ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வரலாற்றில் தீபாவளி
 T.N.Balasubramanian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 ayyasamy ram

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 ayyasamy ram

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
 ayyasamy ram

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
 ayyasamy ram

ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
 ayyasamy ram

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 ayyasamy ram

விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
 ayyasamy ram

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
 ayyasamy ram

தீபாவ‌ளி நகை‌ச்சுவை வெடி‌க‌ள் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
 ayyasamy ram

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
 ayyasamy ram

உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ? (பாரசீகப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
 Dr.S.Soundarapandian

மனதில் உறுதி வேண்டும்
 Dr.S.Soundarapandian

ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மொழிபெயர்ப்பு கவிதைகள்
 Dr.S.Soundarapandian

ஊதுவோம் சங்கு
 M.Jagadeesan

ஒரே ஒரு பஸ் ஜோக்...
 T.N.Balasubramanian

சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
 Dr.S.Soundarapandian

திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
 Dr.S.Soundarapandian

நீயே என் முதற் காதலி! (ஹீப்ரு மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இன்றைய செய்தித்தாள்(15.10.2017)
 thiru907

இணையதளத்தில் மெர்சல் படம்
 ayyasamy ram

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
 M.Jagadeesan

டி.வி.சீரியல் பார்க்கும்போது உயிர் போகணும்...!!
 Dr.S.Soundarapandian

வேலைக்காரிக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க,,,?
 Dr.S.Soundarapandian

சங்கீதம்னா உயிரையே விட்டுவார்....!!
 Dr.S.Soundarapandian

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
 ayyasamy ram

அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
 ayyasamy ram

கயிற்று பாலத்தில் நடந்து ஆட்சியர் விழிப்புணர்வு
 ayyasamy ram

சுவாசம்
 nahari

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by seltoday on Fri Nov 14, 2014 9:43 pm

First topic message reminder :

கலாச்சாரம் என்பதை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குட்பட்ட மனிதர்களின் வாழ்வியல் முறை என்று சுருக்கமாக சொல்லலாம் . தனித்த உணவு ,உடை ,இருப்பிடம் ,மொழி ,சமய நம்பிக்கைகள் உள்ளிட்டவை வாழ்வியல் முறைக்குள் அடங்கும் . உலகெங்கிலும் உள்ள இனக்குழுக்களால் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்த விதவிதமான கலாச்சாரங்கள் உலகமயமாக்கலின் விளைவாக கரையத் தொடங்கி நெடுநாட்களாகி விட்டன . அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த கலாச்சார வாழ்வியல் முறை இன்று உலகமயமாக்கல் தடம் பதித்துள்ள எந்த இடத்திலும் இல்லை . நாகரிகத்தின் பெயரால் ,வளர்ச்சியின் பெயரால் பாரம்பரிய விழுமியங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன . வளர்ச்சியின் வாடை படாத பழங்குடி மக்களின் வாழ்வியல் முறை மட்டும் மாறாமல் இருக்கிறது . காடுகளில் பயணம் செய்கிறோம் என்ற பெயரில் நகரத்து மக்கள் காடுகளில் நுழைவதால் அவர்களின் வாழ்வியல் முறையும் மாறி வருகிறது .

கலாச்சாரம் மாறி வருவதை ஒரு பிரச்சனையாக கருத முடியாது .பூமியின் சுழற்சியில் எல்லாமும் ஒரு நாள் மாறித் தான் ஆக வேண்டும் . மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத எதுவும் இங்கே நிலை ( கொஞ்ச காலத்திற்காகவாவது ) பெற முடியாது . கலாச்சாரமும் இதற்கு விதிவிலக்கல்ல . உணவு ,உடை ,இருப்பிடம் ,மொழி ,சமயநம்பிக்கைகள் என எல்லாமும் மாற்றத்தைச் சந்தித்தே வருகின்றன.

20 ஆண்டுகளுக்கு முன்பு உண்ணப்பட்ட எந்த உணவும் இன்று பரவலாக உண்ணப்படவில்லை. அப்படியே உண்ணப்பட்டாலும் பயன்படுத்தும் பொருட்கள் முதற்கொண்டு சமைக்கும் முறை, உண்ணும் முறை என அனைத்திலும் பலவிதமான மாற்றங்கள். நாம் வாழும் பகுதியில் என்ன விளைகிறதோ ,எந்தக் காலநிலையில் என்ன கிடைக்கிறதோ அதை மட்டுமே உண்டு வாழ்ந்த சூழியலுக்கும் உடலுக்கும் உகந்த வாழ்வியல் முறை எங்கும் இல்லை. உடலைப்பற்றி எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் வணிக விளம்பரங்களில் மயங்கி கண்டதையும் உண்கிறோம். அன்று ,என்ன சாப்பிடுகிறோம் என தெரிந்து உணவே மருந்து என்றெண்ணி உண்டோம் இன்று,நாம் சாப்பிடும் ஒரு வாய் உணவில் என்னென்ன கலந்திருக்கிறது என்பதைத் தெரியாமலே உண்கிறோம். உலகவணிகமயமாக்கத்தால் நம் உணவுக் கலாச்சாரத்தில் நிகழ்ந்த இத்தகைய மாற்றங்களையும்,பாதிப்புகளையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டது நம் கலாச்சாரம்.

நமது வாழிடங்களுக்கு அருகில் கிடைத்த பொருட்களை வைத்து வீடு கட்டி இயற்கையின் நண்பனாக வாழ்ந்த வாழ்வியல் முறை இன்று இல்லை. விதவிதமான கட்டம் கட்டமான எலிக்கூண்டுகளைக் காற்று புகாதவாறு கட்டிக்கொண்டு அதை வீடுகள் என்று சொல்கிறோம். செங்கல் , மணல்,ஜல்லி,கம்பி,கண்ணாடி,மரச்சாமான்கள் என வீடு கட்டப் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் இயற்கையின் அழிவிலிருந்து தான் பிறக்கிறது. முன்பு கட்டுமான பொருட்களை இயற்கையில் மிஞ்சியவையிலிருந்து எடுத்தோம்;எடுத்ததை மீண்டும் உருவாக்கினோம் .நமது வீடுகளின் கலாச்சாரக் கூறுகளாக இருந்த திண்ணையும் ,முற்றமும் இன்றைய வீடுகளில் இல்லை . இன்றைய சூழலில் வீடு குறித்த அதிக முக்கியத்துவமும்,அதிக கவனமும் தேவையற்றது என்றே நினைக்கிறேன். இநத மாற்றங்கள் குறித்து நம் கலாச்சாரம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

ஒரு நூற்றாண்டிற்கு முன்பிருந்த எழுத்து முறையும் ,பேச்சு வழக்கும் இன்றைய தமிழ் மொழிக்கு இல்லை. காலத்திற்கு ஏற்ற மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைப் புதிப்பித்துக் கொண்டதாலேயே தமிழ் மொழி இன்று வரை இருக்கிறது. இந்த மாற்றம் குறித்தும் கலாச்சாரம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

ஒரே மாதிரியான சமயநம்பிக்கைகள் நம் கலாச்சாரத்தில் இல்லை. அன்றே குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என ஐந்திணைகளுக்கும் ஐந்துவிதமான சமயநம்பிக்கைகள் இருந்துள்ளன. கால மாற்றத்தாலும் பல்வேறுவிதமான நாடுகளின் படையெடுப்புகளாலும் பல்வேறுவிதமான சமயநம்பிக்கைகள் இன்று பின்பற்றப்படுகின்றன. இதற்கும் நமது கலாச்சாரம் ஒன்றும் சொல்லவில்லை.

ஆங்கிலேயர் இந்தியாவை ஆளாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக இன்றைய நிலை எதிலும் இருக்காது.கலாச்சாரத்தின் அனைத்து கூறுகளையும் ஆங்கிலேய ஆட்சி முறை வெகுவாக பாதித்தது. உடையும் பலவிதமான மாற்றங்களை அடைந்தது. தொழில் ரீதியாகவும் மதரீதியாகவும் தனித்த அடையாளத்துடன் அணியபட்ட உடைகள் மாற்றம் அடைந்து ஒரு பொதுவான முறையில் அணியப்படுவது நல்ல விசயம். ஆனால் அதிலும் சூழலுக்குப் பொருந்தாத இறுக்கமாண உடைகளையே பெரிதும் விரும்புகிறோம்.ஆண்களைப் பொருத்தவரை ஒரே வேட்டியை தாங்கள் செய்யும் வேலைகளுக்கு ஏற்ப மாற்றிக் கட்டியவர்கள் ,பட்டாப்பட்டி டவுசர் போட்டவர்கள் ,இன்று விதவிதமான பேண்ட்களையும் ,ஜாக்கியும் ,சார்ட்ஸும் அணிகிறார்கள். இதற்கும் கலாச்சாரம் மூச்சே விடவில்லை.

உணவு ,உடை,இருப்பிடம் ,சமயநம்பிக்கைகள் ,மொழி உள்ளிட்ட கலாச்சாரக் கூறுகளில் நிகழ்ந்த ,நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களை நாம் தவறென்றே சொல்ல முடியாது. சில இழப்புகள் இருக்கலாம். 'அன்று இருந்தது ,இன்று இல்லை ' என்ற மனநிலை எல்லா காலகட்டங்களிலும் இருக்கிறது. ஒரு குற்ப்பிட்ட காலகட்டத்தில் எல்லாமுமே மாற்றத்தைச் சந்தித்தே தீருகின்றன. ஒரு தலைமுறை என மதிப்பிடப்படும் 33ஆண்டுகளில் அதிகபட்ச விசயங்கள்,பொருட்கள் மாற்றத்தைச் சந்திக்கின்றன. உலகவணிகமயமாக்கல் கால்பதித்த எந்த இடத்திலும் முன்பிருந்த தனித்த கலாச்சாரம் இன்றில்லை. பணம் ஒரே இடத்தில் குவிய அனுமதிக்கும் சுயநலமிக்க நுகர்வு கலாச்சாரம் தான் உலகமயமாக்கலின் சாதனை.

நிகழ்ந்த இவ்வளவு மாற்றங்களையும் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஏற்றுக்கொண்ட நமது சமூகம் பெண்களின் உடை என்று வரும் போது மட்டும் பிந்தைய கலாச்சாரத்தை வலுக்கட்டயாக உள்ளே இழுப்பதன் பின்ணணியில் எவ்வளவு படித்திருந்தாலும் நாங்கள் ஆணாதிக்கத்தின் பிரதிநிதிகளே என்று ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் நிருபிக்கிறார்கள்.

ஆண்பிள்ளைகள் செய்யும் எவ்வளவு பெரிய தப்பையும் சிறிதும் தயக்கமே இல்லாமல் மூடி மறைக்கவே நமது பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அதேசமயம் பெண்பிள்ளைகள் செய்யாத தப்பிற்கும் கேள்வி கேட்கப்படுகிறார்கள். பெண்கள் சம்பந்தபட்ட எல்லாக் குற்றங்களிலும் பெண்களையே குற்றவாளிகளாக்கி அழகு பார்ப்பது தான் கலாச்சாராமா ?

பொதுஇடத்தில் கண்ணியமாக உடை அணிய வேண்டியது ஆண்கள் மற்றும் பெண்களின் பொதுக்கடமை . இதைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு .ஆனால் ,யாருக்கும் முக்கியமாக பெண்களுக்கு இந்த உடை தான் அணியவேண்டும் என்ற எந்தக்கட்டுபாடும் விதிக்க வேண்டியதில்லை. ஆண்கள் எந்த உடை அணிந்தாலும் எப்படி அணிந்தாலும் உடையே அணியாவிட்டாலும் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்பதும் , ஆண்கள் ஆபாசமாக உடை அணிந்தால் பெண்கள் கண்ணை மூடிக்கொண்டு போக வேண்டும் என்பதும் எழுதப்படாத விதி .அதே சமயம் ,பெண்கள் என்று வரும் போது மட்டும் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள் .

ஏன் பெண்களின் உடையை மட்டும் எதிர்க்கிறார்கள் ?

உணவில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும் இன்றும் வீடுகளில் பெண்களே சமைக்கிறார்கள் , இருப்பிடம் மாறினாலும் பெண்களை இருப்பிடங்களை நிர்வகிக்கிறார்கள் , சமய நம்பிக்கைகள் மாறினாலும் பெண்கள் தான் முக்கிய பங்குவகிக்கிறார்கள் இவை அனைத்தும் பெண்கள் வேலைகள் என்று முத்திரையுடன் இன்றுவரை பெண்களாலேயே செய்யப்படுகிறது . ஆனால் ,பெண்கள் பொதுவெளியில் தங்களுக்குச் சரிசமமாக உடை அணிவதை மட்டும் ஆணாதிக்கச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .

அன்று பெண்கள் வீட்டிற்குள் முடங்கிக்கிடந்த வரை உடை ஒரு பெரிய விசயமாக தெரியவில்லை. இன்று நிலமை அப்படியில்லை, பல்வேறு விதமான வேலைகளின் நிமித்தமாக பெண்கள் பொதுவெளியில் அதிக நேரத்தைச் செலவிட வேண்டிய இன்றைய சூழலில் அணிய சவுகரியமில்லாத உடைகளை அணியச்சொல்வதில் எந்தவித நியாயமும் இல்லை . இது அடிப்படை உரிமை சார்ந்த விசயம் .நாகரிக சமூகத்தில் அவரவருக்கு பிடித்தமான உடைகளை அணிவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு .நாம் நாகரிக சமூகமா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். பெண்கள் எப்படி உடை அணிந்தாலும் வெறிக்க வெறிக்க பார்ப்பது தான் ஆண்களின் பொதுக்குணம். அப்படிப் பார்ப்பதன் பின்னாலும் ஒரு நெடிய வரலாறு இருக்கிறது . இப்போது அதுவல்ல பிரச்சனை . சரி , பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் ? எல்லாப் பெண்களையும் சேலை மட்டும் அணியச் சொல்லலாமா ? சேலை சவுகரியமான உடை என்று யாராவது ஒருவர் நிருபித்து விட முடியுமா ? முடியாது .

சேலையை எப்படி அணிந்தாலும் உடல் பகுதி வெளியே தெரியவே செய்யும் . யார் முதலில் இந்த உடையை கண்டுபிடித்தாரோ தெரியவில்லை. " அணிந்துகொண்டிருக்கும் நேரம் முழுவதும் கவனத்தைக் கோரும் ஓர் உடை, புடைவை. இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை இழுத்து இழுத்துவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 'இடுப்பு தெரிகிறதா, உள்ளாடை வெளியே தெரிகிறதா?’ எனச் செய்யும் வேலைகளில் இருந்து கவனம் பிசகிக்கொண்டே இருக்கும். இயல்பாகக் குனியவோ, வேகமாக நடக்கவோ, விரைவாக மாடி ஏறவோ, வண்டி ஓட்டவோ, பேருந்தில் ஏறவோ எதுவும் முடியாது. செல்போன், பர்ஸ் என எதையும் வைத்துக்கொள்ள முடியாது. இறுக்கமான உள்ளாடைகள், அதற்கு மேல் இறுக்கமான பாவாடை, ஜாக்கெட், அதற்கு மேல் வெயிட்டான புடைவை... என நம் காலநிலைக்கு கொஞ்சமும் தொடர்பு இல்லாத இந்த உடையை முதலில் உடுத்தியது யார்? 45 டிகிரி வெயிலில் பேருந்திலும் சமையலறையிலும் சேலை கட்டிக் கொண்டிருப்பது... அனுபவித்தால்தான் தெரியும். " என்று சேலை அணிவதில் இருக்கும் அசவுரியங்களை பட்டியலிடுகிறார், பிரியா தம்பி .உண்மையிலேயே பெண்களுக்கு மிகவும் அவஸ்தையை தரும் ,நம் சூழலுக்கு பொருந்தாத உடை தான், சேலை.இன்னும் எத்தனை நாளைக்குத் தான் கலாச்சார உடை என்று சொல்லியே அவஸ்தையை தரும் சேலையை பெண்களை அணியவைக்கப் போகிறோமோ தெரியவில்லை . வேட்டி எல்லா இடங்களிலும் அணியச் சவுகரியமாக இல்லாததாலேயே ஆண்கள் வேறு உடைகளை அணிகிறார்கள் . ஆண்களின் இந்த உடைக் கலாச்சாரத்தை மீறும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுகிறது . எனக்கெல்லாம் அதிகாரம் இருந்தால் சேலை என்ற உடையையே முற்றிலுமாக தடை செய்து விடுவேன் . அடுத்த நூற்றாண்டில் இந்தியாவில் சேலை இருக்குமா என்பதே சந்தேகம் தான்.

சேலையை விட சுடிதார் , ஜீன்ஸ் போன்றவை சவுகரியமானதாகவும் ,தன்னம்பிக்கை தருவதாகவும் இருப்பதாலேயே பெண்கள் இன்று அவற்றை அதிகம் அணிய ஆரம்பித்து இருக்கிறார்கள் . லெக்கிங்ஸ் அணியும் போது மட்டும் பெண்கள் கண்டிப்பாக கவனம் செலுத்தியே ஆக வேண்டும் . மற்ற உடைகளை விட லெக்கிங்ஸ் நிறைய பெண்களுக்கு பொருந்தாத உடையாகவே இருக்கிறது . இதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும் . அதே சமயம், பெண்கள் லெக்கிங்ஸ் அணியவே கூடாது என்று கட்டளையிட முடியாது .

இயல்பாகவே எப்போதும் எந்த வயதிலும் பெண்கள் ஆண்களால் ரசிக்கப்படுவதையும் , ஆண்கள் பெண்களால் ரசிக்கப்படுவதையும் பெரிதும் விரும்புகிறார்கள் . விதவிதமான ஆடைகளைத் தேடி அணிவதிலும் ,விதவிதமான அலங்காரங்களைச் செய்து கொள்வதற்குப் பின்பும் இந்த ரசிக்கப்படுதல் தான் இருக்கிறது . ஏன் ஒரு பெண் பெண்களால் ரசிக்கப்படுவதையும் , ஒரு ஆண் ஆண்களால் ரசிகப்படுவதையுமே விரும்புகிறார்கள் தானே . மற்றவர்களின் கவனத்தைக் கவர எந்த உடை அணிந்தாலும், ஏன் சேலையே அணிந்தாலும் மற்றவர்களைக் கவர தங்கள் உடல்பகுதி வெளியே தெரியும்படி உடையணியும் பெண்கள் இருக்கிறார்கள் .இவர்கள் மொத்த சதவீதத்தில் எண்ணிக்கையில் மிகவும் குறைவு . ஆண்களிலும் இப்படி நடந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள் தானே .

ஆண்களின் மன வக்கிரம் உச்சத்தை அடையும்போது, அருகே பெண் என்ற உருவில் யார் இருந்தாலும், எந்த உடை அணிந்திருந்தாலும் தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்துகிறார்கள் . இந்த மாதிரி உடை அணிந்ததால் தான் இந்த வன்முறை நிகழ்ந்தது என்று யாராலும் நிரூபிக்க முடியாது .

கலாச்சாரத்தில் நிகழும் தங்களுக்குத் தோதான மாற்றங்கள் குறித்தும் யாரும் கேள்வி கேட்கவில்லை . தனது அதிகாரத்தைத் தக்க வைக்க கலாச்சாரத்தைக் ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள் . ஜாதி , மதம் , பெண் அடிமை போன்ற கூறுகளைத் தக்கவைக்கவே கலாச்சாரத்தை மீண்டும் மீண்டும் கையிலெடுக்கிறார்கள் . ஆண்களே , பெண்களை நோக்கி எந்தக் கேள்வி கேட்பதற்கு முன்பும் உங்களைப் பார்த்து அதே கேள்வியை கேளுங்கள் . பிறகு பெண்களைப் பார்த்துக் கேளுங்கள் . சுதந்திர காற்றை அனுபவிக்கத் தொடங்கியிருக்கும் பெண்கள் , அந்தச் சுதந்திரத்தை அதிகமாக அனுபவிக்கவே விரும்புவார்கள் . அதிலும் கூடுதல் வாய்ப்பு பெற்றுள்ள பெண்ணியவாதிகள் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே அலட்டிக் கொள்வார்கள் . இது இயல்பு தான் .

நண்பர்களே , கலாச்சாரக் காவலர்களே ,ஆணாதிக்கவாதிகளே பெண்கள் அணியும் உடைக்கும் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கும் துளியும் சம்பந்தமில்லை . ஈரான் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட 26 வயது ரேஹானே ஜபாரி (Reyhaneh Jabbari ) என்ன ஆபாசமான உடையா அணிந்திருந்தார் . உடலை முழுதுமாக மறைத்து தானே உடை அணிந்திருந்தார் , அப்புறம் எதற்கு அவரை வன்புணர்ச்சி செய்ய ஒருத்தன் முயன்றான் . அவனை சுய பாதுக்காப்பின் பொருட்டு கொன்றதற்காக ரேஹானேவை கொலைகாரி ஆக்கி தூக்கிலிட்டு கொன்று விட்டோம் . இனியும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு பெண்களையும், அவர்களின் உடைகளையும் காரணமாக்க கலாச்சாரத்த இழுத்தீங்கனா " போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் " என்று தான் சொல்ல வேண்டிவருகிறது .

வரலாறை வைத்துப் பார்க்கும்போது , ஆணாதிக்க தந்தைவழிச் சமூகத்தின் ( பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுதல் ) கூறுகளாகவே பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை குறிப்பிட முடிகிறது .அடுத்து வரும் பெண்ணாதிக்க தாய்வழிச் சமூகத்தில் ( ஆண்கள் அடிமைகளாக நடத்தப்படுதல் ) ஆண்கள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்படலாம் . இன்றைய காலகட்டம் இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கிறது .
avatar
seltoday
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 124
மதிப்பீடுகள் : 50

View user profile http://jselvaraj.blogspot.in/

Back to top Go down


Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by M.M.SENTHIL on Sat Nov 15, 2014 12:28 pm

M.Saranya wrote:நான் நைட்டிக்கும் சுடிதாருக்கும் எதிரியில்லை ஆனால் அந்த நைட்டி மற்றும் சுடிதாரை அணியும் விதத்தில் மற்றும் அணியும் நேரம் , இடம் தெளிந்து அணிய வேண்டும்...

சுதந்திரம் ஆடையில் இல்லை ஆண்கள் மனத்தில் உள்ளது .... புன்னகை புன்னகை புன்னகை
ஏனென்றால் திருமணம் வரை எல்லா பெண்களும் சுதந்திரமாகவே உள்ளனர்...பிறகு...??????????
மேற்கோள் செய்த பதிவு: 1103635

பிறகு????? சுதந்திரமாகத்தான் உள்ளனர் புன்னகை புன்னகை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by ராஜா on Sat Nov 15, 2014 12:33 pm

M.M.SENTHIL wrote:
M.Saranya wrote:நான் நைட்டிக்கும் சுடிதாருக்கும் எதிரியில்லை ஆனால் அந்த நைட்டி மற்றும் சுடிதாரை அணியும் விதத்தில் மற்றும் அணியும் நேரம் , இடம் தெளிந்து அணிய வேண்டும்...

சுதந்திரம் ஆடையில் இல்லை ஆண்கள் மனத்தில் உள்ளது .... புன்னகை புன்னகை புன்னகை
ஏனென்றால் திருமணம் வரை எல்லா பெண்களும் சுதந்திரமாகவே உள்ளனர்...பிறகு...??????????
மேற்கோள் செய்த பதிவு: 1103635

பிறகு????? சுதந்திரமாகத்தான் உள்ளனர் புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103650ஆமாம் புன்னகை பெண்களாவது கல்யாணத்திற்கு பிறகும் சுதந்திரமாக உள்ளனர் , ஆனால் ஆண்கள் கல்யாணத்திற்கு பிறகு அடிமையா ஆகிவிடுகின்றனர் புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by M.M.SENTHIL on Sat Nov 15, 2014 12:37 pm

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:
M.Saranya wrote:நான் நைட்டிக்கும் சுடிதாருக்கும் எதிரியில்லை ஆனால் அந்த நைட்டி மற்றும் சுடிதாரை அணியும் விதத்தில் மற்றும் அணியும் நேரம் , இடம் தெளிந்து அணிய வேண்டும்...

சுதந்திரம் ஆடையில் இல்லை ஆண்கள் மனத்தில் உள்ளது .... புன்னகை புன்னகை புன்னகை
ஏனென்றால் திருமணம் வரை எல்லா பெண்களும் சுதந்திரமாகவே உள்ளனர்...பிறகு...??????????
மேற்கோள் செய்த பதிவு: 1103635

பிறகு????? சுதந்திரமாகத்தான் உள்ளனர் புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103650ஆமாம் புன்னகை பெண்களாவது கல்யாணத்திற்கு பிறகும் சுதந்திரமாக உள்ளனர் , ஆனால் ஆண்கள் கல்யாணத்திற்கு பிறகு அடிமையா ஆகிவிடுகின்றனர் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1103653ஆகா, நம்ம தலையும் நம்மள போலவே பீல் பண்றாரே.... புன்னகை புன்னகை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by ராஜா on Sat Nov 15, 2014 12:47 pm

M.M.SENTHIL wrote:ஆகா, நம்ம தலையும் நம்மள போலவே பீல் பண்றாரே.... புன்னகை புன்னகை
நாலு அடி விழுந்துச்சுன்னா அப்புறம் , தலையும் புரியாது வாலும் புரியாது செந்தில், புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by விமந்தனி on Sat Nov 15, 2014 12:56 pm

seltoday wrote:பத்து வருடம் கடந்த பிறகு இந்த விமந்தனியும்,சரண்யாவும் புடவை குறித்து என்ன சொல்வார்கள் ? புடவையைத் தொடர்ந்து அணிவார்களா ? நைட்டியையும் சுடிதாரையும் கடுமையாக எதிர்த்த பெண்கள் கூட இன்று நைட்டியையும் சுடிதாரையும் "நல்லாத் தானே இருக்கு" னு அணிய ஆரம்பித்து விட்டார்கள். அட எதை வேண்டுமானாலும் சுதந்திரமாக அணியுங்கள் தான் சொல்கிறோம்.

அடக்கடவுளே...! விவாதம் திசைமாறுகிறதே. புடவையின்பால் இருந்த என் கருத்தைத்தானே சொன்னேன்..? அதுவுமில்லாமல் மற்ற உடைகளுக்கு நான் எதிரியும் அல்ல.

உடை அணிதல் அவரவர் விருப்பம். கண்ணியம் காக்கச்செய்யும் உடைகளை அணியச்சொல்வதில் தவறொன்றுமில்லை என்றே நினைக்கிறேன். இங்கு யாரும், யாரையும் இதைத்தான் அணியவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கவில்லையே.

இன்று, 40-45 வயதிற்கு மேற்பட்ட பெண்மணிகள் கூட லெக்கின்ஸ், ஜீன்ஸ், துப்பட்டா கூட இல்லாமல் ஸ்லீவ்லெஸ் டாப்  என்ன கொடுமை சார் இது என்று போட்டுக்கொண்டு சுற்றினால், எதிரில் வருபவர்கள் கண்களையா மூடிக்கொள்வார்கள்? கோபம்

"எனக்கெல்லாம் அதிகாரம் இருந்தால் சேலை என்ற உடையையே முற்றிலுமாக தடை செய்து விடுவேன் . அடுத்த நூற்றாண்டில் இந்தியாவில் சேலை இருக்குமா என்பதே சந்தேகம் தான்." - அந்த அதிகாரம் எனக்கிருந்தால்.... 'திருமணமான பெண்கள் அனைவரும் புடவையை தவிர வேறு எந்த உடையையுமே அணியக்கூடாது' என்று சட்டமே போடுவேன்.

இன்னொரு விஷயம்; 10 வருடங்கள் கழித்தும் இதைத்தான் சொல்வேன்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by விமந்தனி on Sat Nov 15, 2014 1:03 pm

M.M.SENTHIL wrote:
ராஜா wrote:
M.M.SENTHIL wrote:
M.Saranya wrote:நான் நைட்டிக்கும் சுடிதாருக்கும் எதிரியில்லை ஆனால் அந்த நைட்டி மற்றும் சுடிதாரை அணியும் விதத்தில் மற்றும் அணியும் நேரம் , இடம் தெளிந்து  அணிய வேண்டும்...

சுதந்திரம் ஆடையில் இல்லை ஆண்கள் மனத்தில் உள்ளது .... புன்னகை புன்னகை புன்னகை
ஏனென்றால் திருமணம் வரை எல்லா பெண்களும் சுதந்திரமாகவே உள்ளனர்...பிறகு...??????????


பிறகு????? சுதந்திரமாகத்தான் உள்ளனர் புன்னகை புன்னகை
ஆமாம் புன்னகை பெண்களாவது கல்யாணத்திற்கு பிறகும் சுதந்திரமாக உள்ளனர் , ஆனால் ஆண்கள் கல்யாணத்திற்கு பிறகு அடிமையா ஆகிவிடுகின்றனர் புன்னகைஆகா, நம்ம தலையும் நம்மள போலவே பீல் பண்றாரே.... புன்னகை புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது அடிமைகள் இவ்வளவு சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் பீல் பண்ணமாட்டார்கள் தம்பிகளா....


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by ராஜா on Sat Nov 15, 2014 1:10 pm

விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:ஆகா, நம்ம தலையும் நம்மள போலவே பீல் பண்றாரே.... புன்னகை புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது அடிமைகள் இவ்வளவு சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் பீல் பண்ணமாட்டார்கள் தம்பிகளா....
உண்மை தான் எங்களுக்கும் தெரியும் ... என்ன பண்ணுவது இப்படி பீலிங்க்ஸ் காமிக்கலன்னா அப்புறம் இப்ப கிடைக்குற நாலு இட்லி கூட கிடைக்காது என்கிற பயம் தான் காரணம். என்ன நீங்க எங்க வாயை கிளறி எல்லாத்தையும் வாங்கிடுவீங்க போல இருக்குதே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by M.Saranya on Sat Nov 15, 2014 1:12 pm

அந்த அதிகாரம் எனக்கிருந்தால்.... 'திருமணமான பெண்கள் அனைவரும் புடவையை தவிர வேறு எந்த உடையையுமே அணியக்கூடாது' என்று சட்டமே போடுவேன்.

இன்னொரு விஷயம்; 10 வருடங்கள் கழித்தும் இதைத்தான் சொல்வேன்.[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1103664

அருமை அருமை விமந்தனி

நண்பர் இருவருக்கும் ,,,உங்களுக்கு அமைந்திருக்கும் அல்லது அமையப்போகும் பெண் கொடுத்து வைத்தவள்...
நான் கூறிய சுதந்திரம் ஆடை பற்றி இல்லை ... உரிமையில் உள்ளது...தெளிவாக யோசித்து பதில் கூறுங்கள்...
கருத்து சுதந்திரம் பேஷ்புக்கில் உள்ளது பெண்களுக்கு, ஆனால் வீட்டில் ????


avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by M.M.SENTHIL on Sat Nov 15, 2014 1:17 pm

M.Saranya wrote:
அருமை அருமை விமந்தனி

நண்பர் இருவருக்கும் ,,,உங்களுக்கு அமைந்திருக்கும் அல்லது அமையப்போகும் பெண் கொடுத்து வைத்தவள்...
நான் கூறிய சுதந்திரம் ஆடை பற்றி இல்லை ... உரிமையில் உள்ளது...தெளிவாக யோசித்து பதில் கூறுங்கள்...
கருத்து சுதந்திரம் பேஷ்புக்கில் உள்ளது பெண்களுக்கு, ஆனால் வீட்டில் ????


மேற்கோள் செய்த பதிவு: 1103674

அந்த இருவர் யாருங்கோ??


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by seltoday on Sat Nov 15, 2014 1:27 pm

ஒரு பெண் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும்போது நீ நல்லா உடை அணிந்திருந்தா இப்படி எதுவும் நடந்திருக்காது என்று சொல்லவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். புடவை அணிந்த பெண்கள் வன்கொடுமைகளை சந்திப்பதே இல்லையா ? பெண்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு உடை காரணமல்ல என்பதை இங்கு விவாதத்தில் பங்குபெற்ற அனைவரும் ஏற்றுக் கொண்டிருப்பது மகிழ்ச்சி. இந்தக் கட்டுரை எழுதப்பட்டதன் நோக்கமும் இது தான்.

தனிமனித ஆதிக்கத்தைப் பொறுத்தவரை வீடுகளில் ஒரு சமயத்தில் கணவன் ஆதிக்கம் செலுத்துபவராகவும் ,மற்றொரு சமயத்தில் மனைவி ஆதிக்கம் செலுத்துபவராகவும் இருக்கும் குடும்பமே நல்ல குடும்பம். கணவன் மனைவி இருவரில் ஒருவர் மட்டுமே எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் குடும்பம் நல்ல குடும்பமாக இருக்க முடியாது.
avatar
seltoday
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 124
மதிப்பீடுகள் : 50

View user profile http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by விமந்தனி on Sat Nov 15, 2014 1:38 pm

ராஜா wrote:
விமந்தனி wrote:
M.M.SENTHIL wrote:ஆகா, நம்ம தலையும் நம்மள போலவே பீல் பண்றாரே.... புன்னகை புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது அடிமைகள் இவ்வளவு சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் பீல் பண்ணமாட்டார்கள் தம்பிகளா....
உண்மை தான் எங்களுக்கும் தெரியும் ... என்ன பண்ணுவது இப்படி பீலிங்க்ஸ் காமிக்கலன்னா அப்புறம் இப்ப கிடைக்குற நாலு இட்லி கூட கிடைக்காது என்கிற பயம் தான் காரணம். என்ன நீங்க எங்க வாயை கிளறி எல்லாத்தையும் வாங்கிடுவீங்க போல இருக்குதே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை  
பின்ன ஓவர் ஆக்ட் கொடுத்தா...? தியேட்டர் ஸ்க்ரீனே கிழிஞ்சு போச்சு பாருங்க. தைச்சு வையுங்க. அடுத்தமுறை உதவும். ஜாலி ஜாலி ஜாலி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by M.M.SENTHIL on Sat Nov 15, 2014 1:42 pm

seltoday wrote:ஒரு பெண் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும்போது நீ நல்லா உடை அணிந்திருந்தா இப்படி எதுவும் நடந்திருக்காது என்று சொல்லவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். புடவை அணிந்த பெண்கள் வன்கொடுமைகளை சந்திப்பதே இல்லையா ? பெண்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு உடை காரணமல்ல என்பதை இங்கு விவாதத்தில் பங்குபெற்ற அனைவரும் ஏற்றுக் கொண்டிருப்பது மகிழ்ச்சி. இந்தக் கட்டுரை எழுதப்பட்டதன் நோக்கமும் இது தான்.

தனிமனித ஆதிக்கத்தைப் பொறுத்தவரை வீடுகளில் ஒரு சமயத்தில் கணவன் ஆதிக்கம் செலுத்துபவராகவும் ,மற்றொரு சமயத்தில் மனைவி ஆதிக்கம் செலுத்துபவராகவும் இருக்கும் குடும்பமே நல்ல குடும்பம். கணவன் மனைவி இருவரில் ஒருவர் மட்டுமே எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் குடும்பம் நல்ல குடும்பமாக இருக்க முடியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1103685

உடை காரணமல்ல, ஆனாலும் இந்த புடவை உங்களிடம் மாட்டிக்கிட்டு படுற பாடு இருக்கே பாவங்க அது...

கடைசியா செல் டுடே உங்களுக்கு ஒன்னு சொல்ல ஆசைப்படுறேன், விவாதம் செய்யும் முன் நீங்கள் பதிந்த விஷயத்தை எங்கிருந்து எடுத்தீர்கள் என சொல்லி விடுங்கள்...

மேலும், புடவையே ஆகாது என்ற ரீதியில் கட்டுரை சென்றதும், விமன்தனி அக்காவையும், தோழி சரண்யா அவர்களையும் நீங்கள் கேட்ட கேள்வி மிக தவறு....


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by விமந்தனி on Sat Nov 15, 2014 1:44 pm

seltoday wrote: கணவன் மனைவி இருவரில் ஒருவர் மட்டுமே எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் குடும்பம் நல்ல குடும்பமாக இருக்க முடியாது.
சூப்பருங்க


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by ராஜா on Sat Nov 15, 2014 2:03 pm

அலோ.... செந்தில் மற்றும் என்னுடைய பின்னூட்டங்கள் , நாங்கள் அப்பப்ப இது போல நகைச்சுவைக்காக போடும் பதிவுகள் அது...

seltoday wrote:தனிமனித ஆதிக்கத்தைப் பொறுத்தவரை வீடுகளில் ஒரு சமயத்தில் கணவன் ஆதிக்கம் செலுத்துபவராகவும் ,மற்றொரு சமயத்தில் மனைவி ஆதிக்கம் செலுத்துபவராகவும் இருக்கும் குடும்பமே நல்ல குடும்பம். கணவன் மனைவி இருவரில் ஒருவர் மட்டுமே எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் குடும்பம் நல்ல குடும்பமாக இருக்க முடியாது.
ஆனால் இந்த உங்கள் கருத்து உங்கள் கட்டுரையின் நோக்கத்தையே கேலிக்குரியது ஆக்குகிறதே.

shift முறையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு குடும்பம் ஒன்றும் தொழிற்சாலை அல்ல.. இங்கு ஆதிக்கம் என்ற வார்த்தையே தவறு. இருவருமே விட்டுகொடுத்து செல்லவேண்டும் அது தான் குடும்பம் அதை விட்டுவிட்டு நீ இன்று ஆதிக்கம் செய் நாள் நாளை அதுபோலவே செய்வேன் என்பதல்ல நல்ல குடும்பம்.உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by M.M.SENTHIL on Sat Nov 15, 2014 2:08 pm

ராஜா wrote:அலோ.... செந்தில் மற்றும் என்னுடைய பின்னூட்டங்கள் , நாங்கள் அப்பப்ப இது போல நகைச்சுவைக்காக போடும் பதிவுகள் அது...

seltoday wrote:தனிமனித ஆதிக்கத்தைப் பொறுத்தவரை வீடுகளில் ஒரு சமயத்தில் கணவன் ஆதிக்கம் செலுத்துபவராகவும் ,மற்றொரு சமயத்தில் மனைவி ஆதிக்கம் செலுத்துபவராகவும் இருக்கும் குடும்பமே நல்ல குடும்பம். கணவன் மனைவி இருவரில் ஒருவர் மட்டுமே எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் குடும்பம் நல்ல குடும்பமாக இருக்க முடியாது.
ஆனால் இந்த உங்கள் கருத்து உங்கள் கட்டுரையின் நோக்கத்தையே கேலிக்குரியது ஆக்குகிறதே.

shift முறையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு குடும்பம் ஒன்றும் தொழிற்சாலை அல்ல.. இங்கு ஆதிக்கம் என்ற வார்த்தையே தவறு. இருவருமே விட்டுகொடுத்து செல்லவேண்டும் அது தான் குடும்பம் அதை விட்டுவிட்டு நீ இன்று ஆதிக்கம் செய் நாள் நாளை அதுபோலவே செய்வேன் என்பதல்ல நல்ல குடும்பம்.

மேற்கோள் செய்த பதிவு: 1103698

மிக சரியாக சொல்லியுள்ளீர்கள் தல.. இதென்ன பஞ்சு மில்லா, நீ ஒரு டைம் சூப்பர்வைசர், நான் ஒரு டைம் சூப்பர்வைசர்னு சொல்லிக்கிட்டு திரிய...

குடும்பங்க, குடும்பம்....

மனைவி பாய்ந்தா கணவன் பதுங்கனும், கணவன் பாய்ஞ்சா மனைவி பம்மனும்... இப்படி போனாத்தான் பொழப்பு ஓடும், இல்லைன்னா சிரிப்பா சிரிக்கும்....


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by M.Saranya on Sat Nov 15, 2014 2:43 pm


குடும்பங்க, குடும்பம்....

மனைவி பாய்ந்தா கணவன் பதுங்கனும், கணவன் பாய்ஞ்சா மனைவி பம்மனும்... இப்படி போனாத்தான் பொழப்பு ஓடும், இல்லைன்னா சிரிப்பா சிரிக்கும்....[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1103700

அருமை நண்பரே !!!
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by T.N.Balasubramanian on Sat Nov 15, 2014 2:59 pm

"seltoday " நேற்று இரவு நீங்கள் ஆரம்பித்த திரி "seltomorrow " என்பது போல் இன்றும் விறுவிறுப்பாக , அதிகம் பேர் பங்கு கொண்டு ,வீர நடை போடுகிறது .
உங்களை புதியவர் என்று கூறமுடியாது . கிட்டத்தட்ட 17 மாதங்கள் ,உறுப்பினராக இருந்து ,பதிவுகள் இட்டு வருகிறீர்கள் .
இருப்பினும் , அறிமுகப்பகுதியில் , உங்கள் விவரங்கள் இல்லை .
அறிமுகப்பகுதி சென்று ,அறிமுகம் செய்து கொள்ளுங்கள் .
ஈகரையின் விதிமுறைகளை படித்து ,அதை பின்பற்றுங்கள் .
நீங்கள் பதிவிடும் ,கட்டுரையோ கவிதையோ ,மற்ற பத்திரிகையில் இருந்து எடுத்து இருந்தால் ,
கட்டுரை முடிவில் ,அந்த பத்திரிகைக்கோ , மூல ஆசிரியருக்கோ ஒரு நன்றி சொல்லுங்கள் .
அடிப்படை மரியாதை கூறுவது ஈகரைசார்    அன்பர்கள் கடைப்பிடிக்கும் நாகரீகம்.
அதை நீங்களும் கடைப்பிடிக்கவேண்டும் . இப்போதைய பதிவு , உங்களுடையதா ,வேறு எதிலாவதில் இருந்து எடுத்ததா என்று இன்னும் நீங்கள் தெளிவுபடுத்த வில்லை . தெளிவு படுத்தவும் .
உங்களுக்கு , உங்கள் கருத்தை கூற முழு சுதந்திரம் உண்டு.,, என்பதால் மற்றவர் மனம் நோகும்படி பதிவுகள் இடாதீர்கள் . 
பதிவுகளை மறு பரிசீலனை செய்யவும் /திருத்தவும் /நீக்கவும் நிர்வாகத்திற்கு அதிகாரம் உண்டு .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20564
மதிப்பீடுகள் : 7914

View user profile

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by seltoday on Sat Nov 15, 2014 3:06 pm

செந்தில் அவர்களே இது எனது சொந்தக் கட்டுரை. நானொரு வலைப்பதிவர். எனது வலைப்பூ முகவரி www.jselvaraj.blogspot.in.

ஜேசுதாஸ் சொன்ன கருத்தும் விகடனில் பிரியா தம்பி எழுதிய கட்டுரையும் தான் இந்தக் கட்டுரை எழுதத் தூண்டியது.

பிரியா தம்பியின் கட்டுரை :
பேசாத பேச்சல்லாம்.
என் மகளுக்கு நான்கு வயது ஆகும் வரை அவளுக்கு நான்தான் ஆடைகளைத் தேர்வு செய்தேன். 'என் டிரெஸ்ஸை நான்தான் வாங்குவேன்’ என்று ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை எடுத்துக்கொண்டபோது, அவள் அதிகம் விரும்பியது சுடிதார். 'குழந்தைகளுக்குக் கொஞ்சமும் வசதி இல்லாத உடை அது’ என நான் மறுத்தபோதும், அவள் அடம்பிடித்து அதைத்தான் வாங்கினாள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு, வீட்டில் ஒரு பள்ளிக்கூடம் நடத்துவாள். அதில் அவள் டீச்சர்; நான் மாணவி. (அவளைப் பள்ளிக்கு அனுப்பி, கை வலிக்க எழுதவைக்கும் மொத்த பாவத்துக்கும் கணக்குத் தீர்க்கும் நேரம் அது. ''அ’கூட எழுதத் தெரியலை, என்ன பொண்ணு நீ?’ என, என்னை அடி வெளுத்துவிடுவாள்!) டீச்சர் என்றால் புடைவைதானே அணிய வேண்டும். கௌன் அல்லது சுடிதார் மேல் துப்பட்டாவை புடைவை கணக்காகச் சுற்றி அணிந்திருக்கும்போது, பீன்ஸ், கேரட் என எதையாவது நறுக்கி தண்ணீர் ஊற்றிச் சமைத்துக்கொண்டிருப்பாள். அவளை அப்போது பார்த்தால், சீரியல் குடும்பத் தலைவியின் மினியேச்சர் போலவே இருக்கும்.

ஆனால், நான்கு வயது சுடிதார் ஆசை, இப்போது ஆறு வயதில் அவளிடம் இல்லை. குட்டி டிரௌசர், எளிதான கௌன் என, தனக்கு வசதியான ஆடைகளை அணிகிறாள். துப்பட்டாவைச் சுற்றிக் கட்டிக்கொண்டு பொம்மைகளைத் தூங்கவைத்து, தன்னை அம்மாவாக நினைத்து விளையாடுவதை நிறுத்திவிட்டாள். இப்போது அவளது ஆடைகளைப்போலவே, அவளது சிந்தனைகளும் சுதந்திரமானவை. 'பெருசா வளர்ந்ததும் டிஸ்கவரி சேனல்ல வர்ற மாதிரி காடு எல்லாம் சுத்துவேன்; ஹெல்மெட் போட்டு பைக்ல போயிட்டே இருப்பேன்; அப்படியே ஃப்ளைட் ஓட்டிட்டே போயிட்டு 10 வருஷம் கழிச்சுதான் உன்னைப் பார்க்கத் திரும்பி வருவேன்; பெரிய கேமரா, பெரிய பெரிய லென்ஸ் வாங்கி புலி, சிங்கம் எல்லாத்தையும் பக்கத்துல போயிப் படம் எடுப்பேன்!’ என ஏதேதோ சொல்கிறாள். ஒரு குட்டி டிரௌசர் போட்டிருக்கும் ஒரு குட்டிப் பெண்ணின் கனவுகளாக இருக்கின்றன இவை. ஒரு குட்டிப் புடைவையை அணியும்போது ஏன் இவள் பீன்ஸ் நறுக்கி, பிள்ளை வளர்க்கிறாள்... அல்லது பாடம் எடுக்கிறாள் என தானாகவே யோசனை எழுந்தது. வெவ்வேறு வளையங்களுக்குள் சிந்தனை சிக்கி மீளும்போது, 'சர்வ நிச்சயமாக நம் உடைக்கும், நம் எண்ணத்துக்கும் தொடர்பு இருக்கிறது’ என்பது புரிகிறது!

கடந்த 10, 20 வருடங்களில் பெண்களின் உடைகள் கண்டுள்ள மாற்றங்கள்... ஆச்சர்யத்தின் உச்சம்! '40 வயசுல பார்டர் வெச்ச ப்ளவுஸா?’ என்று அலறிய அத்தைகள், இப்போது சுடிதாரையும் நைட்டியையும் இயல்பாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். மருத்துவ வசதிக்காக நைட்டியைத் தயக்கத்தோடு அணிந்த பாட்டிகள்கூட, 'ஃப்ரீயா நல்லாத்தானே இருக்கு’ என வீட்டிலும் தொடர்கிறார்கள். புடைவை என்பது, திருமணம், கோயில் செல்லும்போது அணியும் உடை என்பதாகச் சுருங்கிவிட்டது. 'தாவணியும் புடைவையும் கட்டினாத்தான், பெண்கள் அழகுப்பா. இப்ப ஃபேஷன்னு குக்கிராமத்துலகூட புடைவையைக் காணோம்’ எனச் சலித்துக்கொள்பவர்கள், அதன் வசதிக் குறைவு பற்றி கொஞ்சமேனும் அறிவார்களா?

அணிந்துகொண்டிருக்கும் நேரம் முழுவதும் கவனத்தைக் கோரும் ஓர் உடை, புடைவை. இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை இழுத்து இழுத்துவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 'இடுப்பு தெரிகிறதா, உள்ளாடை வெளியே தெரிகிறதா?’ எனச் செய்யும் வேலைகளில் இருந்து கவனம் பிசகிக்கொண்டே இருக்கும். இயல்பாகக் குனியவோ, வேகமாக நடக்கவோ, விரைவாக மாடி ஏறவோ, வண்டி ஓட்டவோ, பேருந்தில் ஏறவோ எதுவும் முடியாது. செல்போன், பர்ஸ் என எதையும் வைத்துக்கொள்ள முடியாது. இறுக்கமான உள்ளாடைகள், அதற்கு மேல் இறுக்கமான பாவாடை, ஜாக்கெட், அதற்கு மேல் வெயிட்டான புடைவை... என நம் காலநிலைக்கு கொஞ்சமும் தொடர்பு இல்லாத இந்த உடையை முதலில் உடுத்தியது யார்? அலுவலகங்களில் புடைவையோடு ரெஸ்ட் ரூம் பயன்படுத்துவதோ, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை நாப்கின் சோதிப்பதோ மகா கொடுமையான அனுபவம். புடைவை கொஞ்சம் ஈரமாகிவிட்டால், அது காயும் வரை ரெஸ்ட் ரூம் வாசலிலேயே காத்துக்கிடக்க வேண்டும்.

எல்லா தொல்லைகளையும் தாண்டி, இன்னும் ஏன் பெண்கள் புடைவை அணிகிறார்கள் என்று கேட்டால், 'புடைவையில்தான் பொண்ணுங்க அழகு’ என்ற பொய்யை அவர்கள் மண்டைக்குள் ஆணி அடித்து ஏற்றியிருக்கிறார்கள். சிலருக்கு அது 'கலாசாரம்’ என்கிற ஆணி. 'கௌதம் மேனன் படத்துல த்ரிஷா, சமந்தா எல்லாம் புடைவையில்தானே அழகா இருக்காங்க!’ என்று கேட்டால், அவர்கள் அப்படி கேமராவுக்கு நடந்து காண்பித்துவிட்டு, கழட்டிப் போட்டுவிடுவார்கள். 45 டிகிரி வெயிலில் பேருந்திலும் சமையலறையிலும் சேலை கட்டிக் கொண்டிருப்பது... அனுபவித்தால்தான் தெரியும்.

உண்மையில் நமக்கு வசதியான உடையில்தான் நாம் அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கிறோம். 'தலை நிமிர்ந்து நடக்கும் ஆணின் அடையாளம் வேட்டிகள்’ போன்ற விளம்பர வாசகங்களில் பெண்களைப் பொருத்த வேண்டுமென்றால், யோசிக்கவே யோசிக்காமல் அந்தப் பெருமையை ஜீன்ஸுக்கு கொடுத்துவிடலாம். ஜீன்ஸ் பேன்ட் தருகிற கம்பீரத்தை, வேறு எந்த உடையும் தருவது இல்லை. புடைவை கட்டிக்கொண்டு வீட்டு வாசலில் இறங்கினால், ஒரு கிலோமீட்டருக்கு மேல் போக இயலாது. கோயிலுக்கோ, மார்க்கெட்டுக்கோ போய்விட்டுத் திரும்பிவிட வேண்டியதுதான். பத்தாதற்கு, 'அவரை பைக்ல டிராப் பண்ணச் சொல்லலாமே’ என கணவன் சார்பு எண்ணமும் வந்துவிடும். சுடிதார் கொஞ்சம் பரவாயில்லை. 'அவர் வரும்போது வரட்டும். அப்படியே கோயில் போயிட்டு, மார்க்கெட் போயிட்டு, கொஞ்சம் பார்க்ல வாக்கிங் போயிட்டு வரலாம்’ என பயணத்தை நீளச் செய்யும். பூங்காவில் நடைபோடும்போதே, 'கண் புருவத்தை ட்ரிம் பண்ணா என்ன?’ என பார்லரை நோக்கித் தயக்கமின்றி நடைபோடலாம். புடைவை கொடுக்கும் 'குடும்ப குத்துவிளக்கு’ இமேஜை சுடிதார் கொஞ்சம் ஓவர்டேக் செய்து, 'குடும்பத்தை எப்பவும்தான் யோசிக்கிற... உன்னையும் கொஞ்சம் யோசியேன்’ என்ற சிந்தனையைத் தூண்டும்.

ஜீன்ஸ் அணிந்ததுமே, அசாத்திய நம்பிக்கை ஒன்று சட்டென மனதில் பிரவாகம் எடுக்கும். தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கச் சொன்னால்கூட செய்யத் தோன்றும். நடக்கும்போது கால்களை ஒவ்வோர் அடி இன்னும் கொஞ்சம் அகலமாக எடுத்து வைக்கலாம். ஓடலாம், ஆடலாம், பாடலாம், மலை ஏறலாம், பைக் ஓட்டலாம்... என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

உடையோடு சேர்த்து நாம் சில விதிகளையும் சேர்த்தே அணிகிறோம். ''லவ்’ கெட்ட வார்த்தையாச்சே... எங்கப்பா திட்டுவார். நான் வேணா கேட்டுச் சொல்லவா?’ என 'சேது’ பட பாவாடை-தாவணி அபிதா போல், ஜீன்ஸ் அணிந்திருக்கும் ஒரு பெண்ணால் பேசவே முடியாது. தாவணி அணிந்ததும் வெட்கப்பட்டே ஆக வேண்டும்; புடைவை அணிந்தால் பூ வைத்து மெதுவாக நடக்க வேண்டும். ஆனால், ஜீன்ஸ் அணிந்தால் வெட்கம், பயம் இருக்காது என்ற விதிகள் உடலை ஆட்டுவிக்கும். அதற்கு ஏற்ப ஜீன்ஸ் அணியும் பெண்களையும் 'அராத்துகள்’ என்றே எதிர்கொள்கிறார்கள் இங்கே.

பொது இடங்களில் எவனாவது சீண்டினால், 'டேய் என்னடா... என்னா நினைச்சிட்டு இருக்க?’ என ஜீன்ஸ் அணிந்திருக்கும்போது கிளம்பும் அதட்டல் துணிச்சலை, ஏனோ தாவணி தரவே தராது. உடனே, 'பீச்ல மீன்காரம்மா பிலுபிலுனு சண்டை போடுறாங்க. அவங்க என்ன ஜீன்ஸா போட்டிருக்காங்க? புடைவைதானே கட்டியிருக்காங்க!’ என்று குதர்க்கமாகக் கேட்பார்கள் சிலர். நடைபாதைகளில் வியாபாரம் செய்யும் பெண்கள் இழுத்துச் செருகியபடி, எங்கேயாவது எதாவது தெரிகிறதா என்கிற கவலையின்றி குனிந்தும், நிமிர்ந்தும், கூடையைத் தூக்கியும் வேலை செய்யவேண்டியவர்கள். அது அவர்கள் தொழில் சார்ந்த இயல்போடு தொடர்பு உடையது. (அவர்களையும் வெறிக்க வெறிக்கப் பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!) அதை எல்லாப் பெண்களுக்குமான குணாதிசயமாகப் பொருத்திவிட முடியாது. புடைவை கட்டும் பெண்கள் பொதுவாகவே வெளியில் கிளம்பிச் செல்லக்கூட யோசிப்பார்கள். 'கிளம்பணுமே...’ என்று யோசித்தாலே, அது ஒரு பெரிய ஏற்பாடாகத் தெரியும். சுடிதாரோ, ஜீன்ஸோ அப்படியல்ல... 'ஜல்தி’யாக ஒரே நிமிடத்தில் கிளம்பிவிடலாம்.

'அட, ஜீன்ஸ், சுடிதார்னு எது வேணும்னாலும் போட்டுக்கங்க. ஆனா, லெக்கிங்ஸ்னு ஒண்ணு போடுறீங்களே... அதைத்தான் தாங்கிக்க முடியலை’ என்கிற ஆதங்கக் குரல்கள் எங்களுக்கும் கேட்கத்தான் செய்கின்றன. 'யானைகள் லெக்கிங்ஸ் போடுவதைப் பார்த்த முதல் தலைமுறை நாம்’ என்ற கமென்ட் வாசித்ததும், கோபம் வருவது உண்மைதான். பொய்யைவிட உண்மை சுடத்தான் செய்யும் என்பதும் புரிகிறது. ஆனால், சுய ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாதவர்களாகத்தான் இங்கே பெரும்பாலான பெண்கள் இருக்கிறார்கள். குழந்தையை, கணவன் பராமரிப்பில் விட்டுவிட்டு தினமும் ஜிம்முக்குச் செல்லும் வாய்ப்பு எல்லா பெண்களுக்கும் வாய்க்கிறதா என்ன?

லெக்கிங்ஸ், ஒல்லியான பெண்கள் அணிய வேண்டியது. குண்டான பெண்கள் அணிந்தால் பார்க்க அத்தனை அழகாக இல்லை என்பதைவிட, அணிபவர்களுக்கும் அது வசதியாகவே இல்லை. வசதிக்கான உடையைவிட்டு, 'நாகரிகமாக இருக்கிறேன்’ என்ற பெயரில், தனக்குப் பொருந்தாத புது ஃபேஷன் ஆடைகள் அணியும் பெண்களை, 'இதில்தான் அழகாக இருக்கிறோம்’ என்ற நினைப்பிலேயே புடைவையோடு போராடும் பெண்களோடு சேர்த்துவிடலாம்.

தங்களுக்கு வசதியான, நம்பிக்கையான உடை என்பதைத் தாண்டி, தன்னை எக்ஸ்போஸ் செய்யும் வகையில் உடை அணியும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தன் ஆளுமையின் மீது நம்பிக்கையற்றவர்கள். வெளித்தோற்றத்தின் மூலமே பிறரை ஈர்க்க முடியும் என நம்புகிறவர்கள். தன் மீது நேசம் இல்லாதவர்கள். மார்டன் உடை அணியும் பெண்களில் மட்டுமல்ல, புடைவை கட்டும் பெண்களிலும் அவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால், ஒரு பெண் இப்படி இப்படியெல்லாம் உடை அணிவதால்தான் அவர்கள் உடல் மீது வன்முறை நடக்கிறது என்ற குற்றச்சாட்டில் மட்டும் ஒரு சதவிகிதம்கூட உண்மை இல்லை. ஏனெனில், அதிக அளவில் சிறு குழந்தைகள் மீதும், பள்ளி மாணவிகள் மீதும், ஆபத்து இல்லாத உடை என்று சொல்லப்படும் புடைவை, சுடிதார் அணிபவர்கள் மீதும்தான் வன்முறைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பிடத்தக்க அளவில் பாட்டிகள் மீதும்!

மன வக்கிரம் உச்சத்தை அடையும்போது, அருகே பெண் என்ற உருவில் யார் இருந்தாலும் எல்லை மீறுகிறார்கள். அவள் குழந்தையா, கிழவியா, என்ன உடை அணிந்திருக்கிறாள் என்பதெல்லாம் பலாத்காரப் பேர்வழிகளுக்கு ஒரு பொருட்டே அல்ல. பல பேருந்து நிலையங்களில் வயிற்றைத் தள்ளிக்கொண்டு அலையும் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள், இதற்கு ஆகச் சிறந்த உதாரணம்!

பெண்களின் உடை மாற்றத்தில் இன்னுமொரு சுவாரஸ்யம்... புடைவையில் இருந்து சுடிதாரோ, சுடிதாரில் இருந்து ஜீன்ஸோ, தன் குடும்பப் பெண்கள் மார்டன் டிரெஸ் அணிவதை ஆண்கள் எப்போதும் கைதட்டி வரவேற்கிறார்கள். ஊர்ப்புறங்களில் 'புடைவைதான் கட்டுவேன்’ என அடம்பிடித்த பெண்கூட, திருமணத்துக்குப் பிறகு கணவனுக்காக சுடிதாருக்குள் புகுந்துகொள்வாள். வசதியான உடை தரும் சௌகரியத்தை உணர்ந்த ஆண்கள், அந்தச் சௌகரியத்தை பெண்களுக்கும் தரத் தயாராகவே இருக்கிறார்கள். சமூகத்தைவிட, முதலில் வீடுகளுக்குள் அனுமதி கிடைப்பதே பெண்களுக்குப் பெரிய விஷயம்.

புடைவையைச் சரியான உடை என நம்ப வைப்பதில், மெகா சீரியல்களுக்கு அசாத்தியப் பங்கு இருக்கிறது. பல சீரியல்கள் அதில் அணியப்படும் புடைவைகளுக்காகவே விரும்பிப் பார்க்கப்படுகின்றன. சீரியலில் அன்பான அம்மா, அன்பான அண்ணிகள் எல்லாம் புடைவை கட்டி பூ வைத்திருப்பார்கள். இவர்கள் கதாநாயகிகள். பொட்டு வைக்காத, சொந்தமாகத் தொழில் செய்கிற, மார்டன் உடை அணிந்த பெண்கள் வில்லிகள். இவர்கள் ஜீன்ஸ், லெக்கிங்ஸ் எல்லாம் அணிந்திருப்பார்கள். சீரியல் ஹீரோயின்கள், வாழ்க்கையில் ஓட விரும்பும் தூரத்துக்கு நிச்சயம் புடைவையில் ஓடினால் வழுக்கித்தான் விழ வேண்டும்!

டி.வி விளம்பரங்களில் புடைவை கட்டிக்கொண்டு கலைந்த தலையோடு துணி துவைத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணையும், ஜீன்ஸ் குர்தாவோடு கேமராவைத் தூக்கிக்கொண்டு மலையில் ஓடும் பெண்ணையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். கலைந்த தலையோடு சோர்வைத் தொடர்வதும், புத்துணர்ச்சியோடு ஓடத் தொடங்குவதும் நம் தேர்வில்தான் இருக்கிறது தோழிகளே!

நன்றி பிரியா தம்பி.
avatar
seltoday
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 124
மதிப்பீடுகள் : 50

View user profile http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by seltoday on Sat Nov 15, 2014 3:09 pm

ரமணியன் சார் இது எனது சொந்த கட்டுரை தான். பதிவர் விவரங்களை சரிபார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி.
avatar
seltoday
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 124
மதிப்பீடுகள் : 50

View user profile http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by M.M.SENTHIL on Sat Nov 15, 2014 3:42 pm

seltoday wrote:செந்தில் அவர்களே இது எனது சொந்தக் கட்டுரை. நானொரு வலைப்பதிவர். எனது வலைப்பூ முகவரி www.jselvaraj.blogspot.in.

மேற்கோள் செய்த பதிவு: 1103725

சொந்தக் கருத்துகளை பதிவிட உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு... இருப்பினும் அந்த கருத்து மற்றவர்களை ஒருபோதும் புண் படுத்த கூடாது, என்பதே என் வாதம்... மற்றபடி நான் யாருக்கும் எதிரி இல்லை.... மாடர்ன் துணிகளுக்கும் சேர்த்துதான் சொல்றேன்......


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by T.N.Balasubramanian on Sat Nov 15, 2014 3:55 pm

தொடர்ந்து பதிவிடுங்கள் செல்வராஜ் அவர்களே !
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20564
மதிப்பீடுகள் : 7914

View user profile

Back to top Go down

Re: போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

Post by ஜாஹீதாபானு on Sat Nov 15, 2014 3:56 pm

T.N.Balasubramanian wrote:"seltoday " நேற்று இரவு நீங்கள் ஆரம்பித்த திரி "seltomorrow " என்பது போல் இன்றும் விறுவிறுப்பாக , அதிகம் பேர் பங்கு கொண்டு ,வீர நடை போடுகிறது .
உங்களை புதியவர் என்று கூறமுடியாது . கிட்டத்தட்ட 17 மாதங்கள் ,உறுப்பினராக இருந்து ,பதிவுகள் இட்டு வருகிறீர்கள் .
இருப்பினும் , அறிமுகப்பகுதியில் , உங்கள் விவரங்கள் இல்லை .
அறிமுகப்பகுதி சென்று ,அறிமுகம் செய்து கொள்ளுங்கள் .
ஈகரையின் விதிமுறைகளை படித்து ,அதை பின்பற்றுங்கள் .
நீங்கள் பதிவிடும் ,கட்டுரையோ கவிதையோ ,மற்ற பத்திரிகையில் இருந்து எடுத்து இருந்தால் ,
கட்டுரை முடிவில் ,அந்த பத்திரிகைக்கோ , மூல ஆசிரியருக்கோ ஒரு நன்றி சொல்லுங்கள் .
அடிப்படை மரியாதை கூறுவது ஈகரைசார்    அன்பர்கள் கடைப்பிடிக்கும் நாகரீகம்.
அதை நீங்களும் கடைப்பிடிக்கவேண்டும் . இப்போதைய பதிவு , உங்களுடையதா ,வேறு எதிலாவதில் இருந்து எடுத்ததா என்று இன்னும் நீங்கள் தெளிவுபடுத்த வில்லை . தெளிவு படுத்தவும் .
உங்களுக்கு , உங்கள் கருத்தை கூற முழு சுதந்திரம் உண்டு.,, என்பதால் மற்றவர் மனம் நோகும்படி பதிவுகள் இடாதீர்கள் . 
பதிவுகளை மறு பரிசீலனை செய்யவும் /திருத்தவும் /நீக்கவும் நிர்வாகத்திற்கு அதிகாரம் உண்டு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1103722

சூப்பருங்கavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29946
மதிப்பீடுகள் : 6929

View user profile

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum