ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 sugumaran

காஞ்சி மகான்
 T.N.Balasubramanian

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
 ayyasamy ram

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
 ayyasamy ram

ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
 ayyasamy ram

விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
 ayyasamy ram

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
 ayyasamy ram

தீபாவ‌ளி நகை‌ச்சுவை வெடி‌க‌ள் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
 ayyasamy ram

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
 ayyasamy ram

உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ? (பாரசீகப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
 Dr.S.Soundarapandian

மனதில் உறுதி வேண்டும்
 Dr.S.Soundarapandian

ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மொழிபெயர்ப்பு கவிதைகள்
 Dr.S.Soundarapandian

ஊதுவோம் சங்கு
 M.Jagadeesan

ஒரே ஒரு பஸ் ஜோக்...
 T.N.Balasubramanian

சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
 Dr.S.Soundarapandian

திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
 Dr.S.Soundarapandian

நீயே என் முதற் காதலி! (ஹீப்ரு மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இன்றைய செய்தித்தாள்(15.10.2017)
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே?

View previous topic View next topic Go down

விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே?

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Mon Nov 09, 2009 3:57 pm

'அம்மா என்பது தமிழ் வார்த்தை அது தான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும் ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை'

[You must be registered and logged in to see this image.]

எந்த மொழியில் குழந்தை பிறப்பினும் முதல் வார்த்தை அம்மா என்றுதான் அழைப்பதாக சொல்கிறார்கள்!
இது எப்படி சாத்தியமானது?

விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே?

....கா ந கல்யாணசுந்தரம்.
avatar
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3794
மதிப்பீடுகள் : 578

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

Re: விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே?

Post by Tamilzhan on Mon Nov 09, 2009 4:55 pm

தாங்களின் கேள்விக்கு விளக்கம் தேடி அலைந்த போது கிடைத்தது இங்கு அப்படியே தருகிறேன்..!


அன்பிற்குரிய இணையத்தாருக்கு,

அய்யா, ஆத்தா பற்றித் திருவாட்டி கமலாதேவிக் கேட்கப் பலரும் தங்கள் கருத்தைக் கூறிவந்தார்கள். இங்கே
நாட் கழித்து, என் கருத்தைக் கூறுகிறேன்.

"பெற்றோரைப் பற்றி" என்ற ஒரு அருமையான நூலை தஞ்சைப் பல்கலைக் கழக மொழியறிஞர் ப.அருளி
வெளியிட்டிருக்கிறார். கட்டாயமாகப் படிக்க வேண்டிய ஒரு நூல். அதில் விளக்கமாக இது போன்ற
சொற்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அவருடைய பொத்தகத்தில் உள்ள பல அருமையான கருத்துக்களில் நான்
ஒன்று பட்டாலும், சிலவற்றில் வேறுபடுகிறேன்.

இங்கே என்வழியில் இச்சொற்களையும் அவற்றை ஒட்டியவையும் பற்ற எனக்கே உரிய முறையில் நோக்குகிறேன்.
அதே பொழுது எனக்குமுன் இவை பற்றி ஆய்வு செய்த பாவாணர், அருளி, இளங்குமரன் ஆகியோரின் கருத்துக்கள்
இங்கே இடையூடுவதை நினைவு படுத்தவேண்டும்.

அம்மா என்ற சொல் தான் முதலில் பார்க்க வேண்டிய சொல். இது விலங்குகள், குறிப்பாக ஆ வினம், எழுப்பும்
ஒலியை ஒட்டி எழுந்த ஒப்பொலிச் சொல். ஒப்பொலி என்பது ஒன்றைப் போல் இன்னொன்று அப்படியே ஒலிக்கும்
வகை. இந்த "மா" என்னும் விளி ஒலியே ஆவினத்தைக் குறிப்பதற்கு விதப்பாகி (specific)ப் பின்
விலங்கினத்தையே குறிப்பதற்குப் பொது(generic)வானது. மாந்த வாழ்வில், ஆவின் பங்கு மிகப்
பெரியது. அதைப் பற்றியே நீண்ட மடல் எழுதலாம். (இன்றைக்குக் கொள்கையின் காரணமாய்ப் பழசை மறந்து,
அல்லது மறைத்து 4000, 5000 ஆண்டுகளுக்கு முன்னே ஆவின் ஊனே இந்திய மாந்தன் சாப்பிடாதது போலப்
பம்மாத்துப் பண்ணி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, வரலாற்றுப் பொத்தகங்களை மாற்றி எழுத சட்டம்
பிறப்பித்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. பேராயக் கட்சியும் அதற்கு ஆமாம் போட்டுக் கொண்டிருக்கிறது)

மா வென்னும் ஒலியே, ஆவினத்தையும், விலங்குகளையும் குறித்தது போக, நம்மைப் பெற்றவளுக்கும் அமைந்தது.
மாட்டின் கன்று தாயை விளிப்பது இந்த ஒலியால் தானே! உலகத்தின் பல மொழிகளில் இந்த அறதப் பழஞ்
சொல்/ஒலி புழங்குகிறது.

'மா'வைப் பலுக்க வாயை மூடித் திறக்கிறபோது, பலருக்கும் அ என்ற உயிர் முதலில் சேர்ந்தார்ப்போல்
எழுவது இயற்கையே. இப்படி எழுந்த சொல் தான் "அம்மா".

மாந்தன் நாகரிகம் அடைவதற்கு முன்னால், விலங்காண்டி நிலையில், தாயே குடும்பத் தலைவி. அந்தக்
குமுகாயத்தில் யார் தந்தை என்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால், தாய் என்ற தலைவி தெரிந்தாள்.
இந்தக் காலத்தில் குடும்ப உறவுகள் ஒழுங்கு ஆகி, இந்த உறவு ஏற்றுக் கொள்ளக் கூடியது, இது தகாதது, என்று
கட்டுப் படுத்தப் பட்ட காரணத்தால், இப்படித் தாயை மட்டுமே அடையாளம் காட்டித் தந்தை யாரென்று தெரியாத
தாய் வழிக் குமுகாயம் என்பது நமக்கு வியப்பாகவும், ஒருவகையில் பொருந்தாததுபோலவும்
காட்சியளிக்கும். ஆனால் மாந்தவியலார் தங்கள் ஆய்வின் மூலம் இதை உறுதி செய்திருக்கிறார்கள். இந்த
வழக்கத்தின் மிச்ச சொச்சங்கள், மாற்றங்கள் தான் கேரளத்திலும், குமரி மாவட்டத்திலும் உள்ள மருமக்கள்
வழித் தாயம். (தாய் தான் அந்தக் கூட்டுக் குடும்பத்தை நிருவகிக்கிறவள்.) தமிழ் நாட்டில் பல
இடங்களிலும், சில சடங்குகளில் தந்தைக்கு முதலிடம் கொடுக்காது, தாயின் வழியான மாமனுக்கு முதலிடம்
கொடுக்கும் வழக்கம் கூட இந்தப் பழைய தாய்வழிக் குமுகாயத்தின் எச்சம் தான். இராகுல சங்கிருத்தியாயனின்
"வால்கா முதல் கங்கை வரை" படித்தவர்களுக்கு நான் தாய் வழிக் குமுகாயம் பற்றிச் சொல்ல வருவது புரியும்.
(இது போல "பஃறுளி முதல் கங்கை வரை" என்று எழுதத்தான் ஆய்வும் இல்லை; ஆளும் இல்லை. என்ன செய்வது?
நம் நிலை அப்படி :-))

மாந்தனுக்கு முதலில் புரிந்த முதல் உறவு தாயே! பிறகுதான் மற்றவை எல்லாம். அன்றாடம் வேட்டைக்கு அலைந்து
தன் கணத்தை ஒட்டியவர்களுக்காக உணவைத்தேடும் போது, தாயே தலைவி. ஆனால் நாளாவட்டத்தில், அன்றாடம்
அலைவதற்குப் பதிலாக தாங்கள் உண்ணக் கூடிய விலங்குகளை தங்களுக்கு அருகிலேயே வைத்து வளர்த்துப் பின்
வேண்டும் போது அவற்றைக் கொன்று பசி போக்கிக் கொள்ளும் நிலை வந்தபிறகுஆட்டு மந்தைகளும், மாட்டுத்
தொழுக்களும் பெருகின. கணத்தில் உறுப்பினர் தொகை பெருக, மந்தைகளுள் விலங்குகளின் எண்ணிக்கை பெருக,
வேலை பகிர்வு என்பதும் பெருகியது. "இதுஎன்னுடையது" என்ற எண்ணம் தனிச் சொத்தை
உருவாக்கிற்று. இந்தக் காலத்தில் தான்,தாய்வழிக் குமுகாயம் போய், தந்தைவழிக் குமுகாயம் வந்தது.
"என் சொத்து என் மக்களுக்குப் போகவேண்டும்" என்ற விழைவில், "கற்பு" என்பது முன்னிடம் பெறுகிறது. பெண்
மனையாள், இல்லாள் என்று ஆகிறாள். குடும்பம் என்ற கட்டுப்பாடு வருகிறது. இது உலகம் எங்கணும் எதோ ஒரு
காலகட்டத்தில் நடந்திருக்கிறது. இந்தமாற்றத்தில் அப்பா என்பவர் முதலிடம் பெறுகிறார். அப்பாவைக்
குறிக்கும் சொல்லும் அம்மாவில் இருந்தேதிரிவு முறையில் பெறப் படுகிறது.

நம் மக்களில் ஒரு சாரார் மெல்லின இரட்டையை அப்படியே ஒலிப்பதும், இன்னொரு சாரார் அதற்கு ஈடாக,
மெல்லொலியோடு அதன் இணை வல்லொலியைச் சேர்த்துப் பலுக்குவதும் நம் தமிழ் இயல்புதான். கேரளத்தார்
மெல்லின இரட்டையாகப் பல சொற்களைப் பலுக்க (காட்டு: 'வ்ந்நு'), கீழைப்பக்கத்தில் உள்ள நாம் மெல்வல்
இணையாக(காட்டு: 'வந்து')ப் பலுக்குகிறோம். ஒருசாரார் கும்மல் என்றால் இன்னொரு சாரார் கும்பல்
என்கிறோம். அதுபோல அம்மா என்பது அம்பா என்றும் ஒலிக்கப்படுவது உண்டு. அந்த அம்பா தான் அம்பாள் என்று
இந்தக் காலத்தில் இறைவியை அழைக்கும்சொல்லுக்கு முதலாக இருக்கிறது. இந்த அம்பா என்ற பலுக்கல்
முதலில் அம்மாவைக் குறித்து பின் அப்பாவையும் குறித்திருக்க வேண்டும். சிறு குழந்தை அம்மாவையும்
அப்பாவையும் வேறுபடுத்திக் கூப்பிடும் முன் அம்பா என்று குழறிக் கூப்பிடுவதை உன்னித்துப் பார்த்து அறிய முடியும்.

இந்த 'அம்பா' என்ற சொல்லுக்கு 'அப்பா' என்று திரிய வாய்ப்புண்டு. தமிழில் "சொந்தம்" "சொத்து"
ஆவது போல், மெல்லும் வல்லும் சேர்ந்த இணையொலி, வல்லின இரட்டையாக மாறுவதற்கு ஏகப்பட்ட எடுத்துக்
காட்டுகளை நீங்களே காண முடியும். நாளடைவில் அம்பா என்ற சொல் அருகி இலக்கியத்தில் மட்டுமே
பயன்படுகிறது. அம்மா என்ற சொல்லின் வல்லினத் திரிபான அப்பா குடும்பத் தலைவனைக் குறிக்கிறது.
இந்தச் சொல் வாயிதழை மூடித் திறந்தாலே வருவதால் ஒலிக்கவும் எளிதாக இருக்கிறது.

மொத்தத்தில் அம்மா,அம்பா,அப்பா எல்லாமே ஒப்பொலியின் தொடர்பால் ஏற்பட்டவை.


அன்புடன்,
இராம.கி.
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே?

Post by ராஜா on Mon Nov 09, 2009 5:34 pm

[You must be registered and logged in to see this image.] அருமை அருமை தல
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே?

Post by nandhtiha on Mon Nov 09, 2009 7:20 pm

வணக்கம்
திரு தமிழன் அவர்களுக்குச் சிறப்பான மீண்டும் ஒரு முறை வணக்கம். நல்லதகவல், இதுவரை நான் அறிந்திராத ஒன்று. நன்றி
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே?

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Mon Nov 09, 2009 10:04 pm

இந்த 'அம்பா' என்ற சொல்லுக்கு 'அப்பா' என்று திரிய வாய்ப்புண்டு. தமிழில் "சொந்தம்" "சொத்து"
ஆவது போல், மெல்லும் வல்லும் சேர்ந்த இணையொலி, வல்லின இரட்டையாக மாறுவதற்கு ஏகப்பட்ட எடுத்துக்
காட்டுகளை நீங்களே காண முடியும். நாளடைவில் அம்பா என்ற சொல் அருகி இலக்கியத்தில் மட்டுமே
பயன்படுகிறது. அம்மா என்ற சொல்லின் வல்லினத் திரிபான அப்பா குடும்பத் தலைவனைக் குறிக்கிறது.
இந்தச் சொல் வாயிதழை மூடித் திறந்தாலே வருவதால் ஒலிக்கவும் எளிதாக இருக்கிறது.

மொத்தத்தில் அம்மா,அம்பா,அப்பா எல்லாமே ஒப்பொலியின் தொடர்பால் ஏற்பட்டவை.[You must be registered and logged in to see this image.]


ஈகரைக்கு இன்னொரு ஆராய்ச்சியாளராக திகழ்கிறார் நம் தமிழன்!
நல்லதொரு விளக்கத்தினை எடுத்து சொன்னீர்கள். வாழ்த்துக்கள் தமிழன் அவர்களே!


.......கா.ந.கல்யாணசுந்தரம்.
avatar
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3794
மதிப்பீடுகள் : 578

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

Re: விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே?

Post by Tamilzhan on Mon Nov 09, 2009 10:37 pm

நன்றிகள்..! நன்றி

திரு.கா.ந.கல்யாணசுந்தரம் & நந்திதா அக்கா தாங்களிடம் வாழ்த்து பெற்ற எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி அன்பு மலர்
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum