ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 T.N.Balasubramanian

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 KavithaMohan

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 KavithaMohan

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 SK

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தினம் ஒரு புத்தகம்

View previous topic View next topic Go down

தினம் ஒரு புத்தகம்

Post by balakarthik on Sun Nov 08, 2009 5:10 pm

நண்பர்களே நான் படித்த புத்தகங்களையும், எழுத்தாளர்கள்,சிற்றிதழ்கள், பதிப்பகங்கள் பற்றியும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்

எனது கீதை

குகன்.
விலை -ரூ40.00. பக்கம்-112
நாகரெத்னா பதிப்பகம்.
சென்னை.

( நூல் பற்றிய சிறு குறிப்பு : மே 26,2006 அன்று "எந்து கீதை" நூல் வெளியீடப்பட்டது. இந்த நூலை நீதியரசர். வேணுகோபால் அவர்கள் வெளியீட, முதல் பிரதியை 'கலைமாமணி' டி.கே.ஸ்.கலைவாணன் அவர்கள் பெற்றுக் கொண்டார். மறைந்த உவமை கவிஞர் சுரதா அவர்கள் இறுதியாக அணித்துரை எழுதியது இந்த "எனது கீதை" நூலுக்கு தான்.)

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இடம் பெறும் கல்வி, முயற்சி, வேலை, உழைப்பு, பணம், அனுபவம், காதல், திருமணம், குழந்தை, நட்பு, காலம், குடும்பம், ஒற்றுமை, வெற்றி தோல்வி, நம்பிக்கை, நகைச்சுவை, மகிழ்ச்சி, கடவுள் என்பது போன்ற 25 தலைப்புகள். இந்தத் தலைப்புகள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவசியமான ஒன்றாக இருந்தாலும் இவை ஒவ்வொருவரிடமும் வேறுபட்டுப் போயிருப்பதற்கான காரணம் என்னவாயிருக்கும் என்கிற எண்ணத்தில் நூலாசிரியர் சிந்திக்க முற்பட்டிருக்கிறார். அவருக்கு அவர் படித்த புத்தகங்கள், கிடைத்த நட்பு போன்றவை ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது. அந்த விளக்கங்களை, அனுபவங்களை நூலாக்க முயற்சித்து வெற்றியும் கண்டிருக்கிறார்.

ஒவ்வொரு கட்டுரைக்கும் அவருடைய கருத்தைத் தெரிவிக்கும் நூலாசிரியர் அதற்கு ஆதாரமாக தான் படித்த அல்லது கேட்ட குட்டிக்கதைகள் மற்றும் தனக்கு மின்னஞ்சலில் வந்த கதைகளை இடையிடையே சொல்லி படிப்பதற்குச் சுவையாக்கி இருக்கிறார். இந்நூலில்,

"வேலை" எனும் தலைப்பின் கீழ் வரும் "தனக்கு பெயர் கிடைக்கும் என்பதற்காக செய்ய முடியாத வேலையை எல்லாம் ஒத்துக் கொண்டு இறுதியில் எந்த வேலையும் செய்ய முடியாமல் ஓய்ந்து பொகும் அளவிற்கு உழைக்கக் கூடாது."

"குடும்பம்" என்கிற தலைப்பில் "நாம் செய்யும் வேலை குடும்பத்தை உயர்த்தும்படியாக இருக்க வேண்டுமே தவிர, குடும்பத்தை ஒதுக்கும்படியாக இருக்கக் கூடாது"

"முயற்சி" எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ள "தோற்பவர்கள் பாதுகாப்பைத் தேடுகிறார்கள். வெற்றி பெறுபவர்கள் வாய்ப்பைத் தேடுவார்கள். தோல்வி என்பது குற்றமல்ல, நம் முயற்சிகளில் உள்ள பிழை."

"ஒற்றுமை" எனும் தலைப்பில் இடம்பெற்றிருக்கும் "என்னதான் தனி மனிதன் சிந்தனை, முயற்சி, தன்னம்பிக்கை என்று சொன்னாலும், சில இடங்களில் சாதித்து வெற்றிகளைக் குவிப்பது ஒற்றுமையான முயற்சிதான்."

"நம்பிக்கை" எனும் தலைப்பில் இருக்கும் "தன்னம்பிக்கை வந்தவுடன் கடவுள் மீது நம்பிக்கை குறைந்து விட்டது. எந்தப் பிரச்சனையானாலும் நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். கடவுளிடம் சென்று முறையிடுவதைக் குறைத்து விட்டேன்."

-என்கிற வாசகங்கள் நன்றாக இருக்கிறது. இந்த வாசகங்கள் பலருக்கும் பொருத்தமானதாக இருக்கலாம்.

குகன் எழுதியிருக்கும் இந்த "எனது கீதை" நூலை வெளியிட்டுள்ள சென்னை, நாகரெத்னா பதிப்பகம் ஒவ்வொரு தலைப்பையும் தனிப்பக்கத்தில் துவக்காமல் தொடர்ச்சியாகக் கொண்டு சென்றிருப்பதும், பல பக்கங்களில் அதிகமான அளவில் இடம் பெற்றிருக்கும் எழுத்துப் பிழைகளைக் கவனிக்காமல் விட்டிருப்பதும் இந்நூலின் குறைகளாகத் தெரிந்தாலும், நாம் தெரிந்து கொள்ள நிறைய தகவல்களும் இருக்கின்றன.

நட்புடன்
கார்த்திக்
avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தினம் ஒரு புத்தகம்

Post by balakarthik on Sun Nov 08, 2009 6:48 pm

புத்தகம் படிப்பதால் உடல் எடை குறையும்

உங்களின் குழந்தைகள் குண்டாக இருக்கிறீர்களா? அவர்களின் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் அவர்களுக்கு நல்ல கதை புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். அவர்களின் எடை தானாகவே குறையும்.

நல்ல புத்தகங்களை படிக்கும் குழந்தைகளின் உடல் எடை குறைவதாகத் தெரிய வந்துள்ளது.

குறிப்பிட்ட சுகாதார வாழ்க்கை முறை மற்றும் உடல் எடையை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல் போன்றவை தொடர்பான புத்தகங்கள் குழந்தைகளின் உடல் எடையை குறைக்க உதவும் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வுக்காக 9 வயது முதல் 13 வயதுடைய பெண் குழந்தைகளிடம் வயது தொடர்பான கதை புத்தகங்கள் அளிக்கப்பட்டது. இவர்கள் அனைவருமே உடல் எடை குறைப்பதற்கான திட்டத்தில் இருந்தவர்கள்.

இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களைப் பொருத்தவரை குழந்தைகள் நல மருத்துவர்களின் உதவியுடன் நேர்மறையான செய்திகளும், வலுவான முன்னுதாரணங்களும் இடம் பெற்றிருந்தன.

சுமார் 6 மாதங்களுக்குப் பின் அந்த குழந்தைகளின் உடல் எடையைக் கணக்கிட்ட போது, சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படித்த 31 பேர் குறிப்பிடத்தக்க அளவிற்கு எடை குறைந்திருந்தது கண்டறியப்பட்டது.

எனவே குழந்தைகளுக்கு உபயோகமான அறிவுரையை அளிக்கும் புத்தகங்களை பெற்றோர், குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்தால் அது உடல் எடையைப் பராமரிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சிக்கு தலைமை வகித்த சாரா ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார்.

இளம் பெண்களின் வாழ்க்கை முறையை சுகாதாரமானதாக்குவதற்கு இலக்கியம் பயன்படுகிறது என்பதற்கான முதலாவது ஆய்வாகும்.

குழந்தைகளிடத்தில் உடல் பருமன் என்பது தற்போது சாதாரணமாக பரவலாக ஏற்படக்கூடியதாகி விட்டது. சுமார் 6 முதல் 19 வயது வரையிலான குழந்தைகளில் 16 விழுக்காட்டினர் அதிக எடையுடனும், குண்டாகவுமே காணப்படுகிறார்கள் என்று அண்மை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த 1980ஆம் ஆண்டுவாக்கில் இந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒருபங்கினர் கூட குண்டாக இருக்கவில்லை என்றும் அது கூறுகிறது.

எனவே குழந்தைகள் உடல் எடையைக் குறைப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு வழிகளைக் கண்டறிந்து வருகிறார்கள்.
avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தினம் ஒரு புத்தகம்

Post by மீனு on Sun Nov 08, 2009 6:51 pm

புத்தகம் படிப்பதால் உடல் எடை குறையும்

அப்படியா ,,இது நமக்கு தெரியாத புதிய செய்தி ..நன்றி கார்த்திக்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: தினம் ஒரு புத்தகம்

Post by balakarthik on Sun Nov 08, 2009 6:54 pm

புத்தகம் இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள்!

1) நிச்சயமாக திரும்பிவரும் என்ற மூடநம்பிக்கையுடனோ, திரும்பவரவே வராது என்ற நம்பிக்கையுடனோதான் புத்தகத்தை இரவல் கொடுக்க நேரும். இரண்டுமே கொடுப்பவருக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல.

2) புத்தகத்தை இரவல் கொடுத்த ஓரிரு நாட்களில் அந்தப் புத்தகத்தை ஏதாவது குறிப்புக்காகவோ, தகவலுக்காகவோ தேட நேர்கிறது.

3) ‘எந்தப் புத்தகத்தையுமே இரண்டொரு நாளில் படித்து விடுவேன். குடுங்க. படிச்சுட்டு மேக்ஸிமம் ஒரே வாரத்துல குடுத்துடுவேன்’ – இது இரவல் வாங்கும் எல்லாரும் சொல்லும் வாசகம். ஆனால் கவிஞர். வாலியின் டெம்ப்ளேட் வரிகளைப் போல, இரவல் வாங்குபவர்களுக்கு எப்போதுமே மாதங்கள் வாரங்களாக, யுகங்கள் கணங்களாகத்தான் இருக்கின்றன.

4) இரவல் வாங்கியவர் பெயர் மிஸ்டர்.எக்ஸ் என்று வைத்துக் கொண்டால், வாங்கிய ஓரிரு வாரங்களுக்குத்தான் அவர் மிஸ்டர்.எக்ஸ் ஆக இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் ‘என்கிட்ட அந்த சுஜாதா புக்கை வாங்கீட்டு போனவர்’ என்றும், இன்னும் கொஞ்ச நாளில் ‘புக்கை வாங்கீட்டு திருப்பியே தராதவர்’ என்றும்தான் அவர் பற்றிய பிம்பம் மனதில் படிகிறது.

5) நாம் இரவல் கொடுத்த புத்தகத்தை நம்மிடம் இரவல் வாங்கியவரிடம், இன்னொருவர் இரவல் கேட்கும்போது ‘நம்மளே இரவல் வாங்கினதாச்சே.. குடுக்கலாமா வேண்டாமா’ என்ற குழப்பத்திற்கு ஆளாக்குகிறோம். அல்லது அவர்கள் இரவல் குடுத்தால் ‘இரவல் வாங்கியதை இரவல் கொடுத்த’ பாவத்திற்கு அவரை ஆளாக்குகிறோம்.

6) வாங்கிய புத்தகத்தில் ஏதாவது அடிக்கோடிடுவது, கிறுக்குவது போன்றவற்றை செய்யும் சுதந்திரம் இல்லாமல் வாங்கியவரை தவிக்க வைக்கிறோம். அல்லது அப்படி அவர் செய்தால் ‘இப்படிப் பட்டவருக்குக் கொடுத்தோமே’ என்ற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்.

7) உண்மையாகவே அந்தப் புத்தகத்தை வாங்கியவர் தொலைத்து விட்டால், அவர் அப்படிச் சொல்லும்போது அதை நம்ப முடியாமல் அவரைப் பற்றி நாம் தவறாகப் புரிந்து கொள்ள நேர்கிறது. உண்மையாகவே தொலைக்காமல் அவர் அப்படிச் சொல்வதானால்... (மீண்டும் 6வது பாராவின் கடைசி வரிகளைப் படிக்க....)

8) இரவல் குடுத்து திரும்ப வராத சோகத்தில் நாமிருக்கும்போது, வேறொரு நண்பர் இரவல் கேட்க, சூடு கண்ட பூனையாய் அவருக்கு நாம் இரவல் கொடுக்க மறுக்க, அவர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.

9) நண்பனுக்குப் பணம் கொடுத்தால் நட்பு, பணம் இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல, நண்பனுக்குப் புத்தகம் கொடுத்தால் அந்தப் புத்தகம், அதற்கான பணம், நட்பு மூன்றையுமே நாம் இழக்க நேர்கிறது.

10) இரவல் வாங்கினால் உடனே படிக்க வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லை. அதே காசு கொடுத்து வாங்கியிருந்தாலாவது, அதன் மதிப்புணர்ந்து நிச்சயமாகப் படிப்பார்கள்... (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!)

11) நல்ல புத்தகம் என்பதால்தான் பகிர்ந்து கொள்கிறோம். அந்த நல்ல புத்தகத்தை இரவலாகக் கொடுப்பதால் அந்த நல்ல புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு கிடைக்கும் ராயல்டிக்கு நாம் தடையாக இருக்கிறோம்.
avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தினம் ஒரு புத்தகம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum