ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 ayyasamy ram

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 ayyasamy ram

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இயற்கையின் மொழிகள்!
 மூர்த்தி

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 மூர்த்தி

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 krishnanramadurai

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 ayyasamy ram

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 ayyasamy ram

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பாடிய முதல் பாட்டு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பாடிய முதல் பாட்டு

Post by ayyasamy ram on Mon Jan 12, 2015 6:19 am


-
-

 பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் “பெற்ற தாய்’. அதில் அவர் பாடிய பாடல் “ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்’ என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா.

-
 டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : “மலைக்கள்ளன்’. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

-
 பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் “சிந்தனை என் செல்வமே’ என்பதாகும். இடம் பெற்ற படம்:
“ஜாதகம்’

-
 பி.லீலா பாடிய முதல்பாடல் “ஜெகம் புகழும் புண்ணிய கதை’. படம் :
“லவகுசா’.

-
 “பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தின் மூலம் முதன் முதலாகத் தமிழில் பாடினார் எஸ்.பி. சைலஜா. அவர் பாடிய பாடல்: “சோலைக் குயிலே’ படத்தின் இசையமைப்பாளர்: இளையராஜா.

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34994
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by mkrsantharam on Wed Jan 14, 2015 5:38 pm

திரு . அய்யாசாமி :


" பி.லீலா பாடிய முதல்பாடல் “ஜெகம் புகழும் புண்ணிய கதை’. படம் :
“லவகுசா’ "   அன்புள்ள திரு . அய்யாசாமி ராம் அவர்களுக்கு ,

பிரபல பின்னணிப் பாடகி பி. லீலா அவர்களின் முதல் திரையுலக அறிமுகம் :

1963 ஆம் ஆண்டில் வெளி வந்த :

" ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே "

என்று எழுதி இருப்பது கண்டு வியப்பு அடைந்தேன் !
  பி. சுசீலா மற்றும் எஸ் . ஜானகி - இவர்களுக்கும்

'சீனியர் ' ஆக விளங்கிய பி . லீலா அறிமுகம் ஆனது :

1948 ஆம் ஆண்டில் !


1948 ஆம் ஆண்டில் வெளிவந்த , கே . ஆர் . ராமசாமி நடித்த :


" கங்கணம் "

இந்த படத்தில் கதாநாயகி மேனகா என்பவருக்கு 4 பாடல்களை

பி . லீலா பாடி அறிமுகம் ஆனார் !


அப்புறம் ?

' திகம்பர சாமியார் ' ( 1950 ) படத்தில் :

" நாதர் முடியில் இருக்கும் நல்ல பாம்பே "

என்கிற அழகான பாடல் பாடி

புகழ் பெற்றார் !


பிறகு ?


" சர்வாதிகாரி " ( 1951 )  - இந்த படத்தில் ஒரு புதுமையான பாட்டு !

எதிரொலி மாதிரி அதாவது " எக்கோ "    மாதிரி ஒலிக்கும்

- அதுவும் - அந்த காலத்திலேயே இந்த மாதிரி தொழில் நுட்பத்துடன்

ஒரு பாடல் :


" கண்ணாளன் வருவாரா "


மேற்படி பாடலை பாடினர் பி. லீலா !what  is  next  ?


" தேவகி "  

" இந்த படத்தில் ஒரு துள்ளல் பாட்டு !

ஒரே ஒரு கடம் - இதனை வைத்தே வித்தை காட்டினார் ,

இசை மேதை ஜி. ராமநாதன் .


" பேரின்பமே வாழ்விலே "

திருச்சி லோகநாதனுடன் " பொளந்து " கட்டியவர்

பி. லீலா !சரி ?


" மணமகள் " ( 1951 )

கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் தயாரித்த படம் :


" எல்லாம் இன்பமயம் "


சி ஆர் சுப்பாராமனின் அமர்க்கள இசையுடுன் எம் எல் வசந்தகுமாரியுடன்

' தூள் ' பரத்தினார் பி லீலா !அப்படியா !எம் கே தி பாகவதருடன் கூட ஒரு பாட்டு !


" அமரகவி " ( 1952 )    இந்த படத்தில் பாகவதருடன்

ஒரு பாட்டு :


செடி மறைவிலே ஒரு பூங்க்கொடி "


பாகவதருடன் பாடியவர் : பி. லீலா !


மேலே சொல்லுங்கோ !


" மேலே "   சொன்னால் எழுதியதியவை எல்லாம் அடிபடும் !


ஹாய்...ஹாய்...  கீழே படியுனகள் !


' மிஸ்ஸியம்மா '

' குலேபகாவலி '

' மாயா பஜார் '

' தங்கமலை ரகசியம் '

' வஞ்சிக் கோட்டை வாலிபன் '

' பாகப்பிரிவினை '


இன்னும் பல படங்களில் அழியாத கானங்களை பாடியவர் :


பி . லீலா !அப்புறம்தான் ......


" ஜெகம் புகழும் புண்ணியகதை ராமனின் கதையே "

( " லவகுசா " ( 1963 )  


    சரி ,

இத்தனை புகழ் பெற்ற பி .லீலா பின்னர் ஏன்

60 களில் ' காணாமல் '   போய்விட்டார் ?
   

    வேறு என்ன ,

பி. சுசீலா என்கிற ' இசை வெள்ளம் ',

பி .லீலா என்கிற அழகிய  நீரோடையை காணாமல்


போக செய்து விட்ட்டது  !
   பி. லீலாவின் பாடல்களை விரும்புவர்கள்

தயவுசெய்து  எழுதவும் !

எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by krishnaamma on Wed Jan 14, 2015 5:47 pm

பி. லீலாவின், நீங்கள் எழுதின பாடல்கள் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா, "காத்திருப்பான் கமலக்கண்ணனை" மறக்க முடியுமா?...............
.
.
.
.
லீலாவின் திரைப்பட பாடல்கள் மட்டும் அல்ல , அவரின் மலையாள , குருவாயூரப்பனின்   பாட்டுகளும் ரொம்ப பிடிக்கும்......"உதயான் ஏழரை நாழிகைளில்"....."வாகச்சாத்து"............எல்லாம் அற்புதம் புன்னகை .............

இந்த  இருபாடல்களும் கிடைத்தால் தாருங்கள் புன்னகை .....மேலும் எந்த பாலும் இங்கே பகிருங்கள், என்னிடம் இல்லாவிட்டால் டவுன்லோட் செய்து கொள்கிறேன் புன்னகை..........'பழைய பாடல்களுக்கான திரி' யே இருக்கு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by T.N.Balasubramanian on Wed Jan 14, 2015 9:46 pm

எல்லாம் இன்பமயம் --MLV /P leela -மணமகள்
இன்றும் கேட்க கேட்க தெவிட்டாத பாடல் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21485
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by veeyaar on Thu Jan 15, 2015 3:27 pm

அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

எஸ்.பி.பாலா பாடிய முதல் தமிழ்ப்பாடல், குழந்தை உள்ளம் திரைப்படத்தில் இடம் பெற்ற முத்துச்சிப்பிக்குள்ளே. அதற்கடுத்து மெல்லிசை மன்னர் இசையில் இரு பாடல்கள் ஒரே சமயத்தில் பதிவாகின. ஹோட்டல் ரம்பா மற்றும் பால் குடம்.

எஸ்.பி.பாடிய பாடல் இடம் பெற்று வெளிவந்த முதல் தமிழ்ப்படம் பால்குடம் படத்தில் இடம் பெற்ற மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் பாடல்.

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by veeyaar on Thu Jan 15, 2015 3:29 pm

டாக்டர் சார்
அருமை சார். வேறெப்படி வாழ்த்துவதெனத் தெரியவில்லை.
புட்டுப்புட்டு வைக்கிறீர்களே...
ஒரு மாறுதலுக்கு பொங்கல் பொங்கல் வையுங்களேன்.
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by சிவா on Thu Jan 15, 2015 5:32 pm

தெளிவான விளக்கத்திற்கு நன்றி திரு @mkrsantharam
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by ராஜா on Thu Jan 15, 2015 8:09 pm

:வணக்கம்: மிக்க நன்றி ஐயா ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by mkrsantharam on Fri Jan 16, 2015 4:39 pm

 

  கடிதங்களை எழுதிய :

திருமதி . கிருஷ்ணம்மா


திரு. பாலசுப்பிரமணியன்


திரு. வியார் (  " புட்டு " புட்டு "  - வுக்கு பதில் " பொங்கல் " , " பொங்கல் "

அட்டகாசம் ! )திரு. சிவா ,


மற்றும்


திரு. ராஜா

ஆகிய எல்லோருக்கும் நன்றி !    

எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by mkrsantharam on Fri Jan 16, 2015 5:25 pm

கிருஷ்ணம்மா அம்மையார் அவர்களுக்கு ,


திரைப்படப் பாடல்களின் சேமிப்பு என்னிடம் எராளம் ....

அனால் பக்திப் பாடல்களில் எனக்கு அவ்வளவாக

நாட்டம் இல்லை !

( ஒரு வேலை அதற்கான ' வயது ' இன்னும் வரவில்லையோ

என்ன கொடுமையோ தெரியவில்லை ! )

எனினும் நீங்கள் கேட்ட பாடல்கள் 2 ம் என் நண்பர்களிடம்

நிச்சயம் உண்டு , அவைகளை நான் வாங்கி உங்களிடம்

தருகிறேன் !


எனினும் பி . லீலா பாடிய 2 ஐயப்பன் பக்திப் பாடல்கள்

உங்களுக்காக !
1 ." சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமி "

பி .லீலா .
mediafire.com listen/0dxwleamsyiu8yp/073.SARANAM_SARANAM_AYYAPPA.ஂP3 2. " அன்பு செல்வமே சரணம் ஐயப்பா "


பி . லீலா
" கொஞ்சும் சலங்கை ஓலி கேட்டு " பாடலுடன் !


mediafire.com listen/c1px8aw78nc2x7m/060.ANBUSELVAME_AYYAPPA-LAVAKUSA.MP3

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

பி . லீலா அவர்களின் சில அரிய திரைப்

பாடல்கள் ........இதோ- அடுத்து  !
எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by Dr.S.Soundarapandian on Fri Jan 16, 2015 6:10 pm

பழைய பாடல்கள் மட்டுமல்ல சாந்தாராமின் பழைய வரலாறுகளும் காதில் தேன் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by mkrsantharam on Sun Jan 18, 2015 12:31 pm

தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி :

டாக்டர் . செளந்திரபாண்டியனார் அவர்களே !

தன்யன் ஆனேன் !
எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by mkrsantharam on Sun Jan 18, 2015 12:58 pm

பி . லீலா பாடிய சில

அரிய திரைப்படப் பாடல்கள் !

சிறந்த ஒலிப்பதிவில் !

" தேவகி " ( 1951 )


வி. என் . ஜானகி மற்றும் மாதுரி தேவி இணைந்து நடித்த இந்த

படத்தின் கதை வசனம் : மு. கருணாநிதி அவர்கள் !


இசை மேதை ஜி. ராமநாதன் அவர்களின் அற்புத இசையமைப்பில்

உருவான படம் !" பேரின்பமே வாழ்விலே மீண்டதே !

சீராக ஆனந்தம் காண்போமே ! "
லீலா வுடன் திருச்சி லோகநாதன் பாடும் துள்ளல் பாடல் !

இவர்களுடன் இசைக் கருவி கடம் மும் பாடுவது சிறப்பு !

லீலாவும் லோகு ( ! ) வும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல்

சளைக்காமல் பாடுவது சிறப்பு - அதுவும் அந்த ' ஹம்மிங்க்க் ' இல் !

என்ன ஒரு போட்டி !


கேளுங்கள் !


http://picosong.com/575T/


அதுவும் இந்த ஜி . ஆர் . அவர்கள் ஓர் இசை மேதை !


இசைத் தட்டில் வரும் இந்த பாடலை கடத்தை பயன்படுத்தி

இசையமைத்தவர் படத்தில் பார்க்கும் போது அவர் சாதாரண மான

கர்நாடக முறையில் இசையமைத்திருப்பதாக எனக்கு

தெரிகிறது !


நீங்களும் ஒப்பிட்டுப் பார்க்க .....

இதோ விடியோ பாடல் !தொடரும்


எம்கேஆர்சாந்தாராம்avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by ayyasamy ram on Sun Jan 18, 2015 3:07 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34994
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by விமந்தனி on Sun Jan 18, 2015 11:22 pm

சூப்பருங்க சூப்பருங்க


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by mkrsantharam on Sun Jan 25, 2015 4:43 pm

  பி . லீலா பாடிய அரிய பாடல்கள் .......

தொடர்ச்சி .......... !
 
   " வணக்கம் சார் வணக்கம் !

வாய் பேசாமலிருப்பது ஏன் சுணக்கம் !  "
 "என்ன சார் !  யாருக்கு வணக்கம் போடுகிறீர்கள் ? "

என்று என்னைக் 'கலாய்க்கிறீர்களா !

பி .லீலா பாடிய அடுத்த பாடலின் முதல் அடிகளே அப்படித்தான்

வருகிறது !
    படம் :


" முன்று பெண்கள் " ( 1956)
" என்னய்யா நீர் !  இப்படி பெயர் போட்டு தமிழில்

ஒரு படம் வந்தது என்று ' டூப் '   சொல்லுகிறீகள் ! "

என்று யாராவது என்னை ' நையப் புடைக்காமல் ' இருப்பதற்காக ( ! )

எங்கேயோ ' நோண்டி '  .....துடைத்து .....'அச்சும் அச்சும் ' என்று தும்மிக்கொண்டு

பழைய 'போஸ்டர்' கீழே கொடுத்துள்ளேன் !


நல்லா பார்த்துக்குங்கோப்பா !


[img:432c]https://www.filepicker.io/api/file/A4FMl1s3RgOwcKUIHEIM+3[en.JPG[/img:432c]http://www.photouploads.com/images/3en.jpg
" சரி ! அது போகட்டும் !

யார் அந்த ' 3 பெண்கள் ' -

நயன்தாரா - திரிஷா - ஹன்சிகா மவுத்வாணி - யா ? "

என்றா  " சொள்ளு" கிறீர்கள் - மன்னிக்கவும் - சொல்கிறீர்கள் ?


அத்தான் இல்லை !

அவர்கள் :


1. எம் .என். ராஜம்

2 . சி.கே . சரஸ்வதி

3. கிரிஜா !சரி , இந்த பெயர்களை உடைய நடிகைகளை உங்களுக்கு

அடையாளம் புரிகிறதோ இல்லையோ ......தெரியலை .....

இன்னொரு கேள்வி கேட்கிறேன் !"இந்த " 3 பெண்கள் "  படத்திற்கு இசை அமைத்தது யார் ? "


என்றா கேட்கிறீர்கள் ?


கேட்டிங்களே .....நல்லா மாடிக்கிட்டீங்க்க .....ம் ....ம் ...மாட்டிக்கிட்டீங்க !


இந்த படத்திற்கு இசை : 3 பெண்கள் ......ஹி....ஹி ....

3 பேர்கள் !


அவர்கள் :


1. குன்னக்குடி வெங்கட்ராமய்யர் .


2. அஸ்வத்தம்மா ( வீணை காயத்திரி யின் அப்பா ! )

3. . கே . வி . மகாதேவன் .


    " சரி , அய்யா !  இந்த பாடலில் பி .லீலா வுடன்

பாடும் ஆண் பாடகர் யார் , அதையாவது நமக்கு விளங்கட்டும் ! "


என்றா கேட்கிறீர்கள் ?


அப்படியே " மெர்சல் " ஆகிவிடுவீர்கள் , அந்த பாடகர் பெயரை நான்

சொல்லிவிட்டால் !


" என் அய்யா , அவர் பாகவதரா ? "


இல்லை ....... அதுக்கும் மேலே !அவர் பெயர் :


டி. எ . மோதி !


" சரி, சரி , சும்மா கேட்டேன் , ஆளை விடு ! "

என்கிறீர்களா !

இந்த டி . எ . மோதி அவர்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு சொல்லட்டுமா ?


1. " காணா இன்பம் கனிந்ததேனோ " - " சபாஷ் மீனா " படப் பாடலில்

சுசீலா வுடன் பாடியவர் !


2. அந்த கால பின்னணிப் பாடகி நித்ய கலா வின் ' வூட்டுக்காரர் ' - அத்தான் -

வீட்டுக்காரர் !' சரி , பாடல் எப்படி ? '

என்றா கேட்கிறீர்கள் ?


பாடலுக்கென்ன குறைச்சல் !

பி. லீலா , " டாக்டர் லீலா "   ஆக மாறி அட்டகாசமாக

பாடுகிறார் !

 (  லீலா அவர்களுடன் சுசீலா அம்மா ! )


" இதய வேதனையா சொல்லுங்க ! "

என்று பாடும்போது அவர் குரல் இன்னும் அழகாக

மாறி விடுகிறது !


டி எ மோதி ?

அவர் குரலும் மாறி விடுகிறது , அசல் நோயாளி பாடுவது பாடுகிறார் !


கேளுங்கோ நயனா , கேளுங்கோ !
    பாடல் :http://picosong.com/LYrn/

 

  எச்சரிக்கை !

பி .லீலா வின் அபூர்வ பாடல்கள் இன்னும்

தொடரும் !
எம்கேஆர்சாந்தாராம்


Last edited by mkrsantharam on Sun Jan 25, 2015 5:01 pm; edited 1 time in total
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by T.N.Balasubramanian on Sun Jan 25, 2015 5:01 pm

அரிய தகவல், ரசிக்கும் வகையில் அறிய தந்தமைக்கு நன்றி நன்றி எம்கே ஆர் அவர்களே

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21485
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by ayyasamy ram on Mon Jan 26, 2015 4:27 pm

அருமையான தகவல் பகிர்வுகள்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34994
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by mkrsantharam on Sun Feb 01, 2015 5:38 pm

கடிதங்களை எழுதிய :

திரு. அய்யா சாமி மற்றும்

திரு . பாலசுப்பிரமணியன்

ஆகியோருக்கு நன்றி !பி . லீலா அவர்கள் தொடர்ந்து பாடுகிறார் !

" சில சில ஆண்டுகள் முன்னம் ,

பலரும் போற்றும் வண்ணம் ,

சேர்ந்து வாழ்ந்தது ரெண்டு அன்னம் ! "


" எங்கள் செல்வி " ( 1960 )

ஏ. நாகேஸ்வரராவும் , அஞ்சலி தேவியும்

படத்தில் கண்வன் - மனைவியாக வருகின்றனர் .


அவர்களுக்கு ஒரு பெண் குழ்ந்தை .


அமைதியுடன் வாழ்ந்த அந்த குடும்பத்தில் ஒரு புயல்

அடித்தது .

நடிகர் கே . பாலாஜியின் வடிவில் அந்த புயல் !

நடிகர் நாகார்ஜுனனின் அப்பா ( அத்தான் , ஏ . நாகேஸ்வர ராவை சொல்கிறேன் ! )

இசையமைப்பாளர் ஆதி நாராயன் ராவின் மனைவியை ( அத்தான் ,

அஞ்சலி தேவியைத் தான் சொல்கிறேன் ! )

வீணாக சந்தேகிக்கிறார் !

விளைவு ?

குடும்பம் சின்னா பின்னமாக ஆகின்றது !

குழ்ந்தை ஒரு பக்கம் !

அமலாவின் மாமனார் ( அத்தான், ஏ . நாகேஸ்வரராவை சொல்கிறேன் ! )

ஒரு பக்கம் !

" அடுத்த வீட்டுப் பெண் " பட நாயகி ( அத்தான் , நடிகை அஞ்சலி தேவி ! )

ஒரு பக்கம் !


ஆக மொத்தத்தில் அந்த குடும்பம் :

" யாதோன் கி பாராத் " ஆகிவிடுகிறது !


அஞ்சலிதேவி , குழந்தையும் , கணவனையும் பிரிந்து நடிகர்

டி. எஸ் . பாலய்யா வின் ஆதரவில் வாழ்ந்து ஒரு பள்ளிக்கூடத்தில்

ஆசிரியை வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் .


அஞ்சலி , எப்போதும் தன குழ்ந்தை -கம் - கணவர் நினைவுடன்

வாழ்கிறார் !

பள்ளிக்கூடத்தில் பள்ளிச் சிறார்கள் , அஞ்சலி தேவி டீச்சரிடம்

" ஒரு கதை சொல்லுங்க , டீச்சர் ! "

என்று நச்சரிக்க ........

பாவம் ....அந்த அந்த ஆசிரியை ஆக இருக்கும் தாய் ,

தன கதையை யே பாட்டாக பாடுகிறார் !இப்போது உங்களுக்கு விளங்கியிருக்குமே ....

பாடலின் " சிடுவேஷன் ! "


இந்த " சிடுவேஷன் " ஐ பி. லீலா அவர்களும் புரிந்து கொண்டு

பாடுகிறார் , கேளுங்கள் , மிக அற்புதமாக இருக்கும் !1 . அந்த கதையில் அன்னங்கள் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருந்தன

என்பதை நடிகை அஞ்சலிதேவியின் முக பாவங்களை விட பின்னணிப் பாடகி

பி.லீலா வின் குரலில் நாம் கண்டு கொள்ளலாம் !

2. டீச்சரின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் சிறார்களின்

குதூகலம் நம்மை மகிழ்விக்கும் !3. அப்படி மகிழ்ச்சியுடன் பாடும் அஞ்சலிதேவி அல்லது பி .லீலா

எப்படி , பாடலின் இறுதியில் மாறிவிடுவார் :

பாருங்கள் / கேளுங்கள் !


4. பாடலின் இறுதியில் பி . லீலா அழ ஆரம்பித்துவிடுவார் .....


" இப்படி மகிந்திடும் நாளையிலே நேர்ந்தது கொடிய

பெரும் புயலே "


மேலே குறிப்பிட்ட பாடல் வரிகளை பாட ஆரம்பித்தவுடன் பி . லீலா

ஆழ ஆரம்பித்துவிடுவார் !


அழ ஆரம்பித்ததோடும் அல்லாமல் பாடவும் செய்வார் !

இப்படி அழுது கொண்டே பாடுவது என்பது அவளவு

எளிது அல்லவே !


பாடல்வரிகளை தவறாமல் உச்சரிக்க வேண்டும் !

உடன் அழ வேண்டும் !

உணர்ச்சிகளை தவறாமல் குரலில் வெளிப்படுத்த வேண்டு்ம் !இவை எல்லாமெ நன்றாக வெளிப்படுத்தி பாடகிறார் , பி .லீலா !
( இப்படி "அழுது கொண்டே பாடுவதில்

" குரல் தேர்ந்தவர் " / கை தேர்ந்தவர் :


டி எம் எஸ் !


" தங்கப் பதக்கம் " படத்தில் " சோதனை மேல் சோதனை "

பாட்டில் :


" தானாட வில்லை அம்மா , சதை ஆடுது ! "

என்கிற இடத்திலும்" தாயக் காத்த தனயன் " படத்தில் :

" நடக்கும் என்பார் நடக்காது "

பாட்டில் :


" பிரித்த பந்தல் கோலம் கண்டு "


என்று பாடுகின்ற இடங்களில் , டி எம் எஸ்

அழுவார் / பாடுவார் ! )
4. லீலா அழுது கொண்டே பாடும் போது குழந்தைகளும்

சோகமாகி முகங்களை தூக்கி வைத்துக் கொண்டு

சோகமாக இருப்பது ........கிரேட் !5. இந்த காட்சியில் நடிகை அஞ்சலிதேவி சும்மா " டம்மி பீஸ் "

மட்டும்தான் ......

நடிப்பதும் பாடுவதும் பி .லீலா தானே !


பி . லீலா அவர்களின் பாடலின் சிறப்பை இதன் மூலம்

விளங்குகிறது அல்லவா !

" சில சில ஆண்டுகள் முன்னம் "


பாடல் : ஆடியோ :


http://picosong.com/LXTE/விடியோ :
தொடரும் .


எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by மாணிக்கம் நடேசன் on Mon Feb 23, 2015 11:28 am

பாடிய முதல் பாட்டு என்னும் திரியை நான் இதுவரை பார்த்ததில்லை, இன்று நமது அன்பான டாக்டர் சார் அத்திரியைப் பற்றி எழுதி இருந்தார், கதவே திறந்து உள்ளே நுழைந்தேன், ஆஹா அங்கு எனக்கு தேவையான பல அற்புத புதையல்களைக் கண்டேன். எப்படி டாக்டர் சார் இதையெல்லாம் பத்திரப்படுத்தி எங்களுக்கு சுவைக்க தருகிறீர்கள்? அற்காக முதலில் எனது மனதார்ந்த நன்றி டாக்டர் சார். இங்கும் உங்கள் புனித பணியை தொடரட்டும். நன்றி

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4230
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by M.Saranya on Mon Feb 23, 2015 12:35 pm
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by மாணிக்கம் நடேசன் on Mon Feb 23, 2015 12:53 pm

1951 ம் வெளிவந்த தேவகி என்னும் காவியத்தை   இந்த  இணைப்பின் வழி காணலாம்.

http://worldfloat.com/Videos/Default.aspx#/view/dQmG4qs7zVc

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4230
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by மாணிக்கம் நடேசன் on Thu Mar 05, 2015 11:28 am

பேரின்பமே வாழ்விலே, நல்ல தரத்தில் தந்து எங்களை பேரின்பத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் டாக்டர் சார்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4230
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by mkrsantharam on Mon Mar 23, 2015 5:27 pm

பி . லீலா பாடிய அரிய பாடல்கள் .......

தொடர்ச்சி .......... !


" காசிருந்தால் கை மேலே குஷியாலே மனம் போலே

இந்த கலியுகத்தை வலை வீசிலாம் .....

அந்த கடவுளை விலை பேசலாம் ! "
படம் : " மனிதன் " ( 1953 )
பாடலை எழுதியவர் : ' சுரபி '


இசை : எஸ் . வி . வெங்கட்ராமன் .
' மனிதன் ' ?

இப்படி ஒரு பெயரில் திரைப்படமா ? '


ஆமாம் , ஸ்வாமி !


டி. கே . ஷண்மகம் , டி . கே . பகவதி , மாதுரி தேவி ,

பண்டரி பாய் , டி . கே . நடராசன் ஆகியோர் நடித்து

" ஜுபிடர் " பட நிறுவனம் தயாரித்த படம் !


இந்த படத்தின் கதை வெற்றி பெற்ற நாடகமாக :


" டி .கே. எஸ் சகோதரர்கள் "

அரங்கேற்றிய வரலாறு உண்டு !


இந்த நாடகத்தைப் பார்த்துதான் 'ஜுபிடர் ' பட நிறுவனம்

இந்த கதையை படமாக்கியது !" படத்தின் கதை , என்னய்யா ? "


சொல்றேன் .....சொல்றேன் .....

கதையை சொன்னால் உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ ....

அதெல்லாம் ....' ஐ டோன்ட் கேர் ' ....சொல்லிவிடுகிறேனே !

கணவனை பிரிந்து வாழும் மனைவி ....

சந்தர்ப்ப வசத்தால் தனக்குத் தெரிந்த ஓவியன் ஒருவனிடம்

தன மனதை பறி கொடுத்து பின்னர் தன

கற்பையும்

இழந்து விடுகிறாள் !

தெரியாமல் நடந்து விட்ட இந்த பிரச்சனையின் தீவரம் எண்ணி

அந்த பெண் வீட்டை விட்டு வெளியேற ,

கால் எலும்பு ஒரு விபத்தில் முறிய ....

அவளை ஒரு டாக்டர் காப்பாற்ற ....

விஷயம் அறிந்த கணவன் தன மனைவியை

பெருந்தன்மையுடன் மன்னித்து அவளை ஏற்றுக்கொள்ள

முன் வரும்போது ...........அந்த அதிர்ச்சியில் மனைவி

இறந்து விடுகிறாள் !'இத்தாம்ப்பா கதை ! '


கதை பிடித்திருக்கா ?" உங்களுக்கு பிடித்திருக்கா ? "


என்று என்னைக் கேட்கிறீர்களா !


அப்புறம் வந்த " ஓர் ஊதாப்பு கண்சிமிட்டுகிறது " படமே எனக்கு

பிடிக்கவில்லை , இந்த படமா எனக்கு பிடிக்கும் !" சரி , படம் எப்படி ஓடியதா ? "


அத்தான் இல்லை !

வித்தியாசமான கசப்பான கதையை முழுங்க யாரும் தயாராக

இல்லை .....அதற்கு காரணம் :


மேடை நாடகத்தில் மனைவி வேடத்தில் :

எம் .எஸ் . திரெளபதி

என்கிற நடிகை சிறப்பாக நடித்து நாடகத்தை மெருகேற்றினார் !

படத்தில் ?


செளகார் ஜானகியின் சகோதரி கிருஷ்ணகுமாரி அந்த மனைவி

வேடத்தில் நடித்தார் .....அவரால் சிறப்பாக நடிக்க முடியவில்லையாம் !

பின்ன என்னவாம் !


'நடிகையர் திலகம் ' சாவித்திரி நடிக்க வெண்டிய வேடத்தில்

நயன்தாரா நடித்தால் என்னவாகும் !
அதை விட சுவையான இன்னொரு செய்தி :


சென்னை சைதாபேட்டை பகுதியில் :


" நூர்ஜஹான் "

என்கிற பெயரில் ஒரு தியேட்டர் 1953 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு

அந்த தியேட்டரில் முதல் படமாக திரையிட ' மனிதன் ' படத்தை

திரை இட ஏற்பாடு செய்தனர் !


தியேட்டரை திறந்து வைக்க :

எம் . எ . முத்தையா செட்டியார் அவர்களை அழைத்து

வந்திருந்தனர் !

செட்டியார் வந்தார் ......

வந்தவர் தியேட்டரை திறக்க கத்திரிக்கோலை தேடவில்லை !

மாறாக ....


" என்னப்பா இந்த தியேட்டரில் முதல் படம் ? "


என்று கேட்டுவைத்தார் !

விழாக்குழுவினர் ' மனிதன் ' என்று சொல்ல ....செட்டியார்

" மனிதன் ' கதை என்ன ? "

என்று கேட்டுத்தொளைத்தார் !

" மனிதன் " கதை அவருக்கு சொல்லப்பட்டது !


கடுப்பானார் செட்டியார் அவர்கள் ! !

கோபத்தின் உச்சிக்கு போய்விட்டார் !" நம் நாட்டுக் கலாச்சாரத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்ட

இந்த படத்தை தயாரித்தவர்களை நான் வன்மையாக

கண்டிக்கிறேன் !

இந்த மாதிரி கலாச்சார சீர்கேட்டுக்கு வழி வகுக்கும் இந்த படம்

ஒடக்கூடாது !

மக்கள் இந்த படத்தை பார்க்கக் கூடாது !

இந்த படத்தை தயாரித்தவர்களை நான் வெறுக்கிறேன் !

மக்கள் இந்த படத்தை புறக்கணிக்கவேண்டும் ! "கோபமாக சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார் செட்டியார் !" அந்த காலத்தில் கூட

" டிராப்பிக் ராமசாமிக்கள் "

இருந்திருக்கிறார்கள் , அய்யா ! "தியேட்டர் திறப்புவிழாவுக்கெ இந்த கதி என்றால்

படம் ?


" பப்படம் " தான் !
அப்புறம் ?


இரண்டு ' பிட் ' தகவல்கள் :


1. சென்னை சைதாப்பேட்டை நூர்ஜஹான் , இன்றும்

" தியேட்டர் ராஜ் "

என்கிற பெயரில் இயங்கிவருகிறது !
2. இந்த மனிதன் ?


நம்ம ரஜினி நடித்த " மனிதன் " ஐய்யா !

செட்டியார் என்ன , யாரும் இந்த " மனிதன் "

ஐ குறை சொல்ல முடியாது !

இது பாடல் "


" காசிருந்தால் கை மேலே "
http://picosong.com/VqAA/எம்கே ஆர் சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by மாணிக்கம் நடேசன் on Mon Mar 23, 2015 6:50 pm

டாக்டர் ஐயா மிக்க நன்றி. படத்திற்கும் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல் தெரிகிறது, தவறு செய்த மனைவியை ஏற்றுக்கொள்ளும் தன்மையை அந்த கணவனுக்கு கொடுத்த கதாசிரியர் அந்த இணையை சேர்த்து வைத்திருக்கலாம். பாவம் கதாநாயகியை கொன்று விட்டார்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4230
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: பாடிய முதல் பாட்டு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum