ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 ayyasamy ram

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

வரிசையாய் எறும்புகள்
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

மலைகளின் நகரம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 Dr.S.Soundarapandian

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 பழ.முத்துராமலிங்கம்

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

நீங்காத செல்வம் தரும்

View previous topic View next topic Go down

நீங்காத செல்வம் தரும்

Post by சிவா on Mon Mar 23, 2015 12:13 amதிருவாரூர் மாவட்டத்தில் 'கோவில்பாதி, குளம்பாதி' என்ற பழமொழியை தனக்கே உரித்தாக்கிக்கொண்ட ஊர் மன்னார்குடி.

மன்னர்கள் இவ்வூரில் குடிகொண்டு இருந்ததால் 'மன்னார்குடி' என்ற பெயர் வந்தது.

மன்னார்குடி மதில் அழகு என்பது இவ்வூருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள விஷ்ணு கோவில்களில் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் தனிச்சிறப்புடையதாக விளங்குகிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் மகாவிஷ்ணு சங்கு, சக்கரம் இல்லாமல் உபயகரங்கள், செண்டுடன் சேவை சாதிப்பது சிறப்பம்சம்.

இக்கோவில் முதலாம் குலோத்துங்க மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. அர்த்த மண்டபம், 3-ம் கோபுரம் ஆகியவற்றையும் அவர் கட்டினார். அவர் காலத்திற்கு பின் வந்த மன்னர்களால் இக்கோவில் பராமரிக்கப்பட்டது.

கோவிலுக்கு எதிரே 54 அடி உயரமுள்ள கருட ஸ்தம்பம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. கம்பத்தின் மேல் தளத்தில் கருடனுக்கு அழகிய கோவில் உள்ளது. கோவிலில் பெருமாள் மூலவர் ஸ்ரீவாசுதேவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். ருக்மணி, சத்தியபாமாவுடன் வித்ய ராஜகோபாலனாக உற்சவமூர்த்தி காட்சியளிக்கிறார். இவருக்கு ராஜமன்னார், கோபாலன் என்ற திருப்பெயர்களும் உண்டு. ஒரு காதில் குண்டலமும், ஒரு காதில் தோடும் அணிந்து வித்ய ராஜகோப£லன் என்ற திருப்பெயரோடு ஒரு வஸ்திரத்தில் இடுப்பில் கச்சம், சிரசில் முண்டாசு, வலது கரத்தில் பொன்சாட்டையுடன், மாடு-கன்றுகளுடன் இடையர் உருவத்தில் நின்ற திருக்கோலத்துடன் காட்சியளிக்கிறார்.

மூலவர் செண்பக லட்சுமியாகவும், உற்சவர் செங்கமலத்தாயாராகவும் காட்சி தருகிறார்.

இத்திருக்கோவிலில் பெருமாள் தாயார் சன்னதி உள்பட 24 சன்னிதிகள் உள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்காத செல்வம் தரும்

Post by சிவா on Mon Mar 23, 2015 12:14 am

மண்டபம்இக்கோவிலுக்கு வல்லாள மகாராஜன் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், கருட வாகன மண்டபம், யானை வாகன மண்டபம், பலகனி மண்டபம், வெண்ணைத்தாழி மண்டபம், புன்னை வாகன மண்டபம் என 7 மண்டபங்கள் உள்ளன. கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள ராஜகோபுரத்தின் உயரம் 154 அடி. மேற்கு கோபுரம் சிற்பம் வேலைப்பாடுகள் நிறைந்தது.

ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாதருக்கு ஆண்டு முழுவதும் நடைபெறுவது போல் ராஜகோபாலசுவாமிக்கும் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறுகிறது. ஆனி மாதத்தில் ஹரித்ரா நதி குளத்தில் நடைபெறும் தெப்பத்திருவிழா, ஆடிமாதத்தில் செங்கமலத்தாயார் தேர்த்திருவிழா, மார்கழி மாதத்தில் இராப்பத்து, பகல்பத்து உற்சவம், ஏகாதசி திருவிழா போன்ற விழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா 18 நாட்களும், விடையாற்றி திருவிழா 12 நாட்களும் சேர்த்து 30 நாள் திருவிழா நடைபெறும்.

அதில் வெண்ணைத்தாழி, கருடசேவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும்.

மன்னார்குடிக்கு பெருமை சேர்ப்பது ஹரித்ரா நதி திருக்குளம். 23 ஏக்கர் பரப்பளவு தண்ணீர் உள்ள இக்குளத்தில் நடுவில் வேணுகோபாலன் திருக்கோவில் உள்ளது. நான்கு கரைகளிலும் வீதிகள் உள்ளன. குளத்தின் தெற்கே கரை நீண்ட படிக்கட்டுக்களை கொண்டது. நான்கு கரைகளிலும் ஆஞ்சநேயர், ராமர், விநாயகர், சீனிவாசர் ஆகியோருக்கு கோவில்கள் அமைந்துள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்காத செல்வம் தரும்

Post by சிவா on Mon Mar 23, 2015 12:15 am

தலவரலாறுகும்பகோணத்துக்கு தென்கிழக்கில் சம்பக வனம் உள்ளது. இங்கு 1,008 முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களில் வஹ்னிமுகர் சிறப்புடையவர். அவருக்கு கோப்பிரளயர், கோபிலர் என்றும் 2 மகன்கள் இருந்தனர். அவர்கள் தீ நடுவே ஒற்றைக்காலில் நின்று எட்டெழுத்தோதி நாராயணனை குறித்து தவம் மேற்கொண்டனர்.

பெருமான் அவர்கள் முன்தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார்.

உடனே அவர்கள், 'எங்களுக்கு மோட்சம் வேண்டும்' என்றனர்.

அப்படியானால் துவாரகையில் உள்ள கண்ணபிரானை தரிசித்தால் அப்பேறு கிட்டும் என்றார் பரமாத்மா.

இருவரும் மகிழ்ந்து துவாரகையை நோக்கி புறப்பட்டனர். வழியில் அவர்கள் நாரத முனிவரை சந்தித்து, 'கண்ணபிரான் எங்கு இருக்கிறார்?, துவாரகை எங்கு உள்ளது?' என்று கேட்டனர்.

நாரதர், 'கண்ணபிரான் இவ்வுலகில் கம்சன் முதலான தீயவர்களை அழித்து விண்ணுலகம் சென்றுவிட்டார்' என்று கூறினார்.

இதைக்கேட்ட இருவரும் மயங்கி விழுந்துவிட்டனர்.

நாரதர் அவர்கள் பக்தியை கண்டு மகிழ்ந்தார்.

பின்னர் நாரதர் அவர்கள் இருவருக்கும் பன்னிரெண்டழுத்து மந்திரத்தை உபதேசித்து, 'நீங்கள் கும்பகோணத்துக்கு தெற்குபுறம் உள்ள செண்பகாரண்யம் என்னும் தலத்தில் உள்ள ஹரித்ரா நதிகரைக்கு சென்று நீராடி, அங்கு 1 வருடம் தவம் இருந்தால் பகவான் உங்களுக்கு காட்சி தருவார்' என்று கூறினார்.

இருவரும் மகிழ்ந்து ஹரித்ரா நதியை அடைந்து ஆசிரமம் அமைத்து கடும் தவம் இருந்தனர். அவர்கள் தவத்தை கண்டு மகிழ்ந்து பரந்தாமன் அவர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது அவர்கள் இருவரும் 'பெருமானே! அன்று பிருந்தாவனத்தில் செய்த லீலைகளை இன்று நாங்கள் காணும் படி அருள வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

பரந்தாமன் கண்ணனாக அவதாரம் செய்து காட்டிய லீலைகள் அவர்களுக்கு காட்டி அருளாசி புரிந்தார்.

கண்ணனது 30 சேவைகளையும் இரு முனிவர்களும் கண்டு பரவசமுற்றனர்.

பின்னர் அவர்கள் கண்ணீர் மழைபொழிய பரந்தாமனின் திருவடிகளில் விழுந்து வணங்கி, 'தாங்கள் இத்திருக்கோலத்துடன் என்றும் இந்த இடத்திலேயே எழுந்தருளி எல்லோருக்கும் காட்சி தந்தருள வேண்டும்' என்று வேண்டிக்கொண்டனர்.

அவர்கள் வேண்டுதலின் படி ஓங்கி உலகளந்த உத்தமன் செண்பகாரண்யத்தில் ராஜகோபாலனாய் கோவில் கொண்டான்.

இத்தலத்தில் பரந்தாமன் பிரம்மாவின் அகந்தையை அழித்து அவருக்கு உண்மை அறிவை ஊட்டினார். இதனால் மகிழ்ந்த பிரம்மன் இத்தலத்தில் விசுவகர்மாவை கொண்டு ஸ்வாயம்புல விமானத்துடன் கூடிய கோவிலை அமைக்க செய்து பரமாத்மாவை தானே பிரதிஷ்டை செய்து, பங்குனி ரோகிணியில் தேர்த்திருவிழாவையும் சிறப்பாக நடத்தி மகிழ்ந்தார்.

திருமகள் இத்தலத்தின் வடகிழக்கு கோவில் செந்தாமரை பொய்கையில் அவதரித்தாள். பிருகுமுனிவர் அவரை தன் மகளாக வளர்த்து பின்னர் பரந்தாமனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

மகாலட்சுமி அவதரித்த குளம் இன்று 'திருப்பாற்கடல்' என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் அக்னி பகவான் தவமிருந்து, பெருமானின் அருளால் இழந்த தனது ஒளியையும் வெப்பத்தையும் மீண்டும் பெற்றார்.

இந்த ஆண்டு வெண்ணைத்தாழி உற்சவம் வருகிற 25-ந் தேதி நடக்கிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்காத செல்வம் தரும்

Post by சிவா on Mon Mar 23, 2015 12:15 am


நித்திய பூஜை நாள்தோறும் இத்திருக்கோவிலில் ஏழு கால வழிபாடு நடைபெறுகிறது.

காலை 5 மணி - விசுவரூபம்
காலை 8 மணி - திருவனந்தல்
காலை 9.30 மணி - காலைசந்தி
மதியம் 12மணி - உச்சிக்காலம்
மாலை 6 மணி - திருமாலை
இரவு 8 மணி - திருவாராதனம்
இரவு 9 மணி - அர்த்தசாமம்

ஹரித்ரா நதியின் பெருமை

கோபிலர், கோப்பிரளயர் என்ற இரண்டு முனிவர்களுக்கு பரந்தாமன் கண்ணனாக காட்சி அளித்தார் என்றும், குளத்தில் கண்ணன் கோபிகையருடன் ஜலக்கிரிடை செய்த போது அந்த கன்னிகையரின் உடலில் பூசிய மஞ்சள் (ஹரித்ரா) மற்றும் நறுமணப் பூச்சுப்பொருட்கள் இக்குளத்தின் தீர்த்தத்தில் படிந்தபடியால் இக்குளம் ஹரித்ரா (மஞ்சள்) என்ற காரணப்பெயரில் அழைக்கப்படுகிறது.

இக்குளம் காவிரியின் மகள் என்றும், 66 கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஒன்று சேர்ந்தது என்றும் புராண வரலாறு கூறுகின்றன.

ராஜகோபால சுவாமிக்கு தினமும் திருமஞ்சன தீர்த்தம் இக்குளத்தில் இருந்து தான் எடுத்துச்செல்கிறார்கள்.

இக்குளத்தில் வைகாசி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களிலும் அமாவாசை, பவுர்ணமி, கிரகண காலங்களிலும் ரோகிணி, திருவோண நாட்களிலும் நீராடினால் கண்ணபிரானின் திருவருள் கிடைக்கும் என்றும், மாசி மாதம் முழுவதும் நீராட முடியாமல் போனாலும் கடைசி மூன்று நாட்களாவது நீராடினால் சிறப்பு உண்டு என்றும் கூறுகிறார்கள்.

மற்ற புண்ணிய தலங்களில் 1 கோடி ஆண்டுகள் இருந்து பெறும் பலனை, ஹரித்ராநதி கரையில் ஒரு ஆண்டில் அடையலாம் என்று புராணம் கூறுகிறது. பிருகு முனிவர் வேண்டுகோளுக்கு இணங்கி காவிரியை பெரிய குளமாக தேக்கி அதில் ராஜகோபாலன் ஜலக்கிரிடை செய்ததாக கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum