ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

தமிழரின் தொன்மை
 sandhiya m

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

View previous topic View next topic Go down

அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Post by Powenraj on Tue Feb 24, 2015 2:02 pm

நீதிபதி குமாரசாமி காட்டம்!

29 நாட்கள் கடந்தும் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணை அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா தரப்பு சார்பாக வழக்கறிஞர்கள் சுதந்திரம், குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், அன்புக்கரசு, பன்னீர்செல்வம், திவாகர், நாகராஜன், பரணிகுமார், செல்வக்குமார், தனஞ்செயன், மகேஷ்வரன் இவர்களோடு எம்.பி நவநீதகிருஷ்ணனும் ஆஜராகி வருகிறார்கள். தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் சிறப்புப் பணி அமர்த்தல் ஐ.ஜியான குணசீலனும், டி.எஸ்.பியான சம்பந்தமும், இவர்கள் தரப்பு சார்பில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும் ஆஜராகி வருகின்றனர்.''1 ரூபாய் சம்பளம் விளம்பரத்துக்காக வாங்கினாரா?'

குமார்: போயஸ் கார்டன், அங்குள்ள கூடுதல் கட்டடம் மற்றும் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் உள்ள வீடுகள் பராமரிப்புப் பணிகளின் செலவை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் ரூ.13,65,31,900 என தவறாக மதிப்பீடு செய்திருக்கிறார்கள். இது அரசியல் ரீதியாகப் போடப்பட்ட பொய்யான வழக்கு.

நீதிபதி: தொடர்ந்து பொய் வழக்கு என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால், உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்பதற்கு இதுவரை எந்த ஓர் ஆதாரத்தையும் கொடுக்காமல் வாய்மொழியாகவே பொய் வழக்கு என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பில் 259 சாட்சியங்களின் வாக்குமூலத்தைக் கொடுத்திருக்கிறார்கள். உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் விதமாக 2,341 ஆவணங்களைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால், நீங்கள் 99 சாட்சிகளையும் 385 ஆவணங்களையும் மட்டுமே தாக்கல் செய்திருக்கிறீர்கள். தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கான ஆதாரங்கள் திருப்திக​ரமாக இல்லை.

குமார்: நாங்கள் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் வகையில் ஆதாரங்களை சமர்ப்பித்து இருக்கிறோம்.

நீதிபதி: தமிழ்நாட்டில் முதல்வருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது?

குமார்: அதுபற்றி எனக்குத் தெரியாது.

நீதிபதி: (நவநீத​கிருஷ்ணனைப் பார்த்து) உங்களுக்கெல்லாம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது?

நவநீதகிருஷ்ணன்: ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய். அது தவிர, நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும்போது ஒரு நாளைக்கு ரூ.2,000 கொடுக்கிறார்கள்.

நீதிபதி: அதனால்தான் நாடாளுமன்றத்தில் வாதிடாமல் நீங்கள் கையெழுத்தைப் போட்டுவிட்டு வந்துவிடுகிறீர்களோ?

நவநீதகிருஷ்ணன்: இல்லை யுவர் ஆனர். எங்க அம்மா கடுமையான உத்தரவு போட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும் ஆரம்பம் முதல் இறுதி வரை இருந்து கவனிப்பதோடு, நிறை, குறைகளை சுட்டிக் காட்டி பேச வேண்டும்.

நீதிபதி: (குமாரைப் பார்த்து) உங்கள் மனுதாரர் முதல்வராக இருந்தபோது எவ்வளவு சம்பளம் வாங்கினார்?

குமார்: ஒரு ரூபாய் சம்பளம் வாங்கினார்.

நீதிபதி: அதுதான் சம்பளம் கொடுக்கிறார்களே வாங்கிக்கொள்ள வேண்டியதுதானே. 1 ரூபாய் சம்பளம் விளம்பரத்துக்காக வாங்கினாரா? சம்பளம் வாங்காமல் வேலை பார்த்தால், பொது ஊழியராகக் கருதப்பட மாட்டார்கள். ஆனால், மாதம் ஒரு ரூபாய் வீதம் 24 ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதால், பொது ஊழியராகவே கருதப்படுவதால் இந்த நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். 1 ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு எப்படி ரூ.66 கோடி மதிப்புள்ள சொத்துகள் வந்தன? அதைத் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அதை மறுப்பதற்கு உங்கள் தரப்பில் எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை.

குன்ஹா வழங்கிய தீர்ப்பையே நானும் வழங்குவேன்!

குமார்: சுதாகரன் திருமணத்துக்கு ரூ.6.45 கோடி செலவு செய்துள்ளதாகத் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் குற்றம்சாட்டியுள்ளார்கள். அதை கீழமை நீதிமன்ற நீதிபதி தன் தீர்ப்பில் ரூ.3 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த இரண்டு மதிப்பீடுகளும் தவறானது. ஜெயலலிதா ரூ.29 லட்சம்தான் செலவு செய்தார். அவர் அ.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் முதல்வர் என்ற முறையில் கலந்துகொள்ளும் திருமணம் என்பதால், அலங்கார வரவேற்பு வளைவுகள், பேனர்கள், மின்விளக்கு அலங்காரங்கள், வாழைத்தோரணங்கள், உணவு பரிமாறுதல் உட்பட பல செலவுகளை கட்சித் தொண்டர்களும் மணப்பெண்ணின் தாய் மாமா ராம்குமாரும் தந்தை நாராயணனும் செய்தார்கள். அதற்கு வருமானவரித் துறையில் அவர்கள் கணக்கும் காட்டி இருக்கிறார்கள். அதன் மொத்த செலவு ரூ.2.36 கோடி. அதற்கும் ஜெயலலிதாவுக்கும் சம்பந்தமில்லை.

நீதிபதி: (குமாரைப் பார்த்து) இத்தனை கோடி செலவு செய்து இவ்வளவு பிரமாண்​டமாக திருமணம் செய்ய சுதாகரன் என்ன அ.தி.மு.க தொண்டரா இல்லை, ஜெய​லலிதாவின் மகனா?

குமார்: மௌனம்.

நீதிபதி: இந்த வழக்கு கடந்த மாதம் 1-ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது.

மணிசங்கர்: இல்லை. ஜனவரி 5-ம் தேதியில் இருந்து நடைபெறுகிறது.

நீதிபதி: சரி, ஜனவரி 5-ம் தேதியில் இருந்தே வைத்துக்கொண்டாலும் இன்று வரை 28 நாட்கள் வாதிட்டு வருகிறீர்கள். கீழமை நீதிமன்ற நீதிபதி தவறாகத் தீர்ப்பு வழங்கியுள்ளதாகக் குற்றம்சாட்டுகிறீர்கள். ஆனால் அவர் வழங்கியுள்ள தீர்ப்பில், உங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தவறு என்று இந்த 28 நாட்களில் உங்களால் ஆதாரத்தோடு உறுதிப்படுத்த முடியவில்லை. இப்படி இருந்தால் நான் மட்டும் என்ன செய்ய முடியும்? கீழமை நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பையே நானும் உறுதிசெய்ய வேண்டிய சூழ்நிலையாகத்தான் இருக்கிறது. ஜெயலலிதா ரூ.66 கோடிக்கு சொத்துகள் சேர்க்கவில்லை என்று சொல்வதற்கு உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லையே? இப்படியே வாய்மொழியாக பேசி நீதிமன்ற நேரத்தை வீணாக்காமல், வாதத்துக்குத் தேவையான ஆதாரங்களைக் கொடுங்கள். இல்லையென்றால், நானே ஆடிட்டரை நியமனம் செய்து கணக்குகளைச் சரி பார்க்கிறேன். இதில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் வாதமும் அவசியமில்லை. நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்பு வழங்கிவிடுவேன். இது தவிர, எனக்கு வேறு வழி தெரியவில்லை.

குமார்: அடுத்த விசாரணையின்போது எங்கள் தரப்பு நியாயத்தை அட்டவணையாகக் கொடுக்​கிறேன்.

நீதிபதி: கீழமை நீதிமன்ற நீதிபதி எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்கிறீர்கள். ஆனால் கட்டட கட்டுமானச் செலவுகளில், ரூ.13 கோடியில் 20 சதவிகிதத்தைக் குறைத்துத்தான் எடுத்துக்​கொண்டிருக்கிறார். 1994ம் ஆண்டுக்குரிய கட்டுமானச் செலவுகளின் விவரங்களை சாதாரணமான பில்டிங் கான்ராக்டர்களிடம் கேட்டால்கூட கொடுத்துவிடுவார்கள்.

சுற்றி வளைத்து ஜெயலலிதாவுக்காகவே வாதிடுகிறீர்கள்!

(சுதாகரன், இளவரசி சார்பாக அவர்களது வழக்கறிஞர் சுதந்திரம் வாதிட்டார்.)

சுதந்திரம்: அட்டவணை 2-ல் உள்ள 306 சொத்துப் பட்டியலில் ஏ3 சுதாகரனுக்கும், ஏ4 இளவரசிக்கும் தனிப்பட்ட சொத்துகள் 63 அயிட்டங்கள் உள்ளன. சுதாகரனின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.1,38,31,961ம், இளவரசியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.6,91,81,200ம், சுதாகரனும் இளவரசியும் பங்குதாரராக இருந்த மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், லெக்ஸ் பிராபர்டிஸ், ரிவர்வே அக்ரோ உட்பட 6 கம்பெனிகளின் சொத்து மதிப்பு ரூ.4,60,24,439 எனவும் ஆக மொத்தம் ரூ.12.90 கோடி என தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை குறிப்பிட்டுள்ளது. இந்தப் பணம் ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது என்றும் ஜெயலலிதாவின் பினாமிகளான சுதாகரன், இளவரசி பெயரில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் ஜெயலலிதாவுக்கும் என் மனுதாரர்களாகிய சுதாகரன், இளவரசிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நீதிபதி: மறைமுகமாக ஏ1 ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவே வாதிட்டுக்​ கொண்டிருக்​கிறீர்கள். உங்கள் மனுதாரருக்காக வாதிடுங்கள்.

சுதந்திரம்: ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி கம்பெனிகள் என அனைவரின் சொத்துகளையும் பொதுவாகக் காட்டி இருப்பதால் ஏ1 ஜெயலலிதாவை மையமாக வைத்துத்தான் இந்த வழக்கை வாதிட முடியும்.

நீதிபதி: உங்கள் மீதுள்ள கேஸ் என்ன? ஊழல் தடுப்புச் சட்டம் 13(1)இ, கூட்டுச் சதி 120(பி), குற்றம் செய்ய உடந்தையாக இருத்தல் 109. இதன் அடிப்படையில்தான் தண்டனை வழங்கப்பட்டி​ருக்கிறது. இதைப் பற்றி தெளிவாகப் பேசாமல் பினாமி சட்டம், கம்பெனி சட்டம், வருமானவரிச் சட்டம் போன்றவற்றையே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.

சுதந்திரம்: என் மனுதாரர்கள் அரசு ஊழியர்கள் கிடையாது. அதனால் அவர்களுக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 13(1)இ வராது. அதேபோல கூட்டுச் சதியோ, குற்றம் செய்ய உடந்தையாகவோ இருந்ததில்லை. அதனால் என் மனுதாரர்களுக்கு 13(1)இ-யும், 120(பி) மற்றும் 109-ம் பொருந்தாது.

நீதிபதி: ஊழல் தடுப்புச் சட்டம் 13(1)இ பற்றி விளக்குங்கள்?

சுதந்திரம்: ஊழல் தடுப்புச் சட்டம் 13(1)இ, அரசு பொது ஊழியர்களுக்குத்தான் பொருந்தும். இந்த வழக்கில் ஏ1 ஜெயலலிதா​தான் அரசு பொது ஊழியர். அதனால் இதைப்பற்றி வாதிட்டால், நீங்கள் ஜெய​லலிதாவுக்​காக வாதிடுவதாகச் சொல்வீர்கள்.

நீதிபதி: (குமாரைப் பார்த்து) ஏ3 சுதாகரன், ஏ4 இளவரசி ஆகியோரின் தனிப்பட்ட வருமானம் என்ன, செலவுகள் என்ன, அதற்கு ஆதாரங்களைக் கொடுங்கள்?

குமார்: ஒவ்வொரு பாயின்டையும் ஆதாரங்களோடு விளக்கி இருக்கிறோம்.

நான் அமைதியாக இருந்துவிட்டு தீர்ப்பை வழங்க முடியாது!

நீதிபதி: நான் அமைதியாக இருந்துவிட்டு தீர்ப்பை வழங்க முடியாது. ஏன் உங்களிடம் இவ்வளவு கேள்விகளைக் கேட்க வேண்டும்?

சுதந்திரம்: நீங்கள் இதுபோன்ற கேள்வி​களைக் கேட்பதால்தான் உங்களுடைய மன​நிலையைப் புரிந்துகொண்டு நாங்கள் நன்றாக வாதிட முடிகிறது. ஆனால், வெளியில் உள்ள சில மீடியாக்கள் இந்த வாத, விவாதங்களைத் தவறான செய்திகளாக வெளியிட்டு வருகிறார்கள்.

நீதிபதி: அவர்களுடைய பணியை அவர்கள் செய்கிறார்கள். உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள். நீதிமன்றத்துக்கு வெளியில் நடப்பதைப் பற்றியெல்லாம் பேச வேண்டிய அவசியமில்லை. நாளை செவ்வாய்க்கிழமை சிவராத்திரி விடுமுறை.

சுதந்திரம்: மூச்சுவிட ஒரு நாள் விடுமுறை கிடைத்தது. நன்றாகப் படித்து வந்து வாதிடுவோம்.

புதிய கணக்குகளைக் காட்டக் கூடாது!

(சுதாகரன், இளவரசி ஆகியோரின் தனிப்பட்ட சொத்துகள், வருமானம், செலவினங்கள் பற்றிய விவர அட்டவணை தயாரித்து வழக்கறிஞர் சுதந்திரம் நீதிபதிடம் கொடுத்து வாதிட்டார்.)

சுதந்திரம்: ஏ3-யின் கணக்குகளைப் பற்றி விரிவாகப் பேசப் போகிறேன். தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் கொடுத்த சொத்துப் பட்டியல் 2வது அட்டவணையில் ஏ3-யின் தனிப்பட்ட சொத்துகள் 12 அயிட்டங்கள் இருக்கின்றன.

நீதிபதி: இதுபற்றி கீழமை நீதிமன்றத்தில் வாதிட்டு இருக்க வேண்டும். இது கீழமை நீதிமன்றம் இல்லை. மேலோட்டமாகவும் சுருக்கமாகவும் ஆணித்தரமாகவும் உங்கள் வாதத்தை வையுங்கள். அதற்கு முன்பு இதென்ன மஞ்சள் கலர் சீட், பச்சை கலர் சீட்?

சுதந்திரம்: மஞ்சள் கலர் சுதாகரனுடைய கணக்குகள், பச்சை இளவரசியோட கணக்குகள்.

நீதிபதி: இந்த அட்டவணையில் கடைசிப் பக்கத்தை விவரியுங்கள்.

சுதந்திரம்: தமிழக ஊழல் தடுப்பு போலீஸார், வழக்கு காலகட்டத்தின் இறுதியில் ஏ3யின் சொத்துகள் ரூ.1,19,89,961. இதில் ரூ.9,85,000ஐ கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஆக, வழக்கு காலகட்டத்தின் இறுதியில் ஏ3யின் சொத்து மதிப்பு ரூ.1,10,04,961. அதேபோல ஏ3 சுதாகரன், சூராஜ் மஸ்தா வேன் வாடகைக்கு விட்டதில் ரூ.12,86,474 கிடைத்தது. தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் ரூ.9,18,910 என்று குறிப்பிட்டுள்ளனர். அதனால் என் மனுதாரர் சுதாகரனின் வருமானத்தில் ரூ.3,67,564 சேர்க்க வேண்டும்.

நீதிபதி: திரும்பத் திரும்பச் சொல்கிறேன். இதுபற்றியெல்லாம் இங்கு சொல்ல வேண்டாம். கடைசிப் பக்கத்தில் உள்ள மொத்த மதிப்பீடுகளைச் சொல்லுங்கள். (கால்குலேட்டரை அழுத்தியவாரே) உங்கள் சொத்து மதிப்பு என்ன?

சுதந்திரம்: ரூ.1,10,04,961

நீதிபதி: செலவுகள் என்ன?

சுதந்திரம்: ரூ.74,68,058

நீதிபதி: 4 வருட வருமானம் என்ன?

சுதந்திரம்: ரூ.2,12,47,978. மொத்த சொத்து மதிப்பு = ரூ.1,10,04,961 ரூ.74,68,058 = ரூ.1,84,73,019. கை இருப்பு = ரூ.2,12,47,978 ரூ.1,84,73,019 = ரூ.27,74,959.நீதிபதி: ஓகே. வரிமானவரித் துறையின் ஆவணத்தைக் கொடுங்கள். அது வருமான​வரித் துறை கணக்கீட்டுக்கு ஒத்துப்போகிறதா?

சுதந்திரம்: (மௌனத்துக்குப் பிறகு) இல்லை.

நீதிபதி: பிறகு ஏன் இந்தக் கணக்குகளை எல்லாம் என்னிடம் சொல்கிறீர்கள். கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கணக்குகளைத்தான் இங்கேயும் தாக்கல் செய்ய வேண்டும். புதிதாக ஒரு கணக்கு தயாரித்து காட்டக் கூடாது. இந்தக் கணக்குகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

அம்மா முதல்வர்; மகனுக்கு அரசு டெண்டர்...

சுதந்திரம்: என் மனுதாரர் சுதாகரன் சூப்பர் டூப்பர் டி.வியின் இயக்குநராக இருந்தார்.

1994-ல் தஞ்சையில் 8வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய தமிழ்நாடு சுற்றுலாத் துறை வளர்ச்சிக் கழகத்தின் மூலம் முறையாக டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டரை சூப்பர் டூப்பர் டி.வி நிறுவனம் ரூ.42 லட்சத்துக்கு எடுத்தது. அதற்கு தமிழ்நாடு சுற்றுலாத் துறை வளர்ச்சிக் கழகம் அட்வான்ஸாக 39,60,000 ரூபாய் சூப்பர் டூப்பர் டி.வி நிறுவனத்துக்குக் கொடுத்தது.

நீதிபதி: அதற்கான ரசீதைக் கொடுங்கள்?

சுதந்திரம்: (வக்கீல் செந்தில் நீதிமன்ற ஆவணத்தில் தேடினார்!) அதைத் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் கைப்பற்றி எடுத்துப் போய் விட்டார்கள்.

நீதிபதி: கைப்பற்றியதற்கான கடிதத்தைக் காட்டுங்கள்.

சுதந்திரம்: (தேடினார்)

நீதிபதி: சுதாகரனின் அம்மா முதல்வர். தமிழ்நாடு சுற்றுலாத் துறை வளர்ச்சிக் கழகம் முதல்வரின் கீழ்தான் வருகிறது. மகனுக்கு அரசு டெண்டர் விட்டிருக்கிறார்கள் என்றால், அட்வான்ஸ் கொடுத்ததற்கான ரசீது கொடுக்காமலா இருந்திருப்​பார்கள்? அதைக் காட்டினால், மட்டுமே இந்தத் தொகையைக் கணக்கில் எடுத்துக்கொள்வேன்.

செந்தில்: (தமிழ்நாடு சுற்றுலாத் துறை வளர்ச்சிக் கழகம் வழங்கிய ரூ.39,60,000க்கான ரசீதை எடுத்து நீதிபதியிடம் கொடுத்தார்.)

நீதிபதி: இவ்வளவு பெரிய தொகைக்கு நீங்கள் ரசீது வைத்திருக்க வேண்டாமா?

சுதந்திரம்: தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் இந்த ரசீதை முத்திரையிடாத ஆவணமாக வைத்திருந்ததால், அதை எடுக்க முடியவில்லை.

நீதிபதி: இந்தத் தொகையை நான் ஏற்றுக்கொள்கிறேன். இப்படித்தான் ஆதாரங்களைக் கொடுத்து வாதிட வேண்டும்.

சுதந்திரம்: 100 சதவிகிதம் சரியாக யாராலும் வாதிட முடியாது. நீங்கள் அனுமதித்தால் இதற்கு ஒரு ஜோக் சொல்கிறேன்.

நீதிபதி: நீதிமன்றத்துக்குத் தேவையில்​லாதவை​களைப் பேசக் கூடாது.

சூப்பர் டூப்பர் டி.வி-யின் பண பரிமாற்றம்

சுதந்திரம்: என் மனுதாரர் சூப்பர் டூப்பர் டி.வி நிறுவனம், ராம்ராஜ் அக்ரோ, ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சைனோரா, இந்தோ தோஹா கெமிக்கல் உள்ளிட்ட பல நிறுவனங்களில் இயக்குநராக இருந்தார். அதில் சூப்பர் டூப்பர் டி.வி நிறுவனத்துக்கு பல சந்தாதாரர்கள் இருந்தார்கள். அவர்கள் மூலம் வந்த டெபாசிட் தொகை ரூ.5 லட்சத்தைத் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் ஏற்றுக்கொள்ளவில்லை. தஞ்சை வண்டம்பாளையத்தில் உள்ள ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் நிறுவனத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தலா ரூ.1,20,000 கட்டி ஷேர்கள் வாங்கினார்கள். 3 பேரும் வாங்கிய மொத்த ஷேர்கள் ரூ.3,60,000. ஆனால், தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் ரூ.18,42,000 என்று பதிவு செய்திருக்கிறார்கள். அதைக் கழிக்க வேண்டும்.

அதேபோல சூப்பர் டூப்பர் டி.வி நிறுவனம், பரணி பீஸ் ரிஸார்ட் நிறுவனத்துக்கு நிகழ்ச்சி தயாரித்துக் கொடுத்ததற்கு காசோலை மூலமாக ரூ.22 லட்சம் கொடுத்துள்ளது. அதை வருமானவரித் துறை தீர்ப்பாயம், ரூ.22 லட்சம் கொடுப்பதற்கான தகுதி பரணி பீஸ் ரிஸார்ட்டுக்கு இருக்கிறதா என்று ஆய்வு செய்து ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், அந்தத் தொகையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை!''

இவ்வாறு விவாதம் தொடர்ந்து வருகிறது!

வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

பவானி சிங் ஆடிட்டர் செல்போன் பறிமுதல்

நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்றுக்கொண்டு இருந்​தபோது பத்திரிகையாளர்போல வந்து நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தார் ஒருவர். திடீரென அவருடைய செல்போன் ரிங் ஆக... நீதிபதி, ''யாருடைய செல்போன் ரிங் அடிக்கிறது? அந்த செல்போனை பறிமுதல் செய்யுங்கள்'' என்றார். நீதிமன்ற ஊழியர்கள் அவரிடம் செல்போனை பறிமுதல் செய்தார்கள். இறுதியில் உணவு இடைவேளை விடும்போது செல்போன் வைத்திருந்தவரை நீதிபதி அழைத்து, ''நீங்கள் யார், எதற்காக வந்திருக்கிறீர்கள், நீதிமன்ற வாதத்தை ரெக்கார்டு செய்கிறீர்களா'' என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த அவர், ''நான் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஆடிட்டர். அவருடைய வருமானங்களைத் தணிக்கை செய்ய சில ஆவணங்கள் தேவைப்பட்டதால், அதை வாங்கிச் செல்ல வந்தேன். நான் ரெக்கார்டு எதுவும் செய்யவில்லை. ரிங் அடித்ததற்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்றதும் செல்போன் திரும்பக் கொடுக்கப்பட்டது.

நன்றி -ஜூனியர் விகடன்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Post by M.Saranya on Tue Feb 24, 2015 2:16 pm

அனல் பறக்கவே வாதம் நடை பெறுகிறது.....
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Post by விமந்தனி on Tue Feb 24, 2015 2:47 pm

அடேயப்பா..... நீதிபதி கறாராக தான் இருக்கிறார். நியாயமான தீர்ப்பு வழங்கினால் சரி.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Post by சிவா on Tue Feb 24, 2015 3:16 pm

இதுவரை குன்கா வழகிய தீர்ப்பு மேல்முறையீட்டில் வெற்றிபெற்றதில்லை!

இந்த வழக்கிற்கும் இவ்வாறே நிகழ வேண்டும் என்று விரும்புகிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Post by முனைவர் ம.ரமேஷ் on Tue Feb 24, 2015 3:27 pm

பணத்தொகையை கொஞ்சம் குறைச்சி குறைச்சி தான் பேசறாங்க...

அவரும் கொஞ்சம் கொறைச்சி 75 கோடியும் 3 ஆண்டு சிறை தண்டனையும் கொடுத்துவிடுவார் பாருங்களேன்...

இன்று பேனர்களைப் பார்தால் கோபம்தான் வந்தது...

சின்னதாக மக்களின் என்று எழுதிவிட்டு பெரியதாக முதல்வர் என்று ஜெயலலிதாவை போற்றி போற்றி பேனர்கள்... இவர்களின் பேனர்கள் மட்டும் மாதக் கணக்கில் வைத்து இருக்கிறார்கள்...
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 233

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Post by ராஜா on Tue Feb 24, 2015 3:46 pm

@சிவா wrote:இதுவரை குன்கா வழகிய தீர்ப்பு மேல்முறையீட்டில் வெற்றிபெற்றதில்லை!

இந்த வழக்கிற்கும் இவ்வாறே நிகழ வேண்டும் என்று விரும்புகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1122449 நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Post by கோ. செந்தில்குமார் on Tue Feb 24, 2015 4:42 pm

@சிவா wrote:இதுவரை குன்கா வழகிய தீர்ப்பு மேல்முறையீட்டில் வெற்றிபெற்றதில்லை!

இந்த வழக்கிற்கும் இவ்வாறே நிகழ வேண்டும் என்று விரும்புகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1122449

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Post by பாலாஜி on Tue Feb 24, 2015 4:45 pm

@சிவா wrote:இதுவரை குன்கா வழகிய தீர்ப்பு மேல்முறையீட்டில் வெற்றிபெற்றதில்லை!

இந்த வழக்கிற்கும் இவ்வாறே நிகழ வேண்டும் என்று விரும்புகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1122449

அப்படிதான் நிகழும் போல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Post by கோ. செந்தில்குமார் on Tue Feb 24, 2015 4:57 pm

அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

அய்யா...! சரியா சொன்னீர்கள். முதலில் அதை செய்யுங்கள்.
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: அரசு வழக்கறிஞர் தேவையில்லை, நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்புத் தந்துவிடுவேன்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum