ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அக்டோபர் மாத பலன்கள் !

View previous topic View next topic Go down

அக்டோபர் மாத பலன்கள் !

Post by krishnaamma on Wed Oct 01, 2014 8:09 pm

மேஷம்:

மற்றவர்களுக்கு கலங்கரை விளக்காக திகழ்பவர்களே! 19-ந் தேதி வரை சுக்ரன் உங்கள் ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கழுத்து வலி, முதுகு வலி வந்துப் போகும். சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படும். 20-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்வதால் சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். அழகு, இளமைக் கூடும். குரு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அலைச்சல் இருந்தாலும் குரு உச்சம் பெற்று நிற்பதால் ஓரளவு பணவரவு உண்டு. வெளிமாநிலம், அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். கண்டகச் சனி நடைபெறுவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். வீண் சந்தேகத்தால் பிரிவு ஏற்படக்கூடும்.

உங்களின் பூர்வ சூரியன் சாதகமாக இல்லாததால் நிற்பதால் பிள்ளைகளின் ஆரோக்யம் பாதிக்கும். அவர்களுடன் சின்ன சின்ன விவாதங்கள் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டேப் போகும். கனவுத் தொல்லை அதிகரிக்கும். சகோதரங்களுடன் மோதல் வரும். 13-ந் தேதி முதல் செவ்வாய் 9-ம் வீட்டிற்கு செல்வதால் அலைச்சல் குறையும். மாணவ-மாணவிகளே! விளையாட்டுத் தனத்தைக் குறைத்துக் கொண்டு படிப்பில் ஆர்வம் காட்டுங்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் அதிக கவனம் செலுத்துங்கள். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள்.

பெற்றோருடன் மோதிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். ஏமாற்றங்களும் வந்துப் போகும். உத்தியோகத்தில் அதிகாரி உங்களைப் புரிந்துக் கொள்ளமாட்டார். உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். கலைத்துறையினரே! வருவதாக இருந்த வாய்ப்புகள் கை நழுவிப் போகும். சிக்கனமும், பொறுமையும் தேவைப்படும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீநடராஜப் பெருமானை பௌர்ணமி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் மாத பலன்கள் !

Post by krishnaamma on Wed Oct 01, 2014 8:11 pm

ரிஷபம்

சிந்தனைத்திறனும், செயல்திறனும் கொண்டவர்களே! உங்களின் பூர்வ புண்யாதிபதியான புதன் 5-ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் சோம்பல், களைப்பு நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். தள்ளிப் போன விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். குழந்தை பாக்யம் கிடைக்கும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். முன்கோபம் குறையும். ராகு 5-ம் வீட்டிலேயே நிற்பதால் அவ்வப்போது எதிர்காலம் பற்றிய பயம் வந்து விலகும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட அச்சமும் வரக்கூடும்.

உங்களைப் பற்றிய வதந்திகளும் பரவலாக இருக்கும். சனி சாதகமாக இருப்பதால் புதிய முயற்சிகளில் வெற்றியடைவீர்கள். வழக்குகள் சாதகமாகும். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். ஷேர் முலமாக பணம் வரும். செவ்வாய் வலுவாக நிற்பதால் உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமையும். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். ஆனால் 13-ந் தேதி முதல் செவ்வாய் 8-ல் அமர்வதால் அலைச்சல், செலவினங்கள் அதிகரிக்கும். கேது லாப நிற்பதால் குடும்ப வருமானம் உயரும். சிலர் உத்தியோகத்தில் இருந்துக் கொண்டே வியாபாரம் செய்வதற்கான வாய்ப்பும் வரும்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் மட்டுமல்லாமல் கலைப் போட்டிகளிலும் கலந்துக் கொண்டு பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! எதிர்பார்த்த உதவிகள் பழைய நண்பர்களிடமிருந்து கிடைக்கும். சிலருக்கு வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார். கலைத்துறையினரே! தள்ளிப் போன வாய்ப்புகள் கூடி வரும். வசதி, வாய்ப்புகள் பெருகும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீதுர்க்கை அம்மனை செவ்வாய் கிழமையில் சென்று வணங்குங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் மாத பலன்கள் !

Post by krishnaamma on Wed Oct 01, 2014 8:13 pm

மிதுனம்

எப்போதும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்பவர்களே! உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் செவ்வாய் செல்வதால் தொட்ட காரியங்கள் துலங்கும். எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகை கைக்கு வந்து சேரும். செல்வாக்குக் கூடும். வழக்கு சாதகமாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பணவரவு கணிசமாக உயரும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.

உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். விருந்தினர்கள், உறவினர்கள் வருகை அதிகரிக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்துப் பேசுவார்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நல்ல விதத்தில் முடியும். எதிர்வீட்டுக்காரர்களுடன் இருந்த பகைமை நீங்கும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் பழைய வாகனத்தை தந்து விட்டு புதுசு வாங்குவீர்கள்.

பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். கூடுதல் அறைக் கட்டுவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். 5-ம் வீட்டிலேயே சனி நிற்பதால் பாகப்பிரிவினைகளில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். ஆனாலும் பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மாணவ-மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். கலைப் போட்டிகளிலும் கலந்துக் கொண்டு மகிழ்வீர்கள். கன்னிப் பெண்களே! உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலிலிருந்து விடுபடுவீர்கள். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள்-. பிரபலங்கள் வாடிக்கையாளர்களாக வருவார்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள்.

ஆனால் ராசிநாதனான புதன் ராகுவுடன் சேர்ந்து நின்றுக் கொண்டிருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். கலைத்துறையினரே! புதுப் பட வாய்ப்புகள் வரும். படத்தை வெளியிட முடியாமல் தவித்தவர்களுக்கு படத்தை வெளியிடும் அமைப்பு உண்டாகும். அதிரடி முன்னேற்றங்கள் தரும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீசனிபகவானை சனிக்கிழமையில் எள் தீபமேற்றி வணங்குங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் மாத பலன்கள் !

Post by krishnaamma on Wed Oct 01, 2014 8:14 pm

கடகம்

பிறந்த மண்ணையும் பேசும் மொழியையும் நேசிப்பவர்களே! உங்கள் ராசிக்குள்ளேயே குரு நிற்பதால் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டேப் போகும். உங்களைப் பற்றியே நீங்கள் குறைவாக மதிப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். சின்ன சின்ன விஷயங்கள் கூட தடைப்பட்டு முடியும். என்றாலும் குரு உச்சம் பெற்று நிற்பதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். எதிர்ப்புகள் ஒருபக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் ஆதரவும் பெருகும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உயர் ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

எதிர்ப்புகள் நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வீடு மாறுவது, விற்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும். அரசால் ஆதாயம் உண்டு. உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். புதன் சாதகமாக இருப்பதால் நட்பு வட்டம் விரிவடையும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். சிலருக்கு புது வேலைக் கிடைக்கும். வீடு, மனை உங்கள் ரசனைக் கேற்ப அமையும். மகளுக்கு திருமணம் கூடி வரும். மகனுக்கிருந்து வந்த கூடாப்பழக்க வழக்கம் விலகும். மாணவ-மாணவிகளே! வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள்.

கணிதப் பாடத்தில் முன்னேறுவீர்கள். கன்னிப் பெண்களே! நீண்ட கால கனவு நனவாகும். ரசனைக் கேற்ப வரன் அமையும். சிலருக்கு வெளிமாநிலம், அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி மாறுவார்.

வேலைச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். சனி உத்தியோகஸ்தானத்தை பார்த்துக் கொண்டிருப்பதால் உத்தியோகத்தில் இடமாற்றங்கள் வரக்கூடும். கலைத்துறையினரே! உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அறிவுப் பூர்வமான முடிவுகளால் வெற்றி பெறும் மாதமிது. பரிகாரம்: அருகிலுள்ள சித்தர் பீடம் சென்று தியானம் செய்து வணங்குங்கள்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் மாத பலன்கள் !

Post by krishnaamma on Wed Oct 01, 2014 8:15 pm

சிம்மம்

நல்லது கெட்டது நான்கையும் அறிந்தவர்களே! உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்ரன் செல்வதால் தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். உயர்ரக ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். நான்கைந்து மாதமாக வீடு தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வீடு அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.

உங்கள் தனாதிபதியான புதன் உச்சம் பெற்று காணப்படுவதால் வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வதற்கும் வழி கிட்டும். ஆனால் அரசுக் காரியங்கள் தடைப்பட்டு முடிவடையும். உங்கள் பாக்யாதிபதி குரு 12-ல் நிற்பதால் சுபச் செலவுகள் அதிகமாகும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். கோவில் விழாக்களில் கலந்துக் கொள்வீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

உங்கள் பிரபல யோகாதிபதியான செவ்வாய் சாதகமாக இருப்பதால் நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். சொத்து சிக்கல்களும் சுமூகமாக முடியும். பாகப்பிரிவினை சுமூகமாகும். 8-ம் வீட்டில் கேது நிற்பதால் மனைவிக்கு இடுப்பு வலி, மூட்டு வலி வந்துப் போகும். மாணவ-மாணவிகளே! உங்களின் பொது அறிவு, மொழி அறிவுத் திறன் கூடும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம். பெற்றோரை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுங்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும்.

சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். ஆனால் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையினரே! தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும். வரவேற்பு அதிகரிக்கும். கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் வெற்றி பெறும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் மாத பலன்கள் !

Post by krishnaamma on Wed Oct 01, 2014 8:16 pm

கன்னி

கள்ளங்கபடமில்லாத வெள்ளையுள்ளம் கொண்டவர்களே! உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளிலும், சாதகமான நட்சத்திரங்களிலும் செவ்வாய் செல்வதால் குழப்பங்கள் நீங்கும். தைரியமாக, தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சவாலான காரியங்களைக் கூட துணிந்து ஏற்று நடத்துவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். சகோதர வகையில் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். சொத்துப் பிரச்னை சுமூகமாக முடியும்.

எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள்-. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். குரு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். சூரியன் சாதகமாக இல்லாததால் உடல் உஷ்ணம் அதிகமாகும். அடிவயிற்றில் வலி, சளித் தொந்தரவு, யூரினரி இன்பெக்ஷன் வந்து நீங்கும். உங்கள் ராசிநாதன் புதன் உச்சம் பெற்றிருப்பதால் விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

ஏழரைச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மூச்சுத் திணறல், வாயுக் கோளாறால் மூச்சுப் பிடிப்பு, நெஞ்சு வலி வந்து நீங்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. மாணவ-மாணவிகளே! வேதியியல் பாடப்பிரிவில் சோதனைக் கூடத்தில் ஆய்வின் போது அமிலங்களை கவனமாக கையாளுங்கள். கன்னிப் பெண்களே! நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வேலைக்கான அழைப்பு இப்போது வரும். அரசியல்வாதிகளே! தலைமையுடன் கருத்து மோதல் வரும். எதிர்கட்சியினரின் பாராட்டுக் கிடைக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் கூடும். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.

பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் பரிந்துரையால் புதிய வாய்ப்புகள் வரும். விதியை மதியால் வெல்லும் மாதமிது. பரிகாரம்: திருப்பதி ஸ்ரீவெங்கடாஜலபதியை ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் மாத பலன்கள் !

Post by krishnaamma on Wed Oct 01, 2014 8:18 pm

துலாம்

சமயோஜித புத்தி அதிகமுள்ளவர்களே! உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் கேது நிற்பதால் நல்லவர்களின் நட்பு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களை நல்ல விதத்தில் முடிப்பீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது அச்சப்பட வேண்டாம். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை குறைந்த வட்டிக்கு கடன் கிடைத்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். 17-ந் தேதி வரை உங்கள் ராசிக்கு பாதகாதிபதியான சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். ஆனால் உங்களுடைய ராசிநாதனான சுக்ரன் 12-ல் மறைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல் வரும். பழைய சம்பவங்கள், பழைய பிரச்னைகளை மேற்கோள் காட்டிப் பேச வேண்டாம். உங்கள் உறவினர் மற்றும் மனைவிவழி உறவினர்களைக் கூறி சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள்.

தொண்டை வலி, சளித் தொந்தரவு வந்துப் போகும். வேலைச்சுமை அதிகமாகும். ஆனால் 20-ந் தேதி முதல் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசிக்குள் ஆட்சிப் பெற்று அமர்வதால் அழகு, இளமைக் கூடும். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். உங்கள் பாக்யாதிபதியான புதன் 12-ல் மறைந்திருந்தாலும் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் நட்பு வட்டம் விரிவடையும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கன்னடம், தெலுங்கு, மலையாளம் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். ஜென்மச் சனி நடைபெறுவதால் மறதி உண்டாகும். ஞாபக மறதியால் செல்போன் தொலைய வாய்ப்பிருக்கிறது.

உங்களுடைய ராசிக்கு சாதகமான வீடுகளில் செவ்வாய் பயணிப்பதால் எத்தனைப் பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் சக்தி கிடைக்கும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வேற்றுமதத்தினராலும் ஆதாயம் உண்டாகும். மாணவ-மாணவிகளே! விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். எனவே கவனம் தேவை. அறிவியல் பாடத்தில் அதிக அக்கறை காட்டுவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் கடுமையாக இருக்கும். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.

உங்கள் ராசிக்கு 10-ல் குரு நிற்பதால் உத்தியோகத்தில் நிம்மதியற்ற போக்கு நிலவும். அதிகாரிகள் இரட்டை வேடம் போடுவதாக நீங்கள் நினைப்பீர்கள். கலைத்துறையினரே! உங்களுடைய கலைத் திறன் வளரும். புதிய வாய்ப்புகள் வரும். அநாவசிய, ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய மாதமிது. பரிகாரம்: ஸ்ரீகுருபகவானை கொண்டை கடலை மாலை போட்டு வணங்கவும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் மாத பலன்கள் !

Post by krishnaamma on Wed Oct 01, 2014 8:19 pm

விருச்சிகம்

போராட்டங்கள், ஏமாற்றங்களை கண்டு புலம்பாதவர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் வலுவாக நிற்பதால் உங்களின் வாழ்க்கை தரம் உயரும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். துணிச்சலாக முக்கிய வேலைகளில் ஈடுபடுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீடு, மனை வாங்குவது,

விற்பதில் இருந்த தேக்க நிலை மாறும். ஏழரைச் சனி நடைபெறுவதாலும் 12-ல் சனி நிற்பதாலும் தூக்கம் குறையும். வேலைச்சுமை அதிகமாகும். பெரிய காரியங்களை விரைவாக முடிப்பீர்கள். ஆனால் சின்ன சின்ன காரியங்கள் தடைப்பட்டு முடியும். உங்களின் தன-பூர்வ புண்யாபதியான குரு உச்சம் பெற்று அமர்ந்திருப்பதாலும் உங்கள் ராசியைப் பார்ப்பதாலும் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும்.

மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். முக்கிய கிரகங்கள் லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலமாக பணம் வரும். வசதி, வாய்ப்புகள் கூடும். பழைய வாகனத்தை விற்று விட்டு புதுசு வாங்குவீர்கள். மாணவ-மாணவிகளே! படிப்பிலும் முன்னேறுவீர்கள். பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டிகளிலும் கலந்துக் கொண்டு பரிசு, பாராட்டுகள் பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். திருமணம் கூடி வரும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அமைதி உண்டாகும். நீண்ட நாட்களாக போராடிக் கேட்டுக் கொண்டிருந்த இடமாற்றமும் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்ப்பார்க்கலாம்.

கலைத்துறையினரே! பரிசு, பாராட்டுகள் கிடைக்கும். பணபலம் கூடும். தொட்டது துலங்கும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீசூரிய பகவானை ஞாயிற்றுக் கிழமையில் சென்று வணங்குங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் மாத பலன்கள் !

Post by krishnaamma on Wed Oct 01, 2014 8:20 pm

தனுசு

ஊர் கூடி எதிர்த்தாலும் கொள்கையை மாற்றிக் கொள்ளாதவர்களே! லாப வீட்டில் சனிபகவான் நிற்பதால் நட்பு வட்டம் விரிவடையும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகை கைக்கு வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். வெளிநாடு, அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் திருப்பம் உண்டாகும்.

உங்கள் ராசிநாதனான குரு 8-ல் மறைந்திருப்பதால் உங்களுடைய நடத்தை கோளத்தை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உங்களது பலம், பலனத்தை உணர்ந்து உங்களை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். யோகா, தியானம் மூலமாகவும் உங்களுக்கு நல்ல மாற்றம் வரும். வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதையும் உணருவீர்கள். உங்கள் பாக்யாதிபதியான சூரியன் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். தந்தைவழியில் உதவிகள் உண்டு.

பூர்வீக சொத்துப் பிரச்னையும் தீரும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாணவ-மாணவிகளே! வகுப்பாசிரியரின் பாராட்டை பெறுமளவிற்கு கல்வியில் முன்னேறுவீர்கள். கன்னிப் பெண்களே! கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். சந்தை நிலவரத்தை அறிந்துக் கொள்வதுடன், வாடிக்கையாளர்களின் ரசனையையும் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப புது முதலீடு செய்வீர்கள்.

உத்தியோகத்தில் கடின உழைப்பால் மூத்த அதிகாரிகள் மனதில் இடம் பிடிப்பீர்கள். சம்பள பாக்கியும் கைக்கு வரும். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம். கலைத்துறையினரே! உங்களின் யதார்த்தமான படைப்புகள் பரவலாக பாராட்டிப் பேசப்படும். தைரியமான முடிவுகளால் பழைய பிரச்னைகள் பாதியாக குறையும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீவிநாயகப் பெருமானை சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் மாத பலன்கள் !

Post by krishnaamma on Wed Oct 01, 2014 8:21 pm

மகரம்

ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பவர்களே! உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியும்-பிரபல யோகாதிபதியுமான புதன் உச்சம் பெற்று ராசிக்கு 9-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் அடிமனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் மனதில் உருவாகும். தடைகளெல்லாம் விலகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பிகளும் அறிமுகமாவார்கள்.

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். மனைவி ஒத்தாசையாக இருப்பார். மனைவிவழி உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். வழக்குகள் சாதகமாகும். தந்தைவழி சொத்துக்கள் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். ஷேர் மூலமாக பணம் வரும். பழைய நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். உறவினர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்ப்புகள் குறையும்.

குரு உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சியும் வெற்றியடையும். அரசியல்வாதிகளாலும் ஆதாயமடைவீர்கள். உங்களிடமிருந்த கலை உணர்வுகள், படைப்புத் தன்மை, அழகுணர்வுகளையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சுக்ரன் சாதகமாக இருப்பதாலும் 26-ந் தேதி முதல் நீசபங்கமடைவதாலும் குடும்ப வருமானம் உயரும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்து வாங்கும் அமைப்பு உருவாகும். வாகனத்தையும் மாற்றுவீர்கள். சுக்ரன் ராகுவுடன் சேர்வதால் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு நீங்கள் பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும்

கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். 12-ந் தேதி வரை செவ்வாய் லாப ஸ்தானத்திலேயே வலுவாக நிற்பதால் சகோதரங்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். தாய்வழி சொத்து வந்து சேரும்-. மாணவ-மாணவிகளே! விளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள்.

ஓவியம், இசைப் போட்டிகளில் கலந்துக் கொண்டு முன்னேறுவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள், பிரச்னைகள் தீரும். வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். 3-ம் வீட்டில் கேது நிற்பதால் தைரியமாக கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் மாத பலன்கள் !

Post by krishnaamma on Wed Oct 01, 2014 8:22 pm

கும்பம்

பட்டம் பதவி, பணத்துக்கெல்லாம் மயங்காதவர்களே! செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் சோர்வு, களைப்பிலிருந்து விடுபடுவீர்கள். உற்சாகமாக சில முக்கிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது ஒரு பயம் வரும். அதை சமாளிக்கும் வழி இந்த மாதத்தில் கிடைக்கும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. வீடு, மனை விற்பது மூலமாக பணம் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களும் அறிமுகமாவார்கள்.

உங்களுடைய ராசிநாதன் சனிபகவான் உச்சம் பெற்று நிற்பதால் புதிய பாதை தெரியும். நட்பு வட்டம் விரிவடையும். தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். சிலர் சொந்த ஊர், சொந்த மாநிலத்தை விட்டு வேறுமாநிலம் அல்லது வேறு நாட்டிற்கு போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். உங்களுடைய ராசிக்கு 6-ல் குரு மறைந்துக் கிடப்பதால் உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்துவார்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். குடும்ப வருமானத்தை உயர்த்த வழி பிறக்கும்.

அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். மனைவிவழியில் மதிப்புக் கூடும். பழுதான வாகனம் சரியாகும். உங்கள் பூர்வ புண்யாதிபதி புதன் 8-ல் மறைந்திருப்பதால் பிள்ளைகளுடன் சின்ன சின்ன வாக்குவாதம் வரும். ஆனால் புதன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மாணவ-மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். வகுப்பறையில் அரட்டைப் பேச்சை தவிர்ப்பது நல்லது. கூச்சப்படாமல் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

கன்னிப் பெண்களே! பழைய நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வேலைக் கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வியாபாரத்தில் ரகசியங்கள் பங்குதாரர்களாளோ, வேலையாட்களாளோ கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டு தொடர்புள்ள வியாபாரத்தால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மூத்த அதிகாரி மனம் விட்டு பேசுவார். கலைத்துறையினரே! சக கலைஞர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். பெரியோர்களின் ஆலோசனையாலும், ராஜதந்திரத்தாலும் சாதிக்கும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீகபாலீஸ்வரரை திரயோதசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் மாத பலன்கள் !

Post by krishnaamma on Wed Oct 01, 2014 8:23 pm

மீனம்

நெருக்கடி நேரத்திலும் நிதானம் தவறாதவர்களே! கடந்த ஒரு மாதகாலமாக உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு அலைச்சலையும், செலவுகளையும், காரியத் தடைகளையும், மனஉளைச்சலையும் தந்துக் கொண்டிருக்கும் சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனநிம்மதி உண்டாகும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். வாகன விபத்துகள் நீங்கும். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் கூடி வரும். புதன் சாதகமாக இருப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

நட்பால் ஆதாயமடைவீர்கள். நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சூரியன் சாதகமாக இல்லாததால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் கருத்து மோதல்களும் வரக்கூடும். 5-ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் நீங்கும். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித் தனத்தை மெச்சுவார்கள். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக கேரண்டர் கையப்பமிட வேண்டாம்.

அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்துப் போகும். உங்களின் தன-பாக்யாதிபதியான செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும். புது ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மாணவ-மாணவிகளே! அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் விடைகளை எழுதிப் பாருங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள். வகுப்பாசிரியர் உங்கள் மீதுள்ள அக்கறையில் உங்களின் குறைகளை சுட்டிக் காட்டுவார். நீங்கள் திருத்திக் கொள்வது நல்லது. கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் திடீர் முடிவுகள் வேண்டாம். நட்பு வட்டத்திலும் கவனமாக இருங்கள்.

வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமயோஜித புத்தியுடன் வாடிக்கையாளர்களிடம் பேசி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அனைவரும் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். கலைத்துறையினரே! புதிய கலைஞர்களால் பெரிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இடம், பொருள், ஏவலறிந்து பேசி சாதிக்கும் மாதமிது. பரிகாரம்: ரமண மகரிஷியை திங்கட் கிழமையில் சென்று வணங்குங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் மாத பலன்கள் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum