புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாள் ஒரு நூல் குழுமத்தில் இணைந்தால் ஒவ்வொரு நாளும் வலை ஏற்றுகிற செய்தியைப் பெறலாம் Poll_c10நாள் ஒரு நூல் குழுமத்தில் இணைந்தால் ஒவ்வொரு நாளும் வலை ஏற்றுகிற செய்தியைப் பெறலாம் Poll_m10நாள் ஒரு நூல் குழுமத்தில் இணைந்தால் ஒவ்வொரு நாளும் வலை ஏற்றுகிற செய்தியைப் பெறலாம் Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாள் ஒரு நூல் குழுமத்தில் இணைந்தால் ஒவ்வொரு நாளும் வலை ஏற்றுகிற செய்தியைப் பெறலாம் Poll_c10நாள் ஒரு நூல் குழுமத்தில் இணைந்தால் ஒவ்வொரு நாளும் வலை ஏற்றுகிற செய்தியைப் பெறலாம் Poll_m10நாள் ஒரு நூல் குழுமத்தில் இணைந்தால் ஒவ்வொரு நாளும் வலை ஏற்றுகிற செய்தியைப் பெறலாம் Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
நாள் ஒரு நூல் குழுமத்தில் இணைந்தால் ஒவ்வொரு நாளும் வலை ஏற்றுகிற செய்தியைப் பெறலாம் Poll_c10நாள் ஒரு நூல் குழுமத்தில் இணைந்தால் ஒவ்வொரு நாளும் வலை ஏற்றுகிற செய்தியைப் பெறலாம் Poll_m10நாள் ஒரு நூல் குழுமத்தில் இணைந்தால் ஒவ்வொரு நாளும் வலை ஏற்றுகிற செய்தியைப் பெறலாம் Poll_c10 
4 Posts - 5%
Rutu

3 Posts - 4%
prajai

2 Posts - 2%
Jenila

Baarushree

ரா.ரமேஷ்குமார்

manikavi

1 Post - 1%
viyasan

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாள் ஒரு நூல் குழுமத்தில் இணைந்தால் ஒவ்வொரு நாளும் வலை ஏற்றுகிற செய்தியைப் பெறலாம்

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sat Nov 07, 2009 10:44 pm

நாள் ஒரு நூல் குழுமத்தில் இணைந்தால் ஒவ்வொரு நாளும் வலை ஏற்றுகிற செய்தியைப் பெறலாம்
அன்புடையீர்

வணக்கம். தமிழம் வலையின் இணைப்பாக - நாள் ஒரு நூல் - என்ற இந்தப்
பகுதியானது 9-10-2008 இல் தொடங்கப்பட்டு தொடரப்படுகிறது. ஒவ்வொரு நாளும்
குறைந்தது ஒரு இதழ் அல்லது நூலாவது வலையேற்ற வேண்டும் என்பதே எமது இலக்கு.
வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்டவைகளை வலையேற்றி
மகிழ்கிறோம்.

விடுதலைப் பறவை என்ற உருட்டச்சு இதழைத் தொடங்கி 85 களில் நடத்திய பொழுது
எமக்கு மாற்று இதழாக வந்தவற்றை, தொகுத்து அடுக்கிப் பார்த்தேன். பல
நண்பர்களின் உயிர்த்துடிப்பு அதில் தெரிந்தது. சேகரிக்கத் தொடங்கினேன்.
சேகரித்தவற்றைச் சிற்றிதழ்க் கண்காட்சி என்ற பெயரில் பல ஊர்களிலும்
காட்சியாக வைத்து அங்குள்ளவர்களிடம் உள்ள இதழ்களை யெல்லாம் திரட்டலானேன்.
முதல் சிற்றிதழ்க் கண்காட்சி தஞ்சையில் நடந்தது. இறுதிக் கண்காட்சி
சென்னையில் நடந்தது.

இதழைச் சேகரிக்கத் தொடங்கிய நான், அந்த ஒரு இதழை வைத்துக் கொண்டு, அந்த
இதழைப் பற்றி முழுமையாகச் சொல்ல முடியாது என்ற உணர்வுக்கு வந்ததும் - இதழை
முழுமையாகச் சேகரிக்கத் தொடங்கினேன்.

முதன் முதலாக கோவை யாழ் நூலக நண்பர் திரு துரைமடங்கன் 100 தரமான இதழ்களை
அன்பாகக் கொடுத்து ஊக்குவித்தார். அவரது ஊக்குவிப்பே என்னைத் தொடர
வைத்தது. பலரும் இதழ்களை அன்போடு கொடுத்தனர்.

திருமிகு வல்லிக்கண்ணன், தொ.மு.சி. ரகுநாதன், சரஸ்வதி விஜயபாஸ்கரன்,
சுட்டி சுந்தர், நிகழ் ஞானி, தஞ்சை சுகன், குழிவிளை விஜயகுமார், பெங்களூர்
ஜகந்தாதன்... என நண்பர்கள் பலரும் இதழ்களைக் கொடுத்து உதவினர்.

அந்தனி ஜீவா, செ.கணேசலிங்கன், எஸ்.எல்.எம்.ஹனீபா போன்றவர்களும் இதழ்களை
அளித்தனர். கனடா, பிரான்ஸ், சுவிஸ், மலேசியா, துபாய் என்று உலகநாடுகளில்
வாழும் இதழாளர்களும் தங்களது இதழ்களை அனுப்பி வைத்தனர்.

நான் நடத்திய சிற்றிதழ்ச் செய்தி (இதழ்1 டிசம்பர் 1991) என்ற இருமாத
இதழுக்கு மாற்றிதழாக, அப்பொழுது வெளிவந்த அனைத்துச் சிற்றிதழ்களும் வந்தன.
1999 இல் சிற்றிதழ்ச் செய்தியை நான் நிறுத்திய போதும் நண்பர்களின்
சிற்றிதழ்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

சிற்றிதழ்களைத் திரட்டுவதற்காகப் பொள்ளாச்சியில் உள்ள ஒரு நண்பர்
வீட்டிற்குச் சென்ற பொழுது, அவர் ஒரு சில இதழ்களை மட்டும் கொடுத்தார்.
அடுத்த முறை நான் சென்ற போது அவர் இல்லை. அவரது வீட்டில் இருந்த அனைத்துத்
தாள்களும் பழைய புத்தகக் கடைக்கு போட்டு விட்டதாகச் சொன்னார்கள்.
இப்படித்தான் பல இலக்கியவாதிகளுடைய இலக்கியச் சொத்துகள் அவரது மறைவிற்குப்
பிறகு பழைய புத்தகக் கடைக்குச் சென்று கொண்டிருக்கின்றன.

பிரமிள் அபூர்வமான நண்பர். அவரிடமிருந்து ஒன்றிரண்டே வாங்க முடிந்தது.
அவரிடம் இருந்த இதழ்கள் அவரைப் பாதுகாத்தவரிடம் சென்றுவிட்டன. தன்
தந்தையின் நினைவாக, தலைவரின் நினைவாக, தன் படைப்பின் நினைவாக
ஒவ்வொருவரும், வைத்திருந்த இதழ்களை நான் வாங்கி வரும்போதெல்லாம் என்
நெஞ்சம் நெகிழும்.

கோட்டையூர் ரோஜா முத்தையா அவர்களது சேகரிப்பு அவருக்குப் பிறகு வெளிநாடு
சென்று விட்டது. நூலகர் திரு சங்கரலிங்கம், அருமையான நண்பர். அவரிடம்
மைக்ரோபிலிமின் குறை நிறைகளை நுட்பமாக அறிய முடிந்தது. தொடர் பொருட்செலவு
உடைய இந்த முறைவழி நம் சேகரிப்பைப் பாதுகாக்க முடியாதே என்று வருந்தினேன்.
ரோஜா முத்தையா நூலகத்தில் கிடைத்தற்கரிய பொன்னி, பிரசண்ட விகடன், முல்லை
எனப் பல இதழ்களைப் பார்த்தேன். சிலவற்றி்ன் பக்கங்கள் கிழிக்கப்பட்டு
இருந்தன.

எனக்குக் கிடைத்த மணிக்கொடி இதழ்களில் (12 இதழ்களிலும்), புதுமைப்
பித்தனின் கதைப் பக்கங்கள் கிழிக்கப் பட்டிருந்தன. தமிழ் மக்களுக்குப்
பயன்பட வேண்டிய அந்த இதழ், தனி மனிதனுக்கு மட்டுமே பயன்பட்டிருப்பது கண்டு
வேதனை அடைந்திருந்தேன். அப்பொழுது....

நண்பர் ஒருவர் எனது வீட்டுக்கு வந்தார். சூறாவளி இதழிலிருந்து
புதுமைப்பித்தன் கட்டுரைகளை மட்டும் படியெடு்த்துக் கொடுங்கள் என்று
கேட்டார். அவர் கேட்டது அழகிய குழந்தையின் கட்டை விரலை மட்டும் வெட்டித்தா
என்று கேட்பது போல இருநத்து. நான் தரவில்லை. முழுமையாக - அட்டை முதல்
அட்டை வரை - பாதுகாப்பதாக இருந்தால் மட்டுமே தருவது என்று முடிவு
செய்தேன்.

இதழ்கள் சேர்ந்து கொண்டே இருந்தன. இவற்றைப் பாதுகாத்து அடுத்த
தலைமுறையினருக்குக் காட்ட வேண்டும் என்ற நினைவு ஓடிக் கொண்டே இருந்தது.

அப்பொழுதுதான் மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை, போன்றவைகள் -
நூல்களைத் - தட்டச்சு செய்து படவடிவக் கோப்பாகச் சேகரிப்பது பற்றி
அறிந்தேன். மிகப் பெரிய முயற்சி இது. கிடைத்தற்கரிய பல சங்க இலக்கிய
நூல்களைப் படிக்கவும், வலையிறக்கிச் சான்று காட்டவும் உதவிய அந்த
அமைப்புகள் வணங்குதற்குரியவை.

என் சேகரிப்பில் உள்ள இதழ்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குக் காட்ட வேண்டும் என்ற நினைவு ஓடிக் கொண்டே இருந்தது.

இந்தச் சூழலில்தான்...

நூலகம்.நெட் பார்த்தேன். படவடிவக் கோப்பாக - உள்ளதை உள்ளபடி காட்டும்
மாயக் கண்ணாடியாக - நூல்களையும், இதழ்களையும் பார்த்தேன். (இதுவரை இதழ்களை
இப்படிப் பாதுகாத்தவர் யாருமிலர்) என்னிடம் உள்ள இதழ்களை இந்த முறையில்
சேகரித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.

நூலகம் நண்பர்களின் தொழில் நுட்ப உதவியோடு, இதழ்களைப் படவடிவக்
கோப்புகளாக்கி வலையேற்றத் தொடங்கினேன். சேகரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான
தொழில்நுட்ப விளக்கமும் நூலக நண்பர்களின் வழியாகக் கிடைத்த பொழுது, அரிய
நூல்களையும் சேகரிக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது. அவர்களது
சேகரிப்பில் விடுபட்ட இதழ்களைத் தேடத் தொடங்கினேன்.

இந்த நிலையில்தான் என்னுடன் இணைய வழி தொடர்பு கொண்ட ஈரோடு நண்பர்
திரு.கே.பி.இரவி, மறைந்த திருமிகு வி.பி. தெய்வநாயகம் பிள்ளை மற்றும்
ஆறுமுகம் பி்ள்ளையின் சேகரிப்பை முழுமையாகத் தந்து உதவினார்.
கிடைத்தற்கரிய பல நூல்களைப் பாதுகாத்து வைத்த பெருமை அவரையே சேரும்.
நூல்கள் அனைத்தையும் ஈரோடு நண்பர் தனது சொந்தச் செலவில் எனது வீ்டு வரை
கொண்டு வந்து கொடுத்தது என்னால் மறக்க முடியாதது.

இலக்கணம் தொடர்பான நூலை வெளியிடுவதற்கு, தெளிதமிழ் இதழாளர் திருமிகு
இரா.திருமுருகனார் அவர்களிடம் அனுமதி கேட்டதற்கு, மன மகிழ்வுடன் இசைவு
தந்தார்.

இன்னும் நிறைய நண்பர்களிடம் தொடர்பு கொண்டு வருகிறேன். அவர்கள்
அனைவரும் தங்களிடம் உள்ள இதழ்களையும் நூல்களையும் தருவதாகச்
சொல்லியுள்ளார்கள்.

தமிழம் வலையில் நாள் ஒரு நூல் பகுதியில் வைக்கப்படுபவை அனைத்துமே இலவசமாக நம் மக்கள் வலை இறக்கிப் படிக்கவும், பயனபடுத்தவும் தான்.

தமிழில் வெளி வந்த அனைத்து நூல்களையும், இதழ்களையும் பாதுகாத்து அடுத்த
தலைமுறையினருக்கு இலவசமாக, எளிமையாகக், கிடைக்கும் வகையில் கொடுக்க
வேண்டும் என்பதே என் விருப்பம்.

இந்த வகையில் உதவும் அனைவரையும் நான் அன்போடு வணங்குகிறேன்.

அன்புடன்
பொள்ளாச்சி நசன், தமிழம் வலை, (9-1-2009)
www.thamizham.net - mobile : 9788552061, 9842002597, phone : (04259) 221278
pollachinasan@gmail.com - pollachinasan@yahoo.com - pollachinasan@hotmail.com
link------ http://www.thamizham.net/naalorunool-u8.htm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக