ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 T.N.Balasubramanian

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 ayyasamy ram

நண்பன் - கவிதை
 ayyasamy ram

என்னவள்! – கவிதை –
 ayyasamy ram

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

நீங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்....!!
 Dr.S.Soundarapandian

கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)
 Dr.S.Soundarapandian

[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
 ajaydreams

பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம்
 ayyasamy ram

இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு
 ayyasamy ram

கோகுலாஷ்டமி
 T.N.Balasubramanian

கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்!
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
 T.N.Balasubramanian

தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
 Dr.S.Soundarapandian

ஒன்றை மட்டும் பார், இரண்டிருக்காது…!!
 Dr.S.Soundarapandian

ஞாபக மறதியைப் போக்க வழி !
 ayyasamy ram

மனைவி அமைவதெல்லாம் இறைவன்..........
 ayyasamy ram

நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு; தமிழக அரசு அவசர சட்டம்
 M.Jagadeesan

-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்."
 T.N.Balasubramanian

தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
 Dr.S.Soundarapandian

தரமணி - நவீன அவள் அப்படித்தான் !
 Dr.S.Soundarapandian

தலை கீழாக நின்றாலும் மாறமாட்டேன்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Wed Aug 20, 2014 9:28 pm

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை

ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டவர். அந்த வீடியோவின் இறுதியில் மற்றொரு அமெரிக்கரும் தோன்றுகிறார். அவர் சிரியாவில் இருந்து 2013ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர்.

ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதற்காகவே இந்த படுகொலையை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.


Last edited by சிவா on Mon Sep 15, 2014 10:21 pm; edited 1 time in totalசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Thu Aug 21, 2014 5:42 am

ஐ.எஸ். தீவிரவாதிகளால் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டதை பார்த்து உலகமே திகைத்து நிற்கிறது:

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ‘ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் பிடித்துள்ளனர். அவற்றை ஒன்றிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

அவர்கள் பிடித்து வைத்துள்ள பகுதிகளை மீட்கவும், மேற்கொண்டு தாக்குதல் ஏதும் நடக்காமல் தடுக்கும் வகையில் ஈராக்கில் உள்ள அவர்கள் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குல் நடத்துகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் செய்தி சேகரிக்கும் அமெரிக்க பத்திரிகை நிருபரை தலை துண்டித்து படுகொலை செய்தனர்.

இந்த நிருபரின் பெயர் ஜேம்ஸ் போலே. இவர் சிரியாவில் செய்தி சேகரித்து வந்தார். கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் 22–ந்தேதி முதல் இவரை காணவில்லை. இவருடன் ஸ்டீவன் ஜோயல் கோட்லாப் என்ற நிருபரும் மாயமானார்.

இந்த நிலையில் ‘ஐ.எஸ்' தீவிரவாதிகள் ‘யூடியூப்’ மற்றும் ‘அல் புர்கான் மீடியா’ ஆகிய இணைய தளங்களில் ஒரு வீடியோவை ஒளிபரப்பினர். 4 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில் நிருபர் ஜேம்ஸ் போலேயின் தலை துண்டித்து கொலை செய்யப்படும் காட்சி இடம் பெற்றிருந்தது. தீவிரவாதிகளின் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஒபாமா, ஒட்டுமொத்த உலகமே பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலே கொல்லப்பட்ட விதத்தை பார்த்து திகைத்து நிற்கிறது என்றார். கொடூரமான இச்செயலை செய்த இந்த தீவிரவாத புற்றுநோயை ஒழிக்க பொதுவான முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும், அப்போது தான் இப்படிப்பட்ட தாக்குதல்கள் பரவாமல் தடுக்க முடியும் எனவும் ஒபாமா மேலும் கூறியுள்ளார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Thu Aug 21, 2014 10:38 pm

அமெரிக்க பத்திரிகையாளர் தலையை துண்டித்தது பிரிட்டிஷ் ஜிகாதியா?- ஆய்வில் பரபரப்பு தகவல்

அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலேவை தலையை துண்டித்து கொலை செய்தது பிரிட்டனைச் சேர்ந்த ஜிஹாதியாக இருக்கலாம் என பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் தகவல் வெளியாகி இருக்கிறது.

கிளர்ச்சியாளரின் அடையாளம்!

ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்த கிளர்ச்சியாளரின் அடையாளத்தை விசாரணை அதிகாரிகள் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாக தெரிகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்து மீண்ட ஒருவர் அளித்த தகவலின்படி, தன்னை ஜான் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் வீடியோவில் உள்ள அந்த கிளர்ச்சியாளர் பிரிட்டிஷ் ஜிகாதிகளின் ரிங் லீடர் என சந்தேகிக்கப்படுகிறது.

அமெரிக்க உளவு நிறுவனமான எக்.பி.ஐ-யுடன் இணைந்து பிரிட்டனின் எம்-15 புலனாய்வு நிறுவனமும், ஸ்காட்லாந்து நிறுவன போலீசாரும் போலே தலையை துண்டிக்கும் கிளர்ச்சியாளர் அடையாளத்தை காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக 'தி கார்டியன்' செய்தித்தாளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த செய்தியில்தான், கிளர்ச்சியாளர் பிரிட்டிஷ் ஜிஹாதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக சிரியாவில் கடத்தப்படும் வெளிநாட்டவர்களின் உறவினர்களுடன் இணையம் வாயிலாக ஜான் என்ற கிளர்ச்சியாளரே பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே வீடியோவில் இடம்பெற்றுள்ள ஜான் என்பவரும், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் ஜான் என்பவரும் ஒரே நபராக இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

லண்டன் ஆங்கில உச்சரிப்பு

இதற்கிடையில், மொழியியல் வல்லுநர்கள் சிலர் ஜேம்ஸ் போலே வீடியோவை ஆய்வு செய்துவிட்டு கிளர்ச்சியாளர்கள் பேசுவது லண்டன் ஆங்கில உச்சரிப்பு என தெரிவித்துள்ளனர்.

இது புலன்விசாரணை அமைப்புகளின் சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இது குறித்து லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொழியியல் வல்லுநர் கிளேர் ஹர்டகர் கூறுகையில்: "வீடியோவில் பேசிய நபரின் உச்சரிப்பு லண்டன் ஆங்கிலம்தான். அதுவும் குறிப்பாக கெண்ட், எசெக்ஸ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பேசும் உச்சரிப்பை ஒத்து இருக்கிறது" என்றார்.

பிணை கைதியின் தலை துண்டிப்பு வீடியோ பதிவிற்கு முதல் முறையாக ஆங்கிலம் பேசும் கிளர்ச்சியாளர் தேர்வு செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளாக உள்ள மேற்கத்திய நாடுகளுக்கும் மேலும் வலுவாக தனது எச்சரிக்கையை பதிவு செய்வதற்காகவே என கூறப்படுகிறது.

பிரிட்டனில் பிறந்த 500-க்கு மேற்பட்டோர் ஜிஹாத்திகளாக உருமாறி சிரியா, இராக் பகுதிகளில் போரில் ஈடுபட்டு வருவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மிரட்டல்:

அமெரிக்க பத்திரிகையாளர் போலேவை கொலை செய்யப்போவதாக ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் விடுத்ததாக அவர் பணியாற்றிய நிறுவனத்தின் சி.இ.ஓ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரது தலையை துண்டித்து கொலை செய்யும் வீடியோவை ஐஎஸ்ஐஎஸ் கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டனர்.

அதில், இராக்கில் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டதை அடுத்து அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே தலையை துண்டித்ததாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

அந்த வீடியோவின் நம்பக்த்தன்மையை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து குளோபல் போஸ்ட் சி.இ.ஓ பிலிப் பல்போனி கூறுகையில்: ஒரு வாரத்திற்கு முன்னதாகவே போலேவில் குடும்பத்தாருக்கு கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் கடிதத்தை அனுப்பிவிட்டனர். அந்த மின்னஞ்சல் முழுவதும் வெறுப்பே நிறைந்திருந்தது. கிளர்ச்சியாளர்கள் வேறு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.

இ மெயில் கிடைக்கப்பெற்ற பிறகு, போலேவை பத்திரமாக மீட்க எங்கள் நிறுவனம் கடும் முயற்சியை மேற்கொண்டது. போலேவை மீட்டுத்தருமாறு சர்வதேச பாதுகாப்பு நிறுவனத்திடம் கோரப்பட்டது. இதற்காக பல மில்லியன் டாலர் பணம் செலவழிக்கப்பட்டது என்றார்.

2012-ல் கடத்தப்பட்டார்:

சிரியாவில் உள்நாட்டுப் போரின்போது செய்தி சேகரிக்கச் சென்ற ஜேம்ஸை 2012-ம் ஆண்டு கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர். அதன் பிறகு அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஜேம்ஸ் இடம் பெற்றுள்ள வீடியோ ஒன்றை ஐஎஸ்ஐஎஸ் கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு செய்தி என்ற தலைப்பிடப் பட்டுள்ள அந்த வீடியோவில் பாலைவனப் பகுதியில் ஜேம்ஸ் முழங்காலிட்டு நிற்கின்றார். அவருக்குப் பின்னால் முகமூடி அணிந்த கிளர்ச்சியாளர் ஒருவர் கத்தியுடன் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க அரசுக்கும், தனது குடும்பத்தினருக்கும் வேண்டுகோள் விடுத்து ஜேம்ஸ் உருக்கமாக பேசுகிறார். பின்னர் அந்த கிளர்ச்சியாளர் ஜேம்ஸின் தலையை கொடூரமான முறையில் துண்டிக்கிறார். அவர் பிணமாக கீழே சாயும் காட்சியும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Sat Aug 23, 2014 6:25 pm

ஈராக் தீவிரவாதிகள் முற்றுகை அம்ரேலி நகரில் 18 ஆயிரம் யாஷிடி இன மக்கள் வாழ்வதற்காக போராடுகிறார்கள்.

ஈராக்கில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக தாக்குதல்கள் தொடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி அவர்கள் அதிரடியாக நாட்டின் 2-வது பெரிய நகரமான மொசூலை தங்கள் பிடியின்கீழ் கொண்டு வந்தனர். அதைத் தொடர்ந்து மேலும் தாக்குதல்கள் தொடுத்து நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி நகரங்களை கைப்பற்றினர். அவர்கள் 15 நகரங் களை கைப்பற்றியுள்ளனர். தன்னாட்சி அதிகாரம் படைத்த குர்தீஷ்தானில் தாக்குதல் நடத்தி அங்கும் பெரும்பாலான பகுதிகளை பிடித்தனர். அங்கு வாழும் 'யாஷிடி' என்ற பூர்வீக குடிமக்களை வெளியேற உத்தரவிட்டனர். இதனால் அச்சம் அடைந்த சுமார் 40 ஆயிரம் பேர் சிஞ்சர் மலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அங்கு உணவு மற்றும் தண்ணீர் இன்றி தவிக்கும் யாஷிடி' பூர்வீக குடிமக்களுக்கு உணவு, தண்ணீரை விமானங்கள் மூலம் அமெரிக்கா வீசிவருகிறது. சிஞ்சார் மலைபகுதியில் இருந்த ஈராக் முஸ்லீம்கள் ஆயிரகணக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிர்வாதிகளிடம் சரணடைந்து உள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் முற்றுகையிட்டு உள்ள அம்ரேலி நகரில் உள்ள 18 ஆயிரம் 'யாஷிடி' பூர்வீக குடிமக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் மருத்துவ வசதிகள் நிறுத்தி வைக்கபட்டு உள்ளதாக ஈராக்கின் மிகவும் செல்வாக்கான மதகுரு அயதுல்லா அலி அல் சிஸ்தானி கூறி உள்ளார்.

கடந்த 2 மாதங்களாக சன்னி ஜிகாதிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வருவதாக 'யாஷிடி' பூர்வீக குடிமக்கள் கூறி உள்ளனர். அம்ரேலி நகரில் வசித்து வரும் டாக்டர்அலி அல்பாயத் கூறும் போது அம்ரேலியில் யார் வாழ்கிறார்கள். இது ஒரு மனிதபிமானமற்ற பேரழிவு ஆகும் 20 ஆயிரம் மக்கள் வாழ்வதற்காக போராடுகிறார்கள்.இங்குள்ள குழந்தைகள் 3 நாட்களு
க்கு ஒரு முறையே சாப்பிடுகிறார்கள்.என்று கூறினார்.

இங்கிலாந்து வெளியுறவு துறை செயலாளர் பிலிப் ஹேமண்ட் நிலைமையை கூர்மையாக கவனித்து வருவதாகவும் முற்றுகையிட்ட நகருக்கு உதவிகள் அனுப்ப சர்வதேசத்துடன் இணைந்து முயற்சி எடுத்து வருகிறோம்.

ஆனால் இங்கிலாந்து இஸ்லாமிய போராளிகளை எதிர்த்து போரிட சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்துடன் இணையாது. அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்க அவரது அனுமதி தேவை இல்லை என்று கூறினார்.

டாக்டர் அல்பயத் மற்றும், உறுப்பினர்கள் சிஞ்சார் மலை முற்றுகை குறித்து மேற்கத்திய நாடுகளில் பிரசாரம் செய்ய்து வருகிறார்கள்.

தப்பிக்க பார்த்த ஆயிரகணக்கான 'யாஷிடி' பூர்வீக குடிமக்களுகள் மலையில் இருந்து தள்ளிவிடப்பட்டனர். நூற்றுக்கணக்கான கிராம பெண்கள் கடத்தி செல்லபட்டு பாலியல் அடிமைகளாக பயனபடுத்தப்படுகின்றனர்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Wed Aug 27, 2014 10:03 pm

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து சண்டையிட்ட இந்தியர் பலி

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து சண்டையிட்ட இந்தியர் பலியாகினார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போர் புரிந்து வருகிறார்கள். அவர்கள் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்களது வசம் கொண்டு வந்து உள்ளனர். இந்த நிலையில் மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்து இருப்பதாக கடந்த ஜூலையில் பரப்பரப்பு தகவல் வெளியாகியது. இவர்களில் தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்த ஏஜாஜ் பக்ருதீன் மஜ்ஜித் என்பவரின் மகன் ஆரிப் என்பதும், மற்ற 3 பேர் தானே நகரை சேர்ந்த தன்வீர் சேக், அமன் நைம், சகீன் பாரூக் என்பதும் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் 20 வயது பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து சண்டையிட்ட மும்பையை சேர்ந்த வாலிபர் ஒருவர் பலியாகினார். என்று இணையதள தகவல்கள் வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த வாலிபர் சண்டையில் பலியாகினார். என்று தீவிரவாதிகள் இணைய தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. என்று இணைய தள செய்திகள் தெரிவித்துள்ளனர். இணைய தளத்தில் இந்தியாவை சேர்ந்த வாலிபர் ஆரிப் பலியாகினார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சகீன் பாரூக், ஆரிப் ஈராக்கில் இருக்கும் இடத்தை அறிந்து அவர் நன்றாக உள்ளாரா என்று விசாரித்துள்ளார். அப்போது ஆரிப் இறந்துவிட்டார் என்று சகீன் பாரூக்கிற்கு தெரியவந்தது. செய்வாய் அன்று தானேயில் உள்ள அவரது வீட்டிற்கு போன் செய்த சகீன் இதனை தெரிவித்தார்.” என்று தன்வீர் சேக் மாமா தெரிவித்துள்ளார். என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் உறுதியான அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இணையதளங்களில் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Thu Aug 28, 2014 4:38 am

ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு எதிரான போர்: கைகோக்கும் 7 நாடுகள்

வாஷிங்டன், ஆக 28 - தனி நாடு கோரிக்கையோடு இராக்கில் படையெடுத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக போராடும் அந்நாட்டின் குர்திஸ் படைக்கு வலுசேர்க்கும் வகையில் அமெரிக்க ராணுவத்துடன், 7 நாடுகளின் படைகள் இணைகின்றன.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சக் ஹேகல் கூறும்போது, "பாக்தாதில் இராக் அரசுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகள் அப்பாவி மக்களை காக்கும் வகையில் மனித நேய அடிப்படையிலான தாக்குதல்களை நடத்துகின்றன. அங்கு உள்ள குர்திஸ் படைக்கு ஆயுத பயிற்சியையும் தளவாடங்களையும் வழங்கி வருகிறோம். இத்துடன் இராக் அரசுக்கு துணையாக அல்பானிய, கனடா, குரோஷியா, டென்மார்க், இத்தாலி, ப்ரான்ஸ், மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் இணைய உள்ளன. இராக் மக்களின் பாதுகாப்புக்காக, இந்த நாடுகள் இணைய முன்வந்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது. இரண்டு வாரங்களுக்கு முன் இருந்தே, இராக்கில் குர்திஸுக்கு வலு சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பமானது. மற்ற நாடுகளும் எங்களுடன் இணைய முன் வந்தால், நாங்கள் அவர்களை வரவேற்கிறோம். அமெரிக்கப் படைகளுடன் துணை நிற்க போகும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி" என்றார்.

இராக்கில் ஷியா பிரிவு தலைமையிலான அரசுக்கு எதிராக எழுந்துள்ள ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் சன்னி இஸ்லாமியர்களின் தனி இஸ்லாமிய நாடு அமைக்க பல நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிரியா மற்றும் இராக் எல்லைகளில் இவர்கள் பல நகரங்களை வசப்படுத்தி உள்ளனர்.

இராக்கின் கோரிக்கையை அடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக போராடும் குர்திஸ் ராணுவப் படைக்கு வலுசேர்க்க அமெரிக்க ராணுவம் அங்கு தனது தாக்குதலை தொடர்ந்தது.

அமெரிக்கப் படைகள் விரைந்த பின்னர், ஐ.எஸ் வசம் இருந்த மொசூல் அணை மீண்டும் இராக் அரசுப் படையால் மீட்கப்பட்டது. இதனால் கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவை தங்களது உள்நாட்டு பிரச்சினையில் தலையிட வேண்டாம் என்று கண்டிப்பு தெரிவித்திருந்தனர். அமெரிக்க பத்திரிகையாளர் படுகொலை வீடியோ வெளியீடுக்கு பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.

முதற்கட்டமாக இராக்கில் நேற்று முன்தினம் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் முகாம்கள் மீது வான்வழித் தாக்குதலை அமெரிக்கா நடத்தியது. இந்த தாக்குதலை சிரியாவிலும் மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இது குறித்த அறிவிப்பை வெளியிட வெள்ளை மாளிகை மறுத்தது.

"இராக் மற்றும் சிரியாவில் உளவுப் பணிகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று கூறிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கேத்லீன் ஹேடன், அமெரிக்க மக்களின் பாதுகாப்புக்காக, அனைத்து விதமான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறி இருந்தார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Wed Sep 10, 2014 5:39 pm

ஐ.எஸ்.ஐ.எஸ். மீது நடவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரம் உள்ளது: ஒபாமா

ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தனக்கு அதிகாரம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இராக்கில் ஆதிக்கம் செலுத்த முயலும் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சி அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்த சில நேட்டோ நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ள நிலையில், இது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர்களுடன் அந்நாட்டு அதிபர் ஒபாமா பேச்சு நடத்தினார்.

அப்போது, "ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளது என்பதை உலகத்துக்கு நிரூபணம் செய்ய செனெட் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால், அதனை நான் வரவேற்பேன்.

ஐ.எஸ்.-ஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தால், அதனை முடிவு செய்வதற்கான அதிகாரம் எனக்கு உள்ளது.

ஆனால், அமெரிக்கா வலிமை மிக்க நாடு. என்னுடன் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த விவகாரத்தில் ஆதரவு கொடுத்தால், நமது தேசத்துக்கு எதிராக பாதுகாப்பு அச்சுறுத்தலை அளித்துவரும் அந்த இயக்கத்தை வீழ்த்தலாம்" என்று அதிபர் ஒபாமா தெரிவித்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ஜான் கார்னின் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இந்த விவகாரத்தில் அமெரிக்க மக்களுக்கு அதிபர் ஒபாமா விளக்கம் தர வேண்டிய நிறைய கேள்விகள் உள்ளன.

அமெரிக்க தேசத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள், ஏன் அச்சுறுத்தலாக விளங்குகின்றனர்? ஒபாமாவின் செயல்பாடுகளே இதற்கு காரணம் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே, இது குறித்து அமெரிக்க மக்களிடையே ஒபாமா விளக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Thu Sep 11, 2014 12:52 am


ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட உதவுமாறு சர்வதேச சமூகத்திடம் ஈராக் பிரதமர்

ஷியா முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கின் ஒரு பகுதியையும், சிரியாவின் ஒரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இஸ்லாம் அரசு என அறிவித்து கொண்டனர். ஈராக்கின் குர்திஷ் படையினர் தீவிரவாதிகளிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக அமெரிக்காவின் உதவியுடன் போராடி வருகின்றனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் ஹெர்ரி தீவிரவாதிகளை ஒழிப்பது குறித்து ஆலோசனை நடத்த இன்று பாத்தாத் சென்று உள்ளார். இது குறித்து ஈராக் பிரதமர் ஹைடர் அல் அபடி கூறியதாவது:-

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் எதிராக போரிட சர்வதேச சமூகம் ஈராக்கிற்கு உதவ வேண்டும்.இந்த புற்று நோயை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உண்மையில் எங்கள் பங்கு நாட்டை காப்பது. ஈராக் நாட்டையும்,ஈராக்கியர்களையும் காப்பதில் சர்வதேச சமூகத்திற்கு பங்கு உள்ளது. திடீர் பயணமாக பாக்தாத் வந்து உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் ஹாரியுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவதிகள் அச்சுறுத்தலில் இருந்து சிரியாவை காப்பாது ஐநா வின் சர்வதேச சமூகத்தின் கடமையாகும். என்று கூறினார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Sun Sep 14, 2014 12:00 am

கணக்குகளை முடக்கினால் டுவிட்டர் ஊழியர்கள் கொலை செய்யப்படுவர் – ஐஎஸ்ஐஎஸ் எச்சரிக்கை!

ஐஎஸ்ஐஎஸ் போராளிகளின் டுவிட்டர் கணக்குகளை முடக்கினால், டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

சமீபத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடும் நோக்கில், இரு அமெரிக்க பத்திரிக்கையாளர்களின் தலைகளை கொய்து படுகொலை செய்தனர்.

மேலும், அதனை காணொளியாக பதிவு செய்து டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். மேலும் அவர்கள், அது போன்ற வன்முறையை தூண்டும் பல பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில் டுவிட்டர் நிறுவனம், அது போன்ற பதிவுகளை வெளியிடும் பயனர்களின் கணக்குகளை முடக்கி வருகின்றது. இதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் ஒரு குறிப்பிட்ட கணக்கிலிருந்து சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மிரட்டல் பதிவில், “போராளிகளின் கணக்குகளை முடக்கினால் டுவிட்டர் ஊழியர்கள் படுகொலை செய்யப்படுவர்.உங்களின் மரணம் உங்களின் வாயிற் கதவு அருகே உள்ளது” என்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து டுவிட்டர் நிறுவனம் அந்த கணக்கையும் உடனடியாக முடக்கியுள்ளது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Mon Sep 15, 2014 9:58 pm

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் போராட 10 அரபு நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றார் ஜான் கெர்ரி

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தலைமையிலான அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டார். இந்த சுற்று பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்றும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராட பல்வேறு நாடுகள் அளித்துள்ள ஒத்துழைப்பு ஊக்கத்தை தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

10 அரபு நாடுகள்

இது குறித்து பி.பி.சி. வெளியிட்டுள்ள செய்தியில், 10 அரபு நாடுகள் உட்பட 40 நாடுகள் ஐ.எஸ். தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டணியில் ஒன்றிணைய ஒப்புதல் அளித்துள்ளதுடன் ராணுவ ஒத்துழைப்பு வழங்கவும் சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெர்ரியின் இந்த சுற்று பயணத்தில் முக்கிய அம்சமாக 10 அரபு அரசாங்கங்கள் ஜெட்டா நகரில் வைத்து, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட தங்களது ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி அளித்து கையெழுத்திட்டுள்ளன என்று தகவல் தெரிவிக்கின்றது.

தலைப்பு செய்தி

இந்த ஒப்புதலை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், எகிப்து, ஈராக், ஜோர்டான், லெபனான், பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய 10 அரபு நாடுகள் வழங்கியுள்ளன. வளைகுடா நாடுகளுடனான பேச்சுவார்த்தையில் கெர்ரி பெற்றுள்ள வெற்றியை குறிப்பிட்டு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு துறை பெண் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி, ஜெட்டா நகர செய்தி இதழ் ஒன்றில், அமெரிக்க-அரபு கூட்டணி ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க உறுதி எடுத்துள்ளது என்பதை தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளதை சுட்டி காட்டியுள்ளார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Mon Sep 15, 2014 9:59 pm

ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் ஆடு, மாடுகளை போன்று ஏலம் விடப்படும் ஈராக் பெண்கள்

ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூர செயலுக்கு இதுவரை மேற்கத்திய நாடுகளை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு உள்ளாக 3 பேரை தலையை வெட்டி கொன்று உள்ளனர் இந்த தீவிரவாதிகள். இந்த காட்டுமிராண்டித்தனமான செயல்களை காட்டிலும் அதிகமான வன்முறை சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். வீடியோ காட்சிகளில் காட்டப்பட்டுள்ளவை அவர்களது தீவிரவாத செயலை வெளிப்படுத்துவதாக அமைந்தாலும் அதனை விட கொடிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்செயல் கொடுமை

ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் தங்களது ஆக்கிரமிப்பை நிலை நிறுத்தி கொண்டாலும் இது கடந்த ஜூனில் இருந்து மிக தீவிரமாகியுள்ளது. அங்குள்ள மக்களை கொடுமைப்படுத்துவதுடன். கொலை செய்யவும் துணிகின்றனர். இவற்றில் மிக கேவலமான விசயமாக, கடத்துவது, கொடுமைப்படுத்துவது, மதம் மாற்றுவது மற்றும் பெண்களை கற்பழிப்பது என வன்செயல் கொடுமை நீள்கிறது.

அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்டுள்ள இணையதள தகவல் ஒன்றில், ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் இளஞ்சிறுமிகள் அவர்களது குடும்பங்களில் இருந்து கடத்தப்படுகின்றனர். அதன் பின் அவர்கள் சந்தையில் ஆடு, மாடுகளை போன்று விற்கப்படுகின்றனர். இது கடந்த 2 மாதங்களில் நடந்துள்ளது. ஈராக் நாட்டு பெண்கள் அவர்களது வீடுகளில் இருந்து கடத்தப்படுகின்றனர்.

அதன்பின் கற்பழிப்பு, கொடுமைப்படுத்துதல், இஸ்லாம் மதத்திற்கு மாற வற்புறுத்துதல், பாலியல் அடிமைகளாக வைத்திருத்தல் போன்ற சொல்ல முடியாத கொடுஞ்செயலுக்கு ஆளாகின்றனர். அவர்களில் சிலர், இஸ்லாம் மதத்திற்கு மாற சம்மதிக்காத வரை அவர்களின் குழந்தைகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடுமையாக தாக்குவதும், அந்த காட்சியை பார்க்கும்படி அவர்களை கட்டாயப்படுத்துவதுமாக வன்செயல் நடந்துள்ளது என அந்த தகவல் தெரிவித்துள்ளது.

ஏலத்தில் விற்பனை

கேதரீன் ரஸ்செல் என்பவர் இது குறித்து எழுதியுள்ள தகவலில், ஈராக்கின் சிறுபான்மையின மக்களில் 1,500 முதல் 4 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 12 மற்றும் 13 வயதிற்கு உட்பட்டவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கால்நடைகளை போன்று விற்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சிறுமிகள் தீவிரவாதிகளை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அல்லது ஏலத்தில் அதிக தொகைக்கு விற்கப்படுகின்றனர்.

இந்த பெண்களில் பலர், தீவிரவாதிகளின் கொடுமைகளுக்கு ஆளாவதை விட மரணம் அடையவே விரும்புகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் ஏராளமான பெண்களின் கதைகள் மனதை உடைய வைக்கும் மற்றும் அதிபயங்கரங்களை கொண்ட விசயங்களை உள்ளடக்கியவை. அவை கடல் போல் குவிந்து கிடக்கின்றன.

புதிதாக உருவாகியுள்ள ஈராக் அரசு, தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு விற்கப்படும் இது போன்ற பெண்கள் பாதுகாப்பாக தங்களது வீடுகளுக்கு திரும்ப உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்காக சர்வதேச கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்றும் ரஸ்செல் தனது தகவலில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Mon Sep 15, 2014 10:00 pm

வெட்டிய தலையை கையில் பிடித்த வண்ணம் டூவிட்டரில் படத்தை பதிவுசெய்த பிரிட்டன் பெண் ஜிகாதிவெட்டிய தலையை கையில் பிடித்த வண்ணம் புகைப்படம் எடுத்து அதனை பிரிட்டன் பெண் ஜிகாதி உசாமா தனது டூவிட்டரில் பதிவு செய்துள்ளார். பிரிட்டன் பெண்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடுவது அந்நாட்டு அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக், சிரியா நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கில் வான்வெளித் தாக்குதல் நடத்தும் அமெரிக்க படைகளுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ளவர்களை அமெரிக்கர்களை தலையை துண்டித்து கொன்று வருகின்றனர். தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் அங்கு உடனடியாக தாக்குதல் நடத்த அமெரிக்கா தலைமையில் உலகநாடுகள் தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் பிரிட்டன் அரசுக்கு மேலும், அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்நாட்டு பெண் ஜிகாதிகள் டூவிட்டரில் கொடூரமான புகைப்படங்களுடன் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். மறுபுறம் அரசு வெளிநாட்டுக்கு சென்ற ஜிகாதிகள் தங்கள் நாட்டுக்குள் மீண்டும் நுழைந்துவிட கூடாது என்று கங்கணம் கட்டியுள்ளது. அந்நாட்டு பாதுகாப்பு துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவில் சமூகத் தொண்டு செய்து வந்த இங்கிலாந்தின் 44 வயது டேவிட் ஹெய்ன்ஸ் என்பவரை தலையை துண்டித்து கொன்று இங்கிலாந்துக்கு எச்சரிக்கையும் விடுத்தனர்.

இந்நிலையில் தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்று அந்த அமைப்பில் சேர்ந்த பிரிட்டன் பெண் ஜிகாதி வெட்டிய தலையுடன் புகைப்படம் எடுத்து டூவிட்டரில் படத்தை பதிவு செய்துள்ளார். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மருத்துவ கல்லூரி மாணவியான அந்த ஜிகாதி உசாமா என்ற பெயரில் டூவிட்டர் கணக்கை பதிவு செய்துள்ளார். அவர் சிரியாவில் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள ரக்கா நகரில் மருத்துவராக பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது. பெண் ஜிகாதி மருத்துவர்கள் உடையை அணிந்து கருப்புநிற தலைகவசம் அணிந்து தலையில் வெட்டிய தலையுடன் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். பின்னர் டூவிட்டரில் இருந்து அந்த படத்தை நீக்கியுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. புகைப்படத்தில் பெண் ஜிகாதியுடன் இரு சிறுவர்களும் நிற்கின்றனர். பெண் ஜிகாதியின் டூவிட்டர் இணையதளத்தை 800 பேர் பின்பற்றுகின்றனர். அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட புகைப்படம், இறந்த ராணுவ வீரர்களின் புகைப்படம் ஆகியற்றவை பதிவு செய்துள்ளார். அதனுடன் உசாமா மூட்டு வலி மற்றும் தூக்கமின்மைக்கான சிகிச்சை குறித்தும் தகவல்கள் தெரிவித்துள்ளார். என்று செய்திகள் வெளியாகியுள்ளது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள் 1

Post by சிவா on Mon Sep 15, 2014 10:10 pm

ஈராக், சிரியா தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் சர்வதேச நாடுகள்

ஈராக், சிரியா நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கில் வான்வெளித் தாக்குதல் நடத்தும் அமெரிக்க படைகளுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ளவர்களை அமெரிக்கர்களை தலையை துண்டித்து கொன்று வருகின்றனர்.
அண்மையில் அமெரிக்க செய்தியாளர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் சாட்லாப் இருவரையும் தீவிரவாதிகள் இதுபோல் கொடூரமான முறையில் கொன்றனர். கடந்த ஆண்டு சிரியாவில் சமூகத் தொண்டு செய்து வந்த இங்கிலாந்தின் 44 வயது டேவிட் ஹெய்ன்ஸ் என்பவரை 2 நாட்களுக்கு தலையை துண்டித்து கொன்று இங்கிலாந்துக்கு எச்சரிக்கையும் விடுத்தனர்.

இந்த கொடூர கொலைகள் தொடரும் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்து இருப்பதால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்த தீவிரவாதிகளை பூண்டோடு ஒழித்துக் கட்டுவதற்கு கங்கணம் கட்டிவிட்டன. ஈராக், சிரியா தீவிரவாதிகளுக்கு எதிராக சர்வதேச கூட்டணி அமைத்து அவர்களை முறியடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக சேவகர் டேவிட் ஹெய்ன்ஸ் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூ கோபத்தின் உச்சியில் உள்ளார்.

லண்டனில் நடந்த அவரச கூட்டத்தில் பேசிய அவர், டேவிட் ஹெய்ன்ஸ் இந் நாட்டின் கதாநாயகன். இந்த படுபாதக செயலை செய்த தீவிரவாதி யாராக இருந்தாலும் அவரை கண்டுபிடித்து நீதியின் முன்பாக நிறுத்துவோம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பேய் போன்ற கொடூர குணம் கொண்டவர்கள். அவர்களுக்கு எதிராக அழிப்பதற்கு தேவைப்படும் அத்தனை நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம் என்று சூளுரைத்தார். ஈராக், சிரியா தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த சர்வதேச நாடுகள் தயார் நிலை உள்ளன. அமெரிக்காவின் சர்வதேச கூட்டணியின் உச்சக் கட்டத் தாக்குதல் திட்டத்திற்கு பெரும்பாலான நாடுகள் ஒப்புக் கொண்டாலும் இந்த நாடுகள் தீவிரவாதிகள் மீது வான்வெளித் தாக்குதலை மட்டுமே நடத்துவதற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Mon Sep 15, 2014 10:14 pm

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறிச்செயலுக்கு இங்கிலாந்து வீரர் மொயின் அலி கடும் கண்டனம்

இங்கிலாந்து பணியாளர் டேவிட் ஹெய்ன்ஸ் தலையை துண்டித்து கொடூர கொலை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவில் அல்கொய்தா தீவிரவாதிகளை விட கொடிய ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து இதற்கு பழிவாங்கும் விதமாக, சிரியாவில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த அமெரிக்க நிருபர்கள் இருவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொடூரமாக படுகொலை செய்தனர்.இதற்கிடையே தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு ஆதரவு அளித்த பிரிட்டனை மிரட்டும் வகையில் அந்நட்டை சேர்ந்த டேவிட் ஹெய்ன்ஸ் என்பவரை தீவிரவாதிகள் தலையை துண்டித்துக் கொலை செய்துள்ளனர்.

இந்த கொடூர கொலையை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறிச்செயலுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் இந்த நடவடிக்கைகளை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது.மற்ற மதத்தின் மக்களை கொல்வது கண்டனத்துக்கு உரியதாகும். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரின் இந்த செயல்பாடுகள் இஸ்லாமை பிரதிபலிக்கவில்லை. இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் அந்த அமைப்புக்கு ஆதரவு கொடுக்காது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவரான மொயின் அலி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது ”காசாவை காப்பாற்றுங்கள்” என்ற வாசகங்கள் அடங்கிய பேண்ட் அணிந்து இருந்ததால் நடுவரால் எச்சரிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Mon Sep 15, 2014 10:14 pm

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதல்: 40 நாட்டு வெளியுறவுத்துறை பிரதிநிதிகள் கூட்டம் இன்று பாரீசில் நடக்கிறது

ஈராக்கில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் ஈராக்கில் 15 நகரங் களை கைப்பற்றியுள்ளனர். மேலும் சிரியாவின் ஒருபகுய்தியையும் கைப்பற்றி இரண்டையும் இணைத்து இஸ்லாமிய அரசாக் அறிவித்து உள்ளனர். இதனால் பக்கத்து நாடுகளுக்கு அச்சம் ஏற்பட்டு உள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் அமெரிக்காவுக்கு மிரட்டல் இருக்கலாம் எனகூறபட்டது இதை தொடர்ந்து அமெரிக்க ஈராக் அரசுப்படையுடன் இணைந்து தீவிரவாதிகள் கைப்பற்றிய பகுதிகிளில் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் தாங்கள் பிடித்து வைத்திருந்த 2 அமெரிக்க பத்திரிகையாளர்களை கொலை செய்தனர். இதை தொடர்ந்து அமெரிக்க தீவிரவாதிகள் மீது அதிகப்படியான் வானவெளி தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்தது. வான்வெளி தாக்குதல் நடத் அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டு உள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட சிரியா மற்றும் ஈராக் நாடுகளுக்கு உதவு செய்ய 40 நாடுகள் கூட்டணி அமைத்து கையெழுத்திட்டு உள்ளன. இதில் 10 அரேபியநாடுகளும் அடங்கும். பெரும்பாலான அரேபிய நாடுகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான்வெளி தாக்குதல் நடத்த பங்களிப்பு வழங்கப்படும் என மெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் ஹெர்ரி மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் தொடுக்க ஆதரவு திரட்டி வருகிறார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட கையெழுத்திட்ட 40 நாடுகள் அடுத்தவாரம் நடைபெறும் ஐநா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றன.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தோற்கடிப்பது தொடர்பாக் பாரீசில் உலக நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை அமெரிக்க வெளியுறவுறத்துறை செயலாளர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த மாநாட்டில் இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹமோண்ட், ஈராக் அதிபர் போவுத் மோசும், 10 அரேபிய நாடுகளான, எகிப்து, ஈராக்,ஜோர்டான்,பக்ரைன்,குவைத்,லெபனான்,ஒமன்,கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளீன் பிரதி நிதிகள் கல்ந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் இங்க்லாந்தை சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெய்ன்ஸை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தலையை துண்டித்து படுகொலை செய்து தொடர்பாகவும் பேசப்படுகிறது.

இது வெறும் நிகழ்ச்சி தேர்ந்தெடுக்கபட்ட விருந்தினர்களின் பட்டியல் என இந்த கூட்டத்தை ஈரான் புறக்கணித்து உள்ளது.

அமெரிக்க தலைமையிலான கூட்டணி ஈராக்கின் அண்டை நாட்டின் உதவி இல்லாமல் சிரியா பகுதியில் தாக்குதல் நடத்தினால் அமெரிக்க அதிபரின் திட்டம் தோல்வி அடையும் என சிரியா கூறி உள்ளது.

சிரியா தீவிரவாதத்திற்கு எதிராக போராடுகிறது. நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக உண்மையாக தீவிரமாக போராடி வருகிறோம் என சிரிய வெளியுறவு துணை மந்திரி பைசல் மெக்தத் தெரிவித்தார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Mon Sep 15, 2014 10:28 pm

ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் 2-வது பிரிட்டன் பிணைக்கைதி: தலையை துண்டிப்பதாக மிரட்டல்

ஈராக்கில் சதாம் உசேன் ஆதரவு படையான ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்தி அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி, சிரியாவில் கைப்பற்றப்பட்ட பகுதியையும் ஒருங்கிணைத்து "இஸ்லாமிய நாடு" என்ற பெயரில் தனி அரசை நடத்தி வருகின்றனர்.

இவர்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை குர்திஷ் படையினர் மீட்க உதவும் வகையில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பேரின் தலையை தீவிரவாதிகள் துண்டித்து கொலை செய்தனர்.

அதன்பின் நேற்று முன்தினம் பிரிட்டனைச் சேர்ந்த டேவின் ஹெய்ன்சை தலை துண்டித்து கொலை செய்தனர். இதற்கு இங்கிலாந்து பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக பிரிட்டன் உள்பட பல நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளது.

இந்நிலையில் ஜிகாதிகளுக்கு எதிராக போர் புரிபவர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தொடர்ந்து ஆதரவு கொடுத்தால் மற்றொரு பிரிட்டன் பிணைக்கைதியான ஹென்னிங்-ஐ தலை துண்டித்து கொலை செய்வோம் என்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. அது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ஹென்னிங் முழங்கால் போட்டு நிற்க, முகமூடி அணிந்த ஒரு தீவிரவாதி கையில் கத்தியுடன் உள்ளான்.

ஹென்னிங் (வயது 47) கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள எக்லெசில் இருந்து வந்த முன்னாள் டாக்சி டிரைவர் எனத் தெரிகிறது. இவர் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கடத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவர் சமூக பணியில் ஈடுபடுவதற்காக துருக்கியில் இருந்து சிரியா எல்லைக்குள் வந்தபோது கடத்தப்பட்டுள்ளார்.

சிரியாவில் உள்ள அகதிகளுக்கு மருத்துவ உதவி செய்ய மருத்துவ ஆம்புலன்ஸ் டிரைவராக ஹென்னி பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Wed Sep 17, 2014 5:52 am

ஐ.எஸ்.ஐ.எஸ். பிடியில் மேலும் 24 பிணைக் கைதிகள் இருக்க வாய்ப்பு

இராக்கில் தாக்குதல் நடத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் வசம் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த 24 பேர் பிணைக் கைதிகளாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தனி இஸ்லாமிய நாடு அமைக்க இராக் மற்றும் சிரியாவில் தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள், தங்கள் வசம் பிணைய கைதிகளாக இருந்த அமெரிக்க பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் ஃபோலே, ஸ்டீவன் சாட்லாஃப் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த உதவிப் பணியாளர் டேவிட் ஹெய்ன்ஸ் ஆகியோரை படுகொலை செய்து அதன் வீடியோவை வெளியிட்டது.

இந்த நிலையில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த 24 பேரை பிணைக் கைதிகளாக வைத்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை ப்ரான்ஸ், இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐ.எஸ் அமைப்பு நிர்ணயித்த பிணைத் தொகையை அந்தந்த நாடுகளின் அரசு செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டதாக 'தி மிர்ரர்' செய்தி வெளியிட்டுள்ளது.

இதே போல, 26- வயது மிக்க அமெரிக்க தொழிலாளி ஒருவரும், 20 வயதுடைய 2 இத்தாலி நாட்டவர்களும் கடந்த ஆகஸ்ட் மாதம் அலீபோ நகரில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Wed Sep 17, 2014 5:53 am

பாக்தாத் நகரில் ஐ.எஸ்-ஸுக்கு எதிரான தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா

இராக் தலைநகர் பாக்தாதில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மீதான முதல் வெடிகுண்டு தாக்குதலை அமெரிக்கப் போர் விமானங்கள் தொடங்கியுள்ளன.

இராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி பல முக்கிய நகரங்களை ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் யாஷிதி பழங்குடி மக்களை பிணைய கைதிகளாகவும் அவர்கள் பிடித்து வைத்துள்ளளனர்.

ஐ.எஸ்-ஸுக்கு எதிரான தாக்குதலையும், இராக் மற்றும் குர்திஷ் படைகளுக்கு பயிற்சி அளிக்கும் பணிகளையும் அமெரிக்க ராணுவம் கடந்த மாதம் தொடங்கியது.

ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை நடத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில், திங்கட்கிழமை முதல் அமெரிக்கப் போர் விமானங்கள் இராக் தலைநகர் பாக்தாத்தில் வான்வழித் தாக்குதலை தொடங்கியது. இதில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த 6 வாகனங்கள் வெடித்து சிதறின.

கடந்த இரண்டு மாதங்களாக, இராக்கில் மனிதாபிமான ரீதியாக 162 முறை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி கூறும்போது, "தென்கிழக்கு பாக்தாத் மற்றும் சிஜார் பகுதிகளில், இராக் பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த பகுதிகள் ஞாயிறு முதலே எங்களது போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது" என்றார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட நேட்டோ நாடுகளின் ஒத்துழைப்பை அமெரிக்கா பெற்றது. அதில் சில நாடுகள் உடன்படாத நிலையில், அவர்கள் ஆயுதங்கள் வழங்கி உதவி அளிக்களாம் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதனிடையே, ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மூன்றாவது படுகொலையாக, பிணையக் கைதியாக வைத்திருந்த பிரிட்டிஷ் உதவிப் பணியாளர் டேவிட் ஹெய்ன்ஸ் என்பவரின் தலையை வெட்டி எறிந்த வீடியோவை அந்த இயக்கம் கடந்த சனிக்கிழமை அன்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Thu Sep 18, 2014 1:10 am

சிரியா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஐ.எஸ்.

கெய்ரோ, செப்.ய18 - சிரியாவில் தங்கள் மீது தாக்குதல் நடத்திய அந்நாட்டு போர் விமானம் ஒன்றை ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக அங்குள்ள ஐ.நா. கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இதில் விமானம் நொறுங்கி வீட்டின் மீது விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சிரியா ராணுவம் செவ்வாய் அன்று, ஐ.எஸ் படைகள் இருக்கும் நகரங்களில் 5 முறை தாக்குதல் நடத்தியது. இது போல ஒரே நாளில் பல்வேறு இடங்களில் சிரியா ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 14 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக அல் ராக்கா நகரத்தில் பறந்து கொண்டிருந்த சிரியா நாட்டு போர் விமானம் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டில் உள்ள ஐ.நா. போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Thu Sep 18, 2014 1:13 am

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க சக்தி உள்ள நாடுகள் முன்வரவேண்டும்- பான் கி மூன் வலியுறுத்தல்

ஈராக்கில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் ஈராக்கில் 15 நகரங் களை கைப்பற்றியுள்ளனர். மேலும் சிரியாவின் ஒருபகுய்தியையும் கைப்பற்றி இரண்டையும் இணைத்து இஸ்லாமிய அரசாக் அறிவித்து உள்ளனர். இதனால் பக்கத்து நாடுகளுக்கு அச்சம் ஏற்பட்டு உள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரர்திகளால் அமெரிக்காவுக்கு மிரட்டல் இருக்கலாம் எனக்கூறப்பட்டது இதை தொடர்ந்து அமெரிக்க ஈராக் அரசுபடையுடன் இணைந்து தீவிரவாதிகள் கைப்பற்றிய பகுதிகிளில் கடந்த் ஆகஸ்ட் 8 ந்தேதி முதல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் தங்கள் பிடித்து வைத்திருந்த 2 அமெரிக்க பத்திரிகையாளர்களை கொலை செய்தனர். இதை தொடர்ந்து அமெரிக்க தீவிரவாதிகள் மீது அதிகப்படியான வான்வெளி தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்தது. இதை தொடர்ந்து வான்வெளி தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டு உள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட கையெழுத்திட்ட 30 நாடுகள் அடுத்தவாரம் நடைபெறும் ஐநா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றன.

10 அரேபிய நாடுகளான, எகிப்து, ராக்,ஜோர்டான்,பக்ரைன்,குவைத்,லெபனான்,ஒமன்,கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளீன் பிரதி நிதிகள் கல்ந்து கொண்டனர்.

அமெரிக்க ஈராக்கின் தலைநகர் பாக்தாத் அருகே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியது.மற்றொரு தாக்குதல் வடமேற்கு ஈராக் பகுதி சிஞ்சார் மலைப்பகுதியில் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதில் 6 தீவிரவாதிகளின் ஆயுத வாகனங்கள் அழிக்கப்பட்டன. கடந்த ஆகஸ்டில் இருந்து இதுவரை ஈராக் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா 162 தடவை வான் வழியாக குண்டு வீச்சு நடத்தியுள்ளது.

ஐ.நா பொது செயலாளர் பான் கீ மூன் ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க சக்தி உள்ள நாடுகள் முன்வரவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-நான் சர்வதேச சமூகத்தை கேட்டு கொள்கிறேன். ஈராக்-சிரியாவில் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதர்கு தீர்மானமாகவும், உறுதியாகவும் நடவடிக்கை தேவை.என்று கூறினார். ஆனால் எண்ட் விதமான்ந் அடவடிக்கை என அவர் கூறவில்லை. மேலும் ஈராக்-சிரியா வில் தீவிர்வாதிகள் மீது அமெரிக்க எடுத்த வான்வெளி தாக்குதலுக்கு பான் கிமூன் பாராடு தெரிவித்தார்.

மனித உயிர்களை காக்க ஈராக் அரசின் வேண்டுகோளின் படி மேற்கொள்ளபட்ட இந்த விமான தாக்குதல்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஐநா மற்றும் அதன் சார்பு நாடுகள் உதவ முடிந்தது.

சிஞ்சார் மலை பகுதியில் சிக்கி தவிக்கும் மக்கள்க்கு ஐநா மனிதாபிமான உதவிகளை வழங்க முடிந்தது. என்று கூறினார். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அச்சுறுத்தலாக விளங்குகின்றனர் என கூறினார்.

பிரிவினை வாதிகளின் அச்சுறுத்தலை சமாளிப்பதில் 15 நாடுகள் பாதுகாப்பு சபை தலைமை ஏற்கும். அமெரிக்க அதிபர் தீவிரவாதிகள் மீது செப்டம்பர் 24 ந்தேதி நடைபெறும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் உச்சி மாநாட்டில் தீர்மானம் கொண்டு வருவார் அந்த தீர்மானத்தை கவுன்சில் ஏற்கும் என்று கூறினார்.

சிரியாவில் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்த ரஷ்யா தனது பகுதியை வழங்குவது சந்தேகம். ஏன் என்றால் ரஷ்யா சிரியாவின் நண்பர் என பாதுகப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கருதுகிறார்கள். இதனால் இந்த திட்டம தற்போது கைவிடபட்டு உள்ளது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Fri Oct 03, 2014 1:45 am


ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை குறைத்து மதிப்பிட்டு தவறு செய்து விட்டோம் – ஒபாமா

ஐஎஸ் தீவிரவாதிகளின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு தவறு செய்து விட்டோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். சிபிஎஸ் என்ற செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“ஈராக், சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியை குறைத்து மதிப்பிட்டு அமெரிக்கா தவறு செய்து விட்டது. தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், ஈராக் ராணுவத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்து விட்டோம் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க தற்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் இடையேயான மோதலை தடுக்க அரசியல் ரீதியிலான அணுகுமுறை அவசியமாகிறது.

ஈராக், சிரியா ஆகிய இரு நாடுகளுக்குமே இந்த கருத்து பொருந்தும். ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் ஆதிக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். இதற்காக 50 நாடுகளின் கூட்டுப்படை தாக்குதல் நடத்தி வந்தாலும் ஐஎஸ் அமைப்புக்கு வெளியில் இருந்து வரும் நிதி ஆதாரத்தை முடக்க வேண்டும்.

அதேபோல வெளியில் இருந்து கிடைக்கும் ஆயுதம், வெளிநாடுகளில் இருந்து வந்து ஐஎஸ்ஐஎஸ்சில் சேரும் நபர்களை தடுப்பது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதியின் அளவு சுருங்கி விடும். உலக வரலாற்றிலேயே அமெரிக்க ராணுவம் மிகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது.

உலகில் எந்த நாடுகளில் தீவிரவாதிகளால் பிரச்சனை ஏற்பட்டால், அந்த நாடுகள் முதலில் அணுகுவது அமெரிக்காவை தான். ரஷ்யாவையோ, சீனாவையோ அந்த நாடுகள் அணுகுவதில்லை என ஒபாமா கூறியுள்ளார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by யினியவன் on Fri Oct 03, 2014 1:55 am

இதுவே ஒபாமாவிற்கு தகுந்த பாடல்:
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by அகிலன் on Fri Oct 03, 2014 2:20 am

அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் சிறிது காலம் வான்தாக்குதல் நடத்திவிட்டு பின்வாங்கிவிடுவார்கள் அதன் பின் ஐ எஸ் படைகள்தான் ஆட்சிசெலுத்தும்.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Sat Oct 04, 2014 1:17 pm

இங்கிலாந்து நாட்டவர் தலை துண்டித்து படுகொலை: ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு டேவிட் கேமரூன் கண்டனம்!

லண்டன்: மேலும் ஒரு இங்கிலாந்து நாட்டவர் தலையை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் துண்டித்து படுகொலை செய்துள்ளதற்கு பிரதமர் டேவிட் கேமரூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைத்துள்ளனர். அவர்களின் வளர்ச்சியை தடுத்து தாக்குதல் நடத்தும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை மிரட்ட இரு நாட்டு குடிமகன்களை பிணைக் கைதிகளாக்கி தலையை துண்டித்து கொலை செய்து வருகின்றனர்.

சிரியாவில் உள்நாட்டு போர் செய்திகளை திரட்டி வந்த அமெரிக்க பத்திரிகை நிருபர்கள் 2 பேரையும், இங்கிலாந்து தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சமூக சேவகர் டேவிட் ஹெய்ன்ஸ் ஆகிய 3 பேரையும் தலை துண்டித்து படுகொலை செய்தனர். மேலும், அந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏற்படுத்தினர்.

இதற்கிடையே, இங்கிலாந்து தொண்டு நிறுவன ஊழியர் ஆலன் ஹென்னிங் என்பவரையும் கொலை செய்யப் போவதாக கடந்த வாரம் தீவிரவாதிகள் அறிவித்தனர். இந்நிலையில், அவர் தலை துண்டித்து கொல்லப்பட்ட வீடியோ காட்சி சமீபத்தில் வெளியானது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ''மற்றவர்களுக்கு உதவி செய்யப்போன ஆலன் ஹென்னிங்கை கடத்திச் சென்று கொன்றதில் இருந்து இந்த தீவிரவாதிகள் எவ்வளவு காட்டு மிராண்டித்தனமானவர்கள் என்பது தெளிவாகிறது. இவர்களை வேட்டையாடி, நீதியின் முன்பு நிறுத்துவதற்கு தேவையான அனைத்தையும் செய்வோம்" என்று கூறியுள்ளார்.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Fri Oct 17, 2014 10:44 pm

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்த அரசு அதிகாரி கைது

மலேசியா: கோலாலம்பூர் - ஐ,எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்த குற்றச்சாட்டின் பேரில் பசுமைத் தொழில் நுட்பம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சின் மூத்த உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்காக அவர் ஐ,எஸ்.ஐ.எஸ்., அமைப்பிடம் இருந்து பணம் பெற்றதாகவும் காவல்துறை தலைவர் (ஐ.ஜி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கர் தெரிவித்தார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரும் சிரியா செல்வதற்காக அத்தொகை பெற்றதாக குறிப்பிட்ட அவர், ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்கும் மேலும் பலர் விரைவில் பிடிபடுவர் என்றார்.

“இது தொடர்பான நடவடிக்கையில் நாங்கள் தீவிரமாக உள்ளோம். சிரியாவுக்கு செல்பவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று பொது மக்களுக்கு உறுதி அளிக்கிறோம்,” என்றார் காலிட்.

கடந்த திங்கட்கிழமை தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய 14 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களில் மூவர் ஐ,எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்தவர்கள் என்று நம்பப்படுகிறது.

மூன்று பேரில் ஒருவர் அரசு அதிகாரி, ஒருவர் முகநூல் வழி ஐ,எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் குறித்து பரப்புரை செய்த வேலையில்லா நபர், மற்றொருவர் சிரியா போராளிக் குழுவில் இணைந்து பணியாற்றி பின்னர் நாடு திரும்பியுள்ள 34 வயது ஆடவர் என்பது குறிப்பிடத்தக்கது.சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum