ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ரயில் நிலையங்களில் எல்.இ.டி., விளக்குகள்:தெற்கு ரயில்வே
 ayyasamy ram

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 ayyasamy ram

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 ayyasamy ram

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 ayyasamy ram

முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
 ayyasamy ram

திருச்சி: போக்குவரத்து அதிகாரி வீட்டில் 223 சவரன் நகை பறிமுதல்
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பொறியாளன்: திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

'பொறியாளன்' திரைப்படத்திற்கு நீங்கள் அளிக்கும் மதிப்பீடு! [2Vote ]

 • ஐந்து

  00%
 • நான்கு

  00%
 • மூன்று

  150%
 • இரண்டு

  150%
 • ஒன்று

  00%

You are not connected. Please login or register

பொறியாளன்: திரை விமர்சனம்

Post by சிவா on Tue Sep 09, 2014 2:48 amஉதயம் என்.எச்.4 என்ற காதல் த்ரில்லர் படம் தந்த மணிமாறன் இதில் ரியல் எஸ்டேட் மோசடி - கந்துவட்டிக் கொடுமை இரண்டையும் இணைத்துக் கதைக்களமாக்கியிருக்கிறார்.

சரவணன் (ஹரீஷ் கல்யாண்) ஒரு சிவில் இன்ஜினீயர். கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் அவன் நேர்மையாக இருப்பதற்காகவே சின்னச் சின்ன அவமானங்களைச் சந்திக்கிறான். ஒரு கட்டத்தில் தானே கட்டுமான நிறுவனம் ஆரம்பிக்க முடிவெடுக்கிறான். அதற்குப் பணம் தேவை. பணத்தில் ஒரு பகுதியை (2 கோடி ரூபாய்) அவனது நண்பன் பிரபு புரட்டிக் கொடுக்கிறான். அது பிரபுவின் பணமல்ல. அவன் வேலை செய்யும் கொடூரமான கந்துவட்டி தாதா சுந்தரின் (அச்சுத குமார்) பணம்.

சுந்தர் ஜெயிலுக்குப் போன சமயத்தில் அவனது பணத்தை எடுத்துப் பயன்படுத்திக்கொண்டு, அவன் ஜாமினில் வெளியே வருவதற்குள் வைத்துவிடலாம் என்பதுதிட்டம். ஆனால் சரவணன், பிரச்சினைக்குரிய நிலத்தை வாங்கியதால் 2 கோடியைப் பறிகொடுக்கிறான். ஜாமின் பெற்று வெளியே வரும் சுந்தரிடம் பிரபு மாட்டிக்கொள்கிறான். தாதாவிடம் பிணைக் கைதியாக இருக்கும் நண்பனைக் காப்பாற்றுவதற்காக, பணத்தை மோசடி செய்த புரோக்கரை தேடிச் செல்கிறான் சரவணன். பணம் கிடைத்ததா, நண்பனை மீட்டானா என்பது மீதிக்கதை. இதற்கு நடுவில் கொஞ்சம் காதல் கதை.

அரசு பதிவுத் துறையில் இருக்கும் ஓட்டைகளால் ஒரே இடம் பலருக்கு விற்கப்படுவதுதான் திரைக்கதையின் மையம். ஆனால், அதை வலுவாகச் சித்தரிக்க அழுத்தமான சம்பவங்கள் இல்லை. பணத்தைக் கொடுத்து ஏமாந்த கதாநாயகன், ஏமாற்றியவனைத் தேடி அலைவதிலேயே பாதிக் காட்சிகள் நகர்கின்றன. இது பார்வையாளர்களை பொறுமையிழக்க வைத்துவிடுகிறது.

சென்னையில் நிலம் வாங்குவது என்கிற விவகாரத்தின் பின்னால் நிலத்தின் உரிமையாளர், வாங்குபவர், இடைத்தரகர்கள், கடன்கொடுக்கும் வங்கிகள், பதிவுத் துறையினர் எனப் பலர் இருக்கிறார்கள். பல தரப்பினரும் ஏதோ ஒரு வகையில் இத்தகைய மோசடிகளை தெரிந்தே ஆதரிக்கிறார்கள் என்பதைச் சின்னச் சின்னக் காட்சிகள் வழியாகச் சொல்கிறார்கள். எதிலும் அழுத்தம் இல்லை. முதல் பாதியில் காதல், இரண்டாம் பாதியில் பிரச்சினை என்று பிரித்துக் கொண்ட திரைக்கதையின் பின் பாதிஇழுவை, படத்தைத் தள்ளாட வைத்துவிடுகிறது. மோசடியைச் சொல்ல ஆசைப்பட்டால் போதாது. நம்பகத்தன்மை கொண்ட அழுத்தமான சம்பவங்கள் மூலம் சொல்ல வேண்டும். மணிமாறன் இதில் தவறியிருக்கிறார்.

ஹீரோயிஸத்தைத் தவிர்த்திருப்பது, வில்லனை தவிர மற்றவர்களைப் பெருமளவில் இயல்பாகச் சித்தரித்துள்ளவிதம் ஆகியவை பார்வையாளர்களைப் படத்துக்கு நெருக்கமாக்குகின்றன. ஆனால் முழுமையாகப் படத்துடன் ஒன்றவைக்கும் மாயாஜாலம் கடைசிவரை நடக்கவே இல்லை. ஹரீஷின் முகம் பார்த்தவுடன் மனதில் பதிகிறது. நடுத்தர வர்க்க இளைஞனாக இயல்பாக நடிக்க முயன்று வெல்கிறார். பணத்தை இழந்துவிட்டோம் என்று தெரியவரும் காட்சியில் இன்னும் கொஞ்சம் கூடுதல் நடிப்பைக் கொடுத்திருக்கலாம்.

சரவணணின் காதலியாக வரும் ஆனந்தி (ரக் ஷிதா), பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்துடன் கவர்கிறார். கவுரவமான தோற்றம் கொண்ட ரவுடியாக இருக்கிறார் அச்சுத குமார். அதிரவைக்கும் குரலில் பேசாமலேயே பயமுறுத்துகிறார். வசனங்கள் கவனிக்கவைக்கின்றன. ‘‘அப்பா, ஜெயில்ல உங்கள அடிச்சாங்களா…ப்பா?’’ என மகள் குழந்தைத் தனமாக கேட்கும்போது ‘‘பணம் இல்லாதவங்களைத்தான் ஜெயில்ல அடிப்பாங்கடா..’’ என்று சொல்லும் வில்லன், ‘‘நிறைய வெச்சிருக்கவனா பார்த்துகடன் கொடுங்கடா. ஒண்ணும் இல்லாதவன்கிட்ட எப்படி வசூலிக்கிறது?’’ என்கிறார். வட்டித் தொழில் வருமானத்துக்காக எந்த எல்லைக்கும் போகும் கதாபாத்திரம். வசனங்களில் வலுவாக நின்றாலும் பாத்திரப் படைப்பில் பழமையின் துரு ஏறியிருப்பது ஏமாற்றம். இதற்குப் பிராயச்சித்தமாக ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சாஸ்திரியின் பச்சோந்தித்தன சித்தரிப்பு கச்சிதம்.

திரைக்கதை ஏற்கெனவே இழுவையாக இருக்க, பாடல்களை அங்கங்கே சொருகியிருப்பது இன்னும் இம்சை. ஆனாலும் பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் கவர்கிறார் எம்.எஸ்.ஜோன்ஸ். வேல்ராஜின் ஒளிப்பதிவு கதைக்களத்துக்கான நியாயத்தைச் செய்திருக்கிறது.

தி இந்து!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொறியாளன்: திரை விமர்சனம்

Post by தமிழ்நேசன்1981 on Thu Sep 11, 2014 11:16 am

பொறியாளன் - விகடன் சினிமா விமர்சனம்

ரியல் எஸ்டேட் புரோக்கரால் ஏமாற்றப்படும் ஹீரோ, சிக்கலில் இருந்து மீள வகுக்கும் 'பொறியாளன்’ வியூகமே... படம்!

சிவில் இன்ஜினீயர் ஹரீஷ் கல்யாண், கட்டுமான நிறுவனம் ஆரம்பிக்கிறார். முதல் புராஜெக்ட்டுக்கு இரண்டு கோடி தேவைப்படுகிறது. கந்துவட்டி தாதா அச்சுதகுமார் சிறையில் இருக்கும் சமயம், அவருடைய பணம் ஹரீஷ் கைக்கு வருகிறது. ஆனால், ஹரீஷ் மோசடி புரோக்கரிடம் பணத்தைப் பறிகொடுக்க, தாதா அச்சுதகுமாரிடம் சிக்கிய ஹரிஷின் நிலை என்ன? திக்திக் திருப்பங்களுக்குப் பதில் சொல்கிறது பின்பாதி!

மோசடி நிலப் பதிவுகள், கந்துவட்டி கொலைகள்... என ரியல் எஸ்டேட் உலகின் கறுப்புப் பக்கங்களை பக்கா சினிமா ஆக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தாணுகுமார். சிவில் இன்ஜினீயரிங் கனவு, ஏரியா ஏஞ்சலுடன் காதல், நிறுவன உரிமையாளருடன் பஞ்சாயத்து... என நிதானமாக நகரும் கதை, கந்துவட்டி தாதா அத்தியாயம் தொட்டதும் கியர் தட்டுகிறது. 'பணம் போச்சு... தாதா வந்துட்டான்... வீட்டுப் பெண்களை நோட்டம் விட்டுப் போயிருக்கான்’ என்று எல்லாம் பி.பி ஏற்றுகிறார்கள். 'அடடா...’ என செமத்தியான ஆக்ஷன் 'சமோசா’ எதிர்பார்த்தால், ஹீரோ எல்லோரையும் நம்பி, 'காமாசோமா’ என்று சுற்றிக்கொண்டே இருக்கிறார்.

' 'சென்னை’னா உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்... எல்.ஐ.சி-தானே? அப்படி ஒரு ஊருக்கே அடையாளம் கொடுக்கிறவங்க சிவில் இன்ஜினீயர்தானே!’ என்று தன் 'சொற்ப சம்பளம்’ வேலை குறித்த பெருமிதமும், காதலியை 'அண்ணனாக’ அதட்டி பின்னர் பிரியம் பொழிவதும், ஏமாந்த பிறகு கலங்கி பின்னர் வெறிகொண்டு அலைவதுமாக... இயல்பாக ஈர்க்கிறார் ஹரீஷ் கல்யாண். அறிமுக நாயகி ரக்ஷிதாவுக்கு சின்ன கேரக்டர். ஆனால், அத்தனை பெரிய கண்களால் லைக்ஸ் குவிக்கிறார். பணத்தைத் திருப்பிக்கொடுக்க அவகாசம் கேட்டு வரும் ஹரீஷையும் அஜய்ராஜையும் பார்த்து, இருக்கையில் இருந்து படாரென எழுந்து உதற வைக்கும் இடத்தில்... முகம்கூடக் காட்டாமல் பயமுறுத்துகிறார் வில்லன் அச்சுதகுமார்.

'ஹீரோ வாங்கியது மோசடி நிலம்’ என்ற ஒரு வரியை நிலைநிறுத்த மிக நீளமாகப் பயணிக்கிறது முன்பாதி. இன்ஜினீயரிங் பட்டதாரி, கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமிக்க ஹீரோ, வாங்கும் நிலத்துக்கு வில்லங்கம் போட்டுப் பார்க்க மாட்டாரா, மோசடிப் பேர்வழி சென்ற விலாசத்தைக் கொடுப்பதோடு போலீஸ் ஒதுங்கிக்கொள்ளுமா..., எனப் பின்பாதி முழுக்க கேள்விச் செங்கல்களை அடுக்குகிறது திரைக்கதை. அதிலும் 'சைவ பட்சினி’ புரோக்கரை கோவா வரை துரத்திச் செல்வது, அவர் பீர் பாட்டிலுக்குப் பயந்து உண்மை சொல்வது எல்லாம்... ஜுஜுலிப்பா!

அடுத்து என்ன நடக்குமோ என்ற டென்ஷனை ஏற்றும் 'பொறியாளன்’, அதைத் தீர்க்கும் 'ஸ்கெட்ச்களிலும்’ பொறிபறக்க வைத்திருக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழுநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3513
மதிப்பீடுகள் : 966

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum