புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_c10 
306 Posts - 42%
heezulia
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_c10 
6 Posts - 1%
prajai
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குன்ஹா தீர்ப்பு முழு விவரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 5:22 pm

கற்பனை செய்ய முடியாத கணக்கு அது!

இந்தியாவையே தனது தீர்ப்பை நோக்கி திருப்பியவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. 1,136 பக்கங்களுக்கு எழுதப்பட்ட தீர்ப்பு அது. முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன.

குற்றம்சாட்டப்​பட்டவர்​களுக்கு எதிராக உள்ள சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை உறுதியாக உள்ளன என்பதும் அவற்றை எதிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த சாட்சியங்களும் 100 பாயின்ட்களில் விவரிக்கப்படுகின்றன. அதன் பிறகு, 895-வது பக்கத்தில் ஆரம்பித்து 907-வது பக்கம் வரை நீதிபதியின் தீர்ப்பும் 908 முதல் 910-ம் பக்கம் வரை தண்டனையும் விவரிக்கப்பட்டுள்ளன.
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் P3
அந்தப் பக்கங்களில் உள்ள விவரங்​கள்தான் இவை...

''ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக இருந்த 1991-1996 காலகட்டத்தில் அவருடைய வருமானம் 9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 ரூபாயாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் செய்த செலவுகள் 8 கோடியே 49 லட்சத்து 6 ஆயிரத்து 833 ரூபாய். இதுபற்றி மிக நியாயமான சந்தேகங்களை வழக்கின் புகார்தாரரான அரசுத் தரப்பினர் எழுப்பி உள்ளனர். ஆனால், இந்தக் காலகட்டத்தில் அசையாச் சொத்துகளின் மதிப்பு 53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்த அசையாச் சொத்துகள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூவரின் கணக்குகளில் வருகின்றன. ஆனால், அவை எந்த வழியில் வந்தன என்பதற்குக் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. அதுபற்றி அவர்களால் நியாயமான கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்க முடியவில்லை. தீர்ப்பு அளிக்கப்படும் இந்த நேரத்தில், தங்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு முன்பாக நீதிமன்றம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகக் குற்றவாளிகள் தரப்பினர் சில தகவல்களை நீதிமன்றத்துக்குத் தந்துள்ளனர்.

முதல் குற்றவாளியான ஜெயலலிதா, 'இந்த வழக்கு தன்னுடைய அரசியல் எதிரிகளால், அரசியல் காரணங்களுக்காகவும் தன்னை பழிவாங்குவதற்காகவும் போடப்பட்டது. வழக்கை எனக்கு எதிராகப் போடும்போது என்னுடைய வயது 48. அதன்பின் 18 வருடங்களுக்கு வழக்கு இழுத்தடிக்கப்பட்டு உள்ளது. இப்போது என்னுடைய வயது 66. இந்த இடைப்பட்ட நாட்களில் வழக்கின் காரணமாக நான் தீராத மன உளைச்சலுக்கு ஆளானேன். அதன் காரணமாக என்னுடைய உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் போன்ற நோய்களால் அவதிப்படுகிறேன். அதனால் நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லும்போது, தனக்கு இருக்கும் இந்தப் பிரச்னைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று சொல்லியுள்ளார்.

இரண்டாவது குற்றவாளி (சசிகலா), 'இந்த வழக்கு அரசியல் காரணத்துக்காகப் போடப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் எனக்குத் தீராத மன உளைச்சல், நீரிழிவு மற்றும் கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது குற்றவாளி (சுதாகரன்), 'இந்த வழக்கு அரசியல் காரணத்துக்காகப் போடப்பட்டது. வழக்குப் போடப்பட்டபோது, பிறந்த என் குழந்தைக்கு, இப்போது அவருக்கு 18 வயதாகிறது. இந்த வழக்குக்காக நான் இழுத்தடிக்கப்பட்ட காலத்தில் என்னுடைய தாயாரை இழந்துவிட்டேன்'' என்று கூறியுள்ளார்.

நான்காவது குற்றவாளி (இளவரசி), 'இந்த வழக்கின் காரணமாக நான் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தப்பட்டேன். அதனால் எனக்குப் பல நோய்கள் ஏற்பட்டுள்ளன. நான் கணவரை இழந்தவர். என்னுடைய குழந்தைகளைப் பாதுகாக்கும் மொத்தப் பொறுப்பும் என் ஒருவருக்கே உள்ளது. தண்டனை வழங்கும்போது இவற்றை நீதிமன்றம் கருத்தில்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். இவர்களின் வழக்கறிஞர்களான பி.குமார், மணிசங்கர் ஆகியோரும் இதையே தங்கள் கருத்துகளாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த நீதிமன்றம், 'நிரஞ்சன் ஹேமச்சல் Vs மகாராஷ்டிரா அரசு’ என்ற வழக்கின் தீர்ப்பின் சாரத்தை நினைவுபடுத்துகிறது. அந்தத் தீர்ப்பில், 'ஊழலையும் அதன் தாக்கத்தையும் எடைபோடும்போது, குற்றம் செய்தவரின் தகுதியை வைத்து அதை எடை போடக் கூடாது. அப்படிச் செய்யவும் முடியாது. ஏனென்றால், ஊழல் என்பது ஒரு தேசத்தின் வளர்ச்சி. தொலைநோக்குத் திட்டம் என தேசத்தின் முன்னேற்றத்துக்கான அனைத்து அம்சங்களையும் சிதைத்து தேசத்தைப் பாழாக்கும். பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைத்துக் குழி தோண்டிப் புதைத்துவிடும்’ என்று உச்ச நீதிமன்றம் நிரஞ்சன் ஹேமச்சல் வழக்கில் குறிப்பிட்டு உள்ளது. அதைக் கருத்தில்கொண்டே இந்த வழக்கின் தீர்ப்பை நோக்கி நாம் போக வேண்டும். ஏனென்றால், அதிகாரத்தில் உள்ளவர்களின் அதிகார மீறல், பொறுப்பில் உள்ளவர்கள் பேராசை காரணமாக தவறான வழிமுறைகளில் பொருளீட்டு¢ம் வேட்கை போன்றவற்றுக்கு இந்த வழக்கு மிகச் சிறந்த உதாரணம். அதிகாரத்தில் உள்ளவர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஜனநாயக நாட்டின் கட்டமைப்பைத் தகர்த்துவிடும்.

பொது ஊழியர் ஆவதற்கு முன்பாக குற்றவாளிகள் தரப்பில் காட்டிய வருமானம் 2 கோடி ரூபாய். ஜெ-சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், ஜெயா பப்ளிகேஷன் ஆகியவற்றின் வருமானங்களும் இந்த இரண்டு கோடி ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. ஆனால், பொறுப்பில் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் வருமானம் உயர்ந்துள்ள வேகத்தை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. இவர்கள் தரப்புக்குச் சொந்தமான பண்ணை 900 ஏக்கர் பரப்பை உடையது. அதை வெறும் ஏழு கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாகக் கணக்கு சமர்ப்பித்துள்ளனர். அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையில்கூட இப்படி வாங்க முடியாது. அதாவது வெறும் 10,000 ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலம் என்ற வகையில் வாங்கி உள்ளனர். இப்படிப் பார்த்தால் ஒரு முழு கிராமத்தையே வாங்கிவிடலாம். இவர்களின் நிறுவனங்கள் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களைத் தங்களுக்குச் சொந்தமாக வைத்துள்ளனர். ஆனால், அந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலம் எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது என்பதை அவர்களால் சொல்ல முடியவில்லை. அவற்றின் மதிப்பு எல்லாம் அரசு மதிப்பீட்டில் கணக்கிடப்பட்டு, இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. சந்தை மதிப்பீட்டின்படி கணக்கிட்டால், இவற்றின் மதிப்பை நாம் கற்பனையில்கூட கணக்குப் போட முடியாத அளவில் உயர்ந்து நிற்கும்.

ஜெயலலிதா இப்படிச் சொத்துகளை வாங்குவதற்கு மற்றவர்கள் உதவி உள்ளனர். புதிது புதிதாக நிறுவனங்களைத் தொடங்கியும் செயல்படாத நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியும் ஜெயலலிதா சொத்துகளைச் சேர்க்க மற்றவர்கள் உதவியுள்ளனர். அந்த நிறுவனங்களில் யாரும் எந்த முதலீடும் செய்யவில்லை. அவற்றின் பங்குகளை வாங்கவில்லை. அதில் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை. ஆனால், நிறுவனம் இவர்களுக்குச் சொந்தமாக உள்ளது. அவற்றின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி, சம்பாதித்த சொத்துகளை அந்தக் கணக்கில் சேமித்து வைக்கவும் அவற்றைத் தங்களுக்கு உரியதாக்கிக் கொள்ளவும் மட்டுமே செய்துள்ளனர். வாதப் பிரதிவாதங்களில் இவை எல்லாம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. அதாவது சொத்துகளை வாங்கிக் குவிப்பதற்கான பணப்பரிமாற்றம் மட்டுமே இந்த வங்கிக் கணக்குகளில் நடந்துள்ளது.

தமிழ்நாடு அரசாங்கத்தின் மிகப் பெரிய பொறுப்பில் இருந்துகொண்டு, ஜெயலலிதா இந்தக் குற்றங்களில் ஈடுபட்டது குற்றத்தின் கனத்தை அதிகரிக்கிறது. ஏன் அதிகரிக்கிறது என்றால், 'மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்று நீதிமொழி அறிவுறுத்துவதை இங்கு உணர வேண்டும். அந்த வகையில் பார்த்தால், ஜெயலலிதா தனக்குக் கீழ் இருந்த அரசு இயந்திரங்கள், கட்டமைப்புகள், அவற்றைச் சார்ந்த பொதுமக்கள் என ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தவறான வழியைக் காண்பித்துள்ளார். இப்போது இவர்களுக்குத் தண்டனை வழங்கும்போது, இங்கு 'பி.சுப்பையா Vs கர்நாடக அரசு’க்கும் வழக்கில் இடையில் நடந்த கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் சாரத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்தத் தீர்ப்பில், 'உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் தவறு செய்யும்போது, அதில் காட்டப்படும் சலுகை, ஒரு சமூகத்துக்குச் செய்யும் கேடாக முடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தன் மீது கருணைகாட்ட வேண்டும் என்பதற்காகக் குற்றவாளிகள் சொன்ன காரணங்கள் எதுவும் நியாயமான காரணங்கள் அல்ல. வழக்கு 18 ஆண்டுகள் நடந்தது என்பதில் சந்தேகம் இல்லை. அதற்குக் காரணம் யார் என்பதையும் இப்போது ஆராய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நீதிக்குச் சமாதிகட்ட முயற்சிகள் நடந்ததால்தான் இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இந்த வழக்குக்கு 5 ஆண்டுகளுக்கு தடை இருந்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதன் பிறகு நிறைய நேரத்தை வீணடித்தது குற்றவாளிகளே. அதையும் யாரும் மறுக்க முடியாது. இந்த வழக்குக்கு எந்த வகையிலும் பயன்தராத விஷயங்களைக் கேட்டு தாமதம் செய்தனர். இந்த வழக்குக்கு எந்தத் தொடர்பும் இல்லாத சட்ட நடைமுறைகளைச் சொல்லி தாமதம் செய்தனர். தேவையற்ற காரணங்களைச் சொல்லி சலுகைகளைப் பெற்று வழக்கை தாமதம் செய்தனர். இப்படியே அவர்கள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தனர். எனவே, இவர்கள் சொன்ன காரணங்கள் தண்டனையைக் குறைப்பதற்கு ஏற்ற காரணங்கள் அல்ல.

மேலும், குற்றத்தின் தீவிரம், சொத்துகளின் அளவு, அவற்றைச் சம்பாதிக்கக் குற்றவாளிகள் பயன்படுத்திய வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தண்டனையை தீர்மானிக்க முடியும். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது. சட்டம் சொல்லும் உச்சபட்ச தண்டனையில் பாதிக்கும் மேலாக இவர்களுக்கு வழங்கினால்தான் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டதாகும். ஏனென்றால் இந்த வழக்கின் தீவிரம் அப்படி. அந்தவகையில் ஒவ்வொரு குற்றவாளிக்கும் 4 ஆண்டுகளை சிறைத் தண்டனையாக விதிக்கிறேன்.''

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட விதம் அடுத்த இதழில்!


-ஜோ.ஸ்டாலின், படம்: ரமேஷ் கந்தசாமி

ஜூனியர் விகடன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 5:25 pm

'ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் இவை எல்லாம் நடந்ததா?''
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் P13
ஜெயலலிதாவின் முழுமையான கவனத்துக்கு உட்பட்டு, அவரது விருப்பப்படியே, அவருக்காக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தவறான வழிகளில் பணம் மற்றும் சொத்துகளை வாங்கினர் என்பதைத் தன்னுடைய தீர்ப்பில் குன்ஹா நிறுவி உள்ளார். அதனைப் பார்ப்போம்:



''1996-ம் ஆண்டு இறுதியில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் இருந்த சொத்துகளின் கையிருப்பு மதிப்பு 55 கோடியே 2 லட்சத்து, 48 ஆயிரத்து 215 ரூபாய். அந்தக் காலகட்டத்தில் இவர்கள் 8 கோடியே 49 லட்சத்து 6 ஆயிரத்து 833 ரூபாய் செலவு செய்துள்ளார்கள். ஆக, மொத்தம் 63 கோடியே 51 லட்சத்து 55 ஆயிரத்து 48 ரூபாய். இவர்களால் வரவுக் கணக்கு காட்டப்பட்டவை 9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 ரூபாய் மட்டுமே. இதன்படி பார்த்தால் கணக்குக் காட்டமுடியாதவை 53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 ரூபாய் என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது!

''நடராஜன் மூலமாக சொத்துகள் வரவில்லை!''

கணக்கில் காட்ட முடியாத இந்தத் தொகையை ஜெயலலிதாவும் மற்றவர்களும் தங்களின் பூர்வீகச் சொத்தாக காட்ட முடியாது. ஏனென்றால், ஜெயலலிதா 1991-ம் ஆண்டுக்கு முன்பு தன்னுடைய சொத்துகளாக அதிகாரப்பூர்வமாகக் காட்டியுள்ள தொகை இரண்டு கோடிகள்தான். இதை அரசுத் தரப்பு மிகத் தெளிவாக நிரூபித்துள்ளது. சசிகலாவும் இளவரசியும் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த ஆவணங்களே அதற்குப் போதுமானவையாக உள்ளன. அரசுத்தரப்பு சாட்சி ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் வாக்குமூலம் மற்றும் ஆவணங்களின்படி, சசிகலாவின் வருவாய் ஆதாரம் அவருடைய கணவர் நடராஜன் மட்டும்தான். நடராஜன் அரசுப் பணியில் இருந்தவர். அவர் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தபோது மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கான முன்பணமாக 3 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். அதன் பிறகு 1987-ம் ஆண்டு அரசாங்கத்தில் வாங்கிய லோன்மூலமாக ஒரு வீட்டை வாங்கி உள்ளார். அதற்குத் தெளிவான ஆவணங்கள் உள்ளன. அவற்றின்படி நடராஜன் சசிகலா தம்பதியரின் சொத்து மதிப்பு அவ்வளவுதான். அதன்பிறகு 1988-ம் ஆண்டில் அவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டார். இதன்மூலம் கணவர் நடராஜனின் வகையில் சசிகலாவுக்கு மிகப்பெரிய சொத்துகள் எதுவும் வந்து சேரவில்லை என்பது ஊர்ஜிதமாகிறது.

170-வது அரசுத்தரப்பு சாட்சி கிராம நிர்வாக அதிகாரி ஜெயராமனின் வாக்குமூலத்தின்படி சாமிநாதன் மன்னையார் மற்றும் அவருடைய இளைய சகோதரர் பழனிவேல் ஆகியோருக்குச் சொந்தமாக இருபத்து நான்கரை ஏக்கர் நிலம் மட்டும் இருந்தது நிரூபிக்கப்பட்டு உள்ளது. சாமிநாதன் மன்னையாரின் மகன்தான் சசிகலாவின் கணவர் நடராஜன். அதுபோக சாமிநாதன் மன்னையாரின் மனைவியும் நடராஜனின் தாயாருமான லீலாவதி பெயரில் மூன்றரை ஏக்கர் நிலம் இருந்ததும் அதற்கான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆக, மொத்தமாக நடராஜனுக்குக் கட்டிய வீடு, நிலம் என்ற வகையில் சிறிய பகுதி நிலங்கள்தான் இருந்தன. இதன்மூலம் சசிகலாவின் கணவரின் பூர்வீகத்தில் இருந்தும் பெரிதாக எந்தச் சொத்துகளும் வரவில்லை. இதை சசிகலா தரப்பு நீதிமன்றத்தில் மறுக்கவில்லை.

''போயஸ் கார்டனுக்கு வந்தபிறகே சசிகலா வருமானவரி செலுத்தினார்!''


சசிகலாவுக்கு அவருடைய தந்தை வழியில் ஏதாவது சொத்துகள் வந்திருக்க வாய்ப்பிருக்கிறதா? என்று பார்த்தால் அதுவும் இல்லை. விவேகானந்தன் பிள்ளை என்பவர்தான் சசிகலாவின் தந்தை. அவர் திருத்துறைப்பூண்டி மற்றும் வேதாரண்யத்தில் நாட்டு மருந்துக்கடை நடத்தி, குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார். அதற்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விவேகானந்தன் பிள்ளைக்கு அவருடைய தந்தை வழி சொத்தாக இருந்த 81 சென்ட் நிலத்துக்குப் 10-க்கும் மேற்பட்ட பங்காளிகள் உரிமை உடையவர்களாக இருக்கிறார்கள். அதனால், அந்த 81 சென்ட் நிலம் முழுமையாக விவேகானந்தன் பிள்ளைக்குச் சொந்தமானது.இல்லை என்பதும் நிரூபணமாகி உள்ளது. விவேகானந்தனுக்கு சசிகலா தவிர, வனிதா என்ற மகளும் ஆறு மகன்களும் வாரிசுகள். ஆக, சசிகலாவுக்கு அவருடைய பூர்வீகச் சொத்துகள் பெரிதாக எதுவும் இல்லை.

இந்த இடத்தில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஜெயலலிதாவுடன் சேர்ந்து போயஸ் கார்டனில் நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்த பிறகுதான் அவர் வருமானவரி கணக்கே தாக்கல் செய்ய ஆரம்பித்துள்ளார்.

''சுதாகரனுக்கு ஆண்டு வருமானம் ரூ.44 ஆயிரமே!''

அரசுத் தரப்பு சாட்சி பாலகிருஷ்ணனின் வாக்குமூலத்தின்படி சுதாகரனின் ஆரம்ப காலகட்ட சொத்து மதிப்பு தெரிய வருகிறது. சுதாகரன் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்குவதற்காக விண்ணப்பித்தபோது, அவர் தன்னுடைய வருமானச் சான்றிதழை இணைத்துள்ளார். கிண்டி தாலுகா எல்லைக்குட்பட்டு மாம்பலம் தாசில்தார் அளித்த வருமானச் சான்றிதழ் அது. அதில் சுதாகரனின் வருமானம் ஒரு வருடத்துக்கு 44 ஆயிரம் ரூபாய் மட்டுமே. 1992-ம் ஆண்டு வரையிலும் சுதாகரனின் நிலை இதுதான். அரசுத் தரப்பு வைத்துள்ள இந்த வாதங்களை மறுத்து, தனக்கு வேறு வருமானங்கள் இருந்தன என்று சுதாகரனால் நீதிமன்றத்தின் முன் நிரூபிக்க முடியவில்லை. அதன்பிறகுதான் சுதாகரனின் சொத்துகளின் மதிப்பு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அது எப்படி, எந்த வழியில் வந்தது என்று அவரால் எந்தக் கணக்கையும் காட்ட முடியவில்லை.

''இளவரசிக்கு ஆரம்பத்தில் சொத்துகள் இல்லை!''

இளவரசியைப் பொறுத்தவரையில் அவருக்கும் பூர்வீகச் சொத்துகள் இல்லை. அவருடைய கணவர் அரசாங்க வேலையில் இருந்து பிறகு இறந்துவிட்டார். அவர் இறந்தபிறகு, இளவரசிக்கு வந்த அரசாங்கப் பணப் பலன்கள் மட்டும்தான் இளவரசியின் சொத்து. அதோடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்குவதற்காக, இளவரசி சமர்ப்பித்த வருமானச் சான்றிதழில் அவருடைய ஆண்டு வருமானமாக 48 ஆயிரம் ரூபாய் மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது. மற்றபடி, 1996-க்குப் பிறகு இளவரசியின் பெயரில் இருந்த சொத்துகள் அனைத்தும், அவர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் குடியேறிய பிறகு சம்பாதித்த சொத்துகள்தான். இவற்றை இளவரசியால் மறுக்க முடியவில்லை. இந்த அடிப்படையில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குப் பூர்வீகச் சொத்துகள் என்று மிகப்பெரிய சொத்துகள் எதுவும் இல்லை என்பது ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

''புதிய புதிய நிறுவனங்களை ஆரம்பித்தார்கள்''


மயிலாப்பூரில் உள்ள கனரா வங்கி அதிகாரி அளித்த சாட்சியின்படி சேமிப்பு வங்கிக் கணக்கு எண்-24621 வி.என்.சுதாகரனால் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 105 ரூபாய் செலுத்தி இந்த வங்கிக் கணக்கை சுதாகரன் தொடங்கியபோது, அவர் கொடுத்தது 36, போயஸ் கார்டன் என்ற முகவரிதான். அதன்பிறகான காலகட்டத்தில் இந்த வங்கிக் கணக்கில் பல லட்சக் கணக்கில் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தேதிவாரியாக, எண்ணிக்கைவாரியாக வங்கியிடம் இருந்து அரசுத் தரப்பு சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. சுதாகரனின் இந்த அக்கவுன்டுக்கு சசிகலா, வினோத் வீடியோ விஷன், மெட்டல் கிங், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் ஆகிய அக்கவுன்ட்களில் இருந்து பணம் வந்ததும் போனதும் நிரூபணமாகியுள்ளது. அப்படி பணம் வருவதற்கும் போவதற்குமான பரிவர்த்தனைகளில் சசிகலாவும் சுதாகரனும் கையெழுத்திட்டுள்ளனர். மாவட்டப் பதிவாளர் தங்கவேலு அளித்த சாட்சியம், ஆவணங்களின்படி ஜெ.எஸ். ஹவுசிங் டெவலப்மென்ட், ஜெ.ஜெ. லீசிங், கிரீன் ஃபார்ம் ஹவுஸ், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், ஜெ. ரியல் எஸ்டேட், ஜெயா கான்ட்ராக்டர்ஸ் அண்டு பில்டர்ஸ், மெட்டல் கிங், மார்பிள் மார்வெல்ஸ் போன்ற நிறுவனங்கள் ஜெயலலிதா பதவியில் இருந்த காலகட்டத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு நிறுவனத்திலும் இவர்கள் இரண்டு பேராகவோ அல்லது மூன்று பேராகவோ அல்லது அனைவருமாகவோ பங்குதாரர்களாக இருந்துள்ளனர். மேலும், இந்த நிறுவனங்களைப் பதிவு செய்ய தன்னுடைய மேலதிகாரி எஸ்.அய்யர் தனக்கு உத்தரவிட்டதாகவும் அவருக்கு முதலமைச்சர் தொலைபேசியின் வாயிலாக உத்தரவிட்டதாகவும் மாவட்டப் பதிவாளர் தங்கவேலு தன்னுடைய சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பேசினார் என்பது நிரூபணமாகவில்லை என்றாலும் அவருடைய அலுவலகத் தொலைபேசியில் இருந்து அந்த உத்தரவு வந்துள்ளது நிரூபணமாகி உள்ளது.

சுதாகரன் நடத்திய 'சூப்பர் டூப்பர் டி.வி’ நிறுவனம் தொடங்க இளவரசியும் சுதாகரனும் கையெழுத்திட்ட விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளனர். அதை வணிகவரித் துறை அதிகாரி கண்ணனின் சாட்சியம் உறுதிப்படுத்தி உள்ளது. அதுபோல, வணிகவரித் துறை அதிகாரி, சுந்தர்ராஜ் அளித்த சாட்சியத்தின்படி, ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் நிறுவனத்துக்கான விண்ணப்பத்தில் சசிகலாவும் சுதாகரனும் கையெழுத்திட்டு விண்ணப்பித்து உள்ளனர். அதுபோல, மார்பிள்ஸ் மார்வெல்ஸ் நிறுவனத்துக்கான பதிவைப் பெற அளித்த விண்ணப்பத்தில் சசிகலாவும் சுதாகரனும் கையெழுத்துப் போட்டுள்ளனர். இதன் மூலம் இந்த நிறுவனங்களைத் தொடங்கி நடத்தியவர்கள் இவர்கள்தான் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகியுள்ளது.

''எந்த நிறுவனமும் செயல்படவில்லை!''

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஏற்று நடத்திய நிறுவனங்கள் அனைத்திலும் இவர்கள் யாரும் முதலீடாக எந்தத் தொகையையும் போடவில்லை. பங்குகளை விற்றும் முதலீடுகளைத் திரட்டவில்லை. நிறுவனத்தில் வந்த லாபம் இவர்கள் நால்வரைத் தவிர வேறு எந்தக் கணக்குக்கும் போகவில்லை. சசிகலாவுக்கும் இளவரசிக்கும் ஆடிட்டராக இருந்த பாலாஜி அளித்த வாக்குமூலம் மிகமிக முக்கியமானது. அவர் கூற்றுப்படி, இந்த நிறுவனங்கள் எந்தக் காலகட்டத்திலும் எதையும் உற்பத்திச் செய்யவில்லை. பொருள்களை வாங்கி விற்கவும் இல்லை. ஆனால், நிறுவனங்களின் கணக்குகளில் மட்டும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன என்று குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து அந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் பற்றிய ஆதாரங்களை அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் அளித்துள்ளது. அப்படிச் சமர்ப்பிக்கப்பட்ட வங்கிப் பரிவர்த்தனை விவரங்களைப் பார்க்கும்போது மலைப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. மூலதனமே இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் நிறுவனங்களும், எந்த வியாபாரத்திலும் ஈடுபடாத நிறுவனங்களும் ஒவ்வொரு முறையும் பல ஆயிரங்களிலும் லட்சங்களிலும் பணப் பரிவர்த்தனை செய்துள்ளன. இப்படி பணத்தைச் சுற்றி வளைத்துப் போட்டு எடுப்பதற்காகவே, 1991-க்கு முன்பு வரை 12 வங்கிக் கணக்குகளை மட்டுமே வைத்திருந்த ஜெயலலிதாவும் சசிகலாவும், அதன்பிறகு 52 வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர்.

''வாங்குபவர் விவரமே இல்லாத பத்திரங்கள்''

வடக்குக் கடற்கரை சப்-ரிஜிஸ்ட்ரார், தோட்டக்கலைத் துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் சாட்சியம் மிக முக்கியமானவை. அவர்கள் அளித்த சாட்சியத்தில், அவர்கள் மேலதிகாரிகளின் உத்தரவுப்படி ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைக்கப்பட்டு, விதிமுறைகளைப் பின்பற்றாமல், பத்திரங்களைப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் பதிவுசெய்த நிலங்களின் பத்திரங்கள் அனைத்தும் அடிமாட்டு விலைக்கு, பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளனர். மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அதில் ஆறு பத்திரங்கள் யார் வாங்குகிறார் என்ற விவரம் இல்லாமல், பெயர்கூட குறிப்பிடாமல் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இப்போது அதை ஒவ்வொன்றாக யாருடைய அனுபவப் பாத்யதையில் இருக்கின்றன என்று பார்த்தால் அவை அனைத்தும் ஜெயலலிதாவுக்காக வாங்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

''போலியான ஆதாரங்கள்!''


'நமது எம்.ஜி.ஆர்’ வங்கிக் கணக்கில் பல்வேறு தேதிகளில் 423 முறை (ஒவ்வொரு முறையும் பல ஆயிரக்கணக்கில் மற்றும் லட்சங்களில்) வரவு வைக்கப்பட்ட பணத்துக்குக் கணக்கு இல்லை. அதுபோல ஜெயா பப்ளிகேஷன், வினோத் வீடியோ விஷன், மஹாசுப்புலெட்சுமி கல்யாண மண்டபம், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் போன்றவற்றில் வரவு வைக்கப்பட்ட பல கோடி ரூபாய்களுக்கு எந்த விளக்கமும் ஜெயலலிதா தரப்பால் சொல்ல முடியவில்லை. இதுதொடர்பாக ஜெயலலிதா தரப்பு வைத்துள்ள பேலன்ஸ் ஷீட், லாப - நட்டக் கணக்கு விவரங்கள் அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்டு இருப்பதும் ஆடிட்டர்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டு உள்ளன. ஆனால், பணத்தை வங்கிகளில் போட்டதும், அவற்றை வேறு கணக்குகளுக்கு மாற்றச் சொன்னதும் சசிகலா என்பது அரசுத் தரப்பு சாட்சி ஜெயராமன் மூலம் உறுதிபடத் தெரியவந்துள்ளது.

ஜெயராமன் போயஸ் கார்டனில் வேலை பார்த்த கார் டிரைவர். அவரிடம் ஒவ்வொரு முறையும் பை மற்றும் சூட்கேஸில் லட்சக்கணக்கான ரூபாய்களை வைத்து, நிரப்பப்பட்ட வங்கி சலான்களைக் கொடுத்து வரவு வைக்க சசிகலாதான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதை ஜெயராமன் செய்துள்ளார். அதாவது அந்தப் பணத்தை, இவர்கள் நடத்தும் நிறுவனத்தின் கணக்குகளில் வரவுவைத்து, அவற்றை நிறுவனத்தின் பணமாக மாற்றி, அதன்பிறகு நிறுவனத்தில் இருந்து தங்கள் பெயரில் உள்ள வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டுள்ளனர்.

யாருக்காகச் செய்தார்கள்?

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஜெயலலிதாவுக்காகவே இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் இதை மறுத்து, 'சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் போயஸ் கார்டன் வீட்டில் வசிக்க மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே ஜெயலலிதா அனுமதி கொடுத்திருந்தார். அதில் வேறு எந்த நோக்கமும் இல்லை. அதுவும் மிகக் குறுகிய காலம்தான் அவர்கள் அந்த வீட்டில் இருந்தார்கள். அவர்கள் அங்கிருந்தபோது நடந்த வேலைகள் எதுவும் ஜெயலலிதாவின் கவனம் பெற்று நடந்தவை அல்ல’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், 'ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தைப் பொறுத்தவரை சசிகலாவுக்கு ஜெயலலிதா பவர் கொடுத்துவிட்டார். அதனால், அந்த நிறுவனத்தில் நடந்த எதுவும் ஜெயலலிதாவுக்குத் தெரியாது’ என்று தற்காப்பு வாதத்தை முன்வைத்தார். இந்த வாதத்தை ஏற்க முடியாது. ஏனென்றால், ஜெயலலிதா சசிகலாவுக்கு 'பவர் ஆஃப் அட்டர்னி’ கொடுத்திருந்தாலும் இல்லை என்றாலும், ஜெயா பப்ளிகேஷனில் ஜெயலலிதாவும் சசிகலாவும் சமமான அதிகாரம் படைத்த பங்குதாரர்கள் என்பது மாறப் போவது இல்லை. அப்படி பங்குதாரர்களாக இருக்கும்போது, பவர் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒருவேளை கொடுத்திருந்தால், அதைச் சொல்லி ஜெயலலிதா தன்னை தற்காத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், ஜெயலலிதா சசிகலாவுக்குக் கொடுத்த பவர் என்பது, சசிகலா சுதந்திரமாக ஜெயா பப்ளிகேஷனின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளவும், அதன்மூலமாக தான் மறைமுகமான உரிமையாளராக இருப்பதற்காகவுமே. அதாவது தன்னுடைய ஏஜென்டாக சசிகலாவை அவர் நியமித்து உள்ளார். ஆனால், அந்த நிறுவனத்தின் மூலம் நடைபெற்ற பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளும் ஜெயலலிதாவின் ஒப்புதலுக்குப் பிறகே நடைபெற்றுள்ளன. அதற்காக ஆதாரங்களை அரசுத்தரப்பு கொடுத்துள்ளது. ஜெயா பப்ளிகேஷனின் நிர்வாகத்தில் முழுமையாக தலையிடும் அதிகாரம் படைத்தவர்களாக ஜெயலலிதாவும், சசிகலாவுமே இருந்துள்ளனர். மேலும் அங்கு நடைபெற்ற பரிவர்த்தனைகள் அனைத்தும் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் சசிகலாவோ அல்லது சசிகலாவின் பங்கு இல்லாமல் ஜெயலலிதாவோ செய்யவில்லை. அந்த நிறுவனத்துக்கு வந்த பணம், நிறுவனத்தில் இருந்து வேறு வங்கிக் கணக்குகளுக்கும் போடப்பட்ட பணம் என அனைத்தும் இருவருக்கும்¢ தெரிந்தே நடந்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு இது தெரியாதா?


தன்னுடைய வீட்டில் வசித்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டது தனக்குத் தெரியாது என்று ஜெயலலிதா சொல்வதை ஏற்கவே முடியாது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், தன்னுடைய வீட்டில் இருக்கும் தன்னுடைய சகாக்களின் நடவடிக்கை பற்றி எதுவும் தெரியாது என்று சொன்னால் அதை எப்படி ஏற்க முடியும்? அதுபோல அந்த மூன்று பேரும் தன்னுடைய வீட்டில் வசிக்கவே இல்லை என்று ஜெயலலிதாவால் மறுக்கவும் முடியாது. வாக்காளர் பட்டியலில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 36, போயஸ் கார்டன் முகவரிதான் இருக்கிறது. மேலும் ஜெயலலிதாவிடம் நடத்திய விசாரணையில், சசிகலாவும் இளவரசியும் என்ன காரணத்துக்காக அங்கு வசிக்கிறார்கள் என்று கேட்கப்பட்டபோது, அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று பதில் அளித்துள்ளாரே தவிர, அவர்கள் தன்னுடன் வசிக்கவே இல்லை என்று கூறவில்லை. மேலும், சசிகலாவும் இளவரசியும் ஜெயலலிதாவுக்கு ரத்த பந்தமோ அல்லது வேறு வகையில் சொந்தமோ இல்லாதபோது அவர்கள் ஏன் தன்னுடன் வசிக்கிறார்கள் என்பதை ஜெயலலிதாவால் தெளிவுபடுத்த முடியவில்லை.

இந்தக் கேள்விக்கு சசிகலாவும் இளவரசியும்கூட பதில் சொல்லவில்லை. இத்தனைக்கும் அவர்களுக்குத் தனியாகக் குடும்பம் இருக்கிறது. இருவரும் திருமணமானவர்கள். அவர்கள் ஏன் தங்களுடைய குடும்பத்தைப் பிரிந்து ஜெயலலிதாவுடன் இத்தனை ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ வேண்டும்? அதற்கு என்ன காரணம்? ஜெயலலிதாவுக்கு வரும் பரிசுப் பொருள்கள், ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தி தவறான வழிகளில் சம்பாதித்த பணம்... ஆகியவை அனைத்தும் சசிகலாவின் வழியாக வந்துள்ளன. அவற்றை ஜெயலலிதா வீட்டுக்குக் கொண்டு சேர்க்கும் வேலைக்காக இளவரசி பயன்படுத்தப்பட்டுள்ளார்.

சசிகலாவும் இளவரசியும் நடத்திய நிறுவனங்கள் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஜெயலலிதாவால் சொல்ல முடியாது. ஏனென்றால், சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு ஜெயலலிதா ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். மேலும், அவர்கள் நிறுவனம் வாங்கிய வங்கிக் கடன்களுக்கு எல்லாம் ஜெயலலிதா தன்னுடைய பெயரில் ஷ§யூரிட்டி செக் கொடுத்துள்ளார். இதன்மூலம் அவர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே செய்துள்ளனர். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் பெயர்களில் உள்ள இந்தச் சொத்துகள் எப்படி வந்தன என்பதற்கு இவர்களால் கணக்குச் சொல்ல முடியவில்லை. அதை அரசுத்தரப்பு சரியாக நிரூபித்துள்ளது'' என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பு தொடர்கிறது!

- ஜோ.ஸ்டாலின்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 5:56 pm

பொறுமையாய் படிக்கறேன் நேசன், பகிர்வுக்கு நன்றி ! அன்பு மலர்
.
.
நீதிபதிக்கு தலை வணங்குகிறேன் புன்னகை நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 08, 2014 6:11 pm

வக்கீலுக்கு படிப்பவர்கள் இதை படிப்பது மிக மிக முக்கியம்

இதெல்லாம் போஸ்டர் அடித்து ஓட்டனும் அப்பவாவது இந்தக் கடவுளின் லீலைகள் புரிகிறதா என்று பார்க்கலாம்.

நம்ம ராஜாவோட மயிலாடுதுறையில் உள்ள 3000 ஏக்கர் நிலத்தைக் கூட இந்தக் கூட்டம் பறித்துக்கொண்டதாக முன்பு சொன்னாரு புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 08, 2014 6:27 pm

யினியவன் wrote:வக்கீலுக்கு படிப்பவர்கள் இதை படிப்பது மிக மிக முக்கியம்

இதெல்லாம் போஸ்டர் அடித்து ஓட்டனும் அப்பவாவது இந்தக் கடவுளின் லீலைகள் புரிகிறதா என்று பார்க்கலாம்.

நம்ம ராஜாவோட மயிலாடுதுறையில் உள்ள 3000 ஏக்கர் நிலத்தைக் கூட இந்தக் கூட்டம் பறித்துக்கொண்டதாக முன்பு சொன்னாரு புன்னகை
யுவர் ஹானர் ,  30000 க்கு எத்தனை சைபர் என்று கூட எனக்கு தெரியாது ,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 08, 2014 6:32 pm

ராஜா wrote:
யினியவன் wrote:வக்கீலுக்கு படிப்பவர்கள் இதை படிப்பது மிக மிக முக்கியம்

இதெல்லாம் போஸ்டர் அடித்து ஓட்டனும் அப்பவாவது இந்தக் கடவுளின் லீலைகள் புரிகிறதா என்று பார்க்கலாம்.

நம்ம ராஜாவோட மயிலாடுதுறையில் உள்ள 3000 ஏக்கர் நிலத்தைக் கூட இந்தக் கூட்டம் பறித்துக்கொண்டதாக முன்பு சொன்னாரு புன்னகை
யுவர் ஹானர் ,  30000 க்கு எத்தனை சைபர் என்று கூட எனக்கு தெரியாது ,
மேற்கோள் செய்த பதிவு: 1093845
ஒ 30000 ஏக்கருக்கு நீங்கதான் பினாமியா - அந்த மயிலாடுதுறை குட்டி மம்மிக்கு புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 7:30 pm

சூப்பர் ஆக 'புட்டு புட்டு' வைத்திருக்கிறார்......................" வக்கீலுக்கு படிப்பவர்கள் இதை படிப்பது மிக மிக முக்கியம் " இதை நேற்று நியூஸ் 9 இல் கூட சொன்னார்கள் இனியவன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 11, 2014 7:37 pm

ஜெயலலிதா கொடுத்த செக்!
குன்ஹா தீர்ப்பு விவரம் - 3

வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்துகள் மட்டுமல்ல, வருமானத்துக்கு அதிகமாக செய்த செலவுகளும்தான் ஜெயலலிதாவை இன்று சிறைக்குள் அடைத்துள்ளது. பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில், வருமானத்துக்கு அதிகமாக செய்த செலவுகளுக்கு அடிப்படை உதாரணமாகத் திகழ்கிறது ஜெயலலிதாவின் அன்றைய வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமண அத்தியாயம்.

குன்ஹா தீர்ப்பு முழு விவரம் P30

ரசீதுகள், வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்ட கணக்குகள், சாட்சிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகளின் மதிப்பீடுகள் என சுதாகரனின் ஆடம்பரத் திருமணத்தை ஜெயலலிதா நடத்திய விதத்துக்கு எதிராக ஏகப்பட்ட ஆதாரங்களைத் தாக்கல் செய்தது லஞ்ச ஒழிப்புத் துறை. ஆனால், அவற்றை இல்லை என்று மறுப்பதற்கு ஜெயலலிதா தரப்பிடம் எதுவும் இல்லை. அதை நீதிபதி குன்ஹா தன்னுடைய தீர்ப்பில் விவரித்துள்ள விதம் இதுதான்...

திருமணச் செலவு விவரம்!


''ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும் நடிகர் சிவாஜி கணேசனின் மகள் (சாந்தி) வயிற்றுப் பேத்தி சத்தியலட்சுமிக்கும் ஜூலை 7, 1995 அன்று திருமணம் நடைபெற்றது. அதில் பந்தல்கள் அமைப்பதற்கு 5 கோடியே 21 லட்சத்து 23 ஆயிரத்து 532 ரூபாயும் உணவு, தண்ணீர், தாம்பூலம் கொடுத்த செலவு 1 கோடியே 14 லட்சத்து 96 ஆயிரத்து 125 ரூபாயும் நான்கு லட்சம் ரூபாய்க்கு வெள்ளித் தட்டுகளும் அழைப்பிதழ்களைத் தபாலில் அனுப்பிய வகையில் 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயும் செலவாகியுள்ளது. இந்தத் திருமணத்துக்காகச் செய்யப்பட்ட அனைத்து செலவுகளையும் அரசுத் தரப்பு, ஆறுமுகம், தங்கராஜன், ரமேஷ், வின்சென்ட், பிரேம்குமார், சலபதி ராவ், மகாலிங்கம், ஸ்ரீநிவாசன், ஏ.ஜி.கிருஷ்ணமூர்த்தி, கே.பி.முத்துச்சாமி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.செல்வராஜ், கே.என்.தியாகராஜ சுவாமி, ராஜசேகரன், ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.எஸ்.ஜவஹர், டி.கிருஷ்ணராவ், என்.நல்லம்மா நாயுடு ஆகிய சாட்சிகளைக்கொண்டு நிரூபித்துள்ளது.''

பந்தலோ பந்தல்!

''அரசுத் தரப்பின் 181-வது சாட்சி தங்கராஜன். பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளரான இவர்தான், சுதாகரன் திருமணச் செலவுகளை மதிப்பிட்டவர். திருமணத்துக்குப் பந்தல் அமைத்த ஆர்க்கிடெக்ட் விஜயசங்கர், ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி, கோபிநாத், தோட்டா தரணியின் உதவியாளர்கள் ரமேஷ், சீனிவாசன், மின்விளக்கு அலங்காரம் செய்த எலெக்ட்ரீசியன் பி.எஸ்.மணி, சையத் முகமத் ஆகியோரைச் சந்தித்து ஆதாரங்களைத் திரட்டி இந்த மதிப்பீட்டைச் செய்துள்ளனர். திருமணம் நடைபெற்றபோது, பொருள்களின் விலை சந்தை மதிப்பில் என்ன இருந்ததோ, அந்த விலையை வைத்தே கணக்கிட்டு உள்ளனர். அதன்படி, சுதாகரன் திருமணச் செலவாக இவர்கள் கணக்கிட்ட தொகை

ரூ.5 கோடியே 91 லட்சம்.

திருமண வரவேற்புக்காக எம்.ஆர்.சி நகரில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 200 சதுர அடியில் பந்தல் போடப்பட்டு, அதன் இரண்டு பக்கமும் தென்னை ஓலைகளால் ஆன தட்டிகள் வேயப்பட்டு இருந்தன. அதன் செலவு மதிப்பீடு 18 லட்சத்து 81 ஆயிரத்து 600 ரூபாய். உணவு பரிமாறிய இடத்தில் 2 லட்சத்து 16 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலின் மதிப்பீட்டு¢த் தொகை ரூ.17 லட்சத்து 28 ஆயிரம்.

வி.ஐ.பி-க்கள் சாப்பிடுவதற்கு தகரத்தில் அமைக்கப்பட்ட பந்தல் 24,000 சதுர அடி. அதன் செலவு மதிப்பீடு 3 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய். முகப்புப் பந்தல் மற்றும் அதில் இருந்த வேலைப்பாடுகள் 1 லட்சத்து 57,000 சதுர அடி. வண்ணக் காகிதங்களால் செய்யப்பட்டு இருந்த வேலைப்பாடுகளின் செலவு மதிப்பீடு 66 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய். இரும்பு, செங்கல் பயன்படுத்தி அமைக்கப்பட்ட மணமேடை, மணமக்கள் ஓய்வறை, வரவேற்பு அறைகள், கழிப்பறைகளின் மதிப்பு 35 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய். ஏ.சி-களின் செலவு மதிப்பீடு 3 லட்சம் ரூபாய்.

2,500 வி.ஐ.பி நாற்காலிகளுக்குச் செலவான தொகை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய். 10,000 சாதாரண நாற்காலிகளுக்குச் செலவு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். சாப்பாட்டு அறையில் 12,800 சேர்கள் போடப்பட்டு இருந்தன. அதன் செலவு மதிப்பீடு ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய். 4,800 சமையல் மேசைகள் போடப்பட்டு இருந்தன. அதன் செலவு மதிப்பீடு 48,000 ரூபாய். வி.ஐ.பி சமையல் மேசைகளுக்கான செலவு 2 லட்சத்து 72 ஆயிரத்து 880 ரூபாய். மேலும் ஏழு லட்சத்து 28 ஆயிரத்து 527 ரூபாய் சாலைகளில் செய்யப்பட்டு இருந்த அலங்காரங்களுக்குச் செலவான தொகை என்று மதிப்பிட்டு உள்ளனர். இதுபோக, மூன்று வேளை உணவு, குடிநீர், பட்டாசுகள், டோங்கா நடனம், யானை, குதிரை வண்டிகள், வீடியோ, இசை நிகழ்ச்சி, பரத நாட்டியம் என்ற வகையில் செலவான தொகை என மொத்தமாக ரூ.5 கோடியே 91 லட்சத்தை மதிப்பிட்டு உள்ளனர். இவர்களின் இந்த மதிப்பீடு தொடர்பாக நீண்ட குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு 80 பக்கங்களில் அது பதிவும் செய்யப்பட்டுள்ளது.''

பந்தல் அமைக்கச் சொன்னது சசிகலா!


''அரசுத் தரப்பின் இந்தச் சாட்சிகளை எதிர்த்து வாதிட்ட ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார், ''சுதாகரனின் திருமணம் நடைபெற்று இரண்டரை ஆண்டுகள் கழித்து தயாரிக்கப்பட்ட இந்த மதிப்பீடுகள் ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல. அதை மதிப்பீடு செய்துள்ள இந்தச் சாட்சிகள் சுதாகரனின் திருமணத்தை நேரில் பார்க்காதவர்கள். அங்கு அமைக்கப்பட்டு இருந்த வேலைப்பாடுகள், பந்தல்கள் பற்றி இவர்களுக்கு என்ன புரிதல் இருக்க முடியும்? எனவே, இந்தச் சாட்சிகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது’ என்று வாதிட்டார்.

மூத்த வழக்கறிஞர் பி.குமாரின் வாதம் நியாயமானது. அதே சமயம் அரசுத் தரப்புச் சாட்சி உதவிப் பொறியாளர் தங்கராஜ், எப்படி இந்த மதிப்பீட்டுக்கு வந்தார் என்பதைக் கவனமாகப் பார்க்க வேண்டும்.

அரசுத் தரப்பு சாட்சியாகப் பொதுப்பணித் துறையின் மூத்த இன்ஜினீயர் முத்துச்சாமி விசாரிக்கப்பட்டார். இவர், அரசு நிகழ்ச்சிகளில் பந்தல் அமைக்கும் பணிகளை மேற்பார்வை செய்பவர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவிச் செயலாளராக இருந்த ஐ.ஏ.ஏஸ் அதிகாரி ஜவஹர் பாபு, முத்துச்சாமியைத் தொலைபேசியில் அழைத்து, ''முதலமைச்சர் வீட்டில் நடைபெற உள்ள திருமணம் குறித்து உங்களிடம் பேச வேண்டும். எனவே, போயஸ் கார்டன் வீட்டுக்கு வாருங்கள்'' என்று கூறி உள்ளார். அதன்படி முத்துச்சாமி மறுநாள் ஜவஹர் பாபுவை சந்தித்து, சசிகலாவிடம் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து சசிகலா, அவரிடம் 'சுதாகரன் திருமணத்துக்கான பந்தல் அமைக்கும் வேலைகளை எல்லாம் நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.

முத்துச்சாமியின் சாட்சிப்படி, பந்தல்கள் அமைப்பதற்கு விஜய சங்கர் வரைபடம் தயாரித்துக் கொடுத்துள்ளார். அதன்படி, அந்தப் பந்தல்களை அமைப்பதற்கான இடம், மட்டம் ஆகியவற்றை மட்டும் முத்துச்சாமி குறித்துக் கொடுத்துள்ளார்.''

ஜெயலலிதா மேற்பார்வை செய்தார்!

''இதையடுத்து எம்.ஆர்.சி நகரில், ஐந்து முக்கிய பந்தல்கள் 70x50 அடியில் போடப்பட்டு உள்ளன. தூத்துக்குடி ராஜப்ப நாடார் அதை செய்து கொடுத்துள்ளார். 8 தென்னை ஓலைகளால் வேயப்பட்ட பந்தல்கள் 60ஜ்450 அடியில் அமைக்கப்பட்டு உள்ளன. வி.ஐ.பி-களுக்கான உணவுப் பந்தலை 60x200 அடியில் மன்னார்குடி ராஜகோபால் என்பவர் அமைத்துக் கொடுத்துள்ளார். சமையலறை பந்தல்கள்

45x1,356 அடியில் குமரேசன் நாடார் என்பவர் அமைத்துக் கொடுத்துள்ளார். திருமண மேடை, மணமக்கள் ஏ.சி-கள், அவர்களுக்கான ஓய்வறைகள், கழிப்பறைகள் போன்றவற்றை எத்திராஜ் அமைத்துக் கொடுத்துள்ளார். இதற்கான செலவுகள் அனைத்தும் ஜெயலலிதாவின் குடும்பம் ஏற்றுக்கொண்டதாக கூறி உள்ளார். வி.ஐ.பி-களுக்கான அமரும் இடம், அதில் உள்ள வேலைப்பாடுகள், அவர்களின் உணவறைகள் போன்றவற்றை ஆர்ட் டைரக்டர் கோபிநாத் செய்து கொடுத்துள்ளார். தண்ணீர் வசதிக்காக 5 போர்வெல்களை பால்தாசன் என்பவர் போட்டுக் கொடுத்துள்ளார். அதுபோக, லாரிகள் மூலமாகவும் தண்ணீர் சப்ளை நடந்துள்ளது. சி.எஸ்.சந்திரசேகரன் என்பவர் மின் இணைப்பு கொடுத்துள்ளார். இதற்காக 2-10 கே.டபிள்யூ ஜெனரேட்டர்களையும் 4 மொபைல் ஜெனரேட்டர்களையும் அவர் பயன்படுத்தி உள்ளார். இந்த வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, 'ஜெயலலிதாவும் சசிகலாவும் அவற்றை மேற்பார்வையிட்டனர்’ என்றும் முத்துச்சாமி சாட்சியம் அளித்துள்ளார்.''

ஜெயலலிதா செக் கொடுத்தார்!

மணமகளின் தந்தை நாராயணசாமி இவர்களுக்குக் கொடுத்த தொகை போக மீதித் தொகை அனைத்தையும் ஜெயலலிதா கொடுத்துள்ளார். அதுவும் தன்னுடைய பெயரில் செக் கொடுத்துள்ளார். அவை அனைத்தும் வங்கியில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளன. பால்பாபு என்ற வட இந்திய அலங்கார நிபுணருக்கு போயஸ் கார்டனில் இருந்து, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செக் கொடுக்கப்பட்டு உள்ளது. அடையாறு விநாயகர் கோயிலில் இருந்து எம்.ஆர்.சி நகர் வரையிலான பாதையை செப்பனிட்டு இரண்டு பக்கமும் விளக்குகளால் அலங்காரம் செய்த சுப்பிரமணி மற்றும் சாமி ஆகியோருக்கு ஜெயலலிதா தன்னுடைய பெயரில் செக் கொடுத்துள்ளார்.

இப்படி... பந்தல் தொடங்கி, சுதாகரன் திருமணத்தில் நடைபெற்ற அனைத்து வேலைகளையும் மேற்பார்வை பார்த்த முத்துச்சாமியிடம் விசாரித்துத்தான் பொறியாளர் தங்கராஜ், பந்தலுக்கான செலவு மற்றும் இதர விஷயங்களை மதிப்பிட்டுள்ளார். அதுவும், திருமணம் நடந்த 1995-ம் ஆண்டில் அந்தப் பொருள்கள் சந்தையில் என்ன விலைக்கு விற்றதோ அந்த விலையிலேயே மதிப்பிட்டுள்ளார்.

65 ஆயிரம் அழைப்பிதழ்கள்...

மௌலிஸ் அட்வர்டைசிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ். இவரையும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜவஹர் பாபு தொலைபேசியில் தொடர்புகொண்டு, முதலமைச்சர் வீட்டுத் திருமணத்துக்கான அழைப்பிதழை வடிவமைத்து அச்சடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து ரமேஷ், தன்னுடைய நிறுவனத்தில் வடிவமைத்து அழைப்பிதழ்களை ஜெயலலிதா வீட்டில் காண்பித்து, ஒப்புதல் பெற்று, அதன்பிறகு 65 ஆயிரம் அழைப்பிதழ்கள் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் அச்சடித்துக் கொடுத்துள்ளார். அந்த அழைப்பிதழ் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதோடு 5,000 வாகன அனுமதி அட்டைகளும் அச்சடித்துக் கொடுத்துள்ளார். இதற்கு 11 லட்சம் ரூபாயை ஜெயலலிதா செக் மூலம் கொடுத்துள்ளார். இது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது.

மற்றொரு சாட்சி டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் வின்சென்ட். சுதாகரனின் திருமணத்துக்காக விருந்தினர்களை அழைத்து வர கார்களை அனுப்பியவர். 1995 செப்டம்பர் 5-ம் தேதி முதல் 13-ம் தேதி வரைக்கும், இவர் 10 கார்களை அனுப்பி உள்ளார். அதற்காக இவர் பெற்ற தொகை ரூ.27 ஆயிரம். அதற்குக் கொடுக்கப்பட்ட செக்கில் ஜெயலலிதாதான் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்.''

இன்னும் பணம் பாக்கி வைத்துள்ளார்கள்!


''பந்தல் அமைக்கும் சலபதியின் சாட்சிப்படி, மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சச்சிதானந்தம், தன்னிடம் நேரில் வந்து முதலமைச்சரின் வளர்ப்பு மகன் திருமணத்துக்கு மேசை நாற்காலிகள் வேண்டும் என்று கேட்டு அதற்காக முன்பணமாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கான செக் கொடுத்தார். மேஜை நாற்காலிகளை எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்களில் வைக்குமாறு சொன்னார். அதை நான் செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். இவரைத் தொடர்புகொண்ட அடையாறு பார்க் ஷெரட்டன் ஹோட்டல் மேனேஜர் நவீன், சுதாகரன் திருமணத்துக்கான அலங்கார வேலைகளுக்குத் தேவையான பொருள்கள் மற்றும் துணிகளைக் கொடுக்கும்படி கேட்டதாகவும், அதற்கு ஜெயலலிதா பெயரில் 57 ஆயிரத்து 250 ரூபாய்க்கு செக் கொடுத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுவும் வங்கி ஆவணங்களின் மூலம் தெளிவாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த வழக்கு தொடரப்படும் வரை இன்னும் இவருக்கு 2 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்துள்ளனர் என்பதையும் இந்தச் சாட்சி பதிவு செய்துள்ளார். இந்தச் சாட்சிகளின் மூலம் அழைப்பிதழ்கள் எத்தனை அச்சடிக்கப்பட்டன, எத்தனை நாற்காலிகள் போடப்பட்டன என்பது தெளிவாக நிரூபணமாகிறது. இதன்மூலம் அதற்கான செலவுகள் மதிப்பிடப்பட்டு உள்ளன'' என்று நீதிபதி கூறியுள்ளார்.

விளம்பரங்களும் வாகனங்களும், ஆடிட்டர் மூலம் சிக்கிய ஆணித்தரமான ஆதாரங்கள்... இதற்கு ஜெயலலிதா அளித்த விளக்கம் அடுத்த இதழில்!

- ஜோ.ஸ்டாலின்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 15, 2014 6:02 pm

சிவாஜி வீட்டு சீதனம் தையல் கூலி மட்டும்தான்!
குன்ஹா தீர்ப்பு விவரம் - 4


ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணம் பற்றி சாட்சிகள் நீதிமன்றத்தில் பதிவுசெய்த வாக்குமூலங்களையும் 'அந்தத் திருமணத்துக்கு நான் எந்தச் செலவுகளையும் செய்யவில்லை’ என்ற ஜெயலலிதா, ஆதாரங்களுக்கு முன் எப்படி மௌனமாகிப் போனார் என்பதையும் கடந்த இதழில் பார்த்தோம்.



அந்தத் திருமணம் பற்றி ஜெயலலிதாவும் சிவாஜி கணேசனின் குடும்பத்தினரும் சொன்ன, முன்னுக்குப்பின் முரணான தகவல்களை நீதிபதி மைக்கேல் டி குன்ஹா விளக்கிய விதம் பற்றிப் பார்ப்போம்.

என் இதயபூர்வமான நன்றிகள்

''என் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரனுக்கும் சத்தியலட்சுமிக்கும் 7.5.1995 அன்று நடைபெற்ற திருமணம் மற்றும் 06.05.1995 அன்று நடைபெற்ற மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில் நேரிலும் வாழ்த்துகள் அனுப்பியும் சிறப்பித்த ஒவ்வொருவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்... உங்கள் மீது கொண்டுள்ள அன்பு மற்றும் பாசத்தால் உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரிவிக்கும் நன்றியாக ஏற்கவும்.''

- ஜெ.ஜெயலலிதா

தமிழ்நாடு முதலமைச்சர்,

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர்.


- இது சுதாகரனின் திருமணம் நடந்து முடிந்த பிறகு பத்திரிகையில் ஜெயலலிதா கொடுத்த நன்றி அறிவிப்பு விளம்பரம். அரசுத் தரப்பு சாட்சியான தினத்தந்தி நாளிதழின் மூத்த விளம்பர மேலாளர் சுந்தரேசன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. தினத்தந்தி நாளிதழின் அனைத்துப் பதிப்புகளிலும் 11.09.1995 அன்று இந்த விளம்பரம் வெளியானது என்பதையும் சுந்தரேசனின் சாட்சி உறுதிப்படுத்தி உள்ளது. அவருடைய கூற்றை அரசுத் தரப்பு அந்த நாளில் வெளியான தினத்தந்தி நாளிதழ்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கான கட்டணமாக இரண்டு லட்சத்து 47 ஆயிரத்து 660 ரூபாய் ராக் ஆர்ட்ஸ் என்ற விளம்பர நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. குறுக்கு விசாரணையில், இது அரசாங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட விளம்பரம் இல்லை என்பது தெளிவாகி உள்ளது. இந்த விளம்பரம் ஆளும் கட்சி சார்பில் கொடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது நல்ல நகைச்சுவை. இது தொடர்பாக போலீஸுக்கு சுந்தரேசன் கொடுத்த பில்லில் தமிழ்நாடு முதலமைச்சர் என்பதற்குக் கீழே, அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்று அச்சடிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதே சமயம் அரசாங்கம் சார்பில் கொடுக்கப்படும் விளம்பரங்களில் கட்சியின் பெயரோ, கட்சியில் அவர் வகிக்கும் பொறுப்போ இடம் பெறாது என்றும் ஒப்புக்கொண்டு உள்ளார்.''
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் P30a

''கையும் கணக்குகளுமாகச் சிக்கிய ஆடிட்டர்!’

''அரசுத் தரப்பு சாட்சி ஆடிட்டர் ராஜசேகரன், இந்த வழக்கில் மிக முக்கியமான சாட்சி. இவர் ஜெயலலிதாவுக்கு 84-85, 96-97 ஆண்டுகளில் வருமானவரி, சொத்து வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்தவர். ஊழல் தடுப்பு போலீஸார் ராஜசேகரனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியபோது ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றினர். அப்போது, என்னென்ன கைப்பற்றப்பட்டன என்ற மகஜரில் ராஜசேகரன் கையெழுத்துப் போட்டுக்கொடுத்துள்ள பகுதி முக்கியமானது. அதில், 1996 அக்டோபர் 17-ம் தேதி, காலை 11.30 மணியில் இருந்து மதியம் 4.00 மணி வரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் என்னுடைய வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர். நல்லம்ம நாயுடு தலைமையில் வந்த போலீஸ்காரர்கள் ராயப்பேட்டையில் உள்ள எனது வீட்டிலும் எண்:57, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை என்ற முகவரியில் உள்ள எனது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அபிராமபுரம் வீட்டில் இருந்து 48 ஆவணங்களைக் கைப்பற்றினார்கள். அதில் 928 பக்கங்களைக்கொண்ட 38-வது ஆவணம் 'முழுக்க முழுக்க சுதாகரனின் திருமணச் செலவுகள் தொடர்பான ரசீதுகள், செலவுகள் பற்றிய விவரங்களைக் கொண்டவை’ என்று குறிப்பிட்டுக் கையெழுத்துப் போட்டுள்ளார். ஆனால், துரதிருஷ்டவசமாக ஆடிட்டர் ராஜசேகரனை அரசுத் தரப்பு, எதிர்த்தரப்பு... என இருவராலும் குறுக்குவிசாரணை செய்ய முடியவில்லை. அவரை இந்த நீதிமன்றத்துக்குக் கொண்டு வருவதில் இருவருமே தோல்வியடைந்து உள்ளனர். அதன் காரணமாக ராஜசேகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் நாம் ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் இந்தச் சாட்சியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அரசுத் தரப்பு, எதிர்த்தரப்பு என இருவருக்குமே பல வகையில் பயனுள்ளவையாக உள்ளன.

அதில் கிடைத்த முக்கியமான ஆவணங்கள் என்னவென்றால், சுதாகரனின் திருமணம்பற்றி, விவரங்கள் கேட்டு ஜெயலலிதா, சசிகலாவுக்கு வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸ், கோவிந்த் கேப்ஸ், கிரீஸ் மியூசியம் ஃபர்னிச்சர்ஸ், பந்தல் கான்ட்ராக்டர் குமரேசன் நாடார் கொடுத்த ரசீது, பாலு கலர் லேப், குமரன் சில்க்ஸ், நெல் மற்றும் அரிசி விற்பனையாளர் அப்பாஸ், மௌலிஸ் அட்வர்டைசிங் கம்பெனி, ஏ.ஜி.கே. டிராவல்ஸ், ஆங்கர் கேப்ஸ், வின்சென்ட் டிராவல்ஸ், வருமானவரித் துறை ரசீதுகள், அடையார் கேட் ஹோட்டல் ரசீது போன்றவை கைப்பற்றப்பட்டு உள்ளன.''

'போயஸ் கார்டனில் சுதாகரன்!’

''மற்றொரு முக்கிய சாட்சி, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜவஹர் பாபு. இவர் 1992 முதல் 1996 வரை போயஸ் கார்டன் இல்லத்தில் முதலமைச்சரின் உதவிச் செயலாளராகப் பணியாற்றிவர். இவருடைய அலுவலகம் தலைமைச் செயலகத்திலும் முகாம் அலுவலகம் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திலும் இருந்து செயல்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் சசிகலாவும் சுதாகரனும் போயஸ் கார்டனில்தான் வசித்தனர் என்பதையும் சுதாகரனின் திருமண நிச்சயதார்த்தம், நடிகர் சிவாஜி கணேசன் வீட்டில் நடைபெற்றதையும் மணமகன் வீட்டில் இருந்து விலை உயர்ந்த பொருள்கள் பல தட்டுகளில் அங்கு எடுத்துச் சென்றதையும் ஜெயலலிதா அதில் கலந்துகொண்டார் என்பதையும் தனது சாட்சியில் உறுதிப்படுத்தி உள்ளார்.

சுதாகரனின் திருமணம் மற்றும் வரவேற்பு இசைக் கச்சேரிக்காக மாண்டலின் ஸ்ரீநிவாஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைத் தொடர்புகொண்டு பேசியதையும் ஜவஹர் பாபு ஒப்புக்கொண்டு உள்ளார். அதோடு முதல் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகள், கவர்னர்கள் உள்ளிட்ட 400 வி.ஐ.பி-க்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பியதையும் ஒப்புக்கொண்டு உள்ளார்.''

'வெள்ளித் தட்டுகளில் அழைப்பிதழ்!’

''இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சாட்சியில், முதலமைச்சரின் உதவிச் செயலாளர் ஜவஹர்பாபு தன்னை தொலைபேசியில் அழைத்து, முதலமைச்சரைச் சந்திக்கும்படி சொன்னதாகவும் இதையடுத்து மறுநாள் தலைமைச் செயலகத்தில் தன்னுடைய தாயாருடன் போய் ஜெயலலிதாவைச் சந்தித்ததாகவும் தெரிவித்தார். அப்போது, ஜெயலலிதா தன்னுடைய வளர்ப்பு மகன் திருமணத்துக்கு இசைக் கச்சேரி நடத்த வேண்டும் என்று கேட்டதாகவும் அதற்கு, தான் சம்மதித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து மறுநாள் பாஸ்கரன் அவரது மனைவியுடன் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டுக்கு வந்து, இரண்டு தட்டுகளில் அழைப்பிதழ் வைத்ததாகவும் ஒவ்வொன்றிலும் ஒரு பட்டுச் சேலை, ஒரு பட்டு வேட்டி, அங்கவஸ்திரம், குங்குமச் சிமிழ் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். பொறியாளர் முத்துச்சாமியும் தான் பந்தல் வேலைகளை மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருந்தபோது, தனக்கு வெள்ளித்தட்டில் பட்டுச் சேலை, பட்டு அங்கவஸ்திரம், வேட்டியுடன் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டதாகக் கூறி உள்ளார். அதன்மூலம் வி.ஐ.பி-க்களுக்கு வெள்ளித்தட்டுகளில் பத்திரிகை கொடுக்கப்பட்டது நிரூபணமாகி உள்ளது. முத்துச்சாமியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ள வெள்ளித்தட்டு மற்றும் பட்டுச் சேலை ஆகியவற்றை வைத்து அவற்றின் விலை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு என்ன என்பதைக் கண்டறிந்து அதைக் கணக்கிட்டு, இந்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாட்சியங்களை எதிர்த்தரப்பு குறுக்குவிசாரணையில் உடைக்க முடியவில்லை. மாறாக, கிடைத்த ஆவணங்கள் அனைத்தும் குற்றவாளிகள் தரப்புக்கு எதிராக மிக சக்திவாய்ந்த ஆதாரங்களாக உள்ளன.''

'பதில் சொல்ல முடியாத ஜெயலலிதா!’


''சுதாகரனின் திருமணம்பற்றி ஜெயலலிதா நேரில் ஆஜராகி, சாட்சி சொன்னபோது, நான் திருமணத்துக்கு எந்தப் பணமும் செலவழிக்கவில்லை. இதை நான் 1995 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் வருமானவரித் துறைக்கு அளித்த பதிலிலும் தெளிவுபடுத்தி உள்ளேன். மேலும், திருமணம் நடைபெற்றது 1995-ம் ஆண்டு. ஆனால், அதற்கான செலவுகள்பற்றி மதிப்பீடு செய்துள்ள தங்கராஜ், அதை 1997-ம் ஆண்டு தயாரித்துள்ளார். அவர் இதுபோன்ற மதிப்பீடுகளைச் செய்வதில் திறமையற்றவர் என்பது அவரது மதிப்பீட்டில் இருந்து தெரியவருகிறது என்று நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொன்னார். ஆனால், அதே ஜெயலலிதா, 1996-97-ம் வருடம் தாக்கல்செய்த வருமானவரி கணக்கில் திருமணச் செலவுகள் என்று குறிப்பிட்டு 25 லட்சத்து 98 ஆயிரத்து 521 ரூபாய் என்றும் ரொக்கமாக 3 லட்சத்து 94 ஆயிரத்து 240 ரூபாய் செலவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் ஆடிட்டர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி, சுதாகரனின் திருமணத்துக்கு ஆன செலவுகளாக அவர்கள் வருமானவரித் துறையினருக்குத் தாக்கல்செய்த கணக்கில் தெளிவாக 12 லட்சத்து 50 ரூபாய் பத்திரிகைகள் மற்றும் விளம்பரங்களுக்கு செலவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உணவுப் பொருள்கள் சப்ளை செய்த அப்பாஸ் என்பவருக்கு கனரா வங்கி மூலம் 23 ஆயிரம் ரூபாய் கொடுத்த கணக்கு உள்பட பல கணக்குகள் தெரிய வருகின்றன.

திருமணத்துக்கான எல்லாச் செலவுகளையும் மணமகள் வீட்டாரே செய்தார்கள் என்றால், பந்தல், விளக்கு அலங்காரம், கார்கள், அழைப்பிதழ் செலவுகளுக்கு ஜெயலலிதா கையெழுத்துப்போட்டு செக் கொடுத்தது ஏன்? என்ற இந்தக் கேள்விகளுக்கு ஜெயலலிதா தரப்பால் பதில் சொல்ல முடியவில்லை.''

பகலில்கூட படிக்க முடியாத ஆதாரம்

''சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், ''என்னுடைய தகப்பனார் நடிகர் சிவாஜி கணேசன். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மூன்றாவது குற்றவாளி சுதாகரன், என் இளைய சகோதரி சாந்தியின் மகளைத் திருமணம் செய்துள்ளார். அந்த நேரத்தில் எங்களுடைய தந்தை உயிருடன் இருந்தார். நாங்கள் இந்தத் திருமணத்துக்கான மொத்தச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டோம். இதற்காக தனியாக வங்கிக் கணக்குத் தொடங்கினோம். ஸ்டேட் பாங்க், கோபாலபுரத்தில் திருமணச் செலவுக்காக ரூ.92 லட்சம் போட்டு வைத்தோம் என்று சொல்லி உள்ளார். அதிலிருந்து எடுத்து செலவுகளைச் செய்தோம் என்று சொல்லி உள்ளார். ஆனால், வங்கிக் கணக்குப் புத்தகத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. பலமுறை கேட்ட பிறகு கணக்குப் புத்தகத்தின் ஜெராக்ஸ் காப்பியைச் சமர்ப்பித்தார். ஒரிஜினல் காப்பி இருந்தால்தானே ஜெராக்ஸ் காப்பி எடுக்க முடியும். அப்படியானால் நீதிமன்றத்தில் ஒரிஜினலையே சமர்ப்பிக்கலாமே? ஆனால் சமர்ப்பிக்கவில்லை.

இதைக் குறுக்குவிசாரணை செய்தபோது, இந்த வங்கிக் கணக்கு 14.08.1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கணக்கில் வரவு செலவு விவரங்கள் எதுவும் இல்லை.

கணக்குப் புத்தகத்தின் முகப்பு அட்டையின் போட்டோ காப்பி ஒன்றையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில் வங்கியின் சீல் இல்லை. வங்கிக் கிளையின் முகவரி இல்லை. அதில் அச்சாகி இருக்கும் விவரங்களை நல்ல வெளிச்சத்தில், பகல் நேரத்தில்கூட படிக்க முடியவில்லை. இதை எப்படி ஓர் ஆதாரமாக ஏற்க முடியும்? மணமகள் வீட்டார்தான் செலவுகள் செய்தனர். அதுவும் மணமகளின் தாய்மாமன் ராம்குமார்தான் அத்தனை செலவுகளையும் செய்தார் என்றால், அதற்கு ஓர் ஆதாரத்தைக்கூட அவர்களால் தாக்கல்செய்ய முடியவில்லை. சுதாகரனுக்கு உடைகள் தைக்க டெய்லருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தது மட்டும்தான் ராம்குமார் செய்த செலவு. அதற்கு மட்டும்தான் ஆதாரம் உள்ளது.

ஆக, பந்தல் போடுவதற்கான உத்தரவுகள் ஜெயலலிதா வீட்டில் இருந்து போய் உள்ளன. அதற்கான செலவுக்கு ஜெயலலிதா செக் கொடுத்துள்ளார். ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து அழைப்பிதழ்கள் அச்சடிக்க உத்தரவு வந்துள்ளது. அதற்கான தொகையை ஜெயலலிதா கொடுத்துள்ளார். வி.ஐ.பி-களுக்கான அழைப்பிதழ்கள் ஜெயலலிதா வீட்டில் இருந்து கொடுக்கப்பட்டு உள்ளன. அதற்கான தொகையையும் ஜெயலலிதா கொடுத்துள்ளார். மேலும், பட்டுப் புடவைகள், பட்டு வேட்டிகள், அங்கவஸ்திரங்கள், வெள்ளித் தாம்பூலத் தட்டுகள், பட்டாசுகள், கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட யானைகள், குதிரைகள், உணவுப் பொருள்கள், இனிப்புகள், வி.ஐ.பி-கள் தங்குவதற்கான ஏற்பாடுகள், திருமணம் நடந்த இடம், வரவேற்பு நடந்த சாலைகள் ஆகியவற்றில் செய்யப்பட்டு இருந்த விளக்கு அலங்காரங்கள், பத்திரிகைகளுக்குக் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள், விலை உயர்ந்த பரிசுப் பொருள்கள்... போன்றவற்றின் மதிப்பு 3 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 222 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இதை மறுக்க முயன்ற ஜெயலலிதா மற்றும் சுதாகரன் தரப்பால் அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க முடியவில்லை.

மாறாக, இந்தச் செலவை அவர்கள்தான் செய்துள்ளனர் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் அரசுத் தரப்பால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.


தொடரும்...

- ஜோ.ஸ்டாலின்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 15, 2014 10:53 pm

இப்பவே கண்ண கட்டுதே......



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக