ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

இளமையான குடும்பம்..!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இன்று வைகுண்ட ஏகாதசி !

View previous topic View next topic Go down

இன்று வைகுண்ட ஏகாதசி !

Post by krishnaamma on Thu Jan 01, 2015 9:41 pm
‘காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை’ என்பார்கள். விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11&ம் நாள் ஏகாதசி. மாதத்துக்கு இரண்டு என ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். ஏகாதசியில் விரதம் இருப்பது ஒவ்வொரு மாதத்தில் ஒவ்வொரு பலன்களை தரும் என கூறப்படுகிறது.

சித்திரை மாத ஏகாதசியில் விரதம் இருந்தால் விரும்பிய பேறுகள் எல்லாம் உண்டாகும். வைகாசி & கயிலாய யாத்திரை மேற்கொண்டு பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும். ஆனி & சொர்க்கம் செல்லும் பாக்யம். ஆடி & ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும். ஆவணி & மக்கள்செல்வம் உண்டாகும். குழந்தைகளின் நோய், நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு உண்டாகும்.புரட்டாசி & நிம்மதியான வாழ்வு கிடைக்கும். ஐப்பசி & சகல வளங்களும் உண்டாகும். கார்த்திகை & மகிழ்ச்சியான வாழ்வு மலரும். தை & பித்ரு சாபங்கள் நீங்கி, முன்னோர் அருளாசி கிடைக்கும். மாசி & சகல பாவங்கள், தோஷங்கள் நீங்கும். பங்குனி & தடை, தடங்கல்கள் நீங்கி வெற்றிகள் குவியும்.எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவர்கள் உண்டு. ஏகாதசியன்று விரதம் இருந்து மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜை முடித்து சாப்பிடுவார்கள்.

ஏகாதசிகளில் சிறந்ததாக கூறப்படுவது மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி. மனிதர்களுக்கு இரவு, பகல் மாறிமாறி வருவதுபோல தேவர்களுக்கும் உண்டு. ஆடி முதல் மார்கழி வரையிலான 6 மாதங்கள் அவர்களுக்கு இரவு நேரமான தட்சிணாயனம். தை மாதம் தொடங்கி ஆனி வரையிலான 6 மாதங்கள் பகல் நேரமான உத்தராயனம். பகல் தொடங்குவதற்கு முந்தைய விடியற்காலை நேரம் நமக்கு பிரம்மமுகூர்த்தம் எனப்படுகிறது.


இந்த நேரத்தில் எழுந்திருப்பது, நல்ல காரியங்கள் செய்வது மிகுந்த பலன் உடையதாக கூறப்படுகிறது. தேவர்களைப் பொருத்தவரை, மார்கழி மாதம்தான் பகல் தொடங்குவதற்கு முன்பு வரும் பிரம்மமுகூர்த்தம். அதனால், மாதங்களில் மார்கழி சிறப்பாக கூறப்படுகிறது. அதில் வரும் ஏகாதசி திதி சிறப்பு பெறுகிறது. இதுவே வைகுண்ட ஏகாதசி. பாற்கடலில் துயில் கொண்டிருக்கும் மகாவிஷ்ணு விழித்தெழும் காலத்தில் அவனை தொழுவது சகல நலன்களையும் சேர்க்கும் என்பது ஐதீகம்.

முரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக தனது உடலில் இருந்து மோகினியை மகாவிஷ்ணு தோற்றுவித்தார். முரனை மோகினி சம்ஹரித்த நாளே ஏகாதசி. அன்றைய தினம் தன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி அளிப்பதாகவும் பெருமாள் அருளினார். எல்லா ஏகாதசிகளும் விரதம் இருக்க முடியாதவர்கள் வைகுண்ட ஏகாதசியில் இருக்கலாம். ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமியிலேயே விரதம் தொடங்க வேண்டும். அன்றை தினம் ஒருவேளை மட்டும் சாப்பிடுவார்கள்.
ஏகாதசி தினம் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது சிறப்பு. முடியாதவர்கள் சுவாமிக்கு படைத்த பழம், பால் உண்ணலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் பாடலாம். அதிகாலையில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலுக்கு பெருமாள் எழுந்தருள்வார். அவரோடு சேர்ந்து நாமும் பரமபத வாசலை மிதிப்பது மிகவும் விசேஷம். அன்றைய தினம் இரவு கண் விழிக்க வேண்டும்.

மறுநாள் துவாதசியன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் உள்பட 21 கறியுடன் நிவேதனம் படைத்து ஏழைகள், அடியார்களுக்கு வழங்கி பின்னர் நாம் சாப்பிடுவது சிறப்பானதாகும். வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பது 3 கோடி ஏகாதசிகள் விரதம் இருப்பதற்கான பலனை கொடுக்கும் என்பது நம்பிக்கை.

தினகரன்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: இன்று வைகுண்ட ஏகாதசி !

Post by krishnaamma on Thu Jan 01, 2015 9:44 pm

இன்று வைகுண்ட ஏகாதசி: எவ்வளவு பெரிய துன்பத்தையும் விரட்டும் ஏகாதசி விரதம் !ஒரு காலத்தில் அம்பரீஷன் என்பவன், இப்பூமண்டலத்தின் சக்கரவர்த்தியாக ஆட்சி செய்து வந்தான். அவன் ஏகாதசி விரதத்தை தவறாது கடைபிடித்து வந்தான். ஒருமுறை, ஏகாதசி முடிந்த மறுநாள் துவாதசி சமயத்தில், யமுனைக்கரையில் கோபக்கார துர்வாச முனிவரை அவன் சந்தித் தான். அவருக்கு பாதபூஜை செய்து, அவரையும் தன்னோடு உணவு உண்ண வரும்படி அழைத்தான். யமுனையில் நீராடிவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்ற முனிவர், நீண்டநேரமாகியும் வரவில்லை. அம்பரீஷனின் ஏகாதசி விரத பலனை பங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், இவ்வாறு அவர் செய்தார்.

செய்வதறியாது திகைத்த அம்பரீஷனிடம் அங்கிருந்த மற்ற ரிஷிகள், “”அம்பரீஷா! துளசி தீர்த்தத்தையாவது சாப்பிட்டு விரதத்தை முடித்துக்கொள். துர்வாசரை விட்டு விட்டு உணவு உண்பது தான் தவறு. தீர்த்தம் அருந்துவதால் குற்றமில்லை,”என்று ஆலோசனை கூறினர். அம்பரீஷனும் துளசி தீர்த்தத்தை அருந்தினான். துர்வாசரும் வந்து சேர்ந்தார். தன்னை எதிர்பார்க்காமல் அம்பரீஷன் மட்டும் துளசி தீர்ததம் உண்டதைக் கேட்டு கோபம் கொண்டார். தன் சடைமுடி ஒன்றை அம்பரீஷன் மீது ஏவி விட்டார். அது பயங்கர பூதமாக மாறி அம்பரீஷனைத் துரத்தியது. அப்போது, மகாவிஷ்ணு அந்தப் பூதத்தின் மீது, தன் சுதர்சனச் சக்கரத்தை வீசி எறிந்தார். அச்சக்கரத்தின் வெப்பம் தாங்காமல் பூதம் எரிந்து சாம்பலானது. அதோடு மட்டுமில்லாமல் துர்வாசரையும் துரத்தியது. துர்வாசர் பாற்கடலுக்கு ஓடி மகாவிஷ்ணுவிடம் தன்னை மன்னிக்குமாறு முறையிட்டார்.“”துர்வாசரே! யாரொருவர் பக்தியோடு ஏகாதசி நாளில் என்னைக் குறித்து விரதம் இருக்கிறார்களோ, அவர்களுடையஇதயத்தில் நான் குடியிருக்கிறேன். அவர்களை காப்பது என் கடமை. அம்பரீஷனிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்படியானால் தான் சக்கரத்திடமிருந்து விடுதலை பெறுவீர்கள்,” என்றார். துர்வாசரும் அம்பரீஷனிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டியதோடு, அவனுடன் உணவு அருந்தி, பல வரங்களையும் தந்து விட்டு கிளம்பினார். ஏகாதசி விரதமிருப்பவர்கள் எவ்வளவு பெரிய துன்பத்தையும் தாங்கும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்வார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

ஸ்ரீ ரங்கநாதர் ஸ்தோத்திரம் :ஏகாதசியன்று இரவில் விழித்திருக்கும் போது, இந்த ஸ்தோத்திரத்தை 1008 முறை சொல்பவர்களுக்கு, இப்பிறவியில் செல்வவளமும், பின்னர் பிறப்பற்ற நிலையும் அமையும்.
* காவிரி நதியின் நடுவில் ஏழுமதில்களால் சூழப்பட்டு, நடுவில் தாமரை மொட்டுப் போன்று விளங்கும் விமானத்தின் கீழ், மிகவும் மென்மையான ஆதிசேஷனின் உடலாகிய கட்டிலில் யோகநித்திரையில் துயில்பவரும், இடது கையை இடுப்பில் வைத்திருப்பவரும், ஸ்ரீதேவியும், பூதேவியும் தாங்கிநிற்கும் திருப்பாதங்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை வணங்குகிறேன்.* கஸ்தூரி திலகம் இட்டவரும், காது வரை நீண்டிருக்கும் திருக்கண்களைக் கொண்டவரும், முத்துக்களால் இழைக்கப் பட்ட கிரீடத்தைச் சூடியவரும், தன்னைத் தரிசிப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்பவரும், தாமரை மலர் போன்ற திருமுகத்தைக் கொண்டவருமான ரங்கநாதரே! உம்மை மறுபடியும் எப்போது பார்ப்பேன்?

* காவிரிக்கரையின் அருகில் வீற்றிருப்பவரும், இந்திர நீலமணியை போன்ற பிரகாசமுடையவரும், மது என்னும் அரக்கனைக் கொன்றவருமான ரங்கநாத மூர்த்தியே! உம்மை ஹே நாராயணா! ஹே முராரே! ஹே கோவிந்தா! என்று திருநாமங்களை சொல்லி மகிழும் பாக்கியம் என் வாழ்நாளில் எப்போது கிடைக்கும்?

தொடரும்.......................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: இன்று வைகுண்ட ஏகாதசி !

Post by krishnaamma on Thu Jan 01, 2015 9:47 pm

* எப்போது காவிரியில் ஸ்நானம் செய்து என் பாவங்களைப் போக்குவேன்? அடர்ந்த மரங்களைக் கொண்டதும், ரம்மியமானதும், பசுமையானதுமான காவிரிக்கரையில் எப்போது நான் வாசம் செய்வேன்? ஆதிசேஷன் மீது துயில்பவரும், செந்தாமரைப்பூ போன்ற கண்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை எப்போது சேவிப்பேன்?

* தேவேந்திரனின் அமரலோகத்தில் வாசம் செய்து, தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண்டாம். ஸ்ரீரங்கநாதா! உம் பட்டணத்து வீதியில் திரியும் நாயாகப் பிறக்கும் பாக்கியத்தை எனக்கு கொடுப்பீராக.

* ஸ்ரீரங்கத்தையும், காஞ்சிபுரத்தையும், திருப்பதியையும், அஹோபிலத்தையும், சிம்மாசலத்தையும்(சோளிங்கர்), கூர்மத்தையும் (ஆந்திரா), புரு‌ஷோத்தமத்தையும், பத்ரிகாசிரமத்தையும், நைமிசாரண்யத்தையும், அழகு பொருந்திய துவாரகா பட்டினத்தையும், பிரயாகையையும், மதுராபுரியையும், அயோத்தியையும், கயாக்ஷத்திரத்தையும், புஷ்கரத்தையும், சாளக்கிராமத்தையும் நேரில் கண்டு உம் திருப்பாதங்களை சேவிக்கும் பாக்கியத்தை அருள் செய்வீராக.

* “பசியாக இருக்கிறது. அதனால் உடம்பு நடுங்குகிறது’ என்று கூறினால் கருணை கொண்ட தாய், எப்படி குழந்தையை நோக்கி ஓடிவருவாளோ, அதுபோல பக்தர்களின் துன்பத்தைப் போக்க ஓடிவந்து அருள்செய்யும் ரங்கநாதரே! உம்மைப் பணிந்து வணங்குகிறேன்.திருமாலே இருக்கும் விரதம் : குறிப்பிட்ட நாளில் நம் நன்மைக்காக இஷ்ட தெய்வத்தைக் குறித்து உணவு உண்ணாமல் நோன்பாக இருப்பதை விரதம் என்பர். இதில், ஏகாதசி விரதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனாகிய திருமாலே, இந்த விரதத்தினை மேற்கொள்கிறார் என்பார்கள். எனவே, இதன் மகிமையை அளவிட கருவியே இல்லை. அனைத்தையும் கடந்தவர் கடவுள். நமக்குத் தான் விரதம், ஆச்சார அனுஷ்டானங்கள் எல்லாம். கடவுளுக்கு ஏது என நமக்குத் தோன்றலாம். சத்தியத்தைக் காக்க மகாவிஷ்ணுவே திரேதாயுகத்தில் ராமனாகப் பிறந்தார். சாதாரண மனிதனைப் போல பலவிதமான துன்பங்களை அனுபவித்து, தர்மத்தை மீறாமல் வாழ்ந்து காட்டினார். அப்பரம்பொருளே துவாபரயுகத்தில் கிருஷ்ணராக அவதரித்து தர்மத்தை நிலைநிறுத்தி உதாரண புருஷராகத் திகழ்ந்தார். அதேபோல, பரம்பொருளான விஷ்ணுவே, ஏகாதசியின் சிறப்பினை உணர்த்தும் வகையில், அவரே விரதம் இருந்து அருள் செய்கிறார்.விரதமுறை : ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமிநாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையாக உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமையைப் பேசுவதும், விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுது போக்க வேண்டும். விழிக்கிறோம் என்ற பெயரில் சினிமா, “டிவி’ பார்க்கக்கூடாது. மறுநாள் துவாதசி அன்று காலையில் 21 வகை கறி சமைத்து உண்ண வேண்டும். இதில் அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக் காய் அவசியம் இடம்பெற வேண்டும். துவாதசியில் அதிகாலையில் சாப்பிட்ட பிறகு, அன்று பகலிலும் உறங்கக்கூடாது. ஏகாதசி விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசி பறிக்கக் கூடாது. பூஜைக் கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும். ஏகாதசிவிரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவதாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என்று மூன்று திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது. ஏகாதசி விரதமிருப்பவர்கள் சகல சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.ஏகாதசி விரத மகிமை : பரமேஸ்வரனிடம் ஒருமுறை பார்வதிதேவி, மிகச்சிறந்த விரதம் எது எனக்கேட்டாள். “”உமா! விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதமே! பாவங்களைப் போக்கும் விரதம் இது! இதை அனுஷ்டிப்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள். முப்பத்துமுக்கோடி தேவர்களும் இவ்விரதத்தை அனுசரித்து பாற்கடல் வாசனின் அருளைப் பெறுவதால் இவ்விரதத்திற்கு “”வைகுண்ட முக்கோடி ஏகாதசி” என்ற சிறப்புப் பெயருண்டு. யார் ஒருவர் ஏகாதசி நாளில் உணவு இல்லாமல் உபவாசம் இருக்கிறாரோ, அவர் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலை பெற்று மேலான கதியை அடைகிறார்,” என்றார். சிரார்த்தம் கூடாது ஏகாதசி நாளில் தாய், தந்தையருக்கு சிரார்த்தம் முதலிய பிதுர்கடன் இருந்தால், அதை நிறுத்திவைத்து ஏகாதசிக்கு மறுநாளான துவாதசியன்றே செய்ய வேண்டும் என்று விரதசாஸ்திரம் கூறுகிறது.

நன்றி தமிழொலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: இன்று வைகுண்ட ஏகாதசி !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum