ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !

View previous topic View next topic Go down

தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !

Post by seltoday on Mon Nov 17, 2014 2:59 pm

விவசாயம்,விவசாயி குறித்து யாரும் எந்த நிகழ்ச்சியும் தயாரிக்கவோ ,ஒளிபரப்பவோ முன்வருவதில்லை. வெள்ளித்திரை, சின்னத்திரை மனிதர்கள் மட்டுமே பல்வேறு விதமான நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகின்றனர். இதுவும் ஒருவிதமான தீண்டாமை தான்.இன்றைய சமூகத்தில் மிகப்பெரிய தீண்டாமையைச் சந்திப்பது விவசாயமும், விவசாயியும் தான். "தன் மகன்(ள்) ஒரு விவசாயி ஆக இருப்பதில் தான் பெருமை " என்று பெற்றோர்கள் நினைக்கும் நிலை உருவாகும் வரை விவசாயம் என்பது தீண்டத்தகாததாகவே இருக்கும் . இதை மாற்ற வேண்டியது யாருடைய கடமை?

சமூகத்தின் பிரதிபளிப்பு தான் சினிமா என்றால் 70 % திரைப்படங்கள் விவசாயம் குறித்தோ அல்லது விவசாயம் சார்ந்த தொழில்கள் குறித்தோ , அதில் ஈடுபடும் மனிதர்கள் குறித்தோ இருக்க வேண்டும் . ஆனால், இங்கு, விதவிதமான காதல்கள் தவிர தமிழ் சினிமாவில் என்ன இருக்கிறது.

இந்தியாவின் ஆன்மா, இன்னமும் கிராமங்களில் வாழ்வதாகச் சொல்கிறார்கள் . ஆனால் , எல்லாத் தரப்பினராலும் கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன . ஆட்சியாளர்களும் ,அரசியல்வாதிகளும் " கிராமம் " என்ற வாரத்தையை மறந்தும் உச்சரிப்பதில்லை . சமீபத்தில் எல்லாக் கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்டன . ஒரு தேர்தல் அறிக்கையில் கூட கிராமம் என்ற வாரத்தையே இல்லை . இந்தியாவில் கிராமங்கள் என்பதே இல்லையா ? இதுல காந்திய தேசம் ( கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு - காந்தி ) என்ற பெருமை வேறு .

கிராமிய கலைகளை மையமாக வைத்து ஒரே ஒரு நிகழ்ச்சி நடத்தக் கூடாதா ! சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சினிமாப் பாடல்களைப் பாடவும் , சினிமாப்பாடல்களுக்கு ஆடவும் வைக்கிறீர்களே .பாடத் தெரியாதவர்களுக்கு பாடச் சொல்லிக்கொடுத்தும் , ஆடத் தெரியாதவர்களுக்கு ஆடச் சொல்லிக்கொடுத்தும் நிகழ்ச்சிகள் நடத்துகிறீர்களே . ஏன் கிராமியக் கலைகளை கற்றுக் கொடுத்து ஒரு நிகழ்ச்சியாவது நடத்தக் கூடாது ? தமிழ்நாட்டில் சினிமாவைத் தவிர எதுவுமே இல்லையா !

இயல் ,இசை , நாடகம் என்று மூன்று தமிழ் உண்டெனச் சொல்கிறார்கள் . இயல் என்பது இன்றைய இலக்கியம் , நாடகம் என்பது இன்றைய சினிமா , இசை என்பது ? சினிமா இசை தான் தமிழிசையாக மாறிப் போய்விட்டது .சினிமாப் பாடல் தவிர்த்து , ஒரு புதிய பாடலை உருவாக்கி பாடும் வகையில் போட்டிகள் நடத்தலாம் . புதிய வகை நடனப் போட்டிகள் வைக்கலாம் . நல்ல இசைக்கானப் போட்டிகள் நடத்தலாம் . அதை விடுத்து வெறும் சினிமாப் பாடல்களைப் மட்டுமே பாடவும் , ஆடவும் வைத்துக்கொண்டு மார்க் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் .இதுல சீசன் 1,2,3,4,5,6,7,8 வேறு .
சினிமா ஸ்டுடியோ சென்னையில் இருக்கலாம் . அதற்காக நகர மக்களுக்காக மட்டுமே நீங்கள் நிகழ்ச்சிகள் தயாரிப்பீர்களா !

தமிழ்நாடு முழுக்க கடுமையான வறட்சி நிலவும் இன்றைய சூழலில் , அன்றன்றைய தேவைகளை பூர்த்தி செய்வதே பெரும் சோதனையாக இருக்கும் நிலையில் " ஒல்லி பெல்லி " குறித்தெல்லாம் கவலை இல்லை . எங்கள் பகுதிகளில் வேலை செய்யத் தயாராக இருப்பவர்களுக்கும் வேலை கிடைப்பதில்லை . விவசாயம் நன்றாக நடைபெற்றால் மட்டுமே எல்லோருக்கும் வேலை கிடைக்கும் . வேலை தேடி வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது உள்ளது .சற்று இளைப்பாற தொலைக்காட்சியை நாடினால் அது தொல்லைக்காட்சியாக இருக்கிறது .குறிப்பாக இந்த செய்தி சேனல்கள் பக்கமும் , ஆளாளுக்கு தீர்ப்பு சொல்ற சேனல்கள் பக்கமும் எட்டிப் பார்க்கக் கூட முடியவில்லை . இடையில இந்த சீசன்கள் வேறு . அதனால் பெண்களுக்கு , வன்முறைக் காட்சிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நெடுந்தொடர்கள் . ஆண்களுக்கு , நேரத்தை விழுங்கும் கிரிக்கெட் ! தான் பொழுதுபோக்கு . நெடுந்தொடர்களிடமிருந்து பெண்களையும் , கிரிக்கெட்டிடமிருந்து ஆண்களையும் காப்பாற்றுங்கள்.

நீதிமன்றத்தை நாடி வழக்குத் தொடுத்து " கண்டிப்பாக ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் வாரத்தில் ஒரு மணி நேரமாவது வார இறுதி நாட்களில் மாலை 6 முதல் 10க்குள் விவசாயம், கிராமம் , கிராமம் சார்ந்த கலைகள் ,நிகழ்ச்சிகளாக ஒளிபரப்ப வேண்டும் " என்று தீர்ப்பு தான் வாங்க வேண்டும் போல ...!

ஜெ.செல்வராஜ்.
avatar
seltoday
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 129
மதிப்பீடுகள் : 53

View user profile http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

Re: தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !

Post by M.Saranya on Mon Nov 17, 2014 3:13 pm

நல்ல கேள்வி...
நியாயமும் கூட...
ஆனால் இதை காது கொடுத்தும் கேட்க மாட்டார்கள்..
கத்தி படம் ஓரளவிற்கு விவசாயிகளின் நிலையினை கூறும் விதம் உள்ளது...
வியாபார உலகத்தில் விவசாயத்தினை நினைப்பவர் எவர்...
பணத்தை சேர்த்து பல மாடி வீடு கட்டுவார்கள்...இவர்கள்..
விவசாயி நாதியின்றி நடுத்தெருவில் நிற்பான்...
இன்றைய நிலை இப்படி ...
மக்கள் யாவரும் விவசாயத்தின் அருமை உணர்ந்தாலன்றி விவசாயத்திற்கு விடிவு காலம் ஏது...

avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !

Post by ராஜா on Mon Nov 17, 2014 4:42 pm

மக்கள் தொலைக்காட்சி சினிமா சாராத நிகழ்சிகளை தான் ஒளிபரப்பி வந்தார்கள்(இப்ப கொஞ்ச நாளா இங்க வருவதில்லை ) அதனால் இப்ப என்ன நிலவரம் என்று தெரியவில்லை.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !

Post by யினியவன் on Mon Nov 17, 2014 4:47 pm

மக்களின் மனதில் விவசாயத்திற்கு அவ்வளவு தாம் முக்கியத்துவம் இப்போ - அதான் எதார்த்தம்.

ஒளிபரப்பினால் அந்த சமயத்தில் வீட்டு வேலை, இல்லேன்னா வெளி வேலை என கிளம்பிவிடுவார்கள். பார்ப்பார்கள் என்பது நிச்சயமில்லை.

மனநிலையில் மாற்றம் வரவேண்டும்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !

Post by விமந்தனி on Mon Nov 17, 2014 7:53 pm

நெடுந்தொடர்களிடமிருந்து பெண்களையும் , கிரிக்கெட்டிடமிருந்து ஆண்களையும் காப்பாற்றுங்கள்.
இன்றைய சூழ்நிலையில் இது 'தலைக்கு மேலே ஜான் போகிறதா, முழம் போகிறதா..' என்ற பிரகஞ்சை கூட இல்லாமல் சம்மந்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !

Post by seltoday on Mon Nov 17, 2014 10:14 pm

விவசாய பொருட்களுக்கு நிலையான விலை கிடைக்காதது தான் விவசாயிகளின் நீண்ட காலப் பிரச்சனையாக உள்ளது.

தொலைக்காட்சிகள் ஒரு சில முகங்களையே மீண்டும் மீண்டும் காட்டி தனிநபர் துதிபாடலை வளரக்கின்றன.

தற்போதைய நெடுந்தொடர்கள் எதிர்மறையான விசயங்களையே தொடர்ந்து காட்சிப்படுத்தி பரபரப்பை உண்டாக்குகின்றன. கொலை நடைபெறாத நெடுந்தொடரே இல்லை என்று சொல்லுமளவிற்கு நிலமை உள்ளது. மனித மனங்களை மரத்துப் போக செய்ததில் முதலிடம் தொலைக்காட்சிக்குத் தான். ஒரு விபத்தைப் பார்த்தால் கூட எந்தச் சலனமும் இல்லாமல் கடந்து செல்கிறோம்.

தொலைக்காட்சி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நம் வீடுகளில் இவ்வளவு பொருட்கள் இருக்காது. பயன்படுமா படாதா? தேவையா தேவையில்லையா? என்ற சுயசிந்தனையே இல்லாமல் மீண்டும் மீண்டும் பொருட்களை வாங்கத் துண்டுவது தொலைக்காட்சி விளம்பரங்கள்.

தொலைக்காட்சிக்கு முந்தைய வாழ்க்கை உண்மையிலேயே அற்புதமானது.
avatar
seltoday
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 129
மதிப்பீடுகள் : 53

View user profile http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

Re: தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !

Post by krishnaamma on Mon Nov 17, 2014 11:07 pm

நல்ல கட்டுரை ....நாளை வந்து படிக்கிறேன் புன்னகை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !

Post by ராஜா on Tue Nov 18, 2014 11:25 am

@seltoday wrote:விவசாய பொருட்களுக்கு நிலையான விலை கிடைக்காதது தான் விவசாயிகளின் நீண்ட காலப் பிரச்சனையாக உள்ளது.

தொலைக்காட்சிகள் ஒரு சில முகங்களையே மீண்டும் மீண்டும் காட்டி தனிநபர் துதிபாடலை வளரக்கின்றன.

தற்போதைய நெடுந்தொடர்கள் எதிர்மறையான விசயங்களையே தொடர்ந்து காட்சிப்படுத்தி பரபரப்பை உண்டாக்குகின்றன. கொலை நடைபெறாத நெடுந்தொடரே இல்லை என்று சொல்லுமளவிற்கு நிலமை உள்ளது. மனித மனங்களை மரத்துப் போக செய்ததில் முதலிடம் தொலைக்காட்சிக்குத் தான். ஒரு விபத்தைப் பார்த்தால் கூட எந்தச் சலனமும் இல்லாமல் கடந்து செல்கிறோம்.

தொலைக்காட்சி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நம் வீடுகளில் இவ்வளவு பொருட்கள் இருக்காது. பயன்படுமா படாதா? தேவையா தேவையில்லையா? என்ற சுயசிந்தனையே இல்லாமல் மீண்டும் மீண்டும் பொருட்களை வாங்கத் துண்டுவது தொலைக்காட்சி விளம்பரங்கள்.

தொலைக்காட்சிக்கு முந்தைய வாழ்க்கை உண்மையிலேயே அற்புதமானது.
உண்மை ...

இப்ப வர தொலைக்காட்சி தொடர்களில்

- கணவன் / மனைவிக்கு எப்படி துரோகம் செய்வது
- மாமியார் / மருமகளை எப்படி கொலை செய்யலாம் என்று திட்டம் போடுவது
- பெற்றோருக்கு தெரியாமல் ஓடி போயி கல்யாணம் செய்துகொள்வது
- நன்றாக இருக்கும் குடும்பத்தை எப்படி சதி செய்து பிரிப்பது
- முக்கியமாக இளம் சிறுவர் சிறுமிகள் எதை எதையெல்லாம் கற்றுக்கொள்ள கூடாதோ அதையெல்லாம் விலாவரியாக காட்டி கற்றுகொடுப்பது

இவையெல்லாம் ஒரு உதாரணம் தான் , எல்லா தொடர்களும் பார்ப்பவர்களுக்கு இன்னும் அதிகமாக தெரிந்திருக்கும் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !

Post by M.Saranya on Tue Nov 18, 2014 12:33 pm

எனக்கும் தெரிந்து மக்கள் தொலைக்காட்சி சினிமா சாராத நிகழ்ச்சிகளை வழங்கியது..
ஆனால் இப்போது விளம்பரகள் கேளிக்கை நிகழ்சிகள் என சிறு மாறுதலை கொண்டுவிட்டது...

யாரும் பார்க்க வில்லை போலும்... சோகம் சோகம் சோகம்
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !

Post by krishnaamma on Tue Nov 18, 2014 2:24 pm

@M.Saranya wrote:நல்ல கேள்வி...
நியாயமும் கூட...
ஆனால் இதை காது கொடுத்தும் கேட்க மாட்டார்கள்..
கத்தி படம் ஓரளவிற்கு விவசாயிகளின் நிலையினை கூறும் விதம் உள்ளது...
வியாபார உலகத்தில் விவசாயத்தினை நினைப்பவர் எவர்...
பணத்தை சேர்த்து பல மாடி வீடு கட்டுவார்கள்...இவர்கள்..
விவசாயி நாதியின்றி நடுத்தெருவில் நிற்பான்...
இன்றைய நிலை இப்படி ...
மக்கள் யாவரும் விவசாயத்தின் அருமை உணர்ந்தாலன்றி விவசாயத்திற்கு விடிவு காலம் ஏது...

ரொம்ப சரி சரண்யா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !

Post by krishnaamma on Tue Nov 18, 2014 2:26 pm

@ராஜா wrote:மக்கள் தொலைக்காட்சி சினிமா சாராத நிகழ்சிகளை தான் ஒளிபரப்பி வந்தார்கள்(இப்ப கொஞ்ச நாளா இங்க வருவதில்லை ) அதனால் இப்ப என்ன நிலவரம் என்று தெரியவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1104082

இல்லை ராஜா, நிறைய வேற வேற நிகழ்சிகள் வெக்கறாங்க .........அயல்நாட்டு படங்கள் .....என்று ஏதோ ஏதோ வெக்கறாங்க சோகம்

Post by ராஜா on Tue Nov 18, 2014 2:32 pm

@M.Saranya wrote:எனக்கும் தெரிந்து மக்கள் தொலைக்காட்சி சினிமா சாராத நிகழ்ச்சிகளை வழங்கியது..
ஆனால் இப்போது விளம்பரகள் கேளிக்கை நிகழ்சிகள் என சிறு மாறுதலை கொண்டுவிட்டது...

யாரும் பார்க்க வில்லை போலும்... சோகம் சோகம் சோகம்
அப்படியா ... சமீப காலங்களில் நான் பார்க்கவில்லை..... அவர்களும் என்ன பண்ணுவார்கள் தொலைக்காட்சி நடத்துவதற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கும் பணம் வேண்டுமல்லவா புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !

Post by ராஜா on Tue Nov 18, 2014 2:38 pm

@krishnaamma wrote:
@ராஜா wrote:மக்கள் தொலைக்காட்சி சினிமா சாராத நிகழ்சிகளை தான் ஒளிபரப்பி வந்தார்கள்(இப்ப கொஞ்ச நாளா இங்க வருவதில்லை ) அதனால் இப்ப என்ன நிலவரம் என்று தெரியவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1104082

இல்லை ராஜா, நிறைய வேற வேற நிகழ்சிகள் வெக்கறாங்க .........அயல்நாட்டு படங்கள் .....என்று ஏதோ ஏதோ வெக்கறாங்க சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1104515

இந்த தொலைகாட்சிக்கு வலைத்தளம் கூட இருக்கிறது இப்ப தான் program shedule பார்த்தேன் , மற்ற தொலைகாட்சிகளை compare பண்ணும்போது இவர்களின் நிகழ்ச்சிகள் எவ்வளவோ தேவலாம் என்று தோன்றுகிறது புன்னகை புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !

Post by krishnaamma on Tue Nov 18, 2014 2:41 pm

@ராஜா wrote:
@krishnaamma wrote:
@ராஜா wrote:மக்கள் தொலைக்காட்சி சினிமா சாராத நிகழ்சிகளை தான் ஒளிபரப்பி வந்தார்கள்(இப்ப கொஞ்ச நாளா இங்க வருவதில்லை ) அதனால் இப்ப என்ன நிலவரம் என்று தெரியவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1104082

இல்லை ராஜா, நிறைய வேற வேற நிகழ்சிகள் வெக்கறாங்க .........அயல்நாட்டு படங்கள் .....என்று ஏதோ ஏதோ வெக்கறாங்க சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1104515

இந்த தொலைகாட்சிக்கு வலைத்தளம் கூட இருக்கிறது இப்ப தான் program shedule பார்த்தேன் , மற்ற தொலைகாட்சிகளை compare பண்ணும்போது இவர்களின் நிகழ்ச்சிகள் எவ்வளவோ தேவலாம் என்று தோன்றுகிறது புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104524

நிஜம் தான் அது புன்னகை ......மற்ற தொலைக்காட்சிகளுக்கு இது எவ்வளவோ தேவலாம் தான் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !

Post by seltoday on Tue Nov 18, 2014 7:39 pm

அதிகளவில் பெண்கள் மட்டுமே பார்த்து வந்த நெடுந்தொடர்கள் தற்போது கணிசமான ஆண்களாலும் பார்க்கப்படுகிறது. டீ கடைகளில் கூட நெடுந்தொடர்கள் பார்க்கப்படுகின்றன.

தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொள்வது தான் நம் மனதிற்கும் ,பணத்திற்கும் நல்லது .

இந்த நெடுந்தொடர்களுக்கும் , அபத்தமான விளம்பரங்களுக்கும் சென்சாரே கிடையாதா ? அவுங்க தணிக்கை செய்யலைனா என்ன நமக்கு நாமே தணிக்கை செய்து கொள்வோம். தொலைக்காட்சியில் எதை ஒளிபரப்பினாலும் பார்க்காமல் தேர்ந்தெடுத்து பார்க்க ஆரம்பித்தோமானால் நேரம் மிச்சமாவதுடன் மன அமைதியும் கிடைக்கும்

avatar
seltoday
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 129
மதிப்பீடுகள் : 53

View user profile http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

Re: தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !

Post by ayyasamy ram on Tue Nov 18, 2014 8:51 pm

பொதிகை சேனலில் விவசாய நிகழ்ச்சிகள் சிறப்பாக
ஒளி பரப்பாகிறது
-
தினமணி நாளிதழில் வேளான்ணை குறித்த சிறப்பு
செய்திகள் பிரசுரமாகின்றன
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35080
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !

Post by ராஜா on Wed Nov 19, 2014 11:36 am

@seltoday wrote:அவுங்க தணிக்கை செய்யலைனா என்ன நமக்கு நாமே தணிக்கை செய்து கொள்வோம். தொலைக்காட்சியில் எதை ஒளிபரப்பினாலும் பார்க்காமல் தேர்ந்தெடுத்து பார்க்க ஆரம்பித்தோமானால் நேரம் மிச்சமாவதுடன் மன அமைதியும் கிடைக்கும்
மிக சரி .... இதை தான் இப்ப நாங்க பண்ணிக்கொண்டு உள்ளோம்,

வீட்டில் கொலைஞன் குடும்பத்து தொல்லைகாட்சிகளை பார்த்து மாச கணக்காகிவிட்டது , மற்ற தொலைகாட்சிகளில் வரும் பிடித்த நிகழ்சிகளை மட்டும் தான் இப்ப பார்த்துவருகிறோம் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !

Post by seltoday on Wed Nov 19, 2014 1:22 pm

மிக்க மகிழ்ச்சி ராஜா அவர்களே ... தீதும் நன்றும் பிறர் தர வாரா....
avatar
seltoday
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 129
மதிப்பீடுகள் : 53

View user profile http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

Re: தொலைக்காட்சியும் கிராமமும் விவசாயமும் !

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum