ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஆண் வேடமணிந்த மணமகள்; பெண் வேடமணிந்த மணமகன்: விநோத திருமணம்
 ayyasamy ram

பாகிஸ்தானில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம், பேஸ்புக், டுவிட்டர், யூட்யூப் போன்ற இணையதளங்களும் முடக்கம்
 ayyasamy ram

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

உபயோகமான வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் !

View previous topic View next topic Go down

பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் !

Post by krishnaamma on Tue Feb 17, 2015 10:25 pmருத்திராட்சம் என்பதன் பொருள் சிவனின் கண். பிரபஞ்ச சக்தியின் மிக சக்திவாய்ந்த வெளிப்பாடு என்று கூறப்படுகின்றது. ருத்திராட்சம் பூமிக்கும் தேவலோகத்திற்கும் தொடர்பை ஏற்படுத்துகிறது. ருத்ராட்ச மரத்தின் பழத்தின் விதைகளே ருத்ராட்ச கொட்டை.

அதிகமாக இந்தோனேஷியாவிலும், ஜாவா, சுமித்ரா போன்ற இடங்களிலும், நேபாளத்திலும் இது விளைகிறது. ருத்திராட்சம் பயன்படுத்திய 48 மணி நேரத்திலேயே நோய், மன அமைதி, பிரச்சனைகள் இவற்றில் முன்னேற்றம் தெரிய வரும் என்றாலும், நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே அணிவது நல்லது.

ருத்ராட்சத்தின் மேல் கோடுகள் ஆரஞ்சு பழ சுளைகளில் இருப்பதுபோல் இருக்கும். இதனை ஒவ்வொரு முகம் என்பர். முகத்திற்கு ஏற்ற தெய்வ அம்சமும், பலன்களும் கொண்டதாகக் கருதப்படுகின்றது. ஒருமுக ருத்திராட்சம் மிகவும் உயர்ந்தது, அரிதானது. மனித சமூகத்திற்கான அரிய பொக்கிஷம்.

ருத்ராட்சங்களின் அரசன், பரமசிவனாகவே கருதப்படுகின்றது. காமம், மோகம், லோபம் போன்ற மாயைகளிலிருந்து இது விடுபட வைக்கிறது. தொடர் பிறப்பிலிருந்து விடுவிக்கும். உலகத்திலும், மேல் உலகத்திலும் வெற்றியைத் தரும்.

* ஏக முக ருத்திராட்சம் அணிபவருக்கு அநேக வெற்றிகளைத் தரும்.

* தியானத்திற்கு உகந்தது.

* குற்றங்களை நீக்குவது

* வாழ்க்கை விடுதலைத் தருவது

* மன அமைதி தருவது

* சக்தி அளிப்பது

* தலை உச்சியில் உள்ள ‘சகஸ்ர சக்கரத்தோடு’ தொடர்புடையது. இதன் மந்திரம் ‘ஓம் நம சிவாய’ அனைத்து கிரகங்களையும் கட்டுப்படுத்துவது. இரண்டு முக ருத்திராட்சம் அர்த்தநாரீஸ்வரரை குறிக்கும். சக்தி, சிவன் இரண்டையும் ஒருங்கே கொண்டது.

ஒற்றுமை, மகிழ்ச்சி இவற்றினைக் குறிக்கிறது. உமா, மஹேஸ்வரன் இருவரின் ஆசியினையும் ஒருங்கே பெற்றுத்தருவது. சிவ புராணம், பகவத் கீதை, ஸ்கந்த புராணம் இப்படி புராணங்களின்படி இருமுக ருத்திராட்சம் உயர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

* இரு முக ருத்திராட்சம் உறவுகளில் ஒற்றுமை, நல் உறவு, குறிப்பாக கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஏற்படுத்தும்

* குழந்தைச் செல்வத்திற்கு அருள் செய்கிறது

* பயத்தினை நீக்குகிறது

* மன நிறைவு, அமைதி தருகிறது

* சுவாதிஷ்டான சக்கரத்துடன் தொடர்புடையது

* சிறு நீரக, கருப்பை, குடல், தசை நோய்களை நீக்குகிறது - மூன்று முக ருத்திராட்சம் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் குறிக்கிறது. இது அணிபவருக்கு வெற்றியினைத் தரும். பூர்வ ஜென்ம கர்மாக்களை நீக்கும்

* அழிவுப்பூர்வ எண்ணங்களை நீக்கும்

* ஜீரண உறுப்புகளுக்குச் சக்தி அளிக்கிறது

* மன உளைச்சலை நீக்குகிறது

* முயற்சிகளில் வெற்றித்தருகிறது

* மணிப்பூரக சக்கரத்தோடு தொடர்புடையது நான்கு முக ருத்திராட்சம் பிரம்மா, சரஸ்வதியினைக் குறிக்கின்றது. அறிவு, ஞானம் பெற இது பெரிதும் உதவுகின்றது. விழிப்பு, தூக்கம், கனவு, உயர்நிலை இவை நான்கிலுமே பூரண உணர்வோடு இருக்கும் நிலையினையும் அறியாமை என்ற இருட்டினையும் போக்குகின்றது.

* ஆன்மீகமும், ஞானமும் உயரும்

* படிப்பு, படிப்பித்தல், மேதை, எழுத்தாளர், ஆய்வு படிப்பவர்களுக்கு மிகவும் சிறந்தது.

* தைராய்டு சுரப்பி நன்கு வேலை செய்ய உதவுகிறது.

* சுவாச மண்டலம் வேலை செய்ய சிறந்தது.

* விசுக்தி சக்ராவுடன் தொடர்புடையது.

* பாடுபவர்கள், மேடைப் பேச்சாளர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர். 5 முகம் கொண்ட பஞ்சமுக ருத்திராட்சம் ருத்திரனைக் குறிக்கின்றது. புத்தி விருத்தி அளிக்கின்றது. நீண்ட ஆயுளை கொடுக்க வல்லது. துர் மரணத்தினை தவிர்க்கின்றது.

ஆன்மிக வலிமையினையும், உள்ளுணர்வினையும் தருகின்றது. உறுதியான மனநிலையினைக் கொடுக்கின்றது. விசுக்தி சக்கரத்தோடு தொடர்புடையது. ஆறுமுக ருத்திராட்சம் ஆறுமுகன், கார்த்திகேயனைக் குறிக்கின்றது. இதை அணிந்தால் ஆசைகள் நிறைவேறும். இளமையோடு இருப்பார்கள்.

* ஞானம் அளிக்கும்.

* சக்தி, வேகம் அளிக்கும்.

* கீழ்த்தர ஆசைகள், கர்வம் நீங்கும்

* பொறுமை கூடும்

* ஒழுக்கம் ஏற்படும்

* தீய குணங்கள் நீங்கும்

* மூலாதார சக்கரத்தோடு தொடர்புடையது

* தலைமை, காவல், நிர்வாகம் போன்ற துறைகளில் வெற்றி அளிக்கும் சப்த முக அதாவது ஏழு முக ருத்திராட்சம் மகாலட்சுமியைக் குறிக்கின்றது. வளம், செழுமை, உயர் அதிகாரம் இவற்றினைக் குறிக்கின்றது. லட்சுமியை நாராயணனோடு சேர்த்துதான் வழிபட வேண்டும்.

.....................................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் !

Post by krishnaamma on Tue Feb 17, 2015 10:29 pm* ஏழு முக ருத்திராட்சம் மகிழ்ச்சி, செல்வம் அளிக்கும்

* தீயனவற்றை நீக்கும்

* உடல்நலம் நன்கு இருக்கும்

* மணிப்பூரக சக்கரத்தோடு சம்பந்தப்பட்டது.

எட்டு முக ருத்திராட்சம்:-

இதனை மகா கணபதியாக வழிபடுகின்றனர். இதை அணிந்தால் தடைகளை நீக்கி வெற்றியினை பெறலாம்.

* எதிரிகளை பலமிழக்கச் செய்யும்.

* கெட்ட கனவு, நுரையீரல் நோய், பாதம், தோல் போன்ற பாதிப்புகளுக்கு இது பரிந்துரைக்கப்படுகின்றது.

* சர்ப்ப தோஷத்தினை நீக்குகிறது

* ஜோதிடர்களுக்குச் சிறந்தது

* நரம்பு கோளாறுகள், பாம்பு பயம் போன்றவற்றிற்கும் உகந்தது. தொழில் முன்னேற்றம் அளிக்கிறது.

ஒன்பது முக ருத்திராட்சம்:

நவ துர்க்கையின் அம்சமாக கூறப்படுகின்றது. பைரவர், யமன், கபில முனி இவர்களைக் குறிப்பிடுவதாகக் கூறப்படுகின்றது. நவக்கிரகத்தில் கேது பகவானால் ஏற்படும் தீய பாதிப்புகளிலிருந்து காப்பதாகக் கூறப்படுகின்றது.

மனச்சோர்வு, சக்தியின்மை, தோல்வி இவைகளை நீக்குகின்றது. செல்வம், சிறந்த வாழ்க்கை இவற்றினை அளிக்கின்றது. சிகப்பு கயிற்றினால் இடது கையிலோ, கழுத்திலோ அணிவிக்கப்படுகின்றது.

பத்துமுக ருத்திராட்சம்:

பகவான் லட்சுமி நாராயணனைக் குறிக்கின்றது. விஷ்ணு பக்தர்களுக்கு உகந்தது. தாழ்வு மனப்பான்மையை நீக்குகிறது. நவக்கிரகங்களுக்கும் ஏற்றது. சுவாதிஷ்டமான சக்கரத்துடன் தொடர்புடையது.

பதினொரு முக ருத்திராட்சம்:

பதினொரு ருத்ரர்களால் ஆளப்படுவது. 1000 அஸ்வமேத யாகம் செய்த பலனைத் தருகிறது. ஐம்புலன்களை அடக்க உதவுகிறது. பனிரெண்டு முக ருத்திராட்சம் சூரியனைக் குறிப்பது. சூரியனைப் போல் பிரகாசிப்பும், ஞானம் அளிப்பது. வாத, கப நோய்களுக்கு உகந்தது. ஜீரண உறுப்புகளுக்கு சக்தி அளிக்கும்.

புகழோடு இருப்பர். பதிமூன்று முக ருத்ராட்சத்தினை இந்திரன், காமதேவன் என்பர். உலக ஆசைகளை நிறைவேற்றித் தருவது. குண்டலினி சக்தியினை உயர்த்துவது. குழந்தை வரம் வேண்டுவோருக்கு உதவும். பதினான்கு முக ருத்ராட்சத்தினை தெய்வ மணி என்கின்றனர். பகவான் ஆஞ்சநேயரால் ஆளப்படுவது.

இதை அணிபவர் உறுதியான மனம் கொண்டவராக இருப்பார்கள். உடல் தசை, எலும்பு இவற்றினை உறுதியாய் வைத்திருப்பது. நவக்கிரகங்களின் தோஷங்களை நீக்குகிறது. மூட்டு வலி, கூடிய எடை, மூலம் இவற்றினை குணப்படுத்த உதவுவதாகக் கூறப்படுவது. மூலாதார சக்கரத்தோடு தொடர்பு உடையது.

பதினைந்து முக ருத்திராட்சம் பசுபதி நாதரின் பிரதி பலிப்பாகக் கருதப்படுகின்றது. இருதய சக்கரத்தோடு தொடர்புடையது. சோகம், தனிமை, இருதய நோய்களுக்குத் தீர்வானது. தன்னை உணரச் செய்வது. பாச, பந்தங்களில் ஏற்படும் மன வலியினை நீக்குகிறது. ஆரோக்கியமான உறவுகளை ஏற்படுத்துகிறது.

ஆஸ்துமா, அலர்ஜி போன்றவைகளையும் நீக்குகிறது. பதினாறு முக ருத்ராட்சத்தினை மகா ம்ருத்யுஞ்ச சிவனின் அம்சமாகப் பார்க்கின்றனர். மரண பயத்தினை நீக்குகிறது. இந்த ருத்ராட்சத்தினை அணிவது தினமும் 1,25,000 முறை ம்ருத்யுஞ்ச ஜபத்தினை ஜபித்ததன் பலனாகின்றது என்று கூறுகின்றனர்.

கடும் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றது. சுவாதிஷ்டான சக்கரத்துடன் தொடர்பு கொண்டது. பதினேழு முக ருத்திராட்சம் விஸ்வகர்மாவால் ஆளப்படுகிறது. இதனை அணிபவர் அனைத்துச் சக்திகளோடும், திடீர் செல்வத்தோடும் இருப்பார்கள். காத்யாயினி தேவி துர்கையின் ஆளும் அம்ச தேவியின் ஸ்வரூபமாக 17 முக ருத்திராட்சம் கருதப்படுகின்றது.

பதினெட்டு முக ருத்திராட்சம் பூமாதேவியின் ஸ்வரூபமாகக் கருதப்படுகின்றது. பூமியில் ஏக போக சுகங்களோடு வாழ இந்த ருத்திராட்சம் அருளுவதாகக் கூறப்படுகின்றது. சோம்பேறித்தனம், சோர்வு இவற்றினை நீக்குகின்றது. கால், முட்டி வலிகளை நீக்க உதவுகிறது. பூமா தேவியினைப் போன்ற பொறுமையினை அளிக்கிறது.

பத்தொன்பது முக ருத்திராட்சம் பகவான் நாராயணனோடு சம்பந்தப்பட்டது. கடுமையான நோய்களை நீக்கவும், நல்ல வாழ்க்கைத் துணையினை பெறுவதற்கும் உதவுகின்றது. உயர் சக்திகளைப் பெற உதவுகின்றது. முன்வினைப் பாவங்களை நீக்க துணையாகின்றது என மிகவும் உயர்வாக இந்த ருத்ராட்சத்தினைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

இருபது முக ருத்திராட்சம், பிரம்மாவால் ஆளப்படுகிறது. கலைகளுக்கு உகந்தது. தொழில், வியாபாரம் புரிவோருக்கு உதவுகிறது. அஷ்ட (எட்டு) திக்கிலும் பலம் பெற்றுத் தருகிறது. இருபத்தோரு முக ருத்திராட்சம் மிகவும் அரிதானது. குபேரனால் ஆளப்படுகிறது. இதனை ஒரு ஏழை அணிந்தாலும், செல்வம் பெறுவார் என்று கூறப்படுகின்றது.

இது தவிர, இரண்டு ருத்திராட்சம் ஒட்டினாற் போல் இருப்பது சிவ பார்வதியாகக் கருதப்படுகின்றது. நல்ல குடும்ப உறவும், தியான முன்னேற்றமும் அளிக்கவல்லது. ருத்ராட்சத்தினைப் பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டதில், இதில் காந்த சக்தியும், மின் சக்தியும் இருப்பதினை நிரூபித்துள்ளனர். ருத்திராட்சம் பயன்படுத்துபவர்கள் அசைவம், மது, புகை இவைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

நன்றி : மாலைமலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் !

Post by விமந்தனி on Tue Feb 17, 2015 10:43 pm

மிகவும் அருமை கிருஷ்ணாம்மா. அறிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள். பகிர்வுக்கு நன்றி.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum