ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 SK

புதிய சமயங்கள்
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

கடவுள் தந்த இருமலர்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 பழ.முத்துராமலிங்கம்

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 ayyasamy ram

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 ayyasamy ram

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 ayyasamy ram

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 krishnanramadurai

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Sat Oct 18, 2014 12:52 amஇங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்!

(மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Sat Oct 18, 2014 12:52 am


இலவச கண் பரிசோதனை முகாம்

காரைக்குடி அருகே கொரட்டி கிராமத்தில் காரைக்குடி வாசன் கண் மருத்துவமனை, இந்திரா பல் மருத்துவமனை மற்றும் அரிமா சங்கம் ஆகியோரது சார்பில் இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமை கொரட்டி ஊராட்சித் தலைவர் சாந்தகுமாரி துவக்கிவைத்தார். அரிமா சங்கத் தலைவர் சிடி. ராயப்பன் தலைமை வகித்தார். வாசன் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் மற்றும் பல் மருத்துவர் டாக்டர் கே. கிருஷ்ணகுமார் ஆகியோர் முகாமில் பரிசோதனை செய்தனர். கொரட்டி கிராம மக்கள் பலரும் முகாமில் கலந்து கொண்டனர்.

முகாமில் வாசன் கண் மருத்துவமனை மேலாளர் பாஸ்கர், அரிமா சங்கத்தைச் சேர்ந்த முத்தையா, சேவுகன், பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆண்டியப்பன் மற்றும் அரிமா சங்க மாவட்டத் தலைவர் கண்ணப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முடிவில் வாசன் கண் மருத்துவமனை அதிகாரி ஸ்ரீநிவாசன் நன்றி கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Sat Oct 18, 2014 12:52 am


இளையான்குடி அருகே மின்னல் தாக்கி மூதாட்டி சாவு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மின்னல் தாக்கி மூதாட்டி உயிரிழந்தார். இளையான்குடி அருகே உள்ள உதயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதமுத்து மனைவி வீரி (70). இவர் தனது கிராமத்திலுள்ள வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென மின்னல் தாக்கியதில் வீரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாலைக்கிராமம் போலீஸார் இச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Sat Oct 18, 2014 12:53 am


சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் நினைவு நாள்

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் கண்ணதாசனின் நினைவுநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24 ல் பிறந்தவர் கவியரசர் எனப் பெயர் பெற்ற கண்ணதாசன். சிறுகூடல்பட்டி மலையரசி கோயிலில் கவிதைகளை வடித்து கண்ணதாசன் ஆனவர். இவரது 33 வது நினைவுநாள் விழா வெள்ளிக்கிழமை சிறுகூடல்பட்டியில் அனுசரிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு கண்ணதாசன் இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் எஸ்.எம்.பழனியப்பன், தலைமை வகித்து கண்ணதாசன் திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் வட்டாரத் தலைவர் செல்வமணி, தி.மு.க. ஒன்றியச் செயலாளர் எம்.மாணிக்கம், லெனின் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் கே.ஸ்டாலின், கீழச்சிவல்பட்டி ஊராட்சித் தலைவர் அழகுமணிகண்டன், இலக்கியப் பேரவை நிர்வாகி சுப.விஸ்வநாதன், சுப.சீனிவாசன், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து கவியரசு கண்ணதாசன் கவிதைக்கு ராஜா என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட கண்ணதாசன் இலக்கிய பேரவை உறுப்பினர்கள் பங்கு கொண்டனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Sat Oct 18, 2014 12:53 am

பராமரிக்கப்படாத அரசு பஸ்கள்: நடுரோட்டில் நிற்பதால் அவதி

திருப்புவனம்:அரசு பஸ்கள் சரிவர பராமரிக்கப்படாமல் நடுவழியில் பழுதாகி நிற்பது அன்றாட காட்சியாகி வருகிறது.இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

மதுரையில் இருந்து ராமேஸ்வரம், பரமக்குடி, சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி, ஆர்.எஸ்.,மங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பாயின்ட் டூ பாயின்ட், பிபி, ஒன்டூத்ரீ, ஒன் டூ ஒன் என பல்வேறு பெயர்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர கிராமப்புறங்களை இணைக்கும் வகையில் திருப்புவனம் கிளை பணிமனையில் இருந்து 42 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருப்புவனம், பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம்,கமுதி,சிவகங்கை , முதுகுளத்தூர் உள்ளிட்ட ஊர்களில் பஸ்களை பழுது பார்ப்பதற்காக பணிமனைகள் உள்ளன. ஆனால் பஸ்களின் பராமரிப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சென்னை செல்லும் பஸ்களை பகல் நேரங்களில் மதுரை - பரமக்குடி இடையே லோக்கல் பஸ்களாக இயக்குகின்றனர். இதனால் பஸ்களை பராமரிக்க முடிவதில்லை என்கின்றனர் பணிமனை ஊழியர்கள் .

மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தினம்தோறும் குறைந்தபட்சம் இரண்டு பஸ்களாவது பழுதாகி பயணிகளை பரிதவிக்க விடுவது வாடிக்கையாகி வருகிறது.

பஸ்கள் அடிக்கடி பழுதாவது குறித்து போக்குவரத்து கழக ஊழியரிடம் கேட்டபோது: பணிமனைகளில் போதுமான உதிரி பாகங்கள் இல்லை. பஸ்கள் குறிப்பிட்ட தூரம் ஓடியதும் அவற்றை பணிமனையில் சரி பார்க்க வேண்டும். அவற்றை சுத்தம் செய்ய வேண்டும் .ஆனால் பணிமனைகளில் சுத்தம் செய்ய ஊழியர்கள் இல்லை.

பழுதுபார்க்க ஊழியர்கள் இருந்தாலும் உதிரி பாகங்கள் இல்லாததால் இருப்பதை வைத்து ஓட்டுமாறு ஓட்டுநர்களை கட்டாயப்படுத்துகின்றனர்.


டீசல் சிக்கனம் வேண்டும் என்று கூறி தொலைதூர பஸ்களை கூட ஒரே சீராக ஓட்டுமாறு கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் பாயின்ட் டூ பாயின்ட் பஸ்களாக இருந்தாலும் பயண நேரம் கூடுதலாக இருப்பதால் பயணிகள் தனியார் பஸ்களையே நாடுகின்றனர் என்றார்.

மதுரை-ராமேஸ்வரம் ரோட்டில் ஒரு பணிமனையை சேர்ந்த நான்கு பஸ்கள் வரிசையாக சென்றால் அவற்றில் ஏதாவது ஒரு பஸ்சில் மட்டுமே டயரை மாற்ற ஸ்டெப்னி டயர் மற்றும் ஜாக்கி வைத்துள்ளனர். அந்த குறிப்பிட்ட பஸ் வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அரசுப்போக்குவரத்து கழகங்கள் அனைத்த பஸ்களையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Sat Oct 18, 2014 12:54 am

பெண் போலீசை தாக்கி தாலி செயின் பறிப்பு

காளையார்கோவில்:காளையார்கோவில்-மறவமங்கலம் ரோட்டில் பாஸ்டீன் நகர் அருகே நேற்று மாலை 5.30 மணிக்கு டூவீலரில் சென்ற ஒரு பெண்ணை வழிமறித்து தாக்கிய இருவர், அவர் அணிந்திருந்த 8 பவுன் தாலி செயினை பறித்து தப்பினர். போலீஸ் விசாரணையில், செயினை பறி கொடுத்த பெண் ஆண்டூரணியை சேர்ந்தவர் என்றும், தேவகோட்டையில் போலீசாக பணிபுரிவதாக தெரியவந்தது. பிரசவத்திற்காக 6 மாத விடுமுறையில் உள்ளார். நேற்று மாலை வீட்டுக்கு பொருட்கள் வாங்கிக்கொண்டு டூவீலரில் திரும்பியபோது, அவரிடம் வழிப்பறி செய்தது தெரியவந்தது. அவரது டூவீலரில் போலீஸ் என, "ஸ்டிக்கர்' ஒட்டியிருந்தும், திருடர்கள் துணிச்சலாக கைவரிசை காட்டியது போலீசாருக்கே சவால் விடும் அளவில் உள்ளது. நேற்றிரவு 7 மணி வரை அந்த பெண் போலீசில் புகார் தரவில்லை.* காரைக்குடி கழனிவாசல் பாண்டியன் நகர் 4வதுவீதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுமதி,35. இவர் நேற்று முன்தினம் மாலை தனது குழந்தைகளை அழைத்து வருவதற்காக அருகில் உள்ள பள்ளிக்கு சென்றுள்ளார். அதே தெருவில் செல்லும் போது, டூவீலரில் வந்த இருவர், அவரை கீழே தள்ளிவிட்டு, கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் செயினை பறித்து, கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் விசாரித்து வருகிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Sat Oct 18, 2014 12:59 am

தென்னீர்வயலில் கோயிலில் உண்டியலை உடைத்து பல லட்சம் கொள்ளை.

தென்னீர்வயலில் கண்மாய் கரையோரம் காஞ்சரங்காளி அம்மன் கோயில் உள்ளது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் சுமார் நான்கு அடி உயரம், மூன்றடுக்கு பூட்டு உள்ள பெரிய பெட்டக உண்டியல் உள்ளது. இக்கோயிலில் செவ்வாய்,வெள்ளி திறக்கப்பட்டு பூஜை நடக்கும்.

வழக்கம்போல் நேற்று வெள்ளி அதிகாலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் பெட்டக கதவு அறுக்கப்பட்டு .சில நூறு ரூபாய் நோட்டுக்கள், சிதறி கிடந்ததை பார்த்துள்ளனர்.

இதிலிருந்து பல லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கிராமத்தினர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிராமத்தினர் கூறுகையில், உண்டியல் திறக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருப்பதால், பக்தர்கள் செலுத்திய பணம், 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கொள்ளை போயிருக்கலாம் என தெரிவித்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Sat Oct 18, 2014 1:00 am

ரேஷனில் உளுந்து இல்லையா? பெண் விற்பனையாளருக்கு "பளார்'

சிவகங்கை:சிவகங்கையில் ரேஷன் கடையில் உளுந்து இருப்பு இல்லை எனக்,கூறிய பெண் ஊழியரை கன்னத்தில் "பளார்' விட்ட பெண் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகிலுள்ளது வண்டவாசி. இங்குள்ள ரேஷன் கடையில் சிவகங்கையைச் சேர்ந்த அனிதா, 28 "சேல்ஸ்' மேனாக பணிபுரிகிறார். 2 மாதத்திற்கு முன்பு தான் இவர் பணியில் சேர்ந்துள்ளார். வல்லன்னியைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று மதியம் ரேஷன் பொருட்கள் வாங்க வந்துள்ளார்.

அவர் உளுந்து கேட்டுள்ளார். அப்போது, இருப்பு இல்லை என,"சேல்ஸ்மேன்' கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த அப்பெண் கடைக்குள் புகுந்து அனிதாவின் கன்னத்தில் "பளார்' என, அறைந்து விட்டு தப்பினார்.

இது குறித்து, அனிதா சிவகங்கை டவுன் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அனிதா, அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவரின் உறவினராகும். போலீசார் கூறுகையில், ""அனிதாவை கன்னத்தில் அறைந்த பெண், கடந்த வாரம் மகனை ரேஷன் கடைக்கு அனுப்பிய போதும், உளுந்து "ஸ்டாக்' இல்லை என, அனுப்பியதாகவும், தீபாவளி நேரத்திலும் கார்டுக்குரிய உளுந்து, இருப்பு இல்லை என, கூறியதாலும் ஆத்திரத்தில் அனிதாவை தாக்கியதாக தெரிகிறது. ஆனாலும், உண்மை சம்பவம் குறித்து விசாரிக்கிறோம்,'' என்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Sat Oct 18, 2014 1:02 am

முதல்–அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் உருவப்படத்தை வைக்க வேண்டும் காரைக்குடி நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.கவுன்சிலர் வலியுறுத்தல்

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் முதல்– அமைச்சர் பன்னீர் செல்வம் படத்தை வைக்க வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் வலி யுறுத்தினார்.

நகராட்சி கூட்டம்

காரைக்குடி நகராட்சி கூட் டம் அதன் தலைவர் கற்பகம் இளங்கோ தலைமையில் நடை பெற்றது. ஆணையாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடை பெற்ற விவாதம் வருமாறு:–

தலைவர்:– ஏழை–எளிய மக் களுக்காக எண்ணற்ற நலத் திட்டங்களை செயல்படுத்திய ஜெயலலிதா விரைவில் தமிழ கம் திரும்பி மீண்டும் மக்கள் நலத்திட்டங்களை தொடரு வார். மெய்யர் (காங்):– சபையில் உள்ள முன்னாள் முதல்– அமைச்சர் படத்தினை அகற்றி விட்டு கூட்டத்தினை நடத்துங் கள்.

அன்பழகன்(தி.மு.க.):– முன்னாள் முதல்–அமைச்சர் படத்தை அகற்றுங்கள் இல்லையேல் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகிய முன்னாள் முதல்– அமைச்சர்களின் படத் தினையும் கூட்ட அரங்கில் வையுங்கள். இந்நாள் முதல்– அமைச்சர் ஓ.பி.பன்னீர் செல் வம் படத்தை கண்டிப்பாக வைக்க வேண்டும்.

தலைவர்:–அரசிடமிருந்து முறையான உத்தரவும், வழி காட்டுதலும் வந்தபின் தேவை யான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.

சுகாதார சீர்கேடு

ஆறுமுகம்(சுயே):– பாதாள சாக்கடைத் திட்டம் என்ன ஆனது. அடுக்குமாடி குடியி ருப்பு பகுதிகளில் கழிவு நீர் செல்ல போதுமான வசதிகள் செய்யப்படவில்லை. இத னால் சுகாதார சீர்கேடு ஏற்ப டுகிறது. தடை செய்யப் பட்ட பாலிதீன் பொருட்கள் மீண் டும் பெருமளவில் உப யோகத் திற்கு வந்து விட்டன. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் நிறுத்தத்தில் முறைகேடாக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப் படுகின் றன. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர்:– பாதாள சாக் கடைத் திட்டம் டெண்டர் விடும் அளவிற்கு வந்து விட் டது. அரசு உத்தரவிற்காக காத்துள்ளோம். விரைவில் பணி தொடங்கும். சுகாதாரச் சீர்கேட்டிற்கு காரணமான அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சம்பந்தப்பட்ட வர் களுக்கு நோட்டீசு அனுப்பப் பட்டுள்ளது. பேருந்து நிலை யத்தில் சைக்கிள் நிறுத்து வதற் கான கட்டணம் வசூலிப் பது குறித்து கண்காணித்துதக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

ஆக்கிரமிப்பு

அங்குராஜ் (அ.தி.மு.க.):– தீபாவளி நேரத்தில் சாலை யோர சிறுவியாபாரிகளுக்கு கடை நடத்திக்கொள்ள அனு மதிக்க வேண்டும். அவைகளை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி அப்புறப்படுத்தக்கூடாது.

தலைவர்:– சட்டப்படி நட வடிக்கை மேற்கொள்ளப் படும்.

பா.காளிதாசன் (அ.தி. மு.க.):– பலகோடி ரூபாய் மதிப் பிலான நகராட்சியின் இடங்களை பலர் ஆக்கிர மித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சொத்துக் களை மீட்க வேண்டும்.

தலைவர்:– ஆதாரங்களோடு கூறினால் உடனடி நடவ டிக்கை எடுக்கப்படும். பருவ மழை தொடங்கி விட்டது. எனவே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வினை உறுப்பினர் கள் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்து. பின்னர் கொண் டுவரப்பட்ட 143 தீர்மானங் களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Sat Oct 18, 2014 1:02 am

திறந்தவெளிகளில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ராஜாராமன் பேச்சு

கிராமசபை கூட்டம்

சிவகங்கையை அடுத்த கூத்தாண்டன் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடை பெற்றது. கூட்டத்துக்கு தலைமை தாங்கி கலெக்டர் ராஜாராமன் பேசியதாவது:-

காந்தி ஜெயந்தி அன்று நடைபெற இருந்த கூட்டம் சரஸ்வதிபூஜைகாரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது. தற்போது, மழைக்காலம் தொடங்க உள் ளதால் கொசுக்கள் மூலம் காய்ச்சல் பரவுவதை தவிர்க்க பொதுமக்கள் வீடுகளில் பாத்திரங்களில் சேமிக்கும் தண்ணீரை மூடிவைத்து பயன்படுத்த வேண்டும்.

சுற்றுப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுதவிர அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பினை ஏற்படுத்திட வேண்டும். இதனால் நிலத்தடி நீர்ஆதாரம் பெருகுவதுடன் தண்ணீரின் உப்புத்தன்மையும் மாறும் வாய்ப்புள்ளது.

சுயதொழில்

மேலும் சுற்றுப்புற சூழலை மேம்படுத்த பிளாஸ்டிக் உப யோகத்தை தவிர்த்திட வேண் டும்.அத்துடன் திறந்தவெளி களில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் சுயதொழில் தொடங்கி வாழ் வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Mon Nov 03, 2014 6:26 pm

அடகு கடைக்காரர் கொலை; தனிப்படை விசாரணை

காளையார்கோவில் : கொல்லங்குடியில் நகை அடகு கடை உரிமையாளர் கொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை அருகே கொல்லங்குடியை சேர்ந்தவர் கதிரேசன்,88. நகை அடகு கடை வைத்திருந்தார். அக்.,31 அன்று இரவு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இவரை கொலை செய்து கயிறால் கை, கால்களை கட்டிப்போட்டு, நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர். ஆள் நடமாட்டம் இருப்பதை அறிந்து அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

தனிப்படை: காளையார்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தை எஸ்.பி., அஸ்வின்கோட்னீஸ் பார்வையிட்டார். மேலும், கொலை செய்தவர்களை பிடிக்க, டி.எஸ்.பி., ராமசாமி தலைமையில் தனிப்படை அமைத்து, எஸ்.பி., உத்தரவிட்டார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Mon Nov 03, 2014 6:27 pm

அரசு ஊழியர்கள் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் இல்லை: பன்றிகள் நடமாட்டம் ; புலம்பும் வார்டு மக்கள்

சிவகங்கை நகராட்சி 2வது வார்டில் அரசு ஊழியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். மருதுபாண்டியர் நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் ஏ முதல் சி பிளாக் வரை அலுவலர்கள் குடியிருப்பு, கலெக்டர் அலுவலகம், துப்புரவு ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளன. இந்த வார்டு 3 கி.மீ., சுற்றளவில் 600 பேர்கள் வரை வசிக்கின்றனர். இங்கு முக்கிய பிரச்னையாக பன்றி தொல்லைகள் உள்ளன.

சிறிய பள்ளத்தில் தண்ணீர் தேங்கினாலும் பன்றிகள் பதம் பார்த்து விடுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படும் சூழல் அடிக்கடி நிலவுகிறது. வீட்டு வசதி வாரியத்தின் போதிய பராமரிப்பு இன்றி குடியிருப்புகளை சுற்றிலும் செடி,கொடிகள் வளர்ந்திருப்பதால் மக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர். இரவில் பாம்புகள் படையெடுப்பும் நடக்கிறது.கலெக்டர் உட்பட முக்கிய அரசுத்துறை அதிகாரிகள் இருந்தும் வார்டுக்கான சில பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை.

மக்கள் கருத்து

மாரிமுத்து கூறும்போது: வார்டில் மின்மோட்டர், மீட்டர் பெட்டிகள் அடிக்கடி பழுதாகிறது. அரசு குடியிருப்பு வீடுகளின் பால்கனி சேதமடைந்துள்ளது. சாக்கடை கால்வாய்களின்றி கழிவு நீர் தேங்கியுள்ளது. குழாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டுள்ளன. வீட்டை சுற்றியுள்ள புதர் செடிகளை அகற்றவேண்டும். இரவு குழந்தைகள் வெளியில் விளையாட அஞ்சுகின்றனர். கவுன்சிலரிடம் புகார் அளித்துள்ளோம், என்றார்.

வேலாயுதம் கூறும்போது: போதிய சாக்கடை கால்வாய்கள் இன்றி, கழிவு நீர் தேங்கி கொசுக்கள் மூலம் நோய் பரவும் அச்சம் நிலவுகிறது. குடியிருப்பை சுற்றிலும் புதர் செடிகள் மண்டிக்கிடக்கிறது. மழை நேரங்களில் பாம்புகள் அச்சம் நிலவுகிறது. அரசு குடியிருப்பு வீடுகள் உரிய பராமரிப்பின்றி, வெளியில் வாடகை வீடுகளில் குடியேறுகின்றனர், என்றார்.

கவுன்சிலர் லலிதாபாபு (அ.தி.மு.க.,) கூறுகையில், ""வார்டு பகுதியை ஆய்வு செய்து மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக புகார் வந்துள்ளது. இவற்றை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன். மழைநீர் வடிகால் வசதி குறைவாக உள்ளது.

வாரியத்திற்கு சொந்தமான சில வீடுகள் பழுதடைந்துள்ளது. மின்வினியோக பாதிப்பும் உள்ளன. இவை சரி செய்யப்படும். ரோடு உட்பட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்,''என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Mon Nov 03, 2014 6:30 pm

கண்டதேவி கோயில் பிரச்சனை: ஒருவருக்கு கத்தி குத்து

தேவகோட்டை : தேவகோட்டை அருகே கண்டதேவி மாரியம்மன் கோயிலில் மரியாதை பெறுவது தொடர்பாக பிரச்சனை இருந்தது. ஆர்.டி.ஓ., சிதம்பரம் முன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் சில தினங்களுக்கு முன் கோயில்விழா நடந்தது.

இங்கு கருப்பையா சாமியாடுவதும், அவரது மகன் மாரியப்பன் கரகம் எடுப்பதும் வழக்கம். இவர்கள் திருவிழாவில் கலந்து கொள்ளாததால், அதே ஊரேச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் கரகம் எடுத்தார். இந்நிலையில்,நேற்று கண்டதேவியில் நடந்த திருமணத்திற்காக மாரியப்பன் தரப்பினரும், மகாலிங்கம் தரப்பினரும் சென்றிருந்தனர். இதில் கரகம் எடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை ஏற்பட்டது. மண்டபம் வெளியே நின்ற மகாலிங்கத்தை, முருகப்பன் என்பவர் பிடித்துக் கொள்ள மாரியப்பன் கத்தியால் குத்தினார். அவருக்கு ஆதரவாக சசிக்குமாரும் தாக்கியுள்ளார். காயமுற்ற மகாலிங்கம் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆறாவயல் சிறப்பு எஸ்.ஐ., அல்போன்ஸ் விசாரிக்கிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Mon Nov 03, 2014 6:39 pm

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி: தே.மு.தி.க. கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

சிவகங்கை அருகே உள்ள பொன்கூண்டுப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (வயது 40). நாமனூர் யூனியன் தே.மு.தி.க. கவுன்சிலராக உள்ளார். இவர் மேலூர் தாலுகா புலிப்பட்டியை சேர்ந்த போஸ் (வயது46) என்பவரிடம், வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் வாங்கினார்.

பல நாட்கள் கழித்து சங்கரிடம் பணத்தை திருப்பித் தருமாறு போஸ் கேட்டார். பணத்தை தர மறுத்ததுடன் சங்கர் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து போஸ், மதகுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Tue Nov 04, 2014 4:54 pm

தேவகோட்டை எம்.எம்.நகர் வீதியில் பெண்ணிடம் செயின் பறிப்பு

தேவகோட்டை எம்.எம்.நகர் வீதியில் வசிப்பவர் சந்திரன். முன்னாள் ராணுவ வீரர்.இவரது மனைவி தேன்மொழி. 40. நேற்று முன்தினம் இரவு 7மணிக்கு தேன்மொழி தனது சகோதரியை பஸ் ஏற்றிவிட்டு வீடு திரும்பினார்.

ஸ்டேட் பாங்க் காலனி அருகே வந்த போது, அங்கு நின்ற வாலிபர், தேன்மொழி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்தார். தேன்மொழி சப்தம் போடவே, அப்பகுதியில் இருந்தவர்கள் வாலிபரை பிடித்துபோலீசில் ஒப்படைத்தனர்.

இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தியதில் பிடிப்பட்ட வாலிபர் வேப்பங்குளத்தைச் சேர்ந்த வீரமுத்து மகன் ஆனந்தன் என தெரியவந்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by Dr.S.Soundarapandian on Tue Nov 04, 2014 5:51 pm

சிவா அவர்களுக்கு நன்றி ! சிவகங்கை எங்கள் மாவட்டம் ! காரைக்குடி மாவட்டமாக அது வரவேண்டியது; உடையப்பா சுப்பிரமணியம் எம்.ஜி.ஆரிடம் முந்திக்கொண்டார் !
எப்படியிருந்தாலும் எங்கள் மாவட்டச் செய்திகளை வெளியிட்டு எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளீர்கள் !

சூப்பருங்க அருமையிருக்கு
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Tue Nov 04, 2014 6:10 pm

@Dr.S.Soundarapandian wrote:சிவா அவர்களுக்கு நன்றி ! சிவகங்கை எங்கள் மாவட்டம் ! காரைக்குடி மாவட்டமாக அது வரவேண்டியது; உடையப்பா சுப்பிரமணியம் எம்.ஜி.ஆரிடம் முந்திக்கொண்டார் !
எப்படியிருந்தாலும் எங்கள் மாவட்டச் செய்திகளை வெளியிட்டு எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளீர்கள் !

சூப்பருங்க அருமையிருக்கு

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Fri Feb 06, 2015 9:51 pm

தேவகோட்டை அருகே கோட்டூரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ரேவதி. இருவரும் தேவகோட்டை க.க.மு. தெருவில் பைனான்ஸ் நிறுவனம் நடத்துகின்றனர்.

இவர்களிடம் கோட்டூரை சேர்ந்த சிவகுருநாதன்,45, ஏலச்சீட்டு சேர்ந்தார். கடந்த 2013ல் ரூ.1லட்சம், ரூ.50 ஆயிரம் சீட்டுக்களில் சேர்ந்து பணம் கட்டினார்.

ஏலச்சீட்டு தவணை காலமும் முடிந்தது. இதையடுத்து, சீட்டு பணத்தை தருமாறு செல்வத்திடம் அடிக்கடி சிவகுருநாதன் கேட்டார். இது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் கோட்டூர் முனை ஆர்ச் அருகே சிவகுருநாதன் அவரது நண்பர்களுடன் நின்றிருந்தார். அங்கு வந்த செல்வம், அவர் மனைவி ரேவதி வருவதை பார்த்து சீட்டு பணத்தை தருமாறு கேட்டார். இதில் ஆத்திரமுற்ற செல்வம், சிவகுருநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

வேலாயுதபட்டிணம் போலீசில் சிவகுருநாதன் அளித்த புகாரின்படி, இன்ஸ்பெக்டர் அண்ணாத் துரை விசாரிக்கிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Tue Mar 03, 2015 1:29 am

காரைக்குடியில் மனைவி தாக்கியதில் கணவன் படுகாயம்

காரைக்குடி, : காரைக்குடியில் குடும்ப பிரச்சனை காரணமாக மத்துகட்டையால் மனைவி தாக்கியதில் கணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரைக்குடி ஆறுமுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவர் கால்நடை மருத்துவராக பணியாற்றிவருகிறார். இவரது மனைவி யமுனா (23). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண்குழந்தை உள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக கணவன் மனைவிக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த யமுனா வீட்டில் இருந்த பருப்பு கடையும் மத்துகட்டையால் பாலகிருஷ்ணனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு போலீஸ் எஸ்ஐ ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Sat Mar 07, 2015 4:27 am


சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 15 ஆயிரத்து 983 மாணவ-மாணவிகள் எழுதினர்.

பிளஸ்-2 தேர்வுகள்

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வுகள் நேற்று முதல் தொடங்கின. இந்த தேர்வுகள் மார்ச் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மற்றும் தேவகோட்டை ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. மொத்தம் 15 ஆயிரத்து 983 மாணவ-மாணவிகள் இந்த பிளஸ்-2 தேர்வினை எழுதுகின்றனர்.

சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 311 மாணவர்களும், 4 ஆயிரத்து 174 மாணவிகளும் சேர்த்து 7 ஆயிரத்து 485 பேரும், தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 800 மாணவர்களும், 4 ஆயிரத்து 698 மாணவிகளும் சேர்த்து 8 ஆயிரத்து 498 பேரும் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 28 தேர்வு மையமும், தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 26 தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

பறக்கும் படை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் முனுசாமி சிவகங்கை புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்னர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று தேர்வுகள் நடைபெறுவதை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 111 மாணவர்களும், 8 ஆயிரத்து 872 சேர்த்து மொத்தம் 15 ஆயிரத்து 983 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வினை கண்காணிப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குப்புசாமி விருதுநகர், சிவகங்கை ஆகிய 2 மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர முதன்மைக்கல்வி அதிகாரி தலைமையில் ஒரு பறக்கும் படையும், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முதன்மைக்கல்வி அதிகாரி தலைமையில் ஒரு பறக்கும் படையும், மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் 3 பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நடைபெறும் 54 மையங்களிலும் தலா ஒரு நிலையான பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது போல சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி செந்திவேல் முருகன் சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை புனிதஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, என்.எஸ்.எம்.வி.பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி, தி பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நடைபெற்ற தேர்வுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Sat Mar 07, 2015 4:29 am


காதலனிடம் இருந்து மீட்கப்பட்ட இளம் பெண் அடித்துக்கொலை போலீஸ் நிலையத்தில் தந்தை சரண்

சிவகங்கை அருகே உடைக்குளம் கிராமத்தில் காதலனிடம் இருந்து மீட்கப்பட்ட இளம் பெண்ணை தந்தை அடித்துக்கொன்றுவிட்டு போலீஸ்நிலையத்தில் சரண் அடைந்தார்.

காதலனுடன் மாயம்

சிவகங்கையை அடுத்த உடைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 47) விவசாயி. இவரது மகள் தமிழ்செல்வி (19). இதே ஊரைச் சேர்ந்தவர் பூமிநாதன் (27). தமிழ்செல்வியும், பூமிநாதனும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி தமிழ்செல்வி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அவரது தந்தை தங்கராஜ் சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசார் விசாரணை நடத்தி வெளியூரில் பூமிநாதனுடன் இருந்த தமிழ்செல்வியை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் தான் தாய், தந்தையருடன் செல்ல விரும்புவதாக தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார். அதன்பேரில் அவரை பெற்றோருடன் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொலை

இந்த நிலையில் தமிழ்செல்வியின் தந்தை தங்கராஜ் நேற்று சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் ஆஜர் ஆகி தன்னுடைய மகள் தமிழ்செல்வியை தான் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அவரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி, இன்ஸ்பெக்டர் பொன்ரகு ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 3-ந்தேதி இரவில் நான் தூக்கத்தில் விழித்து பார்த்த போது வீட்டில் படுத்து இருந்த போது எனது மகளை காணவில்லை. பின்னர் வெளியே வந்து பார்த்த போது வயல்காட்டுப்பகுதியில் அவர் சென்று கொண்டு இருந்தார். இதனால் திரும்பத்திரும்ப தன்னை அவமானப்படுத்துகிறாளே என மகள் மீது ஆத்திரம் வந்தது. உடனே அவளை பின்தொடர்ந்து சென்று அங்கிருந்த கட்டையால் அடித்து கொலை செய்தேன். பின்னர் உடலை மண்ணெண்னை ஊற்றி எரித்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணை

இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கவுரவத்திற்காக மகளை பெற்ற தந்தையே கொலை செய்த சம்பவத்தால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு எற்பட்டது. இதுதொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் கூறுவது உண்மையா? தமிழ்செல்வியை அவர் மட்டும் கொலை செய்தாரா? வேறு யாரும் அவருக்கு உதவி செய்தார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Sat Mar 07, 2015 5:08 am


கருக் கலைப்பில் பெண் சாவு:சிகிச்சை அளித்த பெண் மீது கணவர் புகார்

காரைக்குடி அருகே புதுவயலில் கருக் கலைப்பு மருந்து கொடுத்ததில் கர்ப்பிணிப் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலையத்தில் கணவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் மருந்து கொடுத்த பெண்ணை தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சாக்கோட்டை அருகே புளியங்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் மருதமுத்து. இவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி கருப்பாயி (35). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ள நிலையில் கருப்பாயி 3 மாதம் கர்ப்பிணியாக இருந்தாராம்.

இந்த கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்த கருப்பாயி, புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற மருத்துவ ஊழியர் லீலாவதியை வெள்ளிக்கிழமை காலை சந்தித்தாராம். அப்போது கருவை கலைக்க அவர், லீலாவதிக்கு மருந்து கொடுத்தாராம். பின்னர் 1 மணி நேரத்தில் கருப்பாயி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டாராம். தகவலறிந்ததும் கணவர் மருதமுத்து சாக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப் பதிந்து கருப்பாயி சடலத்தைக் கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். தலைமறைவாக உள்ள லீலாவதியை போலீஸார் தேடி வருகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவனாசான் on Sat Mar 07, 2015 5:11 am

காதல் படுத்தும் பாடுஇதுதான்......... எல்லாத்துக்கும் மூல காரணம் ஊடகங்களில் ( டி,வி.) ஓடும் கணக்கில்லா கற்பனை கதைகள்தான் என்றால் மிகையாகாது.........தண்டனையும் கடுமையாக கையாளப்படவில்லை................ அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2806
மதிப்பீடுகள் : 1018

View user profile

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Thu Mar 12, 2015 5:18 pm

சிவகங்கையில் அதிகரிக்குது கொள்ளை சம்பவங்கள்

சிவகங்கை : சிவகங்கையில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவங்கள் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை கீழக்கண்டனி, பனையூரில் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி, காளவாசலில் அ.தி. மு.க., நிர்வாகி வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை, நாட்டரசன்கோட்டையில் 35 பவுன் நகை கொள்ளை உட்பட 2015 துவக்க முதல் 2 மாதத்தில் 30க்கும் மேற் பட்ட கொள்ளை, திருட்டு சம்பவம் நடந்துள்ளது. பெரும்பாலும் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகின்றனர். சம்பவ இடத்தில் தடயங்கள் சிக்காமல் இருக்க, பல்வேறு நூதன முறைகளை கையாளுகின்றனர். இது போன்ற கொள்ளையர்களின் சில உத்திகளை பார்க்கையில், அனுபவமிக்கவர்களே சிவகங்கை மாவட்டத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. மாவட்டத்தில் பல இடத்தில் அடுத்தடுத்து நடக்கும் கைவரிசையால் பொதுமக்கள் அச்சமடையும் சூழல் உள்ளது.

போலீசார் கூறுகையில்,"" மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கும் தருணத்தில் தான் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவம் நடப்பதால், அந்த நேரத்தில் ரோந்து தீவிரப்படுத்தி உள்ளோம். மெயின் ரோடுகளை தவிர்த்து, தெருக்களிலும் ரோந்து செல்ல திட்டமிட்டுள்ளோம். பெரும்பாலும் பூட்டிய வீடு களில் அதிகம் நடக்கிறது. வெளியூர் சென்றால் போலீ சுக்கு தகவல் தெரிவிக்கலாம். ரோந்து பணிக்கென கூடுதல் போலீசார் தேவை. பொதுமக்களும் கொள்ளை, திருட்டு போன்ற குற்றங் களை தடுக்க ஒத்துழைக்கவேண்டும், என்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by சிவா on Thu Mar 12, 2015 5:20 pm

தேவகோட்டை அருகே சிறுமியை கடத்திய ஆட்டோ டிரைவர் கைது

தேவகோட்டையை அடுத்த வேலாயுதப்பட்டினம் அருகே உள்ளது பாரதிவேலங்குளம். இந்த கிராமத்தை சேர்ந்த 14வயது சிறுமி கல்லலில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார்.

கல்லல் அருகே உள்ள சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் கார்த்தி(வயது28).ஆட்டோ டிரைவர். இவர் அந்த சிறுமியை திருமணத்திற்காக கடத்தி சென்றாராம்.

இது குறித்து சிறுமியின் தந்தை தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கார்த்திக்கை கைது செய்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum