ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 M.Jagadeesan

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் மரணம்:

View previous topic View next topic Go down

பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் மரணம்:

Post by Aathira on Fri Sep 19, 2014 8:48 pmபிரபல இசை கலைஞர் மாண்டலின் சீனிவாசனுக்கு கடந்த 3–ந்தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கல்லீரல் பாதிப்பு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.30 மணியளவில் மரணம் அடைந்தார்.

அவருக்கு வயது 45. இசை துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த மாண்டலின் சீனிவாசன் பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர்.

ஆந்திராவை சேர்ந்த மாண்டலின் சீனிவாசன் சென்னை வடபழனி தன லட்சுமி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது மறைவு பற்றி கேள்விப்பட்டதும், திரையுலக பிரமுகர்கள், நண்பர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மாண்டலின் சீனிவாசன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறும்போது, ‘‘மாண்டலின் ஸ்ரீனிவாஸ் மறைவு வருத்தம் அளிக்கிறது. இசைத்துறையில் மாண்டலின் சீனிவாசன் பங்களிப்பு அளப்பரியாதது. அவரது பங்களிப்பு எப்போதும் நினைவில் நிற்கும்’’ என்று கூறியுள்ளார்.

மாலைமலர்


Last edited by Aathira on Fri Sep 19, 2014 9:36 pm; edited 1 time in total
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் மரணம்:

Post by krishnaamma on Fri Sep 19, 2014 8:54 pm

அடாடா ......நல்ல கலைஞர்..............எங்க சமாஜத்தில் அவர் ரொம்ப சின்ன பையனாக இருந்தபோது வாசித்திருக்கார் .............சோகம் ரொம்ப வருத்தமாய் இருக்கு சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் மரணம்:

Post by krishnaamma on Fri Sep 19, 2014 9:46 pm

சென்னை: மாண்டலின் இசைக்கலைஞர் ஸ்ரீநிவாஸ் மரணம் இசையுலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டதாக, தலைவர்களும், இசைக்கலைஞர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.பிரபல மாண்டலின் இசைக்கலைஞர் உப்பலப்பு ஸ்ரீநிவாஸ் (45). ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் கடந்த 1969ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி மேற்கு கோதாவரி மாவட்டம் பாலகோலில் பிறந்தார். தனது 6வது வயதில் மாண்டலினை கையில் எடுத்தவர் ஸ்ரீநிவாஸ். அவரது திறமை கண்ட அவரது தந்தை சத்யநாராயணா, தனது குரு ருத்ரராஜூ சுப்பராஜூவிடம் ஸ்ரீநிவாசை ஒப்படைத்தனர். ருத்ரராஜூவுக்கு மாண்டலின் இசைக்கத் தெரியாது என்பதால், அவர் பாடுவதை ஸ்ரீநிவாஸ் தனது மாண்டலினில் இசைத்து பயிற்சி பெற ஆரம்பித்தார். குருவின் முயற்சியில் ஸ்ரீநிவாசிஸ் திறமை மேம்பட ஆரம்பித்தது.

மாண்டலின் ஸ்ரீநிவாசின் முதல் மேடைக் கச்சேரி கடந்த 1978ம் ஆண்டு குடிவாடா என்ற இடத்தில் நடந்த தியாகராஜ ஆராதனை விழாவில் நடந்தது. தொடர்ந்து 1981ம் ஆண்டு சென்னையில் கச்சேரிகளை நடத்தத்துவங்கினார் ஸ்ரீநிவாஸ். 1983ம் ஆண்டு பெர்லினில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் அவரை மீண்டும் மீண்டும் மாண்டலின் வாசிக்கக்கேட்டது அவரது திறமைக்குச் சான்று. ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா, தென்மேற்கு ஆசியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா, சனாதன சங்கீத புரஷ்கார், தமிழக அரசின் ஆஸ்தான வித்வான், சங்கீத பால பாஸ்கரா, ராஜிவ் காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது உள்ளிட்ட விருதுகளை ஸ்ரீநிவாஸ் பெற்றுள்ளார். இவர் கடந்த 1994ம் ஆண்டு ஸ்ரீ என்பவரை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார். அவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் உண்டு. கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீநிவாசுக்கு மாற்று கல்லீரல் அறுவை சிகிச்சை நடந்தது. அவர் உடல்நலம் தேறி வரும் வேளையில், சிகிச்சை பலனின்றி, சென்னையில் இன்று அவர் காலமானார்

தொடரும்......................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் மரணம்:

Post by krishnaamma on Fri Sep 19, 2014 9:47 pmஸ்ரீநிவாசின் துவக்க காலத்தில் அவர் மாண்டலினை தேர்ந்தெடுத்ததற்காக பலர் அவரை கேலி பேசினர். ஆனால் அதற்கு தனது மாண்டலினால் பதில் கொடுத்தவர் ஸ்ரீநிவாஸ் என்கிறார் 7 வயதில் மேற்கத்திய இசையை ஸ்ரீநிவாஸ்க்கு அறிமுகப்படுத்திய வாசு ராவ்.


நாளை இறுதிச்சடங்கு:


இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸின் இறுதிச்சடங்கு, நாளை மாலை பெசன்ட் நகரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணியளவில், அவரது உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இசை பிரபலங்கள், அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். கல்லீரலில் ஏற்பட்ட தொற்று, அவரின் மரணத்திற்கு காரணம் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தலைவர்கள் இரங்கல்:


மாண்டலின் கலைஞர் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் தனது இரங்கல் செய்தியில், இசைக்கு மாண்டலின் கலைஞர் ஸ்ரீநிவாசின் அர்ப்பணிப்பு மற்றும் நீடித்த பங்களிப்பு நினைவு கூறத்தக்கது. இந்த காரணங்களால் அவர் என்றென்றும் நினைவு கூறப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

கவர்னர் ரோசய்யா:

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். தனது மாண்டலின் இசையால் ரசிகர்களை மெய்மறக்கச் செய்தவர் ஸ்ரீநிவாஸ். இளம் வயதில் மரணம் அவரை தழுவி விட்டது. ஸ்ரீநிவாஸ் மரணம் கர்நாடக இசை உலகில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா:

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ஸ்ரீநிவாஸ் மரணம் கர்நாடக இசை உலகில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது. அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஸ்ரீநிவாஸ் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏ.ஆர். ரகுமான்:

ஸ்ரீநிவாஸின் மரணச் செய்தி, என்னை மிகவும் பாதித்து விட்டது. எல்லாம் வல்ல இறைவன், அவருக்கு அந்த உலகத்திலும் பெருமகிழ்ச்சியை வழங்கட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.


இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்:

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் எனக்கு மட்டுமல்லாது, இளைய தலைமுறையினர் பலருக்கும், தங்களுடைய குழந்தை பருவத்தில் இசை கற்க உத்வேகமாய் இருந்தவர்.

நடிகை குஷ்பூ:

திறமைகள் பல உடையவர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ். அவரின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

பாடகர் ஸ்ரீனிவாஸ்:

வாழ்க்கை மிக கொடூரமானது. ஒரு இசைமேதை, இளம்வயதிலேயே இயற்கை எய்தியுள்ளார். அவர் இருந்திருந்தால், இசை உலகில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தியிருப்பார்.

பாடகி சின்மயி:

சிறுவயதிலேயே இசை மேதையாக திகழ்ந்தவர் ஸ்ரீநிவாஸ். அவருக்கு மரணம் என்பது துரதிருஷ்டவசமானது.

பாடகி ஸ்வேதா மோகன்:

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுச் செய்தி, இன்று காலையில் கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது. அவரின் மரணம் என்னை மீளாத் துயருக்குள்ளாக்கியுள்ளது.


தொடரும்...............


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் மரணம்:

Post by krishnaamma on Fri Sep 19, 2014 9:50 pm

தமிழிசை சவுந்தரராஜன்:

மாண்டலின் இசைக்கலைஞர் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், சிறிய வயதிலேயே, கர்நாடக இசையில் எவரும் பயன்படுத்தாத, மேற்கத்திய இசைக்கருவியான மாண்டலினில் தன் வித்தையை காட்டியவர் ஸ்ரீநிவாஸ். அவரது இழப்பு மாற்று ஏதுமில்லா மனச்சுமையை அளிக்கும் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் இசைக்கு ஆற்றிய தொண்டும், மீட்டிய இசையும் காற்றுள்ள வரை இறவாப்புகழுடன் இருக்கும். அவர் ஆன்மா அமைதியடைய பிராத்திக்கிறேன். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பாடகி லதா மங்கேஷ்கர்:

ஸ்ரீநிவாசை, சிறுவயதிலிருந்தே தெரியும். அவர் 14 வயதின்போது நிகழ்த்திய இசை நிகழ்ச்சியை, டிவியில் பார்த்திருக்கிறேன். சிறுவயதிலேயே, மேற்கத்திய இசைக்கருவியை இசைக்கும் திறமையை ஸ்ரீநிவாஸ் பெற்றிருந்தது எனக்கு வியப்பளித்தது. அவர் மரணமடைந்த செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சியளித்தது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.


ரசூல் பூக்குட்டி:

ஸ்ரீநீவாஸ், மிகவும் திறமையான இசைக்கலைஞர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, எனது ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சங்கர் மகாதேவன்:

இசைப்பயணத்தின் மிகப்பெரிய பகுதி இன்று முடிவுக்கு வந்துள்ளது. ஸ்ரீநிவாஸ் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

தபேலா இசைக்கலைஞர் ஹூசைன்:

ஸ்ரீநிவாஸின் மறைவால், இன்று நாம் அனைவரும் அனாதையாக்கப்பட்டுள்ளோம். உனக்காக, தாய்நாடே கண்கலங்குகிறது. எனது சகோதரரின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.

பாடகி ஸ்ரேயா கோஷல்:


உலகின் மிகச்சிறந்த இசைக்கலைஞரை, நாம் இழந்துவிட்டோம். சிறிய வயதில், அவர் நம்மளை பிரிந்து சென்று விட்டார்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் மரணம்:

Post by krishnaamma on Fri Sep 19, 2014 9:52 pmஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் மரணம்:

Post by அசுரன் on Fri Sep 19, 2014 11:37 pm

எனது ஆழ்ந்த இரங்கல்கள். சோகம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் மரணம்:

Post by ஜாஹீதாபானு on Sat Sep 20, 2014 5:09 pm

ஆழ்ந்த இரங்கல்கள்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30083
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் மரணம்:

Post by ayyasamy ram on Sat Sep 20, 2014 5:17 pm

ஆழ்ந்த இரங்கல்கள்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34973
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் மரணம்:

Post by T.N.Balasubramanian on Sat Sep 20, 2014 5:30 pm

ஸ்ரீநிவாஸ் ,
மாண்டலின் இசைக்கருவி--நீ
மாண்ட பின் வெறும் கருவி ஆகிவிட்டது .
ரமணியன் அழுகை அழுகை அழுகை அழுகை


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21477
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் மரணம்:

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum