ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 ayyasamy ram

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 ayyasamy ram

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 ayyasamy ram

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சூப்பர் ஜோக்கள் !

View previous topic View next topic Go down

சூப்பர் ஜோக்கள் !

Post by krishnaamma on Sat Sep 20, 2014 6:11 pm

நண்பர் 1: போஸ்ட்மேன் மனைவிக்கு டெலிவரி ஆகியிருக்கு .. .. ?

நண்பர் 2: அதுக்கென்ன .. .. ? -

நண்பர் 1: குழந்தையோட வெயிட்டுக்கு ஏத்தா மாதிரிதான் ஆஸ்பத்திரிக்கப் பணம் கட்டுவென்னு ஒரே தகராறு பண்றாரு .. ..

-----------------------------------------

நண்பர்: திரும்ப வாங்க முடியாத கடன் கோடிக்கணக்குல இருக்கறதால உங்க பாங்க்குக்கு எதிர்காலமே இருக்காதுன்னு சொல்லிக்கறாங்களே?

அதிகாரி: நீங்க வேறே.. எதிர்காலத்துல எங்க பாங்க்கே இருக்காதுங்கறதுதான் உண்மை.

-----------------------------------------

நண்பர் 1: டி.வி-க்கு கொடுக்கணும்ங்கற எண்ணத்துலயே அந்த டைரக்டர் சினிமா படம் எடுக்கறாரு போலிருக்கு...

நண்பர் 2: எப்படி சொல்றீங்க..?

நண்பர் 1: படத்து நடுநடுவிலே நிறைய விளம்பரப் படமும் எடுத்திருக்காரே

-----------------------------------------

நண்பர் 1: என்ன சார்... உங்க பையன் அவனோட தாத்தா மேல ஏறிப் படுத்துகிட்டு இருக்கான்...?

நண்பர் 2: நான்தான் சொன்னேனே.. எங்கப்பா படுத்த படுக்கையா ஆகிட்டாருன்னு..

-----------------------------------------

நண்பர் 1: அந்த அம்பயர் ஏன் நடுவில் நிக்காம ரசிகர்களோடு நின்னுதான் அம்பயரிங் பண்ணுவேன்னு அடம் பிடிக்கிறார்?

நண்பர் 2: அவரை விட ரசிகர்கள் கரெக்டா அவுட் கொடுக்கறாங்களாம்.

-----------------------------------------

நண்பர் 1: நீங்க இதுவரைக்கும் எவ்வளவு கவிதை எழுதியிருப்பீங்க?

நண்பர் 2: சரியா சொல்லனும்னா 10 கிலோ 300 கிராம்.

-----------------------------------------

நண்பர் 1: இதோ தர்றேன் அவசரப்படாதீங்க எல்லாருக்கும் உண்டு அப்டீன்னு 100, 200ன்னு ரூபாய அள்ளி வீசுறாரே அவர் என்ன பெரிய கோடீஸ்வரரா?

நண்பர் 2: நீ வேற வாங்கின கடனை திருப்பி வாங்க சம்பளத்தன்னிக்கி ஆபிஸ்க்கே கடன்காரங்க வந்திருக்காங்க.

-----------------------------------------

நண்பர் 1: சீக்கரமே பணத்தை பெருக்க என்ன வழி?

நண்பர் 2: அதுவா.......கீழே போட்டுட்டு விளக்குமாறு எடுத்து பெருக்க வேண்டியதுதான்.

-----------------------------------------

நண்பர் 1: பரவாயில்லையே நாங்க எவ்வளவு அடிச்சும் உங்க பையனுக்கு "ழ" வரவே இல்லை. இன்னிக்கு கரெக்டா சொல்றானே. என்ன செஞ்சீங்க?

நண்பர் 2: நீங்க எவ்வளவு அடிச்சும் வராத "ழ" அவன் தண்ணியடிச்சதும் தானா வந்துடுச்சு.----------------------------------------------------------------------------------

நண்பர் 1: "பொண்ணு வீட்டுக்காரங்க ஏன் கல்யாணத்தை ஆனாலும் தள்ளி வச்சுகிட்டே போறாங்க?"

நண்பர் 2: "ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்த முடிக்கணும்னு பெரியவங்க சொன்னத சீரியசா எடுத்துகிட்டாங்க. அதனால இன்னும் 300 பொய் சொன்னப் பிறகு தான் கல்யாணமாம்.

-----------------------------------------

நண்பர் 1: என் - பையனுக்கு ராஜா-ன்னு பெயர் வெச்சது தப்பாப் போச்சு

நண்பர் 2: ஏன் என்ன ஆச்சு ?

நண்பர் 1: எப்பவும் (உடம்பில்) படையுடன் இருக்கான்.

-----------------------------------------

நண்பர்: என்ன ஜோஸியரே, கிளிக் கூண்டு ரொம்பச் சின்னதாயிருக்கு ?

ஜோசியர்: உள்ளே இருக்கிறது, வெட்டுக்கிளிங்க

------------------------------------------

நண்பர் 1: "உன் பொண்ணு ஓடிப்போனப்ப கௌரவம் சிவாஜி மாதிரி "கிளிக்கு ரெக்க முளைச்சுடுச்சு ஆத்த விட்டு பறந்து போயிடுச்சு" அப்டீன்ன இப்ப உன் பையன் 30 வயசாகியும் வேலைக்கு போகாம வீட்லயே உட்கார்ந்திட்டுருக்கானே இதுக்கு என்ன சொல்லப்போற?"

நண்பர் 2: "கொரங்குக்கு கால் ஒடஞ்சுபோச்சு ஆத்லயே உக்காந்துட்டுருக்கு."


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: சூப்பர் ஜோக்கள் !

Post by உமேரா on Sat Sep 20, 2014 6:14 pm

சிரிப்பு சிரிப்பு
avatar
உமேரா
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 173
மதிப்பீடுகள் : 152

View user profile

Back to top Go down

Re: சூப்பர் ஜோக்கள் !

Post by krishnaamma on Sat Sep 20, 2014 6:26 pm

நண்பர் 1: என் பொண்ணோட கல்யாண விசிடியக்கூட பாக்கவிடமாட்டேன்றாங்க?

நண்பர் 2: இதென்ன அக்ரமமா இருக்கு?

நண்பர் 1: தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிதான் பாக்கணுமாம். இல்லாட்டா 3 வருஷம் சிறை தண்டனையாம்.
-----------------------------------

நண்பர் 1: என்.டி. ராமாராவும் நாகேஸ்வரராவும் திருப்பதிக்கு ஒண்ணா எப்படிப் போவாங்க?

நண்பர் 2: ராவோட ராவா.

-----------------------------------

நண்பர்: நீங்க எடுத்த சஸ்பென்ஸ் படங்கள்லேயே கடைசியா எடுத்ததுதான் ரொம்ப பயங்கர சஸ்பென்ஸ்னு சொல்றீங்களே .. .. ஏன் ?

டைரக்டர்: கடைசிவரைக்கும் கதை என்னன்னு எனக்கே புரியலையே
-----------------------------------

நண்பர் 1: இந்திய ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறதே, எதனால் தெரியுமா?

நண்பர் 2: ஏனாம்?

நண்பர் 1: தீப கர்ப்பமா இருக்கிறதுனால.
-----------------------------------

நண்பர் 1: உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?

நண்பர் 2: அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான்.

-----------------------------------

நண்பர் 1: ஏன் வருத்தமாய் இருக்கீங்க ?

நண்பர் 2: அடுத்தவங்க பேச்சை நான் ஒட்டுக் கேட்கிறேன்னு நிறைய பேர் பேசிக்கிறாங்க.

-----------------------------------

நண்பர் 1: நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகலாம் என்று நினைத்தேன்.

நண்பர் 2: செய்வதுதானே

நண்பர் 1: கை எச்சலாகிவிடுமே.
-----------------------------------

நண்பர் 1: அது ஓர் அழுகை சினிமா. படம் பார்க்கும் போது அழுதுவிட்டேன்!

நண்பர் 2: எந்த இடத்தில்?

நண்பர் 1: உட்கார்ந்து கொண்டு படம் பார்த்த அதே இடத்தில் தான்.

-----------------------------------

நண்பர்: கவர்னர் பதவிக்கு உங்க பெயர் அடிபடுது ,,,,, நீங்க என்னடான்னா கவலையா காட்சி தர்றீங்களே ?

அரசியல்வாதி: இந்த தடவையாவது எப்படியும் ஜெயிச்சிடணுங்கற கவலைதான்.

-----------------------------------
நண்பர் 1: என்னங்க இது .. .. உங்க பையன் கடிகாரத்தை டேபிள் மேலே வெச்சுட்டு, புத்தகத்தைப் படிச்சுக்கிட்டே அதைச் சுத்திச் சுத்தி வரான் .. .. ?

நண்பர் 2: அவன் ரவுண்ட் தி க்ளாக் படிச்சுக்கிட்டிருக்கான் .. ..

-----------------------------------

சர்தார்: நேற்று ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை.

நண்பர்: ஏன்?

சர்தார்: மேல் பர்த் (Upper Berth) தான் கிடைத்தது

நண்பர்: கீழுள்ளவருடன் பேசி மாற்றிக் கொண்டிருக்கலாமே?

சர்தார்: செஞ்சிருக்கலாம். ஆனா கீழே யாரும் இல்லே.

-----------------------------------


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: சூப்பர் ஜோக்கள் !

Post by ஜாஹீதாபானு on Sat Sep 20, 2014 6:29 pm

ஹா ஹா ஹா அனைத்தும் சூப்பர்மா

பேங்க் ஜோக் அருமை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருதுavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30166
மதிப்பீடுகள் : 7035

View user profile

Back to top Go down

Re: சூப்பர் ஜோக்கள் !

Post by krishnaamma on Sat Sep 20, 2014 6:31 pm

@ஜாஹீதாபானு wrote:ஹா ஹா ஹா அனைத்தும் சூப்பர்மா

பேங்க் ஜோக் அருமை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1089372

நன்றி பானு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: சூப்பர் ஜோக்கள் !

Post by krishnaamma on Sat Sep 20, 2014 6:45 pm

ஒருவர்: உங்களுடன் சீட்டுக்குச் சேரும் பொடியன் அவ்வளவு நல்லவன் இல்லை. இடையிலே முறிச்சுக்கொண்டு ஊர் மாறி, காலை வாரி விடப் போறான் கவனம்.

மற்றவர்: நானே முதல் சீட்டை சேர்த்துக் கொண்டு நாடு மாறுவதற்கு எல்லா ஆயத்தங்களும் செய்து விட்டேன். நீங்கள் வேறு அது இது என்று சொல்லிக் கொண்டு…ஒருவர் ? ? ?

-------------------------

ரமனன்: ரெண்டு நாளா என் பையனைக் காணோம்

முராரி: அப்படியெல்லாம் சந்தேகமா என்னைப் பார்க்காதீங்க சார். என் பொண்ணு வீட்டுலதான் இருக்கா.

-------------------------

தொண்டர்: "தலைவா! உங்க பேரில் விசாரணைக்குக் கமிஷன் வச்சிருக்காங்க"

தலைவர்: "கமிஷனா".....வெரி குட்! எவ்வளவு கிடைக்கும்?..."

-------------------------

கோபு: பையன் பட்டாசு கேட்டா அதுக்கு ஏன் அவனை இப்படி போட்டு அடிக்கிறீங்க?

பாபு: கார் குண்டுதான் வேணும்னு அடம் பிடிக்கிறான் ராஸ்கல்.

-------------------------

மகன்: அப்பா, நான் மேலே படிக்க ஆசைப்படறேன்

தந்தை: அப்படியா..... ரொம்ப சந்தோஷம்..............மேஸ்திரிகிட்ட சொல்லி மாடியில் ரூம் கட்டி தரச் சொல்றேன்.

-------------------------

ஒருவர்: நம்ம ஜோசியர் யோகம் அடிக்கப் போகுதுன்னு சொன்னது சரியாப் போச்சு

மற்றொருவர்: லாட்டரி ஏதாவது விழுந்ததா ?

ஒருவர்: நீங்க வேற நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியா சண்டை. கடைசில அவ அடிச்சுட்டா என் கன்னம் வீங்கிப் போச்சு.
-------------------------

கோபு: "கிணத்துல விழுந்த குழந்தையைக் கஷ்டப்பட்டு மேலே தூக்கின நீ, எதுக்குடா மறுபடியும் கிணத்துலயே போட்டே?"

பாபு: எடுத்ததை எடுத்த இடத்துல வைக்கணும்னு எங்க அப்பா சொன்னது நினைவுக்கு வந்துடிச்சே....!

-------------------------

ரமனன்: சார், உங்ககிட்டே ஒரு மணி நேரம் பர்சனலா பேசணும் வீட்டுக்கு வரலாமா ?

முராரி: ஐயய்யோ, வீட்டுக்கு வந்து என் டயத்தை வேஸ்ட் பண்ணா தீங்க ஆபீசுக்கே வந்துடுங்க ஒரு மணி என்ன, ரெண்டு மணி நேரம்கூட பேசலாம்.
-------------------------

தொண்டர் 1: "தலைவர் எல்லாப் பதவியையும் தானே அனுபவிக்கணும்னு ஆசைப்படுவார்"

தொண்டர் 2: "அதுக்காக பொம்பளை வேஷம் போட்டுக்கிட்டு மகளிர் பகுதி செயலாளரா அவரே இருக்கிறததெல்லாம் கொஞ்சம் ஓவர்!"
-------------------------

ராமன் : எதிர்த்த வீட்டு பொண்ணு ஓடிப்போயிடுச்சே அதுக்கப்புறம் என்ன மாமி ஆச்சு?

மாமி: இதுக்கு மேல விவரங்கள் வேணும்னா மாமி.காம் ஓபன் பண்ணி பார்த்துக்கோடீம்மா.

-------------------------------
ராமன் : "வேலு பறவையிலேயே எந்தப் பறவை நல்லாப் பாடும் சொல்லு?"

வேலு: "பரவை முனியம்மா, சார்"

-------------------------------

அமைச்சர்: அரசே, இவர்களிருவரும் உங்களை கோழை என்றும், புறமுதுகு காட்டுபவர் என்றும் வீதியில் பேசிய வாறு இருந்தனர்

அரசர்: ராஜ ரகசியத்தை வெளியிட்ட இவர்களை பாசறையில் அடை.

-------------------------------

ஒருவர்: மாப்பிள்ளை ஏன் புரோகிதர் தாலி கட்டச் சொல்லியும் கட்டாம கல்யாண கூட்டத்துல யாரோ ஒருவர் விசில் அடிச்சதும் தாலி கட்டினாரே ஏன் ?

மற்றொருவர்: அதுவா மாப்பிள்ளைதான் பஸ் டிரைவர் ஆச்சே.

-------------------------------


Last edited by krishnaamma on Sat Sep 20, 2014 6:52 pm; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: சூப்பர் ஜோக்கள் !

Post by krishnaamma on Sat Sep 20, 2014 6:46 pm

ஒருவர் : போன படத்துல ஹீரோ கோயில் தூணைப் புடுங்கி அடிக்கிற மாதிரி காட்டினீங்க ஏதோ மக்கள் ஏத்துக் கிட்டாங்க அதுக்காக இந்தப் படத்துல கோயிலையே புடுங்கி அடிக்கறது ஒவர் சார்

-----------------------------

தொண்டர் 1: தலைவர் எங்க நிக்கவச்சாலும் நான் நிப்பேன்னு பெருமையா பேசினது தப்பா போச்சு.

தொண்டர் 2: ஏன் என்னாச்சு?

தொண்டர் 1: வீட்டுக்கு வாசல்ல செக்யூரிட்டியா நிக்க வச்சுட்டாரு.
-----------------------------

மாப்பிளை: மாமா, உங்க வீட்டோட மாப்பிள்ளையா வர எனக்கு தன்மானம் இடம் கொடுக்காது.

மாமா: சரி, என்ன செய்யலாம் ?

மாப்பிளை: உங்க வீட்டை விற்று பணத்தை என்கிட்டே குடுத்துடுங்க. அந்தப் பணத்துல வேற வீடு வாங்கிக் குடி போயிடலாம்.

-----------------------------

தொண்டர் 1: "தலைவர் எதுக்கு அனாவசியமா சலூன் போகும் போதெல்லாம் தொண்டர்களையும் கூட்டிட்டுப் போறார்"

தொண்டர் 2: "முடி வெட்டறதுக்கு முன்னால துண்டு போத்துவாங்கல்ல அப்ப கை தட்டறதுக்காக இருக்கும்."

-----------------------------

கோபு: முரளிதரன் தூரா பந்து போட ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சார் அம்பயர்க்கெல்லாம் குளிர்விட்டுப் போயிடிச்சு . . .

பாபு: எப்படி?

கோபு :2 விரலை தூக்கிட்டு 2 பேட்ஸ்மேனும் அவுட் இது ஒரு மேஜிக் அப்படீன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

-----------------------------

நிருபர்: ஆளுங்கட்சி எதிர்க்கட்சி 2க்கும் பொதுவான விஷயம் ஒண்ணு இருக்குன்னு அன்னிக்கு மீட்டிங்கில பேசறீங்களே அது என்ன?

அரசியல்வாதி: மக்களோட பணந்தான்.

-----------------------------

நீதிபதி: பார்த்தா அப்பாவியா தெரியறே ? நீயா பிக்பாக்கெட் ? நம்பவே முடியலையே ?

குற்றவாளி: உங்களை மாதிரிதாங்க எல்லோரும் எமாந்துடறாங்க ஐயா !
-----------------------------

ஒருவர்: இந்தியாவுக்கு ஹாட்ரிக்னா என்ன அர்த்தம் சொல்லு?

மற்றொருவர்: பந்துல 3 ரன் எடுக்கறதுதான்

-----------------------------

ஒருவர்: சார், பேங்க் கொள்ளை பற்றி ஒரு துப்பு கிடைச்சிருக்கு, கொள்ளை அடிச்சவன் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ளவன். நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கிறவன்.

மற்றொருவர்: எப்படிச் சொல்றீங்க ?

ஒருவர்: ஒவ்வொரு அக்கவுண்ட்ல இருந்தும் ஆயிரம் ரூபா கரெக்டா எடுத்து அதை அக்கவுண்ட்ல கழிச்சு சரியா கணக்கு டாலி பண்ணிட்டு போயிருக்கான்.

-----------------------------

திருடன்: என் வழில குறுக்கிட்டதாலதாங்க போலீஸை அடிச்சேன்.

நீதிபதி: எப்படி ?

திருடன்: ஜெயில்ல இருந்து தப்பி ஒடறப்ப தடுத்தாங்க.
-----------------------------

வேலு: "விசிடி கடையெல்லாம் மூடினதால நம்ம டைரக்டர் கை ஒடிஞ்ச மாதிரி ஆயிட்டார்"

ரமனன்: "ஏன் இவங்கதானே திருட்டு வி.சி.டி.ய ஒழிக்கனும்னு குதிச்சாங்க?"

வேலு: "தமிழ் சிடிக்கள மட்டும்தான் சொன்னாங்க இங்கிலீஷையும் ஒழிச்சுட்டா எதப்பாத்து இவர் படம் எடுக்க முடியும்"

--------------------------------


Last edited by krishnaamma on Sat Sep 20, 2014 6:58 pm; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: சூப்பர் ஜோக்கள் !

Post by krishnaamma on Sat Sep 20, 2014 6:56 pmகோபு: தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும்

பாபு: ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. ..?

--------------------------------

ரானி: தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?

வேனி: தெரியலையே .. .. என்னது ?

ரானி: தலையிலே முடி இருக்கறதுதான் .. ..

--------------------------------

பாபு: அவர் ஏன் காரை ரிவர்ஸ்லயே ஓட்டிட்டு போறார்.

கோபு: காரை விக்கும் போது கி.மீ. குறைவா காண்பிக்கணுமாம்.

--------------------------------

ரமனன்: என்னப்பா இது எலக்ட்ரிக் ட்ரெயின் டிரைவர போய் ஈவ் டீசிங் கேஸ்ல புடிச்சுட்டு வந்திருக்கீங்க?

வேலு: லைன்ல நடந்து போய்ட்டு இருந்த காலேஜ் பொண்ணு மேல ட்ரயினால மோதிட்டாராம்.

--------------------------------

ஒருவர்: அந்த சலூன் கடைக்காரரை ஏன் கைது செஞ்சாங்க?

மற்றொருவர்: "தலை சீவிட்டாராம்"

--------------------------------

கோபு:s 20 வருஷத்துக்கு முன்னாடி நீங்க எழுதின கதையப் படிச்சதும் நீங்களா இப்டி எழுதியிருக்கீங்கன்னு ஆச்சரியமா இருந்தது.

பாபு: உங்களுக்காவது ஆச்சரியம் எனக்கு சந்தேகமா இருந்தது.

--------------------------------

ரமனன்: என்னது நம்ம பத்திரிகை ஆபீஸ்லேந்து திருடிட்டு போனவன் திருப்பி பார்சல் அனுப்பியிருக்கானா?

பாபு: அதை ஏன் கேக்கறீங்க? பத்திரிகைக்கு வந்த கதையெல்லாம் படுகண்றாவியா இருக்குன்னு திருப்பி அனுப்சுட்டான் சண்டாளன்.

--------------------------------

மனநல ஆசிரியர்: "தம்பி அங்க பாரு பசங்களெல்லாம் பந்த எடுத்துட்டு அங்கயும் இங்கயும் ஓடி விளையாடறாங்க நீ மட்டும் இப்டி தனியா ஒரே இடத்துல நிக்கலாமா சொல்லு."

மாணவன்: "அய்யோ! நான் தான் கோல் கீப்பர் சார்."

--------------------------------

கோபு: ஓட்டப்பந்தயத்துல தங்க மெடல் வாங்கினா "ஊக்க மருந்து"ன்னு சொல்லி தடை செஞ்சிடுறாங்க. சரி கடைசில வந்தவங்களையும் ஏன் செக் பண்றாங்க?

பாபு: இவங்க ஏதாவது "தூக்க மருந்து" சாப்பிட்டு இருப்பாங்களோன்னுதான்.

--------------------------------


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: சூப்பர் ஜோக்கள் !

Post by krishnaamma on Sat Sep 20, 2014 7:04 pm

ஒருவர்: லோகோ எதுவும் சட்டைல போடக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு தெரியுமில்ல?

மற்றொருவர்: டிரிங்க்ஸ் குடிக்கறப்ப ஜூஸ் சிந்திடுச்சி சார்!

---------------------------------

மகன்: அப்பா பைத்தியம்னா என்னப்பா?

தந்தை: சம்பந்தா சம்பந்தமில்லாம நீளமா எதையாவது உளறிகிட்டே இருப்பாங்க ....................பேசறது எதுவுமே புரியாது ......................என்ன புரிஞ்சுதா?

மகன்: சுத்தமா புரியலையேப்பா . . .

---------------------------------

அப்பா: டேய் உலகத்துலயே காசுதாண்டா முக்கியம் காசு இல்லன்னா எதையுமே வாங்க முடியாதுடா.

மகன்: ஏன் கடன் வாங்கலாமே . . .


---------------------------------

போலிஸ்: டெய்லி போலிஸ் ஸ்டேஷன்ல வந்து 2 வேளையும் கையெழுத்து போட்டு போகணும் தெரியுதா?

திருடன்: கையெழுத்து போட்டுட்டு நான் வழக்கம்போல திருடப் போலாங்களா ஐயா?

---------------------------------

நீதிபதி: ஏன் இப்படி கைதிகளை முதுகு வளைஞ்ச நிலைலே கோர்ட்டுக்கு கூட்டிட்டு வர்றீங்க இப்படியா ட்ரீட் பண்றது?

போலிஸ்: நாங்க மடக்கி பிடிச்சதுல இது மாதிரியாயிடுச்சு சார்.

---------------------------------

நீதிபதி: கள்ள நோட்டு அடிக்கறதே குற்றம் . . . இதுல என்ன திமிர் இருந்தா 1000 ரூபாய் நோட்டை தலைகீழா அடிப்பே . . .

குற்றவாளி: என்ன செய்யறது எஜமான் . . . தண்ணியடிச்சிட்டு நோட்டு அடிச்சதால தவறுதலா "0001"ன்னு அடிச்சிட்டோம் . . .

---------------------------------

வேலு: யாரது டெய்லி ராத்திரி 2 மணிக்கு வந்து உங்கள கூட்டிட்டு போறது?

ரமனன்: என் பிரண்டுதான். அவனுக்கும் தூக்கத்துல நடக்கிற வியாதி. எனக்கும் அதே வியாதி. அதனால நான் தான் ஒரு கம்பெனிக்காக வந்து எழுப்பச் சொல்லியிருக்கேன்.

---------------------------------

நிருபர்: உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

நடிகை: நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

---------------------------------

பாக்கி: ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?

ரமனன்: பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.

---------------------------------

வேலு: உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?

ஓட்டல் ஓனர்: நான் எப்பவுமே என் கடையில் எதையும் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.

---------------------------------
வேலு: "ஓட்டல் ஓனர் வீட்ல பொண்ணு பார்க்கப் போனது தப்பாப்போச்சு"

ரமனன்: "ஏன்?"

வேலு: "பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னதும், சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜி, காபிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு."

---------------------------------

வேலு: எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு கிளார்க் இருக்காங்க . . .

பாலு : இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?

வேலு: நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.

---------------------------------

வேலு: என் சொந்த ஊரு மதுரை. இப்பதான் திருச்சி வர்றேன். என் பேரு 'அங்கு ராஜ்'

பாக்கி: இங்கு என்ன பேர் வச்சிருக்கீங்க?

---------------------------------

சர்வர்: முதலாளி சதாம் உசேன உங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கலாம் அதுக்காக போர்டுல இப்படியா எழுதறது.

முதலாளி: என்ன எழுதியிருக்கேன்?

சர்வர்: தயிர் சதாம் , தக்காளி சதாம், லெமன் சதாம் ரெடி அப்படீன்னு எழுதியிருக்கீங்க.

---------------------------------

வேலு: கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா

பாக்கி: நீ என்னாவே....?

வேலு: காலியாயிருவேன்.


இது இங்குள்ள யாரையும் குறிக்கலை ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: சூப்பர் ஜோக்கள் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum