ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 மாணிக்கம் நடேசன்

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 T.N.Balasubramanian

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Mon Mar 02, 2015 12:36 am

First topic message reminder :

பன்றிக் காய்ச்சல்: மக்களைக் கைவிடுகிறதா அரசு?

இது ‘H1N1 இன்ஃபுளுயென்சா வைரஸு’க்கும் மனிதர்களுக்குமான வாழ்வா, சாவா போராட்டம். கடந்த 2009-ல் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், தற்காப்புக்காக ஆண்டுதோறும் தன்னைத் தகவமைத்துக்கொண்டுவருகிறது. இப்படியாக 5 ஆண்டுகளில் அதன் வீரியம் பல மடங்கு பெருகிவிட்டது. அதன் மரபணு மாற்றத்தின் வேகமும் அதிகரித்துவிட்டது. பரிணாம வளர்ச்சியின் நியதி இது. ஆனால், அதை எதிர்கொள்ளும் வகையில் நமது அரசு இயந்திரம் பரிணாமம் அடைந்திருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

புள்ளிவிவரங்கள் ஏமாற்றுகின்றனவா?

ஏழை மக்களின் மீது அலட்சிய மனோபாவம் கொண்ட அரசு மருத்துவ அமைப்புகளைக் கொண்ட நம் நாட்டில், வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், எலிக் காய்ச்சல் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளத் திராணியில்லாமல் ஏழைகள் தவிக்கிறார்கள். தினம் தினம் பன்றிக் காய்ச்சலால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் உயர்ந்துகொண்டே போகிறது. “தனியார் மருத்துவமனைகளில் டெங்கு, பன்றிக் காய்ச்சல், எலிக் காய்ச்சல் ஆகியவற்றால் ஒருவர் இறந்தால், இறப்புக்குக் காரணமாக அதைக் குறிப்பிடக் கூடாது என்று உள்ளூர் நிர்வாகங்கள் வாய்மொழி உத்தரவிட்டிருக்கின்றன” என்கிறார் தனியார் மருத்துவமனை நிர்வாகி ஒருவர். இப்படியான சூழலில் அரசு தரும் புள்ளிவிவரங்களை நம்புவது அபத்தமாகவே அமையும். ஆகவே, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 16,235 பேர்; இறந்தவர்கள் 926 பேர் என்று அரசு தெரிவிக்கும் புள்ளிவிவரங்களை நாம் நம்பிவிட முடியாது. உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றே தெரிகிறது.

கடும் தட்டுப்பாட்டில் தடுப்பூசிகள்!

இவ்வளவு ஆபத்தான நிலையிலும்கூட பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தின் பரிந்துரையின் பேரில், அந்த நாடு 2009, செப்டம்பர் மாதத்திலிருந்தே சீரான இடைவெளிகளில் இதற்கான தடுப்பூசிகளை நான்கு மாதம் முதல் ஆறு வயது வரையுள்ள குழந்தைகள், 50 வயதுக்கு மேற்பட்டோர், இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு விநியோகித்துவருகிறது. ஐரோப்பிய நாடுகளும் இதைக் கடைப்பிடிக்கின்றன. ஆனால், 2009-ம் ஆண்டு முதலே இந்தியாவில் பன்றிக் காய்ச்சலில் கணிசமான உயிரிழப்பு ஏற்பட்டாலும், இன்றைய தேதியில் உடனடியாக உயிர் காக்க ஒரு தடுப்பூசியை வாங்கிவிட முடியாது என்பதே முகத்தில் அறையும் உண்மை.

இங்குள்ள சொற்ப நிறுவனங்களின் தயாரிப்புகள் மொத்த நோயாளிகளுக்கும் போதுமானதாக இல்லை. சொல்லப் போனால், தமிழகத்தில் மேற்கண்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர் களுக்கே தடுப்பூசி கிடைப்பதில்லை என்கின்றன மருத்துவ வட்டாரங்கள். பணம் செலுத்தி முன்பதிவு செய்தால் ஒரு வாரத்தில் கிடைக்கலாம். புணேவைச் சேர்ந்த ஒரு தனியார் தடுப்பூசி நிறுவனம், இப்போதுதான் 65 ஆயிரம் ‘வீரியம் குறைக் கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி’களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சுமார் ரூ. 800 விலை கொண்ட இதுவும் மார்ச் மாதம் இறுதியில்தான் விற்பனைக்கு வரும். அதுவரை நோயாளிகளின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

ஏழைகளின் ‘ரத்தம் உறிஞ்சும்’ பரிசோதனை!

சில நாட்களுக்கு முன்பு வரை நாடு முழுவதும் தனியார் பரிசோதனைக் கூடங்கள், மேற்கண்ட நோய்களின் பரிசோதனைகளுக்கு ஏகபோகமாகக் கட்டணம் (ரூ.10 ஆயிரம் வரை) வசூலித்தன. சில நாட்களுக்கு முன்புதான் அரசு, டெல்லியில் ரூ. 4,500, தமிழகத்தில் ரூ. 3,750 என்று கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறது. சரி, தனியார் நிறுவனங்கள் எந்தக் காலத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலித்திருக்கின்றன? எங்கே செல்வார்கள் ஏழைகள்?

அரசு மையங்களில் ரத்தப் பரிசோதனை இலவசம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், எத்தனை அரசு மையங்கள் இருக்கின்றன என்பதுதான் கேள்வி. 32 மாவட்டங்களும் 12 மாநகராட்சிகளும் கொண்ட தமிழகத்தில், ஆறு பரிசோதனை மையங்கள் மட்டுமே அரசு மையங்கள். மீதமுள்ள 13 தனியார் வசம். (பார்க்க: பெட்டிச் செய்தி). அவையும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கின்றன. எங்கோ ஒரு மூலையிலும் மலைக் கிராமங்களிலும் வசிப்போர் எங்கே செல்வது?

என்னதான் தீர்வு?

இதுகுறித்து மருத்துவர் ரெக்ஸ் கூறும்போது, “எனக்குப் போட்டுக்கொள்ள தடுப்பூசிக்காகப் பதிவுசெய்து இரண்டு நாட்களாகிவிட்டன. எப்போது வரும் என்று தெரியவில்லை. மருத்துவரான எனக்கே இந்தக் கதி என்றால், பொதுமக்களின் கதி? அரசை நம்பிப் பலன் இல்லை. இதன் வீரியம் குறையும் வரை மக்கள் பயணங்களைத் தவிர்க்கலாம். அதிகமாகக் கூட்டம் கூடும் பொதுஇடங்களைத் தவிர்க்கலாம். விழாக்களைக் குறைத்துக்கொள்ளலாம். அப்படியே செல்வதாக இருந்தாலும் பிரத்தியேக முகமூடிகள் (சுமார் ரூ.50) அணிந்துகொண்டு செல்லுங்கள்.மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்றால், ‘என் 95’ ரக முகமூடி (ரூ. 200 - 225) அணிந்து கொள்ள வேண்டும். வீட்டுக்குள் நுழையும் முன்பு கை, கால்களைச் சுத்தமாகக் கழுவிவிட்டுச் செல்ல வேண்டும்” என்றார்.

சுவாசக் கருவிகள் பற்றாக்குறை- மருத்துவர் ரவீந்திரநாத்

பன்றிக் காய்ச்சலால் 2009-ம் ஆண்டு தொடங்கி, இந்தியாவில் ஆண்டுக்குச் சராசரியாக 600 பேர் வரை உயிரிழக்கிறார்கள். ஆனால், அரசு முடிந்த வரை உண்மையான புள்ளிவிவரங்களை மறைப்பதிலேயே முனைப்பாக இருக்கிறது. தமிழக அரசு 2014-ம் ஆண்டு தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் ஓர் இறப்புகூட இல்லை என்ற தகவலை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இப்போதும் ‘9 பேர் மட்டுமே இறந்துள்ளனர்; நிலைமை கட்டுக்குள் இருக்கிறது’ என்றே அரசு கூறிவருகிறது. இங்கு அரசு மருத்துவமனைகளில் சுவாசக் கருவிகள் கூட பற்றாக்குறையாக உள்ளன.

எங்கெல்லாம் பரிசோதனை செய்யலாம்?

அரசு: கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட், சென்னை மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, நெல்லை மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி.

தனியார்: சென்னை - பாரத் பரிசோதனை மையம், ஹைடெக் டயக்னாஸ்டிக் மையம், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, லிஸ்டர் மெட்ரோபாலிக் லேப் அண்ட் ரிசர்ச் சென்டர், டயக்னாஸ்டிக் சர்வீசஸ், ஸ்டார் பயோடெக் சொலுஷன், பிரிமியர் ஹெல்த் சென்டர்.

கோவை - மைக்ரோ பயாலஜி லேப்.

நாகர்கோவில் - விவேக் லேப்.

வேலூர் - கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி.

திருச்சி - டாக்டர்ஸ் டயக்னாஸ்டிக் சென்டர்.

மறைக்க நினைக்கும் மத்திய அரசு- மருத்துவர் புகழேந்தி

பன்றிக் காய்ச்சலுக்கான வைரஸ் கிருமியின் டி.என்.ஏ-வில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்) விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சரகம் அப்படி ஏற்படவில்லை என்கிறது. ஆனால், கிருமியின் வீரியம் கூடிவிட்டதை மட்டும் மத்திய அமைச்சரகம் ஏற்றுக்கொள்கிறது. டி.என்.ஏ-வில் மாற்றம் ஏற்படாமல் கிருமியின் வீரியம் அதிகரிக்காது என்பது அடிப்படை உண்மை. ஆனால், இதுதொடர்பாக இந்திய அரசு விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. சென்னையில் மட்டுமே 18 இடங்களில் பன்றிக் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், அரசு 4 என்று மட்டுமே சொல்கிறது. சமூக அக்கறை கொண்ட தனியார் அமைப்புகளுடன் அரசு நிர்வாகம் இணைந்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். முடிவுகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இதற்கான தீர்வு காண முடியும்.

தாமதமாகிவிட்டது!- மருத்துவர் கு.கணேசன்

நோயாளியின் மூக்கு, தொண்டையிலிருந்து சளியை எடுத்துச் செய்யப்படும் ‘ரியல் டைம் பி.சி.ஆர்.’ பரிசோதனையும் ‘வைரஸ் கல்ச்சர்’ பரிசோதனையும் பன்றிக் காய்ச்சலை உறுதிசெய்கின்றன. ஆனால், இவை நவீன மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம். அதேபோல் டாமிஃபுளூ மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளன. தனியார் மருத்துவமனைகள் இவற்றை அரசு மருத்துவமனைகளிடம் கேட்டு வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ஆனால், தனியார் மருத்துவமனைகள் இதில் ரிஸ்க் எடுப்பதில்லை. நோயின் மூன்று நிலைகளில் முதல் நிலையில் மட்டுமே சித்தா, ஆயுர்வேதம் தீர்வளிக்கும். அடுத்தடுத்த நிலைகளில் இருப்பவர்களுக்கு அலோபதி மட்டுமே தீர்வு. தடுப்பூசியைப் பொறுத்தவரை மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே போட்டால்தான் பயன் தரும். பன்றிக் காய்ச்சல் பரவிய பிறகு போடுவது முழுமையான பலன் தராது. செலுத்தப்பட்ட மூன்று வாரங்கள் கழித்தே இதன் தடுப்பாற்றல் வெளிப்படும்.

- டி.எல். சஞ்சீவிகுமார்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by ayyasamy ram on Mon Mar 16, 2015 12:19 pm

பயனுள்ள கட்டுரை...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Mon Mar 16, 2015 11:30 pm

பன்றிக் காய்ச்சல் பயம் வேண்டாம்... பதற்றம் வேண்டாம்!

“இந்த நூற்றாண்டில், திடீர் திடீரென நோய்கள் பரவி, பதற்றத்தை உருவாக்கி வருகின்றன. நம் முன்னோர்கள், பல காய்ச்சல்களுக்கும் கண்டறிந்துவைத்துள்ள மருந்துகளை நாம்தான் கண்டுகொள்வதும் இல்லை. உபயோகிப்பதும் இல்லை. வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடிய காய்ச்சல்களை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே `கபசுரம்’ என்று வகை பிரித்து, மருந்தும் சொல்லியிருக்கிறார் யூகி முனி என்ற மாமுனிவர். இப்போது மக்களை பீதிக்கு உள்ளாக்கியிருக்கும் பன்றிக் காய்ச்சலும் இந்த கபசுரத்துக்குள் அடங்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

“பன்றிக்காய்ச்சல் வரக் காரணம் என்ன?”

“எச்1என்1 (H1N1) வைரஸ் என்று அழைக்கப்படும் ஒரு கலப்பின நுண்ணுயிரிதான் (Mutated virus) இந்தக் காய்ச்சலுக்குக் காரணம். மெக்சிகோ, கனடா போன்ற நாடுகளில் குப்பையில் கொட்டப்படும் பன்றி இறைச்சி, கோழி இறைச்சி போன்றவை அழுகிய நிலையில் இருக்கும்போது, அதில் இருந்து உருவாகும் நுண்ணுயிரி இது. அங்கிருந்துதான் நம் நாட்டுக்குப் பரவியிருக்கிறது. அந்த நாடுகளின் சீதோஷ்ண நிலையில் இது வேகமாகப் பரவக்கூடியது. ஆனால், நம் நாட்டின் சீதோஷ்ண நிலையில் அவ்வளவு வேகமாகப் பரவாது.”

“எப்போது இந்த வைரஸ் பரவும்? எல்லோருக்கும் தொற்றுமா?”

“பொதுவாக, குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் காலத்தில்தான், எல்லா வைரஸ்களின் தாக்கமும் அதிகமாக இருக்கும். இந்த வைரஸும் அப்படித்தான் பரவும். காற்று மூலம் பரவக்கூடியது. நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களை இந்த வைரஸ் எளிதில் தாக்கி, கபத்தை உண்டாக்கும். முக்கியமாக, காசநோய் இருப்பவர்களுக்கு உடனடியாகத் தொற்றி, நோயை இன்னும் தீவிரமாக்கிவிடும்.”

“கபசுரக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?”

“மூக்கு, தொண்டை போன்ற மேல் சுவாசப் பாதை (Upper respiratory tract) உறுப்புகளைத்தான் இந்தக் கிருமி முதலில் தாக்கும். எனவே, மூக்கு எரிச்சல், மூக்கில் நீர் வழிதல், மூக்கடைப்பு, தொண்டையில் தொற்று, தொண்டை வலி எனக் காய்ச்சல் வரை போய் நிற்கும்.”
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Mon Mar 16, 2015 11:31 pm

“சித்த மருத்துவத்தில் இதற்கு மருந்து உள்ளதா?”

“யூகி முனி என்ற சித்தர், காய்ச்சலை 64 வகைகளாகப் பிரித்துள்ளார். உலகிலேயே வேறு எங்கும், இத்தகைய பகுப்பு கிடையாது. இப்போது பன்றிக் காய்ச்சல் என்று சொல்லப்படும் காய்ச்சலுக்கு உரிய தன்மையையும் அதைக் குணப்படுத்துவதற்கு மருந்தையும் கூறியிருக்கிறார். ‘கபசுரக் குடிநீர்’ என்னும் மருந்து, இந்தக் காய்ச்சலைப் போக்கும் என்பது, அவருடைய ‘யூகி வைத்திய சிந்தாமணி’ என்னும் நூலில் விளக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்தாகவும், வந்த பின் குணமளிக்கும் மருந்தாகவும் இதைப் பயன்படுத்தலாம்.”

“கபசுரக் குடிநீர் என்றால் என்ன?”

“நிலவேம்புக் கஷாயம் போலவே, இதுவும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். இந்த மருந்தில் நிலவேம்பும் ஓர் உட்பொருளாகக் கலந்துள்ளது.

நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, அக்ரஹாரம், கண்டுபாரங்கி (சிறு தேக்கு), ஆடாதொடை வேர், சீந்தில், கோஷ்டம், கற்பூரவள்ளி, கோரைக் கிழங்கு உள்ளிட்ட 15 மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துதான் கபசுரக் குடிநீர். இந்தத் தூளை 10 கிராம் (2 டீஸ்பூன்) எடுத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து கொதிக்கவைக்க வேண்டும். நன்றாகக் கொதித்து, அரை டம்ளராக வற்றியதும், இறக்கி, வடிகட்டி, காலையிலும் மாலையிலும் உணவுக்கு முன் அருந்த வேண்டும். ஒரு முறை செய்துவைத்த மருந்தை, அடுத்த வேளைக்குப் பயன்படுத்தாமல், அவ்வப்போது புதிதாகத் தயாரித்துக்கொள்ள வேண்டும்.

நோய் வருவதற்கு முன் தடுப்பு மருந்தாகக் குடிக்க நினைப்பவர்கள், 30 மி.லி எடுத்தால் போதும். தடுப்பு மருந்தாக எடுத்துக்கொள்வதென்றால் மூன்று நாட்களும், சிகிச்சையாக எடுத்துக்கொள்வதென்றால் நோயின் தன்மைக்கும் நோயாளியின் தன்மைக்கும் ஏற்ப 15 நாட்கள் வரையிலும் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கபசுரக் குடிநீர், சித்த மருந்துக் கடைகளிலும் அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும்.

டெங்குக் காய்ச்சல் பரவியபோது, நிலவேம்புக் குடிநீர் பற்றிய தீவிர பிரசாரத்தை முடுக்கிவிட்டு, ஊடகங்களில் விளம்பரப்படுத்தியதன் விளைவாக, மக்களுக்கு நல்ல விழிப்புஉணர்வு ஏற்பட்டது. அதேபோல இந்தக் கபசுரக் குடிநீர் பற்றியும் அரசு தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு, ஊடகங்களில் பெரிய அளவு விளம்பரப்படுத்தி, மக்களிடையே பன்றிக் காய்ச்சல் குறித்துப் பரவியுள்ள பீதியைக் குறைக்கவேண்டும். இந்த மருந்தைப் பயன்படுத்தி நோயைத் தடுத்துக்கொள்ள, அரசு முயற்சி எடுக்க வேண்டும்.”
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Mon Mar 16, 2015 11:31 pm

பன்றிக் காய்ச்சல்... என்ன டயட்?

1.வறுத்த அரிசி அல்லது வறுத்த நொய்யில் கஞ்சி செய்து அருந்தலாம். தொட்டுக்கொள்ள, தூதுவளை அல்லது இஞ்சித் துவையல் நல்லது.

2.வடித்த சோற்றில், மீண்டும் ஒரு முறை தண்ணீர் ஊற்றி, அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வேகவைத்து, அந்தத் தண்ணீரை வடித்து அருந்தலாம்.

3.குழைய வடித்த சுடு சோற்றில், சுண்டை வற்றல் பொடி சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். இட்லிக்கும் இந்தப் பொடியைத் தொட்டுக்கொள்ளலாம். சுண்டை வற்றலைக் குழம்பாகச் செய்து சாப்பிடலாம்.

4.அன்னாசிப் பழம் மிகவும் நல்லது. உணவில் சேர்க்கலாம். பன்றிக் காய்ச்சலுக்கு அரசு வழங்கும் ‘டேமிஃப்ளூ’ மாத்திரைகளில் அன்னாசி கலந்துள்ளது.

5.பால், தயிர் தவிர்க்க வேண்டும். விருப்பப்பட்டால், மோர் குடிக்கலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Mon Mar 16, 2015 11:32 pm

எளிய - வலிய சில மருந்துகள்!

தொண்டையில் தொற்று, வலி மற்றும் கரகரப்பு ஆரம்பிக்கும்போதே, முன்னெச்சரிக்கையாகத் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சித்த மருந்துக் கடையில், தாளிசாதி வடகம் என்ற மருந்து கிடைக்கும். இதை வாயில் போட்டு, உமிழ்நீருடன் மென்று, தொண்டையில் படும்படி விழுங்கினால், தொண்டைப் பாதிப்பு குறையும்.

மூக்கு எரிச்சல், மூக்கில் நீர் வடிதல் மற்றும் மூக்கடைப்பு இருப்பவர்கள், சிறிது ஓமம், சிறு துண்டு பச்சைக் கற்பூரம், ஒரு சிட்டிகை சுத்தமான மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் நசுக்கி, ஒரு தூய வெள்ளைத் துணியில் முடிந்து, அவ்வப்போது மூக்கில்வைத்து முகர்ந்துகொண்டே இருந்தால், மேலே சொன்ன மூக்குப் பிரச்னைகள் அண்டாது. சுவாசப் பாதையில் நோய்க் கிருமிகள் தொற்றாமல், கவசம் போல காக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Tue Mar 17, 2015 12:18 am

நாடு முழுவதும் 30 ஆயிரம் பேருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கம்: பலி எண்ணிக்கை 1731 ஆக உயர்ந்தது

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1,731 பேர் பலியாகியுள்ளதாகவும், இந்நோயின் தாக்கத்தால் 29,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

எச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது.

நாடு முழுவதும் இந்நோயால் 29,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று (15-ம் தேதி) வரை 1,731 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே மிக உயர்ந்த அளவாக குஜராத்தில் 387 பேரும்,
அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 378 பேரும், மராட்டியத்தில் 293 பேரும்,
மத்தியப் பிரதேசத்தில் 239 பேரும் பலியாகியுள்ளனர்.

தெலுங்கானாவில் 72,
கர்நாடகாவில் 71,
பஞ்சாப்பில் 51,
அரியானாவில் 45,
உத்தரப்பிரதேசத்தில் 35,
ஆந்திராவில் 20,
மேற்கு வங்காளத்தில் 19,
இமாச்சல்ப்பிரதேசத்தில் 18,
ஜம்மு-காஷ்மீரில் 16,
சத்தீஸ்கரில் 14,
தமிழ்நாட்டில் 13,
டெல்லி மற்றும் கேரளாவில் தலா 11
என நாடு முழுவதும் நேற்று வரை இந்நோய்க்கு 1731 பேர் பலியாகியுள்ளதாகவும், 29,938 பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by அபிரூபன் on Tue Mar 17, 2015 10:58 am

அயோ தமிழ்நாட்டில் 13 அஹ ... sad நியூஸ்
avatar
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 79

View user profile http://love-abi.blogspot.in

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by M.Saranya on Tue Mar 17, 2015 2:00 pm

மிகவும் பாவம் மக்கள்.......கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்............
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Fri Mar 20, 2015 2:38 am

நாட்டில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது: பலி எண்ணிக்கை 1900-ஐ நெருங்கியது

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 32 பேரின் உயிரை பன்றிக்காய்ச்சல் நோய் பலி வாங்கியதால், நாடு முழுவதும் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,900-ஐ நெருங்க ஆரம்பித்துள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 30 ஆயிரத்தை தாண்டியது.

எச்.1.என்.1. எனப்படும் வைரஸால் பரவும் பன்றிக்காய்ச்சல் நோய், நாட்டிலுள்ள வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே தலை விரித்தாடுகிறது. அம்மாநிலங்களில் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருகிறது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் தாக்கம் அசுர வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானில் 6 பேர் பலியானதன் மூலம், அம்மாநிலத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 397 ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தை விட குஜராத் மாநிலம் அதிக பலி எண்ணிக்கையை கொண்டுள்ளது. அங்கு 400 பேர் பலியான நிலையில், 6271 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானுக்கு அடுத்த படியாக மகாராஷ்டிராவில் 322 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். 3788 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப்பிரதேசத்தில் 266 பேர் பலியான நிலையில், 1999 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Sat Mar 21, 2015 10:26 am

பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் மூன்று பேர் பலி: வெயில் துவங்கியும் கட்டுப்படவில்லை

சென்னை: வெயிலின் தாக்கத்தால், பன்றிக்காய்ச்சல் வீரியம் குறைவதாக கூறப்படும் நிலையில், சென்னையில், நேற்று மட்டும் மூன்று பேர், பலியாகி உள்ளார்.

அரசு மருத்துவமனையில்...: சென்னை, மேற்கு சைதாப்பேட்டை, ராஜகோபால் தெருவை சேர்ந்தவர் சேகர், 58; தனியார் நிறுவன ஊழியர். அவர், கடும் காய்ச்சலால், கடந்த, 14ம் தேதி, கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் குறையாததோடு, சளித் தொல்லையும் இருந்ததால், பன்றிக்காய்ச்சல் பரிசோதனை செய்தனர்; பன்றிக்காய்ச்சல் உறுதியானது. உடல் நிலையும் மோசமானதால், நேற்று அதிகாலை, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருக்கு, பன்றிக்காய்ச்சல் மட்டுமின்றி, நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளும் இருந்ததால், இறப்பு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கீழ்ப்பாக்கத்தில்...: சென்னை அகரம்மேல், சாரதா நகரை சேர்ந்தவர் பிரசாத். அவரது மனைவி நீலவேணி, 34; தனியார் பள்ளி ஆசிரியை. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிலைமை மோசமானதால், நேற்று முன்தினம், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் இறந்ததாக கூறப்படுகிறது.

அயனாவரத்தில்...: சென்னை, அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன், 34. அவர் சில தினங்களுக்கு முன்பு, கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். கடந்த, 16ம் தேதி, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் அதிகரித்தது. பரிசோதனையில், அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது, உறுதியானது. தொடர்ந்து, சிகிச்சையளித்து வந்த நிலையில், அவர் நேற்று இரவு, சிகிச்சை பலனின்றி பலியானார். கடந்த இரண்டரை மாதங்களில், சென்னையில், மூன்று பேர் உட்பட, மாநிலம் முழுவதும், 13 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு இறந்ததாக அரசு கூறி வருகிறது. பன்றிக்காய்ச்சல் வீரியம் குறைந்ததாக கூறி வரும் நிலையில், அடுத்தடுத்து மூன்று இறப்புகள் ஏற்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Sun Mar 29, 2015 11:23 am

பன்றி காய்ச்சல் நோயின் அறிகுறிகள் என்ன? நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலைய அதிகாரி விளக்கம்

பன்றி காய்ச்சல் நோயின் அறிகுறிகள் என்ன? என்பது குறித்து நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் விளக்கம் அளித்தார்.

மேலாண்மை பயிற்சி

நாகை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்து டாக்டர்களுக்கான மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு நாகை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் குருநாதன் தலைமை தாங்கினார்.

இதில் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் டாக்டர் கவிதா அருணகிரி, சென்னை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ரகுநந்தன், கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் அரசர் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

பன்றி காய்ச்சல்

அப்போது கிண்டி கிங்ஸ் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் டாக்டர் கவிதா அருணகிரி கூறியதாவது:-

பன்றி காய்ச்சல் வைரஸ் கிருமி நமது நாட்டில் பரவியது 2009-ல் கண்டுபிடிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் வைரஸ் கிருமி 2011-ல் கண்டுபிடிக்கப்பட்டது. பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கையாளும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்பட வேண்டும். பன்றி காய்ச்சல் என்பது இன்புளுயன்சா (எச்1.என்.1) ஆர்த்தோமிக்சோவிரிடே வகையை சேர்ந்த உயிர்கொல்லி நோயாகும். பன்றிகளிடமிருந்து இந்த நோய் மனிதனுக்கு பரவுகிறது. மேற்கத்திய நாடுகளான மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பன்றி காய்ச்சல் முதலில் தோன்றியது. வட அமெரிக்காவில் வேகமாக பன்றி காய்ச்சல் பரவி வருகிறது.

இந்தியாவிலும் பரவுகிறது

74 நாடுகளில் இந்நோயினால் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. தற்போது இந்த நோய் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு பருவகால சளிக்காய்ச்சலின் அறிகுறிகள் இருக்கும். காய்ச்சல், விறைப்பு, இருமல், தொண்டை அழற்சி, தலைவலி, தசைநார் வலி, களைப்பு, பலவீனம், குறிப்பாக உடல் சூடாதல், தலைவலி, தசைவலி, தொண்டை புண், வயிற்று போக்கு, வாந்தி போன்றவைகள் இருக்கும்.

இந்த நோய் தாக்கப்பட்ட நபர்களிடம் இருந்து விலகி இருப்பது அல்லது தவிர்க்க முடியாத காரணத்திற்காக அருகில் செல்லும் போது துணியால் முகத்தை மூடி கொள்வது போன்றவை இந்த நோயை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Sun Mar 29, 2015 11:18 pm

பன்றிக்காய்ச்சல் பலி 2,035 ஆக உயர்ந்தது- 33,761 பேருக்கு நோய் தாக்கம்

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 2,035 ஆக உயர்ந்துள்ளது.

எச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது.

நாடு முழுவதும் இந்நோயால் 33,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று (28-ம் தேதி) வரை 2,035 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே மிக உயர்ந்த அளவாக குஜராத்தில் 428 பேரும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 415 பேரும், மராட்டியத்தில் 394 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 299 பேரும் பலியாகியுள்ளனர்.

கர்நாடகாவில் 82,
தெலுங்கானாவில் 75,
பஞ்சாப்பில் 53,
அரியானாவில் 51,
உத்தரப்பிரதேசத்தில் 38,
மேற்கு வங்காளத்தில் 25,
ஆந்திராவில் 22,
சத்தீஸ்கரில் 22,
இமாச்சலப்பிரதேசத்தில் 20,
ஜம்மு-காஷ்மீரில் 18,
தமிழ்நாட்டில் 16,
கேரளாவில் 14,
மற்றும் டெல்லியில் 12 என நாடு முழுவதும் நேற்று வரை இந்நோய்க்கு 2,035 பேர் பலியாகியுள்ளதாகவும், 33,761 பேர் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Thu Apr 02, 2015 9:35 pm

பன்றிக்காய்ச்சல் பலி 2,097 ஆக உயர்ந்தது - நாடு முழுவதும் 34,351 பேருக்கு நோய் தாக்கம்

காலனின் வடிவில் வந்து இந்திய மக்களை கொன்று குவித்துவரும் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 13 பேர் பலியானதையடுத்து, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 2,097 ஆக உயர்ந்துள்ளது.

எச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, குஜராத், ராஜஸ்தான், மராட்டியம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது.

நாட்டிலேயே மிக உயர்ந்த அளவாக குஜராத்தில் 434 பேரும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 423 பேரும், மராட்டியத்தில் 422 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 305 பேரும் பலியாகியுள்ளனர்.

கர்நாடகாவில் 85, தெலுங்கானாவில் 77, பஞ்சாப்பில் 53, அரியானாவில் 53, உத்தரப்பிரதேசத்தில் 38, மேற்கு வங்காளத்தில் 26, ஆந்திராவில் 22, சத்தீஸ்கரில் 22, இமாச்சலப்பிரதேசத்தில் 23, ஜம்மு-காஷ்மீரில் 19, தமிழ்நாட்டில் 16, கேரளாவில் 14, மற்றும் டெல்லியில் 12 என நாடு முழுவதும் நேற்று வரை இந்நோய்க்கு 2,097 பேர் பலியாகியுள்ளதாகவும், 34,351 பேர் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா on Mon Apr 13, 2015 1:36 am

கோடை வெயில் தொடங்கியதால் பன்றி காய்ச்சல் பாதிப்பு குறைந்தது

இந்தியாவில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவியது. நாடு முழுவதும் 35 ஆயிரத்து 138 பேர் நோய் தாக்குதலுக்கு ஆளாகினர். இதில் 2,172 பேர் இறந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்தநிலையில் தற்போது கோடை வெயில் தொடங்கி உள்ள நிலையில் பன்றி காய்ச்சல் நோய் தாக்குதல் படிப்படியாக குறைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை மூத்த டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் மருத்துவமனையில் உள்ள வெளிநோயாளிகள் பிரிவுக்கு பன்றிகாய்ச்சல் நோய் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது’ என்று தெரிவித்து உள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by ayyasamy ram on Mon Apr 13, 2015 6:34 am

சற்று முன் வந்த செய்தி..!!!
-

கோடை தாக்கத்தால் பன்றி
காய்ச்சல் குறைந்து வருகிறது....
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum