ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 பழ.முத்துராமலிங்கம்

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 ayyasamy ram

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ayyasamy ram

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 ayyasamy ram

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 ayyasamy ram

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அமர காவியம்: திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

'அமர காவியம்' திரைப்படத்திற்கு நீங்கள் அளிக்கும் மதிப்பீடு! [3Vote ]

 • ஐந்து

  00%
 • நான்கு

  133%
 • மூன்று

  267%
 • இரண்டு

  00%
 • ஒன்று

  00%

You are not connected. Please login or register

அமர காவியம்: திரை விமர்சனம்

Post by சிவா on Tue Sep 09, 2014 2:50 am

நடிகர் ஆர்யாவின் சொந்தப் படம்.. ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோ.. என எதிர்பார்ப்புகளுடனும், ‘படத்தின் கிளைமாக்ஸை பார்த்து நடிகை நயன்தாரா கண்ணீர்’ என இலவச விளம்பரத்துடனும் வந்திருக்கும் படம் அமர காவியம். புதிய இயக்குநர் ஜீவா சங்கரின் இந்த படம் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ததா?

பார்த்துப் பார்த்து அலுத்துப்போன விடலைப் பருவத்துக் காதல்தான் கதையின் கரு. ஜீவாவும் கார்த்திகாவும் (மியா ஜார்ஜ்) ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். ஜீவாவின் நண்பன் கார்த்திகாவைக் காதலிக்கிறார். நண்பனின் காதலுக்குத் தூது போகிறான் ஜீவா. அங்கு அவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று ஜீவாவைப் பார்த்துச் சொல்கிறார் கார்த்திகா. நண்பனை ஏமாற்றலாமா என்னும் குழப்பம் இருந்தாலும் கார்த்திகாவின் காதலை ஏற்கிறார் ஜீவா.

காதல் பறவைகளின் பயணத்தில் ஏற்படும் திடீர் திருப்பத்தால் காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள். கட்டுப்பாட்டை மீறித் திமிறும் காதலால் விஷயம் மேலும் சிக்கலாகி இரு குடும்பங்களுக்கு இடையே பிரச்சினையில் போய் முடி கிறது. ஜீவாவின் அதீதமான போக்கி னால் ஏற்படும் விபரீதங்கள் அவனைக் காவல் நிலையத்துக்கும் மனநல ஆலோ சகரிடமும் கொண்டுசெல்கின்றன. கார்த்திகாவின் குடும்பம் ஜீவாவுக்குத் தெரியாமல் ஊரைவிட்டுப் போகிறது. ஜீவா தன் காதலியை விடாமல் துரத்துகிறான். அதனால் ஏற்படும் விளைவுகள்தான் மீதிக் கதை.

படத்தின் கடைசியில் வரும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்துக்காக இரண்டரை மணி நேரம் படத்தை இழுத்திருக்கிறார் இயக்குநர். விடலைப் பருவத்துக் காதலை இவ்வளவு வலிந்து சொல்லியிருக்கத் தேவையில்லை. படத்தில் காதலர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் எல்லாம் செயற்கையான இடைச்செருகல்களாகவே உள்ளன.

நாயகியின் அப்பா நாயகனை அடிக்கிறார். அதற்காக அவரது வீட்டுக்கு நாயகன் தீ வைக்கிறான். நெருப்பு பற்றியெரியும்போது அதே வீட்டின் இன்னொரு அறையில் நாயகனும் நாயகியும் உருகி மருகுகிறார்கள். இப்படிப் பல காட்சிகள் நம்பகத்தன்மை பற்றிய கவலையே இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஜீவா உத்தரவாதம் கேட்கும்போது அதைக் கொடுப்பதில் கார்த்திகாவுக்கு என்ன பிரச்சினை என்று சரியாகச் சொல்லப்படவில்லை.

கிளைமாக்ஸ் காட்சி நிஜ சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. நிஜமாக நடந்ததா, இல்லையா என்பது படத்துக்கு முக்கியம் இல்லை. படத்தில் அது வலுவாகவும் நம்பகத்தன்மையுடனும் சித்தரிக்கப்பட்டிருக்கிறதா என்பதுதான் முக்கியம். அந்த அடிப்படையில் கிளைமாக்ஸ் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.

மெதுவாக நகரும் படங்கள் கவித்துவமாகவோ, ஆழமான தன்மை கொண்டதாகவோ இருந்தால் பாராட்டலாம். அமர காவியம் கவித்துவமும் இல்லாமல் விறுவிறுப்பும் இல்லாமல் இருக்கிறது.

கதை 1988-89களில் நடப்பதுபோல் காட்டப்படுகிறது. ஆனால், 25 ஆண்டுகளுக்கு முந்தைய ரசனை, மேக்கப், உடைகள் ஆகியவற்றைக் காணமுடியவில்லை.

சத்யா நன்கு நடித்திருக்கிறார். மிகத் தீவிரமாக ஒன்றை விரும்பும் ஒருவன் என்னென்ன செய்வானோ, அதையெல்லாம் செய்யும் பாத்திரத்தை நம்பகத்தன்மையோடு சித்தரிக்கிறார். எப்போதும் ஒரே விதமான இறுக்கத்துடன் முகத்தைக் காட்டுவதை தவிர்த்திருக்கலாம்.

மியா அழகாக இருப்பதோடு நன்றாக நடிக்கவும் செய்கிறார். இப்போது வழக்கொழிந்துவரும் மூக்குத்தி எவ்வளவு அழகு என்பதை மூக்குத்தி அணிந்த அவர் முகம் உணர்த்துகிறது.

மைனா, கும்கி போன்ற காதல் படங்களில் அழுத்தமான பாத்திரங்களில் நடித்த தம்பி ராமய்யாவை உப்பு இல்லாத ஊறுகாய்போல பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது. ஓரிரு பாடல்கள் வசீகரிக்கின்றன. ‘ஏதேதோ எண்ணம் வந்து’ பாடல் மனதில் நிற்கிறது.

முதல் காட்சியில் வெண்மேகங்களின் பின்னணியில் வெள்ளை உடை அணிந்த பெண் கருங்கூந்தல் அலைபுரள மிதந்து செல்லும் காட்சி தரும் அழகியல் எதிர்பார்ப்பை ஒளிப்பதிவாளர் படம் முழுவதிலும் பூர்த்திசெய்கிறார். இதே காட்சி தரும் எதிர்பார்ப்பை கதை விஷயத்தில் பூர்த்திசெய்ய இயக்குநர் தவறுகிறார். இருவரும் ஒருவரே என்பதுதான் நகைமுரண்.

‘காவியம்’ என்ற பெயரைத் தாங்கி வந்திருப்பதாலோ என்னவோ.. நாயகனும், நாயகியும் துன்பியல் முடிவைத் தேடிக்கொள்வதை மட்டும் ஏமாற்றாமல் தந்திருக்கிறது ‘அமர காவியம்’.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமர காவியம்: திரை விமர்சனம்

Post by M.M.SENTHIL on Tue Sep 09, 2014 1:38 pmM.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: அமர காவியம்: திரை விமர்சனம்

Post by தமிழ்நேசன்1981 on Thu Sep 11, 2014 11:17 am

அமர காவியம் - விகடன் சினிமா விமர்சனம்

காதலும், காதல் நிமித்தமும், பிரிதலும் அதன் நிமித்தம் உயிர் துறத்தலுமான 'எய்ட்டீஸ்’ கால காதல் காவியம்!

நண்பனின் காதலைச் சொல்லப்போன சந்தர்ப்பத்தில் மியா (அறிமுகம்) மீது காதல் கொள்கிறார் சத்யா. பலப்பல காரணங்கள் சொல்லி இருவரையும் பிரிக்கிறார்கள் பெற்றோர்கள். மன அழுத்தத்துக்கு ஆளாகிறார் சத்யா. காதலர்கள் மீண்டும் சந்திக்கும்போது, கோபதாபங்கள் வெடிக்கின்றன. அடுத்தடுத்து சத்யா எடுக்கும் அதிர்ச்சி முடிவுகளே... படம்!

தகவல் தொடர்பே இல்லாத 80-களில், அன்றைய காதலர்களின் ரகசியக் கொண்டாட்டங்களையும், பிரிவு வேதனைகளையும் மென்மையாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ஜீவா சங்கர். காதலுக்கு நண்பர்கள், பெற்றோர் மட்டுமே எதிரி அல்ல... தகவல் தொடர்பின்மை யும்தான் என்பதைச் சொன்ன விதம் கிளாஸ்.

'ஹீரோ’ சத்யா... அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். காதலியைப் பார்க்கும்போது எத்தனை சந்தோஷ மின்னல்கள் முகத்தில் தெறிக்க வேண்டும்!? சின்ன சிரிப்பைத் தவிர, மற்ற உணர்வுகள் வருவேனா என்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் ஃபிலிம் சத்யா!

நாயகி மியாவுக்கு படம் அட்டகாச கிரீட்டிங் கார்டு! குறும்பு கொப்பளிக்கும் கண்கள், க்யூட் ஸ்வீட் ரியாக்ஷன்கள் எனக் கவிதை வாசிக்குது பொண்ணு.

மெதுமெதுவாக நகரும் காட்சிகள், திருப்பமே இல்லாத திரைக்கதை எனப் படம் முற்பாதியில் ஸ்லோமோஷன் சினிமா. காதலர்கள் இடையிலான சிக்கலுக்கு அவர்களின் 'பொசஸிவ்’ குணமும்கூட காரணமாக இருக்கலாம் என்பதை பிற்பாதி வசனங்களிலும் காட்சிகளிலும் இயல்பாக விவரித்திருக்கிறார்கள். 'அவன் உன்னைக் காதலிக்கிறான்னா, நீ ஏன் நாம காதலிக்கிறதை இன்னும் அவன்கிட்ட சொல்லலை? நீ அமைதியா இருக்கிறதைப் பார்த்துட்டு நீயும் காதலிக்கிறேனு தப்பாப் புரிஞ்சுப்பான்ல’ என சத்யா, மியாவிடம் குமுறும் இடம் ஓர் உதாரணம்.

இசைக்கருவிகளை காதல் கருவிகளாக மாற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். 'தாகம் தீர...’, 'மௌனம் பேசும்...’ பாடல்களிலும் படம் நெடுகிலும் பின்னணி இசையில் அத்தனை காதல். ஜீவா சங்கரின் ஒளிப்பதிவில் ஊட்டி ஜில்லிப்பு... நம் விழிகளில்!

80-களின் காதல் கதையைக் களமாகக் கொண்டவர்கள், இன்னும் மனதுக்கு நெருக்கமான காட்சிகளைப் பிடித்திருக்க வேண்டாமா? எவ்வளவு எக்ஸ்ட்ரீம் போனாலும், காதலி சொல்வதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது கூடத் தெரியாமலா ஒரு காதலன் இருப்பான்? அமரகாவியம் என்று டைட்டில் வைத்ததற்காகவே, அப்படி ஒரு திகீர் கிளைமாக்ஸ்போல!

'எய்ட்டீஸ்’ இளைஞர்களுக்கு படம் 'அமரகாவியமா’க இருக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழுநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3518
மதிப்பீடுகள் : 969

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: அமர காவியம்: திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum