ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி on Wed Dec 31, 2014 12:00 am

First topic message reminder :

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய

Last edited by விமந்தனி on Sat Aug 08, 2015 12:56 am; edited 1 time in total

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by T.N.Balasubramanian on Mon Mar 30, 2015 9:00 pm

@விமந்தனி wrote:

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

22. க்ஷாரகர்த்தமம்தீய செயல்களை புரிந்தும், நல்லோரையும், பெரியோரையும் அவமதித்து, நானென்ற அகந்தையுடன் வாழ்ந்த ஜீவன்கள் அடையும் நரகம் இது. இங்கு கோரமான உருவம் கொண்ட பிசாசுகள் ஜீவனை துன்புறுத்தும்.
மேற்கோள் செய்த பதிவு: 1127658

இங்கேயும் நீ  ------------------ண்-----ட ----க்யு இருக்குமே  .
இங்கே அனேக அரசியல்வாதிகள் நின்றுகொண்டு இருப்பார்கள் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21168
மதிப்பீடுகள் : 8096

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி on Wed Apr 22, 2015 12:16 am

உடலியல் பற்றிய விளக்கங்களும்

தேவேந்திரன் மயங்கிய கதையும்ருடன் பரமபத நாதனைத் தொழுது சர்வலோக சரண்யரே, “மனிதனின் உடலில் தோல், நரம்பு, எலும்பு, இரத்தம், மாமிசம், தலை, கைகள், கால்கள், நாக்கு, நாசி, இரகசிய உறுப்பு, நகம், ரோமம் முதலியவற்றால் அமைக்கப்பட்டு, இந்திரஜாலம் போலத் தோன்றுகிறதே! இந்த சரீரம் எங்கனம் உண்டாகிறது? அதை அடியேனுக்குச் சொல்ல வேண்டும்.” என்று பிரார்த்திக்கிறேன்.

“பரந்தாமன் கருடனை நோக்கிக் கூறலானார்: மாத விலக்கான பெண்கள், நான்கு நாட்கள் வரையில் குடிமனைக்குப் புறம்பேயிருக்க வேண்டும்.

“அதன் விளக்கம் இந்திரன் தன் அரியணையில் அமர்ந்து அரம்பையர்கள் ஆடிய ஆட்டத்திலும், கந்தர்வர்கள் இசைத்த கானத்திலும் மதிமயங்கியிருந்தான். அந்த சமயத்தில் தேவ குருவான வியாழ பகவான் அங்கு வந்தார். தன் ஆசிரியன் வந்ததையும் கவனியாமல், மரியாதையையும் செலுத்தாமல் மங்கையர் மயக்கத்திலிருந்தான். ஆசிரியநுத் தன்னை, ஆயிரங் கண்ணால் வரவேற்று கௌரவிக்காமல் இருந்ததைக் கண்டு மனம் புழுங்கி அங்கிருந்து வெளியேறினார்.

“ஆசிரியனை மதியாததால், இந்திரனின் செல்வ வளங்கள் சிதைந்தன. அதை அறிந்த இந்திரன் திகைத்தான். ஆசிரியனைத் தேடிச் சென்றான். அவர் இருப்பிடத்திலும் பிற இடங்களிலும் காண முடியாததால் குழம்பிய உள்ளத்தோடு, நான்முகனிடம் சென்று நடந்தவற்றை அவரிடம் முறையிட்டான்.

“நான்முகன் சிந்தித்தான். குல குருவை இழிந்ததால் தீவினை கொழுந்து விட்டு வளர்ந்துள்ளது. இந்திரனை நோக்கி, ‘இந்திரா!   நீ செய்த பிழை பிழையே தான்!. உன் ஆசிரியன் அளித்த தண்டனையும் சரியானது தான். ஆகையால் உன் ஆசான் வருமளவும் இடைக்கால ஆசான் வேண்டும். தானவனான துவஷ்டா என்று ஒருவனிருக்கிறான். அவன் மகன் விச்சுவவிருவன் என்று ஒருவனிருக்கிறான். அவன் முத்தலையன், சீரிய ஒழுக்கமுடையவன் அறிவிற் சிறந்தவன். அவனையே உனது குருவாக் கொள்வாயாக!’ என்று கூறினார்.

“பிரம தேவன் கூறிய படி வச்சுவவுருவனைத் தன் ஆசிரியனாகக் கொண்டான். இந்திரன் வேள்வியோன்று செய்ய விரும்பி புதிய ஆசானிடம் புகன்றான். வேள்வி துவங்கியது.

“வஞ்சகனான தானவன், அந்த வேள்வியில் தன் குலத்தைச் சேர்ந்த தானவர்களுக்கு ஆக்கங் கூறி, மந்திரங்களைச் சொல்லி வேள்வியைச் செய்தான். புதிய ஆசிரியனது வஞ்சகச் செயலை அறிந்த இந்திரன் கோபங் கொண்டு தன் குருவாகிய வச்சுவவுருவனைத் தன் வஜ்ராயுதத்தால் அவனை வெட்டினான்.

“அவனது மூன்று தலைகளையும் இந்திரன் வெட்டியவுடன் அந்த வஞ்சகன் ஒழிந்தான். ஆனால், அவனுடைய தவ வலிமையினால் சோமபானஞ் செய்யும் அவன் தலையில் ஒன்று காடையாயிற்று. சுரா பானஞ்  செய்யும் தலை ஊர்க்குருவியாயிற்று. அன்னபானஞ் செய்யும் தலை கிச்சிலிப் பறவை ஆயிற்று.
                       
“விசுவவுருவன் தானவனாயினும் அவன் குருவானபடியால் அவனைக் கொன்ற இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தேவர்கள் தங்கள் தலைவனை பீடித்த பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்திப்பதற்கு ஒரு வழி செய்தார்கள்.

“அவர்கள் பெண்களையும் மண்ணையும் தண்ணீரையும் வேண்டி இந்திரனைப் பிடித்த தோஷத்தை பங்கிட்டுக் கொடுத்தார்கள். அவர்கள் தேவர்களை நோக்கி, இதனை நாங்கள் போக்கிக் கொள்வது எப்படி என்று கேட்டார்கள். அதற்குத் தேவர்கள், ‘நீரிலே தோஷம் நுரையாகக் கழியும். மண்ணிலே உவராகக் கழியும், பெண்களுக்கு பூப்பாகக் கழியும்’ என்றார்கள்.

“இவ்வாறு இந்திரனைப் பிடித்த பிரம்மஹத்தி பாவம், மங்கையர் முதலானவர்களிடம் போய்ச் சேர்ந்தது. அதன்படியே ரஜஸ்வலையாகும் அப்பெண்கள் அந்தப் பாவத்தை ஏற்றுக் கழிக்கலாயினர். ஆகையால், பயிஷ்டையான ( மாத விலக்கான) ஸ்திரியை நான்கு நாட்கள் வரை பிறர் பார்க்கலாகாது. பார்த்தால் பாவம் வந்து அடையும்.

“பயிஷ்டையானவள், முதல் நாளன்று சண்டாள ஸ்திரியை போலிருப்பாள். இரண்டாம் நாள் பிரம ஹத்தி செய்தவனை ஒப்பாவாள். மூன்றாம் நாள் ஆடை ஒலிப்பவனைப் போலாலாவாள். நான்காவது நாள் புனலாடிய பிறகு சிறிது தூய்மையடைவாள். ஐந்தாம் நாள் குடும்பக் காரியங்களை எல்லாம் செய்வதற்கு உரியவளாக சுத்தியை அடைவாள்.

“பயிஷ்டையான ஆறாவது நாள் முதல் பதினெட்டாவது நாள் வரையின்ன இரட்டை நாள் எழில் இரவில் அவளோடு கூடி மகிழ்ந்தால் புருஷர் பிரஜை உண்டாகும். ஆகையால் ஆண்மகனைப் பெற விரும்புகின்றவன் மனைவியை இரட்டை நாளிலேயே சேர வேண்டும்.

“நான்கு தினத்து மேல் பதினெட்டு நாள் வரையில் இரவு காலத்தில், இரட்டை நாளில் கர்ப்பந் தரித்தால் குணவானாகவும், தனவானாகவும், தர்மிஷ்டனாகவும், ஸ்ரீ விஷ்ணு பக்தி உடையவனாகவமுள்ள ஒரு புத்திரன் பிறப்பான்.

“பயிஷ்டையான நான்கு தினங்களுக்கு மேல் எட்டு நாளைக்குள் பெரும்பான்மையாகக் கர்ப்பத்தரிக்கு ஏஜஸ்வலையான ஐந்தாம் நாள் ஸ்திரிகள் பாயசம் முதலிய மதுர பதார்த்தங்களையே அருந்த வேண்டும். காரமான பதார்த்தங்களை உண்ணலாகாது. ஸ்திரி புருஷர்கள் சந்தன, புஷ்ப, தாம்பூல வஸ்துக்களை தாரணம் செய்து கொண்டு குவிந்த மெய்யினர்களாய், சித்தத்தில் அதிக மோகமுடையவர்களாய்ச் சேர்தல் வேண்டும்.  அவ்வாறு அவர்கள் இருவரும் சேர்ந்ததால், சுக்கில சுரோணிதக் கலப்பால் ஸ்திரி வயிற்றில் கருத்தரித்து, வளர்பிறைச் சந்திரனைப் போல அந்தக் கருவானது விருத்தியாகும்.

“மன்மதனும் மனமும் ஒத்த காலத்தில் இருவராலும் விடப்படும் சுக்கில சுரோணிதன்களால் ஆணின் சுக்கிலம் அதிகமானால் ஆண்பிள்ளையும், பெண்ணின் சுரோணிதம் அதிகமானால் பெண்ணும் பிறக்கும். சுக்கில சுரோநிதங்கள் இரண்டும் ஏற்றக் குறைவில்லாமல் சமமாயின் பிறக்கும் பிள்ளை அலியாக இருக்கும்.

“கருத்தரிக்குமானால் புணர்ந்த ஐந்தாவது நாளன்று கர்ப்பப் பையினுள்ளே ஒரு குமிழியுண்டாகும். அது பதினான்கு நாட்களில் தசையால் சிறிது பெருக்கும். இருபதாவது நாளில் மேலும் அதற்குச் சிறிது தசையுண்டாகும். இருபத்தைந்தாவது நாளில் அது மேலுஞ் சிறிது புஷ்டியாகிறது. ஒரு மாதத்தில் அதனிடம் பஞ்ச பூதத்தின் சேர்க்கை உண்டாகிறது.

“மூன்றாவது மாதத்தில் நரம்புகள் உண்டாகின்றன. நான்காவது மாதத்தில் காதுகளும் மூக்கும் மார்பும் தோன்றும். ஆறாவது மாதத்தில் கழுத்துச் சிரசும், பற்களும் உண்டாகும். ஏழாவது மாதத்தில் ஆண் மகவாயின் ஆண் இனக்குரியும், பெண் மகவாயின் பெண் இனக் குறியும் உண்டாகும்.

“எட்டாவது மாதத்தில் எல்லா அவயங்களும் உண்டாகி ஜீவனும் பிரவேசிக்கிறான். ஒன்பதாவது மாதத்தில் ஜீவன் சுழிமுனை என்ற நாடியின் மூலத்திலிருந்து பூர்வஜென்ம கர்மங்களை நினைத்து தனக்குப் புதிய பிறவி வந்ததைக் குறித்து துக்கித்துக் கொண்டே பத்தாவது மாதத்தில் பிறக்கிறான்.”

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி on Wed Apr 22, 2015 12:18 am

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

24. சூலப்ரோகம்

தனக்கு எந்தவித கெடுதல்களையும் செய்யாதவர்களை கொல்லுதல், சூழ்ச்சி செய்து கொல்லுதல், தற்கொலை செய்து கொல்லுதல், நம்பிக்கை துரோகம் செய்தல் ஆகிய பாவச்செயல்களை செய்த ஜீவன்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவன்களை, கொடிய பறவைகள் குத்திக் குத்திக் குதறும், சூலத்தாலும் குத்துவார்கள்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி on Wed Apr 22, 2015 12:18 am

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

25. சுசீமுகம்

அறத்தை செய்யாமல் தீயவழிகளில் பொருளைச் சேர்த்து, பிறரை துன்புறுத்தி கர்வத்துடன் நடந்து, பொருள்களையும், பணத்தையும் பதுக்கி வைத்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கும் ஜீவன், உதவி செய்ய யாருமின்றி பசியாலும், தாகத்தாலும் தவிக்கும். எம தூதர்கள் துன்புறுத்துவார்கள்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி on Wed Apr 22, 2015 12:27 am

ஈமக்கிரியைகள்

ருடன் முராரியை நோக்கி, “சர்வேசா! தாயைப் பெற்றவளும், அவளைப் பெற்றவளும், அவனைப் பெற்றவளும், தந்தையைப் பெற்றவனும், அவனைப் பெற்றவனும் உயிரோடு இருக்கும் பொது, தாயாவது தந்தையாவது இறந்துவிட்டால், அவர்களுக்குப் புத்திரன் எவ்வாறு பிண்டம் சேர்க்க வேண்டும்? என்பதை அடியேனுக்குக் கூற வேண்டும்.” என்று வேண்டினான்.

அதற்குப் பகவான் கூறலானார், “வைனதேயா!   தாயின் தலைமுறையிலும், தந்தையின் தலைமுறையிலும் உயிருடன் இருப்பவர்களுக்கு மேலே மூன்று தலைமுறைப் பிதுர்க்களின் பிண்டத்தோடு இறந்தவனின் பிண்டத்தையும் சேர்க்க வேண்டும்.

“பிண்டம் உண்ணும் பிதுரர் மூவர், தியாசகர் மூவர், லோபகர் மூன்று பேர் பிண்டம் போடும் பந்தியில் வருவான். ஒருவனுக்கு இவ்வாறு தந்தையின் மரபிற்குப் பத்துப் பேர்களும் உள்ளார்கள். ஒருவன் மரித்தும் பிதுரர்களோடு சேர்த்தும் நான்காம் பாட்டன் முதல் தியாசகன் ஆகிறான். மூன்றாம் லோபகன் பந்தியில் வருவோனாகிறான். புத்திரன் சிரார்த்தம் செய்தால் மாண்டுபோன தந்தை மகிழ்ந்து அந்தப் புத்திரனுக்கு ஒரு புத்திரனை தருகிறான்.

“சிரார்த்தம் செய்வதில் பிதுரர்களுக்குத் திருப்தியுண்டானால் செய்பவனுக்கு மிக்க பயன் உண்டு. உயிர் நீங்கிய பிறகு தேகத்தை வைத்திருக்க கூடாது. அதனால் உடனே சம்ஸ்காரம் செய்ய வேண்டும்.

“தனிஷ்டா பஞ்சகத்தில் இறந்த தோஷ நிவர்த்தியின் பொருட்டுச் சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி சிலகருமங்களை அதிகமாக செய்தல் வேண்டும். எள்ளும், கோவும், ஹிரண்யமும், நெய்யும் தானம் கொடுக்க வேண்டும். தனிஷ்டா பஞ்சகத்தில் மாய்ந்தவருக்கு சாஸ்திரத்தில் சொல்கிறபடிச் செய்யாவிட்டால் கருமஞ் செய்யும் கர்த்தா துன்பம் அடைவான்.

“கருடா!    ஒருவன் மரித்தவுடன் அவனது கால்களையும் கைகளையும் கட்ட வேண்டும். உறவினரெல்லாம் சவத்தின் அருகிலேயே இருக்க வேண்டும். ஒரு கிராமத்தில் ஒரு சவம் கிடந்தால் யாரும் சோறும் நீரும் உண்ணலாகாது. அப்படி உண்டால் மாமிசம் உண்ட தோஷமும் இரத்தம் பருகிய தோஷமும் அடைவார்கள். தந்த சுத்தியும் செய்யலாகாது. இரவில் பிணங் கிடக்கும் பொது ஆண் பெண் கூடியின்புறுதல் கூடாது.” என்றார் திருமால்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி on Wed Apr 22, 2015 12:27 am

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

26. குந்தசூதம்

வாழ்க்கையில் பிறருக்கு நன்மை எது செய்யாமல் தீமையே செய்து வந்த பாவிகள் அடையும் நரகம் இது. இங்கு தேள் போன்று கொடிய விஷமுள்ள பிராணிகள், ஜீவன்களை கொடுக்குகளால் கொட்டித் துன்புறுத்தும்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி on Wed Apr 22, 2015 12:29 am

சொர்க்கம் கிடைக்க வழிகள்.

“கருடனே! யாருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதை பற்றி கூறுகிறேன் கேள்! அயோத்தி, மதுரா, காசி, அவந்திகா, துவாரகா ஆகிய ஏதாவது ஒரு தலத்தில் இறப்பவன் ஸ்ரீவிஷ்ணுலோகத்தை அடைவான். ராமர் அல்லது கிருஷ்ணரின் நாமங்களை சொல்லிக்கொண்டே இறப்பவனும் மோட்சத்தை அடைவான்.

குழந்தை, பசு, அந்தணர் ஆகியோருக்கு ஆகியோருக்கு ஆபத்து நேரிடும் போது, தன் உயிரைவிடவும் துணிந்து அவர்களை காப்பாற்றுபவனும் முடிவில் தேவர்கள் எல்லாம் வரவேற்கும் நிலையில் சொர்க்கத்தை அடைவான். பூமி, பசு,யானை ஆகியவற்றை தானம் கொடுத்தால் மோட்சம் கிடைக்கும்.

கிணறு, குட்டை, ஆலயம் ஆகியவற்றை புதுபித்தவன், அவற்றை உருவாக்கியவர்களை விட புண்ணியம் செய்தவன் ஆவான்.இவனுக்கும் சொர்க்கம் கிடைக்கும். வைகுண்ட ஏகாதசி அன்று மரணம் அடைந்தவன் வைகுண்டத்தை அடைவான்.

அறநெறியில் வாழ்ந்து, பிறருக்கு நல்லதையே செய்து, கேம காரியங்களை விடாமல் செய்து, தான தர்மங்களை இயன்றவரை செய்து வாழ்ந்தவன் சொர்க்கத்தை அடைவான்.

தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல், தினமும் விடாமல் நாமசங்கீர்த்தனம் செய்து வாழ்ந்து, முடிவில் தர்ப்பைப்புல்லின் மேல் படுத்துக்கொண்டு கையில் துளசி, தர்ப்பை இலைகளை கையில் ஏந்தியபடி பகவான் நாமத்தை சொல்லிய படி இறப்பவன் சொர்க்கத்தை அடைவான்.” இவ்வாறு பகவான், சொர்க்கம் யாருக்கு கிடைக்கும் என்பதை விளக்கமாக கருடனுக்கு கூறினார்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி on Wed Apr 22, 2015 12:30 am

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

27. வடாரோகம்

பிராணிகளை கொடுமையாக வதைத்த பாவிகள் அடையும் நரகம் இதுவாகும். ஜீவன்களின் கைகளை கட்டி, நெருப்பு வைத்து துன்புறுத்துவார்கள்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by T.N.Balasubramanian on Wed Apr 22, 2015 8:37 am

அருமையான பகிர்வு .
புராண காலத்து இதிகாசங்களை படித்தாலே ,
சகல விஷயங்களையும் நாம் அறியமுடியும் .
பல்கலை கழகங்களில், பல துறையில் படித்து தேறுகிற அனுபவங்கள் .
அந்த காலத்திலேயே கருத்தரிக்க உகந்த நாட்களை கூறி இருப்பதை
படிக்கையில் ஆச்சர்யம் மேலிடுகிறது .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21168
மதிப்பீடுகள் : 8096

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by ayyasamy ram on Wed Apr 22, 2015 8:44 am

கடவுளிடம், ‘எனக்கு கணவனைக் கொடு’ என்று
முழுமையாக ஐந்து முறை கேட்டதால்,
ஐந்து கணவர்களை அடைந்தாள் குந்தி தேவி
-
எனவே கடவுளிடம் எந்த வேண்டுதலையும்
ஒரு முறை மட்டுமே கேளுங்கள்...!!!
-
---------------------------------------------------------------
-
இதிகாசங்கள் முழுவதும் கற்பனை என்று சொல்ல
முடியாது.

கால வெள்ளோட்டத்தில் சில சரித்திர சான்றுகள்
மறைந்து இருக்கலாம்.கவிஞர்கள் கொஞ்சம்
மிகுதியாக புனைந்திருக்கலாம்.
பிற்கால சேர்க்கைகள் சேர்ந்திருக்கலாம்.
-
புராணங்களில் சொன்னவைகள் ஒன்று ஒன்றாக
கண்டு பிடிக்கப் படுகிறதே...!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34449
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by T.N.Balasubramanian on Wed Apr 22, 2015 10:32 am

இதிகாசங்கள் முழுவதும் கற்பனை என்று சொல்ல
முடியாது.

இதிகாசங்கள் --என்றாலே , எழுதபடாத, காது வழியாக கேட்டு கூறப்பட்ட சம்பவங்கள்
பின்பு எழுத்து வடிவில் வந்தவை . அதாவது கர்ண பரம்பையாக வந்தவை .
புராணங்கள் --எழுதப்பட்டவை .
இது மாதிரிதான் படித்ததாக நினைவு , ram !

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21168
மதிப்பீடுகள் : 8096

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி on Wed Apr 22, 2015 10:50 pm

@T.N.Balasubramanian wrote:அருமையான பகிர்வு .
புராண காலத்து இதிகாசங்களை படித்தாலே ,
சகல விஷயங்களையும் நாம் அறியமுடியும் .
பல்கலை கழகங்களில், பல துறையில் படித்து தேறுகிற அனுபவங்கள் .
அந்த காலத்திலேயே கருத்தரிக்க உகந்த நாட்களை கூறி இருப்பதை
படிக்கையில் ஆச்சர்யம் மேலிடுகிறது .
ரமணியன்    
ஆமாம் ஐயா. உண்மை தான்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி on Wed Apr 22, 2015 10:55 pm

@ayyasamy ram wrote:கடவுளிடம், ‘எனக்கு கணவனைக் கொடு’ என்று
முழுமையாக ஐந்து முறை கேட்டதால்,
ஐந்து கணவர்களை அடைந்தாள் குந்தி தேவி

நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லையே... தனக்கு வரும் கணவன் தருமத்தில், வீரத்தில், பலத்தில், அழகில், சாதுர்யத்தில் என்று இந்த 5 விதங்களிலும் சிறந்தவனாக இருப்பவனே தனக்கு மணவாளனாக அமையவேண்டும் என்று முற்பிறவியில் திரௌபதி பரந்தாமனிடம் பெற்ற வரத்தினால் தானே திரௌபதி யாக பிறந்தபோது பாண்டவர்களை மணந்தாள்?

இந்த விளக்கம் கூட கிருஷ்ணர் சொல்லித்தான் பாஞ்சாலிக்கு தெரியும்..... திரௌபதி கேட்ட 5 குணங்களை ஒருங்கே கொண்ட ஆண் யாரும் பூவுலகில் இல்லாத காரணத்தினாலேயே பாண்டவரை மணந்தாள் என்று நான் படித்ததாக நினைவு.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by யினியவன் on Wed Apr 22, 2015 11:15 pm

குந்தியின் மருமகள் தானே திரௌபதி - திரௌபதிக்கு தானே ஐந்து கணவர்கள்.

அருஜுனனை மனம் முடித்து வீட்டுக்குள் வருகையில் பூஜையில் இருந்த குந்தி, அர்ஜுனனிடம் கண் மூடிய படியே கொண்டு வந்ததை ஐந்து சகோதரர்களும் அனுபவிக்கவும் ன்னு சொன்னாதால் தானே - ஐந்து கணவர்கள்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி on Wed Apr 22, 2015 11:22 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் அவள் 5 கணவர்களை மணமுடிக்க வேண்டும் என்ற விதி தான் குந்தி மூலமாக அப்படி ஒரு வாக்கு வந்தது.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by T.N.Balasubramanian on Thu Apr 23, 2015 6:51 am

@விமந்தனி wrote:
@ayyasamy ram wrote:கடவுளிடம், ‘எனக்கு கணவனைக் கொடு’ என்று
முழுமையாக ஐந்து முறை கேட்டதால்,
ஐந்து கணவர்களை அடைந்தாள் குந்தி தேவி

நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லையே... தனக்கு வரும் கணவன் தருமத்தில், வீரத்தில், பலத்தில், அழகில், சாதுர்யத்தில் என்று இந்த 5 விதங்களிலும் சிறந்தவனாக இருப்பவனே தனக்கு மணவாளனாக அமையவேண்டும் என்று முற்பிறவியில் திரௌபதி பரந்தாமனிடம் பெற்ற வரத்தினால் தானே திரௌபதி யாக பிறந்தபோது பாண்டவர்களை மணந்தாள்?

இந்த விளக்கம் கூட கிருஷ்ணர் சொல்லித்தான் பாஞ்சாலிக்கு தெரியும்..... திரௌபதி கேட்ட 5 குணங்களை ஒருங்கே கொண்ட ஆண் யாரும் பூவுலகில் இல்லாத காரணத்தினாலேயே பாண்டவரை மணந்தாள் என்று நான் படித்ததாக நினைவு.
மேற்கோள் செய்த பதிவு: 1132252

நானும் அப்பிடிதான் கேள்வி பட்டுளேன் .
@யினியவன் wrote:குந்தியின் மருமகள் தானே திரௌபதி - திரௌபதிக்கு தானே ஐந்து கணவர்கள்.

அருஜுனனை மனம் முடித்து வீட்டுக்குள் வருகையில் பூஜையில் இருந்த குந்தி, அர்ஜுனனிடம் கண் மூடிய படியே கொண்டு வந்ததை ஐந்து சகோதரர்களும் அனுபவிக்கவும் ன்னு சொன்னாதால் தானே - ஐந்து கணவர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1132256

திரௌபதி பெற்ற வரம் தான்  காரணம் .
அதற்கு காரண கர்த்தாவாக மாறினது , குந்தி .
தெய்வ நிகழ்வுகளுக்கு /வரங்களுக்கு  கருவியாக இது மாதிரி செயல்பட்டவர் பலர்  .
பல உதாரணங்கள் காண்பிக்கலாம் ,
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21168
மதிப்பீடுகள் : 8096

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by krishnaamma on Fri Apr 24, 2015 12:13 am

//“இவ்வாறு இந்திரனைப் பிடித்த பிரம்மஹத்தி பாவம், மங்கையர் முதலானவர்களிடம் போய்ச் சேர்ந்தது. அதன்படியே ரஜஸ்வலையாகும் அப்பெண்கள் அந்தப் பாவத்தை ஏற்றுக் கழிக்கலாயினர். ஆகையால், பயிஷ்டையான ( மாத விலக்கான) ஸ்திரியை நான்கு நாட்கள் வரை பிறர் பார்க்கலாகாது. பார்த்தால் பாவம் வந்து அடையும்.

“பயிஷ்டையானவள், முதல் நாளன்று சண்டாள ஸ்திரியை போலிருப்பாள். இரண்டாம் நாள் பிரம ஹத்தி செய்தவனை ஒப்பாவாள். மூன்றாம் நாள் ஆடை ஒலிப்பவனைப் போலாலாவாள். நான்காவது நாள் புனலாடிய பிறகு சிறிது தூய்மையடைவாள். ஐந்தாம் நாள் குடும்பக் காரியங்களை எல்லாம் செய்வதற்கு உரியவளாக சுத்தியை அடைவாள்.

“பயிஷ்டையான ஆறாவது நாள் முதல் பதினெட்டாவது நாள் வரையின்ன இரட்டை நாள் எழில் இரவில் அவளோடு கூடி மகிழ்ந்தால் புருஷர் பிரஜை உண்டாகும். ஆகையால் ஆண்மகனைப் பெற விரும்புகின்றவன் மனைவியை இரட்டை நாளிலேயே சேர வேண்டும்.

“நான்கு தினத்து மேல் பதினெட்டு நாள் வரையில் இரவு காலத்தில், இரட்டை நாளில் கர்ப்பந் தரித்தால் குணவானாகவும், தனவானாகவும், தர்மிஷ்டனாகவும், ஸ்ரீ விஷ்ணு பக்தி உடையவனாகவமுள்ள ஒரு புத்திரன் பிறப்பான்.

“பயிஷ்டையான நான்கு தினங்களுக்கு மேல் எட்டு நாளைக்குள் பெரும்பான்மையாகக் கர்ப்பத்தரிக்கு ஏஜஸ்வலையான ஐந்தாம் நாள் ஸ்திரிகள் பாயசம் முதலிய மதுர பதார்த்தங்களையே அருந்த வேண்டும். காரமான பதார்த்தங்களை உண்ணலாகாது. ஸ்திரி புருஷர்கள் சந்தன, புஷ்ப, தாம்பூல வஸ்துக்களை தாரணம் செய்து கொண்டு குவிந்த மெய்யினர்களாய், சித்தத்தில் அதிக மோகமுடையவர்களாய்ச் சேர்தல் வேண்டும். அவ்வாறு அவர்கள் இருவரும் சேர்ந்ததால், சுக்கில சுரோணிதக் கலப்பால் ஸ்திரி வயிற்றில் கருத்தரித்து, வளர்பிறைச் சந்திரனைப் போல அந்தக் கருவானது விருத்தியாகும்.

“மன்மதனும் மனமும் ஒத்த காலத்தில் இருவராலும் விடப்படும் சுக்கில சுரோணிதன்களால் ஆணின் சுக்கிலம் அதிகமானால் ஆண்பிள்ளையும், பெண்ணின் சுரோணிதம் அதிகமானால் பெண்ணும் பிறக்கும். சுக்கில சுரோநிதங்கள் இரண்டும் ஏற்றக் குறைவில்லாமல் சமமாயின் பிறக்கும் பிள்ளை அலியாக இருக்கும்.

“கருத்தரிக்குமானால் புணர்ந்த ஐந்தாவது நாளன்று கர்ப்பப் பையினுள்ளே ஒரு குமிழியுண்டாகும். அது பதினான்கு நாட்களில் தசையால் சிறிது பெருக்கும். இருபதாவது நாளில் மேலும் அதற்குச் சிறிது தசையுண்டாகும். இருபத்தைந்தாவது நாளில் அது மேலுஞ் சிறிது புஷ்டியாகிறது. ஒரு மாதத்தில் அதனிடம் பஞ்ச பூதத்தின் சேர்க்கை உண்டாகிறது.

“மூன்றாவது மாதத்தில் நரம்புகள் உண்டாகின்றன. நான்காவது மாதத்தில் காதுகளும் மூக்கும் மார்பும் தோன்றும். ஆறாவது மாதத்தில் கழுத்துச் சிரசும், பற்களும் உண்டாகும். ஏழாவது மாதத்தில் ஆண் மகவாயின் ஆண் இனக்குரியும், பெண் மகவாயின் பெண் இனக் குறியும் உண்டாகும்.

“எட்டாவது மாதத்தில் எல்லா அவயங்களும் உண்டாகி ஜீவனும் பிரவேசிக்கிறான். ஒன்பதாவது மாதத்தில் ஜீவன் சுழிமுனை என்ற நாடியின் மூலத்திலிருந்து பூர்வஜென்ம கர்மங்களை நினைத்து தனக்குப் புதிய பிறவி வந்ததைக் குறித்து துக்கித்துக் கொண்டே பத்தாவது மாதத்தில் பிறக்கிறான்.”//

எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார் புன்னகை ................. சூப்பருங்க

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி on Sun Apr 26, 2015 10:26 pm

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

28. பர்யாவர்த்தனம்

விருந்தினர்களை உபசரிக்காமல் அவர்களை வெறுத்து நிந்தனை செய்த கஞ்சத்தனம் உள்ளவர்களும், விருந்தினர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு ஜீவன், உணவும்-நீரும் இன்றி பசியாலும் தாகத்தாலும் தவிக்கும்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி on Sun Apr 26, 2015 10:43 pm

கருடபுராணத்தின் நிறைவு பகுதி
ருடனே! பாவங்களை செய்தவர்கள் நரகத்தில் வீழ்ந்து மிகவும் துன்புறுவார்கள். ஒருவன் யாருக்கும் தீமையே செய்யாமல் நன்மை செய்து இறந்தால் அவன் சர்வ சத்தியமாக சொர்கலோகத்தையே அடைவான். அதன் பிறகு நல்ல திருத்தலத்தில், உயர்ந்த குலத்தில் பிறந்து சிறப்புடன் வாழ்வான்.

கருடனே! இந்த புராணத்தை  தந்தை இறந்த காலத்தில் தீட்டு நீங்குவதற்குள் ஒருவன் கேட்டால், இறந்த தந்தை மோட்சத்தை அடைவான். தாய் இறந்த போது இந்த புராணத்தை கேட்டால், இறந்த தாய் சொர்க்கத்தை அடைவாள்.   இதைத்தவிர தை மாத விக்ஷூ புண்ணிய காலத்திலும், கிரகண காலத்திலும், திவச காலத்திலும் இந்த புராணத்தை படித்தாலும், கேட்டாலும் நல்லுலகை அடைவான்.

கன்னிகாதானங்கள் செய்தல், நூறுமுறை தானம் செய்தல், கயா சிரார்த்தம் செய்தல் ஆகியவற்றால் வரு புண்ணியங்களை விட, இப்புராணத்தை கேட்டாலும், படித்தாலும் அதிக புண்ணியம் உண்டாகும். எமலோக பயம் ஏற்படாமல் இருக்கவும், சொர்கத்தை அடையும் வழிகளையும் தெரிவிப்பதற்காகவே இந்த புராணத்தை உனக்கு கூறினேன்.” என்றார் பகவான்.

கருடன் மிகவும் மனம் மகிழ்ந்து பகவானை நோக்கி, “கருணைக்கடலே, காருண்யமூர்த்தியே! உலகுக்கு நீரே வேதங்களை ஓதியருளினீர்கள். அதே வாயால் எனக்கு இந்த புராணத்தை சொல்லி அருளனீர்கள். எனக்கு ஏற்ப்பட்ட சந்தேகங்களுக்கெல்லாம் விளக்கம் கொடுத்தீர்கள். நான் பாக்யசாலி. நான் இப்புராணத்தை கேட்க என்ன தவம் செய்தேனோ...” என்று கூறி, பகவானை வளம் வந்து வணங்கி மகிழ்ந்தான்.

இப்போது கதையை கூறிமுடித்த சூதமுனிவர், மற்ற நைமிசாரண்ய முனிவர்கள் பார்த்து கூறுகிறார், “முனிவர்களே! நீங்கள் கேட்டபடி ஆறாம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வகை புருஷாத்தங்களைப் பற்றி பற்றி விளக்கும் புராணத்தை பற்றி உங்களுக்கு கூறினேன்.” என்று கூறி முடித்தார். பின்னர் அனைவரும் பகவானின் நாமங்களைப் போற்றி பாடி மகிழ்ந்தனர்.

:வணக்கம்: ஸ்ரீ கருடபுராணம் நிறைவு பெறுகிறது :வணக்கம்:

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by சிவா on Sun Apr 26, 2015 10:55 pm

கருட புராணம் என்னும் அரிய பொக்கிஷத்தை எங்களுக்கு அளித்த அன்பு அக்காவிற்கு நன்றிகள்! மேலும் மிக அழகாக மின்னூலாகவும் வடிவமைத்துத் தந்துவிட்டீர்கள். என் அலைபேசி மூலம் படிக்க மிக எளிதாக உள்ளது!

பாராட்டுக்களும் வாழ்த்துகளும் அக்கா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி on Sun Apr 26, 2015 11:11 pm

@சிவா wrote:கருட புராணம் என்னும் அரிய பொக்கிஷத்தை எங்களுக்கு அளித்த அன்பு அக்காவிற்கு நன்றிகள்! மேலும் மிக அழகாக மின்னூலாகவும் வடிவமைத்துத் தந்துவிட்டீர்கள். என் அலைபேசி மூலம் படிக்க மிக எளிதாக உள்ளது!

பாராட்டுக்களும் வாழ்த்துகளும் அக்கா!

எல்லா புகழும் ஈகரையே சேரும் சிவா. இத்தொடரின் வெற்றி நம் உறவுகளின் ஆதரவே அன்றி வேறெதுவும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

என்னை ஊக்கப்படுத்திய உறவுகளுக்கும், அடிக்கடி இத்தொடரின் குறை - நிறைகளை சுட்டிக்காட்டி திருத்தி அமைக்க உதவிய கிருஷ்ணாம்மாவுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by T.N.Balasubramanian on Mon Apr 27, 2015 7:13 am

ரொம்ப ரொம்ப மோசம் விமந்தனி நீங்க !
''''''''''''''''

'''''''''''''''''''''''''''''''''
''''''''''''''''''''''''

''''''''''''''''''''''''''

''''''''''''''''''''''''''''''''''அதற்குள் முடித்து விட்டீர்களே !

ரமணியன் அழுகை :::::::::::::::::அழுகை

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21168
மதிப்பீடுகள் : 8096

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by T.N.Balasubramanian on Mon Apr 27, 2015 7:29 am

யாரும் இதுவரை வெளியிடாத ,
ஆயினும் யாவரும் அறிந்து கொள்ளவேண்டிய ,
நெறிமுறைகளை  கூறிய கருடப் புராணத்தை
கருத்துகள் சிதையாமல் , கருத்துடன் ,
விருந்தென அளித்த விமந்தனி,
வாழ்த்துகள் பல பல .

எண்ண எழுச்சிகளை
எழுப்பிய எழுத்திற்கு
எந்தன் காணிக்கை

ரமணியன் அன்பு மலர் அன்பு மலர்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21168
மதிப்பீடுகள் : 8096

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by krishnaamma on Mon Apr 27, 2015 9:51 pm

மிகவும் அருமையான தொகுப்பு விமந்தனி....நன்றிகள் பலப்பல புன்னகை சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by krishnaamma on Mon Apr 27, 2015 9:52 pm

@விமந்தனி wrote:
@சிவா wrote:கருட புராணம் என்னும் அரிய பொக்கிஷத்தை எங்களுக்கு அளித்த அன்பு அக்காவிற்கு நன்றிகள்! மேலும் மிக அழகாக மின்னூலாகவும் வடிவமைத்துத் தந்துவிட்டீர்கள். என் அலைபேசி மூலம் படிக்க மிக எளிதாக உள்ளது!

பாராட்டுக்களும் வாழ்த்துகளும் அக்கா!

எல்லா புகழும் ஈகரையே சேரும் சிவா. இத்தொடரின் வெற்றி நம் உறவுகளின் ஆதரவே அன்றி வேறெதுவும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

என்னை ஊக்கப்படுத்திய உறவுகளுக்கும், அடிக்கடி இத்தொடரின் குறை - நிறைகளை சுட்டிக்காட்டி திருத்தி அமைக்க உதவிய கிருஷ்ணாம்மாவுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1133153

நன்றி விமந்தனி.......ஆனாலும் இன்னும் சில எழுத்துப்பிழைகள் இருக்கு பா அதில் ............ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum