புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_m10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_m10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10 
4 Posts - 27%
சிவா
”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_m10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_m10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10 
310 Posts - 42%
heezulia
”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_m10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_m10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_m10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_m10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_m10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_m10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10 
6 Posts - 1%
prajai
”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_m10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_m10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10 
4 Posts - 1%
manikavi
”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_m10”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 22, 2015 2:25 pm

'கொரில்லா’வில் தொடங்கி 'கண்டி வீரன்’ வரையிலும் தமிழ் இலக்கியப் பரப்பின் தனித்துவக் குரல். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இயங்கி, பின்னர் அதில் இருந்து விலகி, புலிகளை இப்போதுவரை கடுமையாக விமர்சித்து வருபவர். சமகாலத்தின் சிறந்தகதைசொல்லிகளில் ஒருவரான ஷோபா சக்தி, இப்போது கதாநாயகன். 'தீபன்’ என்ற பிரெஞ்சு திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். பாரீஸில் இருந்து ராமேஸ்வரத்தில் கடைசிக்கட்டப் படப்பிடிப்புக்காக வந்திருந்தவரிடம் பேசினோம்...
”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  3lGkLoTwSzmIOJRvwB9J+p44a
''பிரான்ஸில் புகழ்பெற்ற இயக்குநர் ஜாக் ஓடியார் இப்போது இயக்கும் படம் 'தீபன்’. ஈழத்தின் யுத்தச் சூழலில் இருந்து தப்பித்து புலம்பெயர்ந்து பிரான்ஸுக்கு வரக்கூடிய மூன்று பேரைப் பற்றியது. அகதியாக வந்து புது நாட்டில் புதுச் சூழலில் எப்படி வாழ்கிறார்கள், அதற்காக எப்படிப் போராடுகிறார்கள் என்பது கதை. அதில்தான் நான் நடித்திருக்கிறேன். திடீரெனக் கூப்பிட்டார்கள். திரைக்கதையில் வேலைபார்க்க அழைக்கிறார்கள் என நினைத்துதான் போனேன். ஆனால், நடிக்கச் சொல்லிக்கேட்டு, நான் நடித்து, படமே முடிந்துவிட்டது.''

''நடிப்பை எப்படிச் சமாளித்தீர்கள்?''

'நான் குழந்தைப் போராளி மட்டும் இல்லை; குழந்தை நடிகனும்கூட. பத்து வயதில் இருந்தே கூத்துகளில் நடித்திருக்கிறேன். பிரான்ஸுக்குச் சென்ற பிறகு நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தப் படத்தில் நடிப்பதற்காக, ஒருவரை நியமித்து நடிக்கப் பயிற்சி கொடுத்தார்கள். முதல் தடவையாக வாழ்க்கையில் பிடித்த வேலையை, சம்பளம் வாங்கிக்கொண்டு செய்கிறேன்.''

''இது என்ன எழுத்தாளர்கள் சினிமாவுக்குள் நுழையும் காலமா?''

'இலக்கியவாதிகள் சினிமாவுக்குச் செல்லும்போது சினிமாவை ஓர் அங்குலமேனும் முன்னே நகர்த்த வேண்டும். ஆனால், இலக்கியத்தில் அவ்வளவு தரத்தைப் பார்க்கும் நமது எழுத்தாளர்கள், சினிமாவில் அனைத்து சமரசங்களுக்கும் ஆட்பட்டு, மலினமான திரைப்படங்களில் பணிபுரிகிறார்கள். வாயைத் திறந்தால் 'ரஜினி சார்’, 'மிஷ்கின் சார்’ என வணிக சினிமாக்காரர்களாக மாறிவிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை எந்தவிதமான வணிக சமரசத்துக்கும் ஆட்படாத படங்களில் மட்டும்தான் வேலைபார்ப்பேன். இந்த அடிப்படையில் இதுவே என் கடைசிப் படமாகவும் இருக்கக்கூடும்.''

''தமிழீழப் போராட்டம் இனி என்ன ஆகும்?''

''இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை. ஆயுதப் போராட்டங்கள் உருவான காலகட்டம் வேறு. இன்று தலைமுறைகள் மாறிவிட்டன. நாம் 80-களில் சிந்தித்ததுபோல இப்போதைய தலைமுறையினர் சிந்திப்பது இல்லை. உலகம் முழுக்க இருந்த புரட்சிகரச் சூழல், தேசிய விடுதலைப் போராட்டங்கள், மார்க்ஸியச் சூழல்கள் இன்றைக்கு இல்லை. இலங்கையில் மட்டும் அல்ல... உலகம் முழுவதுமே இதுதான் நிலை.

சமீபத்தில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மகிந்தா ராஜபக்‌ஷே தோற்கடிக்கப்பட்டு, மைத்ரிபால சிறிசேன வெற்றிபெற்றுள்ளார். இதற்கு முந்தைய தேர்தல்களில் தமிழ் மக்களின் வாக்களிக்கும் உரிமையின் மீது செல்வாக்கு செலுத்தும் சக்திகளாக விடுதலைப் புலிகள் இருந்தனர். ஆனால், இந்த முறை ராஜபக்ஷேவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற சுயமுடிவை எடுத்து தமிழ் மக்கள் வாக்களித்தனர். இப்போது மக்களின் மனநிலை, நாம் நினைத்தது நடந்துவிட்டது என்பதுதான். தங்களின் செல்வாக்கு வரம்புக்கு உட்பட்டு ராஜபக்ஷேவைத் தோற்கடித்ததன் மூலம், மனதில் இருந்த கோபத்தின் சிறுபகுதியைத் தணித்துக்கொண்டார்கள். ஆனால், மைத்ரிபால சிறிசேன வெற்றிபெற்றதன் மூலம் தமிழர்களுக்கு எந்த நன்மையும் நடந்துவிடப்போவது இல்லை. சில தமிழர்களுக்கு அதிகாரத்தைச் சுவைக்கக் கொடுப்பதாலேயே, தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்துவிடாது.'

''மக்கள் போராட்ட இயக்கங்களின் செயல்பாட்டுக்குக்கூட இனி சாத்தியம் இல்லையா?''

”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  WUZAAVFT0iUZODKKfvSb+p44c

'அத்தகைய மக்கள் போராட்ட இயக்கத்தைக் கட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு லாயக்கு இல்லை; அவர்களிடம் அப்படி ஒரு நோக்கமே இல்லை. கூட்டமைப்பினர், இந்த நாடாளுமன்ற அமைப்பு முறைக்குள் பதவிகளைப் பெற்று அதிகாரத்தைச் சுவைப்போரின் அங்கமாகவே மாறிவிட்டனர். ஆனால், இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத்தான் காலம், காலமாக மக்கள் ஆதரித்தும் வந்துள்ளனர். ஒருவகையில் பார்த்தால் விடுதலைப் புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எஃப், ப்ளாட் போன்ற ஆயுதம் தாங்கிய இயக்கங்களைவிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரவாயில்லை. அவர்கள் யாரையும் கொலை செய்யவில்லை. இந்த இயக்கங்கள் இவ்வளவு உயிர்களைக் கொடுத்து, இவ்வளவு மக்களைப் பலிகொடுத்து சாதித்தது என்ன? கொழும்பில் இருந்த ராணுவத்தை இழுத்துக்கொண்டுவந்து அல்லைப்பிட்டியில் விட்டதுதான் மிச்சம்.

இலங்கையில் தமிழர் தரப்பிலும் சிங்களர் தரப்பிலும் சேர்த்து இதுவரை மூன்று மிகப் பெரிய ஆயுதப் போராட்டங்கள் நடந்துள்ளன. மூன்றிலுமே ஆயுதம் தூக்கியவர்கள், மக்களுக்கு எதிராகத்தான் மாறினார்கள். அதனால் மக்களுக்கு ஆயுதப் போராட்டங்கள் மீது என்றென்றைக்கும் மறக்கவியலாத கசப்பான நினைவுகள்தான் மிஞ்சியிருக்கின்றன. நாம் விளைவுகளை வைத்துதான் ஒவ்வொன்றையும் மதிப்பிட வேண்டியுள்ளது. அப்படிப் பார்த்தால் ஆயுதப் போராட்டத்தைவிட தேர்தல் அரசியல் சிறந்தது.

நாங்கள் தப்பித்துவிட்டோம். ஆனால், யுத்தத்திலும் அதற்குப் பிறகும் அங்கு சிக்கிக்கொண்டிருக்கும் மக்களின் நிலைமை என்ன? பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக வேண்டும், மக்கள் வேலைக்குப் போக வேண்டும், சாப்பிட வேண்டும், உயிர் பயம் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும்... இதற்கு, சுமுகமான சமூக வாழ்க்கை வேண்டும். இதைத்தான் மக்கள் விரும்புகின்றனர். உலகத்திலேயே மிகக் கடுமையான ஆயுதப் போராட்டத்தை நடத்திப் பார்த்துவிட்டுத்தான், இந்த மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் கடும் சண்டை நடந்துகொண்டிருந்தபோது குரோஷியா அதிபர் சொன்னதை இங்கு நினைவுகூர்கிறேன்... 'பத்து நாட்கள் சண்டை நடத்தி தீர்வு காண்பதைவிட, பத்து ஆண்டுகள் பேச்சுவார்த்தை நடத்தலாம்’. அதை நான் வழிமொழிகிறேன்.''

''சரி... இப்போதைய நிலையில் என்னதான் தீர்வு?''

''பிரச்னை என ஒன்று இருந்தால் அதற்கு தீர்வும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. இலங்கையில் பிரச்னை மட்டும்தான் இருக்கிறது.''

''இது யதார்த்தம். ஆனால், தீர்வு என்னவாக இருக்க முடியும் எனக் கருதுகிறீர்கள்?''

''நமக்கு அறம் சார்ந்து ஆயிரம் எதிர்பார்ப்புகள் இருக்கலாம். ஆனால், எதையும் யதார்த்தத்தில் இருந்து பரிசீலிக்க வேண்டும். என்னளவில் இலங்கை - இந்தியா ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்கிறேன். இப்போது அமலில் உள்ள மாகாண சபை என்பது, அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதிதான். கிழக்கில் ஒரு தேர்தல் நடத்தி வடக்குடன் இணைந்திருப்பதா, தனித்திருப்பதா என்பதை முடிவுசெய்ய வேண்டும். இதற்கு அப்பால் ஜனநாயகத்துக்கும் நீதிக்குமான போராட்ட இயக்கங்கள் கட்டப்படத்தான் வேண்டும். அதற்கு முன்பு, மக்கள், ஆயுதப் போராட்டக் கலாசாரத்தில் இருந்து முற்றிலுமாக விடுபட வேண்டும். 'பிரச்னை என்றால் போட்டுத் தள்ளுவோம்’ என்ற மனநிலையில் இருந்து, 'பேச்சுவார்த்தைக்கு அழைப்போம்’ என்ற மனநிலைக்கு வர வேண்டும். தமிழர், சிங்களர் இரு தரப்பிலும் உள்ள ஜனநாயக சக்திகள் ஐக்கியப்படுவதன் வழியே, ஒரு நீண்ட காலத் தீர்வை நோக்கி நகர முடியும். அதற்கு, சிங்களப் பேரினவாதமும், கடும்போக்குத் தமிழ்த் தேசியவாதமும் கைவிடப்பட வேண்டும்.''

''நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றிய உங்கள் கருத்து என்ன?''

''அது ஒரு காமெடி. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கப்பட்டதும், 'செல்வி ஜெயலலிதா, பதவியை இழந்து சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு தமிழீழ மக்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது’ என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் அறிக்கை வெளியிட்டார். தமிழ் சினிமாக்காரர்கள், 'தெய்வத்துக்கே தண்டனையா?’ என ஃப்ளெக்ஸ் வைத்ததற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில், தமிழ் மக்கள் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றுகூட அவர் சொல்லவில்லை. 'ஸ்கைப்’பில் அமைச்சரவை நடத்திக்கொண்டிருக்கும் அவர்களால் மக்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை.''

”இலங்கையில் இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை!”  AlPtSTgORc6o97EI2eCl+p44d

''தமிழக அகதிகள் முகாம்களில் இருப்போர் மறுபடியும் இலங்கைக்கு அனுப்பப்படுவதைப் பற்றிய பேச்சுக்கள் இப்போது மேல் எழுந்துள்ளனவே?''

''லட்சக்கணக்கான தமிழ் மக்கள், முகாம்களில் வாழ்கிறார்கள். 30 வருடங்களுக்கு முன்பு இங்கு வந்தவர்களின் குடும்பங்களில் இங்கேயே பிறந்து வளர்ந்த ஒரு தலைமுறை உருவாகியிருக்கிறது. அவர்களுக்கு இதுதான் சொந்த நாடு. அவர்களை எப்படிக் கட்டாயப்படுத்தி வெளியேற்ற முடியும்? அப்படி அனுப்பினால் கிட்டத்தட்ட அது ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம்போல, தமிழ்நாட்டில் இருந்து சென்று இலங்கை மலையகப் பகுதிகளைச் செப்பனிட்டு தேயிலை, காபி தோட்டங்களாக மாற்றியவர்களை மறுபடியும் அள்ளிக்கொண்டுவந்து தமிழகத்தில் தள்ளியதைப்போலதான் இருக்கும். அப்போது இலங்கையில் இருந்து தமிழகம் வந்த மக்களை மலையகத்தில் இருந்து அழைத்து வந்த ரயிலுக்கு 'அழுகை கோச்’ எனப் பெயர். அந்த அளவுக்கு மக்கள் அந்த மண்ணோடு ஒன்றிப்போய் இருந்தார்கள். அதே போன்ற நிலைமைதான் இங்கும். மீண்டும் இலங்கைக்குச் செல்லும் வாய்ப்பைப் பயன்படுத்துவதும் நிராகரிப்பதும் மக்களின் விருப்பம். பல ஐரோப்பிய நாடுகளில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தாலே, குடியுரிமை கொடுத்துவிடுகிறார்கள்!''

நன்றி-ஆனந்த விகடன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Feb 22, 2015 3:56 pm

ராஜ பக்சொவுக்கு எப்ப சாவு மணி அடிக்கப் போராங்க.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 23, 2015 5:15 pm

அந்த படம் எப்போது வெளிவரும்? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக