ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 ஜாஹீதாபானு

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

தமிழ்த்துறை வாழ்த்து
 VEERAKUMARMALAR

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பனை மரங்களைக் காக்க புதிய சட்டம் வேண்டும்.

View previous topic View next topic Go down

பனை மரங்களைக் காக்க புதிய சட்டம் வேண்டும்.

Post by சிவா on Mon Feb 23, 2015 2:46 amபனை மரங்களைக் காக்க சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருபதாவது:-

கதர் மற்றும் கிராமத்தொழில் வாரியம் அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் சுமார் 5 கோடி பனை மரங்கள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இது ஒட்டு மொத்த இந்தியாவிலும் காணப்படும் பனைகளில் பாதி அளவு ஆகும். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே பனை மரங்களின் மூலம் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. பனை மரத்தின் அனைத்து உறுப்புகளும் மக்களுக்கு பயன் தரக்கூடியவை ஆகும்.

ஆனால், தமிழகத்தின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டுள்ள பனை மரங்கள் பல்வேறு காரணங்களால் இப்போது வேகமாக அழிந்து வருகின்றன. வறட்சி, கருவேல மரங்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி உள்ளிட்ட இயற்கையான காரணங்களால் பனை மரங்கள் ஒருபுறம் அழிந்து வருகின்றன. இன்னொருபுறம் செங்கல் சூளைகளுக்கான முதன்மை எரிபொருளாக பனைமரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இதனால் காய்த்துக்கொண்டிருக்கும் மரங்கள் கூட வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி, வேளாண் விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவதும் பனைமரங்களுக்கு ஆபத்தாகியிருக்கிறது.

பனைகளைப் பாதுகாப்பது கடினமான பணி இல்லை. பனையிலிருந்து போதிய அளவில் இப்போது வருவாய் கிடைக்காததால் தான் அதை பாதுகாப்பதில் பலரும் அக்கறை காட்டவில்லை.எனவே, பனையைக் காப்பதுடன், அதை நம்பியிருப்பவர்களுக்கு அதிக வருமானத்தையும், வேலை வாய்ப்பையும் உருவாக்கி தர வேண்டும். சந்தன மரம், தேக்கு மரம் இணையாக பனை மரத்தை அறிவிக்க வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவின் அனுமதி பெற்றால்தான், அதை வெட்ட முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். இதற்காக சட்டப்பேரவையில் புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பனை மரங்களைக் காக்க புதிய சட்டம் வேண்டும்.

Post by சிவா on Mon Feb 23, 2015 2:47 am

செங்கல் சூளைக்கு வெட்டப்படும் பனை மரங்கள்: அழிந்து வரும் தமிழரின் அடையாளத்தை காப்பாற்ற அரசுக்கு கோரிக்கை

உலகின் மூத்த மொழி தமிழ். தமிழின் எழுத்துக்கள் முதலில் பதியப்பட்டது பனைஓலையில்தான். இத்தையை முக்கியத்துவம் வாய்ந்த பனைமரத்தின் உயிருக்கு இன்று ஆபத்து நேர்ந்திருக்கிறது.

பனைமரம் தமிழர்களின் அடையாளம், தமிழர் வாழும் பகுதிகளில் மட்டுமே பனைமரங்களும் வாழுகிறது அல்லது தமிழர்களின் மூதாதையர்கள் வாழும் பகுதியில் மட்டுமே பனைமரங்களும் இருக்கின்றது.

தமிழகத்தில், மலேசியாவில், ஈழத்தில், மோரீசியஸ் தீவில், தென்னாப்பிரிக்காவில் என்று தமிழர்கள் வாழும் இடங்களில் மட்டுமே பனைமரமும் வளருகிறது.

இலங்கையில் பனை வளர்ச்சித்துறை என்று ஒரு துறையும் அதற்கு தனி ஒரு அமைச்சரையே நியமனம் செய்து பனை மரத்தின் பயனை மக்களுக்கு கொடுக்கிறது இலங்கை அரசு.

மலேசியாவில், பனை மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணை இன்று உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் உணவு எண்ணையாக பயன்படுகிறது. பாம்ஆயில் என்று சொல்லப்படும் இந்த எண்ணை தான் நம் ஊரில் கிடைக்கும் அனைத்து என்னையிலும் கலந்துள்ளது.

சங்க காலம் முதல், தமிழரின் வாழ்வில் பனைமரம் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. பனங்கருக்கு என்று சொல்லப்படும், சிறு மரங்களை உடைக்கும் போது அதில் கிடைக்கும் பச்சை குருத்து உண்பதற்கு சுவையாகவும் சத்தானதாகவும் இருக்கும்.

கொஞ்சம் வளர்ந்து பனை மரமானதும் அதில் கிடைக்கும் பனை ஓலை, வீடுகள் மேயவும், படுப்பதற்கும், உட்காருவதற்கும், பண்டங்கள் கட்டுவதற்கும் தேவையான பாய்கள் செய்ய பயன்பட்டது. கடுமையான வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக இந்த பனை ஒலைகள் கொடுக்கப்பட்டு வந்தது. இப்போதும் கூட பனை ஓலையில் செய்யப்பட்ட விசிறிகளில் வீசும் போது குளுமையான காற்று கிடைக்கும்.

பனைமரம் பாலை விட்டு காய்க்க தொடங்கினால், அந்த பாலையிளிருந்து பதநீர் எனும் தெலுவு கிடைக்கும், அதே தெலுவில் சுண்ணாம்பு அடிக்காமல் விட்டால் அது சுவையானதாகவும், அதே நேரம் கொஞ்சம் போதையுடன் கூடிய இயற்கையான கள் என்ற பானம் கிடைக்கும்.

கொஞ்சநாள் கள்ளு இறக்கிய பின்னர் வளரும் பாளையில், பனங்காய் காய்க்கும், இந்த காய்களில் தான் குறிப்பிட்ட பருவத்தில் நொங்கு கிடைக்கும்.

அதற்கு அடுத்த கட்டமாக, காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும் முற்றிய பணங்காயிலிருந்து சதை பகுதியை கத்தியால் சீவி எடுத்து வேகவைத்து உண்ணலாம்.

அதற்கு பின்னர், பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும், பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும், கொஞ்ச நாட்கள் போனால் கொட்டைக்குள் உருவாகும் சீப்பை கிடைக்கும், இந்த சீப்பை குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும்.

அதை இன்னும் கொஞ்சநாள் விட்டால் பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இப்படி மனித வாழ்வில் உணவுத் தேவைக்கு மட்டுமில்லாமல், வீடுகள் கட்ட வெட்டுக்கை, விட்டம், ஓடுகள் பாதிக்கும், பனை வாரைகள் கொடுத்தது பனைமரம்.

பனை மரத்திலிருந்து அறுத்து எடுக்கப்படும் பனம்பட்டையை வெய்யலில் கொஞ்சம் வாடிய பின்னர் உரித்து எடுக்கப்படும் நார் முன்பு கட்டுகள் கட்டவும், கால்நடை தீவனங்கள் கட்டி அடுக்கிவைப்பதர்க்கும், ஓலை வீடுகளை அமைக்கவும், பண்டங்கள் கட்டுப்போட்டவும் நார் பயன்பட்டது.

நம் வீட்டு பெண்கள் விறகு அடுப்பில் சமையல் செய்த காலங்களில், அடுப்பில் நெருப்பு பத்தவைக்க பெண்களுக்கு பனை மரத்தின் பன்னாடையும், வரண்டு போன ஓலைகளும் அவசியம் இருக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. காய்ந்து போன பனம்பட்டைகள், காய்ந்து போன நொங்கு காய்களும் அடுப்பு எரிக்க சிறந்த விறகாகப் பயண்பட்டது.

இப்படி மனித வாழ்கையின் ஒரு அங்கமாக இருந்த பனைமரம்... சமீபகாலத்தில் உருவாகிய இரும்பு, சனல், நைலான், எரிவாயு போன்ற நவீன சாதனங்கள் தோன்றியதால்... இக்கால மனிதர்களுக்கு பனைமரத்தின் அவசியமே இல்லாமல் போய்விட்டது.

எத்தனை வருடமானாலும் தண்ணீர் இல்லாமலேயே வளரும் தனமையுடைய பனைமரம், காடு, தோட்டம் என வித்தியாசம் இல்லாமல் வயல் ஓரங்களிலும், வேலி ஓரங்களிலும் விவசாயிகள் வைத்து வளர்த்தார்கள்.

சமீப காலமாக இதன் பயன்பாடு இல்லாமல் போனதாலும், வருடம் ஒருமுறை பனைமரத்தில் வளர்ந்துள்ள ஓலைகளை வெட்டி, பட்டையை அறுத்து சுத்தம் செய்து சிரை எடுத்து விடுவதற்கு மட்டும் ஒரு மரத்திற்கு ஐம்பது ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது.

அப்படி சிரை எடுக்காவிட்டால், மரத்தில் உள்ள பட்டைகள் எல்லாம் வரண்டு காய்ந்து இலை தலைகள் விழுந்து பனைமரத்திலேயே தொங்குவதால், பாம்புகள் கூட குடியிருக்க தொடங்கிவிடும் ஆபத்து உள்ளது. பெரும்பாலும் அணில், எலி போன்றவைகள் கூடு கட்டிவிட்டால் அதில் இருந்து கொண்டு நிலத்தில் விளையும் தானியக் கதிர்களை வெட்டிக் கொண்டுபோய் விடும் என்பதால் பனைமரத்தில் ஓலையை வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில் பனைமரங்களை வளர்க்கும், எந்த ஒரு விவசாயிக்கும் பனைமரத்தால் எந்தவித பயனும் கிடையாது, ஆனால் வருடத்திற்கு ஒரு மரத்திற்கு குறைந்தது ஐம்பது ரூபாயாவது செலவு செய்தால் தான், பனைமரத்தை சுத்தமாக வைத்திருக்க முடியும் என்ற நிலை உள்ளது.

இவ்வளவு செலவு செய்தாலும், ஐம்பது அறுபது வருடம் வளர்ந்த ஒரு பனைமரத்தை வியாபாரியிடம் விற்றால் இருநூறு ரூபாய் முதல் முன்னூறு ரூபாய் வறை மட்டுமே காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு பனை மரத்துக்கும் விவசாயி செய்துள்ள செலவை கணக்கிட்டால் இந்த காசு எதற்கும் உதவாது என்பதால், எல்லா இடங்களிலும் உள்ள பனைமரங்களை விவசாயிகள் வெட்டி செங்கல் சூளைக்கு அனுப்பி வருகிறார்கள்.

நகரங்களில், ஒரு பக்கம் மரம் வைக்கவும், அவற்றை வளர்க்கவும் அரசு பல கோடி ரூபாய்களை செலவு செய்கிறது. ஆனால், மறுபக்கம் கிராமங்களில் உள்ள விவசாயிகள், தாங்கள் நிலங்களில் உள்ள கெட்டுப்போன கரியமிலவாயு போன்ற காற்றை சுத்தமான தூய பிரானவாயுவாக மாற்றிக்கொண்டிருக்கும் கற்பகவிருச்சமான பனை மரங்களை கட்டுபடியாகாத விலைக்கு வெட்டி விற்பனை செய்கிறார்கள்.

இந்த முரண்பாட்டின் காரணம் என்ன...? இயற்கை ஆர்வலரும், மரங்கள் பற்றிய ஆய்வாளரும், கீழ் பவாணி பாசன விவசாயிகள் சங்க தலைவருமான நல்லசாமி அவர்களிடம் கேட்டோம்.

முதலில் ஒரு மரம் என்று இருந்தால், அதில் எதாவது உபயோகம் இருக்கவேண்டும்..., பனை மரத்தால் இன்றைய காலகட்டத்தில் உழவர்களுக்கு எந்த நேரடியான பயனும் கிடையாது, தவிர அவர்களுக்கு செலவுகள் தான் வருகிறது. அதனால் பனைமரங்களை வெட்டி விற்கிறார்கள்.

அதை எப்படி தடுப்பது...? அந்த மரத்தில் எதாவது லாபம் கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும், அதற்கு ஒரே வழி... கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.

இதனால், பனைமரமும் வளரும், பனைமரம் வளர்க்கும் விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும், எந்த விதமான இரசாயன கலப்பும் இல்லாத, அருந்தும் மனிதனின் குடலையும், வயிற்றையும் வேகவைக்காத... மிகவும் குறைவான போதையை கொடுக்கும், சத்தான கள்ளும் கிடைக்கும், கள் என்பது போதை பொருள் அல்ல... அது ஒரு வகை உணவுப்பொருள் தான்... அதை மது என்ற சொல்லுவதே தவறு...

இன்றைக்கு, இயற்கையான முறையில் உரம், யூரியா போடாத வயலில் விளைந்த நெல் என்றும் காய்கறி என்றும் சொன்னால் அதைத்தான் மக்கள் ஓடிப்போய் வரிசையில் நின்று வாங்குகிறார்கள். மக்களுக்கு இயற்கையின் மீது நம்பிக்கையும், செயற்கையின் மீது பயமும் வந்து விட்டது. இதற்க்கு காரணம் மனிதருக்கு வரும் புதிய புதிய நோய் தான்.

நோயுக்கு பயந்து இயற்கையின் பக்கம் போகும் மக்களுக்கு ஓன்று சொல்லுகிறேன், ஒரு துளி கூட பூச்சி மருந்து அடிக்காமல், உரம் போடாமல் சொல்லப்போனால் தண்ணீர் கூட விடாமல், சத்தான எருவும் போடாமல் இயற்கையில் தானாக விளையும் ஒரு காமதேனு பனை மரத்தில் உற்பத்தியாகும் பணம் பால் தான். அதை நம்முடைய மக்கள் குடிக விடாமல் பன்னாட்டு நிறுவனங்கள், நம்மூர் அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் தரகர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் கையூட்டு கொடுத்து நம் நாட்டிலேயே நம்முடைய மரத்தில் விளையும் பணம்பாலுக்கு தடை வாங்கி கொடுத்துள்ளார்கள்.

கள் குடிப்பதால் உடலுக்கு தீமை என்று யார் நிரூபித்தாலும் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக குடுக்க கள் இயக்கம் தயாராக உள்ளது. தமிழகத்தில் கள் இறக்கி விற்கவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல..., தமிழகத்தில் இறக்கப்படும் கள்ளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவாவது அரசு முன்வரவேண்டும்.

பனை மரத்தின் அவசியத்தை வலியுறுத்தி வரும் ஜனவரியில் கன்னியாகுமரி முதல் சென்னை வறை ஒரு பிரசார இயக்கம் தொடங்கி நடை பயணம் செல்ல ஏற்பாடு செயப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், பனைத் தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பனை மரத்தின் அவசியம் பற்றி மக்களுக்கு சொல்ல இருக்கிறார்கள்.

இந்தியாவில் எட்டுக்கோடி பனைமரங்கள் இருப்பதாக கணக்கிடபட்டுள்ளது, அதில் ஐந்து கோடி பனைமரங்கள் தமிழகத்தில் தான் உள்ளன.... தமிழ நாட்டில், எதை இழந்தாலும் பனை மரத்த காப்பாற்றியாக வேண்டும் என்றார் நல்லசாமி.

பனை என்பது வெறும் மரம் மட்டுமல்ல.... தமிழரின் அடையாளம்.

பெ.சிவசுப்ரமணியம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பனை மரங்களைக் காக்க புதிய சட்டம் வேண்டும்.

Post by M.M.SENTHIL on Mon Feb 23, 2015 3:17 amM.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: பனை மரங்களைக் காக்க புதிய சட்டம் வேண்டும்.

Post by krishnaamma on Mon Feb 23, 2015 2:01 pm

'கள்' இறக்கணும் என்று சொல்லிறாரே ஒழிய , பாம் ஆயில் செய்வோம், பனை வெல்லம் தயாரிப்போம், பனம் கல்கண்டு செய்வோம் என்று சொல்லலை சோகம் .....இருக்கும் சாராயக்கடை போதாது என்று ப்ரெஷ் வேறு...கருமம் ..........;(


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: பனை மரங்களைக் காக்க புதிய சட்டம் வேண்டும்.

Post by M.Saranya on Mon Feb 23, 2015 2:02 pm

என் சிறு வயதில் பனம்பழம் சாப்பிட்ட ஞாபகம்.. ஆனால் இன்று எங்கள் ஊரில் பல அரிய மரங்கள்(வேங்கை மரம், இலவம் பஞ்சு மரம், தைல மரம், பனை மரம்) காணாமல் போய்விட்டன.

எப்படி எங்கள் விவசாய மக்களுக்கு இதன் அருமை புரியாமல் போனது என்பதில் எனக்கு மிகுந்த வருத்தம்...அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்....


avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: பனை மரங்களைக் காக்க புதிய சட்டம் வேண்டும்.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum