ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

. விநோதமான வேலை!
 ayyasamy ram

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 ayyasamy ram

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

விஷ சேவல் கோழி மீன்
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 M.Jagadeesan

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

Introduction
 chandram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 ayyasamy ram

அது ஒரு காதல் அலை…! – கவிதை
 ayyasamy ram

மீன்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

தாமதம் -- கவிதை
 Dr.S.Soundarapandian

நீ…நீயாக இரு….!
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(460)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண்களின் நடையழகு

View previous topic View next topic Go down

பெண்களின் நடையழகு

Post by சிவா on Fri Feb 06, 2015 1:03 am


பெண்களின் அழகுமிக்க நடைக்கு அன்னத்தின் நடையைப் போல இருக்கும் என்று உவமை கூறுவர் தமிழ்க் கவிஞர். பஞ்சவடியில் இராமனும் சீதையும் தனித்து இருந்த சமயத்தில் சீதையின் நடைக்குத் தோற்ற ஓர் அன்னம் ஒதுங்கிச் சென்றது. அதை இராமன் பார்த்தான்; சீதையின் நடையையும் ஒப்பிட்டுப் பார்த்தான். பார்த்ததும் மகிழ்ச்சியின் உச்சத்தில் புன்னகை செய்தான்.

ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையளாகும்
சீதைதன் நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான்

இவ்வாறு கம்பர் கவித் தமிழில் சித்திரப்படுத்திக் காட்டுவார். திருக்குற்றாலக் குறவஞ்சியில் வசந்தவல்லி என்ற மங்கையின் நடையை, திரிகூடராசப்பக் கவிராயர் வருணிப்பார். "இட்ட அடிநோக, எடுத்த அடி கொப்பளிக்க' என்று கம்பர் பாடியதாக ஒரு பாடல் உள்ளது. ஒரு பெண் "கொட்டிக் கிழங்கு' விற்று, நடைபயின்றதைக் காட்டுவது இப்பாடல் வரி.

திருவள்ளுவரும் காமத்துப் பாலில் பெண்களின் நடைக்கு இரண்டு(1115, 1120) குறள்களில் அழகு கூட்டுவார்.

இராஜகேசரி என்று ஒரு மன்னன். அவனுடைய தலைநகரில் புலவர் ஒரு நிகழ்வைக் கண்டார். வீதிவழியே கன்னிப்பெண் ஒருத்தி நடந்து சென்றாள். அவளுடைய அழகான அங்கங்கள் நடக்கும்போது குலுங்கின. நடையிலே ஓர் ஒயில் தன்மை இருந்தது. அந்த நடையழகைப் பார்த்து மன்னர்களும், தொடர்ந்து நடக்கத் தொடங்கினர். "மன்னரும் மகிழ்ந்து மெச்சும் அழகு' என்று புலவர் ஒருவர் அக்கன்னியை ஓவியப்படுத்துகிறார்.

நடந்தாள் ஒரு கன்னி மாராச கேசரி
நாட்டில், கொங்கைக் குடந்தான் அசைய
ஒயிலாய்; அதுகண்டு கொற்றவரும் தொடர்ந்தார்.

இதற்கும் மேலாக உலகையும், உலக பாசங்களையும் வெறும் "மாயை' என்று வெறுத்துத் தள்ளிய துறவிகள் கூட, அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில், தங்களுடைய தவயோகங்களை எல்லாம் கைகழுவிவிட்டுப் புறப்பட்டு விட்டார்களாம்!

சந்நியாசிகள் யோகம் விட்டார்
சுத்த சைவரெல்லாம் மடந்தான் அடைத்துச்
சிவபூஜையும் கட்டி வைத்தனரே!

எல்லோரும் பெண்ணின் நடையழகைச் சுவைத்தனர். புலவரோ பின்தொடர்ந்து சென்றவர்களைப் பார்த்து சுவைத்த செய்தி பாடலாக மிளிர்கிறது. இவை அனைத்தையும் சுவைத்துத் தொகுத்தவர் எழுத்துலச் சித்தர் கு.அழகிரி சுவாமிகளாவார்.

திருஞானசம்பந்தரும் உமாதேவியாரின் நடையழகை வருணிப்பார். தேவியாரின் பெருமித நடைக்குப் பெண் யானையும், நடையின் மென்மைக்கு அன்னத்தையும் உவமையாக்கி ""மாதர் மடப்பிடியும் மடஅன்னமும்'' என்ற தேவாரப் பாடலில், பெண்களின் நடையழகை உச்சப்படுத்தி உணர்த்துவார்.

கலித்தொகையில் ஒரு காட்சி. கண்டார் உயிருண்ணுங்காரிகை கன்னி ஒருத்தி வீதியில் நடந்து வருகிறாள். அதைக்கண்ட இளைஞன் ஒருவன் உள்ளத்தையும் உயிரையும் அவளிடம் பறிகொடுக்கிறான். அவளை ஒரு யானைக்கு ஒப்பிட்டு உவப்படைகிறார் புலவர். நீர்த்துறைக்குச் செல்லும் அந்த யானையின் வரவை, மக்கள் யாரும் எதிர்சென்று பலி ஆகாதவண்ணம், பறை அறிந்து அனைவர்க்கும் தெரிவிக்கும் வழக்கம் அரசரின் ஏற்பாடாகும். அதுபோல "இவள் வருகிறாள்' என்ற முரசறைந்து மக்கட்குத் தெரிவிக்காத "இறையே தவறுடையான்' என்கிறார். இவை போன்ற நற்றமிழ்ப் பாடல்கள் பலவும் பெண்களின் நடையழகைச் சித்திரிக்கின்றன.

புலவர் சா.குருசாமி தேசிகர்


[You must be registered and logged in to see this image.]

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்களின் நடையழகு

Post by krishnaamma on Thu Feb 12, 2015 12:21 am

புன்னகை..நல்ல பகிர்வு சிவா ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: பெண்களின் நடையழகு

Post by சிவனாசான் on Thu Feb 12, 2015 4:28 am

என்னே எடுத்து காட்டுள்..பதிவிற்கு அழகு செய்வது பல எடுத்துகாட்டுகள் ..அன்பே பாராட்டுகிறேன்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

Re: பெண்களின் நடையழகு

Post by ayyasamy ram on Thu Feb 12, 2015 10:27 am

[You must be registered and logged in to see this image.]
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30940
மதிப்பீடுகள் : 9526

View user profile

Back to top Go down

Re: பெண்களின் நடையழகு

Post by M.Saranya on Thu Feb 12, 2015 3:37 pm

avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

Re: பெண்களின் நடையழகு

Post by ஜாஹீதாபானு on Thu Feb 12, 2015 4:06 pm
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29925
மதிப்பீடுகள் : 6895

View user profile

Back to top Go down

Re: பெண்களின் நடையழகு

Post by மாணிக்கம் நடேசன் on Fri Feb 13, 2015 2:23 pm

சின்ன யானை நடையை தந்தது, உண்மையா?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum