ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 T.N.Balasubramanian

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

கடவுள் தந்த இருமலர்கள்...
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

சின்னச் சின்ன சிந்தனைகள்
 SK

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 SK

புதிய சமயங்கள்
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழக சட்டசபையில் 4 ஆண்டுகள் நடந்தது என்ன?

View previous topic View next topic Go down

தமிழக சட்டசபையில் 4 ஆண்டுகள் நடந்தது என்ன?

Post by சிவா on Sun Mar 22, 2015 11:47 pm


147 முறை எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பு:
கருணாநிதி 5; விஜயகாந்த் 27 நாள் வருகை


கோவை: அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து, நான்கு ஆண்டுகள் நிறைவடைய போகின்றன; சட்டசபை எத்தனை முறை கூடியுள்ளன; 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு; எம்.எல்.ஏ.,க்கள் பெறும் சலுகை என்னென்ன; எதிர்க்கட்சிகள் என்ன செய்தனர் என்ற விவரங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக வெளியாகி உள்ளன.

கோவை வெள்ளலூரைச் சேர்ந்த, டேனியல் ஏசுதாஸ் என்பவர், கேட்டிருந்த தகவல்களும், கிடைத்த விவரங்களின் தொகுப்பும் வருமாறு:

பதவியேற்றதும் 'பிரீப்கேஸ்':

தேர்தலுக்குப் பின் எம்.எல்.ஏ., வாக பதவியேற்றதும், ஒவ்வொருவருக்கும், ஒரு சிறிய கைப்பெட்டி வழங்கப்படுகின்றன. அதில், இந்திய அரசியல் அமைப்பு சட்ட பிரதி - தமிழ் மற்றும் ஆங்கிலம், திருக்குறள் புத்தகம், எம்.எல்.ஏ., கையேடு, காமன்வெல்த் பாராளுமன்ற சங்கம் - தமிழ்நாடு கிளை குறித்த, சிறு கையேடு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகள், 1986ம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களின் விதிகள் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்), எம்.எல்.ஏ.,க் களின் சொந்த விவரங்கள் மற்றும் போட்டோவுடன் கூடிய, 'யார் எவர்' எனும் வெளியீடு, எம்.எல்.ஏ., குறிப்பிடும், இரு வாகனங்களுக்குரிய, 'ஹாலோகிராம்' பதிக்கப்பட்ட வாகன அனுமதிச் சீட்டுகள், அதில் இடம்பெற்றிருக்கும். மேலும் சட்டசபை கூடும் நாட்களில், எம்.எல்.ஏ., விரும்பும் இரு நாளிதழ்கள், சென்னையில் உள்ள எம்.எல்.ஏ., குடியிருப்பில் வழங்கப்படும்; எம்.எல்.ஏ., ஆனதும் வழங்கப்படும்; 'பிரீப்கேஸ்'சில், 11 ஆவணங்கள் இருக்கும்.

110 விதி 150 முறை:

தமிழக சட்டசபை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 2011 மே 23ம் தேதி, முதல் முறையாக கூடியது. அதன்பின், 2011 ஜூன் 8ல், தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக, முதன் முறையாக, 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியானது. அதே நாளில், மொத்தம் நான்கு அறிவிப்புகள் வெளியாயின. கடந்த 2011ல், 21 முறை, 2012ல், 43 முறை, 2013ல், 45 முறை, 2014ல், 41 முறை, என, நான்கு ஆண்டுகளில், 110 விதியை பயன்படுத்தி, 150 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இவற்றில், எத்தனை அறிவிப்புக்கு அரசாணை வெளியிட்டு, செயல்வடிவம் கொடுக்கப்பட்டு உள்ளன என்ற தகவல்கள் வழங்கப்படவில்லை.

முக்கிய அறிவிப்புகள்:

சட்டபையில், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட, முக்கிய அறிவிப்புகள் வருமாறு: பள்ளிகள் தரம் உயர்த்துதல்; அரசு மருத்துவ காப்பீட்டு திட்டம்; காற்றாலை மின்சாரத்தை, உயரழுத்த தொழிற்சாலைகளுக்கு வழங்குதல்; ஓமந்தூரார் அரசினர் தோட்டம்; புதிய தலைமைச் செயலக, 'ஏ' பிளாக், பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையாகவும், 'பி' பிளாக், அரசு மருத்துவக் கல்லூரியாகவும் மாற்றுதல் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதுதவிர, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்தல்; தமிழ்நாடு சிறப்பு காவலர் இளைஞர் படை உருவாக்குதல்; சத்துணவுத் திட்டத்தில் புதிய உணவு வகை அறிமுகம். மதுரையில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழ்த்தாய் சிலை அமைத்தல்; மலிவு விலை உணவகங்கள் அமைத்தல்; மக்கள் சேவை மையங்கள் அமைத்தல் போன்ற அறிவிப்புகள் குறிப்பிடத்தக்கவை.

159 நாட்கள்:

தமிழகத்தில் தற்போதுள்ளது, 14வது சட்டசபை; இந்த அரசின் முதல் சட்டசபைக் கூட்டம், 2011 மே 23ல் கூடியது; கவர்னர் உரையுடன் முதல் கூட்டத்தொடர், எட்டு நாட்கள் நடந்தன; முதல் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம், 25 நாட்கள் நடந்தன. இரண்டாம் கூட்டத்தொடர் ஒருநாள் மட்டுமே நடந்தது; மூன்றாம் கூட்டத்தொடர், 2012 ஜன., 30ல், கவர்னர் உரையுடன் துவங்கி, ஆறு நாட்கள் நடந்தன. நான்காம் கூட்டத்தொடர், 32 நாட்களும், ஐந்தாம் கூட்டத்தொடர் ஐந்து நாட்களும், ஆறாம் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் துவங்கி, 41 நாட்களும், ஏழாம் கூட்டத்தொடர், ஏழு நாட்களும் நடந்தன. எட்டாம் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் துவங்கி, 31 நாட்கள் நடந்தன. முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், ஒன்பதாம் கூட்டத்தொடர் மூன்று நாட்கள் நடந்தன. கடந்தாண்டு டிசம்பர் வரை, ஒன்பது கூட்டத்தொடர், 159 நாட்கள் நடந்தன.

மாதம் ரூ.55 ஆயிரம்:

எம்.எல்.ஏ.,க்களுக்கு மாதச் சம்பளம், 8,000 ரூபாய்; ஈட்டுப்படியாக, 7,000 ரூபாய்; தொலைபேசி படியாக, 5,000; தொகுதிப்படியாக, 10 ஆயிரம்; அஞ்சல் படி, தொகுப்பு படியாக, தலா, 2,500 ரூபாய்; வாகனப் படியாக, 20 ஆயிரம் ரூபாய்; ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு மாதத்திற்கு மொத்தம், 55 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றன. இதுதவிர, சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டால், நாள் ஒன்றுக்கு, 500 ரூபாய் தினப்படியாக வழங்கப்படுகின்றன.

எல்லாம் இலவசம்:

மாநில அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில், எம்.எல்.ஏ.,க்கள் தனியாகவோ, குடும்பத்தினருடனோ பயணம் செய்ய, இலவச அனுமதிச் சீட்டு வழங்கப்படுகின்றன, (இதுவரை யாரும் பஸ் பயணம் சென்றதில்லையாம்). வெளியிடங்களுக்கு செல்ல, ரயில் பயணப்படியாக, ஆண்டுக்கு இரண்டு தவணையாக, 20 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகின்றன. சட்டசபை கூட்டத்தொடர் காலத்தில், எம்.எல்.ஏ., அவருடன் செல்லும் குடும்பத்தினருக்கான, ரயில் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். எம்.எல்.ஏ., ஹாஸ்டல், வீட்டிற்கு இலவச தொலைபேசி இணைப்பு, அரசு மருத்துவமனையில் தனி அறை சிகிச்சை, வெளியில் வாங்கும் மருந்துகளும் இலவசம் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மருத்துவ சலுகை:

மேலும், மத்திய அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனையில், இதயம், சிறுநீரகம், உடலின் வேறு ஏதாவது பாகம் தொடர்பான அறுவை சிகிச்சைக்கு, எம்.எல்.ஏ.,க்களுக்கு, அரசு நிதியுதவி பெற உரிமையுள்ளது. ஆண்டுக்கு, 1,500 பெரிய கடித தாள்கள்; 3,700 சிறிய கடித தாள்கள்; பெரிய கவர்கள், 750; சிறிய கவர்கள், 1,500; ஹீரோ பேனா ஒன்று; டைரி ஒன்று; காலண்டர் இரண்டு வழங்கப்படுகின்றன.

'மாஜி'க்களின் சலுகைகள்:

எம்.எல்.ஏ., ஒருவர், தொகுதிக்கு வெளியே எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால், சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான வாகனத்தின் வாடகை, அரசால் வழங்கப்படுகிறது. பதவிக்காலத்தில் இறந்த எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்திற்கு, பதவிக்காலம் முழுமைக்கும், மாதத்துக்கு, 1,000 ரூபாய், குடும்ப படியாக வழங்கப்படுகிறது. அக்குடும்பத்திற்கு, ஒட்டுமொத்த படியாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மரணமடைந்த எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்திற்கு, ஓய்வூதியாக, மாதம், 6,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு, மாதத்துக்கு, 12 ஆயிரம் ரூபாய் வீதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ., குடும்பத்தினருடன், அடையாள அட்டையை பயன்படுத்தி, அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். அரசு மருத்துவமனையில், 'அ' அல்லது 'ஆ' பிரிவில் இலவசமாக தங்கி, சிகிச்சை பெறலாம். மேலும், ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் மருத்துவப் படியாக வழங்கப்படுகிறது.

வெளிநடப்பு 147 முறை:

சட்டசபைக் கூட்டத்தில், தி.மு.க., உள்ளிட்ட, மற்ற அனைத்து கட்சிகளும் வெளிநடப்பு செய்துள்ளன; ஒரே நாளில், இருமுறை, நான்கு முறை கூட வெளிநடப்பு செய்துள்ளனர்.இதில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 43 முறை; தே.மு.தி.க., 25 முறை; புதிய தமிழகம், 24 முறை; பா.ம.க., ஏழு முறை; காங்., 12 முறை; இ.கம்யூ., எட்டு முறை, மார்க்.கம்யூ., 11 முறை; ம.ம.க., எட்டு முறை வெளிநடப்பு செய்துள்ளன. சட்டசபை பதிவில், மொத்தம், 147 முறை வெளிநடப்பு பதிவாகி உள்ளன.

234 எம்.எல்.ஏ.,:

மொத்தமுள்ள, 234 எம்.எல்.ஏ.,க் களில், முதல்வர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், அரசு தலைமை கொறடா ஆகியோர், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடும் வழக்கமில்லை. சட்டசபைக் கூட்டம் நடந்த, 159 நாட்களும், 45 எம்.எல்.ஏ.,க்கள் சபைக்கு தவறாது வந்துள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஐந்து நாட்கள்; தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், 56 நாட்கள்; தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், 27 நாட்கள்; புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, 153 நாட்கள்; ச.ம.க., தலைவர் நடிகர் சரத்குமார், 75 நாட்கள்; ம.ம.க., ஜவாஹிருல்லா, 146 நாட்கள் வருகை புரிந்துள்ளனர். கடந்த, மே 2011 முதல், 2015 பிப்., 12ம் தேதி வரையிலும், சட்டசபை நடக்கும் போது பயன்படுத்தப்பட்ட ஜெனரேட்டருக்கு, 5 லட்சத்து 4,000 ரூபாய் வாடகையாக வழங்கப்பட்டு உள்ளது. சட்டசபைக் கூட்டத்தின் போது, எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்ட மினரல் வாட்டருக்கு, 1 லட்சத்து 21 ஆயிரத்து 58 ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இவ்விவரங்கள், தகவலறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்து உள்ளன.

தினமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum