாக பேசினாலும், அதன் இந்தியத் தலைமை தமிழர்கள் பிரச்சனையில் நேர்மையான ஆதரவு தரும் என்ற நம்பிக்கை நாம் தமிழர் கட்சிக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஈழத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கடைபிடித்த அதே ‘கொள்கை’ நிலையையே பா.ஜ.க. அரசும் கடைபிடிக்கும் என்று தேர்தல் பரப்புரையிலேயே பேசினோம். ஏனெனில் தமிழர்களுக்கு எதிரான இன அழித்தல் போருக்கு பா.ஜ.க. தலைமை ஆதரவளித்தது, அதை நாங்கள் மறக்கவில்லை. அதுதான் இப்போது நிரூபணமாகி வருகிறது. நாங்கள் கேட்பதெல்லாம், எங்கள் பிரச்சனைகளில், ராஜபக்சவுடன் நின்றுகொண்டு கருத்துக் கூற சுப்ரமணியன் சுவாமி யார்? இதற்கான விளக்கத்தை நரேந்திர மோடி அரசு உடனடியாக தமிழக மக்களுக்குத் தெரிவித்திட வேண்டும்.
தமிழனுக்கு எதிராகவும், தமிழினத்தின் விடுதலைப் போராட்டதிற்கு எதிராகவும் தொடர்ந்து பேசிவரும் சுப்ரமணியன் சுவாமி, தமிழ்நாட்டிற்கு வந்தால் அவரை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்துவோம். அப்போது, தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகக் கூறும் தமிழக பா.ஜ.க.வும் எங்களோடு இணைந்து போராட வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார்.நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3513
மதிப்பீடுகள் : 966

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி

Post by ayyasamy ram on Tue Sep 02, 2014 7:26 pm

சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்துக்கு எதிராக தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35116
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி

Post by சிவா on Tue Sep 02, 2014 10:32 pm

சீமான் எங்கு எலும்புத் துண்டு கிடைக்கிறதோ அங்கு வாலாட்டுவார். இதுநாள் வரை போராட்டங்கள் என்னத்தைக் கிழித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி

Post by தமிழ்நேசன்1981 on Tue Sep 02, 2014 10:44 pm

ஆம்..இனி வரும் காலங்களில் இவரது பொய்யுரை எடுபடாது..இரட்டை வேடம் கலைந்துவிட்டது..நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3513
மதிப்பீடுகள் : 966

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: சுப்ரமணியன் சுவாமியை வைத்து தமிழர்களை ஆழம் பார்க்கிறாரா மோடி?: சீமான் கேள்வி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum