ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வெற்றிவேல்! வீரவேல்!

View previous topic View next topic Go down

வெற்றிவேல்! வீரவேல்!

Post by ayyasamy ram on Mon Dec 08, 2014 10:40 am

சக்தியிடம் வேல் வாங்கி, அசுர சம்ஹாரம் செய்தான் முருகப் பெருமான். அப்படி ‘வேல் வாங்கும் வைபவம்’ இன்றும் சிக்கலில் விசேஷமான விழா. அந்த வேலை வாங்கியதும், உற்சவமூர்த்தியான முருகனின் திருமேனியில் வியர்வை துளிர்க்கும் அதிசயத்தை, நாகப்பட்டினம் அருகிலுள்ள ‘சிக்கல்’ திருத்தலத்தில் தரிசிக்கலாம். இதை வட்டார வழக்கில், ‘சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சம்ஹாரம்’ என்று சொல்வார்கள்.
-

-
‘வேல்’ என்னும் சொல், ‘வெல்’ என்பதன் நீட்சியாகவே அமைந்திருக்கிறது; ‘வெற்றிதான் எப்போதும்’ என்பதை நுட்பமாக உணர்த்திக் கொண்டிருக்கிறது.


காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த பல கோயில்களில், வேலுக்கான கோயிலும் ஒன்று. அதை ‘வேற்கோட்டம்’ என்றே குறிப்பிடுகின்றன இலக்கியங்கள். இன்றும், இலங்கையின் புகழ்மிக்க கோயிலான நல்லூர் கந்தசாமி கோயிலின் மூலஸ்தானத்தை அலங்கரிப்பது வேல்தான். மதுரை பைக்காரா அருகே உள்ள ஆலயத்திலும் மூலவர் வேல்; காரைக்குடியை அடுத்த குன்றக்குடிக்கு அருகே மயிலாடும்பாறை என்னுமிடத்தில் சமீபத்தில் அமைந்துள்ள புதிய ஆலயத்திலும் மூலவராக ‘வேல்’ அமைந்திருக்கிறது.

இந்த வேலை ஏந்தியதால்தான், வேலன், வேலன், வேலாயுதன் என்றெல்லாம் பெயர்கொண்டான் முருகப்பெருமான். இந்த வேலின் சிறப்பைப் பற்றி ‘வேல்விருத்தம்’, ‘வேல் மாறல்’ என்றெல்லாம் அடியார்கள் பாடியிருக்கிறார்கள். ‘வழிக்குத் துணை வடிவேல்’ என்றே வழக்குமொழி.

ஐந்து வயதாகியும் பேசவில்லையே என்று வருந்தினார்கள் பெற்றவர்கள். குழந்தையைத் தூக்கி வந்து செந்திலாண்டவனின் சன்னிதியில் கிடத்தினார்கள். கண்ணீர் சிந்திக் கலங்கினார்கள். அவர்கள் மனமொன்றி, கண்மூடித் துதித்த நேரத்தில், செந்திலாண்டவன் குழந்தையைப் பார்த்தான். அதன் வாயைத் திறக்கச் சொன்னான். குழந்தையின் நாக்கில், தம்முடைய வேலால் ‘ஷடாக்ஷரத்தை’ எழுதினான். அதாவது, முருகனின் அருளைப் பெருவதற்கான ஆறெழுத்து.

ஆறுக்கும் முருகனுக்கும் நிரம்பத் தொடர்புண்டு. சிவபிரானின் ஆறு நெற்றிக் கண்களில் இருந்தும் ஆறு நெருப்புப் பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை ஓர் ஆறு (கங்கை) தாங்கிச் சென்று, சரவணப் பொய்கையில் சேர்த்தது. அந்தப் பொறிகள் ஆறும், ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக உருக்கொண்டனர். அவற்றை ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். இப்படி ஆறு என்பது முருகனுக்கே உரித்தானது. அவனுக்குரிய மந்திரத்தின் அட்சரங்கள் ஆறு. அவனுக்குரிய யந்திரம் அறுகோணம். தவிர, ‘ஆறு’ என்பதற்கு வழி என்றும் பொருள். தம் பக்தர்களுக்கு வழியாகவும், அந்த வழியில் அடையப்படும் பொருளாகவும் விளங்குபவனும் முருகன்தான்.

ஆறுக்குரியவன், தம் ஆறெழுத்து மந்திரத்தை குழந்தையின் நாவில் எழுதியதும், பேச்சு வராத குழந்தை ‘பூமேவு செங்கமலப் புத்தேளும்…’ என்று பாடத் தொடங்கியது. அந்தப் பாடலில், தனக்கு அருள்புரிந்த பெருமானை வர்ணிக்கிறது.

பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு
திருத்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும் கச்சை
திருவரையும் சீரடியும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் விரிகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்…


கலிவெண்பா இப்படித்தான் பிறந்தது. குமரகுருபரர் என்று புகழ்பெற்ற மகானின் சரிதம் இது.

குமரகுருபரர் மட்டுமா? ஸ்ரீசங்கரர், கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரி நாதர், பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள், திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள், வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள், தேவராய ஸ்வாமிகள், ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர், பகழிக் கூத்தர், பொய்யாமொழிப் புலவர், வாரியார் ஸ்வாமிகள்… என்று முருகன் அடியார்களின் பட்டியல் மிக நீளமானது.
-

-

அடிப்புறம் அகன்றும், முகப்பு கூர்மையாகவும் அமைந்த வேலை, ஞானத்தின் குறியீடாகவும் சொல்வார்கள். அதை சீவக சிந்தாமணியில் திருத்தக்க தேவர் குறிப்பிடுகிறார். விஜயை என்ற பெண், அறிவு பெற்றாள்; தெளிவுற்றாள் என்று சொல்லும்போது, ‘வேல் பெற்று எழுந்தாள்’ என்கிறார்.

முருக பக்தரான அடியார்கள், வேலின் சிறப்பை எவ்வளவுதான் சிறப்பித்துப் பாடினாலும் வியப்பில்லை. ஆனால், சிலப்பதிகாரத்தில், இளங்கோவடிகள் விவரிக்கும்போது, அவருக்குள் இருந்த பேதமற்ற மனோபாவமும், எடுத்த கருத்தை குறைவின்றிச் சொல்லும் கவிஞனின் பெருமிதமும் வியப்பூட்டுகின்றன.

சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றம்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல் அன்றே
பார் இருளை பௌவத்தின் உள்புக்கு பண்டொருநாள்
சூர்மா தடிந்த சுடர் இலைய வெள்வேலே!

கவனித்துப் பார்த்தால், முருகனின் தலங்கள், அவதாரச் சிறப்பு, அதில் முதன்மை பெறும் ஆயுதமான வேல் அத் தனையும் இதில் இடம்பெறுகின்றன. திருச்செந்தூர், திருசெங்கோடு, திருவேரகம் ஆகிய தலங்களில் எழுந்தருளியுள்ள இறைவனான முருகனின் வேல், கடலுள் புகுந்தது; சூரனை வீழ்த்தியது; அது சுடர் விடுகின்ற இலை போன்று அகன்றும், கூரியதுமான, வெற்றிவேல்!

இளங்கோவடிகள் என்று தெரியாமல் படித்தால் இன்னொரு முருகபக்தர் என்று நினைக்கின்ற வடிவில் அமைந்துள்ளது அடிகளின் செய்யுள்.
-
சேயோன் மேய மைவரை உலகு’ என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது முருக வழிபாடு. ‘செவ்வேள்’ என்றும் ‘செய்’ என்றும் முருகனைக் குறிப்பிடுகின்றன சங்க இலக்கியங்கள். திருப்பரங்குன்றத்தின் திருவிழாவை பரிபாடல் விளக்குகிறது. காலங்காலமாக, மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட வேலாயுதனைப் பற்றிச் சொல்லும்போது வாரியார் சுவாமிகள் சொன்னார்: “வேலை வேலை என்று ஏன் கதறுகிறீர்கள்? வேலை கொண்டவன் யார்? அவனிடம் கேளுங்கள். வேலை நிச்சயம் கிடைக்கும்.

‘வேலை வணங்குவதே வேலை’ என்று இருங்கள். வாழ்க்கை சிறக்கும்.”

-
அருமைதான்; வடிவேல் துணையிருக்க வழியில் தடையேது?!
-
வித்யாரண்யன் - கல்கி தீபாவளி மலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: வெற்றிவேல்! வீரவேல்!

Post by mbalasaravanan on Mon Dec 08, 2014 1:20 pm

avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: வெற்றிவேல்! வீரவேல்!

Post by M.Saranya on Mon Dec 08, 2014 2:25 pm

அருமை அருமை....
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: வெற்றிவேல்! வீரவேல்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum