புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_m10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10 
39 Posts - 49%
heezulia
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_m10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_m10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10 
3 Posts - 4%
jairam
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_m10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10 
2 Posts - 3%
சிவா
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_m10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_m10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_m10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_m10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_m10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_m10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10 
14 Posts - 4%
prajai
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_m10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10 
9 Posts - 3%
jairam
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_m10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_m10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_m10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_m10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_m10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_m10சிந்தனைச் சுரங்கம் பெரியார்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைச் சுரங்கம் பெரியார்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 11, 2014 8:46 pm

தந்தை பெரியார் போற்றி ஒழுகத்தக்க ஒப்பற்ற ஒரு சுய சிந்தனையாளர், அள்ள அள்ளக் குறையாத சிந்தனைச் சுரங்கம், தமிழகத்தில் தோன்றி வாழ்ந்தார்; தொண்ணூற்று ஐந்து வயது வரை தொய்வின்றி பட்டி தொட்டியெல்லாம் சுற்றிச் சுழன்று புரட்சிகரமான சிந்தனைகளை மக்களின் மனவயலில் விதைத்தார்; உலகின் எந்தப் பகுதியில் வாழ்கிறவர், இனி வாழ்பவராக இருந்தாலும் கடைப்பிடிக்கத்தக்க மிகச் சிறந்த வாழ்க்கை நெறிகளைப் பரப்பினார். 'மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்று புரட்சிக் கவிஞர் சொன்னது போன்ற சிந்தனையாளராகவும் அதேசமயம் தன் சிந்தனைகள் தன் வாழ்நாளிலேயே கடைப்பிடித்து வெற்றிகண்ட சாதனையாளராகவும் திகழ்ந்தவர்.
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  5(8)
பெரியாரின் சாதனைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது ''பெரியார் எந்த நாட்டிலும் இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை இருபதே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார்'' என்றார் பேரறிஞர் அண்ணா. பெரியாரைப் போன்ற அறிவுலக மேதைகள், சிந்தனையாளர்கள் பலரின் வாழ்வு முடிந்து போன பிறகுதான் அவர்கள் வரலாறானார்கள். ஆனால் வாழ்கிற போதே வரலாறானவர் பெரியார். அவர் அறிவுக்கு, ஆற்றலுக்கு, வாய்மைக்கு, நேர்மைக்கு, அகத்தூய்மைக்கு, உழைப்புக்கு, ஒழுக்கத்திற்கு, உயர்வுக்கு, பண்புக்கு, படிப்புக்கு, மதிப்புத் தர வேண்டும் என்றார். கடவுள், மதம், சாதி, மூடப் பழக்கவழக்கம், குருட்டு நம்பிக்கை, சாத்திரம், சம்பிரதாயம், பில்லி சூனியம், மந்திரம் தந்திரம், பேய், பிசாசு, பூதம் போன்றவை பற்றிய கருத்துக்களை ஒழிக்க வேண்டும் என்றார்.

பெரியார் யார்?

உலகில் வெகு சிலர்தான் தங்களைப் பற்றிய சுயமதிப்பீடு செய்துகொண்டவர்களாக இருக்கிறார்கள். இதை, தன் மேலாண்மை அறிவியலில் 'ஷிகீளிஜி ணீஸீணீறீஹ்sவீs’ என்பார்கள். பல்வேறு கோணங்களில் தன்னையே படம் பிடித்துக் காட்டுகிறார் தந்தை பெரியார். இதோ...

''ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல், மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியில் இருப்பவன். அத்தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ... இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு, கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும் இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே எண்ணுகிறேன்.

என்னைப் பொறுத்தமட்டிலும் நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால் அதற்குத் தனிச் சக்தி உண்டு என்று நம்புகிறவன்.

ஒரு பகுத்தறிவுவாதி என்கின்ற எனக்கு மதப் பற்றோ, கடவுள் பற்றோ, இலக்கியப் பற்றோ, மொழிப் பற்றோ எதுவும் கிடையாது. அறிவிற்கு ஏற்றது, மக்களுக்கு உண்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சியடையச் செய்வது எனவோ அதைப் பற்றியே பேசுவேன்''.
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  2(30)
பகுத்தறிவுச் சிந்தனைகள்

எவ்வளவு கூர்மையாகவும், ஆழமாகவும் சுதந்திரமாகவும் சிந்தித்து அருமையான கருத்து மணிகளை அளித்திருக்கிறார் பெரியார். இதோ படித்துப் பாருங்கள்...

''மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அது ஆராய்ச்சிக்காக ஏற்பட்டது. ஆனால், மனிதன் கண்மூடித் தனமாக தன் அறிவைப் பயன்படுத்தி, அதிகமான தொல்லையில் மாட்டிக் கொண்டிருக்கிறான். இந்த தொல்லைக்குப் பரிகாரமாகக் கடவுளை உருவாக்கிக் கொண்டான்.

எதற்கும் பகுத்தறிவை உபயோகிக்க விடாமலும் ஆராய்ச்சி செய்யவோ, ஆலோசனை செய்து பார்க்கவோ இடம் கொடுக்காமலும் அடக்கி வைத்த பலனே நமது நாட்டின் இன்றைய இழிந்த நிலைக்கும், குழப்பத்திற்கும் காரணமாய் இருக்கிறது.

வாழ்க்கையில் பேத நிலையும், போதவில்லையே என்கின்ற மனக்குறையும், தனிப்பட்ட சுயநலப் போட்டித் தொல்லையும் எந்த நாட்டிலாவது இருக்குமானால், அந்த நாட்டு மக்களுக்கு முழுப் பகுத்தறிவு இல்லை என்றும் எந்த நாட்டிலாவது அவை இல்லாமல் வாழ்வில் மக்கள் மனத்திருப்தியுடன் இருப்பார்களானால் அந்த நாட்டில் பகுத்தறிவு ஆட்சி புரிகிறது என்றும்தான் அர்த்தம்.

பேராசையில்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும் அனுபவத்துக்கும் ஒவ்வாததை ஒரு காலமும் நம்ப மாட்டான், பின்பற்ற மாட்டான்.

கடவுள் சொன்னது, மகான் சொன்னது, ரிஷி சொன்னது, அவதார புருஷர்கள் சொன்னது என்று பார்க்கிறானே ஒழிய, தன் புத்தி என்ன சொல்கிறது என்று பார்ப்பதே இல்லை. பகுத்தறிவிற்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்.

எந்தக் காரியமானாலும் எந்த நிகழ்ச்சியானாலும், எதைச் செய்தாலும் அதற்குமுன் 'இது ஏன்? எதற்காக? அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு, அறிவிற்கு ஒத்து வருகிறதா?’ என்று பார்க்க வேண்டும். அப்போதுதான் அறிவு வளர்ச்சி ஏற்படும்''.

சுயமரியாதை

மனிதனுக்கு மானத்துடன் வாழ சுயமரியாதை வேண்டும். அது குறித்து தந்தை பெரியாரின் சிந்தனைகள் இதோ:

''இந்தியாவில் மதமும், அரசியலும், பொருளாதாரமும், சமூக வாழ்வும் வகுப்பு பேதத்தை அடிப்படையாகக் கொண்டே இருந்து வருகிறது. அதனாலேயேதான் சமூகத்தில் சிலர் மேலாகவும், பலர் கீழாகவும் வாழ வேண்டியிருப்பதுடன் மக்களுக்கு இவ்வகையில் சுயமரியாதை உணர்ச்சியே இல்லாமலும் போய்விட்டது.

நமது நாட்டில் உயர்ந்த சாதி என்கிற கொள்கை ஒழிந்து, தாழ்ந்த சாதி என்கிற கொள்கை அழிந்துவிட்ட பிறகுதான் சுயமரியாதையை நினைப்பதற்கு யோக்கியதை உண்டு.
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  3(15)
மனிதனுக்கு எல்லாவற்றையும் விட முக்கியமான உணர்ச்சியான மான அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத்தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில் 'மனிதன்’, 'மானுடன்’ என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள். ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன். எனவே மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான். அத்தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண்டிருக்கிறான்.

உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்குத் தோன்றிவிட்டால் அதுவே அரசியலையும், தேசியத்தையும் மற்றும் மத இயலையும் தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும்''.

சமூகச் சீர்திருத்தம்

சமூக சீர்திருத்தச் சிற்பி தந்தை பெரியார். புரட்சி எரிமலையாக வாழ்ந்தவர். தமது தொண்ணூற்று ஐந்தாம் வயதில், சென்னையில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டைக் கூட்டினார். அந்த மாநாட்டில்தான் அரசியல் சட்டத்தில் 17வது விதி கூறுகிறதே. அதிலுள்ள 'தீண்டாமை’ என்பதற்குப் பதிலாக 'சாதி’ என்ற சொல்லை மாற்றி சாதி ஒழிப்பை அரசியல் சட்டமே பிரகடனப்படுத்துவதாக அமைய கிளர்ச்சி நடத்த முடிவு எடுத்தார். பெரியாரின் சமூக சீர்திருத்தச் சிந்தனைகள் இதோ! ''நாம் அரசியல் துறையில் முன்னேறி மாற்றம் பெற்றிருக் கிறோமே தவிர, சமுதாயத் துறையில் இன்னமும் பிற்போக்கான நிலையில்தான் இருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும். சீர்திருத்தம் என்பது தேவையற்றதை நீக்கிவிட்டுத் தேவையுள்ளதை மட்டும் வைத்துக் கொள்வதேயாகும்.

அநேக காரியங்களில் மற்றவர்களால் நாம் துன்பமும் இழிவும் அடையாமல், நம்மாலேயே நாம் இழிவுக்கும் கீழ் நிலைக்கும் ஆளாகி வருகிறோம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல் நமக்குள் ஒரு பெரிய மனமாறுதல் ஏற்படாமல், நமது சமூகம் மாறுதலடைவதென்பது ஒரு நாளும் முடியாத காரியமாகும்.

சமுதாயச் சீர்திருத்தம் அரசியலை விட்டுத் தனித்திருக்க முடியாது. அரசியல் சீர்திருத்தமும், சமூகத்தை விட்டுத் தனித்திருக்க முடியாது. மனித சமூகத்துக்காகத்தான் அரசியல் நடக்கிறது. அரசியல் காரியம் ஒவ்வொன்றும் சமூக நலனைப் பொறுத்ததே ஒழிய வேறில்லை. அரசியல் சட்டமும் பாதுகாவலும் சமூகத்துக்காகவும் சமூக நலனை அனுசரித்தும் செய்யப்பட்டதே தவிர வேறில்லை''.

கல்விச் சிந்தனை

உலகின் வளர்ந்த நாடுகள் எந்தக் காரணத்தால் வளர்ந்த நாடானது என ஓர் ஆராய்ச்சி அண்மையில் நடத்தப்பட்டது. அதன் முடிவு. பொருளாதாரத்தில் வளர்ந்ததால் வளர்ந்த நாடாகவில்லை. கல்வியில் வளர்ந்ததால் பொருளாதார வளத்திலும் வளர்ந்தன. இன்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்ந்து அறிந்த இந்தச் சிந்தனையை 80 ஆண்டு களுக்கு முன்பே முன்னோக்கிச் சிந்தித்து அறிவித்த மாமேதை பெரியார். இதோ சொல்லுகிறார், கேளுங்கள்...

''ஒரு நாட்டு மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டுமானாலும் அவர்கள் நாகரிகம் பெற்று வளர்ந்த நல்வாழ்க்கை நடத்த வேண்டுமானாலும் அரசியல், பொருளியல், தொழிலியல் ஆகிய துறைகளில் தகுந்த ஞானம் பெற வேண்டுமானாலும் அந்நாட்டு மக்களுக்கு முதலில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.'' (குடியரசு 26.12.1937). இதனால்தான் யுனெஸ்கோ பெரியாரை 'தென்கிழக்கு ஆசியாவின் தீர்க்கதரிசி’ என்று பாராட்டியது.
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  4(7)
அவரே மேலும் சொல்கிறார், ''ஆசிரியர்கள் பயன்படக் கூடியவர்களாக இருக்க வேண்டுமானால், அவர்கள் ஓரளவுக்காவது சுதந்திர புத்தியுள்ளவர்களாகவும், பகுத்தறிவுக்குச் சிறிதாவது மதிப்புக் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிகாரிகள் எல்லோரும் மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, நாணயம் இவைகளை வளர்க்க முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நமது கல்வி முறை மாற வேண்டும். படிக்கும் போதே அத்துடன் தொழிலும் பயில வேண்டும். எந்த வகுப்பில் ஒருவன் படிப்பை நிறுத்தினாலும் அவன் தொழில் செய்து பிழைக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். மக்கள் அத்தனை பேரும் தொழில் பழகியவர்களாக இருக்க வேண்டும்''.

மொழி குறித்த சிந்தனைகள்

தமிழ் மொழிக்கு மரபுவழி கூறப்படும் புனிதத் தன்மையை எள்ளி நகையாடிய பெரியாரின் மொழி பறறிய சிந்தனைகள் இதோ!

''மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும். அப்போர்க் கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்.

தமிழ் நம் நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டில் பிற எம்மொழியையும் விட தமிழ் நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுவதால் மற்ற வேற்றுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதாடு மேலும் மேலும் நன்மைடைவோம். நம் பழக்கவழக்கங்களுக்கேற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துக்கள், கேடுபயக்கும் கருத்துக்கள், நம்மிடை புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன''.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி தெளிவான கருத்துகளைக் கொண்டிருந்தார் தந்தை பெரியார். ''எல்லா உயிர்மெய் எழத்துக்களுக்கும் ஆகாரம் ஏகாரம் ஆகிய சப்தங்களுக்கு £, « ஆகிய துணை எழுத்துக் குறிகளைச் சேர்த்து எப்படி கா, கே என்று ஆக்கிக் கொள்ளுகின்றோமோ அதுபோலவே கி, கீ, கு, கூ முதலிய சப்தங்களுக்கும் ஒரு தனிப்பட்ட குறிப்பு அடையாளத்தை ஏன் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது மிகவும் யோசிக்கத் தக்கதாகும். மேலும் சொல்லுகிறார் பெரியார். உயிரெழுத்துக்கள் என்ப¬வகளில் ஐ, ஒள என்கின்ற இரண்டு எழுத்துக்களும் தமிழ் மொழிக்கு அவசியமில்லை என்பதே எனது வெகுநாளைய அபிப்பிராயமாகும். ஐ காரம் வேண்டிய எழுத்துக்களுக்கு '¬’ இந்த அடையாளத்தைச் சேர்ப்பதற்குப் பதிலாக 'ய்’ என்ற எழுத்தைப் பின்னால் சேர்த்துக் கொண்டால் ஐகார சப்தம் தானாகவே வந்து விடுகிறது.

எழுத்துக்களை உருவம் மாற்றுவது, குறிப்புகள் ஏற்படுத்துவது, புதிய எழுத்துக்களைச் சேர்ப்பது என்பது போலவே சில எழுத்துக்களை, அதாவது அவசியமில்லாத எழுத்துக்களைக் குறைக்க வேண்டியதும் அவசியமாகும்.

இலக்கியம் என்பது நாகரிகத்தைப் புகட்ட வேண்டும். மக்களிடம் உயரிய எண்ணங்களைப் புகுத்துவதாக இருக்க வேண்டும்.

குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை, உணர்ச்சி பெறுவார்கள். அரசியல் ஞானம், சமூக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய எல்லாம் அதில் அடங்கியுள்ளன. குறள் ஒரு அறிவுக் களஞ்சியம். பகுத்தறிவு மணிகளால் கோர்க்கப்பட்ட நூல்''.

பெண்ணுரிமைச் சிந்தனைகள்

பெரியார் அளவுக்கு பெண்ணுரிமைக்காக பாடுபட்டவர்கள் யாரும் இந்நாட்டில் இல்லை. விடுதலைப் போராட்டத்தில் தமது குடும்பத்துப் பெண்ணையும் சிறை செல்லச் செய்து நாட்டிற்கு முன்னுதாரணமானவர். அவரது பெண்ணுரிமைச் சிந்தனைகள் இதோ...

''மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயழிய தன்னைப் போன்ற, உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.

நாம் உடை, நகை இவற்றுக்கு நிறையச் செலவிடுகிறோம். பெண்களுக்கு எவ்வளவுக்கெவ்வளவு நகை, உடை ஆசை ஏற்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அடிமை உணர்ச்சிதான் ஏற்படுமே ஒழிய சுதந்திர உணர்ச்சி ஏற்படுவது கிடையாது.

பெண்கள் மதிப்பற்றுப் போவதற்கும் அவர்கள் வெறும் போகப் பொருள்கள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கியக் காரணமே பெண்கள் ஆசையாய்த் தங்களைச் சிங்காரித்துக் கொள்வதேயாகும்.
சிந்தனைச் சுரங்கம் பெரியார்  1(51)
திருமணம் செய்வதற்கு முன்பு பொருத்தம் பார்க்கிறார்களே... அதில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் சம தோற்றம், சம அன்பு, ஒத்த அறிவு, கல்வி ஒற்றுமை இருக்கிறதா என்று கருதுவதில்லை. அதற்கு மாறாக நமது பிள்ளைக்கு அந்தப் பெண் தலைவணங்கிக் கட்டுப்பட்டு அல்ல, அடிமையாக இருக்குமா என்ற கருத்தில் மாடுகளை விலைக்கு வாங்குவதற்கு என்னென்ன பொருத்தங்கள் பார்க்கிறோமோ அதையேதான் பெண்கள் பிரச்னையிலும் பார்க்கிறார்கள்.

பெண்களுக்குத்தான் கற்பு; ஆண்களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத்துவமே தனியுடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால் பெண், ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவளின் நிலைமை.

ஆண், பெண் சமத்துவமாய்ப் பாவிக்கப்பட்டு சமத்துவமாய் நடத்தப்படுவதாக இருந்தால்தான் வாழ்க்கை ஒப்பந்தங்கள் அதாவது திருமணக் காரியங்கள் இருக்க வேண்டுமே ஒழிய, அப்படி இல்லாவிட்டால் பெண்களை திருமணம் இல்லாமல் தனித்து வாழ்வதே மேல் - எதற்காக ஆணுக்குப் பெண் அடிமையாக இருக்க வேண்டும்''.

'அளவான குடும்பம் வளமான வாழ்வு’ என்னும் கொள்கையை இந்நாட்டு மக்களிடையே பரப்பிய முன்னோடி தந்தை பெரியார். அறிவோடு சிக்கனமாக வாழ வேண்டும். வரவிற்கு மேல் செலவிட்டுப் பிறர் கையை எதிர்பார்ப்பதும், ஒழுக்கக் கேடான காரியங்களுக்கு இடம் கொடுப்பதுமான காரியங்கள் இன்றி வரவிற்குள் செலவிட்டு கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும்'' என்பார் பெரியார்.

ஏற்று நடப்போம்

பெரியாரின் சிந்தனைகளைத் தோண்டத் தோண்டக் குறையாத சுரங்கமாக அது ஆழ்ந்து கொண்டே போகும். தத்துவ சுய சிந்தனைகளால் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வாழ்ந்து அதில் பெரும் பகுதியை பொதுத் தொண்டிலேயே அதுவும் கிளர்ச்சி, மறியல்கள், போராட்டம் என ஓயாது சுழன்றுகொண்டே இருந்த பகுத்தறிப் பகலவன். முதல் அரசியல் சட்டத் திருத்தம் காண நிகழ்த்திய போராட்டம் முதலாக அளப்பரிய களம் கண்ட பெரியார் எந்த ஒன்றிலும் பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தவரில்லை தனியார் பொருளுக்கு நட்டம் ஏற்படுத்தியதில்லை.

பேரறிஞர் அண்ணா எழுதியதுபோல் தந்தை ஈ.வெ.ராமசாமிப் பெரியார் வயதில், அறிவில் பெரியார்; சிந்தனையில் பெரியார்; தொண்டில் பெரியார்; சிறைக் கூடத்தைத் தவச்சாலையாக இருபத்தோரு முறை கொண்ட பெரியார்; சாதனையில் பெரியார். அத்தகைய பெரியாரின் பெரியார் சிந்தனைச் சுரங்கத்தில் கிடைத்த வைரமணிகளைத்தான் உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன். ஏற்று நடப்பீர்! ஏற்றம் பெறுவீர்!!
முனைவர் பெரு.மதியழகன்
(கட்டுரையாளர் அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றுகிறார்)


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 11, 2014 10:33 pm

சிந்தனைச் சுரங்கம் பெரியார்  103459460 சிந்தனைச் சுரங்கம் பெரியார்  3838410834
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக