ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 Pranav Jain

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 ராஜா

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 ராஜா

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

அரசியலும் - சினிமாவும்!
 T.N.Balasubramanian

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015)

View previous topic View next topic Go down

தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015)

Post by krishnaamma on Mon Jan 19, 2015 11:44 amமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1பாதம்) பத்திரம் பதியலாம்!
ஜனவரி 13,2015


நல்லதையே நினைக்கும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன் 10ம் இடத்திற்கு வந்தும், ராகு மாதம் முழுமையும் நற்பலனை கொடுப்பர். செவ்வாய் பிப்.10 வரை நன்மை தருவார். சுக்கிரன் ஜன. 23ல் 11-ம் இடத்திற்கு வருவது நல்லதே. இப்போது புதன் 10ம் இடத்தில் இருப்பதால், பெண்களால் பெரிதும் முன்னேற்றம் காண்பீர்கள். அவர்களால் பொருள் சேரும். ஜன. 28ல், 9-ம் இடத்திற்கு செல்வதால் மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். விட்டுக் கொடுத்து போகவும். செவ்வாய் சாதகமாக இருப்பதால் சகல வசதிகளும் கிடைக்கும். சிலர் வசதியான வீட்டுக்கு குடிபுகுவர். ஜன. 31, பிப். 1,2ல் ஆடம்பரபொருள் வாங்கலாம்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு திறமை பளிச்சிடும். மேல் அதிகாரிகளின் ஆதரவும், சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டி வரும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம். எதிரிகளால் தொல்லைகள், போட்டிஅதிகம் இருக்கும். ஜன. 23க்கு பிறகு நல்ல பணவரவு காணலாம்.

மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும்.போட்டிகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகள் சீரான மகசூல் பெறுவர். காய்கறிகள், பழ வகைகள் நல்ல விளைச்சலை கொடுக்கும். சொத்து வாங்க நினைப்பவர்கள் பிப்.10க்குள் பத்திரம் பதியவும்.

பெண்களுக்கு கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். வேலை பார்க்கும் பெண்களுக்கு பிப். 8க்குப் பிறகு பதவி உயர்வு கிடைக்கும்.

நல்ல நாள்: ஜன. 15, 20, 21, 22, 23, 24, 27, 28, 31, பிப். 1, 2, 7, 8, 9, 10, 11.

கவனநாள்: ஜன. 16, 17, பிப். 12 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: வெள்ளை, செந்தூரம்.

வழிபாடு: கிருஷ்ணர் வழிபாடு மனதைரியத்தை வரவழைக்கும். ஜன.23 வரை வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015)

Post by krishnaamma on Mon Jan 19, 2015 11:44 am

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2) வேலைப்பளு குறையும்!
ஜனவரி 13,2015சாமர்த்தியம் மிக்க ரிஷப ராசி அன்பர்களே!

உங்கள் நட்புக்கிரகமான புதன் ஜன. 28ல் வக்கிரம் அடைந்தும், கேது மாதம் முழுவதும், சுக்கிரன் ஜன. 23வரையும், செவ்வாய் பிப். 10 முதலும் நன்மை தருவார்கள். சூரியன் 9ல் இருப்பதால் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். ஜன. 23க்கு பிறகு முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கூடும். ஜன. 29,30 பெண்களால் பணம் கிடைக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நிறுவனத்தை விரிவுப்படுத்தும் நடவடிக்கை சிறப்பாக அமையும். போட்டியாளர் வகையில் தொல்லையும், மாதக்கடைசியில் வீண் செலவும் ஏற்பட வாய்ப்புண்டு. பணியாளர்கள் மாதத் தொடக்கத்திலும், இறுதியிலும் பொல்லாப்பை சந்திக்கலாம். வேலைப்பளு குறைவால்
நிம்மதியாக இருக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் வந்துசேரும். அரசியல்வாதிகள் மாதக்கடைசியில் முன்னேற்றம் காண்பர். மாணவர்கள் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்வர்.

விவசாயிகளுக்கு வளம் கொழிக்கும். மாதக் கடைசியில் புதிய சொத்து வாங்கும் நிலை உருவாகலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள் நிதி நிலைமையில் வளர்ச்சியடைவர். கணவருடன் இணக்கமாக இருப்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஜன. 16,17 மகிழ்ச்சியாக அமையும். குடும்ப சுகம் மேம்படும். விருந்து-விழா என சென்று வரலாம். புத்தாடை, நகை வாங்கலாம். உடல்நலம் சுமாராக இருக்கும். சிறு பிரச்னை என்றாலும் உடனே மருத்துவரைச் சந்தித்து விடுவது நல்லது.

நல்ல நாள்: ஜன. 15, 16, 17, 23, 24, 25, 26, 29, 30, பிப். 3, 4, 10, 11, 12.

கவன நாள்: ஜனவரி 18, 19 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 5, 7 நிறம்: வெள்ளை, சிவப்பு

வழிபாடு: வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்தியையும், செவ்வாய்,வெள்ளியில் சிவ பார்வதியையும் வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015)

Post by krishnaamma on Mon Jan 19, 2015 11:47 am

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சுப நிகழ்ச்சி!
ஜனவரி 13,2015


புத்திசாலித்தனம் மிக்க மிதுன ராசி அன்பர்களே!

மாத தொடக்கத்தில் நற்பலன் உண்டாகும். புதன் ஜன. 28ல் வக்ரம் அடைந்து சாதகமற்ற நிலைக்கு வந்தாலும், பிப். 8ல் வக்ரம் நிவர்த்தி அடைந்து நற்பலன் தருவார். மாத தொடக்கத்தில் முயற்சியில் வெற்றி கிட்டும். ஆடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். எடுத்த செயலில் வெற்றி கிடைக்கும். திட்டமிட்டபடி குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். சுக்கிரன் ஜன. 23ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். பொருளாதார வளம் மேம்படும். பெண்களால் நற்சுகம் ஏற்படும். பிப். 10க்கு பிறகு அண்டை வீட்டாரின் தொல்லை ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி அடையும். செவ்வாயால் பொருள் நஷ்டம் வரலாம். சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது அரிது. பணியாளர்கள் சந்தித்த பிரச்னை அனைத்தும் குருவால் இருந்தஇடம் தெரியாமல் மறையும். அரசாங்க ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும்.

கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு போன்றவை கிடைக்கும்.அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் சிறந்த மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். குரு பக்கபலமாக இருப்பதால் சற்று முயற்சி எடுத்தால் நல்ல வளர்ச்சியைக் காணலாம்.

விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டும். பயறு வகைகள், பழ வகைகள் மூலம் நல்ல வருவாய் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணத்தை தள்ளி வைக்கவும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்களுக்கு குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கும். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

நல்ல நாள்: ஜன.16, 17, 18, 19, 25, 26, 27, 28, 31 பிப். 1, 2, 5, 6, 12

கவன நாள்: ஜன. 20, 21, 22 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 5,6 நிறம்: மஞ்சள், வெள்ளை

வழிபாடு: காலையில் எழுந்து சூரியனை வணங்குங்கள். ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு தைரியத்தை வரவழைக்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015)

Post by krishnaamma on Mon Jan 19, 2015 11:48 am

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) மனதில் உற்சாகம்!
ஜனவரி 13,2015


திட்டமிட்டு பணியாற்றும் கடக ராசி அன்பர்களே!

இந்த மாதம் பிற்பகுதியில் நன்மை மேலோங்கும். அதற்கு காரணம் சுக்கிரன் ஜன. 23ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். மனதில் உற்சாகம் பெருகும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். ராகு மாதம் முழுவதும் சாதகமாக நின்று நன்மை வழங்குவார். புதன் ஜன. 28 முதல் பிப்.8 வரை வக்ரம் அடைவதால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மாதத் தொடக்கத்தில் குழப்பம் நிலவும். கணவன்-மனைவி இடையே உண்டான மனக்கசப்பு ஜன. 28 க்கு பிறகு மறையும். அதன் பிறகு உங்கள் முயற்சியில் வெற்றி கிட்டும். ஆடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பணியாளர்கள் மாதத் தொடக்கத்திலும், மாத இறுதியிலும் அதிகமாக உழைக்க நேரிடும். உழைப்புக்கு மரியாதையும், வருமானமும் கிடைக்கும். ஜன. 28க்கு பிறகு பணியில் சிறப்பான பலனை பெறுவர்.

தொழில், வியாபாரிகளுக்கு இந்த மாதம் சிறப்பாக அமையும். பொருளாதார வளம் கூடும். செவ்வாயால் பிப். 9 க்கு பிறகுஅலைச்சல் அதிகரிக்கும். எதிரியால் இடையூறு வரலாம். பகைவரை வெற்றி கொள்வீர்கள்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற விடா முயற்சிஎடுக்க வேண்டியதிருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் உழைப்புக்கேற்ற பலனை எதிர் பார்க்க முடியாது. பிப். 9க்கு பிறகு முயற்சியில் தடையும் ஏற்படும்.

மாணவர்கள் புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம். பிப். 8க்குப் பிறகு அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகளுக்கு பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. ஆனால் கடின உழைப்பு தேவைப்படும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் இருக்காது. பெண்களுக்கு அண்டை வீட்டார்
அனுகூலமாக இருப்பர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வர்.

நல்ல நாள்: ஜன. 18, 19, 20, 21, 22, 27, 28, 29, 30, பிப். 3, 4, 7, 8, 9

கவன நாள்: ஜன.14,15,16 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4,7 நிறம்: நீலம், வெள்ளை

வழிபாடு: விநாயகர் வழிபாடு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றவும். கேதுவை அர்ச்சிப்பதால் செயல்தடை நீங்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015)

Post by krishnaamma on Mon Jan 19, 2015 11:49 am

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம்1) பதவி உயர்வு! பதவி உயர்வு!
ஜனவரி 13,2015


துணிவே துணை என எண்ணும் சிம்ம ராசி அன்பர்களே!

சூரியன், புதனால் சிறப்பான பலன்கிடைக்கப் பெறுவீர்கள். ஆனால் புதன் ஜன. 28 முதல் பிப். 8 வரை வக்ரம் அடைவதால் கவனமாக இருக்க வேண்டும். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எதையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற நேரிடும்.சூரியனால் பகைவரை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். மாதத் தொடக்கத்தில் எடுத்த காரியம் வெற்றி பெறும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். ஜன. 28க்குப் பிறகு கணவன்- மனைவி இடையே அன்னியோன்யம் இருக்காது. கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். புதன் பிப். 8ல் வக்ர நிவர்த்தி அடைவதால் பிரச்னைகள் மறைந்து குடும்ப ஒற்றுமை ஏற்படும். தம்பதிஇடையே அன்பு பெருகும்.

தொழில், வியாபாரிகளுக்கு பகைவரால் தொல்லை உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். ஜன. 28 க்கு பிறகு கூடுதல் வளர்ச்சியும் பணவரவும் இருக்கும்.பணியாளர்கள் மாதத்தின் மத்தியில் சிறப்பான வளர்ச்சி காணலாம். பதவி, சம்பள உயர்வு நல்ல முறையில் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு முயற்சியில் தடை குறுக்கிடலாம். ஜன.23 க்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லை வரலாம்.

அரசியல்வாதிகளுக்கு கடின அலைச்சல் ஏற்படும். போட்டியாளர்களால் பிரச்னை குறுக்கிடும். மாணவர்கள் இந்த மாதம் புதனால் கூடுதல் நன்மை காணலாம். அதிக மதிப்பெண்கள் பெறுவதோடு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடுவர்.

விவசாயிகளுக்கு நெல், கேழ்வரகு, பச்சை காய்கறிகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். விருந்து, விழா என சென்று வரும் வா#ப்பு கிடைக்கும்.

நல்ல நாள்: ஜன. 15, 20, 21, 22, 23, 24, 29, 30, 31, பிப். 1, 2, 5, 6, 10, 11

கவன நாள்: ஜன.25, 26 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 3, 9 நிறம்: பச்சை, செந்துõரம்

வழிபாடு:வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வணங்குங்கள்.
ஏழைக்குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015)

Post by krishnaamma on Mon Jan 19, 2015 11:50 am

கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) அமோக லாபம்!
ஜனவரி 13,2015


பாச உணர்வுடன் பழகும் கன்னி ராசி அன்பர்களே!

குரு,சனி இந்த மாதம் நற்பலனை தருவார்கள். சுக்கிரன் ஜன. 23 வரையும் , செவ்வாய் பிப்.10 வரையும் நன்மையளிப்பர். பொருளாதார வளம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். பெரியோர்களின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். தொழிலில் அமோக லாபம் கிடைக்கும். தக்க சமயத்தில் உறவினர், நண்பர்கள் உதவி செய்வர். குடும்பத் தேவை பூர்த்தியாகும். ஜன. 28 க்கு பிறகு எடுத்த செயலில் வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடைபெறலாம். பிப். 8 க்கு பிறகு கணவன் - மனைவி இடையே அன்னியோன்யம் இருக்காது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும்.

தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், லாபமும் கூடும். முக்கிய முடிவுகளை பிப். 8 க்குள் செய்வது நல்லது. அதன் பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். செல்வாக்கு அதிகரிக்கும்.

கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஜன. 23 க்கு பிறகு முயற்சியில் தடை ஏற்படும்.

அரசியல்வாதிகள் சீரான பலனை பெறுவர். பிப்ரவரி 9க்கு பிறகு அலைச்சல் ஏற்படும்.

மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம்.ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். பிப்ரவரி 8-ந் தேதிக்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது

விவசாயிகள் ஆடு, மாடு மூலம் நல்ல வளம் கிடைக்கும். பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். புதிய சொத்து வாங்கலாம்.

பெண்கள் வாழ்வில் சிறப்படைவர். ஜன. 25,26 ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனமாக பொருள் வந்து சேரும். மனதில் மகிழ்ச்சிநிலைத்திருக்கும்.

நல்ல நாள்: ஜன. 16, 17, 23, 24, 25, 26, 31, பிப். 1, 2, 3, 4, 7, 8, 9, 12

கவன நாள்: ஜன. 27, 28 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 2,3 நிறம்: சிவப்பு, மஞ்சள்

வழிபாடு: புதன் கிழமை குல தெய்வத்தை வணங்குங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015)

Post by krishnaamma on Mon Jan 19, 2015 11:50 am

துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) அபார ஆற்றல்!
ஜனவரி 13,2015


நடப்பது நன்மைக்கே என நினைக்கும் துலாம் ராசி அன்பர்களே!

செவ்வாய் பிப். 10ல் கும்பத்தில் இருந்து மீனத்துக்கு மாறி நன்மை செய்வார். புதன் ஜன. 28 வரையும், பிப். 8 க்கு பிறகும் நற்பலனைக் கொடுப்பார். கேது, சுக்கிரனாலும் நன்மையே உண்டாகும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். மனதில் அபார ஆற்றல் பிறக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். ஜன. 23க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். பிப். 8க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேருவர்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சூரியனால் பெண்கள் வகையில் தொல்லை வரலாம். அவர்களிடம் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. அதேநேரம், உங்களுக்கு இடைஞ்சல் செய்தவர்களால் ஏற்பட்ட தொல்லை தீரும் ஆற்றல் பிறக்கும். ஜன. 28 க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.பணியாளர்கள் சுக்கிரனின் பலத்தால் நன்மையான பலன் பெறுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்டகாலமாக எதிர்பார்த்த சலுகை தற்போது கிடைக்க வாய்ப்புண்டு. சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். ஜன. 28க்கு பிறகு புதனால் அலைச்சல் அதிகரிக்கும்.

கலைஞர்கள் சிறப்பான பலன் பெறலாம். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் மாதக்கடைசியில் நற்பெயர், பொருளாதர வளம் பெறுவர்.

மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காணலாம். ஜன. 28க்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் படிப்பில் அக்கறை தேவைப்படும். ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நன்மையளிக்கும்.

விவசாயிகளின் வருமானத்திற்கு குறையிருக்காது. நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் பிப். 10க்கு பிறகு கை கூடும்.

பெண்கள் குதுõகலமாக இருப்பர்.

நல்ல நாள்: ஜன. 15, 18, 19, 25, 26, 27, 28, பிப். 3, 4, 5, 6

கவன நாள்: ஜன. 29, 30 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4, 8

நிறம்: சிவப்பு,வெள்ளை

வழிபாடு: சனியன்று சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்யுங்கள். பெருமாள் கோவிலுக்கும் சென்று வாருங்கள். தினமும் காலையில் சூரியனை வணங்குங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015)

Post by krishnaamma on Mon Jan 19, 2015 11:51 am

விருச்சிகம்: ( விசாகம் 4, அனுஷம், கேட்டை) பெண்களால் நன்மை!
ஜனவரி 13,2015


சுறுசுறுப்புடன் திகழும் விருச்சிக ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன் சாதகமான 3-ம் இடத்திற்கு வந்துள்ளார். புதன் ஜன. 28ல் வக்கிரம் அடைந்து நற்பலனை கொடுப்பார். அதோடு மாதம் முழுவதும் ராகு, குரு, சூரியன், சுக்கிரனும் நற்பலனை தருவார்கள். பெண்களால் நன்மைஅதிகரிக்கும். நகை-ஆபரணங்கள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேம்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும். லாபம் சிறப்பாக இருக்கும். அரசின் சலுகை கிடைக்கும். போட்டியாளர்களின் இடையூறு மறையும். பார்ட்னர்களிடையே ஒற்றுமை ஏற்படும். மாதக்கடைசியில் எதிர்மறையான போக்கு ஏற்படும். பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஜன.28க்கு பிறகு அலைச்சல் குறையும். பதவி உயர்வு கிடைக்கும். அரசு வேலையில் இருப்பர்கள், மாத பிற்பகுதியில் கவனமுடன் இருப்பது நல்லது. உங்கள் பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைத்தால் சிக்கல் வரலாம்.

கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு, புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு ஓரளவு ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த பதவி கிடைக்க தாமதமாகும்.

மாணவர்களுக்கு ஆசிரியரின் ஆலோசனை கிடைக்கும். மாதத் தொடக்கத்திலும், மாத இறுதியிலும் படிப்பில் பின்தங்கும் நிலை தெரிவதால், மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயிகள் சுமாரான வருமானம் காண்பர். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். கால்நடைகள் கைகொடுக்கும்.

பெண்கள் சிறப்பான பலன் காணலாம். கன்னியருக்கு தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்புண்டு. குழந்தைகளின் நடத்தையைகண்காணிப்பது நல்லது. ஜனவரி 29,30ல் நல்ல தகவல் எதிர்பார்க்கலாம். புத்தாடை, நகை வாங்கலாம்.

நல்ல நாள்: ஜனவரி 16, 17, 20, 21, 22, 27, 28, 29, 30 பிப்ரவரி 5, 6, 7, 8, 9, 12.

கவன நாள்: ஜன. 31, பிப். 1, 2 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 7,9 நிறம்: மஞ்சள்,வெள்ளை

வழிபாடு: கேது, சனி கிரகங்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாளை வணங்குங்கள். இதனால் கிரகதோஷம் குறைந்து நன்மை அதிகரிக்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015)

Post by krishnaamma on Mon Jan 19, 2015 11:52 am

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) வாகன யோகம்!
ஜனவரி 13,2015


பெரியவர்களுக்கு மதிப்பளிக்கும் தனுசு ராசி அன்பர்களே!

சுக்கிரன் ஜன. 23ல் இடம்மாறினாலும் மாதம் முழுவதும் நன்மையளிப்பார். செவ்வாயால் பிப். 10 வரை நன்மை உண்டாகும். சந்திரன் பெரும்பாலான நாட்கள் சாதகமாக இருப்பதாலும் நன்மை உண்டு. மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. செவ்வாயால் பக்தியுணர்வு மேம்படும். எடுத்த முயற்சியில் வெற்றி காணலாம். பொருளாதார வளம் சிறக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அவப்பெயர் ஏற்பட வாய்ப்புண்டு. ஜன. 23 க்கு பிறகு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேருவர். புதிதாக வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான பலன் கிடைக்கும். ஜன. 23 க்குள் அரசின் சலுகை கிடைக்கும். உங்கள் நேரடி பார்வையில் நிறுவனம் செயல்படுவது நல்லது. பணியாளர்களுக்கு பணிச்சுமை, வீண் அலைச்சல் ஜன. 23க்கு பிறகு மறையும். சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான நிலை காணலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். பிப். 10க்கு பிறகு அவப்பெயர் வரலாம். சக மாணவர்களுடன் வீண் விவாதம் கூடாது.

கலைஞர்கள் பெயரும், புகழும் தொடர்ந்து கிடைக்கப் பெறுவர். அரசிடம் விருது, பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் எளிதாக வந்து சேரும். அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். மக்கள் நலப்பணியில் ஆர்வம் கூடும்.

விவசாயிகள் புதிய சொத்து வாங்கலாம். எள், பனை பொருள், மானாவாரி பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு. கைவிட்டுப்போன பொருள் பிப். 10க்குள் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தாரின் அன்பைப் பெறுவர். பிள்ளைகளின் நலனில் ஆர்வம் காட்டுவர்.

நல்ல நாள்: ஜன. 15, 18, 19, 23, 24, 29, 30, 31, பிப். 1, 2, 7, 8, 9, 10, 11

கவன நாள்: பிப். 3, 4 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3, 5 நிறம்: சிவப்பு, வெள்ளை

வழிபாடு: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். தினமும் ராமபிரானை வணங்குங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015)

Post by krishnaamma on Mon Jan 19, 2015 11:53 am

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) மதிப்பு கூடும்!
ஜனவரி 13,2015

அமைதியை விரும்பும் மகர ராசி அன்பர்களே!

இந்த மாதக் கடைசியில் செவ்வாய் நற்பலனைக் கொடுப்பார். இதனால் Œமூக மதிப்பு மேம்படும். எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றியே. பொருளாதார வளம் உயரும். மேலும் சனி, கேது, குரு, சுக்கிரனின் பலன்களும் தொடர்ந்து கிடைக்கும். இதனால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். Œமூக மதிப்பு சிறப்பாக இருக்கும். புதனால் ஜன. 28 வரை செல்வாக்கு பாதிக்கப்படலாம். ஜன.23க்கு பிறகு பணவரவு இருக்கும். பிப். 8க்கு பிறகு கணவன்-மனைவி இடையே சிற்சில மனக்கசப்புகள் வரலாம். விட்டுக் கொடுத்து போகவும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு ஜனவரி 23க்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும். செவ்வாயால் பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. கவனமாய் இருக்கவும். போட்டியாளர் வகையில் தொல்லை வரலாம். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மாதஇறுதியில் இந்த நிலை மாறி பொருளாதார வளம் மேம்படும். பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். ஆனால், அதற்கேற்ற பலன் கிடைக்கும். ஜன.28க்குள் இடமாற்றம் காணலாம். பொருள் விரயம் ஏற்படும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர். பெண்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு தற்போதைக்கு உரிய பலன் கிடைக்காவிட்டாலும், உங்கள் கடினமான மனப்பயிற்சிக்குரிய பலன் பின்னால் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு கடந்த சில மாதங்களாக இருந்த தொய்வு நிலை மாதக்கடைசியில் மாறும். நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வகையிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய சொத்து வாங்க தருணம் வந்து விட்டது.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். புத்தாடை, நகை வாங்கலாம். புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

நல்ல நாள்: ஜன. 15, 16, 17, 20, 21, 22, 25, 26, 31, பிப். 1, 2, 3, 4, 10, 11, 12.

கவனநாள்: பிப். 5, 6

அதிர்ஷ்ட எண்: 4, 6 நிறம்: மஞ்சள்,வெள்ளை

வழிபாடு: ராகு சாதகமற்ற நிலையில் உள்ளதால், காளியின் அருள் கிடைக்க அர்ச்சனை செய்யுங்கள். பைரவர் வழிபாடும் உங்களை முன்னேற்றும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015)

Post by krishnaamma on Mon Jan 19, 2015 11:53 am

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) சிறந்த உடல்நிலை!
ஜனவரி 13,2015


உழைப்பில் ஆர்வம் காட்டும் கும்ப ராசி அன்பர்களே!

உழைப்பும், விடா முயற்சியும் கொடுக்க வேண்டிய மாதமாக அமையும். திறமைக்கு சவால் விடும் காலம் இது. சுக்கிரனை தவிர மற்ற அனைத்தும் சாதகமற்ற நிலையில் உள்ளன. இதனால் எந்த ஒரு செயலையும் அதிக முயற்சி எடுத்தே செய்ய நேரிடும். வருமானம் ஓரளவு இருக்கும். எதிர்பாராமல் செலவு அதிகரிக்கும். சிக்கனம் தேவை. குடும்பத்தில் சுக்கிரனால் ஜன. 23 க்கு பிறகு பெண்களால் பெருமை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். கணவன் மனைவி இடையே அன்பு பெருகும். புதன் ஜன. 28ல் வக்ரம் அடைவதால் குடும்பத்தில் பிரச்னை உருவாகலாம். இந்த சமயத்தில், கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி குறுக்கிடும். திடீர் செலவு நேரிடலாம். சிக்கனமாக இருப்பது நல்லது. பணியாளர்களுக்கு திடீர் இடமாற்றத்தால் செலவு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்கமான சலுகைகளுக்கு குறைவில்லை. விண்ணப்பித்த கடன் கிடைக்க தாமதமாகலாம்.

கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு எதிர்பார்த்த படி கிடைக்காமல் போகலாம். ஜன. 23 க்கு பிறகு சிறப்பான நிலை பெறுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.

அரசியல்வாதிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது.

மாணவர்களுக்கு புதன் சாதகமற்று காணப்படுவதால், கவனமுடன் படிக்க வேண்டியிருக்கும்.

விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் பெருகும்.

பெண்களுக்கு கணவரின் அன்பு கிடைக்கும். விருந்து, விழாஎன சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வீட்டில் சமையல் செய்யும் போது கவனமாக இருக்கவும்.

நல்ல நாள்: ஜன.16, 17,1 8, 19, 23, 24, 27, 28, பிப்., 4, 5, 6, 12

கவன நாள்: பிப்.7, 8, 9 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 2, 5 நிறம்: வெள்ளை, ஆரஞ்ச்

வழிபாடு: தினமும் காலையில் சூரியனை வழிபடுங்கள். புதன்கிழமை ஏழைகளுக்கு தானம்
செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாளை வணங்குங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015)

Post by krishnaamma on Mon Jan 19, 2015 11:54 am

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) வளர்ச்சிப் பாதை!
ஜனவரி 13,2015


நல்ல மனம் படைத்த மீன ராசி அன்பர்களே!

கடந்த மாதத்தை விட கூடுதல் பலன் எதிர்பார்க்கலாம். உங்கள் நட்புக் கிரகமான சூரியன் 11ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான நிலை. ஜன.23 வரை சுக்கிரன் நற்பலன் கொடுப்பார். குருவும், புதனும் மாதம் முழுவதும் நன்மைஅளிப்பர். இதனால் எந்த ஒரு செயலையும் துரிதமாக செய்து நல்ல வளர்ச்சிநிலை அடைவீர்கள். பணப்புழக்கம், மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.அரசு வகையில் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களால் நன்மை ஏற்படும். பொன், பொருள் சேரும்.

தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் மேம்படும். லாபம் தாராளமாக இருக்கும். நிறுவனத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.பணியாளர்களுக்குச் சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். பதவி உயர்வு தொடர்பாக இருந்த தடை நீங்கும். கோரிக்கைகள் நிறைவேறும். அரசு ஊழியர்கள் உற்சாகத்துடன் காணப்படுவர்.
சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும்.

கலைஞர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். ஜன. 23க்கு பிறகு அதிகமாக முயற்சி செய்து புதிய ஒப்பந்தம் பெற நேரிடும். அரசியல்வாதிகள் நல்ல பணப்புழக்கத்தில் இருந்தாலும் எதிர்பார்த்த செல்வாக்கு கிடைக்காது.

மாணவர்கள் பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவர். புதனால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்க பெறுவீர்கள்.

விவசாயம் சிறக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த லாபம் காணமுடியாது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தாரின் நன்மதிப்பைப் பெறுவர். உங்களால் வீட்டிற்கு பெருமை சேரும். விருந்து விழா என சென்று வருவர். ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வர். அக்கம் பக்கத்தினருடன் நட்புடன் இருப்பர்.

நல்ல நாள்: ஜன. 18, 19, 20, 21, 22, 25, 26, 29, 30, பிப். 5, 6, 7, 8, 9

கவன நாள்: ஜன. 15, பிப். 10,11 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1, 9 நிறம்: செந்துõரம், பச்சை

வழிபாடு: பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். மூதாட்டிகளுக்கு உணவும், உடையும் வழங்குங்கள். ஜன. 23க்கு பிறகு சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015)

Post by M.M.SENTHIL on Mon Jan 19, 2015 12:43 pm

மிக்க நன்றி அம்மா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015)

Post by சிவனாசான் on Wed Jan 21, 2015 9:18 pm

உபயோகமானபதிவு...........
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2779
மதிப்பீடுகள் : 1007

View user profile

Back to top Go down

Re: தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum