ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 SK

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

ஆதார் காட்டுங்க....!!
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 Dr.S.Soundarapandian

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 SK

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 Dr.S.Soundarapandian

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 Dr.S.Soundarapandian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

திரைப் பிரபலங்கள்
 heezulia

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 மூர்த்தி

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by சிவா on Wed Sep 10, 2014 6:53 pm

First topic message reminder :

காஷ்மீரில் 50,000 பேர் மீட்பு: வெள்ளம் வேகமாக வடிவதால் மீட்புப் பணியில் முன்னேற்றம்

ஜம்மு - காஷ்மீரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 50,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 215 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பசியில் தவிக்கும் ராணுவத்தினர் குடும்பங்கள்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணியில் மும்முரமாக முப்படையினரும் ஈடுபட்டுவரும் நிலையில், ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் 1,000 பேர் உதவியின்றி தவித்து வருகின்றனர்.

சீறிப்பாயந்த ஜீலம் நதி காஷ்மீரையே புரட்டிப்போட, தெற்கு, மத்திய காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம்கள் பல வெள்ளத்தல் சூழப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள மத்திய, தெற்கு காஷ்மீர் பகுதிகளில் மட்டும் 20 ராணுவ முகாம்கள் இருக்கின்றன. இந்த முகாம்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது, தொலைதொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முகாம்களில் இருக்கும் உணவுப் பொருட்கள் பெரும்பான்மை பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாதுகாக்கப்பட்டுள்ளதால், போதிய அளவு உணவுப் பொருட்கள் இல்லாமல் ராணுவத்தினர் குடும்பங்கள் தவித்து வருகின்றனர்.

இது குறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட 1000 பேர் இன்னும் மீட்கப்படவில்லை. இதனால் உணவு, தண்ணீர் இல்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்" என்றார்.

50,000 பேர் மீட்பு

காஷ்மீரில் பெய்த கன மழை காரணமாக சிந்து நதியின் கிளை நதியான ஜீலம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வரலாறு காணாத பெருவெள்ளத்தில் மாநிலமே கடும் பாதிப்புக்குள்ளானது.

தற்போது அங்கு மழை குறைந்துள்ளது, வெள்ளம் வடிந்து வருகிறது. இதுவரை 50,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 215 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகே நீரில் மூழ்கிய பகுதிகளுக்குச் செல்ல முடியும். அப்போதுதான் பலி எண்ணிகையை துல்லியமாக உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டுவந்த பலர் தாங்கள் அனுபவித்த துயரத்தை விவரித்தனர். தாங்கள் மீட்கப்படும்போது அப்பகுதியில் மற்றும் சிலர் எழுப்பிய அபயக்குரல் அடங்கியது என்றும், எனவே அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

மீட்புக் குழுவினர் மீது தாக்குதல்:

இதற்கிடையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீது பொதுமக்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிறைய பேர் சிக்கியிருப்பதாகக் கூறி மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கே செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் வேறு பகுதிக்கு செல்ல திட்டமிட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் மீட்புப் படை வீரர் ஒருவரது கை பலமாக பாதிக்கப்பட்டது. காயமடைந்த வீரர் சிகிச்சைக்காக சண்டிகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "மீட்புக் குழுவினர் மீது மக்கள் ஆங்காங்கே தாக்குதல் நடத்திவருவது வருத்தமளிக்கிறது. மீட்புக்குழுவினருக்கான பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்" என்றார்.

இதற்கிடையில் ஜம்மு - காஷ்மீரில் நிலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைவர் ஓ.பி.சிங்கை காஷ்மீர் செல்லுமாறு அரசு பணித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by M.Saranya on Sat Sep 13, 2014 6:42 pm

கார்ப்பரேட் நிறுவன முன்னேற்றத்தை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு நதிகள் இணைப்பு திட்டத்தை துரிதப்படுத்தலாம்.
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by சிவா on Tue Sep 16, 2014 4:55 am

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு காஞ்சி காமகோடி பீடம் ரூ.10 லட்சம் நிதியுதவி

காஞ்சி காமகோடி பீடம் சென்னபூரி பக்த ஜன சமாஜம் ஒருங்கிணைப்பாளர் வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பேரழிவுக்கு நாடு முழுவதிலிருந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஸ்ரீகாஞ்சி மடம் சார்பில் ரூ.10 லட்சம், பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்து பக்தர்களால் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by சிவா on Tue Sep 16, 2014 4:56 am

காஷ்மீரில் பதினோரு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல்

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான பர்வேஸ் ரசூல் அம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பதினோரு நாட்கள் அவதிப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பேஹரா பகுதியில் உள்ள அவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்த போது அவர் செய்த முதல் வேலை, தன்னுடைய கிரிக்கெட் கிட்டை முதல் மாடிக்கு தூக்கிச்சென்றது தான். அதன் பின் பதினோரு நாட்களுக்கு தான் அவதிப்பட்டது குறித்து அவரே கூறியதாவது; சமூகத்திலிருந்து என்னை முற்றிலும் விலக்கியதுடன் தொலைபேசி மற்றும் செல்போன்களும் வேலை செய்யவில்லை. இண்டர்நெட் இணைப்பும் சிடைக்கவில்லை. நானும் எனது பெற்றோரும் உதவிக்கு யாருமின்றி தவித்து வந்தோம்.

தரைதளம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்ததால் நாங்கள் முதல் தளத்திற்கு வந்துவிட்டோம். தற்போது நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம் என்று எனது நண்பர்கள் மற்றும் ஏனையோருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ரசூல் கூறினார். அம்மாநில ரஞ்சி அணியின் தலைவராக உள்ள ரசூல், இந்த வருடம் தான் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். தற்போது தனது வீட்டிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் செல்போன் இணைப்பு வேலை செய்வதாக ரசூல் கூறியுள்ளார். ஆனால் தன்னையும், தனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரையும் காணவில்லை என்ற போலியான செய்தி தனக்கு கிடைத்ததால் தான் வெளியுலகை தொடர்பு கொண்டதாக ரசூல் தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by சிவா on Tue Sep 16, 2014 4:56 am

காஷ்மீரில் பதினோரு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல்

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான பர்வேஸ் ரசூல் அம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பதினோரு நாட்கள் அவதிப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பேஹரா பகுதியில் உள்ள அவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்த போது அவர் செய்த முதல் வேலை, தன்னுடைய கிரிக்கெட் கிட்டை முதல் மாடிக்கு தூக்கிச்சென்றது தான். அதன் பின் பதினோரு நாட்களுக்கு தான் அவதிப்பட்டது குறித்து அவரே கூறியதாவது; சமூகத்திலிருந்து என்னை முற்றிலும் விலக்கியதுடன் தொலைபேசி மற்றும் செல்போன்களும் வேலை செய்யவில்லை. இண்டர்நெட் இணைப்பும் சிடைக்கவில்லை. நானும் எனது பெற்றோரும் உதவிக்கு யாருமின்றி தவித்து வந்தோம்.

தரைதளம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்ததால் நாங்கள் முதல் தளத்திற்கு வந்துவிட்டோம். தற்போது நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம் என்று எனது நண்பர்கள் மற்றும் ஏனையோருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ரசூல் கூறினார். அம்மாநில ரஞ்சி அணியின் தலைவராக உள்ள ரசூல், இந்த வருடம் தான் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். தற்போது தனது வீட்டிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் செல்போன் இணைப்பு வேலை செய்வதாக ரசூல் கூறியுள்ளார். ஆனால் தன்னையும், தனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரையும் காணவில்லை என்ற போலியான செய்தி தனக்கு கிடைத்ததால் தான் வெளியுலகை தொடர்பு கொண்டதாக ரசூல் தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum