ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 SK

2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 பழ.முத்துராமலிங்கம்

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 ayyasamy ram

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 ayyasamy ram

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 ayyasamy ram

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 ayyasamy ram

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 anikuttan

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 anikuttan

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 ayyasamy ram

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 ayyasamy ram

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ayyasamy ram

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 ayyasamy ram

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 ayyasamy ram

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 T.N.Balasubramanian

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 krishnaamma

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 krishnaamma

குருப் 2 தேர்வுக்கு IMPACT IAS ACADAMY 2018(general english & general Tamil)
 thiru907

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 ayyasamy ram

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 ayyasamy ram

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 ayyasamy ram

மதித்திடுவோம் மாதர் தம்மை
 SK

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - அடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா? மோடி மீது சந்திரபாபு புகார்
 M.Jagadeesan

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை!
 T.N.Balasubramanian

மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ., வுக்கு எதிராக 19ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
 M.Jagadeesan

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
 SK

காலம் உருக்குலைத்தாலும் எங்கள் காதல் மாறாது என்கிறதா இந்த மனித எலும்புக் கூடுகள்?
 SK

படமெடுத்த பாம்பை ஆத்திரத்தில் கடித்துத் துப்பிய விவசாயி!
 பழ.முத்துராமலிங்கம்

விமானத்தில் இருந்து மழையாக பொழிந்த தங்கம் - வைர குவியல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான முறையில் சிக்ஸர்... இது நியூசிலாந்தில் நடந்துள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

Video: ரசிகர்களை அதிர வைக்கும் Afridi-யின் Catch!
 SK

வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
 SK

வட தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
 SK

விஜய்யும் ரஜினியும் படைத்த சாதனைகள்; வேறெவரும் இடம்பெறவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் முதன்முறையாக தமிழ்
 பழ.முத்துராமலிங்கம்

தினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அதிமுக தரப்பு மனு
 SK

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்
 ரா.ரமேஷ்குமார்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
 ரா.ரமேஷ்குமார்

அரிசியில இருக்கற கல்லை நல்லா பொறுக்கினா என்ன?
 krishnaamma

ஒரு பக்கக் கதை - தலைவர்
 krishnaamma

நான் மலரோடு தனியாக...
 krishnaamma

தாத்தா கதாபாத்திரத்தில் பேரன்
 krishnaamma

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு
 SK

அமெரிக்காவில் நடைமேடை பாலம் இடிந்து விபத்து: பலர் சிக்கியுள்ளதாக தகவல்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும!

View previous topic View next topic Go down

ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும!

Post by krishnaamma on Tue Oct 14, 2014 12:04 am

ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும: அ.தி.மு.க.,வினருக்கு ஜோதிடர்கள் ஆலோசனை !

சென்னை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஜாமினில் வெளியே வரவும், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெறவும், பிரபல ஜோதிடர்கள், பல்வேறு ஆலோசனைகளை கூறியுள்ளனர். குறிப்பாக, 'ஜெ., விடுதலையாக, அ.தி.மு.க.,வினர் அசைவம் சாப்பிடுவதை, தவிர்க்க வேண்டும்; சுத்த பத்தமாக இருக்க வேண்டும். யாகம் செய்வதை விட, தியாகம் செய்வது நல்லது' என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஜெயலலிதா விடுதலையாக வேண்டும் என, இறைவனை வேண்டி, அ.தி.மு.க., தொண்டர் கள், மொட்டை போடுதல், பால் குடம் எடுத்தல், யாகம் நடத்துதல், சிறப்பு வழிபாடு நடத்துதல் என, அவரவர் விரும்பிய வழிகளில், வழிபாடு நடத்துகின்றனர்.

இதனால் பலன் கிடைக்குமா, ஜெயலலிதா விடுதலையாக, என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என, ஜோதிடர்கள் சிலரை கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
பிரபல ஜோதிடர் ஷெல்வி: ஜெயலலிதாவின் ஜாதகத்தில், குரு கெட்டுப் போயிருப்பதாலேயே, அவர் இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க வேண்டியதாகி .

விட்டது.அ.தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் நடத்துவதை விட்டு விட்டு, கேந்திராதிபதி தோஷத்தில், குரு கெட்டுப் போனதால் ஏற்பட்ட விளைவுகளில் இருந்து தப்பிக்க, ஆன்மிக ரீதியாக செய்ய வேண்டிய பரிகாரங்களை செய்தால், நல்ல பலன்கள் ஏற்படும்.இப்படி பரிகாரங்களை செய்ய முற்படும் அ.தி.மு.க.,வினர், தங்களை சுத்த பத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்;

அசைவம் சாப்பிடாமல், ஆன்மிக பக்தியுடன் காரியங்களை செய்ய வேண்டும்.ஆலங்குடி, குரு கோவிலுக்குச் சென்று, அ.தி.மு.க.,வினர் தினந்தோறும் வழிபட வேண்டும்; வியாழக்கிழமை தோறும், அங்கு அபிஷேகம், அன்னதானம் செய்ய வேண்டும்.மஞ்சள் நிறத்தில் வஸ்திர தானம் செய்யலாம்; மஞ்சள் நிற உணவை, அன்னதானமாக வழங்க வேண்டும்; மஞ்சள் நிற சுண்டல், புளி சாதம் போன்றவற்றை, அன்னதானமாக வழங்க வேண்டும்.திருச்செந்துார் முருகனை வழிபட வேண்டும்; அங்கு, முருகனை வேண்டி சத்ரு சம்கார பூஜை செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது, நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
..............................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும!

Post by krishnaamma on Tue Oct 14, 2014 12:05 am

கோவிலில்...
சென்னையில் இருக்கும் தொண்டர்கள், பாடியில் உள்ள திருவலிதாயம் கோவிலில் உள்ள குருவுக்கு பூஜைகள் செய்து வணங்கலாம்.ஜெயலலிதாவைப் பொறுத்த வரையில், அவருக்கு ஜாதகப்படி குரு திசையில், குரு புத்தி வீரியமாக இருப்பதால் தான், இத்தனை பிரச்னைகளும். அந்த வீரியத்தை குறைப்பதற்காகத் தான், இத்தனை பரிகாரங்களும் சொல்லப்படுகின்றன.நிறைய பேர் ஜெயலலிதாவுக்காக, இந்த பரிகாரங்களை செய்யும் போது, அதற்கு விரைந்து பலன் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், காஞ்சி பெரியவர், ஆதிசங்கரர், ஷீரடி சாய்பாபா, ராகவேந்தர் போன்ற மறைந்த மகான்களை வழிபட்டு வருவதும் நல்லது.யானைக்கு வெல்லத்துடன் கூடிய உணவளித்து வருவதும் நல்லது.புரட்டாசியில் இருந்து ஐப்பசி செல்லும் போது, சூரியன், துலாம் ராசிக்கு மாறுகிறான்; இதனால், வரும், 17ம் தேதியில் இருந்தே, ஜெயலலிதாவுக்கு நல்ல திசை தொடங்குகிறது.இடைப்பட்ட காலத்தில், அ.தி.மு.க.,வினர் சுத்த பத்தமாகவும், அசைவம் சாப்பிடாமலும் ஆன்மிக சிந்தனையிலும், கடவுளை மட்டும் மனதில் கொண்டு, பரிகாரங்களை செய்து வந்தால், வழக்கு, வம்புகளில் இருந்து ஜெயலலிதா முழுமையாக விடுபடுவார்.

பிரபல ஜோதிடர் கே.பி. வித்யாதரன்: 'ஜென்ம லக்னாதிபதி உபயமாகி, சப்தமாதிபதி பலனே தாராய்' என்பது தான், தற்போது ஜெயலலிதாவின் நிலை. அவர் உபய லக்னத்தில் பிறந்தவர் என்பதால், அவருக்கும் தற்போது தசா புத்தி நடக்கிறது.அவருக்கு சந்திரன் மற்றும் கோஷார கிரக நிலையில் அமைப்புகள் பலவீனமடைந்திருக்கின்றன; அதனால், அவருக்கு சிரம மான கால கட்டம் தான் இது.அவருடைய ராசி நாதன் சூரியனும் பலவீனமாக இருப்பதால், அவர் சந்திக்கக் கூடாததையெல்லாம் சந்திக்க வேண்டியதாகி விட்டது.நவ., 21க்குப் பின், அவருடைய ஜாதகப்படி சில நன்மைகள் கிடைக்கலாம். குரு, கல்விக்கு உரியவன்; அதனால், மாணவ, மாணவியருக்கு அ.தி.மு.க., தொண்டர்கள் உதவி செய்யலாம்.அதைப் போல குரு நியாயத்துக்கு உரியவன்; அதனால், நடைமுறை மற்றும் யதார்த்த பரிகாரம் என்றால், அது தேக பரிகாரமேயாகும். உடல் உறுப்பு தானம், ரத்த தானம் செய்ய வேண்டும்.இந்த காலகட்டங்களில், அ.தி.மு.க.,வினர் சுத்த பத்தமாக இருந்தால், பரிகாரம் முழு பலனை கொடுக்கும். அசைவத்தை தவிர்க்கலாம்; பசு தானம் செய்யலாம். மொத்தத்தில் யாகம் செய்வதை விட, தியாகம் செய்வது நல்லது.

ஜோதிடர் சோமசேகரன், ஆற்காடு: ஜெயலலிதாவின் ஜாதகப்படி, மகம் நட்சத்திரம், சிம்ம ராசிக்கு, தற்சமயம் குரு தசையில், குரு புத்தி நடைபெறுவதால், எட்டாம் இடத்திற்குடைய தசை, எட்டாம் இடத்திற்குரிய புத்தி நடைபெறுவதால், சத்ரு ஸ்தானதிபதியான புத்தியில், குரு தோஷம் ஏற்படுகிறது.ஜாதகத் தில், பித்ரு தோஷமும் உள்ளது. பித்ரு தோஷ நிவர்த்தி ஸ்தலமான ராமேஸ்வரத்தில், திலாதர்ப்பனம் செய்வது, மிக நன்று. ஆனால், இவர், ஒரே மகள் என்பதால், இவரது தாயார், தகப்பனாருக்கு, தர்ப்பனம் கொடுக்க இயலாமல் போனது.

குரு தோஷம்:எனவே, பிதுர்தோஷம் நிவர்த்தியாக, ஆச்சார்ய அனுக்கிரகம் தேவை. ஆனால், ஜாதகத்தில், ஆச்சார்ய கிரகமான, குரு எட்டாம் இடத்தில், சுய சேத்ரத்தில் மறைவதால், குரு தோஷம் ஏற்பட்டுள்ளதால், மடாதிபதிகளின் ஆசி, குல ஆச்சார்யர்களின் ஆசி, மிக அதிகமாக தேவை.எனவே, தமிழகத்தில் உள்ள, அனைத்து மடங்களிலும் உள்ள மடாதிபதிகளுக்கு, கட்சி தொண்டர்கள், 'பிஷாவந்தனம்' எனப்படும், குரு பூஜை செய்தால், இவர் ஜாமினில் வெளி வருவது மட்டு மின்றி, வழக்குகளில் இருந்து விடுபட வழி கிடைக்கும்.
...............................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும!

Post by krishnaamma on Tue Oct 14, 2014 12:05 am

நல்ல பலன்:
தெய்வ அருளுக்காக, பல்வேறு பிரார்த்தனைகள் செய்தாலும், மாதா, பிதா, குரு ஆசிர்வாதம் மிக, மிக முக்கியமானது. அவற்றில், குரு ஸ்தான ஆசிர்வாதம் குறைபடுவதால், மேலே குறிப்பிட்ட பரிகாரத்தை, கட்சியினர் இன்றே செய்ய, நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

ஜோதிடர் சிவகுரு ரவி, விழுப்புரம்: 'ராம ஜன்ம வனத்திலே, சீதை சிறை வைத்ததும், தீதில்லாதோர் மூன்றிலே, துரியோதனன் படை மாண்டதும், தருமபுத்திரன் நாலிலே, வனம் வாசம்பாடி போனதும், இமையெட்டினில் வாலி பட்டம் இழந்து, மேம்பாடி ஆனதும், ஈசனார் ஒரு பத்திலே, தலையேட்டிலே இருந்துண்டு, ராவணன் முடி, 12ல் விழுந்தது' என, ஜோதிட நுால் கூறுகிறது.அதன்படி, தற்போது ஜெயலலிதாவிற்கு, சந்திர கிரகணத்தால், 90 நாட்கள் ஆகாது; ஆபத்தை
சந்திக்கணும். உடனிருப்போர் துரோகியாக மாறுவர்; அரசில் குளறுபடி நடக்கும்.இந்நிலை மாற, விலங்கினங்களுக்கு உணவு வழங்க வேண்டும். ஆதரவற்ற குழந்தை மற்றும் பெரியோருக்கு, உணவு, வஸ்திரங்கள் வழங்க வேண்டும்.ஜோதிடர் பாலசேகர், சென்னை: விதிப்படி எது நடக்கணுமோ, அது நடக்கும். பரிகாரம் எதுவும் கிடையாது. சிலரின் மன திருப்திக்காகவே, பரிகாரம் சொல்லப்படுகிறது.

ஜோதிடர் பரணிதரன், திருக்கோவிலுார்: சிம்ம ராசியில், நான்காம் இடத்தில், செவ்வாய் இருந்ததாலும், இரண்டாம் இடத்தில், சூரியன் இருந்ததாலும், ஜெயலலிதாவிற்கு, பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சாதகமான தீர்ப்பு:
வரும், 13ம் தேதி, செவ்வாய் மாறுகிறது. இதனால், 50 சதவீத பாதிப்பு குறையும். வரும், 17ம் தேதி, சூரியன் மூன்றாமிடம் செல்கிறது. அதன் பிறகு, வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

ஜோதிடர் ஆர்.கே.வரத ராஜ், காஞ்சிபுரம்: ஜெயலலிதாவின் ஜாதகத்தில், சுக்கிரன் இருக்கும் இடத்தில், கேது இருப்பதால், சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சுக்கிரன் உச்ச மாக இருக்கும் காரணத்தாலும், கேது சட்ட நெருக்கடியை கொடுக்கும் கிரகம் என்பதாலும், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற நேரம், கட்சி தலைவர்களாக இருக்கும் பெண்களுக்கு, பாதிப்பை ஏற்படுத்தி தரும்.இந்நிலையில் இருந்து ஜெயலலிதா விடுபட, திருநெல்வேலி மாவட்டம், மணிமூர்த்திஸ்வரம் கிராமத்தில் உள்ள, உத்திஸ்ட கணபதி கோவிலில், சிறப்பு அபிஷேகத்துடன், சர்க்கரை பொங்கல் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதேபோல், மற்ற விநாயகர் கோவிலிலும் செய்யலாம். இது, ஜெயலலிதா விடுதலையாக வழிவகுக்கும்.இவ்வாறு, ஜோதிடர்கள் கூறினர்.

தினமலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும!

Post by krishnaamma on Tue Oct 14, 2014 12:07 am

இந்த செய்தியை படித்ததும் எனக்கு ரொம்ப சிரிப்பகிவிட்டது..அது தான் மீண்டும் வந்து போட்டேன் புன்னகை
.
.
.
ஹா.................ஹா..........ஹா.............போகட்டும்..........கோவிலுக்கும் பெருமாளுக்கும் செய்ய சொல்லி இருக்காங்க எல்லோரும்................நல்லது தான் புன்னகை மக்களை தொந்தரவு செய்யாமல் இப்படி செய்வது எல்ல்வளவோ நல்லது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும!

Post by விமந்தனி on Tue Oct 14, 2014 12:12 am

புன்னகை புன்னகை புன்னகை


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும!

Post by ayyasamy ram on Tue Oct 14, 2014 5:59 am

வேற எளிமையான பரிகாரம் இருக்குங்களா...
-
கிராம தேவதைகளுக்கு கிடா வெட்டி, கள் சாராயம் படைச்சு
சாப்பிட்டா நல்லது நடக்கும்னு உள்ளூர் ஜோதிடர் சொல்றாரே...
நம்பலாமா..?!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34953
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும!

Post by தமிழ்நேசன்1981 on Tue Oct 14, 2014 9:18 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி நல்ல காமெடி...இந்த பதிவை நகைச்சுவை பகுதியில் போடலாம்..நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3513
மதிப்பீடுகள் : 966

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும!

Post by M.Saranya on Tue Oct 14, 2014 9:42 am

மக்களை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே நல்லது...

கிடா வெட்டி பொங்கல் வையுங்கள்....
ஆனால் ஏதும் நடக்க போவதில்லை..


தவறு செய்தவர் திருந்த பார்க்கணும்....
தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்..
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum