ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காலை முதல் மாலை வரை
 T.N.Balasubramanian

பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
 M.Jagadeesan

கடவுளின் கையெழுத்து….! – கவிதை
 Dr.S.Soundarapandian

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்
 Dr.S.Soundarapandian

நீ யாராகி
 Dr.S.Soundarapandian

அடிபணிந்து கிடக்காதே
 Dr.S.Soundarapandian

அறிமுகம் நாகராஜன்
 Dr.S.Soundarapandian

தாயே−கட்டுரை
 Dr.S.Soundarapandian

தண்ணீர்
 Dr.S.Soundarapandian

சின்ன கண்ணன் அழைக்கிறான்
 ayyasamy ram

அடுத்த மாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு
 Dr.S.Soundarapandian

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை வந்தனர்: உற்சாக வரவேற்பு
 Dr.S.Soundarapandian

வணக்கம்
 Dr.S.Soundarapandian

'எச் - 1பி' விசா வழங்க கட்டுப்பாடுகள் தளர்வு
 Dr.S.Soundarapandian

சதம் அடித்த புஜாரா; இரட்டை சதத்தை தவரவிட்ட தவான்: வலுவான நிலையில் இந்திய அணி!!
 Dr.S.Soundarapandian

மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!!
 Dr.S.Soundarapandian

மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை
 gayathri gopal

6174 புத்தகம் தேவை
 மணிகண்டன்மணிகண்டவர்மன்

மின்நூல்
 மணிகண்டன்மணிகண்டவர்மன்

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 ajaydreams

பாமினி மற்றும் லதா எழுத்துருவில் இருந்து ஐஸ்வர்யா எழுத்துருவிற்கு மாற்ற எளிமையான வழிமுறைகள் இருந்தால் உதவுங்கள்
 sakkthi

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(1 --9}-- 10
 T.N.Balasubramanian

எந்தன் அறிமுகம் --சதீஷ்
 M.Jagadeesan

சின்ன வீடு – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

விவசாயம் வீழ்ந்து போச்சு
 Shivasakthi Danadjeane

அமெரிக்காவில் இந்த வாரம் - 11
 மூர்த்தி

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

வேலன்:-இணைய பைல்களை பிடிஎப் ஆக மாற்றிட
 velang

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்
 T.N.Balasubramanian

ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார்
 T.N.Balasubramanian

அவள் பதில் கூறும் நேரம்
 Shivasakthi Danadjeane

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை!
 T.N.Balasubramanian

உருமாற்றம்
 krishnanramadurai

கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
 ayyasamy ram

வெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைப் பறி கொடுத்த இந்தியா!
 ayyasamy ram

கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா?
 ayyasamy ram

மூளைக்குணவு
 M.Jagadeesan

வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட
 velang

என்னை பற்றி ----ராஜேஷ்
 ராஜா

சாதனையாளர் முத்துக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
 ayyasamy ram

சின்ன வீடு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வண்ணக் கனவுகள்!
 ayyasamy ram

கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
 ayyasamy ram

வாசகர் கவிதை
 ayyasamy ram

இறுதிப் போட்டியில் என்ன ஸ்பெஷல்? இந்தியா – இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை
 T.N.Balasubramanian

99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் முழு சூரிய கிரகணம்: எச்சரிக்கும் நாசா!!
 மூர்த்தி

நான் இரசித்த பாடல் - 12
 ayyasamy ram

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
 மூர்த்தி

நியாயமா- ஒரு பக்க கதை
 பாலாஜி

காலண்டர் - ஒரு பக்க கதை
 பாலாஜி

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.2.56 லட்சம் கோடி
 பாலாஜி

அரசின் ஊழல் குறித்த தகவல்களை அனுப்புங்கள்: ரசிகர்களுக்கு கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்
 M.Jagadeesan

ஏர்செல் அறிவித்துள்ள சலுகைகள்
 சிவனாசான்

ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
 சிவனாசான்

சிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு
 M.Jagadeesan

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை
 சிவனாசான்

4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Mon Feb 02, 2015 7:18 pm

நண்பர்களுக்கு வணக்கம்.

நம்மிடம் உள்ள நூல்களை நாம் மின்நூல்களாக செய்து வைத்துக் கொள்வதில் ஒரு வசதி என்னவென்றால். நாம் வாங்கும் புத்தகங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பேப்பர்கள் வண்ணம் மாறி, கரையான் அரித்து, பைண்டிங் சிதைந்து படிக்க முடியாமல் போய்விடும். எப்போதும் கிடைக்கும் நூல்கள் என்றால் பரவாயில்லை. சில அரிதான நூல்கள் திரும்பக்கிடைக்காது என்பதால். அவற்றை ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்தோ..அல்லது கேமரா மூலம் புகைப்படமாக எடுத்தோ..புத்தகத்தை பிடிஎப் முறையில் மாற்றி மின்நூல்களாக சேமித்து வைத்துக்கொண்டால்.அதற்கு அழிவில்லை. புத்தகத்தை இரவல் கொடுக்க முடியாது. திரும்பவரவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. மின்நூலில் அந்த பிரச்சினை இல்லை. எத்தனை பேருக்கு கொடுத்தாலும் அது தொலைவதில்லை.

சரி எப்படி மின்நூல் செய்வது என்ற வழிமுறைக்கு வருவோம். இதைபற்றி அறிந்தவர்களுக்கு இந்த விடயம் சாதாரணமானதுதான். அறியாதவர்களுக்கும்,ஆர்வமுள்ளவர்களுக்கும் பயன்படவேண்டும் என்பதற்குத்தான் இந்தப்பதிவு.

இதற்கு தேவையான உபகரணங்கள் சில-

1. ஸ்கேனர் அல்லது கேமரா
2. மேசைக்கணினி அல்லது மடிக்கணினி
3. மின்நூல் செய்வதற்கு தேவையான மென்பொருள்கள்.
4. ஸ்கேன் செய்வதற்கு புத்தகங்கள். இதை நீங்கள் இரவல் வாங்கி கூட செய்து திருப்பி தந்துவிடமுடியும்.அல்லது நூலகங்களில் எடுத்துவந்தும் செய்யலாம்.
இதற்காக நீங்கள் செலவிட வேண்டியதில்லை. நீங்கள் படிப்பதற்காக வாங்கும் நூல்களே போதுமானது.
5. பொன்னான நேரம்,கொஞ்சம் உழைப்பு.

இதெல்லாம் இருக்கிறது என்பவர்கள் பதிவை தொடரலாம். இல்லை என்றாலும் அறிந்துவைத்துக் கொள்ளலாம். பின்னர் உதவும்.

ஸ்கேனர்

ஸ்கேனர் வாங்கும் போது 300 டி.பி.ஐ அளவில் படங்களை சேமிக்கும் வசதி உள்ளதாக வாங்கவேண்டும். பெரும்பாலும் அப்படித்தான் கிடைக்கிறது.

ஸ்கேனரில் புகைப்படத்தின் தரத்தை நிர்ணயிக்க கூடிய பிக்சல் அளவை செட் செய்யவேண்டும். செட்டிங் பகுதிக்கு சென்று 300 டிபிஐ என்று செட் செய்து கொள்ளுங்கள்.கீழே சில படங்கள் எடுத்துக்காட்டாக தரப்பட்டுள்ளது. ஸ்கேனர் எந்த நிறுவனமாக இருந்தாலும் அடிப்படை ஒன்றுதான் என்பதால் இந்த படங்களில் உள்ள விபரங்களை நன்கு கவனித்து வைத்துக்கொண்டால் போதுமானது.

கலர்,பிளாக் அன்ட் ஓயிட், கிரே போன்றவற்றில் கிரே ஸ்கேல் கொடுக்கலாம். வண்ணபுகைப்படங்கள் உள்ள நூலாக இருந்தால் கலர் தேர்ந்தெடுக்கலாம்.

டிப்ஸ் - புத்தகத்தை வைத்து மூடியவுடன் அதன்மீது சிறிது கைகளால் அழுத்தம் கொடுத்து புத்தகத்தை நன்கு ஸ்கேனரில் படியும் படி எடுத்தால் நடுவில் விழும் நிழலை குறைக்கலாம். இதனால் ஓரங்களில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக பதிவுசெய்யலாம்


கேமரா


கேமாரவில் அதிகபட்ச தரத்தை செட் செய்து கொள்ளுங்கள்.
ஒரு வெள்ளை பிண்ணனிதேவை என்பதால் இதற்கு வெள்ளைநிற பேப்பர். அல்லது வெள்ளை நிற அட்டைகள் . அல்லது வெள்ளைநிற துணி இவற்றில் ஒன்றை வைத்து அதன் புத்தகத்தை வைத்து புகைப்படம் எடுக்கவேண்டும்.

இந்த படத்தில் கிளிப்கள் தெரியவேண்டும் என்பதற்காக தூரத்தில் வைத்து எடுத்துள்ளேன். மற்றபடி வேண்டிய அளவிற்கு கிளிப் தெரியாமல் கூட அருகில் வைத்து எடுத்தால் போதுமானது.

பக்கங்கள் புரளாமல் இருக்க கிளிப்களை பயன்படுத்தலாம். பேப்பர் கிளிப்கள் அல்லது, துணி உலர்த்தும் போது காற்றில் துணிகள் விழுந்துவிடாமல் இருக்க பயன்படுத்துகிற கிளிப்களும் பயன்படுத்தலாம்.

இயற்கையான வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். ப்ளாஷ் பயன்படுத்த தேவையில்லை.

மேலே கூறியுள்ள முறையை பயன்படுத்தி புத்தகத்தை JPEG என்ற ஃபைல் பார்மெட்டில் ஒரு போல்டரில் வைத்துக்கொள்ளுங்கள்.
டிப்ஸ் - படம் எடுக்கவேண்டிய புத்தகத்தை புகைப்படம் எடுக்கும் முன்பாகவே சில வார்ம் அப் செய்யுங்கள். வாக்கிங், ஜாக்கிங் செய்யும் முன், கை கால்களை நீட்டி, மடக்கி சில சேஷ்டைகள் செய்வது போல.. புத்தத்தை நன்றாக விரித்து அழுத்துங்கள். இவ்வாறு இருபது பக்கங்களுக்கு ஒருமுறை பிரித்து அழுத்தம் கொடுத்து நன்றாக விரியும் படி செய்தால் படம் நன்றாக வரும். ஓரங்களில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக பதிவாகும்.

இனி இதை எப்படி மின்நூலாக மாற்றுவது என்பதை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன். இதில் ஏதேனும் புரியவில்லை என்றால் பின்னூட்டத்தில் கேட்கலாம்.

எனக்கு தெரிந்தவரை இங்கு கூறியுள்ளேன். விபரம் அறிந்தவர்கள். இதில் ஏதேனும் தகவல் சரிவரதரப்படவில்லை என்றால். என்ன விபரங்கள் சேர்க்கவேண்டும் என்பதை கருத்துரையில் கூறினால் அது பலருக்கும் உபயோகமாக இருக்கும்.நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு

Post by krishnaamma on Mon Feb 02, 2015 11:06 pm

அருமையான தொடர் நேசன்..............தொடருங்கள்.....படிக்க ஆவலுடன் காத்திருக்கேன்....முன்பே உங்களிடம் சொன்னது போல, நானும் சில புத்தகங்களை 'ஸ்கேன்' செய்து வைத்திருக்கேன்..முயன்று பார்க்கிறேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11305

View user profile

Back to top Go down

Re: மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு

Post by அகிலன் on Tue Feb 03, 2015 4:44 am

நானும் இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்,
உங்களின் பதிவு பயனுள்ளதாக இருக்கிறது.
தொடருங்கள்.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு

Post by முனைவர் ம.ரமேஷ் on Tue Feb 03, 2015 8:11 am

எனக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்... எனக்கு ஒரு சந்தேகம். பிடிஎப் என்பதுதான் மின்னூலா? இவை பற்றிய அறிவு எனக்குக் குறைவு என்பதால் இந்தக் கேள்வியை கேட்கிறேன். (எனது கவிதைகள் மற்றும் படைப்புகள் அனைத்தும் தட்டச்சு இட்ட நிலையில் வோர்ட் பார்மட்டில் இருக்கிறது. அவற்றை மின்னூலாக்க இந்த தொடர் உதவும் என்று நினைக்கிறேன்.)
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 230

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Tue Feb 03, 2015 8:27 am

கவியருவி ம.ரமேஷ் wrote:எனக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்... எனக்கு ஒரு சந்தேகம். பிடிஎப் என்பதுதான் மின்னூலா? இவை பற்றிய அறிவு எனக்குக் குறைவு என்பதால் இந்தக் கேள்வியை கேட்கிறேன். (எனது கவிதைகள் மற்றும் படைப்புகள் அனைத்தும் தட்டச்சு இட்ட நிலையில் வோர்ட் பார்மட்டில் இருக்கிறது. அவற்றை மின்னூலாக்க இந்த தொடர் உதவும் என்று நினைக்கிறேன்.)
மேற்கோள் செய்த பதிவு: 1118540

மின்நூல் என்றால் என்ன என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருப்பது இயல்புதான்.
எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.
பி.டி.எப் என்பது டாகுமென்ட்களை படிக்க உதவும் ஒரு கோப்புதான்.
புத்தகங்களையும் படிக்க முடியும். விகடன் பிரசுரம் முதல் ஈபுக் தயாரித்து விற்பனை செய்பவர்கள்.
ஈபுக் செய்வதற்கு பி.டி.எப் கோப்பையே தெரிவு செய்கின்றனர். காரணம் அனைவராலும் எளிதாக பயன்படுத்தகூடிய கோப்பாக இருப்பபதால்தான். நானும் மின்நூல்கள் செய்ய பிடிஎப் கோப்பையே பயன்படுத்துகிறேன். வேறு சில கோப்புகளும் படிப்பதற்கு இருக்கிறது. அது அவ்வளவாக பயன்பாட்டில் இல்லை. பிடிஎப் கோப்பை கணினி, மொபைல், டேப்லட் போன்ற அனைத்து மின்சாதனங்களிலும் பயன்படுத்த இயலும்.

மின்நூல் என்றால் மின்சாதனங்களில் படிக்கப்படும் நூல். இதற்காக பயன்படும் கோப்புகள் வெவ்வேறாக இருக்கலாம். ஐபேட்-களில் ஈபப் என்ற ஃபைல் பார்மெட்டும் பயன்படுத்தபடுகிறது.
பெயரில் என்ன இருக்கிறது . பயன்பாட்டுக்கேற்றவாறு பயன்படுத்தப்படுவதுதான். புன்னகைநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Tue Feb 03, 2015 8:50 am

வணக்கம் நண்பர்களே...

மின்நூல்கள் செய்வது எப்படி பகுதி இரண்டிற்கு வரவேற்கிறேன்.

பகுதி ஒன்றில் ஸ்கேனர் மற்றும் கேமரா மூலம் எடுத்த படங்களை ஒரு போல்டரில் சேமித்து வைத்திருப்பீர்கள். அதை மின்நூலாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

jpeg என்ற ஃபைல் ஃபார்மெட்டில் உள்ள புகைப்படங்களை நேரடியாக pdf ஃபைல் ஃபார்மெட்டுக்கு மாற்ற பல மென்பொருள்கள் உள்ளது. அதை பற்றிய விபரங்களை பின்வரும் பதிவுகளில் கூறுகிறேன். அதற்கு முன்பு, ஸ்கேனர் அல்லது கேமரா மூலம் எடுத்திருக்கும் படங்களை சிறிது திருத்தம் செய்ய வேண்டியுள்ளது.

அதாவது ஸ்கேன் செய்யும் போதும், கேமரா மூலம் படம் எடுக்கும் போதும், இரண்டிரண்டு பக்கங்களாக வைத்து எடுத்திருப்போம். அதை ஒரு தனித்தனியாக ஒவ்வொரு பக்கத்தையும் பிரிக்க வேண்டும். CROP என்ற முறையில், PHOTOSHOP, PAINT.NET, PICASA MICRSOFT OFFICE IMAGE EDITER போன்ற மென்பொருளின் உதவி கொண்டு பிரிக்க இயலும் என்றாலும், இந்த முறையில் பிரிக்க(CROP செய்ய) வேண்டும் என்றால் நிறைய நேரம் செலவாகும். ஆனால் மிக எளிமையாக இரட்டை பக்கங்களை ஒற்றை பக்கங்களாக பிரிக்கவும் அதை பிளாக் அன்ட் ஓயிட்டாக மாற்றவும் உதவும் மென்பொருளைப்பற்றி இந்த பதிவில் கூற இருக்கிறேன்.

அந்த மென்பொருளின் பெயர் - SCAN TAILOR இது முற்றிலும் இலவசமான மென்பொருள்

ஸ்கேன் டெய்லர் என்ற மென்பொருளின் மூலமாகத்தான் இனி நான் தயார் செய்து வைத்திருக்கும் புத்தகத்தின் படங்களை திருத்த இருக்கிறோம். அதற்கு முன் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும் அல்லவா..

இங்கு ஸ்கேன் டெய்லர் மென்பொருளின் டவுன்லோடு லிங்க், மற்றும் ஆங்கிலத்தில் உள்ள மின்நூல் கைடு, மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும் வீடியோ பாடம், ஆகியவற்றின் லிங்குகளை வரிசையா கொடுக்கிறேன்.

1. ஸ்கேன் டெய்லர் மென்பொருள் 32 பிட்

2. ஸ்கேன் டெய்லர் மென்பொருள் 64 பிட்

மின்நூல் கைடு-ஆங்கிலத்தில்

3. ஸ்கேன் டெய்லர் ஆங்கில கையேடு

வீடியோ கைடு-ஆங்கிலத்தில்

4. ஸ்கேன் டெய்லர் ஆங்கில் வீடியோ பாடம்.


மேலே ஸ்கேன் டெய்லர் மென்பொருளின் 32 பிட், 64 பிட் கணினிகளுக்கான லிங்குகளை தனித்தனியே கொடுத்துள்ளேன். உங்கள் கணினிக்கேற்றவாறு பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள். ஒரளவு அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருந்தாலே போதும். 3,4 வதாக கொடுக்கப்பட்டிருக்கும் மின்நூல் கைடு மற்றும் வீடியோ பாடங்களை ஒரு முறை பதிவிறக்கம் செய்து பாருங்கள்.


அடுத்த பதிவில் தொடர்கிறேன். அதற்குள் உங்களில் சிலரோ பலரோ இந்த மென்பொருளை பயன்படுத்தகூட துவங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கணினியில் நிறுவி தயாராக வைத்திருங்கள். கூடுமானால் ஏதேனும் ஒரு சிறிய புத்தகத்தினை ஸ்கேன் செய்தோ அல்லது கேமார மூலமோ படம்எடுத்து ஒரு போல்டரில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இனி நாம் இதற்கான செயல்முறை விளக்கத்திற்கு போய்விடலாம். முழுக்க முழுக்க படங்களுடன் தமிழில் இந்த மென்பொருளைப்பற்றி கூற இருக்கிறேன்.நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு

Post by செல்லா on Tue Feb 03, 2015 2:52 pm

நன்றி தமிழ்நேசன் அவர்களே

உங்கள் இந்த தொடர் பதிவுகள் நிறைவு பெற்றதும் பல மின்னூல்கள் நமக்கு கிடைக்கும் என நம்புகிறேன்,

என்றும் அன்புடன்
செல்லா


செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
தமிழ்மின்நூலகம்
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 372
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

Re: மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு

Post by விமந்தனி on Tue Feb 03, 2015 3:43 pm

மிகவும் பயனுள்ள தொடர். வாழ்த்துக்கள்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2490

View user profile

Back to top Go down

Re: மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு

Post by pkselva on Wed Feb 04, 2015 8:34 am

பயனுள்ள பதிவு! தொடருங்கள்


செல்வா!
avatar
pkselva
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 96
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு

Post by karthick thamizan on Sun Aug 09, 2015 8:06 pmஇனி நாம் இதற்கான செயல்முறை விளக்கத்திற்கு போய்விடலாம். முழுக்க முழுக்க படங்களுடன் தமிழில் இந்த மென்பொருளைப்பற்றி கூற இருக்கிறேன்.

//

செயல்முறை விளக்கம் வேண்டும் அண்ணா ...
avatar
karthick thamizan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு

Post by pon.sakthivel on Sat Jul 09, 2016 7:30 pm

நான் பார்வை மாற்றுத்திறணாளி என்பதால் பாடப்புத்தகங்களையும் பிர புத்தகங்களையும், ஸ்கேன் செய்து பின் google drive-ல் தரவ்ஏற்றி எழுத்துக்களாக மாற்றி தான் படித்து வருகிறேன்.எனவே
வருடுவது பற்றி நீங்கள் சொன்ன தகவல்கள் பெரிதும் எனக்குப் பயனுள்ளதாக இருக்கிறது
நன்றி ஐயா!.
avatar
pon.sakthivel
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15
மதிப்பீடுகள் : 10

View user profile https://www.paarvaiyatravan.com

Back to top Go down

Re: மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு

Post by தமிழ்நேயன் ஏழுமலை on Sat Jul 30, 2016 1:01 pm

ஆண்ராய்டு கைபேசியில் camscanner appCamscaner
அல்லது tiny scanner pdf app Tiny scanner - pdf scanner
பயன்படுத்தி எளிதாக மின் புத்தகம் உருவாக்கலாம்... நான் அப்படி தான் பதிவிடுகிறேன்
avatar
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 82
மதிப்பீடுகள் : 56

View user profile

Back to top Go down

Re: மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Sat Jul 30, 2016 7:19 pm

நல்ல  பதிவு கணினி  ஆசான் அன்பரே..........
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 965

View user profile

Back to top Go down

Re: மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு

Post by தமிழ்நேயன் ஏழுமலை on Sat May 06, 2017 12:58 pm

வெடிய புகைப்படங்களை மீண்டும் எப்படி pdf ஆக மாற்றுவது, Scan toiler இல் வெட்டி ஒழுங்கு படுத்திய tif images Folder யை எப்படி மின்நூலாக மாற்றுவது.???
avatar
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 82
மதிப்பீடுகள் : 56

View user profile

Back to top Go down

Re: மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு

Post by Dr.S.Soundarapandian on Sat May 06, 2017 7:43 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 1744

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு

Post by mohanas on Mon Jul 17, 2017 4:28 pm

வணக்கம்

இன்னும் சில வருடிகள் சந்தையில் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி மின்னாக்கப் பணியை விரைவாக செய்யலாம்.

Epson DS-510
ScanSnap iX500
ScanSnap SV600 - Contactless Scanner

மேற்கண்ட வருடிகள் நிமிடத்திற்கு 6௦ பக்கங்களை வருடி, ஒரே நேரத்தில் PDF கோப்புகளாக மாற்றும் திறன் பெற்றவை. வண்ணம், கருப்பு-வெள்ளை, போன்ற வகைகளைத் தேர்ந்தெடுக்கலாம். YouTubeல் செய்முறை காணொளிகளை காணவும்.

atiz BookDrive வாங்க அதிக முதலீடு தேவை.

மின்னாக்கம் செய்த நூல்களை தவிர்த்து பிற நூல்களை சேகரத்தில் கொண்டு வரலாம்.

தங்களின் மேலான மேலதிக கருத்துக்களை தெரிவிக்கவும்.

அன்புடன்,
மோகன சுந்தரம்
avatar
mohanas
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum