ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 SK

ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
 ayyasamy ram

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
 ayyasamy ram

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

கீ பட இசைவெளியீட்டு விழா: பிரபல நடிகரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி!
 பழ.முத்துராமலிங்கம்

ஜுனியர் விகடன் 24.01.18
 Meeran

கமல்ஹாசனின் கவிதைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 பழ.முத்துராமலிங்கம்

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 Raje87

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 sugumaran

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
 ayyasamy ram

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்?
 பழ.முத்துராமலிங்கம்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 பழ.முத்துராமலிங்கம்

காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
 thiru907

TNPSC GENERAL KNOWLEDGE MATERIALS
 ayyasamy ram

படங்கள் பதிவேற்றம் --தடங்கல்கள்
 ayyasamy ram

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 பழ.முத்துராமலிங்கம்

இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 heezulia

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அழகுச் சிலை... டாலர் மழை!

View previous topic View next topic Go down

அழகுச் சிலை... டாலர் மழை!

Post by Powenraj on Tue Feb 17, 2015 8:34 pm

நயன்தாரா, அனுஷ்காக்களை ஸ்ரீதிவ்யா, எமி ஜாக்சன் ஓரம்கட்டியது கோலிவுட் டிரெண்ட். அப்படி ஏஞ்சலீனா ஜோலி, ஜெனிஃபர் லோபஸ்களை சைடு அடித்திருக்கும் அகில உலக டிரெண்ட் என்ன? ஹாலிவுட்டின் ஹிட்ஹாட் அழகிகள் இங்கே...

கிறிஸ்டீன் ஸ்டீவர்ட்:

ஹாலிவுட்டின் ஸ்வீட் க்யூட் தேவதை. 'ட்வைலைட் சாகா’ படம் மூலம் கோடிக்கணக்கில் ரசிகர்களைக் குவித்த கிறிஸ்டீன், ஹாலிவுட்டின் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகள் பட்டியலில் தொடர்ந்து மூன்று வருடங்களாக முதல் இடத்தில் இருப்பவர். ஏஞ்சலீனா ஜோலிபோல எவ்வளவு வயதானாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் கிறிஸ்டீனின் ஆசை. ட்வைலைட் ஹீரோ ராபர்ட் பேட்டின்சனுடனான டேட்டிங் பிரேக்-அப்பில் முடிந்த பிறகு, பொண்ணு இப்போ செக்ஸி சிங்கிள்!
ஜெனிஃபர் லாரன்ஸ்:

ஹாலிவுட்டில் இப்போது எல்லோருக்கும் 'ஜெனி... ஜெனி...’ எனத்தான் கேட்கிறதாம். 'எக்ஸ்மேன்’ மூலம் அறிமுகமாகி, 'ஹங்கர் கேம்ஸ்’ மூலம் நட்சத்திர அந்தஸ்து பிடித்தவர் ஜெனிஃபர். 'சில்வர் லைனிங்ஸ் ப்ளேபுக்’ பட நடிப்புக்காகச் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்ற இவரின் பெர்சனல் வாழ்க்கை, ஒரு சினிமாவுக்கான ட்விஸ்ட்களைக் கொண்டது. ஜெனிஃபரின் அம்மா, கட்டட வேலை பார்த்தவர். குழந்தை களுக்கான க்ரஷ்ஷில் வேலைபார்த்துக்கொண்டே நடிப்புப் பயிற்சி பெற்றார் ஜெனிஃபர். இவரது ஐ-கிளெட் கணக்கை ஹேக் செய்த கில்லாடிகள், ஜெனிஃபரின் பெர்சனல் படங்களை இணையத்தில் வெளியிட, கொதித்தெழுந்தவர், 'திருட்டுத்தனமாக வெளியான அந்தப் படங்களைப் பார்ப்பதுகூட சட்டப்படி குற்றம். நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்’ என திகில் கிளப்ப, 'அழகு இருக்கிற அளவுக்கு, கோபமும் இருக்கே’ என சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்தது ஹாலிவுட்!

செலீனா கோமஸ்:

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான செலீனாவின் குழந்தை முகமும், புஸுபுஸு கன்னமும் டீனேஜ் பருவத்தில் 'அதுக்கும் மேல’ ஈர்த்தது. 'செலீனா பாடியது’ என வந்த பாப் பாடல்கள் அதிரிபுதிரி ஹிட். 'செலீனா’ என்ற பெயருடன் வந்த பெர்ஃப்யூம்கள் உலகின் டாப் செல்லிங் பிராண்ட். இத்தனை பிரபலத்தையும் பாப் பாடகர் ஜஸ்டின் பீபருடனான காதலில் காலிசெய்தார் செலீனா. அந்தக் காதல், மோதலில் முடிந்தது. தோல், ரத்த செல்கள், இதயத்தைப் பாதிக்கும் 'லூப்பஸ்’ எனும் நோயால் செலீனா பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற சமீப செய்தி, அழகி மீது ஆறுதல் பார்வையைக் குவித்திருக்கிறது!

மேகன் ஃபாக்ஸ்:

'அபாயகரமான வளைவு நெளிவுகளால்’ பிரபலமான கனவுக்கன்னி. 'டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ சீரிஸ் படங்களில் இயந்திர அட்டகாசங்களுக்கு இடையே அழகியின் 'இடை’ அள்ளியது மாஸ் அப்ளாஸ். 'சின்ன வயசுல இருந்தே நான் ரொம்ப ஆக்ரோஷமான பொண்ணு. அதனால எனக்கு தோழிகளே கிடையாது. பாய் ஃப்ரெண்ட்ஸ் மட்டும்தான்’ என்கிற மேகன், 18 வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். இப்போது 28 வயதில் மேகனுக்கு இரண்டு குழந்தைகள். 'தான் ஒரு பைசெக்ஸுவல்’ என அறிவித்திருக்கும் மிகச் சில பிரபலங்களில் மேகனும் ஒருவர். 'பை செக்ஸுவல்னா?’ எனக் கேட்கிறீர்களா? போய் சுட்டி டி.வி பாருங்க பாஸ்!

வனீஸா ஹட்ஜென்ஸ்:

தில் ஜில் அழகி. நடிகை ப்ளஸ் பாப் பாடகி வனீஸா. அரைகுறை, நிர்வாணப் படங்கள் இணையத்தில் வெளியானால், 'அதில் இருப்பது நான் இல்லை’ என மறுப்பார்கள் ஹீரோயின்கள். ஆனால், தன் அந்தரங்கப் படங்கள் வெளியானபோது, 'அந்தப் படங்கள் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எடுத்தது. அப்படி என்னைப் படங்கள் எடுக்க அனுமதித்ததற்காக வருந்துகிறேன்’ என  அறிக்கைவிட்டார் வனீஸா. 'படுக்கை அறைக் காட்சிகளில் நடிக்க நான் மறுத்ததால், 'ஏற்கெனவே உங்கள் முழு நிர்வாணப் படங்களை உலகம் பார்த்துவிட்டது. இன்னும் ஏன் நீங்கள் மறுக்க வேண்டும்?’ எனக் கிண்டலாகக் கேட்கிறார்கள். அப்போதுதான் எனக்குக் கோபம் கோபமாக வந்தது. இதனால் பல பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளையும் இழந்திருக்கிறேன். ஆனாலும், என் சுயமரியாதையை இழக்க மாட்டேன்’ என்பது வனீஸாவின் வாக்கு!

எம்மா ஸ்டோன்:

இந்த அழகுச் சிலை எதைத் தொட்டாலும் கொட்டும் டாலர் மழை. வருடத்துக்கு மூன்று படங்களில் நடிக்கும் எம்மா, உலகின் முன்னணி அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ரெவ்லானின் விளம்பர மாடல். சூப்பர் ஹீரோ படங்கள் முதல் காமெடி படங்கள் வரை ஹிட் படங்கள் அனைத்திலும் எம்மா சூப்பர் ஹீரோயின். ஆனாலும், 'ஒருவருடைய கவனத்தைச் சிதைக்கும் விஷயத்தில் ஃபேஸ்புக் முதல் இடத்தில் இருக்கிறது. அதனால் ஃபேஸ்புக்கில் நான் இல்லை’ என போல்டாக அறிவித்திருக்கிறார் எம்மா.

ஆனி ஹாத்வே:

அசட்டை அழகி. அழகாகத் தெரிவதற்காக கொஞ்சமும் மெனக்கெட மாட்டார். ஆனாலும், அழகு அள்ளும். நடிகை கம் தயாரிப்பாளர். வேலன்டைன்ஸ் டே, ஆலிஸ் இன் வொண்டர்லேண்டு, லவ் அண்ட் அதர் ட்ரக்ஸ் என காதலும் காதல் சார்ந்ததுமான படங்களில் ஆனியை உருகி உருகிக் கொண்டாடியது ஹாலிவுட். ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரைக் காதலித்தார் ஆனி. ஆனால், அந்தக் காதலர் நடத்திய தொண்டு நிறுவனம் பல நாடுகளில் முறைகேடுகளில் ஈடுபட, அவர் கைதுசெய்யப்பட்டார். காதலர் கைது தொடர்பாக ஆனியும் பல முறை போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதனாலேயே, 'இந்தத் தொழிலதிபர்களே வேண்டாம்டா சாமி’ என சுதாரித்து, சக நடிகர் ஆடமைத் திருமணம் செய்து, 'ஆனி ஹேப்பி அண்ணாச்சி’ என ஸ்டேட்டஸ் போடுகிறார்!

ஒலிவியா வைல்ட்

காந்தக் கண்ணழகி. 'தி கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ படம் மூலம் ஹாலிவுட்டுக்குள் நுழைந்த ஒலிவியாவின் கண்களுக்கு இன்னமும்  கிறங்கிக்கிடக்கிறது ஹாலிவுட். சைவப் பிரியரான ஒலிவியாவை உலகின் 'செக்ஸி வெஜிடேரியன்’ எனத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தனது 19-வது வயதில் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த ஆள் இல்லாத பேருந்துக்குள் தன் காதலனை மணந்துகொண்டதாக பரபரப்பு ஏற்படுத்தினார் ஒலிவியா. ஆனால், இப்போது ஒலிவியாவின் பார்ட்னர் இன்னொருவர்!

ஸ்கார்லெட் ஜோஹான்ஸன்:

ஹாலிவுட்டின் செக்ஸ் சிம்பல். 10 வயது முதலே ஹாலிவுட் படங்களில் நடித்துவரும் ஸ்கார்லெட், தனது 30-வது வயதில்தான் பீக் புகழை எட்டியிருக்கிறார். 'ஈஸ்கொயர்’ எனும் பிரபல பத்திரிகையின் 'உலகின் செக்ஸி பெண்’ விருதை இரண்டு முறை வென்ற ஒரே நடிகை இவர்தான். இரண்டு திருமணங்கள், ஒரு குழந்தை என குடும்ப வாழ்க்கையிலும் பரபர அத்தியாயங்களைக் கடந்திருக்கிறார். உலகமே அறியாமல் ரகசியமாக குழந்தை பெற்றுக்கொண்டு பின்னர், 'இவள்தான் என் மகள்’ என அறிவித்தவர் ஸ்கார்லெட்.
கீரா நைட்லே:

'மேட் இன் லண்டன்’ அழகி. 'ஸ்டார் வார்ஸ்’, 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’, 'பெண்டு இட் லைக் பெக்காம்’ என ஹாலிவுட்டின் பிரபல ஹிட் படங்களில் கீராதான் கவர்ச்சி ஜீரா. இங்கிலாந்தின் பிரபல பத்திரிகைக்கு கீரா நிர்வாண போஸ் கொடுக்கச் சம்மதித்தபோது விதித்த நிபந்தனை, மிகவும் சுவாரஸ்யமானது. 'படம் எடுத்த பிறகு ஃபோட்டோஷாப் மூலம் அதை மெருகேற்றக் கூடாது. பெண்ணின் உடல் என்பது போர்க்களம் போன்றது. அதை அழகுபடுத்துகிறேன் என்ற பெயரில் சிதைக்கக் கூடாது. உள்ளது உள்ளபடி வெளியிட வேண்டும்’ என்றார். செயற்கைப் பூச்சு எதுவும் இல்லாமல் வெளியான கீராவின் இயற்கை அழகு, அவருக்கு முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு ரசிகர்களைக் குவித்தது... அழகிய வரலாறு!

நன்றி-ஆனந்த விகடன்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: அழகுச் சிலை... டாலர் மழை!

Post by krishnaamma on Wed Feb 18, 2015 12:27 am

ம்ம்............... சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: அழகுச் சிலை... டாலர் மழை!

Post by M.Saranya on Thu Feb 19, 2015 4:48 pm

தகவலுக்கு நன்றி.....
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 878

View user profile

Back to top Go down

Re: அழகுச் சிலை... டாலர் மழை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum