ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சின்னச் சின்ன சிந்தனைகள்
 SK

அறிமுகம்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 krishnaamma

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 மூர்த்தி

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 SK

புதிய சமயங்கள்
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

கடவுள் தந்த இருமலர்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 பழ.முத்துராமலிங்கம்

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 ayyasamy ram

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 ayyasamy ram

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 krishnanramadurai

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

View previous topic View next topic Go down

பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by தமிழ்நேசன்1981 on Sat Oct 25, 2014 8:04 pm

சென்னை: சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' கறவை மாடுகளின் விலை, பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் ஆகியவற்றின் விலை, இதர இடுபொருட்களின் விலை ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளன என்று தெரிவித்து, பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை பால் உற்பத்தியாளர்கள் வைத்துள்ளனர்.

பால் விற்பனை, கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதினையும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினையும், தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதையும் கருத்தில் கொண்டு; கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 22.5 லட்சத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையிலும், பால் கூட்டுறவு சங்கங்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையிலும், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 23 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தவும்;

எருமை பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 31 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக, அதாவது 4 ரூபாய் உயர்த்தவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த பால் கொள்முதல் விலை உயர்வு 1.11.2014 முதல் அமலுக்கு வரும். விற்பனை விலையை பொறுத்தவரையில், தனியார் பால்பண்ணை மற்றும் இதர மாநில கூட்டுறவு இணையங்களின் பால் விற்பனை விலையோடு ஆவின் பால் விற்பனை விலையை ஒப்பிடும்போது, ஆவின் பால் விற்பனை விலை மிகவும் குறைவாகும்.

பொதுவாக, பால்பண்ணை தொழிலில் நுகர்வோர்களிடமிருந்து பெறப்படும் பால் விற்பனை தொகையில், 75 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டும், கூட்டுறவு நிறுவனங்களின் பொருளாதார நிலை மற்றும் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பால் பணப் பட்டுவாடா எவ்விதத்திலும் பாதிப்படையக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டும், அதே சமயத்தில் நுகர்வோர்களுக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையிலும், கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டு உள்ளது.

எனவே, பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் பதப்படுத்தும் செலவுகளை ஈடு செய்ய, சமன்படுத்திய பால் அட்டை விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய், அதாவது லிட்டர் ஒன்றுக்கு 24 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.

இந்த விலை உயர்வுக்கு பிறகும்கூட, ஆவின் பால் விற்பனை விலை, தனியார் பால் பண்ணைகள் மற்றும் இதர மாநில கூட்டுறவு இணையங்கள் பால் விற்பனை விலையைவிட குறைவானதே ஆகும்" என்று கூறியுள்ளார்.

ஆரஞ்ச், பச்சை நிற பாக்கெட்டுகளின் விலை மேலும் உயரும்

தமிழக அரசு அறிவித்துள்ள பால் விலை உயர்வு ஆவினின் நீல நிற பாக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். கொழுப்பு நீக்காத மற்றும் கெட்டியான தன்மை கொண்ட இதே ஆவின் நிறுவனத்தின் ஆரஞ்ச், பச்சை நிற பாக்கெட்டுகளின் விலை மேலும் உயரும். அதாவது நீல நிற பாக்கெட்டுகளின் விலையிலிருந்து ரூ. 3 முதல் 5 வரை அதிகமாகவே இருக்கும்.

தனியார் பால் விலையும் உயரும்

தனியார் பாலின் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டு, லிட்டருக்கு ரூ. 40 வரை விற்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மேலும் உயரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய்க்கு உட்பட்டே உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 10 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொது மக்களிடையே சற்று அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தி உள்ளது.

பால் உற்பத்தியாளர்கள் வரவேற்பு

இதனிடையே பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டிருப்பதற்கு பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியும்,வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

விகடன்நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3513
மதிப்பீடுகள் : 966

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by யினியவன் on Sat Oct 25, 2014 8:13 pm

மக்களின் முதல்வரின் தலையீட்டால் வாபஸ் அல்லது குறைக்கப்பட்டதுன்னு செய்தி போடவே இதமாதிரி செஞ்சிருப்பாங்களோ? புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by தமிழ்நேசன்1981 on Sat Oct 25, 2014 8:33 pm

@யினியவன் wrote:மக்களின் முதல்வரின் தலையீட்டால் வாபஸ் அல்லது குறைக்கப்பட்டதுன்னு செய்தி போடவே இதமாதிரி செஞ்சிருப்பாங்களோ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099394

ம்..அந்த மாதிரி கோணங்கித்தனங்களை செய்வதற்கும் இருக்கலாம்..அல்லது அடுத்து முதல்வரா நாம வந்து மாட்டிக்கிட்டு அல்லாட கூடாது..அதனால இப்படி ஏதாவது பண்ணி திமுகவிற்கு வழிவிடும் முயற்சியாவும் இருக்கலாம்... குறைய இருக்குற காலத்த ஓட்டவே பன்னீர்செல்வம் வெந்நீர் செல்வமா ஆயிடுவாரு....இப்பவே மெர்சலாயிட்டேன்னு பாடிட்டு இருக்காராம்... புன்னகைநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3513
மதிப்பீடுகள் : 966

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by krishnaamma on Sat Oct 25, 2014 8:39 pm

@யினியவன் wrote:மக்களின் முதல்வரின் தலையீட்டால் வாபஸ் அல்லது குறைக்கப்பட்டதுன்னு செய்தி போடவே இதமாதிரி செஞ்சிருப்பாங்களோ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099394

இருக்கலாம்............எங்கே பன்னீர் செல்வத்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்துவிடுமோ என்று அதிரடியாக 10 ருபாய் ஏத்த சொல்லி இருக்கலாம் அம்மா கண்ணடி அப்புறம் நீங்க சொல்வது போல தான் தலை இட்டு மக்களுக்கு நல்லது செய்வது போல குறைக்கலாம் புன்னகை .....இங்கு ஏற்கனவே 'நந்தினி'............அதாவது கர்நாடக அரசு பால் விலை தமிழ் நாட்டைவிட அதிகம் தான்.....ஆனால் ஒரே முறை இல் இவ்வளவு ஏத்தக் கூடாது ..............மாத பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழும்? சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55236
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by தமிழ்நேசன்1981 on Sat Oct 25, 2014 8:53 pm

@krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1099402

ஆமாம் அம்மா...அதிமுக ஆட்சியில் மக்களுக்கு ஏகப்பட்ட துண்டுகள் விழுகின்றன..அதையெல்லாம் பத்திரமாக வைத்திருந்து வருகிற தேர்தலில் அவர்கள் தலையில் போடவேண்டியதுதான்... ஜாலிநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3513
மதிப்பீடுகள் : 966

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by krishnaamma on Sat Oct 25, 2014 8:57 pm

@தமிழ்நேசன்1981 wrote:
@krishnaamma wrote:
@யினியவன் wrote:மக்களின் முதல்வரின் தலையீட்டால் வாபஸ் அல்லது குறைக்கப்பட்டதுன்னு செய்தி போடவே இதமாதிரி செஞ்சிருப்பாங்களோ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099394

இருக்கலாம்............எங்கே பன்னீர் செல்வத்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்துவிடுமோ என்று அதிரடியாக 10 ருபாய் ஏத்த சொல்லி இருக்கலாம் அம்மா கண்ணடி அப்புறம் நீங்க சொல்வது போல தான் தலை இட்டு மக்களுக்கு நல்லது செய்வது போல குறைக்கலாம் புன்னகை .....இங்கு ஏற்கனவே 'நந்தினி'............அதாவது கர்நாடக அரசு பால் விலை தமிழ் நாட்டைவிட அதிகம் தான்.....ஆனால் ஒரே முறை இல் இவ்வளவு ஏத்தக் கூடாது ..............மாத பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழும்? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1099402

ஆமாம் அம்மா...அதிமுக ஆட்சியில் மக்களுக்கு ஏகப்பட்ட துண்டுகள் விழுகின்றன..அதையெல்லாம் பத்திரமாக வைத்திருந்து வருகிற தேர்தலில் அவர்கள் தலையில் போடவேண்டியதுதான்... ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1099406

சூப்பர் நேசன் !........................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55236
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

பன்னீர் வந்தார் பால்விலை உயர்த்தினார் ரூ.10 எகிறியதால் லிட்டர் பால் 34 ரூபாய்

Post by kshanmuganathan on Sat Oct 25, 2014 10:16 pm

மாற்றம் செய்த நாள்
25 அக்
2014
15:58
பதிவு செய்த நாள்
அக் 25,2014 14:00 சென்னை: தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற சில நாட்களில் முதல் நடவடிக்கையாக பால் விலையை உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக லிட்டர் பால் விலை ரூ. 24 ல் இருந்து ரூ. 34 ஆக உயர்கிறது. பால் விலை உயர்வதால் டீ, காபி விலை அதிகரிப்பதுடன் குடும்ப பெண்கள் பலர் நேரடி பாதிப்புக்குள்ளாவர் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வராக இருந்த ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் பதவி இழந்தார். இதனையடுத்து கடந்த மாதம் 29ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். இவரது ஆட்சித்திறம் எப்படி இருக்கும் என மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் பால் விலை உயர்த்தப்படுவதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக பால் கொள்முதல் விலை பசும்பாலுக்கு ரூ.5ம், ( ரூ.23 லிருந்து ரூ.28 ஆகவும் ) எருமைப்பால் லிட்டருக்கு ரூ.4ம் ( ரூ. 31லிருந்து 35 ஆகவும் ) உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தப்படும். வரும் 1ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் : இந்த பால் உயர்வுக்கு தி.மு.க., பா.ஜ., இடதுசாரி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தி.மு.க,. தலைவர் கருணாநிதி தனது கண்டனத்தில் தமிழகத்தில் இது வரை இருந்த எந்தவொரு அரசும் இது போல் பால் விலையை உயர்த்தியதில்லை. ஆவின் ஊழலால் ஏற்பட்ட இழப்பை சீர்செய்ய இவ்வாறு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
மதுரை டீக்கடைக்காரர் பேட்டி : பால் விலை குறித்து மதுரையை சேர்ந்த டீக்கடைக்காரர் சந்திரன் என்பவர் கூறுகையில். பால், தண்ணீர், மின்சாரம் போன்றவை மக்களுக்கு அத்தியாவசிய தேவை ஆகும். இதனை உயர்த்தினால் அரசுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் தான் வரும். புட்டிப்பாலை நம்பி எத்தனையோ குழந்தைகள் உள்ளனர். ரூ. 2 அல்லது ரூ. 3 உயர்த்தினால் பரவாயில்லை. 10 ரூபாய் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. நாங்கள் இப்போது கிளாஸ் டீ 8 ரூபாய்க்கு விற்கிறோம். இனி 10 ரூபாய் ஆக்கிட வேண்டியது தான் என்று குமுறினார்.
avatar
kshanmuganathan
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 130
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by krishnaamma on Sat Oct 25, 2014 10:50 pm

இது ஏற்கனவே இருக்கு......................பதிவு போடும் முன், தயவு செய்து ஒருமுறை யாரவது இது போல போட்டிருக்காளா     என்று பார்த்து விட்டு, பிறகு பதிவு போடவும் !

இதையும்  இணைக்கிறேன்  புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55236
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by murugesan on Sun Oct 26, 2014 11:29 am

காரணம் என்ன தெரியுமா ... அம்மா சிறையில் இருந்து வெளியே வந்தபோது அம்மா படத்துக்கு பால் அபிசேகம் பண்ணினாங்க.. அதை பார்த்த அம்மா பரவசத்தில் கையை உயர்த்தினார்..தன்னால விலையும் உயர்ந்திட்டு... இதுக்கு தமிழக அரசு பொறுப்பாகாது..
avatar
murugesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 320
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by krishnaamma on Sun Oct 26, 2014 12:03 pm

@murugesan wrote:காரணம் என்ன தெரியுமா ... அம்மா சிறையில் இருந்து வெளியே வந்தபோது அம்மா படத்துக்கு பால் அபிசேகம் பண்ணினாங்க.. அதை பார்த்த அம்மா பரவசத்தில் கையை உயர்த்தினார்..தன்னால விலையும் உயர்ந்திட்டு... இதுக்கு தமிழக அரசு பொறுப்பாகாது..
மேற்கோள் செய்த பதிவு: 1099509

சூப்பர் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55236
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by யினியவன் on Sun Oct 26, 2014 12:08 pm

முருகேசன் முன்கூறு ஜாமீன் எடுத்து வெச்சுக்கோங்க இப்பவே புன்னகைபுன்னகைபுன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by கோ. செந்தில்குமார் on Mon Oct 27, 2014 9:00 am

முதலில் ஆவின் நிறுவனத்தில் உள்ள ஓட்டைகளை அடையுங்கள்...! ஓட்டைகளை அடைத்தாலே பால் வீணாகாது. விலையை ஏற்ற வேண்டிய அவசியமும் இருக்காது.
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by M.M.SENTHIL on Mon Oct 27, 2014 12:21 pm

மக்களின் முதல்வர்?????? இதற்கு என்ன சொல்லப் போகிறார் என்று பார்ப்போம்.

பாவங்க இந்த ஓ.பி.. (ரிமோட் பொம்மையா இருக்கறது எவ்ளோ கஷ்டம்னு அவருக்குத்தானே தெரியும்)

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by murugesan on Mon Oct 27, 2014 12:26 pm

பாவங்க இந்த ஓ.பி.. இன்றைக்கு பல் விளக்கவில்லயாம்.. டீ குடிக்கவில்லையாம் .. காரணம் தெரியுமா?
avatar
murugesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 320
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by M.M.SENTHIL on Mon Oct 27, 2014 12:29 pm

@murugesan wrote:பாவங்க இந்த ஓ.பி.. இன்றைக்கு பல் விளக்கவில்லயாம்.. டீ குடிக்கவில்லையாம் .. காரணம் தெரியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1099669

அம்மாவிடமிருந்து ஆர்டர் வரவில்லையோ?????

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by ஜாஹீதாபானு on Mon Oct 27, 2014 4:16 pm

சோகம்சோகம்சோகம்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30089
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by யினியவன் on Mon Oct 27, 2014 4:40 pm

என்ன இப்ப உளுந்து மாவு வெலயா ஏறிடிச்சு????avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by பாலாஜி on Mon Oct 27, 2014 4:41 pm

@யினியவன் wrote:

என்ன இப்ப உளுந்து மாவு வெலயா ஏறிடிச்சு????
மேற்கோள் செய்த பதிவு: 1099748

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by ஜாஹீதாபானு on Mon Oct 27, 2014 5:11 pm

@யினியவன் wrote:

என்ன இப்ப உளுந்து மாவு வெலயா ஏறிடிச்சு????
மேற்கோள் செய்த பதிவு: 1099748

எனக்கு டீ ரொம்ப பிடிக்கும்ணா. விலை ஏறினா தண்ணி ஊத்தி தான் போடனும் அதான் சோகம்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30089
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by ஜாஹீதாபானு on Mon Oct 27, 2014 5:12 pm

@பாலாஜி wrote:
@யினியவன் wrote:

என்ன இப்ப உளுந்து மாவு வெலயா ஏறிடிச்சு????
மேற்கோள் செய்த பதிவு: 1099748

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1099749

பார்த்து சிரிங்க உள்நாக்கு தெரிகிறது .avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30089
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by யினியவன் on Mon Oct 27, 2014 5:22 pm

@ஜாஹீதாபானு wrote:எனக்கு டீ ரொம்ப பிடிக்கும்ணா. விலை ஏறினா தண்ணி ஊத்தி தான் போடனும் அதான் சோகம்
என்ன பண்ணுறது - கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலருன்னு பாடிட்டே கருப்பு டி குடிச்சிடுங்க - உடம்புக்கும் நல்லதுavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by ராஜா on Mon Oct 27, 2014 5:27 pm

நான் எப்பவுமே பால் கலக்காத பச்சை தேனீர் தான் குடிப்பேன்.......
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by ஜாஹீதாபானு on Mon Oct 27, 2014 5:47 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:எனக்கு டீ ரொம்ப பிடிக்கும்ணா. விலை ஏறினா தண்ணி ஊத்தி தான் போடனும் அதான் சோகம்
என்ன பண்ணுறது - கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலருன்னு பாடிட்டே கருப்பு டி குடிச்சிடுங்க - உடம்புக்கும் நல்லது
மேற்கோள் செய்த பதிவு: 1099763

என்ன தான் விலை ஏறீனாலும் அதை வாங்காம இருந்துடுவாங்களா ஜனங்க.avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30089
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by யினியவன் on Mon Oct 27, 2014 5:48 pm

@ராஜா wrote:நான் எப்பவுமே பால் கலக்காத பச்சை தேனீர் தான் குடிப்பேன்.......
அதான் நீங்க பச்ச புள்ளavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by krishnaamma on Mon Oct 27, 2014 6:25 pm

@ஜாஹீதாபானு wrote:
@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:எனக்கு டீ ரொம்ப பிடிக்கும்ணா. விலை ஏறினா தண்ணி ஊத்தி தான் போடனும் அதான் சோகம்
என்ன பண்ணுறது - கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலருன்னு பாடிட்டே கருப்பு டி குடிச்சிடுங்க - உடம்புக்கும் நல்லது
மேற்கோள் செய்த பதிவு: 1099763

என்ன தான் விலை ஏறீனாலும் அதை வாங்காம இருந்துடுவாங்களா ஜனங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1099767

ஆமாம் பானு, பாலின் தேவையை எப்படி குறைப்பது ? சோகம் ....................டீ.............. காப்பிக்கு மட்டா விடலாம்.....இல்லை இனியவன் சொல்வது போல சிலசமையம் பால் விடாமல் சாப்பிடலாம்..............அதுவும் எல்லோரும் அப்படி செய்யமுடியாது..........................ஆனால் தயிர்???????? அநியாயம் அநியாயம் அநியாயம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55236
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum