ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ரயில் நிலையங்களில் எல்.இ.டி., விளக்குகள்:தெற்கு ரயில்வே
 ayyasamy ram

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 ayyasamy ram

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 ayyasamy ram

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 ayyasamy ram

முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
 ayyasamy ram

திருச்சி: போக்குவரத்து அதிகாரி வீட்டில் 223 சவரன் நகை பறிமுதல்
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை

View previous topic View next topic Go down

ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை

Post by ayyasamy ram on Wed Dec 24, 2014 7:58 am

பெய்ரூட்:
ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் சிக்கிய,
யாஸிடி சிறுபான்மையின பெண்களை, அந்த
பயங்கரவாதிகள், செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்திய
கொடுமையும், அதற்கு அஞ்சி, ஏராளமான சிறுமியரும்,
பெண்களும் தற்கொலை செய்து கொண்ட தகவலும்
தெரிய வந்துள்ளது.

மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கின்
பல பகுதிகளை கைப்பற்றியுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்.,
பயங்கரவாதிகள், கிறிஸ்தவர்கள், ஷியா பிரிவு
முஸ்லிம்கள், யாஸிடி இனத்தவர் போன்ற
சிறுபான்மையினத்தவருக்கு சொல்லொணா துயரங்களை
கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, ஈராக்கின் வடக்கு பகுதியில் வாழும் யாஸிடி
இனத்து ஆண்களை கொன்று குவித்த பயங்கரவாதிகள்,
அந்த இனத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமியரை
பிடித்துச் சென்று, சண்டையில் ஈடுபடும் பயங்கரவாதிகளின்
செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யும் செக்ஸ்
அடிமைகளாக மாற்றினர்.

இத்தகைய கொடுமைகளை செய்வது, ஐ.எஸ்.ஐ.எஸ்.,
பயங்கரவாத அமைப்பின் சன்னி பிரிவினர் தான்.
அதுவும், வயது முதிர்ந்த பயங்கரவாதிகள் கூட,
இளம் பெண்களையும், சிறுமியரையும் பலாத்காரம் செய்த
கொடுமையும் நடந்துள்ளது.

கூட்டம் கூட்டமாக, யாஸிடி இன பெண்களை இழுத்துச்
சென்ற அந்த கொடியவர்களின் கைகளில் சிக்க விரும்பாத
பல பெண்கள், வினோதமான முறையில் தற்கொலை
செய்து கொண்டனர். கழுத்தில் கட்டப்படும், 'ஸ்கார்ப்'
துணியால், பெண்கள், ஒருவருக்கொருவர் இழுத்து,
மூச்சு திணறி தற்கொலை செய்து கொண்டனர்.

சிறுமியர் பலர், துாக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்
கொண்டனர். அந்த கொடியவர்களின் பிடியில் சிக்கிய
பெண்கள்,
பலருக்கு விருந்தாக்கப்பட்டதைப் பார்த்த பல பெண்கள்,
கூட்டம், கூட்டமாக தற்கொலை செய்து கொண்டனர்.

உயிர் தப்பி, 'ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' என்ற சர்வதேச
அமைப்பிடம் சரணடைந்த சில யாஸிடி பெண்கள், இந்த
தகவல்களை அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
-
இனத்தை வேறோடு அழித்தல்:
மேற்காசியாவில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் தவிர, பிற
இனத்தவர் இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பது, தங்களின்
குறிக்கோளுக்கு எதிரானது என, தவறுதலாக கருதிய
பயங்கரவாதிகள், பிற இனத்தவரை கூண்டோடு அழித்தனர்.

சிறுபான்மை இனத்து பெண்களை கற்பழிப்பதன் மூலம்,
அவர்கள் மூலம் தங்கள் வாரிசுகளை பிறக்கச் செய்து,
இனத்தை அதிகரிக்கவும், எதிர் இனத்தை அழிக்கவும்
முயன்றுள்ளனர்.
-
----------------------------------------------
--தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35116
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை

Post by M.Saranya on Wed Dec 24, 2014 10:01 am

மிகக்கொடுமையான நிகழ்வு இது..
பெண்கள் மிகப்பாவம்...
இந்த தீவிரவாத அமைப்பிற்கு என்னதான் முடிவு...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை

Post by SajeevJino on Wed Dec 24, 2014 10:23 am

.

உலகத்தில் எவ்வளவு நாட்டிடம் பலம் வாய்ந்த ராணுவம் உள்ளது . ஓரிரு நாடுகள் சேர்ந்து தங்கள் ராணுவத்தை களமிறக்கி தீவிரவாதிகளை துவம்சம் செய்யலாமே ..!!

அரசியல் போக்கிரிகள் எதையும் அனுமதிப்பதில்லை
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை

Post by ராஜா on Wed Dec 24, 2014 10:55 am

இனத்தை வேறோடு அழித்தல்:
மேற்காசியாவில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் தவிர, பிற
இனத்தவர் இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பது, தங்களின்
குறிக்கோளுக்கு எதிரானது என, தவறுதலாக கருதிய
பயங்கரவாதிகள், பிற இனத்தவரை கூண்டோடு அழித்தனர்.

சிறுபான்மை இனத்து பெண்களை கற்பழிப்பதன் மூலம்,
அவர்கள் மூலம் தங்கள் வாரிசுகளை பிறக்கச் செய்து,
இனத்தை அதிகரிக்கவும், எதிர் இனத்தை அழிக்கவும்
முயன்றுள்ளனர்
இதற்கெல்லாம் எப்ப முடிவு கட்டப்படும் சோகம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை

Post by krishnaamma on Wed Dec 24, 2014 6:40 pm

@M.Saranya wrote:மிகக்கொடுமையான நிகழ்வு இது..
பெண்கள் மிகப்பாவம்...
இந்த தீவிரவாத அமைப்பிற்கு என்னதான் முடிவு...

ரொம்ப கொடுமை தான் இது...................படிக்கவே மனசு நடுங்குகிறது சரண்யா சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை

Post by krishnaamma on Wed Dec 24, 2014 6:41 pm

@SajeevJino wrote:.

உலகத்தில் எவ்வளவு நாட்டிடம் பலம் வாய்ந்த ராணுவம் உள்ளது . ஓரிரு நாடுகள் சேர்ந்து தங்கள் ராணுவத்தை களமிறக்கி தீவிரவாதிகளை துவம்சம் செய்யலாமே ..!!

அரசியல் போக்கிரிகள் எதையும் அனுமதிப்பதில்லை

இது நான் நிஜம் சஜீவ் சோகம்என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை

Post by அகிலன் on Wed Dec 24, 2014 10:37 pm

isis பயங்கரவாதிகள் ஒரு வெறியர்கள், அவர்களுடைய கொள்கைகள், நடவடிக்கைகள் நேர்மையானவையாக இல்லை. எனவே அவர்கள் அழிவது நிச்சயம். உலக நாடுகள் தங்களுக்குள் உள்ள வல்லரசு போட்டி காரணமாக சில நாடுகள் இந்த பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவிசெய்து வருகின்றன. இதுதான் அவர்கள் கை ஓங்குவதற்கு காரணமாக இருக்கிறது.

இருந்தாலும் அநியாயம் வெல்வதில்லை.
அவர்கள் அழிவது நிச்சயம்.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை

Post by SajeevJino on Thu Dec 25, 2014 9:16 am

@அகிலன் wrote:உலக நாடுகள் தங்களுக்குள் உள்ள வல்லரசு போட்டி காரணமாக சில நாடுகள் இந்த பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவிசெய்து வருகின்றன. இதுதான் அவர்கள் கை ஓங்குவதற்கு காரணமாக இருக்கிறது.

 அவர்களுக்கு எந்த நாடும் வல்லரசு நாடுகளும் எந்த உதவியும் செய்யவில்லை . ஒரு வேளை  கத்தார் நாட்டிடமிருந்து உதவிகள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக Mossad  தெரிவித்துள்ளது . மற்ற படி எண்ணை மற்றும் பெண்களை விற்று தான் அவர்கள் வேரூன்றி வருகிறார்கள்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை

Post by அகிலன் on Fri Dec 26, 2014 2:46 am

@SajeevJino wrote:
@அகிலன் wrote:உலக நாடுகள் தங்களுக்குள் உள்ள வல்லரசு போட்டி காரணமாக சில நாடுகள் இந்த பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவிசெய்து வருகின்றன. இதுதான் அவர்கள் கை ஓங்குவதற்கு காரணமாக இருக்கிறது.

 அவர்களுக்கு எந்த நாடும் வல்லரசு நாடுகளும் எந்த உதவியும் செய்யவில்லை . ஒரு வேளை  கத்தார் நாட்டிடமிருந்து உதவிகள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக Mossad  தெரிவித்துள்ளது . மற்ற படி எண்ணை மற்றும் பெண்களை விற்று தான் அவர்கள் வேரூன்றி வருகிறார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1111322

isis பயங்கரவாதிகள் உருவாவதற்கு காரணமான அரசியல் பின்னணி என்ன? sajeevjino
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை

Post by SajeevJino on Fri Dec 26, 2014 9:10 am

.@அகிலன்

பொதுவாகப் பார்த்தால் இராக் நாட்டில் அல் கொய்தா  நிறைய தீவிரவாத இயக்கங்கள் இருந்தன ..Gulf  போர் முடிந்த பிறகு அங்கிருந்த பல போராளி இயக்கங்கள் புதிதாக தங்கள் பெயரை மாற்றி அப்போதிலிருந்தே செயல்படத் துவங்கிவிட்டனர். இவை நடந்தது சுமார் 1990 முதல் 2000 வருட இடைவெளியில் இருக்கும் என நினைக்கிறன் . அப்போதே இந்த isis  இயக்கம்  இருந்தது ஆனால் பின்லடெனின் தலைமையின் காரணத்தால் இவைகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப் படவில்லை ..

ISIS அல் கொய்தாவின் ஓர் அங்கமாக அன்று இருந்திருக்கலாம். பிறகு பின்லேடன் மறைவுக்குப் பின்பு அந்த இயக்கங்கள் பல சிதறியது உண்மை . அங்கேயே தலைமையில் குழப்பங்கள் இருந்தன .. எனவே இசிஸ் தனித்து இயங்க ஆரம்பித்து விட்டது . கடந்த ஜனவரி மாதம் இராக்கின் முக்கிய நகரான Falllujah -வை கைப்பற்றி ISIS தன் முதன் வெற்றியை நிலை நாட்டியது. பிறகு தான் அனைத்து நாடுகளின் கவனமும் அவர்கள் பக்கம் திரும்பியது .

Falllujah - நகரில் சண்டையிட்ட அமெரிக்க வீரர்களிடம் கேட்டல் தெரியும் அந்த நகரத்தை அவர்கள் எப்படி மீட்டார்கள் .. அதன் முக்கியத்துவம் என்ன என்று

இதில் அரசியல் இல்லை . ஆனால் பயங்கரமான கொள்கைகளை வைத்துள்ளனர் ... மத்திய கிழக்கு முழுவதும் இஸ்லாமிக் அரசின் கீழ் தான் வர வேண்டும் என்று

தாங்கள் விரும்பினால் ...Mp  net discussion link  தருகிறேன். அதில் பல அமெரிக்க வீரர்கள் தங்கள் Fallujha  அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை

Post by mbalasaravanan on Fri Dec 26, 2014 4:15 pm

என்று தான் இவர்கள் திருந்தப் போகிறார்களோ
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை

Post by SajeevJino on Fri Dec 26, 2014 8:40 pm

@mbalasaravanan wrote:என்று தான் இவர்கள் திருந்தப் போகிறார்களோ

 இந்த நேரத்துல காமெடி ரொம்ப முக்கியமா
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை

Post by அகிலன் on Sat Dec 27, 2014 4:53 am

நன்றி sajeevjino

இவர்களுடைய இஸ்லாமிய அரசுக்கும் ,அங்கு இருக்கும் அரசுக்கும் என்ன வித்தியாசம்?
எல்லாம் ஒரே மதத்தவர்கள் இல்லையா? இதுதான் எனக்கு புரியாமல் இருக்கிறது.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை

Post by SajeevJino on Sat Dec 27, 2014 11:43 am

@அகிலன் wrote:நன்றி sajeevjino

இவர்களுடைய இஸ்லாமிய அரசுக்கும் ,அங்கு இருக்கும் அரசுக்கும் என்ன வித்தியாசம்?
எல்லாம் ஒரே மதத்தவர்கள் இல்லையா?  இதுதான் எனக்கு புரியாமல் இருக்கிறது.

 நம் பார்வையில் அவர்கள் முஸ்லீம்கள் .. அவர்கள் பார்வையில் சன்னி மற்றும் சியா .

இசிஸ் முற்றிலும் சன்னி கூட்டம் .அவர்கள் அதிகமாக கொல்லுவதே மற்ற சியா முஸ்லீம்களைத் தான் . அதற்கு பதிலடியாக சியா நாடுகளான ஈரான் மற்றும் சிரிய கொடுங்கோலன் அசாத் ஆகியோர் சுன்னிகளுக்கு எதிராக இராக்கில் விமான தாக்குதல் நடத்துகிறார்கள்

 ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா நாடுகள் அங்கு இருக்கும் அப்பாவிகளான குர்து மக்களுக்கு ஆதரவாக விமான தாக்குதல் நடத்துகிறார்கள் .

 இஸ்லாமியர்கள் தனியாகக் கூட வாழ்வார்கள். ஆனால் ஒரு சன்னி சியாவோடோ அல்லது ஒரு  சியா சன்னியோடோ வாழ மாட்டான்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை

Post by அகிலன் on Sat Dec 27, 2014 3:48 pm

சதாம் குசைனின் காலத்தில் சன்னி முஸ்லீம்களின் கை ஓங்கி இருந்தது என்று நினைக்கிறேன்.
இப்பொழுது நிலைமை மாறிவிட்டது.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை

Post by SajeevJino on Sat Dec 27, 2014 4:16 pm

@அகிலன் wrote:சதாம் குசைனின் காலத்தில் சன்னி முஸ்லீம்களின் கை ஓங்கி இருந்தது என்று நினைக்கிறேன்.
இப்பொழுது நிலைமை மாறிவிட்டது.

.
சரி தான் ..இன்று ISIS  இல் இருக்கும் பலர் சதாமின் ராணுவ அதிகாரிகளாக இருந்தவர்கள்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: ஈராக்: பயங்கரவாதிகளுக்கு பயந்து யாஸிடி பெண்கள் கூட்டாக தற்கொலை

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum