ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 krishnanramadurai

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 ayyasamy ram

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 ayyasamy ram

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

View previous topic View next topic Go down

புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

Post by ராஜா on Sat Nov 15, 2014 2:45 pm

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பாவது:–

சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ‘அன்பு முத்தம்’ என்ற பெயரில் போராட்டம் நடத்திய மாணவ, மாணவியர் ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளனர். அன்பை பரிமாறிக் கொள்வதற்கான சுதந்திரம் என்ற பெயரில் மாணவ, மாணவிகள் அரங்கேற்றியுள்ள செயல் அதிர்ச்சியளித்தது மட்டுமின்றி, கலாச்சாரத்தின் எதிர்காலம் குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக் கோட்டில் தேனீர் விடுதி ஒன்றில் சில இளைஞர்களும், இளம்பெண்களும் முத்தமிடுவதை அங்குள்ள சில அமைப்புகள் கண்டித்தன. கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டவர்களை அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அடித்து விரட்டியுள்ளனர்.

பொது இடங்களில் முத்தம் கொடுப்பதைத் தடுப்பது தங்களின் சுதந்திரத்தில் தலையிடும் செயல் என்று கூறிக் கொண்டு கேரளத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அன்பு முத்தம் என்ற பெயரில் பொது இடங்களில் கூடி கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் போராட்டம் நடத்திவருகின்றனர். மற்ற மாநிலங்களுக்கும் பரவிய இப்போராட்டம் இப்போது தமிழகத்திலும் தலையை நுழைத்துள்ளது. சுதந்திரம் எது?, பாதுகாப்பு எது? என்பதை அறியாமலேயே ‘சுதந்திரத்தை பாதுகாக்கிறோம்’ என்ற பெயரில் இப்படி ஒரு போராட்டத்தை நடத்திய மாணவ, மாணவியரின் அறியாமையை நினைத்து பரிதாபம் தான் ஏற்படுகிறது.

சென்னை ஐ.ஐ.டியில் நடத்தப்பட்ட இப்படிப்பட்ட போராட்டத்தை ஐ.ஐ.டி. நிர்வாகமும், காவல்துறையும் எப்படி அனுமதித்தன? என்பது தெரியவில்லை. கலாச்சாரத்தை சீரழிக்கும் இது போன்ற போராட்டங்களும், அதற்கு துணைபோகும் வகையிலான அரசு அமைப்புகளின் செயல்பாடுகளும் கண்டிக்கத்தக்கவை.

கேரளத்தில் பொது இடத்தில் முத்தம் கொடுத்துக் கொண்டவர்கள் மீது வன்முறை ஏவப்பட்டதை வேண்டுமானால் தவறு என்று கூறலாம். அதே நேரத்தில் இத்தகைய கலாச்சார சீரழிவுகளை சரி என்று கூறி நியாயப்படுத்துவதோ, இதைக் கண்டிப்பதை தவறு என்று விமர்சிப்பதோ ஏற்றுக்கொள்ள முடியாதது.

பொது இடங்களில் முத்தம் கொடுப்பதை குற்றமென சொல்ல முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக அன்பு முத்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் 294(ஏ) பிரிவின்படி மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் செய்யப்படும் எந்தவிதமான ஆபாச செயலும் 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அளிக்கும் அளவுக்கான குற்றம் ஆகும்.

ஆபாச செயல் என்பதற்கான வரையறை இந்திய தண்டனைச் சட்டத்தில் தெளிவாக இல்லாததால் தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்ததே தவிர, பொது இடங்களில் முத்தம் கொடுப்பதை அனுமதிக்கவோ, ஊக்குவிக்கவோ இல்லை. ஒருவேளை சட்டப்படி இது சரியாக இருந்தால் கூட கலாச்சாரப்படி தவறான இச்செயல்களை அனுமதிக்கக் கூடாது.

பொது இடங்களில் குப்பை போடுவது குற்றம்; பொது இடங்களில் எச்சில் துப்புவது குற்றம் என்று சட்டமும், சான்றோர்களும் கூறுகின்றனர். அவ்வாறு இருக்கும் போது அவற்றைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ‘பொது இடங்களில் கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் செயலை’ எவ்வகையில் அனுமதிக்க முடியும் என்று தெரியவில்லை. சென்னை ஐ.ஐ.டி.யில் பயிலும் மாணவ, மாணவியரில் பெரும்பான்மையானோர் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் தமிழ் கலாச்சாரம் குறித்து அறியாமல் இதைச் செய்திருக்கலாம். இதைப் பின்பற்றி தமிழகத்திலுள்ள மற்ற கல்வி நிறுவனங்களின் மாணவர்களும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், அது நினைத்துப்பார்க்கவே முடியாத மோசமான கலாச்சார மற்றும் பண்பாட்டு சீரழிவுகளை ஏற்படுத்திவிடும். சுதந்திரம் என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் இத்தகைய செயல்களை சமூகவிரோதிகள் தங்களின் வக்கிரங்களுக்கு வடிகாலாக தவறாக பயன்படுத்திக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது.

அப்படி நடந்தால் பொது இடங்களில் பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடவே முடியாத நிலையை ஏற்பட்டு விடும் என்பதை சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக போராடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் சொல்வதால் என்னை கலாச்சாரக் காவலர் என்றோ, பிற்போக்குவாதி என்றோ சில போலி புரட்சியாளர்கள் விமர்சிக்கக் கூடும். சமூக நலனுக்காக எத்தனையோ விமர்சனங்களைத் தாங்கிக் கொண்ட நான் இதற்கெல்லாம் கவலைப்பட போவதில்லை. அடிப்படையில் தமிழ் சமுதாயம் பெண்மையை போற்றும் தன்மை கொண்டதாகும்.

‘பெண்மை போற்றுதும்’ என்று கவிதைகளில் முழங்கிய மகாகவி பாரதியார் பெண்களுக்கு ஆதரவாக எத்தனையோ முற்போக்கு கருத்துக்களைக் கூறியுள்ளார். பெண்களை உலகின் மகா சக்தி என்று வர்ணித்த பாரதியார், கல்வி, கலை, சமூகம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் அவர்கள் முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினாரே தவிர பொது இடங்களில் கட்டியணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் என ஒருபோதும் அறிவுறுத்தவில்லை.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக 14 வயதிலேயே அறவழியில் போராடிய தில்லையாடி வள்ளியம்மை, ஆயுதமேந்தி போராடிய ராணி வேலுநாச்சியார், விண்வெளியில் ஆய்வு செய்த கல்பனா சாவ்லா போன்று சாகசங்களைச் செய்வதில் தான் பெண்கள் ஆர்வம் காட்ட வேண்டுமே தவிர, தவறான வழிகாட்டுதலுக்கு இரையாகி தவறான வழியில் சென்று விடக்கூடாது. எனவே, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான எந்த செயலிலும் இளைய தலைமுறையினர் ஈடுபடக்கூடாது; அத்தகைய செயல்களை தமிழக அரசும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
-maalaimalar
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

Post by M.M.SENTHIL on Sat Nov 15, 2014 4:21 pm

வாங்க சாமி வாங்க. உங்க சவுண்டுக்காகத்ததான் காத்திருந்தோம்.... நீங்க பண்ற அரசியல் கேவலத்துக்கு இது ஒன்றும் பெரிய விசயமே இல்லை.....

சட்டக் கல்லூரி மாணவர்கள் அடித்து செத்த போது வேடிக்கை மட்டுமே பார்த்த காவல் துறை, இன்றும் அப்படியே இருந்து இருக்கிறது....
வேறு ஒன்றும் இல்லை மருத்துவரே............


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

Post by M.Saranya on Sat Nov 15, 2014 4:39 pm

எதற்கு எதை முடுச்சு போடுகிறீர்கள் நண்பரே. அரசியலோடு இவர்கள் செய்த கேவலத்தை ஒப்பிடக்கூடாது . அரசியல்வாதியாய் அவர் செய்தது சரியே.
அரசியல் கேவலத்தை சரிபடுத்த முயற்சிபதைவிட இத்தகைய கேவலங்கள் நம் இளைய தலைமுறையினர் இடையே பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதில் முயற்சி எடுத்தல் சிறந்தது.

குறிப்பு: வீண் விவாதம் வேண்டாம்

avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

Post by ayyasamy ram on Sat Nov 15, 2014 4:44 pm

மகளிர் சங்கங்கள் என்ன சொல்கின்றன...?
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35084
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

Post by M.M.SENTHIL on Sat Nov 15, 2014 4:45 pm

@M.Saranya wrote:எதற்கு எதை முடுச்சு போடுகிறீர்கள் நண்பரே. அரசியலோடு இவர்கள் செய்த கேவலத்தை ஒப்பிடக்கூடாது . அரசியல்வாதியாய் அவர் செய்தது சரியே.
அரசியல் கேவலத்தை சரிபடுத்த முயற்சிபதைவிட இத்தகைய கேவலங்கள் நம் இளைய தலைமுறையினர் இடையே பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதில் முயற்சி எடுத்தல் சிறந்தது.

குறிப்பு: வீண் விவாதம் வேண்டாம்

மேற்கோள் செய்த பதிவு: 1103758

உங்கள் குறிப்பை பார்த்த பின்பும் நான் பதில் இடுகிறேன் என்றால்,

இப்போது சுதந்திரம் என்ற ஒரு வார்த்தையை அனைவரும் கெட்டியாய் பிடித்து கொண்டிருக்கிறார்கள், மேலும் நாலு பேருக்கு தெரிவது போலத்தான் இந்த தப்பை செய்கிறார்கள்... இது சரி என்பது என் வாதமல்ல, இருப்பினும் ஒரு அரசியல் வாதி செய்வது சரி என்று நீங்கள் கூறுவது மிக வேடிக்கையாய் இருக்கிறது ....

தனது கட்சியின் கொள்கை என்ன, என்பதை தாமே அறியாத கூட்டம்
அவர்கள் செய்வது அரசியல்வாதியாய் அவர் செய்தது சரியே.
என்பது உங்கள் வாதம்...

வருத்தம்தான் வருகிறது, கொள்கை இல்லா, மூடர் பின்னே நம் சமூகம்......


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

Post by M.M.SENTHIL on Sat Nov 15, 2014 4:47 pm

இன்னும் பகிரங்கமாய் சொல்ல வேண்டுமென்றால் தர்மபுரியில் நடந்த ஒரு காதல் கதையும், அந்த காதலால் வீடு இழந்த மக்களும், அதே காதலால் தன் உயிரை இழந்த ......................??????????????????


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

Post by M.M.SENTHIL on Sat Nov 15, 2014 4:49 pm

@M.Saranya wrote:
அரசியல் கேவலத்தை
மேற்கோள் செய்த பதிவு: 1103758

இதற்கு அர்த்தம் என்ன தோழியே


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

Post by M.Saranya on Sat Nov 15, 2014 4:52 pm

உங்கள் பின்னூடத்திற்கு நன்றி ...
நான் இத்தகைய கேவலத்தை அந்த அரசியல் வாதி எதிர்த்திருக்கிறார்.நானும் எதிர்க்கிறேன்..நீங்களும் எதிர்கிறீர்கள்...இது பொது விஷயம். நீங்கள் அவருடைய அரசியலை பற்றி இதில் நுழைப்பது தான் வேடிக்கை விந்தை... எல்லோரும் மனிதர்கள் தானே ..

கொள்கை பிடிப்பு இல்லாத மனிதர் அரசியல் வாதி இல்லை...
ஆனால் தனி வாழ்வில் அவரும் ஒரு மனிதர் ... கருத்து கூற அனைவருக்கும் உரிமை உண்டு. அதை நினைவில் கொள்ள வேண்டும்...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

Post by M.Saranya on Sat Nov 15, 2014 4:55 pm

ஜாதிக்கு, மதத்திற்கு முக்கியத்துவம் தரும் எந்த தலைவரையும் எனக்கு பிடிப்பதில்லை..
நீங்கள் என் கருத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

Post by M.M.SENTHIL on Sat Nov 15, 2014 4:56 pm

@M.Saranya wrote:உங்கள் பின்னூடத்திற்கு நன்றி ...
நான் இத்தகைய கேவலத்தை அந்த அரசியல் வாதி எதிர்த்திருக்கிறார்.நானும் எதிர்க்கிறேன்..நீங்களும் எதிர்கிறீர்கள்...இது பொது விஷயம். நீங்கள் அவருடைய அரசியலை பற்றி இதில் நுழைப்பது தான் வேடிக்கை விந்தை... எல்லோரும் மனிதர்கள் தானே ..

கொள்கை பிடிப்பு இல்லாத மனிதர் அரசியல் வாதி இல்லை...
ஆனால் தனி வாழ்வில் அவரும் ஒரு மனிதர் ... கருத்து கூற அனைவருக்கும் உரிமை உண்டு. அதை நினைவில் கொள்ள வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1103769

அந்த கருத்தை கூற தனி தகுதி வேண்டும்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

Post by M.M.SENTHIL on Sat Nov 15, 2014 4:57 pm

@M.Saranya wrote:ஜாதிக்கு, மதத்திற்கு முக்கியத்துவம் தரும் எந்த தலைவரையும் எனக்கு பிடிப்பதில்லை..
நீங்கள் என் கருத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1103770

இங்கே கருத்து சொன்ன கந்தசாமி யார் என்பதை நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்...


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

Post by M.Saranya on Sat Nov 15, 2014 4:59 pm

மனிதனாய் இருப்பதே தகுதி தான் என்று நினைக்கிறேன்...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

Post by M.M.SENTHIL on Sat Nov 15, 2014 5:01 pm

@M.Saranya wrote:மனிதனாய் இருப்பதே தகுதி தான் என்று நினைக்கிறேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1103774

அது மனிதனாய் மட்டுமே இருந்தால்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

Post by ராஜா on Sun Nov 16, 2014 11:35 am

@M.M.SENTHIL wrote:வாங்க சாமி வாங்க. உங்க சவுண்டுக்காகத்ததான் காத்திருந்தோம்.... நீங்க பண்ற அரசியல் கேவலத்துக்கு இது ஒன்றும் பெரிய விசயமே இல்லை.....

இது தான் நாம் பண்ணுகிற மிகப்பெரிய தவறு,

ஜெயலலிதா விஷயத்திலும் தமிழகத்தில் பலர் 66 கோடி தான் அதற்கே 10 வருடம் உள்ளே போட்டு விட்டார்களே , அவனவன் ஆயிரகணக்கான கோடி கொள்ளை அடிக்கிறான் அவர்களை விட்டுவிட்டார்கள் என்பது போல பேசியதை கேள்விபட்டேன்.

ஒருவர் அரசியல்வாதியா இருந்தால் அவர் கருத்து சொல்வது தவறு என்பது எந்த வித்தத்தில் ஞாயம் செந்தில்.


@M.M.SENTHIL wrote:இன்னும் பகிரங்கமாய் சொல்ல வேண்டுமென்றால் தர்மபுரியில் நடந்த ஒரு காதல் கதையும், அந்த காதலால் வீடு இழந்த மக்களும், அதே காதலால் தன் உயிரை இழந்த ......................??????????????????
இது காதல் கதையா வேறா என்று எனக்கு தெரியாது , ஆனால் அவர்கள் சொல்வது போல போலி காதல் கதைகல் பல நான் எனக்கு தெரிந்து கேள்விபட்டுள்ளேன் , பார்த்திருக்கிறேன்.

காதலித்து வீட்டை விட்டு ஓடிவா என்று சொல்லிவிட்டு பிறகு கர்ப்பிணியா ஆனபிறகு வீட்டை விட்டு துரத்திவிட்டு , ஆனது ஆயிடுச்சு சமாதானமா போவோம் என்று பெண் வீட்டார் இறங்கி வந்தால் பஞ்சாயத்தில் காலில் விழுந்து மன்றாட வேண்டுமென எகத்தாளமா பேசுவதும். இவையெல்லாம் கதையல்ல நமது தமிழ்நாட்டில் நடந்தது தான்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

Post by ராஜா on Sun Nov 16, 2014 11:40 am

@M.Saranya wrote:ஜாதிக்கு, மதத்திற்கு முக்கியத்துவம் தரும் எந்த தலைவரையும் எனக்கு பிடிப்பதில்லை..
நீங்கள் என் கருத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்...

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் பலரும் ஜாதிக்கும்,மதத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் இது வெளியே தெரியாது.சற்று கூர்ந்து நோக்கினால் மட்டுமே உண்மை புலப்படும்.

ராமதாசு , திருமாவளவன் போன்ற ஒருசிலர் மட்டும் தான் வெளியே தெரிவார்கள் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum