ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 T.N.Balasubramanian

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 T.N.Balasubramanian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 T.N.Balasubramanian

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 T.N.Balasubramanian

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by சிவா on Sat Oct 04, 2014 12:52 pm

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கினர்

சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் தனி கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் அவர் 7 வது நாளாக சிறையில் உள்ளார்

வருகிற 7-ந்தேதி ஜெயலலிதா ஜாமீன் மனுமீதான் விசாரணை நடைபெறுகிறது. அப்போதுதான் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா கிடைக்காத என்ற விவரம் தெரியவரும். ஜெயலலிதா சிறையில் அடைக்கபட்டு உள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் உண்ணாவிரதம், மனித சங்கிலி போன்ற போராட்டங்களை நடத்தி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கடும் அதிர்ச்சியின் காரணமாக மாணவிகள் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உயிரையும் மாய்த்துள்ளனர்.

கல்லூரி மாணவர்கள், சினிமா கலைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அற வழியிலான போராட்டத்தை மேற்கொண்டு இருக்கின்றனர்.

கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி முன்பு அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகள் சார்பில் உண்ணாவிரதம் நடந்து வருகிறது. இன்று எம்.ஜி.ஆர். சமாதி முன்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதம் இருந்த னர். இந்த உண்ணாவிரதத்தில் 119 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.


தே.மு.தி.க. போட்டி எம்.எல்.ஏ.க்கள் மைக்கேல் ராயப்பன், மா.ப.பாண்டிய ராஜன், சுந்தர்ராஜன், தமிழழகன், சுரேஷ்குமார், அருண்சுப்பிரமணியம், சாந்தி, சமத்துவ மக்கள் கட்சி எர்ணாவூர் நாராயணன், இந்திய குடியரசு கட்சி செ.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, போட்டி புதிய தமிழகம் ராமசாமி ஆகிய எம்.எல்.ஏக்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.

அனைவரும் கருப்பு சட்டை அணிந்து இருந்தார்கள். பெண் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சேலை கட்டி இருந்தனர்.எம்.எல்.ஏ.க்கள் அனை வரும் தனித்தனியாக கைகளில் கோரிக்கை அட்டைகளை பிடித்திருந்தனர். அதில் சிறை வைக்காதே சிறைவைக்காதே, தர்ம தாய்க்கு நீதி வழங்கு, புரட்சி தலைவியை உடனே விடுதலை செய், காவிரியை மீட்ட காவிய தாய்க்கு சிறையா, தமிழ் தாய்க்கு சிறையா, தாங்காது தமிழர் நெஞ்சம் போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by சிவா on Sat Oct 04, 2014 12:56 pm

ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி புதுவையில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி புதுவையில் நேற்று மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

மீனவர்கள் போராட்டம்

சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதை கண்டித்தும், ஜெயலலிதாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுவையில் அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி அ.தி.மு.க. மீனவர் அணி சார்பில் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க. மீனவர் அணி செயலாளர் ஞானவேலு தலைமை தாங்கினார். போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஓம் சக்தி சேகர், பெரியசாமி, பாஸ்கர், மீனவர் அணி தலைவர் புத்துப்பட்டான், நகர செயலாளர்கள் ரவீந்திரன், அன்பானந்தம், முன்னான் கவுன்சிலர் கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மீன்பிடிக்க செல்லவில்லை

இந்த போராட்டத்தினை முன்னிட்டு புதுவை உப்பளம் பழைய துறைமுகம், தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மீனவர்கள் தங்கள் படகுகளில் கருப்பு கொடிகளை ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by சிவா on Sat Oct 04, 2014 12:57 pm


பெங்களூரில் பெண் தொண்டர்கள் கதறி அழுது தர்ணா செய்ததால் பரபரப்பு


பெங்களூர் பரப்பன அக்ரஹாரா பகுதியில் பெண் தொண்டர்கள் தரையில் அமர்ந்து கதறி அழுது தர்ணா போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மந்திரிகள் வருகை

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக தமிழ்நாட்டை சேர்ந்த மந்திரிகள் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் தினமும் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் 5–வது நாளாக நேற்றும் ஏராளமானவர்கள் வந்து சென்றனர். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக மந்திரிகள் நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், காமராஜ், சண்முகநாதன், சம்பத், பழனியப்பன், பூனாச்சி, எம்.பி.க்கள் வேணுகோபால், பன்னீர்செல்வம், அசோக்குமார், வெங்கடேஷ்பாபு, டாக்டர் காமராஜ், முன்னாள் மந்திரிகள் வைகை செல்வன், சண்முகம், வேலுசாமி, ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயசுதா, கலையரசு உள்பட ஏராளமானவர்கள் வந்தனர்.
பெண்கள் கதறி அழுதனர்

அவர்களில் மந்திரிகள் உள்பட சிலரை மட்டுமே ஒசரோடு சந்திப்பில் இருந்து உள்ளே அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதற்கிடையே ஜெயலலிதாவை உடனடியாக விடுதலை செய்யக்கோரி அ.தி.மு.க. பெண் தொண்டர்கள் நேற்று பரப்பன அக்ரஹாரா ஒசரோடு சந்திப்பில் திடீரென தரையில் அமர்ந்து கதறி அழுது தர்ணா செய்தனர். அங்கேயே உருண்டு–புரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by சிவா on Sat Oct 04, 2014 12:59 pm

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பல மாவட்டங்களில் கடையடைப்பு

மதுரை, அக் 4 - அதிமுக பொதுச் செயலாளரும்,மக்களின் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நேற்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். தஞ்சை, திருப்பூர், சேலம், அரியலூர், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தை அறவழியில் நடத்தினர். தருமபுரியில் மாவட்டத்தில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான வழக்கில் கடந்த 27ம் தேதி கர்நாடக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்கில் தீர்ப்பு வெளியான நாளில் இருந்து நேற்று வரை தமிழகத்தில் பல இடங்களில் அறவழி போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடையடைப்பு, உண்ணாவிரதம்,மனிதசங்கிலி என அனைத்து விதமான போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மக்களது மனம் திருவிழாக்களில் கூட ஈடுபடவில்லை. பொதுவாக சரஸ்வதி பூஜை வந்தால் ஒலிபெருக்கிகளை கட்டி பாடல்களை முழங்க விட்டு மக்கள் அதை உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள். ஆனால் நேற்று முன்தினம் சரஸ்வதி பூஜை கூட களைகட்டவில்லை. மக்கள் அதை உற்சாகமாக கொண்டாடவில்லை. ஏதோ பெயருக்கு சரஸ்வதி பூஜையை கொண்டாடினார்கள் என்றே சொல்ல வேண்டும். ஜெயலலிதா மீது மக்கள் வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் தான் அதற்கு காரணம்.

இந்த நிலையில் நேற்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் நடந்த கடையடைப்பு போராட்டத்துக்கு மக்களே முன்வந்து ஆதரவு அளித்தனர். திருப்பூரில் பனியன் கடைகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, கும்பகோணம், உள்ளி்ட்ட பகுதிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்தவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட அவருக்கு எங்கள் ஆதரவு என்றென்றும் உண்டு என்று வர்த்தகர்கள் கூறி கடைகளை அடைத்து ஜெயலலிதாவுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். சேலம் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆத்தூரிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஜவுளி கடைகள் முதல் டீக்கடை வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

அதே போல் தேனி மாவட்டத்தில் பல்வேறு கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. வடக்கு மாவட்டங்களை பொறுத்தவரையில் ஜோலார்பேட்டையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. திருவள்ளூர் மாவட்டத்தில் மீன் வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்தனர். அதே போல ஈரோடு மாவட்டம் பெருந்துரையில் 500 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நீலகிரி மாவட்டத்திலும் வணிகர்கள் கடைகளை அடைத்திருந்தனர். தருமபுரி மாவட்டத்தில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. சுருக்கமாக சொன்னால் மீனவர்கள் முதல் மாணவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஜெயலலிதாவுக்குஆதரவாக களத்தில் குதித்தனர். இவர்கள் தவிர ஈழத்தமிழர்கள், நரிக்குறவர்கள் என அத்துனை தரப்பினரும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் அனைவரும் ஜெயலலிதா விடுதலை கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் தோழமை கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர்.

முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூத் மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோர் பேசிய பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர்கள் நீதிக்கே அநீதி இழைக்கப்பட்டு விட்டதாக கூறினார்கள். மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள். மொத்தத்தில் அனைத்து தரப்பினருமே ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஜெயலலிதா ஜாமீன் மனு வருகிற 7ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by சிவா on Sat Oct 04, 2014 12:59 pm

ஜெயலலிதாவை விடுவிக்ககோரி கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம்

சென்னை, அக். 4 – அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய்அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது பெங்களூரு சிறையில் உள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை உடனடியாக விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக திரையுலகத்தினர் ஒரு நாள் உண்ணாவிரம் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஜெயலலிதாவை உடனடியாக ஜாமினல் விடுதலை செய்யக்கோரி தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கம் இன்று சனிக்கிழமை ஒளிப்பரப்பை நிறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி நாளை ஒரு நாள் கேபிள் டிவி ஒளிபரப்பு தமிழகம் முழுவதும் நிறுத்தப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by சிவா on Sat Oct 04, 2014 1:00 pm

அதிமுகவினர் சென்னை கோவில்களில் யாகம் - சிறப்பு பூஜைகள்

சென்னை, அக். 4 – முதலமைச்சர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி சென்னை தமிழகம் முழுவதும் மகா யாகங்கள், விசேஷ அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஜெயலலிதா விடுதலையாக தமிழகமே பிரார்த்தனை செய்கிறது.

மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். வணிகர்கள் கடைகளை அடைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

மனித சங்கிலி, ஊர்வலம் போன்றவைகளும் நடைபெற்று வருகின்றன.

தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

தங்களது தினசரி ஊதியத்தை இழந்து ஜெயலலிதாவுக்காக மக்கள் உண்ணாவிரதம் போன்ற அறவழி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஜெயலலிதா விடுதலையாக வேண்டி சென்னை அண்ணா நகர் பகுதி செனாய் நகர் பகுதியில் இருக்கும் மகாமேரு ஸ்ரீ சக்ர பகவதி அம்மன் ஆலயத்தில் கணபதி யாகம், சிவம் யாகம், மகாலட்சுமி யாகம், துர்கா யாகம், நவக்கிரக யாகம், அதர்வன பத்ரகாளி பிரத்தியங்கரா யாகம் அமைப்புச் செயலாளரும், அமைச்சருமான எஸ்.கோகுல இந்திரா தலைமையில் நடைபெற்றது.

இந்த யாகத்தில் அண்ணா தி.மு.க. மாணவரணி செயலாளர் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., பகுதி அண்ணா தி.மு.க. செயலாளர் ஏ.இ.வெங்கடேசன் எம்.சி., சரஸ்வதி ரங்கசாமி, டி.தசரதன், என்.எஸ்.விஜயன். எஸ்.அமீர்பாஷா எம்.சி., ஜீவாதீனன் எம்.சி., வ.சுகுமார்பாபு, எம்.சி., செல்வி எம்.சி., மல்லிகா எம்.சி., பி.எல்.ராதாகிருஷ்ணன், நா.ரா.பாபு, கூடல் வே.கோவிந்தன், கோ.தமிழ்ச்செல்வம், இ.நந்தகோபால், என்.கந்தன், கே.குப்பம், கே.முருகன், ஏ.எஸ்.பச்சையப்பன், மு.ஸ்ரீராம், வி.ஜனார்த்தனன், ஜி.குப்புசாமி, பி.கண்ணன், கே.ஓ.கேசவன், லலித்குமார் சர்மா, கே.பெருமாள், சேட்பாய், சுலைமான், நாசர், இளவரசி முத்து, வள்ளி, சகிலா மாபுபாஷா, பார்வதி, கஸ்தூரி, கே.கருணாமூர்த்தி, ஜெ.சமாதானம், இ.புஷ்பா, பரிதாபேகம், இ.உமா, இ.தமிழரசி, மாலா, சகிகலா, கிரேசி, ஆர்.விஜயா, தமிழரசி, சத்யா, ராணி, காஞ்சனா, மல்லிகா, ஜி.கஸ்தூரி, எல்.லலிதா, என்.முன்னாபாய் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.சக்ரபகவதி அம்மன் கோவில் மிகுந்த சக்தி வாய்ந்த கோவில் ஆகும். யாகத்தின் போது அமைச்சர் கோகுல இந்திராவுக்கு அம்மன் அருள் வந்தது. சிறிது நேரம் கண்ணீர் மல்க மயக்க நிலையில் அவர் அப்படியே இருந்தார். பின்னர் பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

ஜெயலலிதா விடுதலையாக வேண்டி சென்னை மேற்கு மாம்பலம் அயோத்திய மண்டபத்தில் மாபெரும் சண்டி யாகம் நடைபெற்றது. இந்த யாகம் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. மந்திரங்கள் ஓத நடந்த இந்த மகா யாகத்தில் பகுதி செயலாளர்கள் தி.நகர் ஏழுமலை, நுங்கை மாறன் எம்.சி., ஏ.இ. வெங்கடேசன் எம்.சி., வி.கே.பாபு, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சரஸ்வதி ரங்கசாமி, கவுன்சிலர்கள் பி. சின்னையன், புஷ்பா நகர் ஆறுமுகம் எம்.சி., எல்.ஐ.சி. மாணிக்கம் எம்.சி., அமீர்பாட்சா, வீடியோ சரவணன், சாந்தி பாஸ்கர், பத்மினி சுந்தரம், சீதா, அலுமேலு, அமாவாசை, தி.நகர் கருணாகரன், பத்மநாபன், டி.யூ.சி.எஸ். சீனிவாசன், லிபர்டி ராஜு, அண்ணா நகர் என்.எஸ். விஜயன் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவி கருமாரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன் எம்.எல்.ஏ., ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் நுங்கை மாறன் எம்.சி., புஷ்பா நகர் ஆறுமுகம் எம்.சி., சக்தி எம்.சி., பி. சின்னையன் எம்.சி., சாந்தி பாஸ்கர், வழக்கறிஞர் ஆர். சதாசிவம், நுங்கை டி. மனோகர், ஏ. இளையமாறன், விவேக், ராஜு மேஸ்திரி, மெக்கானிக் மோகன், நுங்கை மூர்த்தி, ரகீம், சாலை உமாபதி, ராமமூர்த்தி, எம். சேகர் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிலும் அபிஷேகம், சிறப்பு பூஜைகளுக்கு தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.ஏ.அர்ஜுனன் ஏற்பாடு செய்திருந்தார். டாக்டர் மைத்ரேயன் எம்.பி., அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம், மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன் எம்.எல்.ஏ., டி.சிவராஜ் எம்.சி., இ. பன்னீர்செல்வம் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by சிவா on Sat Oct 04, 2014 1:08 pm


சென்னையில் அ.தி.மு.க.வினர் மனித சங்கிலி, உண்ணாவிரதம்!

சென்னை: சென்னை நீலாங்கரை, அடையாறில் அ.தி.மு.க.வினர் மனித சங்கிலி மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பல்வேறு ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியிலும் தினம் ஒரு போராட்டத்தினை ஒவ்வொரு பகுதியிலும் நடத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சி கணக்கு தணிக்கை நிலைக்குழு தலைவரும் 192வது வார்டு கவுன்சிலருமான எம்.சி.முனுசாமி தலைமையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ஞாயிறன்று கருணாநிதி, சுப்பிரமணியன் சுவாமி உருவ பொம்மையை எரித்ததோடு சாலை மறியலில் ஈடுபட்டனர். கருணாநிதி ஒழிக, சுப்பிரமணியன் சுவாமி ஒழிக என்று ஆவேசமாகக் கத்தியபடி நடந்த சாலை மறியலில் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திங்கள் கிழமை, எரித்த உருவப் பொம்மைகளின் அஸ்தியைக் கடலில் கரைத்தனர். செவ்வாய் கிழமை சின்ன நீலாங்கரை கடலில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். புதன்கிழமை மவுன உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. நேற்று வியாழக்கிழமை நீலாங்கரையில் உள்ள சிவன்கோவிலில் ஜெயலலிதா விடுதலை கோரி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தினம்தோறும் திருவிழா என்பது போல் தினம் ஒரு போராட்டத்தால் ஈ.சி.ஆர். பகுதி பரபரப்பாகவே இருக்கிறது.

அடையார் தொலைபேசி நிலையம் அருகே இன்று தென்சென்னை தெற்குமாவட்டச் செயலாளர் விருகை வி.என்.ரவி தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். ஏழரை கோடி மக்களுக்கு தண்ணீர் வாங்கித் தந்த எங்கள் தாய்க்கு 100 கோடி அபராதமா? கர்நாடக அரசைக் கண்டிக்கிறோம். புரட்சித் தலைவி அம்மாவை விடுதலை செய்யும் வரை ஏழரை கோடி தமிழனும் போராடுவோம் என்ற பதாகையைச் சுமந்தபடி உண்ணாவிரதப் போராட்டம் அமைந்திருந்தது.

கருணாநிதியையும், சுப்பிரமணியன் சுவாமியையும் வசை மாரி பொழிந்தபடி பேசினார்கள். வேளச்சேரி எம்.எல்.ஏ. அசோக், சென்னை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் கோகிலா கண்ணன், நூர்ஜஹான், உஷா குமார், இந்திராணி, வட்டச் செயலாளர்கள் சின்னசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் மாவட்ட தலைவர் ராஜேந்திரபாபு, கடும்பாடி, கண்ணன் உள்பட அ.தி.மு.க.வினர் ஏராளமாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by சிவா on Sat Oct 04, 2014 1:18 pm

அதிமுகவின் போராட்டத்தால் ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு! விஜயகாந்த், ராமதாஸ் கண்டனம்!

அதிமுகவினர் நடத்தி வரும் போராட்டங்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி வருகின்றனர்.

சரஸ்வதி பூஜை, விஜயதசமி, பக்ரீத், தீபாவளி என வரிசையாக பண்டிகைகள் வரும் இந்த நேரத்தில், நடைபெறும் போராட்டங்களால் பொதுமக்களும் வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

நாளொன்றுக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாக வணிகர் சங்கங்கள் தெரிவிக்கின்றன என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது, “சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகளால் இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் மற்ற நாடுகளிலும் தமிழகத்துக்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்பட்டுள்ளது”.

“தமிழ்நாட்டில் நீதிக்காக எத்தனையோ போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் நீதிக்கு எதிராகவும், ஊழலுக்கு ஆதரவாகவும் ஆளுங்கட்சியினரே போராட்டம் நடத்தும் கொடுமை இப்போதுதான் அரங்கேறுகிறது” என கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by krishnaamma on Sat Oct 04, 2014 1:18 pm

இது போல பூஜை யாகம் செய்யட்டும் , உண்ணா விரதம் இருக்கட்டும்..நோ ப்ரோப்ளேம்..........பொது மக்கள் மற்றும் பொது சொத்துக்கு குந்தகம் விளைவிக்காமல் இருந்தால் போறும் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by krishnaamma on Sat Oct 04, 2014 1:20 pm

மேற்கோள் செய்த பதிவு: 1092751

ஹா....ஹாஆ....ஹா.... இது தான் இதுவரைநான் கேட்டதிலேயே சூப்பர் நகைச்சுவை ..................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by அகிலன் on Sat Oct 04, 2014 1:30 pm

மேற்கோள் செய்த பதிவு: 1092751

உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளம் ஆக்கப்போறான்க்ப்பா.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by krishnaamma on Sat Oct 04, 2014 2:08 pm

//இதற்கிடையே ஜெயலலிதாவை உடனடியாக விடுதலை செய்யக்கோரி அ.தி.மு.க. பெண் தொண்டர்கள் நேற்று பரப்பன அக்ரஹாரா ஒசரோடு சந்திப்பில் திடீரென தரையில் அமர்ந்து கதறி அழுது தர்ணா செய்தனர். அங்கேயே உருண்டு–புரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.//

வாங்கின துட்டுக்கு பழுது இல்லாமல் தினமும் இந்த நாடகம் அரங்கேறுகிறது போலிருக்கே ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by mmani15646 on Sat Oct 04, 2014 7:59 pm

மேற்கோள் செய்த பதிவு: 1092743
தேர்தலில் 44 விழுக்காடு வாக்குகள் பெற்றுவிட்டு 7 1/2 கோடி மக்களும் போராடுகிறார்கள் என்று எப்படி சொல்லிக் கொள்கிறார்கள். 56 விழுக்காடு எதிர்த்து விழுந்த வாக்குகள் என்பதை மறந்து விடுகிறார்கள்.

mmani15646
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 204
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by யினியவன் on Sat Oct 04, 2014 8:05 pm

@mmani15646 wrote:தேர்தலில் 44 விழுக்காடு வாக்குகள் பெற்றுவிட்டு 7 1/2 கோடி மக்களும் போராடுகிறார்கள் என்று எப்படி சொல்லிக் கொள்கிறார்கள். 56 விழுக்காடு எதிர்த்து விழுந்த வாக்குகள் என்பதை மறந்து விடுகிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1092841
இதை சொன்ன மணியை எதிர்த்து "மணியை குண்டர் சட்டத்தின் கீழ் அரெஸ்ட் செய்யும் வரை உண்ணாவிரதப் போராட்டம்" ன்னு கிளம்பிடப் போறானுக மட்டி பசங்க புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by krishnaamma on Sat Oct 04, 2014 8:11 pm

@mmani15646 wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1092743
தேர்தலில் 44 விழுக்காடு வாக்குகள் பெற்றுவிட்டு 7 1/2 கோடி மக்களும் போராடுகிறார்கள் என்று எப்படி சொல்லிக் கொள்கிறார்கள். 56 விழுக்காடு எதிர்த்து விழுந்த வாக்குகள் என்பதை மறந்து விடுகிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1092841

இதுலே யே தெரிகிறது இவங்க சொல்வது .நடந்து கொள்வது யார் சொல்லிக்கொடுத்து..............அல்லது 'கொடுத்து'................செய்ய சொல்லியது என்று ஜாலி ஜாலி ஜாலி புரிகிறதா? அகிலன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by krishnaamma on Sat Oct 04, 2014 8:13 pm

@யினியவன் wrote:
@mmani15646 wrote:தேர்தலில் 44 விழுக்காடு வாக்குகள் பெற்றுவிட்டு 7 1/2 கோடி மக்களும் போராடுகிறார்கள் என்று எப்படி சொல்லிக் கொள்கிறார்கள். 56 விழுக்காடு எதிர்த்து விழுந்த வாக்குகள் என்பதை மறந்து விடுகிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1092841
இதை சொன்ன மணியை எதிர்த்து "மணியை குண்டர் சட்டத்தின் கீழ் அரெஸ்ட் செய்யும் வரை உண்ணாவிரதப் போராட்டம்" ன்னு கிளம்பிடப் போறானுக மட்டி பசங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1092844

நாம இங்கு எழுதுவதெல்லாம் அந்த ஆளுங்களுக்கு தெரியாது தானே இனியவன்? ஜாலி ஜாலி ஜாலி குதூகலம் குதூகலம் குதூகலம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதா சிறையில் அடைப்பு: அதிமுகவின் போராட்டங்கள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum