ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புதிய சமயங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 ரா.ரமேஷ்குமார்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 krishnanramadurai

ஒரு சந்தேகம்??
 மூர்த்தி

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 krishnaamma

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி

View previous topic View next topic Go down

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி

Post by சிவா on Sat Oct 04, 2014 1:51 am

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மகத்தானது என, தீர்ப்பு வெளியாகி 7 நாட்களுக்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் உடனடியாக கருத்து தெரிவித்த நிலையில், கருணாநிதி மட்டும் கருத்து சொல்லாமல் இருந்து வந்தார். இது பல்வேறு விமர்சனங்களை கிளப்பியது.

இந்நிலையில் இவ்விஷயத்தில் தனது மவுனத்தை கலைத்துள்ள கருணாநிதி, தீர்ப்பை வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை வருமாறு:


ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக தாங்கள் எதுவுமே கூறவில்லையே?

இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு. நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஒரு பத்திரிகை தலையங்கம் எழுதியுள்ளது.

முக்கியமான வழக்குகளை மாநிலம் விட்டு வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவம் உண்டா?

உச்சநீதிமன்றம் பல வழக்குகளை வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவங்கள் உண்டு. நான் முதலமைச்சராக இருந்தபோதே என் மகன் மு.க.அழகிரி மீதான வழக்கை மராட்டிய மாநிலத்துக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது.

தீர்ப்பைத் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறையால் ஏற்பட்டுள்ள இழப்பீடுகளுக்கான தொகையை அதிமுகவிடம் இருந்து பெற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாரே..?

உண்மையில் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்துதான் இது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வன்முறை செயல்களில் ஈடுபட்ட அதிமுகவைத் தடை செய்யவும் தயங்கக் கூடாது என்று தமிழக ஆளுநருக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ஆண்டு மே 13-ஆம் தேதி தமிழகச் சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எந்தக் கட்சி ஈடுபட்டாலும், அந்தக் கட்சியைத் தடை செய்ய அரசு தயங்காது என்று கூறியிருந்தார்.அதனை நினைவுபடுத்திதான் ராமதாஸ் தற்போது கூறியுள்ளார்.

இவ்வாறு அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி

Post by யினியவன் on Sat Oct 04, 2014 4:46 am

அடடே அரை தூக்கத்துல அய்யா ஏதோ முனகிட்டாரே புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி

Post by krishnaamma on Sat Oct 04, 2014 10:03 am

//ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக தாங்கள் எதுவுமே கூறவில்லையே?

இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு. நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஒரு பத்திரிகை தலையங்கம் எழுதியுள்ளது.//


ஏன், இவர் தானே உடன்பிறப்புகளுக்கு எழுதுவார்..இப்போ மறந்துட்டரா? ஹா....ஹா...ஹா....
"ஆடி  கழிச்சு   5ம் நாள் கோழி அடிச்சு கும்பிட்டனாம்"................ அப்படி இருக்கு இவர் அறிக்கை !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி

Post by ayyasamy ram on Sat Oct 04, 2014 10:44 am

முதியவர்களை அதிகமாக தாக்கும் Alzheimer (ஞாபகமறதி)
இவரையும் தாக்கி இருக்கலாம்...!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி

Post by T.N.Balasubramanian on Sat Oct 04, 2014 11:36 am

சொந்தக் கருத்தை கூற
( 1---பயமாக உள்ளது , நாளைக்கு நமக்கு என்னாகுமோ ?
2---பயமாக உள்ளது அதனால் என் சொந்தக் கருத்தைக் கூறாமல் ,
மற்ற பத்திரிகைகள் கூறியதைக் கூறி சமாளித்துவிட்டேன் என்று
உங்கள் எல்லோரையும் முட்டாளாக்குகிறேன்.)

உங்களுக்கு பிடித்ததை டிக் செய்து கொள்ளவும் .

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21508
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி

Post by மாணிக்கம் நடேசன் on Sun Oct 05, 2014 8:37 am

இத இப்ப சொல்லுவாரு கருணாநிதி அண்ணன், அவரோட குடும்ப வழக்கு வரும்போது ????????? அது வரைக்கும் இவரு இருப்பாரா?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4230
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி

Post by rksivam on Sun Oct 05, 2014 9:15 am

நீதி மன்றங்களின் மீதான நம்பிக்கை 20 ஆம் தேதிக்கு மேல் இன்னும் உறுதிப்படும்போது என்ன அலறு அலறப்போகிராரோ. ஆரிய கூட்டு சதி, திராவிடத்தின் மீது விழுந்த இந்துத்த்வா அடக்குமுறை,பார்ப்பன்னர்களின் ஆதிக்க வெறி, தென்னக திராவிடத்தை அடக்க வடநாட்டினரின் சதி, ராசா ஒரு தலித் என்பதனால்தானே இந்த வழக்கு போன்ற விமரிசனங்கள் மதிய அரசு மீதும் நீதித்துறை மீதும் அள்ளி தெளிக்கத்தான் போகிறார்.எனக்கு தெரிந்து கடந்த நாற்ப்பது வருடங்களாக ஒரே விஷயத்தை தனக்கு ஒரு மாதிரியாகவும் மற்றவர்களுக்கு வேறுமாதிரியாகவும் பார்த்தவர் கருணாநிதி. ஜெயலலிதா கைதின்போது 20 ஆம் தேதி நினைவில்தான் வாயைமூடிக்கொண்டிருந்தார். இல்லையென்றால் அம்மையாரின் ஆர்பாட்டம் முடிந்தது. கட்டுக்கடங்காத காட்டுமிராண்டித்தனமான அ தி மு க ஆட்சி அகன்றது, அண்ணா பெரியாரின் கனவு நினைவாகியது போன்ற அறைகூவல் விட்டிருப்பாரே.

கத்தி அவர் தலைக்கு மேலேயும் தொங்குகிறது. அவர் அனுபவிக்க ஆண்டவன் அவருக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்.

சிவம்
avatar
rksivam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 61
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

Re: ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி

Post by யினியவன் on Sun Oct 05, 2014 11:36 am

செய்த பாவத்திற்கு கண்டிப்பா அனுபவித்தே ஆகணும் அய்யாவும்.

சீக்கிரம் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி

Post by ayyasamy ram on Sun Oct 05, 2014 11:40 am

சொந்தக் கருத்தைக் கூறுவது புத்திசாலித்தனம் அல்ல...!
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி

Post by krishnaamma on Sun Oct 05, 2014 4:37 pm

@யினியவன் wrote:செய்த பாவத்திற்கு கண்டிப்பா அனுபவித்தே ஆகணும் அய்யாவும்.

சீக்கிரம் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1092974

ஏய்...........யாரங்கே கூப்புடு அந்த நீதிமான் குன்ஹாவை................ஏதோ தீர்ப்பு சீக்கிரம் சொல்லனுமாம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி

Post by krishnaamma on Sun Oct 05, 2014 4:40 pm

@rksivam wrote:நீதி மன்றங்களின் மீதான நம்பிக்கை 20 ஆம் தேதிக்கு மேல் இன்னும் உறுதிப்படும்போது என்ன அலறு அலறப்போகிராரோ.

'ஆரிய கூட்டு சதி, திராவிடத்தின் மீது விழுந்த இந்துத்த்வா அடக்குமுறை',

'பார்ப்பன்னர்களின் ஆதிக்க வெறி, '

'தென்னக திராவிடத்தை அடக்க வடநாட்டினரின் சதி',

'ராசா ஒரு தலித் என்பதனால்தானே இந்த வழக்கு'


போன்ற விமரிசனங்கள் மதிய அரசு மீதும் நீதித்துறை மீதும் அள்ளி தெளிக்கத்தான் போகிறார்.

எனக்கு தெரிந்து கடந்த நாற்ப்பது வருடங்களாக ஒரே விஷயத்தை தனக்கு ஒரு மாதிரியாகவும் மற்றவர்களுக்கு வேறுமாதிரியாகவும் பார்த்தவர் கருணாநிதி. ஜெயலலிதா கைதின்போது 20 ஆம் தேதி நினைவில்தான் வாயைமூடிக்கொண்டிருந்தார். இல்லையென்றால்

'அம்மையாரின் ஆர்பாட்டம் முடிந்தது;  

கட்டுக்கடங்காத காட்டுமிராண்டித்தனமான அ தி மு க ஆட்சி அகன்றது,

அண்ணா பெரியாரின் கனவு நினைவாகியது '


போன்ற அறைகூவல் விட்டிருப்பாரே.

கத்தி அவர் தலைக்கு மேலேயும் தொங்குகிறது. அவர் அனுபவிக்க ஆண்டவன் அவருக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்.          

சிவம்
மேற்கோள் செய்த பதிவு: 1092958

இப்படி சூப்பராக போடுங்கள் சிவம் புன்னகை சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி

Post by தமிழ்நேசன்1981 on Mon Oct 06, 2014 12:10 pm

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக தாங்கள் எதுவுமே கூறவில்லையே?

இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு. நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஒரு பத்திரிகை தலையங்கம் எழுதியுள்ளது.

தலைவர் குறிப்பிட்ட தலையங்கம் இதுதான்..

இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு!

நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது; நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில், 'நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம், சொத்துக்கள் பறிமுதல்’ என்ற பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்திய அரசியல் வரலாற்றில் மிகமிக முக்கியமானது. நீதிமன்றத் தீர்ப்பால் பதவி பறிக்கப்பட்டுள்ள 'முதல் முதலமைச்சர்’ ஜெயலலிதாதான்!

ஆனால், இந்தத் தீர்ப்பு வருவதற்கு... 17 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இடையில் ஒரு தலைமுறையே பிறந்து வளர்ந்துவிட்டது. '66 கோடி ரூபாய் எல்லாம் ஓர் ஊழலா?’ எனக் கேட்கும் அளவுக்கு, ஊழல்களின் பரிமாணம் அதிபயங்கரமாகக் கிளைத்திருக்கிறது. இருந்தாலும், நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு வந்திருக்கும் இந்தத் தீர்ப்பு, அரசியல்வாதிகளுக்குப் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 'அநீதி இழைத்தால் எத்தகைய அதிகாரம் படைத்தவர்களும் தண்டிக்கப்படுவார்கள்’ என்ற நம்பிக்கையை மக்களுக்கும், 'முறைகேடான வழிகளில் சம்பாதித்தால், நிம்மதியற்ற வாழ்வும் அவமானமும் தலைகுனிவும்தான் இறுதியில் மிஞ்சும்’ என்ற நிதர்சனத்தை அரசியல்வாதிகளுக்கும் அழுத்தமாக உணர்த்தியுள்ளது.

'மாதம் ஒரு ரூபாய் வீதம் ஐந்து வருடங்களுக்கு 60 ரூபாய் சம்பளம் பெற்ற ஒருவர், 66 கோடி ரூபாய் எப்படிச் சம்பாதித்தார்?’ என்பதே ஜெயலலிதா மீதான இந்த வழக்கின் எளிய தர்க்கம். சாட்சிகள் மிகத் தெளிவாக உள்ள இதுபோன்ற வழக்கைக்கூட, ஒருவர் 17 ஆண்டுகளாக இழுத்தடிக்க முடியும் என்ற நிலை மிகவும் வருந்தத்தக்கது. விரைந்து நீதி வழங்குவதில் ஏற்படும் இடர்களைக் களைவதற்கான தருணமாக, நீதித் துறை இதைக் கருத்தில்கொள்ள வேண்டும். ஆனால், 'செயற்கை’யாக உண்டாக்கப்பட்ட இந்தக் கால தாமதம், 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற பழமொழிக்கு ஆகச் சிறந்த உதாரணம்!

கடந்த ஆண்டு வரை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி குற்றவழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட‌ ஒரு மக்கள் பிரதிநிதி 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்தால், பதவியில் தொடர முடியும். ஆனால், கடந்த வருடம்தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே பதவி பறிக்கப்படும் விதமாக‌ச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அந்தத் திருத்தம்தான் இப்போது ஜெயலலிதாவின் பதவியை உடனடியாகப் பறித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடித்ததன் மூலம், ஜெயலலிதா தனக்கான அதிகபட்சத் தண்டனையை தானே வலியப் பெற்றிருக்கிறார்!

தீர்ப்பு வந்த நாளில், மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் தொற்றியது; பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டன; கடைகள் இழுத்து மூடப்பட்டன. ஒரு நெருக்கடி நிலைக்கான பதற்றத்துடன் இருந்தது மாநிலம். இத்தகைய நிலை ஏற்படும் என்பதைக் கணித்து, 'கட்சித் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு எந்த தொந்தரவும் அளிக்கக் கூடாது’ என்ற ஆற்றுப்படுத்தும் அறிக்கைகூட ஜெயலலிதா தரப்பில் இருந்து வெளிவரவில்லை. காவல் துறையினரோ, ஆளும் கட்சியினரின் வன்முறைகளை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

மறுபுறம், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை குறித்து நாடே பேசுகிறது. ஆனால், இந்தத் தேசத்தில் ஜெயலலிதா மட்டும்தான் ஊழல் அரசியல்வாதியா? நீதித் துறையின் சாட்டை சுழல வேண்டிய ஊழல்வாதிகள் கட்சி, ஆட்சி பேதமின்றி நாடெங்கும் நிறைந்துள்ளனர். 2ஜி அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி சுரங்க‌ ஊழல்... என நம் தேசத்தை இறுக்கிச் சுற்றி வளைத்திருக்கிறது ஊழல் எனும் கொள்ளைநோய். நீதிமன்றத்தை அலைக்கழித்து, மக்கள் மன்றத்தை அவமதித்து, 'மாண்புமிகு’ அந்தஸ்துடன் உலாவரும் அவர்கள் ஒவ்வொருவரும், கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!

அதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக, முதல் படியாக அமையட்டும்!


இந்த வரிகளை தலைவர் குறிப்படி மறந்துவிட்டாரே...ஏனோ... புன்னகைநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3513
மதிப்பீடுகள் : 966

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி

Post by யினியவன் on Mon Oct 06, 2014 12:24 pm

செலெக்டிவ் அம்மாநீஷியா (அம்னீஷியா)avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி

Post by M.Saranya on Mon Oct 06, 2014 12:52 pm

சரிதான் நண்பரே !!!
இப்போது தலைவருக்கு அந்த நோய் தான் பிடித்திருக்கிறது...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum