ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 ayyasamy ram

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 ayyasamy ram

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 ayyasamy ram

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

வெறுப்பா இருக்கு!
 ayyasamy ram

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Sun Jan 18, 2015 1:59 am

First topic message reminder :


சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.


பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.


லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.

வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.

முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.

காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Sat Mar 07, 2015 4:43 am


காலிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா பாக்?

ஆக்லாந்து: உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில், பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் பாகிஸ்தான் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, காலிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில், 11வது ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் நடக்கிறது. நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இன்று நடக்கும் 'பி' பிரிவு லீக் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது. உலக கோப்பை வரலாற்றில், இவ்விரு அணிகள் மோதிய மூன்று போட்டியிலும், தென் ஆப்ரிக்கா வென்றது.

காலிறுதி வாய்ப்பு:

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் துவக்கிய தென் ஆப்ரிக்கா, இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. பின், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளை வீழ்த்தி எழுச்சி கண்டது. இன்றைய போட்டியில் மீண்டும் அசத்தும் பட்சத்தில், 'ஹாட்ரிக்' வெற்றியுடன் காலிறுதிக்கான இடத்தை உறுதி செய்யும்.

இதுவரை சோபிக்காத துவக்க வீரர் குயின்டன் டி காக் (7, 7, 12, 1) எழுச்சி கண்டால் நல்லது. அயர்லாந்துக்கு எதிராக சதமடித்த ஹசிம் ஆம்லா, டுபிளசி மீண்டும் சாதிக்கலாம். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய கேப்டன் டிவிலியர்ஸ், இன்றும் ரன் மழை பொழியலாம். காயத்தில் இருந்து டுமினி மீண்டது பலம். இவர், 'மிடில்-ஆர்டரில்' டேவிட் மில்லருடன் இணைந்து அதிரடி காட்டும் பட்சத்தில், சுலபமாக 400 ரன்கள் எடுக்கலாம்.

வேகப்பந்துவீச்சில் ஸ்டைன் (5 விக்.,), மார்னே மார்கல் (9 விக்.,) கூட்டணி அசத்துகிறது. கைல் அபாட் (6 விக்.,) நல்ல 'பார்மில்' இருப்பதால், பிலாண்டருக்கு இடம் கிடைப்பது சந்தேகம். 'சுழலில்' இம்ராத் தாகிர் (9 விக்.,) அசத்துகிறார்.

கட்டாய வெற்றி:

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம் வீழ்ந்த பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகளை வீழ்த்தி எழுச்சி கண்டது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.

பேட்டிங்கில் கேப்டன் மிஸ்பா (221 ரன்) மட்டும் ஆறுதல் தருகிறார். இதுவரை மூன்று அரைசதம் கடந்த இவர், மீண்டும் கைகொடுக்கலாம். 'பார்மின்றி' தவிக்கும் துவக்க வீரர் நசிர் ஜாம்ஷெத் நீக்கப்பட்டு சர்பிராஸ் அகமது வாய்ப்பு பெறலாம். குதிங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹாரிஸ் சோகைல் விளையாடுவது சந்தேகம். ஒருவேளை இவர் விளையாடாவிட்டால், அனுபவ வீரர் யூனிஸ் கான் வாய்ப்பு பெறலாம்.

வேகப்பந்துவீச்சில் முகமது இர்பான் (5 விக்.,), வாகாப் ரியாஸ் (8 விக்.,), சோகைல் கான் (8 விக்.,) நம்பிக்கை அளிக்கின்றனர். ரஹாத் அலி எழுச்சி காண வேண்டும். 'சுழலில்' அப்ரிதி, ஹாரிஸ் சோகைல் கைகொடுத்தால் நல்லது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Sat Mar 07, 2015 4:46 am


உலக கோப்பை காலிறுதியில் இந்தியா: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ”பி” பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி இன்று தனது 4 வது லீக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி 8 புள்ளிகளுடன் காலிறுதிக்கு முன்னேறியது. லீக் போட்டியில் இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையிலேயே இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா விளையாடிய 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, தனது டிவிட்டரில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் “வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றமைக்கு இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். எதிர்வரும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,” வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றமைக்கு இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்திய அணிக்கு மிகப்பெரிய தொடராக இது உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Sat Mar 07, 2015 10:10 pm

தென் ஆப்பிரிக்காவை அசத்தலாக வீழ்த்தியது பாகிஸ்தான்

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், தனது அபாரப் பந்துவீச்சின் காரணமாக, தென் ஆப்பிரிக்க அணியை டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 29 ரன்களில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

இதன் மூலம், உலகக் கோப்பை காலிறுதிக்கான வாய்ப்பை பாகிஸ்தான் அணி தக்கவைத்தது.

இப்போட்டியில், 47 ஓவர்களில் 232 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 33.3 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களில் சுருண்டு தோல்வியுற்றது.

அந்த அணியின் வெற்றிக்காக போராடிய டிவில்லியர்ஸ் 77 ரன்கள் சேர்த்தார். ஆம்லா 38 ரன்களையும், டூபிளெஸ்ஸி 27 ரன்களையும் சேர்த்தனர். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய முகமது இர்ஃபான், ராஹத் அலி மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சோஹாலி கான் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

பாகிஸ்தான் இன்னிங்ஸ்:

இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறையில் 47 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 47 ஓவர்களில் 232 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது.

டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே பாகிஸ்தான் அணிக்கு நெருக்குதல் தர ஆரம்பித்தது. 9-வது ஓவரில் துவக்க வீரர் ஷெசாத் ஆட்டமிழந்தார். தொடர்ந்த சர்ஃபராஸ், யூனிஸ் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்த பாடுபட்டது.

சிறப்பாக ஆடிவந்த சர்ஃபராஸ், டுமினி வீசிய 16-வது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அடுத்த ஓவரிலேயே 49 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். இதற்குப் பின் மீண்டும் பாகிஸ்தான் ஆட்டம் நிதானமானது. அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மிஸ்பா உல் ஹக் பொறுமையாக விளையாட யூனிஸ் கான் 37 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

தொடர்ந்து ஷோயப் மக்ஸூட் 8 ரன்களுக்கும், உமர் அக்மல் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 37-வது ஓவர் முடிவில் 175 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது.

அரை மணி நேரம் கழித்து தொடர்ந்த ஆட்டதில், அடுத்து களமிறங்கிய அஃப்ரிதி ஒரு சிக்ஸ் அடித்து தனது அதிரடியைத் துவங்க, மறுமுனையில் மிஸ்பா தனது அரை சதத்தை எட்டினார். மீண்டும் மழையால் ஆட்டம் தடைபட்டது. ஒரு மணி நேரம் வரை நீடித்த இந்த மழையால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

மீதம் 7 ஓவர்களே இருக்க, முடிந்த வரை அதிரடியாக ரன் சேர்க்க பாக். முயன்றது. ஆனால் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் திறம்பட வீசியதால் நினைத்த வேகத்தில் ரன் சேர்க்க இயலாமல் போனது.

அஃப்ரிதி 22 ரன்களுடனும், வஹாப் ரியாஸ் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர். மிஸ்பாவும் அடுத்த ஓவரில் 56 ரன்களுக்கு விழ, தொடர்ந்து ஆட வந்த ரஹத் அலி, சோஹைல் கான் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முடிவில் 47 ஓவர்கள் கூட முழுமையாக ஆடாத பாக். 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டக்வொர்த் லீவிஸ் முறையில் திருத்தியமைக்கப்பட்ட இலக்காக 232 ரன்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Sat Mar 07, 2015 10:11 pm

நல்ல பந்துவீச்சுக்கு எதிராக மீண்டும் மூச்சுத்திணறி வீழ்ந்த தென்னாப்பிரிக்கா

ஆக்லாந்தில் நடைபெற்ற மிக முக்கியமான பிரிவு-பி உலகக்கோப்பை லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மீண்டும் ஒரு நல்ல பந்துவீச்சுக்கு எதிராக பாகிஸ்தானிடம் தோல்வி தழுவியது.

உலகக்கோப்பையை வெல்லும் அணி என்று கூறப்படும் ஒரு பலமான தென்னாப்பிரிக்க அணி, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளிடம் குறிப்பாக நல்ல பந்துவீச்சுக்கு தோல்வி தழுவியுள்ளது.

தோல்விக்குப் பிறகு டிவில்லியர்ஸ் கூறும் போது, “நாங்கள் இன்னமும் இந்தப் பிரிவில் நல்ல நிலையில்தான் இருக்கிறோம். ஆனால் எனக்கு தோற்பது பிடிக்காது. பேட்டிங்கில் நாங்கள் அதிர்ச்சிகரமாக ஆடுகிறோம் என்பதில் ஐயமில்லை. கடந்த சில ஆண்டுகளில் நெருக்கடியிலிருந்து மீண்டு மேல் நிலைக்கு வந்துள்ளோம். இன்னமும் நாங்கள் நல்ல அணிச்சேர்க்கையுடன் உலகக்கோப்பையை நிச்சயம் வெல்வோம் என்றே பலமாக நம்புகிறோம். விளக்கு வெளிச்சத்தில் பேட்டிங் எளிதானதல்ல. இலக்கைத் துரத்துவதற்கு ஏதுவான பிட்ச்தான் இது. வெற்றிபெறாததற்கு எந்த ஒரு காரணத்தையும் கூற முடியாது.” என்றார்.

கேப்டன்சியில் சொதப்பிய டிவில்லியர்ஸ்

“தோற்பது எனக்கு பிடிக்காது” இது டிவில்லியர்ஸ் கூறும் வார்த்தை. ஆனால் அவர் அணிச்சேர்க்கையில் மீண்டும் தவறு செய்தார். பந்துவீச்சு மாற்றங்களிலும் சொதப்பினார். வெர்னன் பிலாண்டரை அணியில் சேர்த்திருந்தால் நிச்சயம் பிட்சில் கொஞ்சம் ஸ்விங் இருந்ததற்கு பாக். பேட்டிங்கை இன்னமும் விரைவிலேயே வீழ்த்தியிருக்க முடியும், ஆனால் அவர் இம்ரான் தாஹிரை அதிகம் நம்பினார். பகுதி நேர பவுலர்களான டுமினியை விரைவில் கொண்டு வந்து தவறு செய்தார். மேலும் தானே பந்து வீச முடிவெடுத்து சொதப்பினார். இம்ரான் தாஹிர் சோபிக்கவில்லை.

முதல் 10 ஓவர்களில் 35 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று பாகிஸ்தானைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த அவர் கேப்டன்சி முடிவுகளில் செய்த தவறினால் பாகிஸ்தான் ரன் விகிதம் சரமாரியாக அதிகரித்தது. தொடக்கதில் ஷெசாத்துக்கு டேல் ஸ்டெய்ன் பிடித்த கேட்ச் அபாரமானது. ஓடிச் சென்று வலது புறம் பறந்து தாவிப்பிடித்தார்.

யூனிஸ் கான் வேகப்பந்து வீச்சுக்கு குதித்து குதித்து ஆடுபவர். இந்தியாவுக்கு எதிராக குதித்து குதித்தேதான் அவுட் ஆனார். ஆனால் இன்று அவர் இறங்கியவுடன் ஸ்பின்னர்களை கொண்டு வந்து அவரை ரன்கள் எடுக்க அனுமதித்தார். இம்ரான் தாஹிர் வந்தவுடனேயே யூனிஸ் கான் 2 பவுண்டரிகளை விளாசினார். டிவில்லியர்ஸ் ஓவரில் 2 பவுண்டரிகள்.

சர்பராஸ் அகமட் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக ஒரு அருமையான பேட்ஸ்மென், இது தெரியாமல் டுமினியை அவர் தொடர்ந்து கொடுக்க 16-வது ஓவரில் சர்பராஸ் அகமட் மேலேறி வந்து ஆன் திசையில் 2 அருமையான சிக்சர்களை விளாசினார். சரி அவ்வள்வுதான் என்று பார்த்தால் சர்பராஸ் மேலும் தைரியமாக டுமினியை இலக்காக்கி இன்னொரு சிக்சரையும் விளாசினார். 10-வது ஓவர் முடிவில் 24 பந்துகளில் 10 ரன்கள் என்று இருந்த சர்பராஸ் அகமட், டிவில்லியர்ஸின் தவறான கேப்டன்சியை நன்றாகப் பயன்படுத்தி 16-வது ஓவர் முடிவில் 46 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் என்று விறுவிறுப்பு காட்டினார்.

10 ஓவர்களில் 35 என்று இருந்த பாகிஸ்தான் 16-வது ஓவர் முடிவில் 90/1 என்று ஆனது. இங்குதான் தென்னாப்பிரிக்கா தனக்கே சூனியம் வைத்துக் கொண்டது தொடங்கியது. சர்பராஸ் அகமட் 49 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஸ்கொயர் லெக் திசையில் மிக குறுகிய பவுண்டரி அங்கு அடித்துவிட்டு 2வது ரன் எடுக்க முயன்று அவர் மில்லரின் அபாரமான த்ரோவுக்கு இரையானார். இவரைத்தான் உட்கார வைத்து வேடிக்கைப் பார்த்தார் மிஸ்பா.

மீண்டும் ஸ்டெய்ன் கொண்டு வரப்பட்டார். மிஸ்பா உல் ஹக் 7-வது ரன்னை எடுக்கும் போது ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்களை எடுத்தார்.

ஆனால், மீண்டும் டிவில்லியர்ஸுக்கு பந்துவீச்சு ஆசைப் பீடிக்க, வந்தார், மிஸ்பா 2 பவுண்டரிகளை விளாசினார். ஆனால், யூனிஸ் கான் 37 ரன்களில் டிவில்லியர்ஸிடம் விக்கெட்டைக் கொடுத்தது அபத்தம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்சூத் 8 ரன்களில் கைல் அபாட் பந்தை நேராக பாயிண்டில் கேட்ச்கொடுத்தார். மிஸ்பா 37 ரன்களை 60 பந்துகளில் எடுக்க உமர் அக்மல் 8 ரன்களில் இருக்க பாகிஸ்தான் 35 ஓவர்களில் 167/4. அதாவது 10 ஓவர்களில் 35/1 பிறகு அடுத்த 25 ஓவர்களில் 132 ரன்கள் மேலும் 3 விக்கெட்டுகள், 10-வது ஓவரிலிருந்து 16-வது ஓவர் வரை நடத்திய சாத்துமுறையின் விளைவு அப்படியே தக்கவைக்கப்பட்டது. உமர் அக்மல் 13 ரன்களில் வெளியேறினார். அப்ரீடி 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மிஸ்பா மீண்டும் ஒரு அரைசதம் எடுத்து 56 ரன்கள் சேர்த்தார்.

மழை குறுக்கிட்டதால் ஓவர்கள் 47-ஆகக் குறைக்கப்பட விக்கெட்டுகள் விழத் தொடங்கின. பாகிஸ்தான் 167/4 என்ற நிலையிலிருந்து 222 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்டெய்ன் 10 ஓவர்களில் 30 ரன்கள்தான் 3 விக்கெட்டுகள். அபாட், மொர்கெல் தலா 2 விக்கெட்டுகள். இம்ரான் தாஹிர், டிவில்லியர்ஸ், டுமினி ஆகியோர் வீசிய 18 ஓவர்களில் 115 ரன்கள். ஸ்டெய்ன், மோர்கெல், அபாட் வீசிய 28.4 ஓவர்களில் வெறும் 100 ரன்கள். இதனால்தான் பிலாண்டர் இருந்திருந்தால் பாகிஸ்தான் இன்னமும் மோசமான ரன்களையே எடுத்திருக்க வாய்ப்பிருந்தது. பாகிஸ்தான் 222 ரன்களுக்குச் சுருண்டது.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Sat Mar 07, 2015 10:11 pm

திருத்தப்பட்ட இலக்கும் பாகிஸ்தானின் அபார பந்துவீச்சும்:

மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டதால் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 47 ஓவர்களில் 232 ரன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது.

குவிண்டன் டி காக் என்பவரின் மோசமான ஃபார்ம் தொடர்கிறது. அவர் ரன் எடுக்காமல் 7 அடி உயர மொகமது இர்பானின் அபாரமான பந்துக்கு விக்கெட் கீப்பர் சர்பாரிசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன் பிறகு பாகிஸ்தான் பந்துவீச்சு கொஞ்சம் திசையை இழக்க டுபிளெஸ்ஸி மற்றும் ஆம்லா அணியை மீட்டனர். 6-வது ஓவரில் சொஹைல் கான் வீசும் போது ஆம்லா மிக அருமையாக 3 பவுண்டரிகளை அடித்தார். 7-வது ஓவரை மொகமது இர்பான் வீச லெக் திசை பந்தை டுபிளெஸ்ஸி பவுண்டரி அடித்தார். பிறகு அதே ஓவரில் ஆம்லாவுக்கு இரண்டு தவறுகளைச் இர்பான் செய்ய இரண்டும் பவுண்டரிக்குப் பறந்தது. ஒன்று லெக் திசை பந்து, மற்றொன்று ஷாட் பிட்ச்.

முதல் விக்கெட் 0-வில் விழுந்த சுவடு தெரியாமல் 7 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 51 ரன்கள். அடுத்த ஓவரை இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரஹத் அலி வீச ஒரு பந்து லெக் திசையில் பவுன்சர் மிக எளிதாக புல் ஆடி சிக்சருக்கு விரட்டினார் டுபிளெஸ்ஸி, மீண்டும் ஒரு ஷாட் பிட்ச் பந்து லெக் திசையில் ஒரு பவுண்டரி. பாகிஸ்தான் பந்து வீச்சு மிகவும் கட்டுக்கோப்பை இழந்து வந்த தருணம் இது. இந்த நிலையில்தான் ரஹத் அலி, ஒரு அருமையான பந்தை வீசி டுபிளெஸ்ஸியின் எட்ஜைப் பிடித்தார். 27 ரன்களில் அவர் அவுட் ஆனது திருப்பு முனை ஏற்படுத்தியது.

11-வது ஓவரில் அருமையான இடது கை வீச்சாளர் வஹாப் ரியாஸ் அழைக்கப்பட, 27 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடி வந்த ஆம்லா. கவனம் சிதறிய ஒரு தருணத்தில் ரியாஸ் பந்தை அவர் ஆட பந்து தாழ்வாக விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. 67/3 என்ற நிலையில் பாகிஸ்தான் பந்துவீச்சு உத்வேகம் பெற்றது.

ரைலி ரூசோவ் இறங்கி ஒரு பவுண்டரி அடித்தார். பிறகு வஹாப் ரியாஸின் அருமையான, துல்லிய ஷாட் பிட்ச் பந்தை சரியாக அடிக்காமல் நேராக டீப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரூசோவ்.

மில்லர் களமிறங்கியவுடன் பாகிஸ்தான் பந்துவீச்சில் நெருப்புப் பொறி பறந்தது. மில்லருக்கு பந்துகளை நேராக ஆடிப் பழக்கமில்லை என்று தெரிந்தது. மட்டை எப்போதும் ஃபைன்லெக் திசையிலிருந்து இறங்கியது. இதனால் அவர் தட்டுத் தடுமாறினார். நிறைய ஷாட் பிட்ச் பந்துகளை அவருக்குப் போட்ட ரஹத் அலி திடீரென ஒரு அருமையான பாதம் பெயர்க்கும் யார்க்கரை வீச, அது பின்னங்காலைத் தாக்க எல்.பி.ஆனார். தேவையில்லாமல் ரிவியூ செய்து ஒரு ரிவியூவையும் காலி செய்தார்.

டுமினி களமிறங்கி 2 பவுண்டரிகள் அடித்து 12 ரன்களில் இருந்த போது மொகமது இர்பான் மீண்டும் பந்து வீச வர, பவுன்சர் வீசினார், ஹூக் ஷாட் ஆடினார், தேவையான உயரம் கிடைக்கவில்லை பந்து நேராக வஹாபிடம் கேட்ச் ஆனது. தெ.ஆ. 103/6. ஓவர்கள் 20 முடிந்திருந்தது.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Sat Mar 07, 2015 10:12 pm

டிவில்லியர்ஸ் தனிநபர் போராட்டம்: (58 பந்துகளில் 7 பவுண்டரிகள் 5 சிக்சர்களூடன் 77 ரன்கள்)

டேல் ஸ்டெய்ன் களமிறங்க டிவில்லியர்ஸ் ரிஸ்க் எடுக்க ஆரம்பித்தார். இதில் வஹா ரியாஸ் சிக்கினார். முதலில் மிட்விக்கெட்டில் ஒரு அருமையான பவுண்டரி. பிறகு அவர் பாணியில் நகர்ந்து நகர்ந்து ரியாஸின் லைன், லெந்தைக் காலி செய்து இரண்டு லெக் திசை மிகப்பெரிய சிக்சர்கள். 34-வது ரன்னை டிவில்லியர்ஸ் எடுக்கும் போது உலகக்கோப்பை போட்டிகளில் 1000 ரன்கள் இலக்கை எட்டினார்.

அதன் பிறகு டேல் ஸ்டெய்ன் புகுந்தார். மொகமது இர்பான் பந்தை 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால் அதே ஓவரில் மிட்விக்கெட்டில் ஆட நினைத்து எட்ஜ் செய்ய கீப்பரிடம் கேட்ச் ஆனது.

ஷாகித் அப்ரீடியை, பிறகு டிவில்லியர்ஸ் மேலேறி வந்து இரண்டு அற்புதமான சிக்சர்களை விளாச ஒரு முனை ஆட்டமாக மாறியது. பாகிஸ்தானுக்கும் வெற்றிக்கும் இடையில் டிவில்லியர்ஸ் சுவராக நின்று கொண்டிருந்தார். 47 பந்துகளில் 56 ரன்கள்.

கைல் அபாட் 12 ரன்கள் எடுத்து ரஹத் அலியின் பந்தில் யூனிஸ் கானின் அற்புதமான கேட்சிற்கு அவுட் ஆனார். 177/8.

டிவில்லியர்ஸ் தொடர்ந்தார். வஹாப் ரியாஸ் வீசிய தாழ்ந்த புல்டாஸை சிக்சர் விளாசி பிறகு எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி.

33-வது ஓவரில் சொஹைல் கானை மீண்டும் ஒரு பவுண்டரி. ஆனால் அதே ஓவரில் தேவையில்லாமல் மேலேறி வந்து மிட் ஆனின் மேல் தூக்கி அடிக்க நினைத்தார், பந்து ஷாட் பிட்ச், எட்ஜ் ஆனது, சர்பராசுக்கு மீண்டும் ஒரு கேட்ச். 201/9 பிறகு 202 ஆல் அவுட்.

ஆட்ட நாயகனாக சர்பராஸ் அகமட் தேர்வு செய்யப்பட்டார். 49 ரன்களுடன் 6 கேட்ச். பாக். தரப்பில், மொகமது இர்பான், வஹாப் ரியாஸ், ரஹத் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

சுருக்கமாகக் கூற வேண்டுமெனில் பிலாண்டரைத் தேர்வு செய்யாமல் இம்ரான் தாஹீரைத் தேர்வு செய்தது, 10-வது ஓவர் முடிந்த பிறகு செய்த கேப்டன்சி தவறுகள் பிறகு பேட்டிங்கில் 7 ஓவர்களில் 51/1 என்ற நிலையிலிருந்து சரிவு கண்டது. இதுதான் தென்னாப்பிரிக்கா மீண்டும் வீழ்ந்த கதை.

தென்னாப்பிரிக்கா பிரிவு -பி-யில் இன்னமும் 2வது இடத்தில் உள்ளது. பாக், தெ.ஆ இரு அணிகளும் 6 புள்ளிகள் என்றாலும் நிகர ரன் விகிதம் தென்னாப்பிரிக்காவுக்கு +ல் உள்ளது. பாக்.கிற்கு மைனஸில் உள்ளது. இந்தப் பிரிவில் 4வது அணியாக அயர்லாந்தா, மே.இ.தீவுகளா என்பதைப் பார்க்க வேண்டும், ஜிம்பாப்வேயையும் ஒதுக்கி விட முடியாது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Sat Mar 07, 2015 10:13 pm

ஜிம்பாப்வே மகா விரட்டல்: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்து வெற்றி

ஹோபார்ட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை பிரிவு-பி ஆட்டத்தில் அயர்லாந்தின் 331 ரன்கள் இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே 326 ரன்கள் எடுக்க, அயர்லாந்து கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி எட் ஜாய்ஸ் (112), பால்பர்னி (97) ஆகியோரது அவசர அதிரடி ஆட்டத்தின் மூலம் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவிக்க தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே பிரெண்டன் டெய்லர் (121 ரன்கள், 91 பந்து, 11 பவுண்டரி 4 சிக்சர்கள்), சான் வில்லியம்ஸ் (96 ரன்கள் 83 பந்து 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோரது 21 ஓவர் 149 ரன்கள் அதிரடிக் கூட்டணியில் 326 ரன்கள் வரை போராடி வந்து கடைசி ஓவரில் 3 பந்துகள் மீதமுள்ள நிலையில் தோல்வி கண்டது.

அயர்லாந்து அணியில் பொதுவாகவே அபாரமாக வீசிய கியூசக் கடைசி ஓவரையும் அற்புதமாக வீச கடைசி ஓவரில் தேவைப்படும் 7 வெற்றி ரன்களை ஜிம்பாப்வே எடுக்க விடாமல் செய்து 2 விக்கெட்டுகளை கடைசி ஓவரில் கைப்பற்றி மொத்தம் 4 விக்கெட்டுகளுடன் 9.3 ஓவர்களில் 32 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.

கெவினோ பிரையன் 10 ஓவர்களில் 90 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இவர் வீசிய 49-வது ஓவரில்தான் ஜிம்பாப்வே வீரர் முபரிவா 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடித்து இலக்குக்கு அருகில் கொண்டு வந்தார். மூனி 58 ரன்களுக்கு 2 விக்கெட். டாக்ரெல், மெக்ப்ரைன் தலா 1 விக்கெட்.

ஜிம்பாப்வே தரப்பில் சதரா, ஷான் வில்லியம்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக சதம் எடுத்த அயரலாந்து வீரர் எட் ஜாய்ஸ் தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெறும் நிலையிலிருந்து ஜிம்பாப்வே மீண்டும் ஒரு தோல்வியைத் தழுவியுள்ளது. அந்த அணி இந்தத் தொடரில் சிறப்பாகவே விளையாடி வருகிறது, அன்று கெயில், சாமுயெல்ஸிடம் சிக்கியது. மற்றபடி பாகிஸ்தானுக்கு எதிராகக் கூட வெற்றி பெற்று விடுவோம் என்ற அச்சுறுத்தலை நிகழ்த்தியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 270 ரன்களுக்கும் மேல் குவித்து லேசாக மிரட்டியது.

இந்த வெற்றி மூலம் அயர்லாந்து 4 போட்டிகளில் 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று 4-ஆம் இடம் பிடித்துள்ளது. தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் 5-இல் 3 வென்று 6 புள்ளிகளுடன் 2 மற்றும் 3ஆம் இடங்களில் இருக்க, அயர்லாந்து 4 போட்டிகளில் 3-ஐ வென்று தற்போது -0.820 நிகர ரன்விகிதத்துடன் 4ஆம் இடத்தில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே வென்றிருந்தால் பி-பிரிவில் நிச்சயமின்மை ஏற்பட்டிருக்கும், ஆனால் தற்போது மே.இ.தீவுகள் நல்ல ரன் விகிதத்துடன் தனது கடைசி லீக் போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் அயர்லாந்தை பேட் செய்ய அழைத்தது. ஜிம்பாப்வே அணியில் கேப்டன் சிகும்பரா காயத்தினால் பிரெண்டன் டெய்லர் கேப்டனாக செயல்பட்டார். அயர்லாந்து அணியின் எட் ஜாய்ஸ் அடித்த 112 ரன்களும், பால்பர்னி எடுத்த 97 ரன்களும் அயர்லாந்து 331 ரன்கள் குவிக்க மையமாக அமைந்தது.

ஜிம்பாப்வே பீல்டர் செய்த தவறினால், தொடக்கத்திலேயே எட் ஜாய்ஸ் பிழைத்தார். 34 ரன்கள் எடுத்திருந்த ஜாய்ஸ், ஜிம்பாப்வே பவுலர் முபரிவா பந்தை அடிக்க முயல பந்து உயரே எழும்பியது முபரிவா அந்த கேட்சைக் கோட்டை விட்டார்.

முன்னதாக பால் ஸ்ட்ர்லிங் (10), பன்யங்கரா பந்தை நேராக பாயிண்டில் வில்லியம்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 34 ரன்களில் கேட்ச் விடப்பட்ட எட் ஜாய்ஸ் அதன் பிறகு அதிரடியைத் தொடங்கி 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 96 பந்துகளில் சதமடித்தார். 105 ரன்களில் கிரெய்க் எர்வின் கேட்ச் விட்டார். பிறகு அவரே எளிதான கேட்ச் ஒன்றைப் பிடித்து எட் ஜாய்சை வெளியேற்றினார்.

பால்பர்னிக்கும் ஒரு கடினமான வாய்ப்பை வில்லியம்ஸ் நழுவவிட்டார். ஆனால் பால்பர்னி இம்முறை அபாரமாக ஆடினார். 79 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 97 ரன்களில் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார். பால்பர்னி, எட் ஜாய்ஸ் கூட்டணி 3-வது விக்கெட்டுக்காக 138 ரன்களைச் சேர்க்க கெவின் ஓ பிரையன் 24 ரன்களையும், வி.கீ. வில்சன் 25 ரன்களையும் எடுக்க அயர்லாந்து 331 ரன்களை விளாசியது.

டெய்லர்-வில்லியம்ஸ் அசாத்திய அதிரடி:

332 ரன்கள் இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் விரைவில் வீழ்ந்து விட அந்த அணி 74/4 என்று சரிவு முகம் காட்டியது.

ஆனால், அதன் பிறகுதான் அசாத்தியமான அதிரடிக் கூட்டணி அமைந்தது. 5-வது விக்கெட்டுக்காக டெய்லர், வில்லியம்ஸ் ஜோடி 149 ரன்களை சுமார் 23 ஓவர்களில் அடித்து நொறுக்கியது.

பிரெண்டன் டெய்லர் 38 பந்துகளில் அரைசதம் கண்டவர் 79 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்சர்களுடன் சதம் கண்டார். சான் வில்லியம்ஸ் 56 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். ஆனால் அதன் பிறகு 27 பந்துகளில் 46 ரன்களை விளாசினார்.

டெய்லர் 121 ரன்கள் எடுத்து ஸ்கோர் 223 ரன்களாக இருந்த போது கியூசக் பந்தில் அவுட் ஆனார். முக்கிய வீரர் கிரெய்க் எர்வின் 11 ரன்களில் மெக்பிரைனிடம் வீழ்ந்தார். 259/6 என்ற நிலையில் வில்லியம்ஸ், சகாப்வா சுமார் 4 ஓவர்களில் 43 ரன்களுக்கான கூட்டணி அமைத்தனர். 46.5 ஓவர்களில் 300 ரன்கள் இருந்த போதுதான் சான் வில்லியம்ஸ் 96 ரன்களில் சர்ச்சைக்குரிய கேட்சில் அவுட் ஆனார். பவுண்டரி அருகே மூனி பிடித்த கேட்ச், கேட்ச் அல்ல சிக்ஸ் போலவே தெரிந்தது. ஆனால் வில்லியம்ஸ் காத்திருக்காமல் பெவிலியன் சென்றதால் 8 ரீப்ளேக்கள் முடிவில் அவுட் என்று முடிவானது.

300/7 என்ற நிலையில் முபரிவா இறங்கி 7 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 18 ரன்கள் எடுக்க கடைசி ஓவரில் இலக்கு 7 ரன்களானது.

ஆனால் கியுசக் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் சகப்வா 17 ரன்களில் இருந்த போது மட்டையின் உள் விளிம்பில் பட்டு ஸ்லோ பந்தில் பவுல்டு ஆனார். சதரா இறங்கி ஒரு ரன் எடுத்து முபரிவாவிடம் ஸ்ட்ரைகைக் கொடுத்தார். மீண்டும் ஒரு ஸ்லோ பந்து தூக்கி அடித்தார். லாங் ஆனில் போர்ட்டர்பீல்ட் கேட்ச் பிடித்தார். ஜிம்பாப்வே 49.3 ஓவர்களில் 326 ரன்களில் ஆட்டமிழந்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Sat Mar 07, 2015 10:14 pm

ரெய்னாவின் ஷார்ட் பிட்ச் பந்து பிரச்சினையை ஊதிப்பெருக்க வேண்டாம்: தோனி

சுரேஷ் ரெய்னா ஷார்ட் பிட்ச் பந்துகளில் திணறுகிறார் என்ற விஷயம் ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் தோனி.

மே.இ.தீவுகளுக்கு எதிராக 22 ரன்களில் டிவைன் ஸ்மித் வீசிய சாதாரண ஷார்ட் பிட்ச் பந்தில் ரெய்னா கேட்ச் கொடுத்து வெளியேறிய விவகாரத்தை செய்தியாளர்கள் கேப்டன் தோனியிடம் எழுப்ப, அவர் கூறும்போது:

“ஊடகங்கள்தான் இதனை ஒரு பெரிய விஷயமாக ஊதிப் பெருக்குகின்றனர். மற்ற நாட்டு வீரர்கள் சிலரும் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு ஆட்டமிழக்கின்றனர். ஆனால் திரும்பத் திரும்ப இது எங்கள் தலையில் வந்து விடிகிறது- அதாவது ரெய்னாவுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகள் பலவீனம் அவருக்கு ஷார்ட் பிட்ச் வீசுங்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. நான் நினைக்கிறேன் ரெய்னா நன்றாகவே பேட்டிங் செய்து வருகிறார் என்று...

இந்திய கிரிக்கெட் வரலாற்றை எடுத்துப் பாருங்கள் 5ஆம் நிலை வீரர்கள் எவ்வளவு பேர் சிறப்பாக ஆடியுள்ளார்கள் என்பதை சரிபாருங்கள். யுவராஜ் சிங் மட்டும்தான் சீராக நமக்கு அந்த நிலையில் ஆடிக் கொடுத்துள்ளார், பிறகு அவர் 4ஆம் நிலையில் களமிறக்கப்பட்டார். இல்லையெனில் அந்த நிலையில் மாற்றி மாற்றி வீரர்களைக் களமிறக்கிக் கொண்டிருந்தோம். அந்த நிலையில் விளையாடிய வீரர்களிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள், விராட் ஆடியுள்ளார், ரோஹித் ஆடியுள்ளார், ஆனால் ஒருவரும் அந்த நிலையில் திருப்திகரமாக ஆடவில்லை.

ஆகவே, ரெய்னாதான் அந்த நிலையில் களமிறங்க சரியான தேர்வு, நாம் அவரை ஆதரிக்க வேண்டும். நாம் ரெய்னாவை ஆதரிக்கவில்லையெனில் அவருக்குப் பதிலாக புதிய வீரர் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம், அவர் தனக்காக ஆடத் தொடங்க முடிவெடுத்தால், வளர்த்தெடுக்க அது நல்ல பழக்கம் கிடையாது. இது நம் அணியில் நடக்கக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.

உதாரணமாக ஒருவர் 40-வது ஓவரில் பேட் செய்கிறார் என்றால், எவ்வளவு ரன்கள் அவர் எடுக்க முடியும்? 20 அல்லது 25 ரன்களில் அவுட் ஆக முடியும். உடனே 3-வது போட்டியின் முடிவில் நாம் என்ன கூறுவோம், ‘அவர் ரன்கள் எடுப்பதில்லை, அவர் ஃபார்மில் இல்லை, 20 ரன்களையே எடுக்கிறார்.’ என்று கூறுவோம்.

இங்குதான் எத்தனை பந்துகளில் ஒருவர் இந்த ரன்களை எடுக்கிறார் என்ற விஷயம் வருகிறது. நீங்கள் கூறும் விவகாரத்தை வலியுறுத்தினால், பேட்ஸ்மென் தன்னலத்துக்காக ஆடத் தொடங்குவார். நாம் எவ்வளவு ரன்கள் எடுக்க முடியுமோ அவ்வளவு ரன்களை குவிக்க வேண்டும், ஏனெனில் நவீன கிரிக்கெட் ஆட்டத்தில் எந்த ஒரு ஸ்கோரும் பாதுகாப்பான ஸ்கோர் கிடையாது.

எனவே 300 வரும் என்றால் அதை 305-ஆக உயர்த்தப் பாடுபடவேண்டும். இப்படியாக விஷயங்கள் உள்ளன...” என்றார் தோனி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by அசுரன் on Sat Mar 07, 2015 10:33 pm

டோனி ஒரு கிரிக்கெட் டாக்டர் தான். மிகவும் ஆழ அகலமாக அலசியிருக்கிறார். அவரின் ரைனா பற்றின கணிப்பு மிகச்சரியே
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Tue Mar 10, 2015 9:35 pm

”உலகக்கோப்பையை நாம் வெல்லப் போகிறோம்” அணியின் இயகுனர் ரவி சாஸ்திரி நம்பிக்கை

உலக கோப்பை போட்டியில் முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.இது வீரர்களை உற்சாகம் அடைய வைத்து உள்ளது. அவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

தொடர்ச்சியாக 5 வெற்றிகளை நடப்பு உலகக்கோப்பையில் பெற்றுள்ள இந்திய அணி கோப்பையை வெல்லும் தருணம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

"இப்போதுள்ள இந்திய அணியின் ஆட்டத்திறன் படி நாம் நல்ல நிலையில் உள்ளோம். ஒவ்வொரு போட்டியையும் நாக்-அவுட் போட்டியாகவே அணுகினோம். வெற்றிபெறத் தொடங்கிவிட்டால், மகிழ்ச்சி வர வர களைப்பு நீங்கி விடும். தோற்கும்போது தான் ஓய்வறையில் அடைபட்டுக் கிடப்போம். இப்போதைக்கு இந்திய அணியினர் ஒரு மகிழ்ச்சிகரமான குழுவாக இருந்து வருகின்றனர். கால்பந்து விளையாடுகின்றனர், உற்சாகமாகத் இருக்கின்றனர்.

எண்ணிக்கைகளை பூர்த்தி செய்ய நாம் இங்கு வரவில்லை. எந்த ஒரு எதிரணியினருக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் அளிக்கப்போவதில்லை. உலகக்கோப்பையை வெல்லப் போகிறோம்.”

சுனில் கவாஸ்கர் கூறுகையில்

“பந்துவீச்சாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்துப் பாராட்டுகளுக்கும் அவர்கள் உரித்தானவர்களே. இது சிறந்த சாதனையாகும். நிறைய தருணங்களில் பந்து வீச்சாளர்கள் திறமை மீது பேட்ஸ்மென்களின் திறமை என்ற நிழல் படிந்து விடுகிறது. இப்போது பேட்ஸ்மென்களுக்கு புகழ் சென்றடையாது.

பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டு குவிந்து வருவது மகிழ்ச்சியான விஷயம்.” இவ்வாறு அவர் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Tue Mar 10, 2015 9:36 pm

பெரிய அணிகளை அச்சுறுத்திய அயர்லாந்தை இந்தியா அடக்கியது, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி

உலக கோப்பை லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை அதட்டிய இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டோனி தலைமையில் உலக

கோப்பையில் தொடர்ந்து அதிக வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தின் ஹாமில்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் (பி பிரிவு) மோதின. போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் செய்து விளையாடியது. ஸ்டிர்லிங் 42 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனார். தொடர்ந்து ஜாய்ஸ் ரெய்னா பந்துவீச்சில் 2 ரன்களில் அவுட் ஆனார். பொறுப்பாகஆடி ரன்சேர்த்த வில்லியம் போர்ட்டர்பீல்டு 67 ரன்களில் மோகித் சர்மா பந்துவீச்சில் அவுட் ஆனார்.

பால்பிர்னியும், ஒபிரையனும் நின்று விளையாடி அயர்லாந்து அணிக்கு ரன்கள் சேர்த்தனர். ஒபிரையன் 75 ரன்களில் முகமது சமி பந்துவீச்சில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கி வீரர்கள் யாரும் சொல்லும்படியாக ரன்எதுவும் அடிக்கவில்லை. 49 ஓவர்கள் வரையில் நின்று விளையாடிய அயர்லாந்து அனைத்து விக்கெட்களையும் இழந்து, 259 ரன்கள் அடித்து இந்தியாவிற்கு 260 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. ஒருநாள் போட்டியில் இந்தியா-அயர்லாந்து அணிகள் இதுவரை(இன்றுடன்) மூன்று முறை நேருக்கு நேர் சந்தித்து உள்ளது. இன்று அயர்லாந்து அடித்துள்ள 259 ரன்களே இந்தியாவிற்கு எதிராக அயர்லாந்து அடித்த அதிகரன் ஆகும். அயர்லாந்து உலக கோப்பை போட்டில் முதலில் பேட்டிங் செய்து அடித்த இரண்டாவது அதிகப்பட்ச ரன்னும் இதுவாகும்.

இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து விளையாடியது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டம் மூலம் ரன்சேர்த்தனர். ஷிகர் தவான், ரோகித் சர்மா இருவரும் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடினர். இந்தியா 22-வது ஓவரின்போது விக்கெட் இழப்பின்றி 162 ரன்கள் எடுத்து இருந்தது. ஷிகர் தவான் 77 ரன்னுடனும்(9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்), ரோகித் சர்மா 59 ரன்னுடனும் (3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) களத்தில் நின்றனர். இருவரும் இணைந்து ஆடி இந்தியாவிற்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். ஆனால் நீடிக்கவில்லை.

ரோகித் சர்மா 64 ரன்களில் அவுட் ஆகி நடையை கட்டினார். இதனையடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் கோலி தவானுடன் கைகோர்த்து விளையாடினார். தவான் அருமையான சதம் அடித்தார். இந்தியா வலிமையான நிலையை அடைந்தது. சதம் அடித்த வேகத்தில் தவான் அவுட் ஆகி வெளியேறினார். 100 ரன்கள் (85b 11x4 5x6)அடித்திருந்த வேளையில் தோம்சான் பந்துவீச்சில், தவான் அவுட் ஆனார். இதனையடுத்து ரெகானே விராட் கோலியுடன் கைகோர்த்து உள்ளார்.

இருவரும் சிறப்பாக விளையாடினார். இந்தியா 36.5 ஓவர்கள் இரண்டு விக்கெட்கள் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்து, அயர்லாந்து அணியின் இலக்கை தகர்த்தது. வில்லியம் போர்ட்டர்பீல்டு தலையிலான அயர்லாந்து அணி டெஸ்ட் அந்தஸ்து பெறாத குட்டி அணியாக இருந்தாலும், பெரிய அணிகளை அச்சுறுத்தும் திறன் கொண்டதாகவே விளங்கி வந்தது. ஆனால் இந்தியாவிடம் முடியவில்லை. இந்தியாவின் அதட்டலில் பணிந்தது. இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதியில் விராட் கோலி 44 ரன்களுடனும், ரெகானா 33 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

அயர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் ஷிகர் தவான் - ரோகித் சர்மா இணை புதிய சாதனையை படைத்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்த இந்திய இணை என்ற பெருமையை தவான் - ரோகித் சர்மா இணை தட்டி சென்றது. தொடர்ந்து 5-வது வெற்றியை இந்திய அணி சுவைத்து உள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, டோனி தலைமையில் உலக கோப்பையில் தொடர்ந்து அதிக வெற்றி பெற்ற இந்திய அணி என்ற பெருமையை பெற்றது. 2011-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, அது முதல் இதுவரை (வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டம்) உலக கோப்பை போட்டியில் 8 ஆட்டங்களில் வெற்றி கண்டது. இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று பெருமையை அடைந்துள்ளது. 2003-ம் ஆண்டு உலக கோப்பையில் கங்குலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 8 வெற்றிகள் பெற்றிருந்தது. தற்போது டோனி தலைமையிலான அணி மொத்தம் 9 வெற்றிகளை பெற்றுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ayyasamy ram on Tue Mar 10, 2015 9:45 pm


-
இந்திய அணி உலகக்கோப்பையைத் தக்க வைக்கும் - சவுரவ் கங்குலி
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35953
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Thu Mar 12, 2015 2:14 am

சங்ககரா சரித்திர சாதனை! *இலங்கை அசத்தல் வெற்றி

ஹோபர்ட்: உலக கோப்பை தொடரில் சங்ககரா சதங்களாக விளாசுகிறார். நேற்று 124 ரன்கள் எடுத்த இவர், ஒருநாள் அரங்கில் தொடர்ந்து நான்கு சதமடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இவரது அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, இலங்கை அணி, அயர்லாந்தை 148 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நேற்று நடந்த உலக கோப்பை ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், இலங்கை, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் மாத்யூஸ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

தில்ஷன் சதம்:

இலங்கை அணிக்கு திரிமான்னே (4) ஏமாற்றினார். பின் இணைந்த தில்ஷன், சங்ககரா ஜோடி, துவக்கத்தில் நிதானமாக விளையாடியது. பின் எழுச்சி கண்ட இவர்கள், ஸ்காட்லாந்து பந்துவீச்சை பதம்பார்த்தனர். ஜோஸ் டேவி வீசிய 25வது ஓவரில் அதிரடி காட்டிய தில்ஷன், 2 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 16 ரன்கள் எடுத்தார். இவர், 22வது சதத்தை பதிவு செய்தார்.

சங்ககரா 4வது சதம்:

மறுமுனையில் அசத்திய சங்ககரா, தொடர்ச்சியாக 4வது சதமடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்த போது தில்ஷன் (104) அவுட்டானார். அபார ஆட்டத்தை தொடர்ந்த சங்ககரா, ஈவன்ஸ் வீசிய 36வது ஓவரில், 4 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 24 ரன்கள் எடுத்தார். இவர், 95 பந்தில் 124 ரன்கள் (4 சிக்சர், 13 பவுண்டரி) எடுத்து வெளியேறினார்.

மாத்யூஸ் அதிரடி:

அடுத்து வந்த மகிளா ஜெயவர்தனா (2), குசால் பெரேரா (24) சோபிக்கவில்லை. கேப்டன் மாத்யூஸ், மாட் மக்கானின் ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்கர் அடித்து, 20 பந்தில் அதிவேக அரைசதமடித்தார். இவர், 21 பந்தில் 51 ரன்கள் எடுத்து ‘பெவிலியன்’ திரும்பினார்.

திசாரா பெரேரா (7), பிரசன்னா (3), மலிங்கா (1) சொற்ப ரன்னில் அவுட்டானார்கள். இலங்கை அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 363 ரன்கள் குவித்தது. நுவன் குலசேகரா (18), சமீரா (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

மம்சன் ஆறுதல்:

கடின இலக்கை விரட்டிய ‘கத்துக்குட்டி’ ஸ்காட்லாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மலிங்கா ‘வேகத்தில்’ கோட்ஜெர் (0) அவுட்டானார். மெக்லியாடு (11), மாட் மக்கான் (19) ஏமாற்றினர். நான்காவது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்த போது மம்சன் (60) வெளியேறினார்.

விக்கெட் மடமட:

குலசேகரா பந்தில் கொலேமென் (70) அவுட்டானார். பெர்ரிங்டன் (29) நிலைக்கவில்லை. ஸ்காட்லாந்து அணி 43.1 ஓவரில் 215 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகன் விருதை சங்ககரா வென்றார்.

3

பொறுப்பாக ஆடிய இலங்கையில் தில்ஷன், உலக கோப்பை அரங்கில் 4வது முறையாக சதமடித்தார். இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில், அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தை தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (4 சதம்), இந்தியாவின் கங்குலி (4), ஆஸ்திரேலியாவின் மார்க் வாக் (4), இலங்கையின் மகிளா ஜெயவர்தனா (4) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

20

அபாரமாக ஆடிய இலங்கை கேப்டன் மாத்யூஸ், 20 பந்தில் அரைசதத்தை எட்டினார். இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், குறைந்த பந்தில் அரைசதமடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலத்துடன் (20 பந்து, எதிர்–கனடா, 2007) பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (18 பந்து, எதிர்–இங்கிலாந்து, 2015) உள்ளார். தவிர, இம்முறை அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார் மாத்யூஸ்.

* உலக கோப்பையில் அதிவேக அரைசதமடித்த இலங்கை வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் மாத்யூஸ். இதற்கு முன், இத்தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சண்டிமால் 22 பந்தில் அரைசதம் கடந்தார்.

14

வேகப்பந்துவீச்சில் அசத்தி வரும் ஸ்காட்லாந்தின் ஜோஷ் டேவி, இதுவரை விளையாடிய 5 போட்டியில் 14 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் இம்முறை அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இரண்டு இடங்களில், தலா 13 விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்தின் டிரண்ட் பவுல்ட், டிம் சவுத்தி உள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Thu Mar 12, 2015 2:23 am

ட்விட்டரில் இந்தியாவின் பிரபல வீரரான ஷிகர் தவான்: அயர்லாந்து சதம் கொடுத்த எக்ஸ்ட்ரா போனஸ்

உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தவானின் அதிரடி ஆட்டத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. உலகக் கோப்பையில் தனது இரண்டாவது சதத்தை அந்தப் போட்டியில் பதிவு செய்த தவானுக்கு அந்தப் போட்டியின் மூலமாக இன்னொரு சிறப்பு பரிசு கிடைத்துள்ளது. சமூக வலைதளமான ட்விட்டர் இந்திய கிரிக்கெட் வீரர்களில் மிகவும் பிரபலாமான வீரராக ஷிகர் தவானை நேற்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று ட்விட்டர் வலைதளம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தியா- அயர்லாந்து போட்டியின் போது 25.1 மில்லியன் பேர் ட்வீட்டியதாகவும் அதில் பெரும்பாலான ட்வீட்டுகள் ஷிகர் தவானைப் பாராட்டி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவானுக்கு அடுத்த இடத்தில் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் அடுத்து ரோகித் ஷர்மாவும் இடம்பெற்றுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ayyasamy ram on Thu Mar 12, 2015 11:00 am


சாதனை புரியும் வீரர்களுக்கு இணையாக பாராட்டைப்
பெறுபவர்கள்:
-
ஷிக்கார் தவானின் மனைவி பெயர் ஆயிஷா முகர்ஜி.
இவர் ஒரு கிக் பாக்ஸர். தவானைவிட 12 வயது
மூத்தவர்.

ஃபேஸ்புக் தோழியாக அறிமுகமானவருக்கு ஆயிஷாவைப்
பற்றி தெரியத் தெரிய அன்பும் அக்கறையும் அதிகரித்திருக்கிறது.
ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான ஆயிஷா
கணவனைப் பிரிந்து வாழ்வதைப் பற்றியெல்லாம் எந்தத்
தயக்கமுமின்றி தன் காதலைச் சொல்லியுள்ளார் தவான்.

பெற்றோரின் எதிர்ப்பை சமாளித்து 2009லேயே மோதிரம்
மாற்றிக் கொண்டாலும், "நீ கிரிக்கெட்டில் செட்டில் ஆன
பிறகுதான் கல்யாணம்' என்று
ஒரு பாஸிடிவ் டார்கெட்டை தவான் முன் வைத்துள்ளார்
ஆயிஷா.

வெற்றி இலக்கை நோக்கி தவானை வேகமாகச் செலுத்தியது
அந்தக் காதல்தான்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35953
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ayyasamy ram on Thu Mar 12, 2015 11:03 am


தன் காதல் மனைவி சாக் ஷி ராவத்துக்கு நீளமாக
முடி வளர்த்தால் பிடிக்காது என்ற காரணத்தினால்,
தனக்கு ரொம்பவும் பிடித்த ஹேர் ஸ்டைலை ஷார்ட்
ஆக்கியவர் தோனி.

சாக் ஷி எது கேட்டாலும் "நோ' சொல்லி பழக்கமில்லை.
அவ்வளவு காதல். கிட்டத்தட்ட ஒரு தமிழ் சினிமாவுக்கான
ட்விஸ்ட்கள் நிறைந்தது தோனி - சாக் ஷி காதல் கதை.

"சாக் ஷி எனக்கு செம லக்கி. அவர் வந்து கேலரியில்
அமர்ந்து மேட்ச் பார்த்தால், அன்று இந்தியா நிச்சயம்
வெற்றி பெறும்.

சாக் ஷி வந்தபிறகு தானே உலக கோப்பையை தட்டினோம்'
என்பது தோனியின் அசைக்க முடியாத சென்டிமென்ட்.

ஆஸ்திரேலியா டெஸ்ட் சீரிஸ், உலகக் கோப்பை என தோனி
தன் வீட்டை விட்டுக் கிளம்பி மூன்று மாதங்களுக்கு மேலாகிறது.
பிப்ரவரி 06ம் தேதி அவருக்கு குட்டி தேவதை பிறந்திருக்கிறார்.
இன்னும் தன் மகளின் முகத்தை பார்க்க முடியவில்லை
தோனியால்.

"உங்கள் செல்ல மகளை முதன் முதலில் வந்து பார்க்கும்போது
உலகக் கோப்பையுடன் வாங்க' என்று சொல்லியிருக்கிறாராம்
மனைவி சாக் ஷி.

கூடுதல் உத்வேகத்துடன் உழைத்துக் கொண்டிருக்கிறார்
மிஸ்டர் கூல் கேப்டன்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35953
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Fri Mar 13, 2015 10:28 pm

காலிறுதியில் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டித்தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. இப்போட்டித்தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து அணி 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. அத்துடன் காலிறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. மேலும், இலங்கை, ஆஸ்திரேலியா வங்காளதேசம் ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

அதேபோல், பி பிரிவில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன . இந்த பிரிவில் இடம் பெற்றுள்ள பிற அணிகள் எந்த இடத்தை பிடிக்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஒரு பிரிவில் முதலிடம் வகிக்கும் அணி மற்றொரு பிரிவில் கடைசி இடம் வகிக்கும் அணியோடு மோத வேண்டும். இந்த அடிப்படையில் தற்போது ஏ பிரிவில் வங்காளதேசம் அணி கடைசி இடம் பிடித்துள்ளது. இதனால் பி பிரிவில் முதலிடம் வகிக்கும் இந்திய அணி தனது காலிறுதி போட்டியில் வங்காளதேச அணியை எதிர்கொள்வது உறுதியாகியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Fri Mar 13, 2015 10:40 pm

ஆப்கானிஸ்தானை எளிதில் வென்றது இங்கிலாந்து

உலகக் கோப்பையின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் திணறியது. இதற்கிடையே அடிக்கடி மழை பெய்தால் ஆட்டத்திற்கு இடையூறு ஏற்பட்டது. 25 ஓவர் முடிந்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் 45 ஓவராக குறைக்கப்பட்டது.

பின்னர் 36.2 ஓவரில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆப்கானிஸ்தான் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது. அப்போது ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணியின் ஷபிகுல்லா அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் ஜோர்டான், போபரா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் மீண்டும் மழை பெய்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 25 ஓவர்களில் 101 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி, 41 பந்துகள் மீதமிருந்த நிலையில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. துவக்க வீரர் ஹேல்ஸ் 37 ரன்களும், இயன் பெல் 52 (நாட் அவுட்) ரன்களும் எடுத்தனர்.

9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஜோர்டானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Fri Mar 13, 2015 11:34 pm

40 ஆண்டில் கண்டிராத சோகத்துடன் விடைபெற்ற இங்கிலாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 40 ஆண்டு கால வரலாற்றில், இதுவரை கண்டிராத சோகத்துடன் இலங்கிலாந்து அணி விடைபெற்றது.

எனினும், 38-வது லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த இங்கிலாந்து ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றிருக்கிறது.

காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட இங்கிலாந்து, தனது கடைசி லீக் ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

இந்த உலகக் கோப்பையின் லீக் சுற்றில் 6 ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்து அணி, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளை மட்டுமே வீழ்த்தியது. எஞ்சிய 4 ஆட்டங்களிலும் தோல்வி கண்டது.

40 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணி, டெஸ்ட் விளையாடும் அணிகளுக்கு எதிராக ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாததோடு, அடுத்த சுற்றுக்கும் முன்னேறாமல் வெளியேறியிருப்பது இதுவே முதல்முறை என்பது அந்த அணிக்கும், அந்த அணியின் ரசிகர்களுக்கு மிகுந்த சோகம் அளிக்கும் அம்சம்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது. அந்த அணி 36.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருந்தபோது 3 முறையாக மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அணியின் இன்னிங்ஸ் முடிக்கப்பட்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷபியுல்லா 30 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் ஜோர்டான், போபாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 25 ஓவர்களில் 101 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி, 18.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இயான் பெல் 52, ஜேம்ஸ் டெய்லர் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக அலெக்ஸ் ஹேல்ஸ் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா on Sat Mar 14, 2015 10:37 am

டெய்லர் சதத்தால் இந்தியாவிற்கு எதிராக ஜிம்பாப்வே 287 ரன்கள் குவித்தது

உலகக்கோப்பை போட்டியின் 39-வது லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா- ஜிம்பாப்வே ஆக்லாந்தில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி ஜிம்பாப்வே வீரர்கள் சிபாபா மற்றும் மசகட்சா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சிபாபா 7 ரன் எடுத்த நிலையில் முகமது சமி பந்திலும், மசகட்சா 2 ரன் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்திலும் அவுட் ஆனார்கள். அடுத்து வந்த மயர் 9 ரன் எடுத்த நிலையில் மோகிச் சர்மா பந்தில் அவுட் ஆனார். தொடக்கத்தில் இந்தியாவின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. இதனால் ஜிம்பாப்வே வீரர்கள் ரன் அடிக்க திணறினார்கள்.

4-வது விக்கெட்டுக்கு டெய்லருடன் வில்லியம்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையாக இன்று இந்தியா பந்து வீச்சை எதிர்கொண்டது. வில்லியம்ஸ் இரண்டு ரன் எடுத்திருக்கும்போது மோகித் சர்மா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்தார். அதை தோனி பிடிக்க தவறினார். இதன் விளைவாக வில்லியம்ஸ் 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இதனைத்தொடர்ந்து டெய்லரும் அரை சதம் அடித்தார். அவருடன் எர்வின் ஜோடி சேர்ந்தார். அரை சதம் அடித்த டெய்லரின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் பந்தை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் விரட்டினார். இதனால் ஜிம்பாப்வே ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. டெய்லர் 99 பந்தில் 11 பவுண்டரி, இரண்டு சிக்சருடன் சதம் அடித்தார். அதன்பின் 10 பந்தில் 38 ரன்கள் எடுத்து 138 ரன்னில் அவுட் ஆனார். அவர் மோகித் சர்மா பந்தில் தவானிடம் கேட்ச் கொடுத்தார்.

டெய்லர் அவுட் ஆகும்போது ஜிம்பாப்வே 41.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த ரசா 15 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 15 பந்தில் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால் ஜிம்பாப்வே 48.5 ஓவரில் 287 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி சார்பில் சமி 9 ஓவர்கள் வீசி 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 9.5 ஓவர்கள் வீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by T.N.Balasubramanian on Sat Mar 14, 2015 3:19 pm

ஒரு விறுவிறுப்பான போட்டியை சுரேஷ் ரைனாவும் தோனியும் கொடுத்தனர் .
நம்முடைய தொடக்க ஆட்டக்காரர்கள் தொடக்கத்திலேயே டாட்டா காண்பித்து விட்டனர் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21749
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ayyasamy ram on Sat Mar 14, 2015 6:44 pm

இந்திய அணி 48.4 ஓவர்களில் 4 விக்கெட்
இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி
பெற்றுள்ளது.

இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே
அணியை இந்திய அணி வீழ்த்தி, உலகக்கோப்பை
போட்டியில் தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி
பெற்று சாதனை படைத்துள்ளது இந்தியா.

இந்திய தரப்பில் தோனி அரைசதமும், ரெய்னா சதமும்
அடித்துள்ளனர். 104 பந்துகளில் 110 ரன்கள் எடுத்த
சுரேஷ் ரெய்னா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35953
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ayyasamy ram on Sun Mar 15, 2015 9:17 am

நேப்பியர்:
உலககோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தில் நடக்கும்
பி, பிரிவு போட்டியில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியும்
ஐக்கிய அரபு எமிரேட் அணியும் மோதுகிறது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி,
பீல்டிங் தேர்வு செய்துள்ளது.இந்நிலையில் முதலில் களமிறங்கிய
ஐக்கிய அரபு எமிரேட் அணி, 47.4 ஓவரில் அனைத்து
விக்கெட்டுகளையும் இழந்து 175 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியின் அம்ஜத் ஜாவித் 56 ரன்னும் நசிர் அஜிஸ் 60 ரன்னும்
சேர்த்தனர்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 176 ரன் இலக்கு
நிர்ணயித்தது ஐக்கிய அரபு எமிரேட்.
-
---------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35953
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ராஜா on Sun Mar 15, 2015 10:56 am

தற்போதைய நிலவரப்படி westindies மூன்றாம் இடத்தில் உள்ளது.

அடுத்து வரும் pakistan vs ireland போட்டியின் முடிவு படி ஜெயிக்கும் அணி மூன்றாம் இடத்திற்கும் west indies நான்காம் இடத்திற்கும் போகும்.

ஒருவேளை pakistan vs ireland Tie ஆகினாலோ அல்லது மழையால் போட்டி கைவிடபட்டாலோ இரு அணிகளும் கால் இறுதிக்கு முன்னேறும் , west indies வீட்டிற்கு கிளம்ப வேண்டியது தான்.

என்னை பொருத்தவரை பாகிஸ்தானை விட நல்ல அணிகள் west indies & Ireland இருவரும் , இந்த இரு அணிகளில் ஒரு அணி வெளிஎற்றபடுவது என்பது சற்று வருத்தமான விஷயம் தான்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by T.N.Balasubramanian on Sun Mar 15, 2015 11:17 am

@ராஜா wrote:தற்போதைய நிலவரப்படி westindies மூன்றாம் இடத்தில் உள்ளது.

அடுத்து வரும் pakistan vs ireland போட்டியின் முடிவு படி ஜெயிக்கும் அணி மூன்றாம் இடத்திற்கும் west indies நான்காம் இடத்திற்கும் போகும்.

ஒருவேளை  pakistan vs ireland Tie ஆகினாலோ அல்லது மழையால் போட்டி கைவிடபட்டாலோ இரு அணிகளும் கால் இறுதிக்கு முன்னேறும் , west indies வீட்டிற்கு கிளம்ப வேண்டியது தான்.

என்னை பொருத்தவரை பாகிஸ்தானை விட நல்ல அணிகள் west indies & Ireland இருவரும் , இந்த இரு அணிகளில் ஒரு அணி வெளிஎற்றபடுவது என்பது சற்று வருத்தமான விஷயம் தான்
மேற்கோள் செய்த பதிவு: 1125643

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21749
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum